Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இழையராஜா இசை நிகழ்வும் மாவீரர்தின தேசிய நிகழ்வும்: - கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கை. [/size]

[Tuesday, 2012-10-30 23:06:02]

[size=4] CTC%20logo%20seithycom.jpg

இசைஞானி இழையராஜாவினது நிகழ்வும் - நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தேசிய மாவீரர் தினம் மற்றும் அதையொட்டிய மாவீரர் வார அனுஷ்டிப்புகளும் கனேடிய தமிழர்கள் மத்தியில் மாறுபட்ட கருததுக்களையும் குழப்பங்களையும் ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் இது சம்பந்தமாக கனடியத் தமிழர் பேரவையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன் முழுவிபரம் கீழ்வருமாறு..

கனடியத் தமிழர் பேரவை

29-10-12

------------------------

அன்பான தமிழ் மக்களே! [/size]

[size=4]கடந்த இரு தசாப்தகாலமாக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளும் அதையொட்டி வரும் வாரமும் பல்வேறு உணர்வு பூர்வமான நிகழ்வுகளால் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வருடம் நவம்பர் மாதம் முழுவதும் மாவீரர் மாதமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கனடாவிலும் தமிழகத்திலும் சிலரால் முன்வைக்கப்பட்டு இருக்கிறது.

கனடிய தமிழர் பேரவையைப் பொறுத்தமட்டில் நவம்பர் மாதம் முழுவதும் நினைவு வாரமாக கடைப்பிடிக்க விரும்புபவர்கள் அதை அப்படியே நினைவு கூரும்பட்சத்தில் தங்களது இந்த அபிப்பிராயத்தை மற்றவர்கள்மேல் வலிந்து திணிக்கக் கூடாதென கேட்டுக் கொள்கின்றது.

ஜனநாயக விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் கனடா நாட்டின் குடிமக்களாகிய நாம் அதற்கு முரணான அபிப்பிராயங்களை மக்கள் மீது வலிந்து திணிப்பதும் அதே நேரத்தில் அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகளை விடுவதும் மிரட்டும் பாணியில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதும் தங்கள் கருத்துடன் முரண்படுபவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்றும் தமிழ்த் தேசியத்திற்கு விரோதமானவர்கள் என்றும் முத்திரை குத்துவதும் அதே ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது என்று கனடிய தமிழர் பேரவை நம்புகிறது.

ஆதலால் எம் அன்பான உறவுகளே! இப்படியான சந்தர்ப்பங்களில் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்துவதை தவிர்த்து எல்லோரினதும் ஜனநாயக உரிமைகளையும் தனிநபர் சுதந்திரத்தையும் மதித்து அனைவரும் நடந்து கொள்ளவேண்டும் என்று கனடிய தமிழர் பேரவை உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

நன்றி

மேலதிக தொடர்புகளுக்கு

கனடிய தமிழர் பேரவை

(416) 240-0078

http://www.seithy.co...&language=tamil[/size]

இவர்கள் எந்தக் கனடிய சட்டத்திற்கு உள்ளால் இந்த அறிக்கையை விடினம். இதுவும் மக்களின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் தானே. மக்கள் விரும்பினா போகட்டும். இல்ல பகிஸ்கரிக்கட்டும். அதில் எந்த வகையிலும் தலையீடு செய்ய கனடிய சட்டம் கனடிய தமிழர் பேரவைக்கும் இடமளிக்கல்ல.

மேலும் கனடிய மக்களை அறிவுறுத்த வேண்டிய பொறுப்பு கனடிய அரசிற்கும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதர அரச கட்டமைப்புக்களுக்கும் உண்டே தவிர.. கனடிய தமிழர் பேரவைக்கு இல்லை. எனவே அது தனது அதிகார வரம்புக்குள் நின்று மட்டும் செயற்படுவதோடு அடுத்தவர்களின் தேவைக்கு காட்டிக்கொடுப்புக்களை செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்வது அதன் செயற்பாட்டுக்கு நல்லதும் கூட..!

தமிழ்செல்வன் அண்ணாவின் மறைவு தினம் வாறது கூடத் தெரியாத ஒரு பேரவை தமிழர் பேரவை என்று சொல்லிக் கொண்டு காக்கா விரட்டிக் கொண்டிருப்பதில் பயனில்லை..!

நீங்கள் கனடாவையும் மதிக்கப் போறதில்ல. சொந்த மண்ணையும் மதிக்கப் போறதில்ல. இதுக்க ஜனநாயகம் என்ற போலி கூக்குரல் உங்களுக்கு எதற்கு..?????!

மாவீரர் நாளோ.. வாரமோ.. மாதமோ.. அது மக்களால் தான் எனி தீர்மானிக்கப்படனும். காரணம்... 2009 மே க்கு பின்னர் மக்கள் இழந்தவை அதிகம். அந்த வகையில் மாவீரர் நாள் மாதமாவதை தீர்மானிக்க வேண்டியது மக்களே தவிர.. அதைச் செய்... இதைச் செய்யாத என்று சொல்ல.. தமிழர் பேரவைகளுக்கும் உரிமையில்ல.. சங்கங்களுக்கும் உரிமையில்ல.. ஏன் சர்வதேசத்திற்கே அந்த உரிமையில்ல.

தங்களுக்கு எது தேவை என்பதை தீர்மானிக்க வேண்டியது விடுதலையை.. உரிமையை வேண்டி நிற்கும் மக்களே அன்றி.. மற்றவர்கள் அல்ல. அந்த மக்களை வைத்து பெயரும்.. புகழும்.. பிழைப்பும் ஓட்டுபவர்கள் அல்ல.

மக்களுக்கு தெரியும்.. எது ஜனநாயகம். அதன் வீச்சு என்ன என்று. தமிழர் பேரவை.. அதைச் சொல்லிக் கொடுக்க முனையக் கூடாது. மக்கள் அதனை தீர்மானிக்க அனுமதிப்பதே அவர்கள் உண்மையில் ஜனநாயகத்தை மதிப்பின் செய்ய வேண்டிய வேலை..!

பிளவை உண்டு பண்ணுபவர்களே ஐயோ நமக்கிடையே பிளவு என்று கூச்சல் போடுவதுதான் தமிழர்களின் சாபக்கேடு. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 248
  • Views 20k
  • Created
  • Last Reply

[size=4]கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முற்று முழுதாக எமது தாயக உறவுகளின் துயர் துடைக்கின்ற முகமாக 'மண் வாசனை' என்னும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஏற்கனவே எம் தாயக உறவுகளின் துயர்துடைக்கு முகமாக கனடாவில் இயங்குகின்ற தாயக உறவுகளின் துயர்துடைக்கின்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக மண்வாசனை நிகழ்வுமூலம் தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகளின் உடனடித்தேவைகளை நிவர்த்திசெய்யும் முகமாகவும் இந்நிகழ்வானது தொடர்ந்து எம் இனத்தின் துயர்துடைக்கும்வரை தொடரும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகின்றோம்.[/size]

[size=5]Address: BRAMALEA SECONDARY SCHOOL (BSS), 510 Balmoral Drive, , Brampton, ON Canada[/size]

[size=5]Date: 2012-11-10 at 6:30 pm[/size]

[size=4]தாயகத்தில் இருந்து கோரப்பட்டுள்ள தேவைகளிற் சில: [/size]

[size=4]• கடந்த கால யுத்தம் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு - இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள் - கழுத்துக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள் - நெஞ்சுக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள்[/size]

[size=4]• பராமரிப்பு நிலையத்திற்கான பராமரிப்புச் செலவுகளும் கோரப்பட்டுள்ளன. கழுத்துக்கு கீழ் உணர்வு இழந்தவர்களை பராமரிப்பதற்கு முழுநேரப் பராமரிப்பாளர்களை ஏற்பாடுசெய்து அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டியுள்ளது.[/size]

[size=4]• மீளக் குடியமர்த்தப்பட்ட இடங்களில் பெற்றோர்களை இழந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கான கல்வி மேம்பாட்டிற்கான உதவியும் கோரப்பட்டுள்ளது. [/size]

[size=4]இவைகள் அனைத்தும் உடனடியாக கோரப்பட்டுள்ள உதவிகளாகும். எமது உறவுகளின் உடனடித் தேவைகளைப் நிவர்த்திசெய்யும் முகமாக மண்வாசைன எனும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்துகொண்டு எம் தாயக உறவுகளின் துயர்துடைக்க உதவுமாறு கனடியத் தமிழர் தேசிய அவையினர் கேட்டுக்கொள்கின்றனர். [/size]

[size=4]நிகழ்வுகள்: [/size]

[size=4]இசைச்சங்கமம் நடனம் வீணை இசைக்கச்சேரி நாட்டிய நாடகம் [/size]

[size=4]PEEL TAE KWON DO ஆசரியர் ஜேம்ஸ் கந்தசாமியின் மாணவர்கள் வழங்கும் சாகச காட்சிகள் இன்னும் பல நிகழ்வுகளுடன்..[/size]

[size=4]Contact:

Phone: 416.830.7703

Email: info@ncctcanada.ca[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110469

ஒரே ஒன்றுதான் என்று நான் நினைக்கிறேன்.இளையராஜாவை எமக்கு எதிராக திருப்புவது.

இவ்வளவு காலமும் ஆதரவாய் இருந்தாரா?

  • கருத்துக்கள உறவுகள்

407619_215038855296537_857922788_n.jpg

http://cinema.maalai...otest-Echo.html

மாலைமலர் (தமிழகம்)

Edited by nedukkalapoovan

இவ்வளவு காலமும் ஆதரவாய் இருந்தாரா?

என்ன மடத்தனமாய் கேக்கிறியள்? ஆதரவாய் இருந்தாரோ இல்லையோ.எதிராய் இருக்கேல்லை எல்லோ. சும்மாய் இருந்த மனிசனை எமக்கு எதிராய் திருப்பிவிடுரதுதான் இது.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி மூச்சு இருக்கும்வரை இந்தக் கச்சேரியை குழப்பவேணும் என்று வதந்திகளை இப்பவும் காவுவதில் ஒரு பயனுமில்லை.

கடைசி மூச்சு இருக்கும்வரை இந்தக் கச்சேரியை குழப்பவேணும் என்று வதந்திகளை இப்பவும் காவுவதில் ஒரு பயனுமில்லை.

இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி மூச்சு இருக்கும்வரை இந்தக் கச்சேரியை குழப்பவேணும் என்று வதந்திகளை இப்பவும் காவுவதில் ஒரு பயனுமில்லை.

ஊடகச் செய்திகள் வதந்தியா உண்மையா என்பதை அந்தந்த ஊடகங்களைத் தொடர்பு கொண்டு கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும் ஜனநாயக உரிமை உங்களுக்கும் உள்ளது கிருபண்ணா.

அதேபோல்.. நீங்கள்.. வதந்தி எண்டாப் போல.. அது வதந்தி என்றும் ஆகிடாது..! அதற்கான ஆதாரத்தை நாங்களும் உங்களிடம் எதிர்பார்க்கும் ஜனநாயக உரிமை எங்களுக்கும் உள்ளது.

ஒரு "பகுத்தறிவுவாதி" பேசுற பேச்சா இது..! :lol::D

Edited by nedukkalapoovan

[size=4]இந்த நிகழ்வு நிச்சயம் நடக்கலாம் அதில் தவறு இல்லை. ஆனால், இந்த நிகழ்வை யார் செய்கிறார்கள்? என்பதை மக்கள் கேட்பதில் நியாயம் உள்ளது. அதை குழப்பம் என சொல்லமுடியாது.[/size]

[size=4]இதை செய்பவர்கள் தொழில்நுட்ப நிறுவனம் என்றால் அதை நம்பமுடியுமா?[/size]

[size=4]இல்லை இவர்கள் பின்னால் யாரோ இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வருகின்றது. [/size]

[size=4]அதை அவர்கள் தெளிவுபடுத்தினால் இன்னும் அதிக ஆதரவு கிடைக்கும். ஏனெனில் இவர்கள் பின்னால் சிங்கள அரசு இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலான தமிழர்களின் அவா.[/size]

Edited by akootha

செய்தியில் கேள்விக்குறியோட தலைப்பு இருக்கின்றது. ஆனால் அதைப்பற்றிய கருத்துக்கள் கேள்விக்குறியை நீக்கியதாக இருக்கின்றது. மேலும் நிகழ்ச்சி திட்டமிட்டபடியே நடக்கும் என்ற செய்தியும் இதே திரியில் பின்னர் இணைக்கப்பட்டுள்ளது என்பதால் மீண்டும் உறுதி செய்யவேண்டிய அவசியமில்லை.

உரிமைகளும் சுதந்திரங்களும் நிறைந்த நாட்டில்தான் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பறிக்க கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றனர் சிலர். அதற்காகச் செலவழிக்கும் சக்தியை வேறு உபயோகமான விடயங்களுக்குப் பயன்படுத்தலாம் (உ+ம்: கடிதம் எழுதுதல், மனுக்கொடுத்தல்).

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இந்த நிகழ்வு நிச்சயம் நடக்கலாம் அதில் தவறு இல்லை. ஆனால், இந்த நிகழ்வை யார் செய்கிறார்கள்? என்பதை மக்கள் கேட்பதில் நியாயம் உள்ளது. அதை குழப்பம் என சொல்லமுடியாது.[/size]

[size=4]இதை செய்பவர்கள் தொழில்நுட்ப நிறுவனம் என்றால் அதை நம்பமுடியுமா?[/size]

[size=4]இல்லை இவர்கள் பின்னால் யாரோ இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வருகின்றது. [/size]

[size=4]அதை அவர்கள் தெளிவுபடுத்தினால் இன்னும் அதிக ஆதரவு கிடைக்கும். ஏனெனில் இவர்கள் பின்னால் சிங்கள அரசு இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலான தமிழர்களின் அவா.[/size]

கேட்டுப் பார்த்தும் பதில் தரவில்லை என்றால் அவர்களுக்குப் பின்னணியில் யாராவது இருக்கலாம் என்று சந்தேகம் நியாயமானதுதான். சிலவேளை கனடியத் தமிழர்களை கடும்போக்கில் இருந்து மென்போக்கிற்கு மாற்ற கனடிய உளவு நிறுவனங்கள் பணத்தை வாரியிறைத்து நடத்தக்கூடும் என்றும் சொல்லலாம் அல்லவா!

கனடாவில், அதிலும் ரொரன்ரோவில் இருப்பவர்கள் ஒரு எட்டு நடந்துபோய்க் கேட்டுவிட்டு வந்து தெளிவாக்கலாமே.

அப்படிச் செய்தால் எப்படி மக்களைக் குழப்பி போகவிடாமல் தடுக்கமுடியும்?

[size=4]இந்த நிகழ்வை நடாத்துபவர்கள் பகிரங்கமாக ஒரு அறிக்கை விட்டு மக்களை தெளிவு படுத்துவது கூட ஒரு மக்களாட்சி ( ஜனநாயக ) பண்பு.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இந்த நிகழ்வை நடாத்துபவர்கள் பகிரங்கமாக ஒரு அறிக்கை விட்டு மக்களை தெளிவு படுத்துவது கூட ஒரு மக்களாட்சி ( ஜனநாயக ) பண்பு.[/size]

நடாத்தும் அமைப்பின் பெயரில் நிகழ்வைப் பற்றிய அறிவிப்புக்கள், காணொளிகள் எல்லாம் இதே திரியில் உள்ளன.

அவைக்கும் மேலாம் நீங்கள் எழுதிக் கொடுப்பதை அவர்கள் அறிக்கையாகத் தரவேண்டும் என்று எதிர்பார்த்தால் அவர்களை நேரே சந்தித்து முயற்சி செய்யுங்கள். ஆனால் தேவையான ரிக்கற்றுக்களை விற்று Break-even ஐத் தாண்டியிருந்தால் அவர்கள் உங்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இழையராஜா இசை நிகழ்வும் மாவீரர்தின தேசிய நிகழ்வும்: - கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கை. [/size]

[Tuesday, 2012-10-30 23:06:02]

[size=4] CTC%20logo%20seithycom.jpg

இசைஞானி இழையராஜாவினது நிகழ்வும் - நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தேசிய மாவீரர் தினம் மற்றும் அதையொட்டிய மாவீரர் வார அனுஷ்டிப்புகளும் கனேடிய தமிழர்கள் மத்தியில் மாறுபட்ட கருததுக்களையும் குழப்பங்களையும் ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் இது சம்பந்தமாக கனடியத் தமிழர் பேரவையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன் முழுவிபரம் கீழ்வருமாறு..

கனடியத் தமிழர் பேரவை

29-10-12

------------------------

அன்பான தமிழ் மக்களே!

கடந்த இரு தசாப்தகாலமாக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளும் அதையொட்டி வரும் வாரமும் பல்வேறு உணர்வு பூர்வமான நிகழ்வுகளால் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வருடம் நவம்பர் மாதம் முழுவதும் மாவீரர் மாதமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கனடாவிலும் தமிழகத்திலும் சிலரால் முன்வைக்கப்பட்டு இருக்கிறது.

கனடிய தமிழர் பேரவையைப் பொறுத்தமட்டில் நவம்பர் மாதம் முழுவதும் நினைவு வாரமாக கடைப்பிடிக்க விரும்புபவர்கள் அதை அப்படியே நினைவு கூரும்பட்சத்தில் தங்களது இந்த அபிப்பிராயத்தை மற்றவர்கள்மேல் வலிந்து திணிக்கக் கூடாதென கேட்டுக் கொள்கின்றது.

ஜனநாயக விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் கனடா நாட்டின் குடிமக்களாகிய நாம் அதற்கு முரணான அபிப்பிராயங்களை மக்கள் மீது வலிந்து திணிப்பதும் அதே நேரத்தில் அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகளை விடுவதும் மிரட்டும் பாணியில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதும் தங்கள் கருத்துடன் முரண்படுபவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்றும் தமிழ்த் தேசியத்திற்கு விரோதமானவர்கள் என்றும் முத்திரை குத்துவதும் அதே ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது என்று கனடிய தமிழர் பேரவை நம்புகிறது.

ஆதலால் எம் அன்பான உறவுகளே! இப்படியான சந்தர்ப்பங்களில் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்துவதை தவிர்த்து எல்லோரினதும் ஜனநாயக உரிமைகளையும் தனிநபர் சுதந்திரத்தையும் மதித்து அனைவரும் நடந்து கொள்ளவேண்டும் என்று கனடிய தமிழர் பேரவை உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

நன்றி

மேலதிக தொடர்புகளுக்கு

கனடிய தமிழர் பேரவை

(416) 240-0078

http://www.seithy.co...&language=tamil[/size]

கிட்டாதாயின் வெட்டென மற! :D

[size=2]கொன்றைவேந்தன்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கிடைத்த இறுதி தகவல்களின்படி கனடிய உளவு அமைப்பே இந்த நிகழ்வை குளப்ப முற்படுகின்றது எனவே அவர்களை எச்சரிக்கிறேன்

[size=4]ஆம், இதைத்தான் இதுவரை சொன்னேன், "மக்களை கண்டுகொள்ளவில்லை" என்று. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து ஈரோஸ் இங்கிட்டு வேலை செய்ய வில்லையா..? அவன் மாவீரர் மாதம் என்று படம் ரிலீஸ் செய்யவில்லையா...? பிரிவினைய உருவாக்குவாவர்கள் ஓரமாக போங்க பிளீஸ்.. நாளை முதல் தமிழக தமிழர்கள் VS ஈழதமிழர்கள் கலை ரசனை உட்பட புது கச்சேரி ஆரம்பிக்கபட இருக்கு..! :icon_idea:

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து எதிர்ப்பவர்கள் வரட்டு கெளரவத்தில்.

[size=4] 'கனேடிய வருமான வரி இலாகா" இவர்களில் பலரை குறி வைத்திருக்கும்.[/size]

[size=4]மொத்த சீட்டு விற்பனை [size=5]40000 x 50 ~ 2,000,000 CAD[/size][/size]

[size=4][size=5][size=4]அத்துடன் இந்திய இலாகாவும் கண் வைத்திருக்கும்.[/size][/size][/size]

எனக்கு கிடைத்த இறுதி தகவல்களின்படி கனடிய உளவு அமைப்பே இந்த நிகழ்வை குளப்ப முற்படுகின்றது எனவே அவர்களை எச்சரிக்கிறேன்

அதுக்கு ஆலோசனை வழங்கியது எரிக் சொல்ஹைம்.

[size=4]'கனேடிய வருமான வரி இலாகா" இவர்களில் பலரை குறி வைத்திருக்கும்.[/size]

[size=4]மொத்த சீட்டு விற்பனை [size=5]40000 x 50 ~ 2,000,000 CAD[/size][/size]

[size=4][size=5][size=4]அத்துடன் இந்திய இலாகாவும் கண் வைத்திருக்கும்.[/size][/size][/size]

இப்ப அதா பிரச்சனை? இல்லை மாவீரர் மாதமா பிரச்சனை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன பேசுறிங்க அண்ணா இளையராஜா உட்பட அவளவு இசைக்குலினரையும் கொண்டு வரவே 100000 வந்திருக்கும் அவியல் hotel ல நிக்குறது உட்பட

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆம், இதைத்தான் இதுவரை சொன்னேன், "மக்களை கண்டுகொள்ளவில்லை" என்று. [/size]

மக்களைக் கண்டுகொள்ளாமல் மக்களை நிகழ்ச்சிக்கு வரவழைக்கமுடியாது. நிகழ்ச்சியை நடாத்துபவர்கள் (புதியவர்களாக இருந்தும்) சந்தைப்படுத்துதலில் தமது திறமையைக் காட்டியிருக்கின்றார்கள். அவதூறுகள், எச்சரிக்கைகள் எல்லாவற்றையும் உணர்ச்சிவசப்பட்டு தளம்பாது நிபுணத்துவத்துடன் கையாண்டுள்ளார்கள் என்றே நினைக்கின்றேன்.

நீங்கள் மக்கள் என்பது குறிப்பிடுவது மக்களை இன்னமும் தேசியத்தின் பெயரால் தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்க முனையும் சில நபர்களாகத்தான் இருக்கமுடியும். அவர்கள் உண்மையில் மக்களின் இயல்பான உணர்வுகளைப் புரிந்தவர்களாக இருந்திருதால் இந்த விடயத்தை ஆரம்பத்திலேயே சரியாகக் கையாண்டிருக்கவேண்டும்.

இப்போது மக்களுக்கு எத்தகைய குழப்பமான செய்திகளைக் கொடுத்தாலும் ஒன்றும் பெரிதாகச் சாதிக்கமுடியாது என்பதைத் தாமதமாக உணர்ந்ததனால்தான் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று அறிக்கை விடவேண்டி வந்திருக்கின்றது.

[size=4]'கனேடிய வருமான வரி இலாகா" இவர்களில் பலரை குறி வைத்திருக்கும்.[/size]

[size=4]மொத்த சீட்டு விற்பனை [size=5]40000 x 50 ~ 2,000,000 CAD[/size][/size]

[size=4][size=5][size=4]அத்துடன் இந்திய இலாகாவும் கண் வைத்திருக்கும்.[/size][/size][/size]

இதுவும் வருமானத்தில் பங்கு கிடைக்கவில்லையே என்பதால் வந்த கிலிகொள்ள வைக்கும் கருத்து மாதிரி இருக்கின்றது. <_< அடுத்த கோடைக்கு AR ரகுமானைக் கொண்டு வந்து இன்னமும் அதிகமாகச் சம்பாதிக்க இப்பவே வேலைத்திட்டங்களைத் தொடங்கினால் நல்லது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சி முடிய.. கனடிய சிறீலங்கா தூதரகம் ஒரு அறிக்கை தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கனடாவில் புலிகளுக்கிடையே மோதல். மாவீரர் தின அனுஷ்டிப்பின் முக்கியத்துவம் மறந்து தமிழ் மக்கள் குதூகலிப்பு. பயங்கரவாதிகளின் வேண்டுகோளை புறக்கணித்த கனடா சிறீலங்கா தமிழ் மக்கள்..! மூவின ஒற்றுமையை மீண்டும் ஒரு முறை உலகின் முன் பறைசாற்றி நின்றனர். உலக நாடுகள் இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் மக்கள் எமது அரசுக்கு வழங்கும் ஒத்துழைப்பை ஏற்றுக் கொண்டு.. எமது அரசு மீதான மனித உரிமை குற்றச்சாட்டுக்களில் இருந்து எம்மை விடுவிக்க வேண்டும் என்றும் வரும். இல்ல ரகசியமாகவாவது போகும்.

அப்ப கூட இங்க கருத்துச் சொல்வார்கள்.. எல்லாம்.. எதிர்ப்புக் கிளப்பின படியால் தான். இல்ல எல்லாம் சிமூத்தா.. காதோடு காது வைச்ச மாதிரி நடந்து முடிஞ்சிருக்கும் என்று..!

எப்படி பேசி மழுப்பினாலும்.. உண்மைகளை நிஜங்களை மறைத்தாலும்.. இந்த எதிர்ப்பின் விளைவு தான்.. எச்சரிக்கைகளுக்கான.. அவதானத்திற்கான எண்ணப் பிறப்பிப்பாக இருக்கும்..!

இத்தோடு இந்த விவாதத்தில் இருந்து விடைபெற்றுக் கொள்கின்றோம்.

எல்லோருக்கும் நன்றி. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வணக்கம்

கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முற்று முழுதாக எமது தாயக உறவுகளின் துயர் துடைக்கின்ற முகமாக 'மண் வாசனை' என்னும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஏற்கனவே எம் தாயக உறவுகளின் துயர்துடைக்கு முகமாக கனடாவில் இயங்குகின்ற தாயக உறவுகளின் துயர்துடைக்கின்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக மண்வாசனை நிகழ்வுமூலம் தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகளின் உடனடித்தேவைகளை நிவர்த்திசெய்யும் முகமாகவும் இந்நிகழ்வானது தொடர்ந்து எம் இனத்தின் துயர்துடைக்கும்வரை தொடரும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகின்றோம்.

Address: BRAMALEA SECONDARY SCHOOL (BSS), 510 Balmoral Drive, , Brampton, ON Canada

Date: 2012-11-10 at 6:30 pm

தாயகத்தில் இருந்து கோரப்பட்டுள்ள தேவைகளிற் சில:

• கடந்த கால யுத்தம் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு - இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள் - கழுத்துக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள் - நெஞ்சுக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள்

• பராமரிப்பு நிலையத்திற்கான பராமரிப்புச் செலவுகளும் கோரப்பட்டுள்ளன. கழுத்துக்கு கீழ் உணர்வு இழந்தவர்களை பராமரிப்பதற்கு முழுநேரப் பராமரிப்பாளர்களை ஏற்பாடுசெய்து அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டியுள்ளது.

• மீளக் குடியமர்த்தப்பட்ட இடங்களில் பெற்றோர்களை இழந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கான கல்வி மேம்பாட்டிற்கான உதவியும் கோரப்பட்டுள்ளது.

இவைகள் அனைத்தும் உடனடியாக கோரப்பட்டுள்ள உதவிகளாகும். எமது உறவுகளின் உடனடித் தேவைகளைப் நிவர்த்திசெய்யும் முகமாக மண்வாசைன எனும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்துகொண்டு எம் தாயக உறவுகளின் துயர்துடைக்க உதவுமாறு கனடியத் தமிழர் தேசிய அவையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

நிகழ்வுகள்:

இசைச்சங்கமம் நடனம் வீணை இசைக்கச்சேரி நாட்டிய நாடகம்

PEEL TAE KWON DO ஆசரியர் ஜேம்ஸ் கந்தசாமியின் மாணவர்கள் வழங்கும் சாகச காட்சிகள் இன்னும் பல நிகழ்வுகளுடன்..

Contact:

Phone: 416.830.7703

Email: info@ncctcanada.ca

http://www.yarl.com/...howtopic=110469

1. இன்று நேரடியாகவே பல அமைப்புகளின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொண்டு பணம் அனுப்பும் வசதி இருக்கும் போது, இத்தகையை நிகழ்ச்சிகளின் மூலம் பணம் பெறப்படல் மூலம் எதனை பெரியளவில் சாதிக்க போகின்றனர். டிக்கெட் அடிப்பதற்கான செலவு, அரங்கத்துக்கான செலவு, நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான செலவு (அலங்கரித்தல், ஆடைகள், போக்குவரத்து என்ற இன்ன பிற) போன்றவை போக எவ்வளவு பணம் மிஞ்சப் போகின்றது? அதில் எத்தனை பங்கு ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்லப் போகின்றது?

2. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றுக்கு கொடுக்கும் பணத்தில் வெறுமனே 25 வீதம் கூட பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதில்லை எனும் போது, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக இணைக்காமல் (நேசக்கரம் போன்று) ஏன் இப்படியான நிகழ்ச்சிகளின் மூலம் பெறப்படுகின்றது? கனடாவில் உள்ள பல ஊர்ச்சங்கங்கள் நேரடியாக நிதி சேகரித்து அங்குள்ள சனசமூகம். பழைய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளின் ஊடாக நேரடியாக உதவி செய்யும் போது தமிழ் அவைக்கு ஏன் இப்படியான நிகழ்வுகள் அவசியமாகின்றன?

3. பணம் பெறப்பட்டு அது எவ்வாறு எவரின் ஊடாக ஈழத்துக்கு அனுப்பப்படும்? இலங்கை அரசின் அமைப்புகளின் ஊடாகவா அல்லது சர்வதேச நலன் அமைப்புகளின் ஊடாகவா? அது இலங்கை அரசின் அல்லது உளவுத் துறையின் கைகளில் வீழாது என்பதற்கான உத்தரவாதம் என்ன?

4. மிக முக்கியமாக இந்த நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைகின்றது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துகின்றனர்?

5. இவ்வாறான நிகழ்வு வைக்க தமிழ் அவைக்கு எங்கிருந்து நிதி யாரால் எப்படித் தரப்படுகின்றது?

இது ஒரு வெறுமனே வர்த்தக நிகழ்வு என்றால் கண்டிப்பாக இப்படியான கேள்விகள் மனதில் எழாது, ஆனால் ஊர் மக்களுக்கு உதவுகின்றேன் என்று கூறுகின்றமையாலேயே நாம் இப்படியான கேள்விகளை கேட்க வேண்டிய தேவையை உணருகின்றோம்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.