Jump to content

இனிப்பு தோடம்பழம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மகனுடன் சந்தைக்கு போனான், அங்கு ஒரு பெட்டி (50க்கு கிட்ட இருக்கும்) $5; மகனும் சொன்னான் இலாபமா இருக்கு வாங்குங்கோ என்று, நானும் சந்தோஷத்தில் வாங்கி வந்து சாப்பிட்டு பார்த்தால் படு புளி, வீட்டில் எல்லோரும் என் தலையில் கட்டிவிட்டார்கள் சாப்பிட்டு முடிக்க சொல்லி, இப்ப ஆபிஸில் 4 & வீட்டில் 4 என இந்த கிழமை பழுதாக முதல் சாப்பிடனும்,

யாருக்காவது தெரியுமா சாப்பிட்டு பார்க்காமால் எப்படி இனிப்பு தோடம்பழம் வாங்குவது என்று?

அடிக்கடி இப்படி சாப்பிட்டு, எனக்கு தோடம்பழமே வெறுக்க போகின்றது :lol:

Link to comment
Share on other sites

யான் பெற்ற இன்பம் பெறுக, இவ் வையகம்! :D

ஒரு வழியும் தெரியவில்லை, உடையார்!

நான் எனது, அனுபவத்தில் இருந்து, அறிந்து கொண்டது!

விற்பவர்கள், சீனாக்காரர்கள் அல்லது பிலிப்பினோக்கள் என்றால் அனேகமாக, வாங்குவதில்லை!

பல தடவைகள், உங்களை மாதிரி, நிறையப் பெட்டிகள், சாப்பிட்ட அனுபவம்!

அவுஸ்திரேலியர்கள், இத்தாலியர்கள் என்றால் அவ்வளவு, பிழை போகாது!

அதுக்காகச் தமிழில், சுறா, நண்டு என்று கத்திக்கத்தி மீன் விக்கிற, அந்த அவுஸ்திரேலிய தேவாங்கிடம் போய் விடாதீர்கள்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளிஞ்சு ஜூஸாக்கி சீனி போட்டுக் குடிக்கலாமே. :icon_idea:

தேநீருக்கே சீனி போடுவதை நிற்ப்பாட்டிபோட்டன் :lol:

நன்றி ஈசன் & புங்கையுரன் உங்கள் கருத்திற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளிஞ்சு ஜூஸாக்கி சீனி போட்டுக் குடிக்கலாமே. :icon_idea:

[size=4]யாருக்காவது தெரியுமா சாப்பிட்டு பார்க்காமால் எப்படி இனிப்பு தோடம்பழம் வாங்குவது என்று?[/size]

கேட்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோடம்பழம் சரியான புளி என்றால்...

அதை எலும்பிச்சம் பழம் மாதிரி... கறிக்கு விட பாவிங்கோ உடையார். :lol:

ஒரு பெட்டி வாங்குவதென்றால்... ஒரு தோடம்பழத்தை உரித்துதா... இனிப்பு என்றால் தான் வாங்குவேன் என்று,கடைக்காரனிடமே கேட்டிருக்கலாமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]யாருக்காவது தெரியுமா சாப்பிட்டு பார்க்காமால் எப்படி இனிப்பு தோடம்பழம் வாங்குவது என்று?[/size]

கேட்கிறார்

:lol::D நல்ல கடுப்பில் பதில் போடுகின்றீர்கள், அனுபவம் போல

தோடம்பழம் சரியான புளி என்றால்...

அதை எலும்பிச்சம் பழம் மாதிரி... கறிக்கு விட பாவிங்கோ உடையார். :lol:

ஒரு பெட்டி வாங்குவதென்றால்... ஒரு தோடம்பழத்தை உரித்துதா... இனிப்பு என்றால் தான் வாங்குவேன் என்று,கடைக்காரனிடமே கேட்டிருக்கலாமே..

:lol::D இனிமேல் ஒளித்து வைத்து சப்பிட்டு பார்த்துவிட்டுதான் வாங்குவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோடம்பழம் சரியான புளி என்றால்...

அதை எலும்பிச்சம் பழம் மாதிரி... கறிக்கு விட பாவிங்கோ உடையார். :lol:

ஒரு பெட்டி வாங்குவதென்றால்... ஒரு தோடம்பழத்தை உரித்துதா... இனிப்பு என்றால் தான் வாங்குவேன் என்று,கடைக்காரனிடமே கேட்டிருக்கலாமே..

இது பொம்பிள பாக்கிற மாதிரி, தமிழ் சிறி!

ஒரு பெட்டிக்குள்ள, எல்லா மரத்துப் பழங்களும், கலந்திருக்கும்!

என்னவோ, அவரவர் அதிஸ்டத்தைப் பொறுத்தது! :D

Link to comment
Share on other sites

தேநீருக்கே சீனி போடுவதை நிற்ப்பாட்டிபோட்டன் :lol:

இனிப்பான தோடம்பழத்தில இருக்கிற இனிப்பு என்ன என்டு நினைக்கிறீங்க ? ( அதுவும் சீனி தான் )

ஸோ.. புளி தோடம்பழத்திற்கு சீனி சேர்த்து இனிப்பாக்கும் போது.. கிட்டத்தட்ட இனிப்புத் தோடம்பழத்தில இயற்கையா இருக்கிற சீனி அளவு தான் வரப்போகுது. :)

யாருக்காவது தெரியுமா சாப்பிட்டு பார்க்காமால் எப்படி இனிப்பு தோடம்பழம் வாங்குவது என்று?

கேட்கிறார்

நான் பெட்டியா வாங்குவதில்லை. சாம்பிள் வெட்டி வைத்திருப்பார்கள், அதை சுவைத்து அதே மாதிரி நிறம், [size=4]Texture [/size] உள்ள தோடம்பழங்களை வாங்குவேன்.

[size=4]Australian navel oranges[/size] தான் வாங்குவது வழக்கம்.

Oranges-838f9329-abb4-4ad8-9cb0-31bb2ff5dc68-0-696x356.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உடையார் இனி வாழ்நாளில் தோடம்பழம் வாங்கமாட்டார் :D [/size]

[size=4]தோடம்பழத்துடன் தேன் சேர்ந்து சாப்பிடுங்கள் உடம்பில் உள்ள சளித்தொல்லை நீங்கும் :) [/size]

[size=4]68794_454554657920942_1151201910_n.jpg6a00d83451ba8c69e200e5522d0af48834-800wi.jpg[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பார்த்து விட்டு இது என்னவோ தோடம்பழத்தில் செய்யும் சாப்பாட்டாக்கும் என்று நினைத்து விட்டேன் :D

Link to comment
Share on other sites

நேற்று மகனுடன் சந்தைக்கு போனான், அங்கு ஒரு பெட்டி (50க்கு கிட்ட இருக்கும்) $5; மகனும் சொன்னான் இலாபமா இருக்கு வாங்குங்கோ என்று, நானும் சந்தோஷத்தில் வாங்கி வந்து சாப்பிட்டு பார்த்தால் படு புளி, வீட்டில் எல்லோரும் என் தலையில் கட்டிவிட்டார்கள் சாப்பிட்டு முடிக்க சொல்லி, இப்ப ஆபிஸில் 4 & வீட்டில் 4 என இந்த கிழமை பழுதாக முதல் சாப்பிடனும்,

யாருக்காவது தெரியுமா சாப்பிட்டு பார்க்காமால் எப்படி இனிப்பு தோடம்பழம் வாங்குவது என்று?

அடிக்கடி இப்படி சாப்பிட்டு, எனக்கு தோடம்பழமே வெறுக்க போகின்றது :lol:

சந்தையில் வாங்கிய பழங்களில் ஐந்து பழமாவது இனிப்பாக இருந்ததா? அப்படி இருந்திருந்தால் அது இலாபம் தான்...

பொதுவாக சந்தையில் வாங்கும் பழவகைகளைவிட பல்பொருள் அங்காடியில் வாங்கும் போது அதன் பெயரும், தரமும் (citrus அல்லது sweet) நிச்சயம் குறிப்பிட்டு இருப்பார்கள், பார்த்து வாங்கலாம்.. நீங்கள் வாங்கிய தோடம்பழம் புளிப்புத் தன்மையாக இருந்தால், அவற்றை பிழிந்து தேவைகேற்ப சீனி/ தேன் கலந்து பழரசமாகக் குடிக்கலாம்..

தோடம்பழத்தின் தோலை முகர்ந்து பார்த்தல் வித்தியாசம் தெரியும் என்று சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.. புளிப்புத் தன்மையாக இருந்தால், தேசிக்காய் மனம் போன்று strong ஆக இருக்குமாம்... (நான் ஒருதரமும் முகர்ந்து பார்த்ததில்லை..)

அடுத்தமுறை வாங்கும் போது, citrus -புளிப்புத்தன்மை கொண்டது தான் வேணும் என்று கேளுங்கோ, அப்ப தெரியும் வித்தியாசம்... :D:icon_idea:

Link to comment
Share on other sites

புளிப்பென்றால் 'தோடம்பழ ஊறுகாய்' போட்டு விடுங்கள். வித்தியாசமாக் இருக்கும்.

Link to comment
Share on other sites

புளிப்பென்றால் 'தோடம்பழ ஊறுகாய்' போட்டு விடுங்கள். வித்தியாசமாக் இருக்கும்.

இங்க சனத்துக்கு ஊறுகாய் போடுற அளவுக்கு நேரம் இருக்கா? :o:blink::mellow::unsure:^_^

Link to comment
Share on other sites

இங்க சனத்துக்கு ஊறுகாய் போடுற அளவுக்கு நேரம் இருக்கா? :o:blink::mellow::unsure:^_^

நல்லதோ கெட்டதோ, புளித் தோடம்பழப் பெட்டியை உடையார் வாங்கிட்டார். :lol:

இனி பெட்டியை (தோடம்பழ) விட்டு வெளியே வந்து சிந்திக்க வேண்டும். பொசிடிவா யோசிக்க வேணும். :D அவுசில் நல்ல வெயில். சும்மா காயப் போட்டுச் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோடம் பழச் சாற்றப் பிழிந்து ஜெலற்றீனும் டின் மில்க்கும் விட்டு ஒரு கொதிவர இறக்கி பீற்றரால் நன்றாக அடித்து குளிர் பெட்டியில் வைத்தால் சுவையான டிசெட் கிடைக்கும். தோடம்பழம் வாங்கப் போகேக்கே ஒரு சிறிய கத்தி அல்லது பிளேட் கொண்டுபோனால் பழத்தில ஒரு கீறு கீறி விரலால தொட்டு இனிப்பா என்று பாக்கலாம்.உடையார் பிளேட் போட்டுப் பழக்கம் இருக்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்களை தந்த அனைவருக்கும் நன்றிகள்

தோடம் பழச் சாற்றப் பிழிந்து ஜெலற்றீனும் டின் மில்க்கும் விட்டு ஒரு கொதிவர இறக்கி பீற்றரால் நன்றாக அடித்து குளிர் பெட்டியில் வைத்தால் சுவையான டிசெட் கிடைக்கும். தோடம்பழம் வாங்கப் போகேக்கே ஒரு சிறிய கத்தி அல்லது பிளேட் கொண்டுபோனால் பழத்தில ஒரு கீறு கீறி விரலால தொட்டு இனிப்பா என்று பாக்கலாம்.உடையார் பிளேட் போட்டுப் பழக்கம் இருக்கோ :D

சத்தியமா பீற்றர் என்றால் என்னவென்று தெரியா & மனைவியிடம் கேட்க வேண்டும்

பிகு; பீற்றர் உங்கள் கணவரின் பெயர்?? :D

சோப் போட்டுதான் பழக்கம் :lol:

Link to comment
Share on other sites

உங்களுக்கும் இப்படி ஒரு பிரச்சனை போல. இதேவிடயத்தை நானும் நான்கு வருடங்களின் முன்பு இங்கு கேட்டு உரையாடல் செய்தோம்.

இனிப்புத் தோடம்பழத்த கடையில எப்பிடி பாத்து வாங்குறது?

Link to comment
Share on other sites

தோடம்பழத்தை சிறிய கடைகளில் வாங்காமல் பெரிய சந்தைகளில் அல்லது பொது சந்தைகளில் வாங்கினால் அதனை சாப்பிட்டு பாத்து வாங்கலாம். இங்கு அப்படி செய்யலாம் ஆனால் மற்றைய நாடுகளை பற்றி தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக இருப்பவை என்பதனால் இனிப்பாக இருக்கும் என்பதில்லை. சிறிய கடைகளிலோ அல்லது பெரிய கடைகளிலோ சாப்பிட்டுப் பார்த்து வாங்க முடியாது. ஒரு குத்துமதிப்பா பளிச் பளிச் என்று இருப்பதை வாங்கினாலும் சிலநேரம் புளிக்கத்தான்செயும்.இதில் முன்வினைப் பயன் நன்றேன்றால் இனிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோடம்பழம் உடம்புக்கு நல்லதெண்டு சொல்லுறாங்கள்......நானும் அடிக்கடி தோடம்பழம் வாங்கிறனான்...சில நேரத்திலை சறுக்கீடும்.......புளிச்சுதெண்டால் வீட்டிலை ஒருசீவனும் வாயிலையும் வைக்காதுகள்........எண்டாலும் நான் விட்டு வைக்கிறேல்லை....அப்பிடியே புழிஞ்சு கொஞ்ச றெமி மாட்டின் விட்டு.............அங்காலை உங்களுக்கு விளங்குமெண்டு நினைக்கிறன் :D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.