Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவைப் போல் இலங்கைக்கு உதவுவதற்கு சீனாவும் தயார்: சீனத்தூதுவர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]புலிகள் மாறிலிகளைக் கொண்டிருந்தார்கள் என்று சொல்பவர், இந்தியாவைத் தவிர வேறொன்றும் இல்லை என்னும் மாறிலியைக் கொண்டிருப்பது முரணானது. எமது னலங்கள் மட்டுமே எமக்கு மாறிலிகள்.சீனாவோ ,இந்தியாவோ .அமெரிக்காவோ ஏன் சிறிலங்கா கூட இவற்றை அங்கீகரித்தால் எமக்கு அவர்கள் தான் னண்பர்கள். - NARATHAR[/size]

[size=4]நீங்கள் நான் எழுததவற்றை எல்லாம் நான் எழுதியதாகச் சொல்வது அவதூறு அல்லவா? [/size]

[size=4]நாரதர் நான் எழுதியது இதுதான்[/size]

[size=4]. ** சீனா தொடர்பாக நமக்கு எந்தவொரு அரசியல் இராசதந்திர space சும் இல்லை. .....[/size][size=4]நமக்கான இரசதந்திர வெளி மேறுலகு இந்தியா தொடர்பாக மட்டுமே உள்ளது. இதை மாற்ற வேண்டிய அரசியல் பொருளாதார வல்லமை நம்மிடம் இல்லை. சீனா நமது அடையாலமான யாழ் நூலகத்துக்கு 10 லட்ச்சம் இலங்கை பணத்தை தாராள மனசோடு வளங்கி இருக்கிறது. சீனாவின் பொன்மானை களத்தில் யாரும் பெரிதாக எடுத்திருப்பதாக தெரியவில்லை.**[/size]

  • Replies 50
  • Views 3k
  • Created
  • Last Reply

ஒருவருடனும் பகைக்கத் தேவையில்லை. அதே நேரம் ஒருவரை மாத்திரம் நம்பாது இருப்போம். உலகம் விரிந்து விட்டது. பலருடனும் பேச வேண்டும். நட்புகளை வளர்க்கும் பொழுது பல புதிய பாதைகள் திறக்கும்.

தொழில்நுட்ப / அறிவுத் தேவைக்காக சோவியத்தை உதறித் தள்ளி விட்டு மேற்குலகோடு கைகோர்த்தது இந்தியா. இன்று நல்ல நிலையில் உள்ளது. சோவியத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கிடந்திருந்தால் இந்தியாவின் கதி இன்று அதோகதி.

இரும்புத் திரைகளுக்குள் இருந்த கம்யூனிச நாடு சீனா, இன்று திறந்த வள பொருள் ஆதாரத்திற்காக மேற்குலகின் தோளில் கை போட்டு நட்புப் பாராட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சீனா தனது ஈழத் தமிழர்கள் தொடர்பான ராஜதந்திரத்தில் சில patch up வேலைகளைச் செய்யுது. [size=4]போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இன ஒடுக்குதல்களுக்கும் இனக்கொலைக்கும் ஆதரவு அளித்தபின்னர் போரின் பின்னர் ஐநாவில் இலங்கையின் இனக்கொலைகலை ஆதரித்த பின்னர் [/size]தமிழர் மத்தியில் இத்தகைய பூசி மெழுகும் வேலை சீனாவுக்கு அவசியமானதாக இருக்கிறது. அதுவும் முக்கியமாக 13ம் திருத்தச் சட்டம் தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சிக்கல் உருவாகுவதாக செய்திகள் வெளிவரும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் 2ம் தடவையாக இந்தியா இலங்கையை எதிர்க்குமென சொல்லப்படுகிற சூழலில் சூழலில் சீனா தனக்கும் வடபகுதியில் ஆள் அனி தேவை என கருதுவதில் வேறு சில அர்த்தங்கள் உள்ளது.

இந்தியாவுக்கும் மேற்குலத்துக்கும் வெளியிலே எமக்கு அரசியல் space இல்லை அந்த space சையும் அழித்துவிட நமது குருட்டு அதிதீவிரவாதிகளுக்கு சீனா களம் அமைத்துக் கொடுக்க்கிறது. நம் மத்தியில் உள்ள

சீனா ஆதரவாளர்களுக்கும் இந்திய விரோதிகளுக்கும் வெற்றிகரமான ஒரு களம் அமைக்கப் படுகிறது. அது ஒரு இராஜதந்திர ரீதியான முள்ளிவாய்க்காலுக்கே நம்மை இட்டுச் செல்லும்.

[size=4]நன்றாகா ஞாபகம் வைத்து எழுதி இருக்கின்றீர்கள்.[/size]

[size=4]தமிழர்களுக்கு ஞாபக மறதி அடிக்கடி மறந்துவிடுவார்கள். உங்களைபோன்றவர்கல்தான் அவற்றை எழுதி நடந்தவற்றை மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தவேண்டும். அனுபவத்தில் இருந்தே படிக்க வேண்டும் என்று அடிக்கடி நீங்கள் எழுதிதான் இப்போது எனக்கும் அதே எண்ணம்.[/size]

[size=4]இதில் நேரிலேயே வந்து நஞ்ச்டித்து கொன்றது இரசாயன கொண்டுகளை மக்கள் மேலே போட்டது போன்ற கொஞ்சம் கூடுதலானவற்றை நம்ம இந்திய பையன்கள் செய்தாங்கள். நீங்கள் எழுத மறந்துவிட்டீன்கள். உங்களுக்கும் வயது ஆகிறது என்று எண்ணுகிறேன்[/size].

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்,

சீனா சிறிலங்காவை மீறி தமிழர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கான சாத்தியங்கள் ஏதாவது இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

[size=4]தமிழர்களுக்கு விடுதலையை தாம்பாள தட்டில் வைத்து கொண்டு வந்து இந்தியா தரும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?[/size]

[size=4](எமக்கு விடுதலை எப்போது கிடைக்கும் என்று பல இந்தியர்கள் ஏங்குகிறார்கள். உங்களது பதிலை பார்த்து அவர்களுக்கும் அந்த இனிப்பான செய்தியை சொல்லிவிடலாம். எங்களுக்கு தருகிறாகள் உங்களுக்கு தரமாட்டார்களா என்னா என்று)[/size]

இந்தியா தமிழீழத்தை ஒரு போதும் வழங்காது. ஆனால் மாகாணசபையையாவது வழங்கக் கூடிய தீர்வுக்கு சிறிலங்காவை இட்டுச் செல்ல வேண்டிய காரணங்கள் இந்தியாவுக்கு உண்டு.

சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கினாலும் தமிழர்களை ஒரேயடியாக கை கழுவிவிட முடியாது நிலைமை இந்தியாவுக்கு இருக்கிறது.

ஆனால் சீனாவுக்கு அப்படி ஏதாவது இருக்கிறதா? ஒரு முக்கிய நேரத்தில் சீனா எங்களை ஏமாற்றினால், சீனாவிற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது?

அப்படியாயின் உங்களால் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து இது வரை எதைப் பெற முடிந்தது?

மகிந்த அரசு சீனாவுடன் சென்றுவிடும் அதனல் தான் னாங்கள் அவர்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று இந்தியா எத்தினை முறை சொல்லி இருக்கிறது?

இதில் இருந்து னீங்கள் எதனைப் புரிந்து கொள்வீர்கள்?

இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க சீனா அவசியம் என்பது விளங்கவில்லையா?

இந்தியாவுக்கு ,சீனாவை வைத்து அழுத்தம் கொடுத்தால் அவர்கள் தமீழத்துக்குக் கூட இணங்கும் காலம் னிச்சயம் வரும்.

எமது செயற்பாடுகள் அதனை னோக்கித் தான் இருக்க முடியும்.

எமது இலக்கை னோக்கி இந்தியாவை னாம் மாற்ற வேண்டும்.

புவி சார் அரசியலில் னலங்கள் மட்டுமே முக்கியமாகின்றன, கொள்கைகளும் பக்கச் சார்புகளும் அல்ல. னலங்களே வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றன.

முழுமையாக இல்லாது விட்டாலும் ஓரளவிற்கு என்றாலும் இந்தியா மீது தமிழ்நாட்டின் ஊடாக அழுத்தங்களை பிரயோகிக்க கூடிய சாத்தியங்கள் எங்களுக்கு இருக்கின்றன.

சரியான ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் இதை சரியான முறையில் பயன்படுத்த முடியும். ஐநா தீர்மானத்தை நீர்த்துப் போக இந்தியா செய்தாலும், அதை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தை நாங்கள் தமிழ்நாட்டின் ஊடாக உருவாக்கினோம்.

ஆனால் இப்படியான காரணிகள் எதுவும் சீனாவுடன் எமக்கு இல்லை. சீனா எம்மை இடைநடுவில் கைவிட்டால் எம்மால் எதுவும் செய்ய முடியாது. அப்பொழுது மீண்டும் இந்தியாவிடம் ஓடுவது கடினமாக இருக்கும். அதற்குள் இந்திய தேசிய ஊடகங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கும் எமக்கும் இடையில் ஒரு இடைவெளியை உருவாக்கியிருப்பார்கள்.

அந்த இடைவெளியை மூட மீண்டும் எமக்கு பத்து ஆண்டுகள் தேவைப்படலாம்.

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டே சீனாவுடனான எமது நகர்வுகள் அமைய வேண்டும்.

சிறிலங்கா அரசு பதின் மூன்றாம் சரத்தையே இல்லாது செய்யப் போகிறது இதில் மாகாணசபையை இந்தியா தரும் என்று எப்படிச் சொல்வீர்கள்? இந்தியாவால் சர்வதேசத்துடன் இயங்கினால் மட்டுமே சிறிலங்கா அரசைக் கட்டுப் படுத்த முடியும். அதற்காக அது எமது இலக்குகள் னோக்கி தனது கொள்கைகளை மாற்ற வேண்டிய னிலையில் இருக்கிறது.

இதில் சீனாவைப் புறம் தள்ளி விட்டு சர்வதேச ரீதியான னகர்வுகளை னாங்கள் மேற்கொள்ள முடியாது. சிறிலங்கா அரசு சர்வதேச ரீதியாகத் தனிமைப் படுத்தப் பட வேண்டும். அதனால் தான் கூட்டமைப்பை ,சீனாவுடன் பேசும் படி இந்தியாவே சொல்லி விட்டுள்ளது.

ஆம், நீங்கள் சொல்வது போன்று இந்தியாவின் ஆதரவோடு சீனாவுடனான உறவுகளை நாம் வளர்ப்பதுதான் பலன் தருமே தவிர, இங்கே சிலர் சொல்வது போன்று இந்தியாவை விட்டு விட்டு சீனாவிடம் போவது அல்ல.

தமிழ் னாட்டின் அழுத்தங்களா? அவற்றைத் தானே முள்ளிவாய்க்கலின் போது பார்த்தோமே.

புவிசார் னலங்களின் பாற்பட்ட அழுதங்களே , வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை உண்டு பண்ணும், என்பதுவே யதார்த்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழீழத்தை ஒரு போதும் வழங்காது. ஆனால் மாகாணசபையையாவது வழங்கக் கூடிய தீர்வுக்கு சிறிலங்காவை இட்டுச் செல்ல வேண்டிய காரணங்கள் இந்தியாவுக்கு உண்டு.

சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கினாலும் தமிழர்களை ஒரேயடியாக கை கழுவிவிட முடியாது நிலைமை இந்தியாவுக்கு இருக்கிறது.

ஆனால் சீனாவுக்கு அப்படி ஏதாவது இருக்கிறதா? ஒரு முக்கிய நேரத்தில் சீனா எங்களை ஏமாற்றினால், சீனாவிற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது?

[size=4]நல்ல சிந்தனை....[/size]

[size=4]மிகவும் நன்றான கேள்விகள்.[/size]

[size=4]உங்களது கேள்விகளை பார்க்கும்போதுதான் எனக்கும் இந்த கேள்விகள் வருகின்றன. இந்தியா முள்ளி வாய்க்காலில் கொண்டு போய்விட்டபோது நாம் கொடுப்பதற்கு எந்த வகையான அழுத்தங்கள் எம்மிடம் இருந்தன?[/size]

னாம் எவரையும் விட்டு விட்டு எவருடனும் போக வேண்டிய அவசியம் இல்லை, அதே போல் இவர் கோவிப்பார் என்று இன்னொருவருடன் பேசாமல் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், நீங்கள் சொல்வது போன்று இந்தியாவின் ஆதரவோடு சீனாவுடனான உறவுகளை நாம் வளர்ப்பதுதான் பலன் தருமே தவிர, இங்கே சிலர் சொல்வது போன்று இந்தியாவை விட்டு விட்டு சீனாவிடம் போவது அல்ல.

[size=4]இந்தியாவை அழிப்பதற்கு சீனாவிற்கு எமது நிலம் மொழி புவிசார் நலன்கள் தேவைபட்டால். அதை முழுமனதுடன் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம் என்ற செய்திதான்.[/size]

[size=4]எங்களைப்பற்றி இந்தியா கொண்டிருக்கும் எண்ணத்தை மாற்றி அமைக்கும். விடுத்து நாம் நீங்கள் பெரியவர்கள் குட்ட குட்ட நாம் குனிவோம் என்றால்? இஹ்டில் என்ன அரசியல் இருக்கு என்று எனக்கு புரியவில்லை. சிங்களவனுடன் கூடி இருந்தால் எந்த அரசியலும் இன்றி என்ன நடக்க போகிறது? எம்மை குட்டி குட்டி கொண்டிருப்பான்? அதற்கேன் அரசியல் செய்து குட்டு வாங்க வேண்ட்டும் என்ற புலவரின் புலம்பல்தான் எனக்கு புரியவில்லை.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை மட்டுமல்ல எல்லோரையும் மிரட்டிப் பணியவைக்கவேண்டும் என்கிற அணுகுமுறை உலகம் எல்லாம் சேர்ந்து எம்மை அழிக்கும் ஒரு சூழலுக்குத்தான் வழி வகுக்கும். இத்தகைய போக்கு எதிர்க்கப் படாமல் போனால் நாம் பலம்பெறுவதையோ வெற்றி பெறுவதையோ யாரும் அனுமதிக்க மாட்டார்கள். நம்மை பேரழிவுக்கு இட்டுச் சென்ற சிந்தனைப் போக்கு எது என்று கண்டுகொள்ள நம் மவர்கள் முன்வைக்கும் சில கருத்துக்களை வாசித்தாலே போதும்.

தயவு செய்து சர்வதேச சமூகத்தை அச்சுறுத்தி எதிரியின் பக்கம் தள்ளிவிடாதீங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]This short u-tube by Vellichem TV explains how the Tigers were deceived by China, Pakistan US and silent operation by India. The explanation is complicated, but please try to understand.At the end of it India was played out by Rajapaksa. Tube by Rajanayagam of Germany[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]This short u-tube by Vellichem TV explains how the Tigers were deceived by China, Pakistan US and silent operation by India. The explanation is complicated, but please try to understand.At the end of it India was played out by Rajapaksa. Tube by Rajanayagam of Germany[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழீழத்தை ஒரு போதும் வழங்காது. ஆனால் மாகாணசபையையாவது வழங்கக் கூடிய தீர்வுக்கு சிறிலங்காவை இட்டுச் செல்ல வேண்டிய காரணங்கள் இந்தியாவுக்கு உண்டு.

சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கினாலும் தமிழர்களை ஒரேயடியாக கை கழுவிவிட முடியாது நிலைமை இந்தியாவுக்கு இருக்கிறது.

ஆனால் சீனாவுக்கு அப்படி ஏதாவது இருக்கிறதா?

நிச்சயமாக தமிழர்களின் தேவை சீனாவுக்கு இருக்கிறது. அதனால்தான் சீன துதூவர் வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சென்றார். இலங்கையில் 1970களில் இருந்தே சீன அரசு நிறைய முதலிட்டு உள்ளது. பண்டாரநாயக்கா நினைவு மண்டபத்தில் இருந்து போருக்கான ஆயுதங்கள் வரை சீனா நிறைய முதலிட்டுள்ளது. அதற்கான வருமானமாக சிறிலங்கவை சீனா வாணிப மற்றும் அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்த விரும்புவதாக தெரிகிறது. அதற்கு தடையாக இருப்பது தமிழர் பிரச்சினை.

ஆகவே இந்த பிரச்சினை தீர வேண்டும் என்பதில் சீனாவுக்கு ஆர்வம் இருக்கிறது. அதே வேளை சீனாவின் பாரம்பரிய வெளிநாட்டு கொள்கையை சீனா இலகுவில் கைவிடாது. இந்த கொள்கையின்படி சீனா வேறு நாடுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிடுவது இல்லை. இந்த கொள்கைக்கு மாறாக இலங்கையிலும் சீனா செயற்படாது. அதே வேளை சிறிலங்கா அரசின் அனுமதியுடன் பொருளாதார வளர்ச்சி கல்வி வளர்ச்சி போன்ற செயற்பாடுகளில் சீனா உதவ முன்வரும். அரசியல் தீர்வுக்கு இலங்கை அரசு அனுமதித்தால் ஆலோசகராகவோ நடுநிலையாளராகவோ செயற்பட முன்வரும்.

இவ்வாறாக ஒரு அரசியல் பங்கை சீனா வகிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தமிழர் தலைமைகள் வந்தால் அதில் சிங்கப்பூரின் அரசும் பங்குபற்றுமாறு செய்வது தமிழருக்கு நன்மையானது. சிங்கப்பூரின் தந்தையென கொள்ளப்படும் லீ குவான் யூ ஈழத்தமிழருக்கு ஆதரவானவர். அவருக்கு ஈழத்தமிழருடன் குடும்ப உறவு இருக்கிறது. அவருடைய காலத்திலேயே சீனாவின் டெங் சா பெங் சிங்கப்பூரின் உதவியுடன் சீனாவை திறந்த பொருளாதார நாடாக கட்டியெழுப்பினார். சிங்கப்பூரும் சீனாவும் சேர்ந்து ஈழத்தமிழருக்கு ஹொங்கொங் போன்ற தன்னாட்சியையாவது பெற்றுத்தர முயற்சிக்கலாம்.

ஒரு முக்கிய நேரத்தில் சீனா எங்களை ஏமாற்றினால், சீனாவிற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது?

ஏமாற்றங்களை தவிர்ப்பதற்கு அழுத்தங்கள் கொடுப்பது மிகவும் பலவீனமாக அணுகுமுறை. ஈழத்தமிழர் வரலாற்றில் இந்த அணுகுமுறை தோல்வி கண்ட சந்தர்ப்பங்களே அதிகம். சாத்தியமானதும், சம்பந்தப்பட்ட ஏனையவர்கள் மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளத்தக்கதானதுமான உடன்பாடுகளை ஏற்படுத்தக்கொள்வதே ஏமாற்றங்களை தவிர்ப்பதற்கு பலமுள்ள அணுகுமுறையாகும்.

உதாரணமாக சிங்கப்பூர் சீனர்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தாலும் அதன் தேசிய மொழியாக மலேயை வைத்திருக்கிறது. இது இலங்கை தமிழை மட்டும் தேசிய மொழியாக வைத்திருப்பது போன்றதாகும். மறுவளமாக தமிழீழம் இசுலாமை தேசிய மதமாக அறிவிப்பதற்கு ஒப்பானது. இந்த வகையான உடன்பாடு, சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து தனிநாடாகவும், மலேசியாவுடன் நல்லுறவை பேணவும் மிகவும் உதவியுள்ளது.

[size=5]ஈழத்தமிழர் அடிப்படை உரிமைகளை வெல்ல என்று (கபட, சுயலாப நோக்கங்களுடன்) "புறப்பட்ட" சிலர் மட்டரகமான அடிமைப் புத்தியுடன் / அப்பட்டமான சுயநலவாதிகளாக / சிலரின் சந்தர்பவாத கைக்கூலிகளாக செயற்படுவதை அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

நமக்கு எது தேவை? - அது ஏன்? - அதற்கான நியாயங்கள் எவை? நமக்கு எது பிடிக்காது? - அது ஏன்? - அதற்கான காரணங்கள் எவை? எமது இனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை எக்காரணங்களின் அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது - மீறி அவ்வாறு தொடர்ந்து செய்பவர்கள் எமது பார்வையில் எப்படிப்பட்டவர்கள்? போன்றனவற்றை தெளிவாக சொல்ல வக்கிலாதவர்கள் ஒரு இனத்தின் உரிமையை பெற்றுக்கொள்ளும் எந்தவொரு முயற்சியில் ஈடுபட எந்தவித தகுதியும் இல்லாதவர்கள்.

இவ்வாறான தகுதியில்லாத ஒருசிலர் தான் எமக்கு என்ன தேவை என்பதை மறந்து, மற்றவர்கள் என்ன தருவார்? என்ன தரமாட்டார்கள்? என ஊகித்து, அவர்களுக்கு ஏற்றபடி தரகு வேலை செய்து, அவர்களிடம் நல்ல பெயர் பெற எமது குறைகளைக் கூறி - காட்டிக்கொடுத்து, அவர்களிடம் அற்பசொற்ப சலுகைகளை பெற்று, அவர்களுக்கு கைகட்டி சேவகம் செய்து, உலகில் சுயமாக கௌரவமாக வாழும் எந்தவொரு உயிரினமும் செய்யாத மிக ஈனமான மிக இழி-பிழைப்பை நடாத்துவார்கள், நடாத்த முயலுவார்கள். எமது உரிமைப் போராட்டம் பின்னடைவுகளைச் சந்தித்தற்கு இது போன்ற ஒருசில விசமிகளும் தான் முக்கிய காரணம்.

ஒன்றை அழிப்பதற்கு ஒருசில விசமிகள் போதும். ஒன்றை ஆக்குவதற்கு அதைவிட பல இலட்சக் கணக்கான கடும் முயற்சி உடையவர்கள், நேர்மையாக உழைப்பவர்கள் வேண்டும். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை சில நிமிடங்களில் உடைக்க பின்லேடன் போன்ற ஒருசில விசமிகள் போதும். அதை மீண்டும் கட்ட பல வருடங்கள் எடுக்கும். அமெரிக்காவால் கூட அதை சில நிமிடங்களில் மீண்டும் கட்டிவிட முடியாது.

அடிமைப்புத்தி, சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகளால், கைக்கூலிகளால் ஒரு இனத்தின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியாது. நித்தியானந்தா போன்ற போலிச் சாமியார்கள் பின்னால் சில நூறு ஏமாளிகள் தம்மையிழந்து சுத்தும் போது, இந்தமாதிரியான ஏமாற்றுக் கும்பலின் கருத்துக்களை நம்பி ஏமாறும் சுயபுத்தி இழந்த சில விசிறிகள் இருக்கவே செய்வர்.

இந்தமாதிரி சந்தர்பவாத கும்பலிடம், இடைத் தரகர்களிடம் ஏமாறாமல் இருப்பதே கௌரவமாக வாழத் துடிக்கும் ஈழத் தமிழர் செய்யவேண்டிய கடமை.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சீனா, இலங்கைக்குச் சீதனமாக எதையும் கொடுக்கவில்லை!

ஏதோ ஒரு தேவைக்காகவே கொடுத்துக் கொண்டிருக்கின்றது!

இலங்கை அரசு, அந்தத் தேவைக்குக் கேட்கும் விலை அதிகமாகும் போது, சீன வேறு விதமான, முடிவுகளை எடுக்கலாம்!

அதனைத் தமிழர்களால் கொடுக்க முடியுமெனின், சீனா தொடர்ந்தம் சிங்களத்தில் தங்கியிருக்க, வெறும் முட்டாள் அல்ல!

இந்தியாவுடன் கலியாணம் எப்போதும், தமிழனுக்கு எதிராகவே போய்க்கொண்டிருந்தால், விட்டு விட்டுச் சீனாவிடம் போவதில் தவறில்லை!

எல்லாத்தையும் இழந்து போன தமிழன், இந்தியாவைப் பற்றி இனியும், கவலைப் படத் தேவையில்லை!

இந்தியா ,சீனா ,மேற்குலகம் இவர்கள் எல்லோருக்கும் இப்போ இலங்கையில் அதுவும் தமிழர் பிரதேசத்தில் தான் கண் .

இப்படி நினைத்தே அழிந்து போனீர்கள்.அவர்களுக்கு ஒரு உப்புக்கும் பெறுமதி இல்லாத எமது பிரச்சனையை இப்படித்தான் எமது ஆய்வாளர்கள் குழி தோண்டி புதைத்தார்கள் .இந்த இதயசந்திரன் என்பவரை விட்டால் செவ்வாய் கிரகத்திளிருந்தும் எங்களைதான் பார்க்கின்றான் என்று சொல்லுவார் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ,சீனா ,மேற்குலகம் இவர்கள் எல்லோருக்கும் இப்போ இலங்கையில் அதுவும் தமிழர் பிரதேசத்தில் தான் கண் .

இப்படி நினைத்தே அழிந்து போனீர்கள்.அவர்களுக்கு ஒரு உப்புக்கும் பெறுமதி இல்லாத எமது பிரச்சனையை இப்படித்தான் எமது ஆய்வாளர்கள் குழி தோண்டி புதைத்தார்கள் .

தவறான கருத்து. இந்தியாவும் சீனாவும் இலங்கையில் பல ஆண்டுகளாக நிறைய செலவிட்டுள்ளன. மற்ற நாடுகளின் ஆர்வத்தை எமது ஆய்வாளர்கள் அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டதும் உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா ,சீனா ,மேற்குலகம் இவர்கள் எல்லோருக்கும் இப்போ இலங்கையில் அதுவும் தமிழர் பிரதேசத்தில் தான் கண் .

இப்படி நினைத்தே அழிந்து போனீர்கள்.அவர்களுக்கு ஒரு உப்புக்கும் பெறுமதி இல்லாத எமது பிரச்சனையை இப்படித்தான் எமது ஆய்வாளர்கள் குழி தோண்டி புதைத்தார்கள் .இந்த இதயசந்திரன் என்பவரை விட்டால் செவ்வாய் கிரகத்திளிருந்தும் எங்களைதான் பார்க்கின்றான் என்று சொல்லுவார் .

இந்த ஏழறிவிற்கு, அடுத்தவர் அறிவை அளக்கும் அளவு கோல் ஆவதே வேலையாகிவிட்டது!

இவர் வார்த்தை அமைப்பினை நோக்கினால்: அதில் இருப்பது: தான் தமிழன் அல்லாதவன் அல்லது பெரும்பான்மைக்குள் தன் தலை சேராது. இந்த அடிப்படைக்கு இப்படி ஒரு முக்குப்பாடான அவஸ்தை தேவைதானா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா தமிழீழத்தை ஒரு போதும் வழங்காது. ஆனால் மாகாணசபையையாவது வழங்கக் கூடிய தீர்வுக்கு சிறிலங்காவை இட்டுச் செல்ல வேண்டிய காரணங்கள் இந்தியாவுக்கு உண்டு.

தன் சொந்த மக்களின் மரணங்கள் கூட தன் நடையை மாற்றுவதற்கு போதாத காரணக்களாய் இருக்கும் போது புதிதாக என்ன காரணங்கள்தான் வந்துவிடப்போகின்றது?

சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கினாலும் தமிழர்களை ஒரேயடியாக கை கழுவிவிட முடியாது நிலைமை இந்தியாவுக்கு இருக்கிறது.

200,000 அப்பாவி மரணங்களை பார்த்துக் கொண்டு இருந்த இந்தியா இனிமேல் எதனையும் கழுவிவிட முடியும்!

ஆனால் சீனாவுக்கு அப்படி ஏதாவது இருக்கிறதா? ஒரு முக்கிய நேரத்தில் சீனா எங்களை ஏமாற்றினால், சீனாவிற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது?

நிட்சயமாக சீனாவோ, இல்லை இந்தியாவோ சிங்களத்திற்கு இஸ்டம் இல்லாத ஒன்றை எம் பொருட்டு சிங்களத்தின் வெறுப்பின் விலையில் எமக்காக பெற்றுக் கொடுக்கப் போவது கிடையாது. ஆனால் இந்தியாவின் பின்னால் போனால் அதை இந்தியா தனது தேவைக்குத்தான் பயன் படுத்தும். உதாரணம்: முள்ளிவாய்க்கால் மரணங்களை எப்படி அது சிங்களத்தை தன் தேவைகளுக்கு வசதிகளாக்கியதோ அப்படியேதான் இனிமேலும் நடக்கும்!

சீனாவின் நிலமை அப்படி இல்லை. தற்போதிருந்தே அதன் கட்டுப்பாட்டுக்குள் இலங்கயைக் கொண்டுவது விட்டது. எனவே எங்களால் நன்மை அவர்களுக்கு கிடையாது. ஆக அவர்கள் இந்தியாவின் தலையீடு தமிழர்களால் இலங்கையில் நிகழ்ந்து விடக் கூடாது என்பதனை அடிப்படையாகக் கொண்டு எமக்கு சுமாரான தீர்வை தர உடன்படலாம்!

தவறான கருத்து. இந்தியாவும் சீனாவும் இலங்கையில் பல ஆண்டுகளாக நிறைய செலவிட்டுள்ளன. மற்ற நாடுகளின் ஆர்வத்தை எமது ஆய்வாளர்கள் அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டதும் உண்மை.

பெரிய சந்தைகளுடன் பார்க்கும் போது ஒப்பீட்டு ரீதியில் தான் எனது கருத்தை வைத்தேன் .திருகோணமலை துறைமுகம் ,மன்னர் எண்ணெய்,இல்மனைட் இதற்குதான் வருகின்றார்கள் என்று ஒரு நாளைக்கும் பின்னர் எங்களிடம் என்ன எண்ணையா இருக்கு என்று இன்னொருநாளும் வந்து அவனவன் விருப்பத்திற்கு வந்து அலம்பிவிட்டு போவார்கள் .

எங்கிருந்து பிடிக்கின்றார்களோ தெரியாது உந்த ஆய்வாளர்களை அவனவனுக்கு அந்நியன் தண்டனை தான் கொடுக்கவேண்டும்.

தன் போக்குக்கு எதிர் கருத்தாளர்களை சினிமா பாதிப்புக்களாக தர்ப்படுத்தல் செய்யும் அர்யுன்; அதேவகையான பாதிப்பின் விளைவுதானோ இந்த வகையாக எல்லாம் கனவுகாண்பதற்கு!

சோத்துக்கை இருக்கின்ற கல்லையே எடுக்க மாட்டாதனவற்றுக்கு எல்லாம் கதையில இமயத்தை தூக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் வருமாம்!

சொத்தைக் கை கொண்டவனே மண்டை உடைப்பேன், வெட்டுவேன் என்று சொல்லிக்கொண்டு; அடுத்தவனின் வார்தைகளில் இலட்சணம் தேடினானாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.