Jump to content

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல..

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல.. டொராண்டோவில் இளையராஜா இசை நிகழ்ச்சியை மாவீரர் தினம் இருக்கும் மாதத்தில் நடத்துவதற்கு பின்னால் இருக்கும் அரசியலை எதிர்ப்போம்.." அப்படீன்னு ஒரு செய்தி இணையத்தில உலாவுது...இது உண்மையா..?

385621_10151478259649128_1455770774_n.jpg

  • Replies 272
  • Created
  • Last Reply
Posted

சுபேஸ் என்னப்பா இது புது குழப்பம்?

தமிழர்களுக்கு மட்டும் தான் எப்போதும்

தங்களுக்குள் மாற்று கருத்து உள்ளது.

சிங்களம் அப்படி இல்லை.

எப்போது தான் தமிழர் ஓன்று சேர்வார்கள்?

Posted

வெளிநாடுகளில் தமிழர்களுக்குள் நிகழும் குழு மோதல்களின் அரசியலுக்குள் தமிழக சினிமாத் துறையினரும் சிக்குப்பட்டு விட்டனர் போல் தெரிகிறது.

நவம்பர் மாதத்தில் வேறு எந்த ஒரு விழாவும் ஈழத் தமிழர்கள் செய்வது இல்லை என்பதை செல்வமணி மூலம்தான் அறிந்து கொண்டேன்.

அதை விட யாழ் களத்தில் அர்ஜுன் ஒருவர்தான் இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு மக்கள் 150 டொலர் கொடுத்து ரிக்கற் வாங்குகிறார்கள் என்று குறைபட்டு எழுதயிருந்தார்.

சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி என்றால் அர்ஜுன் அதை எதிர்க்க மாட்டார் என்பதே இங்கே உள்ள பொதுவான நம்பிக்கை. அந்த வகையில் பார்த்தாலும் செல்வமணியின் அறிக்கை தவறு என்ற முடிவுக்கே வர முடியும்.

இசைஞானியின் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடப்பதற்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுபேஸ் என்னப்பா இது புது குழப்பம்?

தமிழர்களுக்கு மட்டும் தான் எப்போதும்

தங்களுக்குள் மாற்று கருத்து உள்ளது.

சிங்களம் அப்படி இல்லை.

எப்போது தான் தமிழர் ஓன்று சேர்வார்கள்?

அதுதான.... :(

Posted

இசை நிகழ்ச்சி பார்ப்பது கிரிக்கெட் பார்ப்பது இது எல்லாம் அவனன் தனிப்பட்ட விடயம் .இப்படியான நிகழ்வுகளுக்கு ஐநூறு டொலர்கள் கொடுத்து போனாலும் பிரச்சனையில்லை.

பிரச்சனை என்னவென்றால் ஊடகங்களில் வந்து மூக்கால தேசியம் ,மாவீரர்கள்,போராட்டம் என்று அழுது போட்டு முன் வரிசையில் இவர்கள் போய் குந்தியிருப்பதுதான்.

இதை இவர்கள் இலங்கை பொருட்கள் புறக்கணிப்பிலும் செய்தார்கள் .ஒன்றும் இதை பற்றி கதைக்காதவனே முடிந்த அளவு புறக்கணிப்பு செய்ய விடிய விடிய மற்றவனுக்கு உபதேசம் செய்துவிட்டு தான் இலங்கை பொருட்களை வாங்கி ஆசை தீர முழுங்குவதும்,

மாவீரர்கள் மாவீரர்கள் என்று மூச்சுக்கு மூச்சுக்கு கதைப்பதும் பின்னர் தன்ரை பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்த்து வருவதும் புலம் பெயர்ந்தவர்கள் வாழ்வில் நாம் பார்த்து வருவதுதான் ,

எமது இனத்திற்கு கிடைத்த சாபக்கேடு இப்படியான மனிதர்களால் தான் வந்தது .

இவர்கள் வாழ்வே ஒரு போலிதான் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எவ்வளவு நாளாக இந்த விடயம் பற்றி பேசப்படுகிறது. அப்போதெல்லாம் இதைப்பற்றி யாரும் எதிர்க்கவுமில்லை பேசவுமில்லை. நேற்றையதினம் இசைஞானி ரொரன்டோ வந்ததன் பிற்பாடு இப்படி ஒரு விடயம் முகநூலில் பரவலாக பரிமாறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் இருக்கும் விடுதலை வீச்சைக் குறைக்கும் என்று நினைப்பதற்கு இடமில்லை. அந்தக்கலைஞனுடைய நிகழ்வு நவம்பர் 3ந்தேதிதான் இடம்பெறுகிறது. முக்கியமான மாவீரர் வாரத்தில் இடம்பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எம்மக்கள் மீதான அன்பும் அரவணைப்பும் நிறைந்த ஆர். கே. செல்வமணி இந்த அறிக்கையை விட்டிருப்பது மனதிற்கு இதமாகத்தான் இருக்கிறது நாங்கள் தனித்தவர்கள் இல்லை என்பதை இந்த அறிக்கைகள் உணர்த்தத்தான் செய்கின்றன. இருப்பினும் இந்த நிகழ்வுக்கு அரசியல் பின்னணி இருக்குமென்றால் அதனை ஆதாரத்துடன் தருவதே நன்று. இன்று முகநூலில் நடமாடும் இந்த அறிக்கையானது ஒரு மாபெரும் கலைஞரை கொச்சைப்படுத்துவதற்கும் அதே நேரம் அவருடைய இரசிகர்களாக இருக்கும் பல ஈழத்தமிழர்களையும் காயப்படுத்துவதற்கும் பயன்படப்போகிறது என்பதை நிச்சயமாக ஆர்.கே . செல்வமணி நினைத்திருக்கமாட்டார். ஏற்கனவே ஈழவர்களுக்குள் 2009 இற்கு பிற்பாடு தோன்றியுள்ள குழும அரசியல் சேறடிப்புகளால் விடுதலை வேணாவாக் கொண்ட மாபெரும் மக்கள் சக்தி மழுங்கிப்போய்விட்டது. இப்போது இந்த இசைஞானியின் நிகழ்வை ஏளனப்படுத்துவதன் மூலம் இன்னும் வெறுப்படையும் சூழலை உருவாக்க எத்தனிப்போர் இதனால் எதனைச் சாதிக்கப் போகிறார்கள்?

ஈழவர் வாழ்வில் மாவீரர் பற்றிய நினைவை துதிப்பை எந்தக் கொம்பனும் வந்து சாய்த்துவிட முடியாது..... சாய்ந்து விடும் என்று நம்புவதற்கு அவ்வளவு பலவீனமாகவா எங்களை எங்கள் மாவீரச் செல்வங்கள் விட்டு சென்றிருக்கிறார்கள்? விடுதலையை விரும்புவது அவ்வளவு பலவீனமாகப் போய்விட்டதா?

Posted

இதை முதலில் எதிர்த்தவர் நக்கீரன் (ரொறன்ரோ) என்று கேள்விப்பட்டேன். அதனைத் தொடர்ந்து தான் இந்த அறிக்கை வந்திருக்க வேண்டும். ஆனால், இளையராஜா நேற்றிரவே ரொறன்ரோவிற்கு வந்து விட்டார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்த 'ஆதிபகவான்' படத்திற்கான இசை வெளியீடு 6ஆம் திகதி ரொறன்ரோவில் வெளியிடுகிறார்கள். இதனைவிட பாலசுப்பிரமணியம், சித்ரா குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இந்த மாதம் நடைபெறுகிறது. சினிமாவின் ஆதிக்கம் றொரன்ரோவில் நிறையவே ஆரம்பித்து விட்டது. இங்கு மாதத்திற்கொருமுறையாவது யாராவதொரு பாடகர்கள் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போதுதான் எமது தமிழர்கள் திருந்தப் போகிறார்களோ?

http://www.facebook....ustanothermedia

http://www.yarl.com/...ic=96778&st=200

பேஸ் புக்கில் சுட்டது:

இப்பூமிப் பந்தில் தமிழன் என்றொரு இனம் இருப்பதற்கு அடையாளமாக இருப்பவர்கள் யாரென்றால் ஈழத்திலே புறநானூற்றைப் புரட்டிப்போட்ட 40,000 மேற்பட்ட அந்த மாவீரர்கள்தான்.இவர்களின் அளப்பரிய தியாகங்களை ஆண்டுதோறும் நினைவுகூரும் மாதந்தான் நவம்பர் மாதமாகும்.

தமிழின விடுதலைக்காகவும், நம் சந்ததியின் சுதந்திரத்திற்காகவும்; தங்களின் இளம...

ைக்கனவுகளையும், உற்றார்பெற்றாரையும் மறந்து தங்களையே ஆகுதியாக்கி வீரகாவியமானவர்கள் எங்களின் மாவீரர்கள்.

வாழவேண்டிய வயதிலே அன்பு மனைவியையும், ஆருயிக் கணவனையும், மழலைச் செல்வங்களையும் மறந்து மண்விடுதலைக்காக மரணித்திருக்கின்றார்கள்.இப்ப்படி ஆணும் பெண்ணும் சரிசமனாக வீரத்துடன் போராடி காற்றோடு காற்றாகக் கலந்துபோன மாவீரர்களைப் போற்றுகின்ற மாதந்தான் நவம்பர்மாதம்.இந்த நவம்பர்மாதத்திலே ஈழத்தமிழர் மாத்திர மன்றி உலகத்தமிழர்கள் அத்தனைபேரும் நவம்பர் மாதத்தை புனிதமாமாதமாகவும், வணக்கத்திற்குரியமாதமாகவும் போர்றிவருகின்றார்கள்.

இந்த நவம்பர் மாதத்திலே உலகத் தமிழினம் எந்தவொரு இசைவிழாக்களையும், களியாட்ட விழாக்களையும் கொண்டாடி மகிழ்வதில்லை.இம்மாதத்தில் அனைத்துக் களியாட்ட விழாக்களையும் புறக்கணித்து, புனிதமான மாவீரர்களைப் போற்றுகின்ற மாதமாகப் போற்றப்படுகின்றது.நவம்பர் என்பது வீரத்தை, தியாகத்தை, மண்மீதுகொண்ட பற்றுதியை மற்றும் புறநானூற்றில் நாம் பார்த்த வீரத்தை ஈழத்தில் நடத்திக் காட்டிய அந்த மாவீரர்களையும் நினைவிலே நிறுத்துகின்ற மாதமாகும்.இம் மாதத்திலே மண்ணிற்காக மரணித்த மாவீரர்களையும், அந்நியப் படைகளாலும் இனத்துரோகிகளாலும் அநியாமாகப் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களையும் மனதிலே நினைத்து தியாகச் சுடரேற்றி வணங்கவேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் தலையாய கடமையாகும்.

வருகின்ற 2012 நவம்பர்மாதம் 3ந் திகதியன்று கனடாவிலே இசைஞானி இளையராசாவினால் ஓர் இசைக்களியாட்ட விழா நடைபெறவிருப்பதை அறிந்தபோது எங்களின் நெஞ்சிலே வேலைப் பாச்சியதைப் போன்று இருக்கின்றது.

இசைஞானி அவர்களே! தமிழர் மனங்களிலே மண்வாசனைமாறா இசைமூலம் எங்களைக் கட்டிப்போட்டவர் நீங்கள்.ஆனால் ஈழத்தமிழன் கொத்துக் கொத்தாக‌

துடிக்கத் துடிக்க கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதும்,முள்ளிவாய்க்காலிலே எம்மினம் இரத்த வெள்ளத்திலே மிதக்கின்றபொழுதும் நீங்கள் மவுனமாக இருந்தீர்கள்.அந்தத் தமிழனுக்காக நீங்கள் ஒருதுளி கண்ணீர்கூடவடிக்கவில்லை.ஒரு குரல்கூடக் கொடுக்கவில்லை. நீங்கள் அவர்களை சக மனிதர்களாகக்கூடப் பார்த்தாவது குரல் கொடுத்திருக்கலாம்.அதைக்கூடச் செய்யவில்லை.அவர்களுக்காக ஒரு இசைகூட நீங்கள் இசைக்கவில்லை. எங்கே ஐயா போனது உங்களின் மனித நேயம்?

இயக்குணர் திலகம் பாரதிராசா அவர்களே! நீங்களுமா இவ்விழாவில் பங்குபற்றிச் சிற‌ப்பிக்கப் போகின்றீர்கள்? இந்த இசைவிழா மாவீரர் மாதத்தில் நடப்பது உங்களுக்கு எப்படித் தெரியாமல் போய்விட்டது.எம் உறவுகள் சாகடிக்கப்படும்போதெல்லாம் ஓங்கிக் குரல் கொடுப்பவர் நீங்கள்.அதுமாத்திரமல்ல எம் தமிழீழத்திற்குச் சென்று எம்தங்கத் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் பெற்றவர் நீங்கள்.எத்தனையோ மாவீரர்களுக்குக் கிடைக்காத இந்தப் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது.அன்று உங்களைப் பாதுகாப்பாகக் கூட்டிச்சென்ற‌வர்கள் கந்தகப் புகையோடு கலந்துபோனார்கள்.அந்தமண்ணிலே இன்றும்கூட அவர்களின் இரத்தவாடை வீசிக்கொண்டிருக்கின்றது. அந்தமாவீரர்களைகூட போற்றுகின்ற மாதந்தான் இந்த நவம்பர்மாதம்.

அன்பான கலைஞர்களே! உங்கள் எல்லோரிடமும் சகதமிழர்களாக, உங்களின் தொப்பூழ்கொடி உறவுகளாகக் கூறிக்கொள்வது என்னவென்றால்; உலகத்திலே எந்த ஒரு மனித இனமும் சந்திக்காத அத்தனை கொடுமைகளையும் ஈழத்தமிழினம் சந்தித்திருக்கின்றது.மனித குலத்திற்கெதிரான குற்றம் அங்கே இழைக்கப்பட்டிருக்கின்றது. ஈழத்தமிழன் இன்னும் அந்தக் கொடுமையில் இருந்து இன்றுவரை மீழவில்லை.நாங்கள் எங்களை ஆறுதல் படுத்துவது இந்த நவம்பர் மாதத்தில்தான்.இழந்துபோன எங்களின் மாவீரர்களையும், சொந்தங்களையும் நினைந்து நினைந்து அழுது புரண்டு அடங்குவதும் இப்புண்ணிய மாதத்தில்தான்.நவம்பர் என்றாலே எங்கள் சிந்தனை முழுவதும் நிறைந்திருப்பவர்கள் மண்ணிற்காக மரணித்த அந்த மாவீரர்களும், மண்ணோடு மண்ணாகிப்போன எம்மக்களுந்தான்.

மண்ணையும் மக்களையும் மனதார நேசிக்கும் அன்புசால் கலைஞர்களே நவம்பர் மாதத்தைத் தவிர்த்து வேறு எந்தவோரு மாதத்திலாவது உங்களின் இசைக்கொண்டாட்டத்தை நடத்துமாறு மண்ணிற்காக மரணித்துப்போன 40,000 மேற்பட்ட மாவீரர் பேரிலும், மரணித்துப்போன 160,000 மேற்பட்ட மக்களின் பேரிலும் உங்களீன் பாதம் பணிந்து வேண்டுகின்றோம்.ந‌வ‌ம்ப‌ர் மாத‌த்தை உல‌க‌த் த‌மிழ‌ர் அனைவ‌ரும் போற்றுத‌ற்குரிய‌ புனித‌ர்க‌ளின் மாத‌மாக‌ வ‌ண‌ங்குவோம்.

ந‌வ‌ம்ப‌ர் மாத‌த்தில் மாவீரர்விழாவை மறந்து த‌மிழ‌ர்களால் கொண்டாட‌ப்ப‌டும் எந்த‌ ஒரு விழாவும் அந்த‌ 40,000 மேற்பட்ட மாவீரர்களினதும், மரணித்துப்போன 160,000 மேற்பட்ட மக்களின‌து சாம்ப‌ர் மேட்டிமேல் நின்று கொண்டாட‌ப்ப‌டும் ஊழித் தாண்ட‌வ‌மாக‌த்தான் கருத‌‌முடியும்.இந்த‌ அக்கிர‌ம‌த்தை மான‌முள்ள‌ எந்த‌மிழ‌னும் அனும‌திக்க‌மாட்டான்.

ந‌ன்றி.

Posted

இசை நிகழ்ச்சி பார்ப்பது கிரிக்கெட் பார்ப்பது இது எல்லாம் அவனன் தனிப்பட்ட விடயம் .இப்படியான நிகழ்வுகளுக்கு ஐநூறு டொலர்கள் கொடுத்து போனாலும் பிரச்சனையில்லை.

பிரச்சனை என்னவென்றால் ஊடகங்களில் வந்து மூக்கால தேசியம் ,மாவீரர்கள்,போராட்டம் என்று அழுது போட்டு முன் வரிசையில் இவர்கள் போய் குந்தியிருப்பதுதான்.

இதை இவர்கள் இலங்கை பொருட்கள் புறக்கணிப்பிலும் செய்தார்கள் .ஒன்றும் இதை பற்றி கதைக்காதவனே முடிந்த அளவு புறக்கணிப்பு செய்ய விடிய விடிய மற்றவனுக்கு உபதேசம் செய்துவிட்டு தான் இலங்கை பொருட்களை வாங்கி ஆசை தீர முழுங்குவதும்,

மாவீரர்கள் மாவீரர்கள் என்று மூச்சுக்கு மூச்சுக்கு கதைப்பதும் பின்னர் தன்ரை பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்த்து வருவதும் புலம் பெயர்ந்தவர்கள் வாழ்வில் நாம் பார்த்து வருவதுதான் ,

எமது இனத்திற்கு கிடைத்த சாபக்கேடு இப்படியான மனிதர்களால் தான் வந்தது .

இவர்கள் வாழ்வே ஒரு போலிதான் .

அண்ணை நீங்களே அடிக்கடி சொல்லி இருந்தீர்கள். உங்கட இயக்கத்திலும் நேர்மையானவர்கள் இருந்தார்கள் பொலியானவர்களும் இருந்தார்கள் அதே போல தான் இங்கையும்...........

அது சரி நீங்கள் ரிக்கேட் வாங்கி விட்டிர்களா?

Posted

எவ்வளவு நாளாக இந்த விடயம் பற்றி பேசப்படுகிறது. அப்போதெல்லாம் இதைப்பற்றி யாரும் எதிர்க்கவுமில்லை பேசவுமில்லை. நேற்றையதினம் இசைஞானி ரொரன்டோ வந்ததன் பிற்பாடு இப்படி ஒரு விடயம் முகநூலில் பரவலாக பரிமாறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் இருக்கும் விடுதலை வீச்சைக் குறைக்கும் என்று நினைப்பதற்கு இடமில்லை. அந்தக்கலைஞனுடைய நிகழ்வு நவம்பர் 3ந்தேதிதான் இடம்பெறுகிறது. முக்கியமான மாவீரர் வாரத்தில் இடம்பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எம்மக்கள் மீதான அன்பும் அரவணைப்பும் நிறைந்த ஆர். கே. செல்வமணி இந்த அறிக்கையை விட்டிருப்பது மனதிற்கு இதமாகத்தான் இருக்கிறது நாங்கள் தனித்தவர்கள் இல்லை என்பதை இந்த அறிக்கைகள் உணர்த்தத்தான் செய்கின்றன. இருப்பினும் இந்த நிகழ்வுக்கு அரசியல் பின்னணி இருக்குமென்றால் அதனை ஆதாரத்துடன் தருவதே நன்று. இன்று முகநூலில் நடமாடும் இந்த அறிக்கையானது ஒரு மாபெரும் கலைஞரை கொச்சைப்படுத்துவதற்கும் அதே நேரம் அவருடைய இரசிகர்களாக இருக்கும் பல ஈழத்தமிழர்களையும் காயப்படுத்துவதற்கும் பயன்படப்போகிறது என்பதை நிச்சயமாக ஆர்.கே . செல்வமணி நினைத்திருக்கமாட்டார். ஏற்கனவே ஈழவர்களுக்குள் 2009 இற்கு பிற்பாடு தோன்றியுள்ள குழும அரசியல் சேறடிப்புகளால் விடுதலை வேணாவாக் கொண்ட மாபெரும் மக்கள் சக்தி மழுங்கிப்போய்விட்டது. இப்போது இந்த இசைஞானியின் நிகழ்வை ஏளனப்படுத்துவதன் மூலம் இன்னும் வெறுப்படையும் சூழலை உருவாக்க எத்தனிப்போர் இதனால் எதனைச் சாதிக்கப் போகிறார்கள்?

ஈழவர் வாழ்வில் மாவீரர் பற்றிய நினைவை துதிப்பை எந்தக் கொம்பனும் வந்து சாய்த்துவிட முடியாது..... சாய்ந்து விடும் என்று நம்புவதற்கு அவ்வளவு பலவீனமாகவா எங்களை எங்கள் மாவீரச் செல்வங்கள் விட்டு சென்றிருக்கிறார்கள்? விடுதலையை விரும்புவது அவ்வளவு பலவீனமாகப் போய்விட்டதா?

நன்றி அக்கா ஆழமான விளக்கத்திற்கு .............உண்மையில் இந்தச்செய்தி அரசியல் கலந்த ஒன்றாக இருந்தால் .......வருந்தத்தக்கது.தம் தாய்மேலும்,தாய்மண்ணின்மேலும்,தமிழ்மேலும் பற்று கொண்டே இந்த மாவீரர்கள் தம் இன்னுயிரை எமக்காக அர்ப்பணித்தவர்கள் ..........அவர்களை வணங்குவதும்,அவர்கள் எமக்கு கற்பித்த நெறிமுறைகளை பின்பற்றுவதும் ,எந்த இலட்சியத்திற்காக போராடினார்களோ அந்த இலட்சியத்திற்காக நாம் தொடர்ந்து உழைப்பதும் எம் தலையாய கடமை ...........நவம்பர்மாதம் புனிதமான ,மாதம்.....மாவீரர்களின் மாதம் உண்மை........மறக்கவோ,மறுக்கவோ முடியாது ...........போராட்ட காலத்தில் நாம் வாழவில்லையா???,யுத்தம் நடந்தபோது ,நாம் எம் அத்தனை நிகழ்வுகளையும்.அல்லது எம் நடைமுறை செயற்பாடுகளை தூக்கி எறிந்துவிட்டு போராட்டம் தான் என்று வாழ்ந்தோமா .இல்லை யுத்தம் மத்தியில் நாம் வாழ்ந்தோம் ,சிறப்பாக வாழ்ந்தோம் ,தன் இனம் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே இந்த செல்வங்கள் போராடி தம்மை ஈகம் செய்தனர்............அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அவர்கள் நினைத்த பெருந்தன்மை,,நல்ல உளப்பாங்கு ,ஒற்றுமை.புரிந்துணர்வு இவற்றை நாம் புரிந்துகொண்ட அதன்படி வாழ நினைப்பதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் உண்மையான மரியாதை ..........இந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை வைத்து போன வருடங்களைப்போல் இம்முறையும் அந்த உன்னதமான நிகழ்வை குழப்பும் பொருட்டு விடப்படும் அறிக்கைகளையும்,பரப்புரைகளையும் இனம் காண்போம் .....அது ஒரு நிகழ்வு .சிறப்பாக நடந்து முடியட்டும் .......மாவீரருக்கான நிகழ்வு அதையும் விட சிறப்பான நிகழ்வு அதையும் மிக சிறப்பாக செய்வோம்..............மாவீரர் விரும்பும் மனிதர்களாக ,தமிழர்களாக வாழ்வோம் நன்றி .........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த, 2011 வருடத்தின் கார்த்திகை இருபத்தியேழில், பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியில் தனுஸ் நடித்த மயக்கம் என்ன படம் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்தகாட்சியா எமது உறவுகள் தமிழீழத் தேசிய மாவீரர் தினத்தினைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். திரைஅரங்கில் விடுதலைத் தூண்களது உறவுகளும் காணப்பட்டதுதான் அதைவிட அசிங்கம். வடை மட்டன்ரோல்ஸ் போன்றவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டு மாவீரர்தினம் திரைப்படத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Posted

நகைப்பிக்குரிய விடயம் என்னவென்றால் , இப்படியான இசை நிகழ்சிகள் வரும் பொது மட்டும்தான் போரட்டம் , மாவீரர்கள்

என்றெல்லாம் உளற வந்துடுவர்கள் . எங்கள் தலைவனே இப்படியான நல்ல இசை , படங்களுக்கு ரசிகன் . அதுவும் இளையராஜா

எந்த பெரிய இசை மேதை , பாரம்பரிய இசையை பெரும்பாலும் இசைக்கும் மேதை. எ.ர ரகுமான் மாதிரி தமிழை கொன்று பிழைக்கும்

------ ராஜா. எப்பவுமே தனித்துவம், எங்கட பாரம்பரியம் தமிழ், இவற்றினை வழுவாது இருப்பவர் .

----- தேசியம் , மாவீரம் என்று பேசுறவன் . உண்மையானவன் எப்பவும் உண்மையாக அமைதியாக செயலில் காட்டுகிறான் தேசியத்தை .

சும்மா கார்த்திகை மாதத்தில் ஏதோ புடுங்கிற மாதிரி அவர்களின் விமர்சனங்கள்

--அநாகரீகமான சொற்கள் நீக்கப்பட்டுள்ளன

Posted

மாவீரர்களின் நினைவும் இப்போது வார்த்தைகளில்தான் இருக்கிறது. 1990களின் பிற்பகுதியில் மாவீரர் நினைவு 21 நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டது. அந்நாட்களில் சிரமதானம், இரத்ததானம், சேவைகள் செய்தல் போன்றவை செய்யப்பட்டு வந்தன. பின்னர் அது ஒரு வாரமாக்கப்பட்டு இப்போது ஒரு நாளில் வந்து நிற்கிறது. நீங்கள் தனிப்பட்ட முறையில் இந்த மாதத்தில் எதையாவது செய்து விட்டுப் போங்கள். ஆனால், அவர்களுக்கான மாதமாகிய கார்த்திகை மாதத்தில் இவ்வாறான மாபெரும் நிகழ்வுகளைத் தவிருங்களேன். உங்களுக்காக அனைத்தையும் இழந்த அந்த செல்வங்களுக்கு இப்படியேனும் நன்றிக்கடனாக இருங்களேன். அவர்களுக்கான மாதமாகிய கார்த்திகை மாதத்தினை அவர்களுக்காகவே விட்டு வையுங்களேன். எமக்கு மிஞ்சியிருப்பது இது ஒன்றுதான். இதைக் கெடுக்கவும் இப்போது பலர் புறப்பட்டு விட்டார்கள். இப்படியே போனால், இன்னும் இரண்டொரு வருடங்களில் மாவீரர் வாரத்திலேயே இவ்வாறான மாபெரும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Posted

இந்த நிகழ்வு நடக்கப் போகின்றது என்று 2 மாதங்களுக்கு முன்னமே தெரியும். உரிய முறையில் அறிவித்தல்களும் வந்திருந்தன. யாழ் தளத்திலும் 'புரட்சி' இது பற்றி முன்னரே அறியத் தந்து இருந்தார்.

1. அவ்வாறு அறிவித்தல் வரும்போதே சம்பந்தபட்டவர்களுக்கும், நிகழ்ச்சியை ஒழுங்கு செய்கின்றவர்களுக்கும் இது பற்றி தம் கருத்தை, அக்கறையை தெரிவித்து இருந்தீர்களா?

2.அப்படி தெரிவித்து இருந்தால் அதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள்.

3. அப்படி தெரிவித்து இருந்தால் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பதில் தந்து இருந்தால் அதனையும் அறியத் தாருங்கள். பதில் தரவில்லை, உங்களை அவர்கள் பொருட்டாகவே கருதவில்லை என்றால் அதனையும் வெளிப்படையாக குறிப்பிடுங்கள்.

4. இது பற்றி கடந்த மாதம், அதற்கு முந்திய மாதங்களில் கனடாவில் வெளிவரும் எந்த எந்த தமிழ் ஊடகங்களில் உங்கள் அக்கறையை வெளிப்படுத்தி இருந்தீர்கள்?

5. இது பற்றி கனடிய தமிழ் மக்களின் கருத்தை அறிய முற்பட்டு இருந்தீர்களா? ஓம் எனில், எவ்வாறு அதனை அறிய முற்பட்டீர்கள்?

இல்லை.. நாங்கள் இளையராஜா ரொரன்டோ வரும்வரைக்கும் ஒன்றுமே செய்யாமல் இருந்து விட்டு, இனி நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாத அல்லது இன்னொரு திகதிக்கு மாற்ற முடியாத நிலை வந்த பின் தான் 'நாங்களும் இங்கு இருக்கின்றோம்..' என்று காட்ட முற்படுகின்றோம் என்று சொல்வீர்களாயின், உங்களைப் பார்த்து பரிதாபப் படத்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது போன்ற நிகழ்வுகள் ஒரு வியாபார நோக்கில் செய்யப்படுபவை.

எனவே அவர்கள் தத்தமது நேரம் காலம் மக்களின் வரவு முதலானவற்றை கவனத்தில் கொண்டே முடிவை எடுப்பார்கள்.

மாவீரர் நாள் என்பது எல்லோர்க்கும் பொதுவானது. அந்த அந்த மக்களே இதனைக்கடைப்பிடிப்பது வழக்கம்.

எனவே இதற்குள் எந்தவித நிகழ்வுகளையும் வைப்பதில்லை என்பது மக்களைப்பொறுத்தவரை உணர்வு பூர்வமாகவும்

வியாபாரிகளைப்பொறுத்தவரை நட்டம் ஏற்படும் என்பதாகவும் இருக்கிறது. இருக்கணும்.

அதுவே நிலைத்த முடிவுகளுக்கு ஒரு நாள் உதவும். இவற்றை தடியால் செய்யமுடியாது.

இசையானியின் நிகழ்வும் அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தாதபடி

முன் கூட்டியே வைக்கப்பட்டுள்ளதாகவே எனக்குத்தெரிகிறது.

மாவீரர் வாரம் ஆரம்பிக்கமுதல் அது வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன்

பிரபாகரனை தெய்வமாக்கினோம் என்போர்

இங்கு பல தெய்வங்களை உருவாக்க துடிக்கின்றனர்.

யாரும் யாரையும் உருக்கி வேலை செய்யுங்கள் என்று சொல்ல நாம் என்ன அவன் வீட்டில் அடுப்பு எரிய உதவுகின்றோமா?

அவர் அவரது வாழ்வில் தத்தமது கடமைகள் பொழுது போக்குகள் போக

அவரவரால் தரக்கூடிய ஒரு நாளில் சில மணித்துளிகளே அவரவர் பங்களிப்பு.

அதற்கு மீறி எதிர்பார்த்தோமாயின் பெயர் பட்டியல் பெரிதாக நீளமாக இருக்கும். ஆளிருக்காது. அனுபவ பாடமிது.

Posted

மாவீரர் பற்றிய நினைப்பு எம் நெஞ்சில் என்றுமே இருக்கும் ஒரு உணர்வு.

இளையராஜாவின் கச்சேரியை ரத்து செய்துவிட்டு, அதன் பிறகு, கார்த்திகை மாதத்தில் வேறு கேளிக்கைகளில் எம்மவர் ஈடுபட்டால் என்ன செய்வது? இதெல்லாம், தாமாக உணர்ந்து செயல்படவேண்டிய விஷயம். யாரும் சொல்லி வரத் தேவையில்லை.

Posted

நிழலி, எனது முந்தைய கருத்தை நீங்கள் கவனிக்கவில்லை. அதில், இதனை முதலில் முன்னெடுத்தவர் நக்கீரன் என்று கேள்விப்பட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறேன். அவர் நீங்கள் கேட்டிருக்கும் அனேக கேள்விகளுக்கான பதில்களைச் செய்திருப்பார். அவர் இந்த நிகழ்வு பற்றிய அறிக்கை வந்தபோதே இதற்கெதிரான கருத்துக்களை வைத்ததாக அறிந்தேன். நக்கீரன் தொடங்கிய இந்தச் செயற்பாடு இப்போதுதான் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில், படிப்படியாகத்தான் எங்கள் தமிழ்ச் சமூகத்திற்கு ஒவ்வொன்றாக விளங்கும் என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

நீங்கள் குறிப்பிடுவது போல ஊடகங்களில் இவ்வாறான செய்திகளைக் கொண்டு வருவதானால் அதற்குப் பணம் வேண்டும். இங்கு முக்கிய அமைப்புக்களின் நிகழ்வுகளுக்கான விளம்பரங்கள், அறிவித்தல்களைக் கூடப் பணம் செலுத்தித்தான் பிரசுரிக்க வேண்டியுள்ளது. சமீபத்தில்கூட இவ்வாறான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இங்கு ஊடகங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பது எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும். என்னைப் போன்றவர்கள் இவ்வாறு செயற்படுவதாயின் அதற்குப் பணம் மிகவும் முக்கியம். என்னைப் பொறுத்தவரையில் எதிர்காலத்திலாவது இவ்வாறு நடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.

விசுகு, இங்கு யாரும் இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டாம் எனக் கூறவில்லை. நேரம், காலம் பார்த்துச் செய்யுங்கள் என்றுதான் கூறுகிறேன்.

ஈஸ், தமிழர்களில் பலர் அப்படிச் சிந்தித்திருப்பார்களாயின் நாம் புலம் பெயர்ந்திருக்க மாட்டோம்.

Posted

மாவீரர்களின் நினைவும் இப்போது வார்த்தைகளில்தான் இருக்கிறது. 1990களின் பிற்பகுதியில் மாவீரர் நினைவு 21 நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டது. அந்நாட்களில் சிரமதானம், இரத்ததானம், சேவைகள் செய்தல் போன்றவை செய்யப்பட்டு வந்தன. பின்னர் அது ஒரு வாரமாக்கப்பட்டு இப்போது ஒரு நாளில் வந்து நிற்கிறது. நீங்கள் தனிப்பட்ட முறையில் இந்த மாதத்தில் எதையாவது செய்து விட்டுப் போங்கள். ஆனால், அவர்களுக்கான மாதமாகிய கார்த்திகை மாதத்தில் இவ்வாறான மாபெரும் நிகழ்வுகளைத் தவிருங்களேன். உங்களுக்காக அனைத்தையும் இழந்த அந்த செல்வங்களுக்கு இப்படியேனும் நன்றிக்கடனாக இருங்களேன். அவர்களுக்கான மாதமாகிய கார்த்திகை மாதத்தினை அவர்களுக்காகவே விட்டு வையுங்களேன். எமக்கு மிஞ்சியிருப்பது இது ஒன்றுதான். இதைக் கெடுக்கவும் இப்போது பலர் புறப்பட்டு விட்டார்கள். இப்படியே போனால், இன்னும் இரண்டொரு வருடங்களில் மாவீரர் வாரத்திலேயே இவ்வாறான மாபெரும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு வாரம் என்பது பரவாயில்லை. ஆனால் ஒரு மாதத்தையே வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டால் இதற்கு எத்தனைபேர் ஆதரவுதருவார்கள் என்று நினைக்கின்றீர்கள்? மக்கள் ஒரு மாதம் முழுவதும் எல்லா நிகழ்வுகளையும் தவிர்த்து இருக்கப்போவதில்லை. இம்மாதத்தில் ஏதாவது ஒரு நிகழ்வை நடத்துபவன் அதற்கு செல்பவன் செல்லாதவனால் துரோகியாக பேசப்படுவான். இதன் விழைவு பெரும்பான்மை மக்கள் மாவீரர் நிகழ்வுகளில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்வார்கள் தவிர இதை வைத்து அரசியல் செய்பவன் பின்னால் ஒருபோதும் போகப்போவதில்லை. புலத்தில் மாவீரர் நிகழ்வை கொண்டாடுவதே வியாபாரமாக்கப்பட்டுவிட்டது. யார்கொண்டாடுவது எந்த இடத்தில் கொண்டாடுவது எத்தனை பிரிவாகக் கொண்டாடுவது என்று வருடாவருடம் பிரச்சனை நடந்துகொண்டிருக்கின்றது. கடந்தவருடம் இந்தச் சிக்கலால் பலர் நிகழ்வுகளுக்குப் போகவில்லை வீட்டிலேயே நினைவு கூர்ந்தார்கள். நவம்பர் 27 அந்த ஒரு நாளை ஒழுங்காக ஒற்றுமையாக கடைப்பிடிக்கும் தகுதியை முதலில் வளர்த்துக்கொள்வோம் பின்னர் ஒரு வாரம் குறித்து சிந்திக்கலாம்.

Posted

மாவீரர் பற்றிய நினைப்பு எம் நெஞ்சில் என்றுமே இருக்கும் ஒரு உணர்வு.

இளையராஜாவின் கச்சேரியை ரத்து செய்துவிட்டு, அதன் பிறகு, கார்த்திகை மாதத்தில் வேறு கேளிக்கைகளில் எம்மவர் ஈடுபட்டால் என்ன செய்வது? இதெல்லாம், தாமாக உணர்ந்து செயல்படவேண்டிய விஷயம். யாரும் சொல்லி வரத் தேவையில்லை.

நல்ல கருத்து.

வெளிநாடுகளில் எல்லா மாதங்களிலும் எல்லாம் செய்ய எல்லா மக்களுக்கும் சுதந்திரமிருக்கிறது. இதில் நாம் எமது விருப்புகளை திணிக்க முயலக்கூடாது. 1990 களில் ஈழத்தில் நடந்தவைகளை நாம் வேறு கண்ணோடு நோக்கத்தயாராக வேண்டும். போராட்டம் நடந்த நிலம் ஈழம்.

மாவீரர் தினம் நன்றாக நடப்பதற்கு அவசியமானவை:

1. மக்கள் இயல்பாக வந்து வணக்கம் செலுத்த பொறுப்பானவர்கள் வசதிகள் செய்ய வேண்டும்.

2.போட்டிக்கு சனம் காட்ட முயலகூடாது. நாலு பேர் வந்தாலும் அந்த இடத்தில் வைத்து "நீங்கள் தொடங்கிய இந்த தூய பயணத்தை முடிவு காண்பதற்காக என் மூச்சுள்ளவரை தொடருவேன்" என்று தன் மனத்தில் சங்கல்பம் செய்ய தயாரானவர்கள் மட்டும்தான் அங்கு போக வேண்டும்.

3.தொடர்ந்து அதை காட்டி இதை காட்டி மாவீரர் தினம் சம்பந்தமான விவாதங்களை தொடக்குவதும், வளர்ப்பதும் அவர்களுக்குத்தான் இழுக்கை தேடித்தரும்.

4.பாரதிராஜா போன்றவர்களை நோக்கி தாக்குதல் விடுபவர்கள் மீது கவனமாக இருக்க வேண்டும். கவனமின்மை பட்டபகலில் ஊடுருவல் நடக்க இடம் அளிக்கும். இதை சில காலத்திற்கு முன்னர் வெற்றிகரமாக சீமான் மீதும் செய்தவர்கள். நமது நண்பர்கள் பிழை விட்டால் நாம் மன்னிக்க தயாராக இருக்க வேண்டும். பாரதி ராஜாவிடம் கேட்டால் நல்ல ஒரு மாவீரர் தினத்தையே நிர்வகித்து தந்துவிட்டு போவார்.

5.விவாதங்களை தவிர்த்தால் மட்டுமே போட்டி மாவிரர் தினம் கொண்டாட ஆர்வம் இல்லாது போகும்.

Posted

ஒரு வாரம் என்பது பரவாயில்லை. ஆனால் ஒரு மாதத்தையே வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டால் இதற்கு எத்தனைபேர் ஆதரவுதருவார்கள் என்று நினைக்கின்றீர்கள்? மக்கள் ஒரு மாதம் முழுவதும் எல்லா நிகழ்வுகளையும் தவிர்த்து இருக்கப்போவதில்லை. இம்மாதத்தில் ஏதாவது ஒரு நிகழ்வை நடத்துபவன் அதற்கு செல்பவன் செல்லாதவனால் துரோகியாக பேசப்படுவான். இதன் விழைவு பெரும்பான்மை மக்கள் மாவீரர் நிகழ்வுகளில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்வார்கள் தவிர இதை வைத்து அரசியல் செய்பவன் பின்னால் ஒருபோதும் போகப்போவதில்லை. புலத்தில் மாவீரர் நிகழ்வை கொண்டாடுவதே வியாபாரமாக்கப்பட்டுவிட்டது. யார்கொண்டாடுவது எந்த இடத்தில் கொண்டாடுவது எத்தனை பிரிவாகக் கொண்டாடுவது என்று வருடாவருடம் பிரச்சனை நடந்துகொண்டிருக்கின்றது. கடந்தவருடம் இந்தச் சிக்கலால் பலர் நிகழ்வுகளுக்குப் போகவில்லை வீட்டிலேயே நினைவு கூர்ந்தார்கள். நவம்பர் 27 அந்த ஒரு நாளை ஒழுங்காக ஒற்றுமையாக கடைப்பிடிக்கும் தகுதியை முதலில் வளர்த்துக்கொள்வோம் பின்னர் ஒரு வாரம் குறித்து சிந்திக்கலாம்.

சுகன், நான் நிகழ்வுகளைத் தவிர்க்கும்படி இங்கு கூறவில்லை. மாபெரும் நிகழ்வுகளைத் தவிர்க்கும்படிதான் கூறியிருக்கிறேன். நான் முன்பே குறிப்பிட்டது போல, இங்கு கிழமை தோறும் இவ்வாறான நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இரண்டு கிழமைக்கொரு முறையாவது இங்கு தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்து நிகழ்வுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

தயவு செய்து முன்னர் எழுதிய கருத்துக்களையும் வாசித்துவிட்டுக் கருத்தெழுதுங்கள்.

Posted

நல்ல கருத்து.

வெளிநாடுகளில் எல்லா மாதங்களிலும் எல்லாம் செய்ய எல்லா மக்களுக்கும் சுதந்திரமிருக்கிறது. இதில் நாம் எமது விருப்புகளை திணிக்க முயலக்கூடாது. 1990 களில் ஈழத்தில் நடந்தவைகளை நாம் வேறு கண்ணோடு நோக்கதயாராக வேண்டும். போராட்டம் நடந்த நிலம் ஈழம். வெளிநாடுகள் அல்ல.

மாவீரர் தினம் நன்றாக நடப்பதற்கு அவசியமானவை:

1. மக்கள் இயல்பாக வந்து வணக்கம் செலுத்த பொறுப்பானவர்கள் வசதிகள் செய்ய வேண்டும்.

2.போட்டிக்கு சனம் காட்ட முயலகூடாது. நாலு பேர் வந்தாலும் அந்த இடத்தில் வைத்து "நீங்கள் தொடங்கிய இந்த தூய பயணத்தை முடிவு காண்பதற்காக என் மூச்சுள்ளவரை தொடருவேன்" என்று தன் மனத்தில் சங்கல்பம் செய்ய தயாரானவர்கள் மட்டும்தான் அங்கு போக வேண்டும்.

3.தொடர்ந்து அதை காட்டி இதை காட்டி மாவீரர் தினம் சம்பந்தமான விவாதங்களை தொடக்குவதும் வளர்ப்பதும் அவ்ர்களுக்குத்தான் இழுக்கை தேடித்தரும்.

4.பாரதிராஜா போன்றவர்களை நோக்கி தாக்குதல் விடுபவர்கள் மீது கவனமாக இருக்க வேண்டும். கவனமின்மை பட்டபகலில் ஊடுருவல் நடக்க இடம் அளிக்கும். இதை சில காலத்திற்கு முன்னர் வெற்றிகரமாக சீமான் மீதும் செய்தவர்கள். நமது நண்பர்கள் பிழை விட்டால் நாம் மன்னிக்க தயாராக இருக்க வேண்டும். பாரதி ராஜாவிடம் கேட்டல் நல்ல ஒரு மாவீரர் தினத்தையே நிர்வகித்து தந்துவிட்டு போவார்.

5.விவாதங்களை தவிர்த்தால் மட்டுமே போட்டி மாவிரர் தினம் கொண்டாட ஆர்வம் இல்லாது போகும்.

நிச்சயம் அப்படியான ஒரு மாவீரர் தினம் இடம்பெறும். கால அவகாசம்தான் தேவைப்படுகிறது.

Posted

நிழலி, எனது முந்தைய கருத்தை நீங்கள் கவனிக்கவில்லை. அதில், இதனை முதலில் முன்னெடுத்தவர் நக்கீரன் என்று கேள்விப்பட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறேன். அவர் நீங்கள் கேட்டிருக்கும் அனேக கேள்விகளுக்கான பதில்களைச் செய்திருப்பார். அவர் இந்த நிகழ்வு பற்றிய அறிக்கை வந்தபோதே இதற்கெதிரான கருத்துக்களை வைத்ததாக அறிந்தேன். நக்கீரன் தொடங்கிய இந்தச் செயற்பாடு இப்போதுதான் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில், படிப்படியாகத்தான் எங்கள் தமிழ்ச் சமூகத்திற்கு ஒவ்வொன்றாக விளங்கும் என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

நீங்கள் குறிப்பிடுவது போல ஊடகங்களில் இவ்வாறான செய்திகளைக் கொண்டு வருவதானால் அதற்குப் பணம் வேண்டும். இங்கு முக்கிய அமைப்புக்களின் நிகழ்வுகளுக்கான விளம்பரங்கள், அறிவித்தல்களைக் கூடப் பணம் செலுத்தித்தான் பிரசுரிக்க வேண்டியுள்ளது. சமீபத்தில்கூட இவ்வாறான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இங்கு ஊடகங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பது எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும். என்னைப் போன்றவர்கள் இவ்வாறு செயற்படுவதாயின் அதற்குப் பணம் மிகவும் முக்கியம். என்னைப் பொறுத்தவரையில் எதிர்காலத்திலாவது இவ்வாறு நடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.

நான் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் இல்லை இவை தமிழச்சி.

நக்கீரன் ஆரம்பித்து பின் அவருடன் இது தொடர்பாக இணைந்து வேறு சிலரும்முன்னேடுத்து இருந்தார்களாயின், நிச்சயம் அவர்களுக்கு என் கேள்விகளுக்கான பதில்கள் சொல்ல முடியும். இன்று, இந்த விடயம் இந்தளவுக்கு பேசக்கூடிய அளவுக்கு கொண்டு வந்தவர்களுக்கு என் கேள்விகளுக்கு பதில் தெரிந்து இருக்கும். இன்று காசு கொடுத்து விளம்பரம் கொடுத்தால் தான் ஒரு விடயம் வெளியே வரும் என்று சொல்வது நகைப்புக்கிடமானது. முகப்புத்தகம், டுவிட்டர், புளொக் போன்றவை மூலம் பெரும் மக்கள் சக்தியையே அதிகாரங்களுக்கு எதிராக அணிதிரளச் செய்யும் வசதி இருக்கும் போது இரண்டு மாதங்களுக்கு முன்னமே நீங்கள் சொல்வது போல 'சூடு' பிடிக்கச் செய்து இருக்கலாம். ஒரு விடயத்தை எதிர்க்கும் போது சம்பந்தப்பட்டவர்களிடம் அதனை தெரிவித்து, அவர்கள் பக்கம் இருந்தும் தெளிவான பதிலை பெறுவது தான் சரியானது. நக்கீரன் என்பதால் அவர் செய்து இருப்பார் என்று ஊகிப்பது நக்கீரனின் பின்னால் ஒளிவட்டத்தை ஏற்ற மட்டுமே செய்யும்.

..அத்துடன், தனிப்பட்ட என் கருத்தின் படி, கார்த்திகை மாதத்தில் (மட்டும்) நிகழ்வுகளை தவிர்க்கச் சொல்வதும் அதன் மூலம் தான் நாங்கள் மாவீரர்களை மதிக்கின்றோம் எனக் காட்டலாம் என நினைப்பதும் அடிப்படையில் நடைமுறைச் சாத்தியமற்றது. இந்த நடைமுறையை தனிப்பட்ட எங்கள் வாழ்க்கையில் (தனிமனித வாழ்க்கையில்) நடை முறைப்படுத்துதலே சாத்தியமற்று இருக்கும் போது, அதை ஒரு சமூகத்தை நோக்கி கேட்பது தவறானது. என்னால், உங்களால் மாவீரர்களை மதிக்கின்றோம் என்பதற்காக எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லா சந்தோசங்களையும் மூட்டை கட்டி வைத்து விட்டு கார்த்திகை மாதத்தில் தனியே மாவீரர்களை மட்டும் துதித்துக் கொண்டு, அவர்கள் தியாகம் பற்றி மட்டுமே கதைத்துக் கொண்டு இருக்க முடியுமா? நேர்மையாக பதில் சொன்னால் 'இல்லை' என்றுதான் சொல்ல முடியும். இதே கேள்வியை போராடி வென்ற எந்த சமூகத்தை நோக்கிக் கேட்டாலும், போராடி விடுதலை பெற்ற தேசத்தவர்களிடம் கேட்டாலும் இதே பதில் தான் வரும்.

நன்றி

Posted

சுகன், நான் நிகழ்வுகளைத் தவிர்க்கும்படி இங்கு கூறவில்லை. மாபெரும் நிகழ்வுகளைத் தவிர்க்கும்படிதான் கூறியிருக்கிறேன்.

மாபெரும் நிகழ்வுகளுக்கும், சிறிய நிகழ்வுகளுக்கும் என்ன வித்தியாசம்? கலந்து கொள்ளும் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையா? அப்படி என்றால் உங்கள் கருத்தே அடிப்படையில் தவறானது. சிறிதாக மக்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வை நடத்தலாம், ஆனால் அதிகளவான மக்கள் பங்கு கொள்ளும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது என்று சொல்கின்றீர்கள்....

Posted

நிழலி, நான் இதனை இங்கு கொண்டு வந்து இணைக்கவில்லை. நக்கீரன் அவர்களுக்கு நான் இங்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. நான் அறிந்ததைத் தான் இங்கு தெரிவித்திருந்தேன். உங்கள் கருத்துகளிலிருந்து எனக்கெதிராக வாதாடுவதற்காக வாதாடுவதாகத் தெரிகிறது. நான் இங்கு நிகழ்வுகளைத் தவிர்க்கும்படி கூறவில்லை. மீண்டும் கூறுகிறேன், மாபெரும் நிகழ்வுகளைத்தான் தவிர்க்குமாறு கூறுகிறேன். நீங்கள் கூறுவது போல, முகப்புத்தகம், மற்றும் டிவிட்டர் மூலமாகத்தான் இப்போது இந்தப் பரப்புரை நடந்து கொண்டிருக்கிறது. நான் எனது கருத்தை மட்டும்தான் இங்கு வைக்கிறேன்.

Posted

நிழலி, நான் இதனை இங்கு கொண்டு வந்து இணைக்கவில்லை. நக்கீரன் அவர்களுக்கு நான் இங்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. நான் அறிந்ததைத் தான் இங்கு தெரிவித்திருந்தேன். உங்கள் கருத்துகளிலிருந்து எனக்கெதிராக வாதாடுவதற்காக வாதாடுவதாகத் தெரிகிறது.

தமிழச்சி,

உங்களுக்கு எதிராக அல்ல, உங்கள் கருத்துகளில் இருக்கும் கருத்தியலுக்கான எனது பதில்களைத்தான் எழுதிக் கொண்டு இருந்தேன்.

தனது கருத்துகளை ஒருவர் எதிர்க்கின்றார் என்றவுடன் தனக்கெதிராக வாதாடுகின்றார் என கருதக் கூடியவர் நீங்கள் என்று கருதாததால் தான் இவ்வளவு நேரமும் அலுவலகத்து வேலைகளையும் விட்டு விட்டு கருத்தாடிக் கொண்டு இருந்தேன்...இல்லையெனில், வழக்கம் போல மற்ற திரிகளைப் பார்த்து மெளனமாக இருப்பது போன்று இருந்து இருப்பேன். ஆனால் நீங்களும் தன் கருத்தை எதிர்ப்பவரை தன்னையே எதிர்ப்பவராக கற்பனை பண்ணுகின்றீர்கள்...

நன்றி, வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.