Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர ஸ்காட்லாந்து: மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு உடன்பாடு

Featured Replies

[size=4]ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள்.[/size]

[size=4]இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரைறைசெய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் அலெக்ஷ் சால்மண்டும் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 15 ) கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.[/size]

[size=4]கடந்த ஆண்டு ஸ்காட்லாந்து தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு மகத்தான வெற்றிபெற்ற எஸ்என்பி என்ற ஸ்காட்லாந்தின் தேசியக் கட்சி சுதந்திரப் பிரகடனம் கோருவதற்கான ஆணையையும் மக்களிடம் பெற்றது.[/size]

[size=4]அரசியலமைப்பு சார்ந்த விடயங்களை கையாளும் அதிகாரமுள்ள ஐக்கிய இராச்சிய அரசு, அதற்காக சட்டப்படி மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கான மட்டுப்பாடுகளுடன் கூடிய அதிகாரத்தை ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்துக்கு அளிக்கிறது.[/size]

[size=4]இந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் ஆணை எப்படி இருந்தாலும் ஸ்காட்லாந்து-மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் இரண்டு அரசுகளும் ஆக்கபூர்வமாக இணைந்து செயலாற்ற வேண்டும் என்று இணக்கம் காணப்பட்டுள்ளது.[/size]

[size=4]ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பராவில் இன்று கைச்சாத்தான உடன்படிக்கையின் படி, 'ஆமா- இல்லையா?' என்ற ஒற்றைக் கேள்வியை மக்களிடம் கேட்பதற்கான வாக்கெடுப்பை 2014-இன் இறுதியில் நடத்தும் அதிகாரம் ஸ்காட்லாந்துக்கு கிடைக்கிறது.[/size]

[size=4]அதற்கான பிரச்சார விதிமுறைகள், தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு பொறிமுறைகள் என முக்கிய அம்சங்கள் இந்த 6-பக்க புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.[/size]

[size=4]1707-இல் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இரண்டு இராச்சியங்களும் 'ஐக்கிய இராச்சியமாக' மாறி 300 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்று இந்த புதிய சுதந்திர முயற்சி நடக்கிறது.[/size]

[size=4]1920-களில் அயர்லாந்து சுதந்திரமடைந்ததன் பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் இன்னொரு பிரிவினை நடக்குமா என்பது இன்னும் 2 ஆண்டுகளில் தெரிந்துவிடும்.[/size]

http://www.bbc.co.uk/tamil/global/2012/10/121015_scotlandreferendum.shtml

  • தொடங்கியவர்

[size=6]Scotland seals terms of historic independence vote[/size]

[size=5]Scotland set up a historic independence referendum after its leader signed an agreement on Monday with Britain's prime minister finalizing arrangements for a vote that could lead to the demise of its three-centuries-old union with England.[/size]

[size=5]Scotland's drive for sovereignty, led by its nationalist leader Alex Salmond, echoes separatist moves by other European regions such as Catalonia and Flanders which feel they could prosper as separate entities inside the European Union.[/size]

[size=5]Signed in the Scottish capital Edinburgh, the deal will allow Scotland to decide in a 2014 referendum whether it should become an independent country or stay within the United Kingdom.[/size]

[size=5]One of the most contentious issues at stake is the ownership of an estimated 20 billion barrels of recoverable oil and gas reserves beneath the UK-controlled part of the North Sea.[/size]

[size=5]Britain is also worried about the future of its nuclear submarine fleet based in Scotland as Salmond says there would be no place for nuclear arms on Scotland's soil after independence. Moving the fleet elsewhere would be costly and time-consuming.[/size]

[size=5]Many Scots are unconvinced about independence. Opinion polls show only between 30 and 40 percent of them are in favor - a range that has changed little as negotiations have intensified.[/size]

[size=5]http://ca.reuters.com/article/topNews/idCABRE89E0PX20121015[/size]

  • தொடங்கியவர்

[size=4]இவர்களே பிரிய எண்ணும்பொழுது நாங்கள் பிரியவேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கவேண்டும். [/size]

[size=4]'தமிழீழ கோரிக்கையை கைவிடுங்கள்' என்பவர்கள் கூட இதை ஆதரிக்கின்றனர். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆனானப்பட்ட இங்கிலாந்தே பிரிச்சுக் குடுக்குது..! ஆனால் தமிழர்களுக்கு நல்லிணக்கம் மட்டும்தான் ஆலோசனையாகக் கிடைக்கும்..

ஏற்கனவே தனிநாடு போன்றது தானே ஸ்கொலாந்த் சட்டப்படி பிரிய போகிறார்கள். ஆனால் ஸ்கொலாந்துக்கு பக்கத்தில் இந்தியா போன்ற நாதாரி நாடுஇல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் லண்டன்காரர் ஸ்கொட்லான்ட் போறது என்டால் விசா எடுக்கோனுமா :unsure:

ஜேம்ஸ் பொன்ட் சோன் கொனரி இதற்காக பெரிய பிரச்சாரம் செய்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தைய சூழ் நிலையில் எல்லா நாடுகளுக்க் தங்களோட இருக்கும் குட்டி நாடுகள வைச்சு கொண்டு இழுக்கறது கடும் சுமையா இருக்கு அது தான் மெதுவா கழட்டி விட பாக்குறாங்க...... ஸ்பெயின் இல் இருந்து கூட ஒரு நாடு உருவாக்க கூடிய சாத்தியம் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

Scotland's drive for sovereignty, led by its nationalist leader Alex Salmond, echoes separatist moves by other European

regions such as Catalonia in Spain and Flanders in Belgium at a time when a crisis-hit European Union undergoes deep changes to its identity.

2014 இல் மூன்று நாடுகள் உதயமாகலாம்..பெல்ஜியம் நாட்டில் இருந்து பிரிந்து போகவும் விரும்புகின்றார்கள் :D

ஜேம்ஸ் பொன்ட் சோன் கொனரி இதற்காக பெரிய பிரச்சாரம் செய்தார் .

அவர் தன் இனம் சார்ந்து சிந்திப்பவர். எங்கடசில தமிழன் சொந்த இன விடுதலைக்கு எதிரா யோசிப்பவன்

  • தொடங்கியவர்

அவர் தன் இனம் சார்ந்து சிந்திப்பவர். எங்கடசில தமிழன் சொந்த இன விடுதலைக்கு எதிரா யோசிப்பவன்

[size=4]உண்மை. ஆனால் அவர்களையும் தாண்டி Sean Connary போன்றவர்களை நாமும் உருவாக்கவேண்டும்.[/size]

[size=4]எமக்கும் வாக்கெடுப்பு சாத்தியமாக்கப்படல் வேண்டும்.[/size]

[size=4]இதில் கையொப்பம் இடுங்கள்:[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=109278&st=40

அவர் தன் இனம் சார்ந்து சிந்திப்பவர். எங்கடசில தமிழன் சொந்த இன விடுதலைக்கு எதிரா யோசிப்பவன்

அவர் கொஞ்சம் அறிவு பூர்வமாக சிந்தித்தார் .எங்கடைகள் அறிவு பூர்வமாக சிந்திததவனை மண்டையில் போட்டதுகள்.

இருந்தவர்களையும் போட்டுவிட்டு அல்லது நாட்டை விட்டு துரத்திவிட்டு எப்படியானவர்களை உருவாகினார்கள் என்பது தெரியும் தானே .

Edited by arjun

  • தொடங்கியவர்

[size=4]அப்படி என்னத்தை அவர்கள் சித்தித்தார்கள்?[/size]

[size=4]சரி அவர்கள் போன்றவர்கள் கடந்த மூன்று வருடங்களாக என்ன செய்கிறார்கள்? யார் தடுக்கின்றனர்??[/size]

[size=4]===========================[/size]

[size=4]இதில் கையொப்பம் இடுங்கள்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=109278&st=40[/size]

வட கடலில் இருந்து வரும் எரிபொருள் வருமானத்தை இங்கிலாந்து இழக்கும். பிரிந்து போகும் பொழுது, தங்கள் கடனில் கணிசமான பகுதியை ஸ்கொட்லன்ட் இன் தலையில் கட்டி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில எத்தனையோ விடயங்கள் சத்தமில்லாமல் நடக்குது. நாங்க நாடு கேட்டால் மட்டும் தான் எல்லோரும் விழுந்தடிச்சு வந்து சிங்களவனையே கட்டிக்கொண்டு கிடவுங்க என்று எங்களுக்கு அறிவுரையும் சொல்லி சிங்களவனுக்கு ஆயுதமும் அள்ளிக் கொடுக்கினம்...??! அதுதான் ஏனுன்னு புரியுதே இல்ல..!

எல்லாருக்கும்.. ஜியோபொலிரிக்ஸ் தான் தேவைப்படுகுது.! மனித உணர்வுகளை சுதந்திரங்களை மதிக்கனும் என்ற தேவை இல்லை..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Scotland's drive for sovereignty, led by its nationalist leader Alex Salmond, echoes separatist moves by other European

regions such as Catalonia in Spain and Flanders in Belgium at a time when a crisis-hit European Union undergoes deep changes to its identity.

2014 இல் மூன்று நாடுகள் உதயமாகலாம்..பெல்ஜியம் நாட்டில் இருந்து பிரிந்து போகவும் விரும்புகின்றார்கள் :D

எல்லாரும் பிரிந்து புதியநாடுகளிற்கு சொந்தக்காரர்கள் ஆகுகின்றார்கள் எங்களிற்க்குத்தான் அந்த உரிமை இல்லை என்னடா இது நியாயம் :(

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில எத்தனையோ விடயங்கள் சத்தமில்லாமல் நடக்குது. நாங்க நாடு கேட்டால் மட்டும் தான் எல்லோரும் விழுந்தடிச்சு வந்து சிங்களவனையே கட்டிக்கொண்டு கிடவுங்க என்று எங்களுக்கு அறிவுரையும் சொல்லி சிங்களவனுக்கு ஆயுதமும் அள்ளிக் கொடுக்கினம்...??! அதுதான் ஏனுன்னு புரியுதே இல்ல..!

எல்லாருக்கும்.. ஜியோபொலிரிக்ஸ் தான் தேவைப்படுகுது.! மனித உணர்வுகளை சுதந்திரங்களை மதிக்கனும் என்ற தேவை இல்லை..! :icon_idea:

ஏதோ ஒரு பயம் தமிழர்கள் மேல் இவர்களிற்கு உள்ளது, அதனால்தான் நாங்கள் நாடு கேட்டால் கூட்டாக எதிர்க்கின்றார்கள், நாங்கள் நாடு ஒன்றை அமைத்தால் எல்லாத்துறையிலும் பல நாடுகளிற்கு சவாலாக இருப்போம் என்ற அச்சம் இவர்களிற்கு உள்ளது அதனால்தான் தடுக்கின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் லண்டன்காரர் ஸ்கொட்லான்ட் போறது என்டால் விசா எடுக்கோனுமா :unsure:

எப்படி ஐரோப்பிற்கு செல்லும்போது பிரித்தானிய பிரஜைகளிற்கு விசா எடுக்கவேண்டியது தேவை இல்லையோ அதேபோல் ஸ்கொட்லான்ட் செல்லும்போதும் விசா தேவையில்லை,

சில வேளை ஆசிய பாஸ்போட்டுடன் இங்கு வசிப்பவர்கள் ஸ்கொட்லாந்துக்கு போகும்போது விசா எடுக்கவேண்டிவரும்.

//சுதந்திர ஸ்காட்லாந்து: மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு உடன்பாடு//

நன்றாகவே நடக்க வாழ்த்துக்கள் ......................இந்த நிலைமை ஓர் நாள் எமக்கும் வரும் என்ற நம்பிக்கையில் பயணிப்போம் ...........பாதைகள் இருக்கும் வரை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.