Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறவைகள் பறந்து செல்ல பள்ளம் மேடு வானில் இல்லை..

Featured Replies

அண்மையில் எனக்கு மின்னஞ்சலில் வந்த ஓர் பொன்மொழியை வேறோர் பகுதியில் இணைத்தேன். சுபேசிஸ் கருப்பொருளுடன் சம்மந்தப்பட்டுள்ளதால் மீண்டும் இங்கு:

quote.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வளிமண்டலத்தில் Air pockets இருக்கு... :unsure: அதனூடு விமானங்கள் பயணிக்கும்போது விமானம் கீழேபோய் மேலேவரும்.. :D ஆகவே வானில் மேடுபள்ளம் இருக்கு யுவர் ஆனர்..! :icon_idea:

சுபேஸ் கதைக்கிறது, பறவைகளைப் பற்றி, யுவர் ஆனர்! :icon_idea:

அவை Auto Pilot உபயோகிப்பதில்லை, Your Highness! :D

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் இப்படி வாழுதல் தான் மகிழ்ச்சி என்று சொல்லி நாங்கள் அனுபவிப்பவற்றை காட்டி வரையறுத்துவிடமுடியாது..அப்படி வரையறுப்பது இந்தக்கட்டுரையின் நோக்கமும் அல்ல..நான் சொல்லவந்த விடயத்தின் சுருக்கம் இதுதான் - வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து சந்தோசமாய் லட்சியங்களுக்காய்ப் போராடுவோம்...

எருமைகளைப் பாருங்கள்.....பல லட்சக்கணக்கான ஆண்டுகளின் பரிமாணத்தில் அவை எப்போதாவது,இப்போது புசிக்கும் புல்லைத்தவிர வேறு எதையாவது புசித்திருக்குமா...?ஒரு எருமை புத்தராக முடியாது....இந்தக் காரணத்தினால்தான் விலங்குகள் மனிதனைவிடத் தாழ்ந்து இருக்கன்றன....ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்...

புத்தர் என்ற ஒரு குட்டி அட்டைப் பெட்டிக்குள் நின்று வாழ்க்கையைப் பார்ப்பதே தவறு.

என்னைக் கேட்டால் இயற்கையாக அமையப் போகும் மரணத்தைக் கண்டு வெருண்டு.. வாழ்வை ஆராய்ந்தே தொலைத்த புத்தரைக் காட்டிலும்.. இயற்கையில் இதுதான் வாழ்க்கைக்கான வரம்பு.. என்பதை உணர்ந்து அதில் மகிழ்ந்து இயற்கையின் நியதிப்படி தன் வாழ்க்கை வட்டத்தில் வாழ்ந்து முடிக்கும் எருமை மகான் என்று சொல்லுவேன்..!

இருக்கிறதை விட்டு பறக்கிறதைப் பிடிக்கப் போய்.. வாழ்வில் பாதியை தொலைப்பது மனிதனே தவிர மற்ற உயிரினங்கள் அல்ல.!

மனிதன் தவிர்ந்த பிற உயிரினங்கள் இயற்கையின் விதியில் அமைந்த உயிரிக்கான வாழ்வுத் தகவை ஏற்று வாழ்கின்றன. மகிழ்கின்றன. வாழ்க்கை வட்டம் பிறப்பு.. வளர்ப்பு.. பெருக்கம்.. முதிர்வு.. இறப்பு என்று அமைகிறது. இந்தக் கால இடைவெளியில் மனிதன்.. தனக்குத் தானே தீர்மானிக்கும் மகிழ்ச்சிக்கான வரையறையும் அதனைத் தேடி அவன் அதிக அங்கலாய்ப்போடு பயணிப்பதுமே அவனுக்கு வாழ்வாகி விடுகிறது..! அதற்கிடையில் மகிழ்ச்சி வருகிறதோ இல்லையோ மரணம் வந்து தொலைந்து விடுகிறது. இது எதனைக் காட்டுகிறது என்றால்.. மனிதன் இன்னும் இயற்கையை சரியானப் புரிந்து கொள்ளவில்லை என்பதைத் தான்..!

எளிமையான வாழ்வில் இருக்கும் மகிழ்ச்சி.. பெருமையான வாழ்வில் இல்லை. காரணம்.. எளிமைக்கும் இயற்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பெருமைக்கும் செயற்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

இயற்கை உள்ளது. செயற்கை இல்லாதது..! உள்ளதை வைத்து மகிழ முடியாத மனிதனால் நிச்சயம் இல்லாததை உருவாக்கி மகிழ முடியும் என்பது ஒரு மாயை. மனித வாழ்க்கை என்ற காலவெளியில் அதிகம் சாத்தியப்படாது. இருந்தாலும்.. எளிமையாக வாழும் மனிதரில் அதிகம் சந்தோசம் தெறிப்பதைக் காண்கிறோம். காரணம்.. அவன் உள்ளதைக் கொண்டு மகிழ்சியை வரவழைக்க.. உணரக் கற்றுக் கொள்கிறான். மற்றவனோ இல்லாததை தேடி ஏக்கத்தை வளர்த்து.. மகிழ்ச்சியை உணர முடியாமல் காலத்தை வீணடிக்கிறான்..!

உண்மையில்.. இந்த இரண்டுக்கும் இடையில் வாழ்வதே இன்றைய மனித வாழ்வியலில் மனிதரால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் பலர் இல்லாததைத் தேடியே வாழ்க்கையை தொலைக்கிறார். சிலர் இருப்பதை கொண்டு மகிழ்ந்து இல்லாததை தேட முனைகிறார். இதைக் கொண்டு தான் மகிழ்ச்சியின் அளவு என்பதும் அமைகிறது. அது ஆளாளுக்கு மாறும் படும். நாம் மற்றவர் தொடர்பில் இதுதான் மகிழ்ச்சி என்று வரையறுக்க முடியாது. எமக்கு நாமே வரையறுப்பது கூட அலை பாயும் மனதோடு கடினமாக உள்ள நிலையில்..!

உள்ளதை கொண்டு கூடிய மகிழ்ச்சியை காண வாழ்வதே சிறப்பு. இல்லாததைத் தேடியே வாழ்வை அழிப்பதிலும்..! அடுத்தவரின் மகிழ்ச்சியை நிர்ணயிக்க வாழ்வதிலும்.. சொந்த வாழ்வில் மகிழ்ச்சியை விரைந்து வரவழைக்க கற்றுக் கொள்ளுதல் சிறப்பு..! அது மற்றவருக்கும் மகிழ்ச்சியை வாழ்க்கையில் விரைந்து வரவழைக்க..வழிகாட்டியாக இருக்கும்.

புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார் எல்லையற்ற இன்பம் கண்டார் என்ற கட்டுக்கதையை விட.. காட்டெருமையின் வாழ்க்கை இயற்கையில் நிஜம். கூடிய வாழ்வுத் தகவைப் பூர்த்தி செய்த ஒன்று. அதுவே இயற்கையில் உயிரிக்கு வரையறுக்கப்பட்ட மகிழ்ச்சிக்குரியது. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எருமைக்கும் புத்தருக்குமான உவமானம் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையில் சிந்திக்கும் திறனில் உள்ள வித்தியாசத்தை நாலுவரியில் சுருக்கமாக சொல்லவே அன்றி புத்தரின் பின்னால் நின்று வாழ்க்கையை பார்க்கவேண்டும் என்பதை அல்ல...புத்தர் ஒரு மனித கரக்டர் மட்டுமே...

மற்றும்படி வாழ்க்கயை பார்க்கும் விதம் ஒவ்வொருவர்க்கும் தாம் கற்றுக்கொண்டவை,அனுபவங்கள்,சூழல் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தவை,சமூகம் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தவை என்று சிறுவயதுகளில் இருந்தே ஒவ்வொருவரும் தம்மை கட்டமைத்தவித்ததிற்கேற்ப மாறுபடுகின்றன..

எதையும் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பது மிக முக்கியம்.... ஏனென்றால் ஒன்றைப் புரிந்து கொண்டதன் படியே அதை அணுகுகிறோம்....நெடுக்ஸ் புரிந்து கொண்டதன் அடிப்படையில் அணுகி இருக்கிறார்....

_________________________________________________________________________________________________

சரி இந்த அலட்டல்களில் இருந்து விடுபட்டு விடயத்திற்கு வருகிறேன்....மீண்டும் ஒருமுறை கட்டுரை சொல்ல வந்த விடயத்தை சுருக்கமாக ஒரு கதையூடு நினைவுபடுத்துகிறேன்..விஷயம் ரொம்ப சிம்பிள், 'வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கை என்பதே அனுபவித்தலுக்கு உரியதுதான்'..மாறி இருக்கும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப நமது சித்தாந்தங்களையும், வேலை கெடாமல் சந்தோஷமாகவும் இருப்பதற்கான உத்தியையும் கற்றுக்கொள்வதுதான் உத்தமம்....

கதையில் வரும் ஞானியைப் பற்றிய ஆராய்ட்சியைவிட்டு கதை சொல்லும் விடயத்தை மட்டும் கவனிப்போம்..

ஒருவர், நேரம் காலம் தெரியாமல் வேலை செய்கிற பேர்வழி...வாழ்வின் எந்த அழகியலையும் அனுபவிக்க அவரால் முடியவில்லை...என்னடா வாழ்க்கை இது என்று விரக்தி அடைந்த அவர், சந்தோஷமாக இருப்பது எப்படி என்ற ரகசியத்தை எப்படியாவது கண்டு பிடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்...

அதற்காக ஒரு ஞானியைச் சந்திக்கக் கடும் தடை களைத் தாண்டி அவரது இருப்பிடத்துக்கு வந்து சேர்ந் தார்...இயற்கை எழில் சூழ்ந்த ஒரு மலையில், அரண் மனை போன்ற ஒரு மாளிகையில் அந்த ஞானி வாழ்ந்து வந்தார்...

வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள், மிக அழகான ஓவியங்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப் பட்ட கலைப்பொருட்கள் என அந்த மாளிகை ரொம்பவே வசீகரமாக இருந்தது...ஞானியைச் சந்திக்கப் பெரிய கூட்டம் காத்திருந்ததால் மூன்று மணி நேரம் பொறுமையாக இருந்து ஞானியிடம் பேசினார் சந்தோ ஷத்தின் ரகசியத்தைத் தேடியவர்...

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அந்த ஞானி, "நீ முதலில் எனது மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வா. பிறகு, பதில் சொல்கிறேன்" என்றார்....

"இதோ கிளம்பிவிட்டேன்" என்று எழுந்தவரிடம் ஞானி சொன்னார், "ஒரு நிமிடம், இதோ இந்த ஸ்பூனை உங்கள் வாயால் பிடித்துக்கொள்ளுங்கள்... அதில் இருக்கிற எண்ணெய் சிந்திவிடாமல் சுற்றிப் பார்"...

மாளிகையைச் சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஞானியிடம் வந்தார் அந்த மனிதர்...இப்போது ஞானி அவரிடம், "என் படுக்கை அறையில் ரவிவர்மாவின் ஓவியம் இருந்ததே, அது எப்படி இருந்தது?" என்று கேட்டார்...

"மன்னியுங்கள் சுவாமி, நான் அதைக் கவனிக்கவில்லை" என்றார் அந்த மனிதர்....

"அது போகட்டும், மாடிக்குச் செல்லும் வழியில் இருந்த ராமாயண வாசகங்கள்? கிரேக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒளி விளக்குகள்? நூலக ஜன்னல் வழியே தெரியும் பரமானந்தர் கோயில்?"..

எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான்... "மன்னியுங்கள், நான் அதைக் கவனிக்கவில்லை."

"இரண்டு மணி நேரம் என்னதான் செய்தீர்கள்?" என்றார் ஞானி...

"இதோ இந்த ஸ்பூனில் இருக்கிற எண்ணெய் சிதறாமல் பார்த்துக்கொண்டேன்" என்றார் அந்த மனிதர்...

"போகட்டும்... இப்போதும் அதே ஸ்பூனோடு எல்லா வற்றையும் சுற்றிப்பாருங்கள்... அனைத்தையும் ரசித்துப் பாருங்கள்" என்று ஞானி அவரை அனுப்பிவைத்தார்...

இந்த முறை ஞானியிடம் வந்த அவர், சுவாமி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னார்..."அது சரி, ஸ்பூனில் இருந்த எண்ணெய் எங்கே?" என்றார் ஞானி..."மாளிகையைச் சுற்றிப் பார்க்கிற சுவாரஸ்யத்தில் எண்ணெய் சிந்திவிட்டது" என்றார் அந்த மனிதர்...

"எண்ணெயும் சிந்தாமல், சுற்றி இருப்பதை ரசிக்கவும், அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்...மாறாக, ரசிப்பதில் கவனம் செலுத்தினால் எண்ணெய் சிதறும் என்று தர்க்கம் செய்யாதீர்கள். அதுதான் சந்தோஷத்தின் ரகசியம்" என்றார் ஞானி...

நினைவில் இருக்கட்டும்... வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கையே அனுபவித்தலுக்கு உரிய ஒன்றுதான்!

எப்பவோ படித்த அழகான கவிதை ஒன்று..எல்லவற்றையும் நான்கு வரிகளில்...

அக்கரையில்

என் தோட்டம் காடு வயல்கள்

இக்கரையில்

என் வீடு வாழ்வு மனசு

நதி

எதிரில்....

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் கதைக்கிறது, பறவைகளைப் பற்றி, யுவர் ஆனர்! :icon_idea:

அவை Auto Pilot உபயோகிப்பதில்லை, Your Highness! :D

Objection!! வளிமண்டலத்தில் காற்றுப் பொக்கற் மட்டுமல்ல, விமானங்களின் தாரை இயந்திரங்களும் பறவைகளை உறிஞ்சிச் சப்பித் துப்பி விட அலைகின்றன, சோ, பறவைகளுக்கு மேடு பள்ளம் கண்டம் எல்லாம் உண்டு தம்பிகளா! (மன்னிக்கவும் ஆழமாக தத்துவார்த்தமாக யோசித்தாலோ வாசித்தாலோ எனக்குத் தலைவலி வந்து விடும், அதனால் இசையோடு சேர்ந்து "கலாய்க்கிறேன்" :lol: )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:lol:

சுபேஸ்,

முதலில் உங்கள் நண்பனின் பிரிவிற்கு இரங்கல்கள்.

அடுத்து, நீங்கள் குறிப்பிட்டிருக்கும், கரண்டியுடன் மாளிகையினைச் சுற்றிப் பார்த்த விடயம் 'The Alchemist (த அல்க்கெமிஸ்ற்)' என்ற நூலில் (போர்த்துக்கீச மொழியில் பாலோ கோஎல்ஹோ (Paulo Coelho)எழுதியது: ஒறிஜினல் பிரசிலில் 1988ம் ஆண்டு வெளியிடப்பட்டு ஆங்கிலத்தில் 1994 மொழிபெயர்க்கப்பட்டது) இருப்பது. விடயம் ஆர்சொன்னால் என்ன சொல்லப்பட்டதை அறிந்தால் சரி என்பதை முற்றாக ஏற்றுக்கொள்ளுகிறேன். என்ன 'றவி வர்மன் ஓவியம்' 'ராமாயணம்' என்ற இந்தியச் சொருகல்களைப் பார்த்தவுடன் எனக்குள் ஒரு சின்னக்கடுப்பு (சில கோப்பறேட் சாமியார்கள் வேறு இப்ப பல புத்தகங்களை உல்டா பண்ணி புலம்பெயர் தமிழனிடம் பணம் பறிப்பதைப் பார்ப்பதால் தான் இந்தக் கோபம் என்று நினைக்கிறேன்)—அதனால் ஆதராத்தைப்போடுகிறேன்.

உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது. ஒரு சின்ன உதிரிக் கருத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

எதையாவது செய்hமல் இருக்க முடியாதவர்கள் இருக்கிறார்கள். ஓய்வுநாட்களில் வீட்டில் பத்துநிமிடம் தொடர்ச்சியாய் உட்கார்ந்திருக்க முடியாது எதையாவது நோண்டிக்கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். அமைதியைக் கண்டு பயப்பிட்டு மனத்தை மழுங்கடிக்கும் வகையில் எதையேனும் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவர்கள் இருக்கிறார்கள். நம்புகிறீர்களோ இல்லையோ, எப்படா வாரஇறுதி முடியும் வேலைக்குப் போகலாம் என்றிருக்கும் ஒருவரையும் எனக்குத் தெரியும். அப்படி வேலை செய்கையில் அவர்கள் மகிழ்வாய் இருக்கிறார்கள். காரணம் விதிகள், வழமைகள் என்பன பல மனிதர்களிற்கு ஒரு றோபோட் தனமாக வாழ்வினை அணுகுவதற்கு உதவுகிறது. அந்த வழமைகள் மற்றும் விதிகள் என்பன ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட ஒரு ஆவர்த்தனத்தில் அதிர்வதற்கு அவர்களிற்கு உதவுகின்றன. இப்படியான ஒருவரிடம், அவர்களிற்குத் தேவையான அனைத்துப் பணத்தையும் நீங்கள் கொடுத்து, ஒரு கோடை அந்திநேரத்தில், மப்பும் மந்தாரமுமான காலநிலையில், மலரின் நறுமணத்தின் கீழ் நிற்க வைத்துப் பின்வரும் வரிகளை ஒலிக்கச் செய்தீர்கள் என்றால் கூட உங்களிற்குள் எழும் அதிர்வு அவர்களிற்குள் வரும் என்று சொல்லமுடியாது. ஏனெனில், நீங்கள் கூறியதைப்போல விதிகள், வழமைகள் என்று கட்டுப்பட்டுப் பார்க்காது திரவமாகத் திரளும் பக்குவம் அதற்கு அவசியம்.

'மையை இட்ட கண்ணாலே மையல் தந்த நேரம்

முதன்முதலா தொட்டேனே வாய்க்காக் கரை ஓரம்

சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே

அள்ளிக் கட்டும் கண்தாங்கி அரைகுறையாய் ஒதுங்க

அலுங்காமல் அணைச்சாளே வெதுவெதுப்பாய் மயங்க

மஞ்சள் கொண்ட கைகாறி மயக்கிவிட்டாள் என்னை'

மாறாக, உங்களைப் போன்ற கற்பனைத்திறன் உள்ள ஒரு மனிதன் சூழ்நிலையால் வேலையே வாழ்வென்று இருக்கிறான் என்று வையுங்கள், அவனையும் அறியாது அவனது கற்பனை சிறகு விரித்தே தீரும். எப்போது எங்கே என்பதை ஒருவேளை அவனே கூட அறிய முடியா வண்ணம் அவனது கற்பனை உயிர்பெற்றே தீரும். ஒவ்வொரு நாளும் கூட அது நடக்கலாம். வேலையிடத்தில் கூட ஒருவர் தனக்கான oasisகளை அப்பப்போ உருவாக்கிக்கொள்ள அவரது மனத்திற்குத் தெரியும். கற்பனை விரிவதற்கு ஓய்வாக ஒரு றம்மியமான காட்டிற்குள் தான் இருக்கவேண்டும் என்றில்லை—அப்படி இருந்தால் நல்லாத் தான் இருக்கும். எனக்குத் தெரிந்த ஒருவர், மிகக்கடினமான உழைப்பிற்குச் செல்பவர். அவரது வேலைத்தளத்தில், அதிகாலை வேலை தொடங்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு தேனீர்ச்சாலையில் அவரிற்கே பிடித்தமான விதத்திலான கோப்பியும் அவரது மிகப்பிடித்த muffinனையும் உண்பதற்காக காத்திருக்கும் அவரது ஏக்கத்தைக் கண்டிருக்கிறேன். அந்த மகிழ்ச்சி அவரைப் பொறுத்தவரையில், எந்த மகிழ்ச்சிக்கும் சழைத்ததல்ல.

ஒவ்வொருவரின் மனங்களின் ஆவர்த்தனம் ஒவ்வொருமாதிரி.

ஆனால் அதற்காக, வாழ்வில் உழலாதவர்கள் இல்லை என்றில்லை. அவ்வாறு உழல்பவர்கிற்கு நிச்சயம் உங்கள் பதிவு உதவும். எனக்குப் பிடித்த ஒரு வாக்கியத்தோடு இந்தப் பின்னூட்டத்தை முடித்துக்கொள்கிறேன்.

ஒரு பெரிய உளவியல் தத்துவத்தை உளவியலோடு எந்தத்தொடர்பும் இல்லாதவர்களும் சொல்லலாம் என்பதற்கு ஆதாரமாக, L.A.Dodgers பேஸ் போள் விளையாட்டு அணியின் முன்னைநாள் முகாமையாளர் ரோமி லசோடா (Tommy Lasorda) கூறிய பின்வரும் வாக்கியத்தைக் குறிப்பிடலாம். இயன்றவரை சரியாகத் தமிழ்ப்படுத்த முயலுகிறேன்:

"Pressure is a word that is misused in our vocabulary. When you start thinking of pressure, it's because you've started to think of failure."

'அழுத்தம் என்பது மிகவும் பிழையாகப் பாவிக்கப்படும் ஒரு சொல். ஒருவர் அழுத்தம் பற்றிச் சிந்திக்கத்தொடங்கிவிட்டார் என்றால் அதன் உண்மையான அடிப்படைக்காரணம் அவர் தோல்வி பற்றிச் சிந்திக்தொடங்கிவிட்டார் என்பதே'

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் கனேடிய கீஸ் அமெரிக்காவுக்கு போய் வரும்போது டெல்ட்டா வடிவில் பறக்கின்றன.. :wub: இதன்மூலம் ஏரொநாட்டிக்ஸ் முறையை அவைகளும் பின்பற்றுகின்றன என்பது தெளிவாகின்றது யுவர் ஆனர். :D அவை காற்று ஓட்டைகளுக்குள் புகும்போது அவைக்கும் மேடு பள்ளப் பிரச்சினைகள் வரும் ..! :icon_idea:

ஆகவே இந்தத் திரியின் தலைப்பை மாற்ற உத்தரவிட வேண்டும் யுவர் ஆனர்..! :lol:

நேற்று இரவே இதை வாசித்தேன் .என்ன எழுதுவதென்றே தெரியவில்லை .

எமது வாழ்க்கை முறையும் நாம் ஊரில் வாழ்ந்த வாழ்க்கையும் புலம் பெயர்ந்தும் பல விடயங்களை செய்ய ,அனுபவிக்க விடுவதாயில்லை .

உங்களது பதிவு எனக்கு இவர்களை நோக்கியதாகவே இருக்கின்றது ,அதாவது வீடு ,வேலை ,குடும்பம் என்ற வட்டத்திற்கு நின்று வேறு எதையும் எட்டி பார்க்கதவர்களை என்று நினைக்கின்றேன் .ஆரம்பத்தில் என்னவோ எம்மவர் பலர் இருந்தாலும் இப்போ பலர் நன்றாக மாறிவிட்டார்கள் .இருந்தாலும் மூன்றாம் உலகத்தில் இருந்து புலம் பெயர்ந்த தலைமுறை புலம் பெயர்ந்த நாட்டில் தமது இருப்பை நிலை நாட்ட பல தியாகங்கள் செய்யத்தான் வேண்டியதாக இருக்கு. குறிப்பாக ஒரு சொந்தவீட்டை கடன் இல்லாமல் இருக்க பல தமது ஆசைகளை தேவைளை ஒறுத்துவிடுகின்றார்கள் .

இன்று எனக்கு வேலை .வேலையில் இருந்துதான் இதை பதிகின்றேன் .தொலைபேசியே வராத இடத்தில் இன்று இரண்டு தொலைதேச அழைப்புகள் .முதலாவது கொழும்பு காலிமுகத்திடலில் கிங் குரோஸ் பார் இல் இருந்து ஜெர்மனில் இருந்து போன எனது மச்சானும் கொழும்பில் இருக்கும் எனது நண்பனும் பியர் அடித்துக்கொண்டு எனக்கு விசர் ஏத்த அழைத்தார்கள் .

மற்றது பிரான்சில் இருந்து எனது பழைய நண்பனும் விளையாட்டு வீரனுமாகிய அழகிய ஜெயசீலன் இறந்துவிட்டதாக ,இவர் கடைசி பத்துவருடங்களுக்கு கிட்ட ரோம் என்ற மெட்ரோவில் வைன் கோஷ்டியாக மாறி அங்கேயே குடித்தனம் நடத்தினார் .எவருமில்லாமல் வைத்தியசாலையே கிரியைகளை செய்கின்றதாம் .

எங்கட பறவைகள் இலக்கு இல்லாமல் எப்படியும் பறக்கும் .

எனக்கும் அதைப் பார்த்ததும் கடுப்பாகத்தான் இருந்தது அண்ணா..அதை எடுத்துவிட்டுப் போடுவமோ என்று நினைத்தன்..பின்னர் மூலக்கதையை ஏன் சிதைப்பான என்று விட்டுவிட்டேன்...அதனால்தான் முன்னரே இவற்ரை கருத்தில் எடுக்காமல் சொல்லவந்த விடயத்தை மட்டும் கூர்ந்து கவனிக்கும் படி கேட்டிருந்தேன்...

சுகன் அண்ணாவைப்போலவே உங்களதும் மிகச்சிறப்பான பரந்துபட அலசி ஆராயும் ஒரு பார்வை..அடடா இங்கு எழுதிய ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அற்புதமாக சிந்திக்கிறார்கள் எழுதுகிறார்கள்..நான் இந்த பதிவை எழுதும்போது அன்றாட வாழ்வுக்குள் வாழ்க்கையை கையாளத்தெரியாமல் அமுங்கி மன அழுத்தங்களில் உழலுபவர்களை நினைத்தே எழுதினேன்...நன்றி அண்ணா சிறப்பான ஒரு பதிவிற்கு..இப்படி ஏதாவது எடுத்துவிட்டால்தன் உங்களைப்போன்ற,சுகன் அண்ணவைப்போன்ற நல்ல சிந்தனையாளர்களை அடிக்கடி எழுதவைக்கலாம் போலிருக்கு...

அத்துடன் கனேடிய கீஸ் அமெரிக்காவுக்கு போய் வரும்போது டெல்ட்டா வடிவில் பறக்கின்றன.. :wub: இதன்மூலம் ஏரொநாட்டிக்ஸ் முறையை அவைகளும் பின்பற்றுகின்றன என்பது தெளிவாகின்றது யுவர் ஆனர். :D அவை காற்று ஓட்டைகளுக்குள் புகும்போது அவைக்கும் மேடு பள்ளப் பிரச்சினைகள் வரும் ..! :icon_idea:

ஆகவே இந்தத் திரியின் தலைப்பை மாற்ற உத்தரவிட வேண்டும் யுவர் ஆனர்..! :lol:

யுவரானர்...நான் மனப் பறவையை நினைத்து உவமித்தே இதை எழுதினேன் யுவறாணார்... :lol:

நேற்று இரவே இதை வாசித்தேன் .என்ன எழுதுவதென்றே தெரியவில்லை .

எமது வாழ்க்கை முறையும் நாம் ஊரில் வாழ்ந்த வாழ்க்கையும் புலம் பெயர்ந்தும் பல விடயங்களை செய்ய ,அனுபவிக்க விடுவதாயில்லை .

உங்களது பதிவு எனக்கு இவர்களை நோக்கியதாகவே இருக்கின்றது ,அதாவது வீடு ,வேலை ,குடும்பம் என்ற வட்டத்திற்கு நின்று வேறு எதையும் எட்டி பார்க்கதவர்களை என்று நினைக்கின்றேன் .ஆரம்பத்தில் என்னவோ எம்மவர் பலர் இருந்தாலும் இப்போ பலர் நன்றாக மாறிவிட்டார்கள் .இருந்தாலும் மூன்றாம் உலகத்தில் இருந்து புலம் பெயர்ந்த தலைமுறை புலம் பெயர்ந்த நாட்டில் தமது இருப்பை நிலை நாட்ட பல தியாகங்கள் செய்யத்தான் வேண்டியதாக இருக்கு. குறிப்பாக ஒரு சொந்தவீட்டை கடன் இல்லாமல் இருக்க பல தமது ஆசைகளை தேவைளை ஒறுத்துவிடுகின்றார்கள் .

இன்று எனக்கு வேலை .வேலையில் இருந்துதான் இதை பதிகின்றேன் .தொலைபேசியே வராத இடத்தில் இன்று இரண்டு தொலைதேச அழைப்புகள் .முதலாவது கொழும்பு காலிமுகத்திடலில் கிங் குரோஸ் பார் இல் இருந்து ஜெர்மனில் இருந்து போன எனது மச்சானும் கொழும்பில் இருக்கும் எனது நண்பனும் பியர் அடித்துக்கொண்டு எனக்கு விசர் ஏத்த அழைத்தார்கள் .

மற்றது பிரான்சில் இருந்து எனது பழைய நண்பனும் விளையாட்டு வீரனுமாகிய அழகிய ஜெயசீலன் இறந்துவிட்டதாக ,இவர் கடைசி பத்துவருடங்களுக்கு கிட்ட ரோம் என்ற மெட்ரோவில் வைன் கோஷ்டியாக மாறி அங்கேயே குடித்தனம் நடத்தினார் .எவருமில்லாமல் வைத்தியசாலையே கிரியைகளை செய்கின்றதாம் .

எங்கட பறவைகள் இலக்கு இல்லாமல் எப்படியும் பறக்கும் .

நன்றி அர்ஜுன் அண்ணா..அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

எருமைக்கும் புத்தருக்குமான உவமானம் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையில் சிந்திக்கும் திறனில் உள்ள வித்தியாசத்தை நாலுவரியில் சுருக்கமாக சொல்லவே அன்றி புத்தரின் பின்னால் நின்று வாழ்க்கையை பார்க்கவேண்டும் என்பதை அல்ல...புத்தர் ஒரு மனித கரக்டர் மட்டுமே...

மற்றும்படி வாழ்க்கயை பார்க்கும் விதம் ஒவ்வொருவர்க்கும் தாம் கற்றுக்கொண்டவை,அனுபவங்கள்,சூழல் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தவை,சமூகம் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தவை என்று சிறுவயதுகளில் இருந்தே ஒவ்வொருவரும் தம்மை கட்டமைத்தவித்ததிற்கேற்ப மாறுபடுகின்றன..

எதையும் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பது மிக முக்கியம்.... ஏனென்றால் ஒன்றைப் புரிந்து கொண்டதன் படியே அதை அணுகுகிறோம்....நெடுக்ஸ் புரிந்து கொண்டதன் அடிப்படையில் அணுகி இருக்கிறார்....

_________________________________________________________________________________________________

நீங்கள் என்ன காரணத்திற்காக புத்தரையும்.. (ஒரு வேளை புத்தரை மனிதரில் ஞானி என்று நினைச்சீர்களோ என்னவோ.. ) எருமையையும் எடுத்தீர்களோ தெரியவில்லை. அதையே தான் நானும் மனிதனுக்கும் விலங்கிற்கும் ஒப்பீட்டு ரீதியில் வாழ்க்கை பற்றி உள்ள வேறுபாடான புரிதலை சொல்ல இயன்றவரை பாவிக்க முயன்றிருக்கிறேன். இன்னொரு உதாரணத்தை இதற்குள் கொண்டு வர வேண்டிய அவசியத்தை நான் உணரவில்லை..!

மேலும்.. வாழ்க்கை பற்றிய சுய புரிதலே.. மகிழ்ச்சிக்கான முதல் அடிப்படை. வாழ்க்கையை.. மகிழ்ச்சியை இயற்கைக்கு அப்பால் சென்று ஆராய்ந்து கொண்டிருப்பதும் கூட வாழ்க்கையைத் தொலைக்கும் அம்சம் என்பது எனது புரிதல். நீங்கள் அதைவிட வேற கோணத்தில் அணுகுகிறீர்கள்.. என்று நினைக்கிறேன்.!

எளிமை தேவையைக் குறைக்கும். குறைந்த தேவை நேரத்தைக் கூட்டும். நேரம் மகிழ்ச்சியை தேட அவகாசம் வழங்கும்... மற்றைய வாழ்க்கை முறை இதற்கு மறுதலை..! இந்த எளிமையை உணர்ந்தாலே மகிழ்ச்சி எம் காலடியில் என்பது தான் என் உணர்தல்...அல்லது புரிதல்.

அதை விட்டு.. மகிழ்ச்சியை மனோதத்துவத்துக் கூடாக பெற முற்பட்டாலோ அடுத்தவரின் வாழ்வோடு எமது மகிழ்ச்சியை ஒப்பிட முனைந்தாலோ.. அது நிச்சயம் எமது மகிழ்ச்சிக்கான நேரத்தைக் குறைக்கும்.. செயல் என்பதே எனது புரிதல்..! நாம் எமக்கான மகிழ்ச்சியை தேட வேண்டுமே தவிர.. மற்றவருக்காக அல்ல..! எமது மகிழ்ச்சிக்கான நேரத்தில் மற்றவர்களையும் மகிழச் செய்தல் சிறப்பு..!

அதையே இங்கு சொல்லவும் முற்பட்டேன். மேலும் இயற்கையான மரணத்திற்கு சவாலாக நின்று மகிழ்ச்சியை அடைய முடியாது. மரணத்தின் போக்கை ஏற்று வாழுதலே உயிரின வாழ்வு. அதற்குள் உள்ள கால வெளிக்குள் தான்.. மகிழ்ச்சியையும்.. வாழ்வையும் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தான் வாழ்வு என்பது கட்டமைப்புக்கு உற்படுத்தப்பட வேண்டும்.

இதுவே எனது கருத்தின் சுருக்கம். இதனை விட இதில் சொல்ல வேறு எதுவுமே அவசியமில்லை என்பது எனது கணிப்பீடு.

கருத்துச் சொல்ல சந்தர்ப்பம் அளிந்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். :):icon_idea:

Edited by nedukkalapoovan

இப்படி எதையும் அனுபவிக்காமல் நாளைய லட்சியங்களுக்காய் இன்றைய வாழ்க்கையை, மகிழ்ச்சியைப் பறிகொடுத்துவிட்டு வெறுமனே ஓடிக்கொண்டிருக்கிறோம் – நுகத்தில் பூட்டப்பட்ட மாடுகளைப்போல...

எதையும் அந்தந்த நேரத்தில் செய்யவேண்டும் என்று சொல்வார்கள் . பருவம் தப்பிய விளைச்சல் வீடுவந்து சேராது . இது மனித வாழ்க்கைக்கும் பொருந்தும் . நுகத்தில் பூட்டிய மாடுகளைப்போல என்று சொல்கின்றீர்கள் ..( மந்தை புத்தி , Swam interligence ) . நுகத்தில் பூட்டிய மாடுகள் வண்டி ஓட்டுபவனது சொல் கேளாது எழுந்தமானத்தில் நடந்தால் வண்டிதான் தனது இலக்கை அடையமுடியுமா ?????????? எனவே இங்கு மாடு நுகத்தில் பூட்டப்படவேண்டியது அத்தியாவசியமாகின்றது .

லட்சியங்கள் நிச்சயம் தேவைதான்...! ஆனால் வாழ்க்கையை தொலைத்துவிட்டு அடையும் லட்சியங்களால் யாருக்கென்ன லாபம்..?ஆகையால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து சந்தோசமாய் லட்சியங்களுக்காய்ப் போராடுவோம்.

ஒன்றைப் பெறவேண்டுமானால் ஒன்றை இழந்துதான் ஆகவேண்டும் . என்றுமே ஒருவனுடைய இழப்பிலேதான் வேறு ஒருவன் உயிர்வாழ்கின்றான் ( சங்கிலித்தொடர்போல ) . ஒருவனது வாழ்க்கையிலே அவசியத்தையும் அத்தியாவசியத்தையும் மனதில் வைத்து முடிவுகள் எடுத்தால் இப்படிப்பட்ட குழம்பிய மனநிலைகள் வராது . " வாழ்கையின் ஒவ்வொருநொடியையும் அனுபவித்து லட்சியங்களுக்காகப் போராடுவோம் " என்பது நடைமுறையில் சரிவராது . அனுபவிப்பு என்பது மனித குரங்குமனத்துடன் பின்னிப்பிணைந்தது . அதற்கு எல்லைகளும் வரையறைகளும் கிடையாது . எனவே லட்சியமும் , அனுபவித்து லட்சியத்திற்கு போராடுவதும் நேர் எதிர் துருவங்கள் . எனக்கென்னவோ அரைத்த மாவை இதில் அரைக்கின்றோமோ என்று எண்ணத் தோன்றுகின்றது . எனினும் ஒவ்வொருவரின் சிந்தனைகளைக் கிளறத் தூண்டிய சுபேசுக்குப் பாராட்டுக்கள் .

mm..அனுபவம் பலவிதம்..

Edited by நீலமேகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதையும் அந்தந்த நேரத்தில் செய்யவேண்டும் என்று சொல்வார்கள் . பருவம் தப்பிய விளைச்சல் வீடுவந்து சேராது . இது மனித வாழ்க்கைக்கும் பொருந்தும் .

இதையே மறுதலையாக என்னோட புரிதலில் சொல்லியிருக்கிறேன் கோமகன்..

இப்படி எதையும் அனுபவிக்காமல் நாளைய லட்சியங்களுக்காய் இன்றைய வாழ்க்கையை, மகிழ்ச்சியைப் பறிகொடுத்துவிட்டு வெறுமனே ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நுகத்தில் பூட்டிய மாடுகளைப்போல என்று சொல்கின்றீர்கள் ..( மந்தை புத்தி , Swam interligence ) . நுகத்தில் பூட்டிய மாடுகள் வண்டி ஓட்டுபவனது சொல் கேளாது எழுந்தமானத்தில் நடந்தால் வண்டிதான் தனது இலக்கை அடையமுடியுமா ?????????? எனவே இங்கு மாடு நுகத்தில் பூட்டப்படவேண்டியது அத்தியாவசியமாகின்றது .

வண்டி போய்ச்சேரவேன்டிய இலக்கை பற்றிய அக்கறை மட்டுமே உங்கள் பார்வையில் முக்கியம் மிக்கதாக இருக்கிறது..மாட்டைப் பற்றிய அக்கறைகளை பின் தள்ளிவிடுகிறீர்கள்..ஆனால் என் பார்வையில் நான் வண்டி போய்ச்சேரவேண்டிய இலக்கையும் அதே சம நேரத்தில் நுகத்தில் பூட்டப்பட்ட மாட்டைபாற்றியும் கவலைப் படுகிறேன்..

ஒன்றைப் பெறவேண்டுமானால் ஒன்றை இழந்துதான் ஆகவேண்டும் . என்றுமே ஒருவனுடைய இழப்பிலேதான் வேறு ஒருவன் உயிர்வாழ்கின்றான் ( சங்கிலித்தொடர்போல ) . ஒருவனது வாழ்க்கையிலே அவசியத்தையும் அத்தியாவசியத்தையும் மனதில் வைத்து முடிவுகள் எடுத்தால் இப்படிப்பட்ட குழம்பிய மனநிலைகள் வராது . " வாழ்கையின் ஒவ்வொருநொடியையும் அனுபவித்து லட்சியங்களுக்காகப் போராடுவோம் " என்பது நடைமுறையில் சரிவராது . அனுபவிப்பு என்பது மனித குரங்குமனத்துடன் பின்னிப்பிணைந்தது . அதற்கு எல்லைகளும் வரையறைகளும் கிடையாது . எனவே லட்சியமும் , அனுபவித்து லட்சியத்திற்கு போராடுவதும் நேர் எதிர் துருவங்கள் .

உங்களுடைய பார்வைகள்,புரிதல்கள் தனித்தன்மையானவை..அவை என்னுடைய பார்வைகளுடன் பொருந்தி வரவில்லை..நான் வாழ்க்கையை ரசித்தபடியே வாழ்தலுக்காக போராடவேண்டும் என்ற புரிதலை உடையவன்..ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழனும் என்று வாழ்பவன்..அவையே மேலே என் எழுத்திலும் பிரதி பலித்திருந்தன..நன்றி அண்ணா வாசிப்பிற்கும் கருத்துப்பகிர்விற்கும்..

நான் முன்னரே சொல்லியது போல் எதையும் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பது மிக முக்கியம்.... ஏனென்றால் ஒன்றைப் புரிந்து கொண்டதன் படியே அதை அணுகுகிறோம்....என்னுடைய பார்வையை வாழ்க்கைமீதான ரசனையை என் புரிதலின் அடிப்படையில் வாழ்க்கையின் முடிச்சுகளுக்குள் சிக்குண்டு அழுத்தங்களில் உழல்பவர்களுக்கு அதினின்று மீண்டு எப்படி சநதோசமாக அமைத்துக்கொள்வதென்பதை எழுதியிருக்கிறேன்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன காரணத்திற்காக புத்தரையும்.. (ஒரு வேளை புத்தரை மனிதரில் ஞானி என்று நினைச்சீர்களோ என்னவோ.. ) எருமையையும் எடுத்தீர்களோ தெரியவில்லை. அதையே தான் நானும் மனிதனுக்கும் விலங்கிற்கும் ஒப்பீட்டு ரீதியில் வாழ்க்கை பற்றி உள்ள வேறுபாட்டான புரிதலை சொல்ல இயன்றவரை பாவிக்க முயன்றிருக்கிறேன். இன்னொரு உதாரணத்தை இதற்குள் கொண்டு வர வேண்டிய அவசியத்தை நான் உணரவில்லை..!

மேலும்.. வாழ்க்கை பற்றிய சுய புரிதலே.. மகிழ்ச்சிக்கான முதல் அடிப்படை. வாழ்க்கையை.. மகிழ்ச்சியை இயற்கைக்கு அப்பால் சென்று ஆராய்ந்து கொண்டிருப்பதும் கூட வாழ்க்கையைத் தொலைக்கும் அம்சம் என்பது எனது புரிதல். நீங்கள் அதைவிட வேற கோணத்தில் அணுகுகிறீர்கள்.. என்று நினைக்கிறேன்.!

எளிமை தேவையைக் குறைக்கும். குறைந்த தேவை நேரத்தைக் கூட்டும். நேரம் மகிழ்ச்சியை தேட அவகாசம் வழங்கும்... மற்றைய வாழ்க்கை முறை இதற்கு மறுதலை..! இந்த எளிமையை உணர்ந்தாலே மகிழ்ச்சி எம் காலடியில் என்பது தான் என் உணர்தல்...அல்லது புரிதல்.

அதை விட்டு.. மகிழ்ச்சியை மனோதத்துவத்துக் கூடாக பெற முற்பட்டாலோ அடுத்தவரின் வாழ்வோடு எமது மகிழ்ச்சியை ஒப்பிட முனைந்தாலோ.. அது நிச்சயம் எமது மகிழ்ச்சிக்கான நேரத்தைக் குறைக்கும்.. செயல் என்பதே எனது புரிதல்..! நாம் எமக்கான மகிழ்ச்சியை தேட வேண்டுமே தவிர.. மற்றவருக்காக அல்ல..! எமது மகிழ்ச்சிக்கான நேரத்தில் மற்றவர்களையும் மகிழச் செய்தல் சிறப்பு..!

அதையே இங்கு சொல்லவும் முற்பட்டேன். மேலும் இயற்கையான மரணத்திற்கு சவாலாக நின்று மகிழ்ச்சியை அடைய முடியாது. மரணத்தின் போக்கை ஏற்று வாழுதலே உயிரின வாழ்வு. அதற்குள் உள்ள கால வெளிக்குள் தான்.. மகிழ்ச்சியையும்.. வாழ்வையும் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தான் வாழ்வு என்பது கட்டமைப்புக்கு உற்படுத்தப்பட வேண்டும்.

இதுவே எனது கருத்தின் சுருக்கம். இதனை விட இதில் சொல்ல வேறு எதுவுமே அவசியமில்லை என்பது எனது கணிப்பீடு.

கருத்துச் சொல்ல சந்தர்ப்பம் அளிந்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். :):icon_idea:

நன்றி நெடுக்ஸ்..நிச்சயமாக..நான் வாழ்தல் குறித்த என் பார்வையை முன்வைத்தது போலவே அது குறித்த உங்கள் புரிதலையும் அழகாக இங்கு எழுதி இந்த திரியை எல்லோரையும் போல நீங்களும் சிறப்பித்ததிற்கு நன்றி..வாசகர்கள் இவற்றில் இருந்து வாழ்க்கை குறித்த தம் அனுபவங்களையும் சேகரித்துக்கொள்ளட்டும்..

நல்லதொரு பதிவு.

பூமியே தொடர்ச்சியாகச் சுத்துது. அதுக்கே மேல வாழும் நீயும் சுற்ற வேண்டும். வேற வழியில்லடா தம்பி. அதுக்குள்ளே வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்றுதான் இதை வாசித்தேன்.சுபேஸ் எடுத்த விடையம் மிக நீன்ட நாட்களாக எனது மனதை அரித்து கொன்டிருந்த விடையம்..ஆனால் அதை எப்படி எழுதுவது என்டு தெரியாமல் இவளவு சாளும் இருந்து விட்டேன்.அதை இப்ப மிக அழகாக இங்கு பதிந்த சுபேசுக்கு நன்றி.மற்றும் இந்த விடையத்தை ஒவ்வொருத்தரும் ஒவ்வெரு கோணத்தில் பார்ப்பார்கள்.விசுகு சொன்ன ஒரு பகுதியும் கிருபன் சொன்னதும் அதாவது மற்றவர்கள் நனடமைக்காக சில பல தியாகங்கள் செய்வது.ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியது.விசுகு சொன்ன மற்ற பகுதியான இப்ப இதுதான் அங்கிகபரம் இது(பணம்)இல்லாவிட்டால் ஒருத்தனும் மதிக்க மாட்டான் என்பது :rolleyes: ஆனால் இதுதான் இப்ப கசப்பான நிஜம்.

மற்றது இன்னுமொருவன் சொன்ன மிக அழகான விடையம் சிலர் இலக்கே இல்லாமல் ஓடிக்கொன்டிருபதுதான்.அவர்களுக்கு அது தான் வாழக்கை அப்படி செய்யா விட்டால் விசரே பிடித்துவிடும்.நான் நேரில் தினமும் சந்திக்கும் மனிதர்கள் இவர்கள்.இன்னுமொருவன் சொன்ன மாதிரி நான் ஒரு நாள் கேட்டேன் உங்களுக்கு லொட்டோ கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று.அதைபாங்கில் மீண்டும் 3 வேலை தானாம். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.