Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2012 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலையால் இப்பத் தான் வந்தேன்...இந்த விழாவை ஒழுங்கு பண்ணியவர்களும்,பங்கு பற்றியவர்களுக்கும்,தொகுத்து வழங்கியவர்களுக்கும், இந்த போட்டி நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்தவர்களுக்கும்,பரிசினை தேர்ந்தெடுத்த சுபேசுக்கும்,மொத்தத்தில் இதில் பங்கு பற்றிய எல்லோருக்கும் மிக்க நன்றிகள்.

முதல் பரிசினை பெறும் த.சூ,3ம் பரிசினை பெறும் கலைஞனுக்கும் எனது பாராட்டுக்கள்.எனக்கு 2ம் பரிசு கிடைத்தது நம்ப முடியாமல் உள்ளது.அத் திரியை தொடங்கியது மட்டும் தான் நான் மற்றப் படி அதில் வந்து கருத்திட்ட கருத்தாளர்கள் தான் இத் திரியை வெற்றித் திரியாக்கி உள்ளனர்.அவர்களுக்கு எனது நன்றிகள். அனைத்து உறவுகளுக்கும் இந்த வெற்று போய் சேரட்டும்.இது வரை எனக்கு வாழ்த்து தெரிவித்தோருக்கும்,இனி மேல் வாழ்த்து தெரிவிக்க போவோருக்கும் எனது நன்றிகள்.

யாழ் களத்தில் ரதியை விட தமிழினி,யாயினி,துளசி,தமிழிச்சி,சுமேரியர்,அலைமகள்,சாந்தி அக்கா,நிலா அக்கா,சகாறா அக்கா போன்ற பெண்கள் இருக்கும் போது தனியே ரதியை மட்டும் அநேகமாக எல்லாத் திரியிலும் நக்கலடித்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பி;கு;இவ்வளவு நாளும் நீலமேகம் நிழலியாக இருக்க கூடும் என்ட சந்தேகம் இருந்தது ஆனால் இப்ப கொஞ்ச நாளாய் எழுத்து நடையை வைத்துப் பார்க்கும் போது சாஸ்திரியாக இருக்கலாம் என நினைக்கிறேன் :unsure:

Edited by ரதி

  • Replies 269
  • Views 15.7k
  • Created
  • Last Reply

.

பி;கு;இவ்வளவு நாளும் நீலமேகம் நிழலியாக இருக்க கூடும் என்ட சந்தேகம் இருந்தது ஆனால் இப்ப கொஞ்ச நாளாய் எழுத்து நடையை வைத்துப் பார்க்கும் போது சாஸ்திரியாக இருக்கலாம் என நினைக்கிறேன் :unsure:

நான் நினைக்கிறேன் டமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களப் பரிசுப் போட்டியை நன்றாக, நடத்தி முடித்த, சொந்தங்கள் அனைவருக்கும், வாழ்த்துக்களும், நன்றிகளும்!

பாராட்டுப் பரிசுகள் பெற்ற, தமிழ் சூரியன், ரதி, மற்றும் கரும்பு ஆகியோரை மனமார வாழ்த்துவதுடன், போட்டியை நடத்தி முடித்த, அகூதாவுக்கும், சுபேசுக்கும், மனம் திறந்த நன்றிகள்!

சிட்னியில் இரவு பதினோரு மணியாகி விட்டது!

மடிக்க் கணனியில் தூங்கி விட்டேன்! :wub:

ஏய் சுபேசு. விழா முடிஞ்சுதா?

குமாரசாமியண்ணனும் புங்கையும் நானும் கார் பார்க்குக்குள்ள போய் கொஞ்சம் கட்டிங் போட்டிட்டு வாரத்துக்குள்ள ஆரப்பா மண்டபத்தைப் பூட்டினது. செக்கியுரிட்டச் சொல்லி கதவைத் திறந்து விடைய்யா. :D

  • கருத்துக்கள உறவுகள்

திறந்து என்ன செய்யப்போறீங்க :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஏய் சுபேசு. விழா முடிஞ்சுதா?

குமாரசாமியண்ணனும் புங்கையும் நானும் கார் பார்க்குக்குள்ள போய் கொஞ்சம் கட்டிங் போட்டிட்டு வாரத்துக்குள்ள ஆரப்பா மண்டபத்தைப் பூட்டினது. செக்கியுரிட்டச் சொல்லி கதவைத் திறந்து விடைய்யா. :D

வாங்கோ தப்பிலி அண்ணா...ஆனால் உள்ள நந்தன் அண்ணா சில உணவு அயிட்டங்களை ஆட்டையைப்போட்டு பார்சல் பண்ணிக்கொண்டிருப்பதை வெளியில் சொல்லிவிடாதீர்கள்.. :D

திறந்து என்ன செய்யப்போறீங்க :icon_mrgreen:

வீட்ட போகணும்யா :lol:

என்னை போல யாழுக்கு அப்போ அப்பபோ வந்து போறவர்களுக்கும் சில நிணைவு விருதுகள் கொடுக்கலாமே?

அத்தோடு சில பொறுப்புக்களையும் தரலாமே. :rolleyes:

வாங்கோ தப்பிலி அண்ணா...ஆனால் உள்ள நந்தன் அண்ணா சில உணவு அயிட்டங்களை ஆட்டையைப்போட்டு பார்சல் பண்ணிக்கொண்டிருப்பதை வெளியில் சொல்லிவிடாதீர்கள்.. :D

என்னய்யா இது கனடாக் குளிர் தாங்க எழுதில்லை. வீட்ட போறதுக்கு ஏதும் 'மினி கப்' கிடைக்குமா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா வீட்ட இடியப்ப நைட் நடக்கிறது அங்க வாங்க .....

இப்ப தான் அவர் இடியப்பம் வாங்க வெளில போய் இருக்காராம் அதுவரைக்கும் அவரோட குழந்தயோட பில்டிங் பாக்ஸ் ah வைச்சு விளயடட்டாம்

என்னை போல யாழுக்கு அப்போ அப்பபோ வந்து போறவர்களுக்கும் சில நிணைவு விருதுகள் கொடுக்கலாமே?

அத்தோடு சில பொறுப்புக்களையும் தரலாமே. :rolleyes:

ரெண்டு கில்லோ கடலை தான் வாங்கி தர முடியும் :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னை போல யாழுக்கு அப்போ அப்பபோ வந்து போறவர்களுக்கும் சில நிணைவு விருதுகள் கொடுக்கலாமே?

அத்தோடு சில பொறுப்புக்களையும் தரலாமே. :rolleyes:

கண்டிப்பாய் வினித் அண்ணா..அடுத்த முறை கவனத்தில் எடுக்கப்படும்.. :)

என்னய்யா இது கனடாக் குளிர் தாங்க எழுதில்லை. வீட்ட போறதுக்கு ஏதும் 'மினி கப்' கிடைக்குமா? :lol:

ராஜ வன்னியனின் ஒட்டகம் நிக்குது..எப்பிடி வசதி..? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னை போல யாழுக்கு அப்போ அப்பபோ வந்து போறவர்களுக்கும் சில நிணைவு விருதுகள் கொடுக்கலாமே?

அத்தோடு சில பொறுப்புக்களையும் தரலாமே. :rolleyes:

வந்தா தானே தாறதுக்கு முதல்ல ஒழுங்கா வாங்கோ :lol:

வணக்கம் உறவுகளே ஒரு இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இப்போ தான் வந்தேன் ..........இந்த யாழ்க்கள பரிசுப்போட்டி இவ்வளவு சிறப்பாக ஒற்றுமையாக ,பன்பலாக,நடந்து முடிந்திருக்குது.........உண்மையில் நானும் முஸ்பாத்தியாக ஏதாவது எழுத முடியவில்லையே என்று வருந்துகிறேன்,,,,,,,,,,,,எல்லோரும் சிறப்பாக ,ஒற்றுமையாக ,புரிந்துணர்வாக செயற்பட்டதை அவதானிக்க முடிகிறது...........அத்துடன் போட்டியில் பரிசு பெற்றமைக்கு அந்த இறைவனுக்கும் ,,,இந்த பாடலிற்கு என்னுடன் துணை நின்ற அத்தனைபேருக்கும் நன்றிகள் இந்த வெற்றி அவர்களையும் சாரும்............

அந்த வகையில் இந்தப்பாடல் வீடியோ வடிவம்பெற துணை நின்ற இந்த தள உறவான [] என் நன்றிகளை தெரிவிக்கும் கடமையும்,பொறுப்பும் எனக்கு உண்டு ,,,,,,,,,,,,அத்துடன் பரிசுகளைப்பெர்ற ரதி அக்கா ,கரும்பு ஆகியோருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ........

சுண்டல் ,சிறி அண்ணா ,அகூதா,சுபேஸ் சிறப்பான பாராட்டுக்கள் ..................அசத்திய பன்முகத்திறமை கொண்ட நீல மேகத்திர்ற்கு எக்ஸ்ட்ரா பாராட்டுக்கள் ............நன்றி உறவுகளே நன்றி வணக்கம் :D :D :D :D :D:lol: :lol: :icon_idea:

அந்த uravu தன் பெயரை வெளிக்காட்ட வேண்டாம் என்னும் பெருந்தன்மை ,கொண்டபடியால் நீக்குகிறேன் ..அசௌகரியத்திற்கும் வருந்துகிறேன் ..............மீண்டும் நன்றிகள்

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புவின் நாடகம் முடிந்ததை அடுத்து .வந்த என்னை பிடித்து மேடையில் ஏத்தி சாத்து நீ ஏதாவது நிகழ்ச்சி செய்தே தான் ஆக வேணும் எண்டு கு.சா. மேடையில் இழுத்தக்கொண்டு போய் விட்டுவிட எட வந்தவனிற்கு வாயிலை தண்ணியை கூட காட்டாமல் என்று புறு புறுத்தபடி. சரி நான் இப்போ சுண்டலிட்டை சில கேவியள் கேட்பன் புத்தி சாலித்தனமா பதில் சொல்லவேணும். சுண்டல் மேடைக்கு வரவும். மேடைக்கு வந்த சுண்டலிடம். சுண்டல். நல்லபடியா பதில் சொல்லி நீதான் ஒஸ்ரேலியாவிற்கு நல்ல பெயர் வாங்கித்தரவேணும்.

சுண்டல். ஏன் ஒஸ்ரேலியா நல்ல பெயர் இல்லையா?

சாத்து. ஆரம்பமே இடிக்கிதே.

சுண்டு . அப்ப தள்ளி நில்லுங்க.

சாத்து .சரி சரி. மின்னைலை பாத்தா கண் போயிடும் பாக்கலேன்னா.

சுண்டு .மின்னல் போயிடும்.

சாத்து . உனக்கு என்ன மாதிரி மனைவி வேணும்.

சுண்டு. நிலா மாதிரி.

சாத்து. அப்பிடின்னா??

சுண்டு. இராத்திரிலை வரணும் பகல்லை போயிடணும்.

சாத்து . உனக்கு பிடிக்காதது

சுண்டு . இன்ரர்வியூ

சாத்து .எதுக்கு?

சுண்டு . நாலு பேர் கேள்வி கேக்கிறமாதிரி நடகக்கூடாது அதுக்குத்தான்.

சாத்து. அடிமைக்கும் கொத்டிமைக்கும் என்ன வித்தியசம்.

சுண்டு. ஒரு பெண்ணை காதலிச்சீங்கண்ணா நீங்க அடிமை.அவளையே கல்யாணமும் பண்ணிக்கிட்டிங்கண்ணா கொத்தடிமை.

சாத்து.மனிதனிற்கும். செல்போனிற்கும் உள்ள வித்தியாசம்.

சுண்டு.மனிசனுக்கு கால் இல்லேன்னா பலன்ஸ் பண்ண முடியாது செல்போனிற்கு பலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.

சாத்து. வெறிகுட் எல்லாத்துக்கும் நல்லா பதில் சொல்லி ஒஸ்ரேலியா மானத்தை காப்பாத்திட்டாய். நெக்ஸ்.

சுண்டு. யோவ் சாத்து என்ரை சுண்டலின் பாத்தது ரசித்தது பக்கத்திலை இருந்து நாலு நகைச்சுவையை சுட்டுக்கொண்டு கொண்டு வந்து இங்கை கேட்டிட்டிட்டு என்னையே பாராட்டுறியா எங்கடா அந்த திருவலை. சாத்து மேடையை விட்டு பாய்கிறார்.

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களப் பரிசுப் போட்டியை நன்றாக, நடத்தி முடித்த, சொந்தங்கள் அனைவருக்கும், வாழ்த்துக்களும், நன்றிகளும்!

பாராட்டுப் பரிசுகள் பெற்ற, தமிழ் சூரியன், ரதி, மற்றும் கரும்பு ஆகியோரை மனமார வாழ்த்துவதுடன், போட்டியை நடத்தி முடித்த, அகூதாவுக்கும், சுபேசுக்கும், மனம் திறந்த நன்றிகள்!

சிட்னியில் இரவு பதினோரு மணியாகி விட்டது!

மடிக்க் கணனியில் தூங்கி விட்டேன்! :wub:

நன்றி புங்கை அண்னா..போட்டியில் எனக்கு மிகவும் தலைவலி கொடுத்தது உங்கள் ஆக்கமும்தான்..போட்டிக்குள் உங்கள் ஆக்கமும் முதல் மூன்றுக்குள் நின்றது..மிக அருமையான படைப்பு அது..ஒரு சிறு வித்தியாசத்தில்தான் மற்ற இரண்டு ஆக்கம்களும் வந்தன..நன்றி அண்ணா..

நன்றி ரதி அக்கா..தமிழ் சூரியன் அண்ணா...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறிப்பிட்ட சில மணி நேரங்களில் 3000 தடவைகளுக்கு அதிகமாக இந்த நிகழ்ச்சி பார்க்கபட்டிருக்கு என்பதே இந்த நிகழ்வின் மிக பெரிய வெற்றி நன்றி மறைப்பது நன்றன்று என்ற வாக்கியத்திற்கு இணங்க நன்றிகள் உறவுகளே

குறிப்பா

இந்த நிகழ்ச்சிய நடத்த முன்வந்த அகூதா அண்ணா

ஒருக்கினைத்த தமிழ் Sri அண்ணா

நடுவராக பொறுப்பு எடுத்த சுபேஷ்.......

வாழ்த்துபாடலை அமைத்து கொடுத்த தமிழ் சூரியன் அண்ணா மற்றும் பாடகர் நாதன்.......

யாழ் கள நிர்வாகம்

இந்த விழாவின் நாயகர்கள் நெருப்பு நீல மேகம் இசை அண்ணா அன்பு அண்ணா தப்பிலி அண்ணா குட்டி அண்ணா புங்கை அண்ணா சாத்திரி அண்ணா கோமகன் அண்ணா ரமணன் வாதவுறான் வல்வை அக்கா இன்னும் பல பெயர் குறிப்பிட படாத உறவுகள் மட்டும் போட்டியில் வெற்றி பெற்றோர் , மற்றும் போக்கு வரத்து..... நந்தன் அண்ணா குமாரசாமி தாத்தா, விசு அண்ணா

Sajeevan, thamilarau, alai akka

Thank you so much :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உறவுகளே..நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்சிறி அண்ணா,அகூதா அண்ணா,சுண்டலின் வேண்டுகோளுக்கிணங்க போட்டிக்கா படைப்புகளை தெரிவு செய்திருந்தேன் அவற்றில் இருந்து பல வடிகட்டலின் பின் பரிசு பெறும் ஆக்கம்களாக கீழ் உள்ள மூன்று ஆக்கம் களை தெரிவு செய்துள்ளேன்..அவையாவன..

முதல் பரிசு - "மண்வாசம் தேடும் நெஞ்சம்............."(http://www.yarl.com/...=80#entry801602)

இரண்டாவது பரிசு - "புலம் பெயர் வாழ்க்கையும்,மன அழுத்தமும்"(http://www.yarl.com/...howtopic=108331)

மூன்றாவது பரிசு - "இணையவெளியில் நாங்கள்.." (http://www.yarl.com/...37)

ஆகிய ஆக்கம்கள் தட்டிக்கொள்கின்றன...

நன்றி உறவுகளே..

பரிசு பெற்றவர்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.....சுபேஸ் உங்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்.

[size=5]சிறப்பாக நடத்தி முடித்த சுண்டலுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!! [/size]பச்சை முடிந்து விட்டது நாளைக்குச் சுண்டலுக்கு ஒரு பச்சை!

( மற்றவைக்குச் சுண்டல் நன்றி சொன்னபடியால் இங்கு எழுதவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

பரிசு பெற்றவர்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.....சுபேஸ் உங்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி தாத்தா...i love you தாத்தா...ரண்டு வேலை செய்து கெடுத்துக்காம உடம்பை கவனமாய் பாத்துக்குங்க என் செல்ல தாத்தா...

நன்றி அலை அக்கா.. :)

நீலமேகம், இசைக்கலைஞன், சுண்டல், தமிழ்சிறி, சுபேஸ், அகூதா மற்றும் இங்கு பங்குபற்றிய, கலந்துகொண்ட அனைவருக்கும் வணக்கம்.

உங்கள் முயற்சிக்கும், நேரத்திற்கும், கலகலப்பான கருத்துக்களுக்கும் நன்றி.

உங்கள் விருதுக்கும் மிக்க நன்றி! 'இணையவெளியில் நாங்கள்...' எனும் பொருளில் நான் வரைந்த கட்டுரை அமரர் ஈழநாதன் (ஈழவன்) அவர்களுக்கு நான் ஆத்மார்த்தமாக வழங்கிய உயர் மரியாதையுடனான எனது உணர்வுகளின் வெளிப்பாடு. ஈழவன் நினைவுக்கட்டுரைக்கு கிடைக்கக்கூடிய பாராட்டுக்கள் அனைத்தும் அவரையே சென்றடையவேண்டும்.

எதிர்காலத்தில் சந்தர்ப்பம், வாய்ப்பு கிடைக்கும்போது தொடர்ந்தும் உங்களுடன் இணைந்து கருத்தாடலில் ஈடுபடுவதோடு, பயனுள்ள ஆக்கங்களையும் தருவதற்கு முயற்சி செய்கின்றேன்.

ஓடுகின்ற மேகங்களின் கோலம் நொடிக்கு நொடி மாறி ஆகாயம் வெவ்வேறு வடிவங்களை எடுப்பதுபோல் யாழின் தோற்றமும் நாளுக்கு நாளாக, மாற்றம் பெற்றுச்செல்கின்றது. இந்தவகையில் யாழ் இணையத்தை அலங்கரிக்கும் ஒவ்வொரு கருத்தாளர்களும் பாராட்டுக்குரியவர்கள், பாராட்டப்படவேண்டியவர்கள்.

இன்று விருதுக்காக தெரிவுசெய்யப்பட்ட கருத்தாளர்கள் தமிழ்சூரியன், ரதி போல் நெடுக்காலபோவான் தொடக்கம் குறுக்காலபோவான் வரை ஆயிரம், ஆயிரமாய் யாழ் கருத்துக்களத்தில் தமது கருத்துக்களைப்பரிமாறிக்கொண்ட ஒவ்வொரு கருத்தாளரும் யாழில் மின்னிய, மின்னுகின்ற நட்சத்திரங்கள். இந்த பலநூறு நட்சத்திரங்களின் சங்கமத்தில் நானும் ஒரு நட்சத்திரமாக உங்களுடன் நின்று பிரகாசிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்றையும் விட....ஒரு நிழலையும் நிஜமாக்க முடியும்....யாரையும் வசப்படுத்த முடியும்....என நிரூபித்து காட்டிய அருமைஉறவு சுண்டலுக்கு! கோடிவாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.உங்கள் மனம் போல் வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். :)

அத்துடன் எங்கள் நெடுக்கரை இங்கு காணாதது மனம் வருடுகின்றது. :(

இதில் பங்கு பற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் .மிகவும் என்ஜாய் பாண்ணி வாசித்தேன் .பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விட....ஒரு நிழலையும் நிஜமாக்க முடியும்....யாரையும் வசப்படுத்த முடியும்....என நிரூபித்து காட்டிய அருமைஉறவு சுண்டலுக்கு! கோடிவாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.உங்கள் மனம் போல் வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். :)

அத்துடன் எங்கள் நெடுக்கரை இங்கு காணாதது மனம் வருடுகின்றது. :(

அப்ப பொன்னம்மாக்கா ???????????????????

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் பரிசு பெற்ற உறவுகளுக்கும் மன்றும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..நானும் அடிக்கடி வந்து,வந்து பார்த்துட்டு போனனாக்கும்.ரொம்ப சந்தோசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாத்தியார்: இனி வாழ்க்கையிலை நல்லதே செய்யிறேல்லை...

புலவர்: ஏன் வாத்தி? என்ன நடந்தது???

வாத்தியார்: நேற்று என்ன கிழமை?

புலவர்:சனிக்கிழமை!

வாத்தியார்: நோமல் சனியில்லை...புரட்டாதிசனி....அப்புடியிருந்தும் 20கிலோ மாட்டுறைச்சி வாங்கி.......மாட்டுறோஸ் செய்து கொண்டுவந்தனான்..

புலவர்: எங்கையப்பா???என்ரை கண்ணிலை காணவேயில்லை....

வாத்தியார்: என்னெண்டு காணேலும்?? சட்டியோடையே தூக்கிக்கொண்டு போட்டாங்கள்

ரதி: ஆள் ஆரெண்டு சொல்லுங்கோ.....இப்ப பல்லுடைக்கிறன்.....

யாயினி:அக்கா சும்மா இருங்கோ....

ரதி: சும்மா இரடி.........உவங்களை உப்புடியே விட...விட ஆகலும் ஓவராய் போறாங்கள்...

வாத்தியார்:சும்மா சண்டை பிடிக்காதேங்கோ பிள்ளையள்......போனசட்டி போனதுதான்...

புலவர்: இல்லை வாத்தியார்...உண்மை தெரிஞ்சாகணும்

யாயினி: வாத்தியார் நீங்கள் மாட்டுறோஸ் கொண்டுவரேக்கை ஆரும் கண்டவையோ?

வாத்தியார்: ம்..ம்.ம்.......ம்.....ஓம் கார் டிக்கியாலை சட்டியை இறக்கேக்கை.....நிழலி என்ன அந்தமாதிரி வாசனையாய் இருக்கெண்டு சொல்லிக்கொண்டு போனவர்...

ரதி: சரி கதையை விடுங்கோ வாத்தியார்......சட்டியும் கறியும் எங்கை இருக்கெண்டு எனக்கு தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.