Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரையை நோக்கி தொடர்ந்தும், படையெடுக்கும் மீன்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size="2"]கரையை நோக்கி தொடர்ந்தும் படையெடுக்கும் மீன்கள்.[/size]

[size="2"] [/size]

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் பிடிபடுகின்ற நிலையில் ஓந்தாச்சிமடம் கடற்கரையிலும் இந்நிலை தொடர்கின்றது.

DSC04655.jpg

மீன்கள் கரையொதுங்குவதை நேரடியாகக் காண்பதற்கு பல நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.

DSC04607.jpg

கரை ஒதுங்கும் மீன்கள் ஒருபுறம் இருக்க, கரைவலை மூலம் ஏராளமான மீன்கள் பிடிபடுகின்றன. அளவுக்கு மிஞ்சிய மீன்கள் பிடிபடுவதனால் சந்தைப்படுத்தலில் சிக்கல் நிலையை மீனவர்கள் எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

DSC04603.jpg

DSC04531.jpg

DSC04521.jpg

நன்றி வீரகேசரி.

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழரை நோக்கி வருகுது என்றாலே ஏதோ ஆபத்து வருகுது (சுனாமி) என்று தான் அர்த்தம்.

சிறி தமிழரின் குறிப்பை ஒருக்கா பாருங்கோ...... :(

  • கருத்துக்கள உறவுகள்

கடல் நீரோட்டம் மாறினாலும் மீன்கள் கரை ஒதுங்கும்..! மீன்களின் குடித்தொகை மற்றும் அதன் உணவுக்குரிய உயிரிகள்.. அந்தப் பகுதியில்..அபரிமிதமாகப் பெருகுவதாலும் இப்படி நிகழலாம். இது ஓர் இயற்கையான செயற்பாடு என்றே எனக்குப்படுகிறது.

ஆனால் இந்த மீன்களை சாப்பிடுவது சரியா என்பதை அப்பகுதி மீன் வள அல்லது உணவு தரம்.. கட்டுப்பாட்டு அதிகாரிகள் பரிசோதித்து பொதுமக்களை அறிவுறுத்துவது நல்லது..! சில வேளை நோய்களின் விளைவாகவும் மீன்கள் இறந்து அல்லது குற்றுயிராக கரை ஒதுங்கலாம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இது நல்லதாகத் தெரியவில்லை. :(

வாழுமிடம் சரியில்லை என்ற படியால்தான் கரையை தேடி வந்து ஒதுங்குகிறது. இயற்கை அழிவு, கழிவு நீரால் கடல் வளம் மாசுபடுதல் .......... மற்றும் வேறு பல காரணங்களாக இருக்கலாம்.

இனி இந்த மீன்கள் ஏற்றுமதிக்குத் தயாராகும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மட்டக்களப்பில் கரையொதுங்கிய மீன்களில் இராசயன நஞ்சுப் பதார்த்தம் இல்லை – நாரா![/size]

[size=1]fish-jaffna-100x100.jpg[/size]

[size=1][size=4]கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட கடற்கரைகளில் கரையொதுங்கிய மீன்களில் இராசயன நஞ்சு பதார்த்தம் இல்லை என ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]இது தொடர்பாக நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான இயக்குனர் டாக்டர் கே.அருளானந்தம் கருத்து தெரிவிக்கையில்,[/size][/size]

[size=3][size=4]“மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரையொதுங்கிய இறந்த மற்றும் உயிருடனான மீன்களின் மாதிரிகள் மற்றும் மீன்கள் நாராவினால் எடுத்து செல்லப்பட்டு இராசயன பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டது.[/size][/size]

[size=3][size=4]இந்த பகுப்பாய்வின் போது இந்த மீன்களில் இராசயன நஞ்சுப்பதார்த்தம் இல்லை என்பது ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. எனினும் தொடர்ந்து இந்த மீன்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. கடலில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றமும் கடலின் அடியில் ஏற்பட்டுள்ள குளிர் நிலையினாலும் இந்த மீன்கள் கரையொதுங்குகின்றன.[/size][/size]

[size=3][size=4]கடலில் இந்த மீன்களை உண்ணும் நுண்ணுயிர்த் தாவரங்கள் அழுகியுள்ளதால் இந்த சிறிய மீன்களுக்கு உற்கொள்ள உணவு இல்லாததாலும் ஓட்சிசன் குறைபாட்டினாலும் இந்த மீன்கள் கரையொதுங்கி வருகின்றன” என்றார்.[/size][/size]

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்து என்பதற்க்கான எச்சரிக்கை மணிதான் இந்த மீன்களின் கரை ஒதுங்கல்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியாவிலும் மீன் கரை ஒதுங்கினதா? :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஒலுவில் பிரதேசத்தில் ஒரே தடவையில் பிடிபட்ட 7,000 பாரை மீன்கள்: - ஒரு கோடி ரூபாய் என மதிப்பீடு [/size]

Parai-fish211012-150.jpg

ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலாளி ஒருவருக்கு சொந்தமான தோணிகளுக்கு ஒரே தடவையில் சுமார் 7,000 பாரை மீன்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிக்கின. ஓவ்வொன்றும் 6 முதல் 7 கிலோ கிராம் எடையுடைய இந்த மீன்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரதேச வரலாற்றில் இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிபட்டமை இதுவே முதல் தடவை என இங்குள்ள மீனவர்கள் கூறுகின்றனர். சாதாரண நாட்களில் 7 கிலோகிராம் எடையுடைய பாரை மீனொன்று சுமார் 2,000 ரூபாவுக்குக் குறைவில்லாமல் விற்கப்படும் நிலையில், இன்றைய தினம் 1,300 முதல் 1,500 ரூபாய் வரையிலேயே விற்கப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பகுதிகளில் மிகப் பெருமளவான சூரை மீன்கள் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கிய மீன்களும் சில்லேடுக்கும் மக்களும் :D

சிக்கிய மீன்களும் சில்லேடுக்கும் மக்களும் :D

இப்படி வலையில்....கன்னிப்பெண்களாக சிக்கினால்...ஒந்தாச்சி மடம் கடற்கரையில் சுண்டல் வாடிவீடு போட்டிடும்... :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மட்டும் விட்டிட்டு போவனா? கூட்டிட்டு போக மாட்டன்?

ஏன்..? சேந்து அடிவாங்கவோ..? :D

  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடல் நீரோட்டம் மாறினாலும் மீன்கள் கரை ஒதுங்கும்..! மீன்களின் குடித்தொகை மற்றும் அதன் உணவுக்குரிய உயிரிகள்.. அந்தப் பகுதியில்..அபரிமிதமாகப் பெருகுவதாலும் இப்படி நிகழலாம். இது ஓர் இயற்கையான செயற்பாடு என்றே எனக்குப்படுகிறது.

ஆனால் இந்த மீன்களை சாப்பிடுவது சரியா என்பதை அப்பகுதி மீன் வள அல்லது உணவு தரம்.. கட்டுப்பாட்டு அதிகாரிகள் பரிசோதித்து பொதுமக்களை அறிவுறுத்துவது நல்லது..! சில வேளை நோய்களின் விளைவாகவும் மீன்கள் இறந்து அல்லது குற்றுயிராக கரை ஒதுங்கலாம்..! :icon_idea:

கதைக்கினம் கதை....முழுபூசணிக்காயையும் சோத்துக்கை மறைக்கப்பாக்கினம்....கண்டகண்ட அணுகழிவுகளை கடலுக்கை கொட்டுறது......தொழிற்சாலை இரசாயன கழிவுகளை தெக்குதெரியாத நடுக்கடல்லை ஊத்திவிடுறது....புதிசாய் செய்த குண்டுகளை அமசடக்காய் வெடிக்க வைச்சு அழகு பாக்கிறது....உல்லாச கப்பலின்ரை அட்டகாசம்....நீர்மூழ்கி கப்பலின்ரை அரியண்ட சத்தங்கள்....நடுக்ககடலிலை எண்ணெய்கிணறுகள்......பிரச்சனை இப்பிடியிருக்க.......இது இயற்கையின் செயற்பாடு இல்லை....செயற்கையின் வெளிப்பாடு........கார்,லொறி,விமான சத்தங்களை மனிசராலையே தாங்கேலாமல் கிடக்கு.......தாங்களும் தங்கள் பாடும் எண்டு இருக்கிற ஜீவராசிகளாலை எப்பிடி ஆறறிவு படைத்தவனின் தொல்லைகளை தாங்கேலும்????? இனியும் வலை,தூண்டில் இல்லாமல் மீன் பிடிக்க என் வாழ்த்துக்கள். :icon_idea:

இது புலிகள் விட்ட வரலாற்று தப்பென்பது மட்டும் எனக்கு தெட்டத் தெளிவாக தெரிகிறது. மற்றும்படி உயிரியல் படித்தது O/L வரைக்கும்தான். :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னவோ நல்லதுக்கில்லை, என்று மட்டும் விளங்குது!

கு.சா. அண்ணா சொன்னமாதிரி, கிழக்குக் கடலடி மேடையில், என்னவோ நடக்கிறது!

அது அந்தக் கோத்தாவுக்கும், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் மட்டும் தான் வெளிச்சம்! :o

வெப்பமான கால நிலை நிலவும் போது கடல் மேற்பரப்பில் உள்ள நீரின் வெப்பநிலை அதிகரிக்கும். வெப்பநிலை அதிகரிக்கும் போது நீரின் ஒட்சிஜன் கொள்ளலவு குறையும்.

ஒட்சிஜன் குறையும் போது மீன்கள் அவ்விடத்தை விட்டு தப்பிக்க முயற்சிப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.