Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வந்த கதைகள் எல்லாவற்றையும் வாசித்த பின்னரும் உண்மையைச் சொல்லாமல் விட்டால் நல்லதல்ல....

------------------

91 இந்தியப் பொதுத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியை வெல்ல வைக்கவும், இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டவும் ஏதாவது புதிய உத்தியைக் கையாளவேண்டும் என்று நமது மலையாள நண்பர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறிப்பதற்குப் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி, ராஜீவ் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டமாதிரி ஒரு நாடகம் நடத்தப்பட்டது. ஆனால் அவர் உண்மையில் கொல்லப்படவில்லை. ராஜீவின் உடல் என்று சொல்லப்பட்டது சரியாக அடையாளம் காணப்படவில்லை என்பதை நாம் இலகுவில் மறந்துவிடக்கூடாது.

அப்படியானால் என்ன நடந்தது?

ராஜீவின் ஆளுமையற்ற தலைமை காங்கிரஸுக்கு பாதகமாக அமைந்ததால், ராகுல் காந்தியை அரசியல் வாரிசாக வளர்த்தெடுக்கும்வரை சோனியா காந்தி கட்சியையும் காந்தி குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதென்றும் அதுவரை ராஜீவ் தலைமறைவாக அவர் எப்போதும் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெறும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதித் தொகுதியில் உள்ள இரகசிய பங்களாவில் தங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

திட்டத்தின்படி மக்களின் அனுதாபத்தைத் திரட்ட ராஜீவ் தற்கொலைத்தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று எல்லோரையும் நம்பச்செய்து அனுதாப அலை மூலம் காங்கிரஸ் பதவிக்கு வந்தது. கொலையைக் காரணம் வைத்து புலிகளையும் தடைசெய்து புலிகளை அழிக்க நீண்டகாலத் திட்டம் தீட்டப்பட்டது.

தற்போது காங்கிரஸ் கட்சி நேருவின் குடும்பத்தின் கிடுக்கிப் பிடிக்குள் வந்துவிட்டது. ராகுல் காந்தி கட்சியின் தலைவராக வரக்கூடிய ஏதுநலை உள்ளது. அத்தோடு விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள். ராஜீவ் காந்தி அமேதியில் மிகவும் சந்தோஷமாகக் காலத்தைக் கழிக்கின்றார். மலையாள நண்பர்கள் தாம் சரியான மூளைசாலிகள் என்பதை மிகத் திறமையாக நிரூபணம் செய்துள்ளனர்.

-----------------

தெரியாதவற்றை பிறர் அறிய வழிசமைத்துத் தந்த யாழ் களத்திற்கு நன்றிகள்.

  • Replies 113
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]ஒருவர் தெரியாததை அறியவும் மற்றையவர் தெரிந்ததை பகிரவும் இந்த களம் வழிசமைத்து தருகின்றது. [/size][/size]

[size=1][size=4]நன்றிகள் இரகுநாதன். [/size][/size]

நாங்களும் உண்மையைச் சொல்லலாம் .சாட்சிக்கு பாலா அண்ணாவும் இப்ப இல்லை (பலத்த கல்லடியையும் சந்திக்க

வேண்டிவரும் )

  • தொடங்கியவர்

நாங்களும் உண்மையைச் சொல்லலாம் .சாட்சிக்கு பாலா அண்ணாவும் இப்ப இல்லை (பலத்த கல்லடியையும் சந்திக்க வேண்டிவரும் )

உண்மை எது என்பதுதானே இங்கு சிக்கலான விடயமாக இதில் சம்பந்தப்பட்டு இன்று உயிருடன் உள்ளவர்களால் கிளறப்படுகின்றது.

எனவே எது உங்களுக்கு உண்மை என தெரிகின்றதோ அந்த கருத்தை முன்வைக்கலாம்.

[size=4]பலதையும் உள்வாங்கி ஒரு முடிவிற்கு அதை வாசிப்பவர்கள் வரலாம். அது தானே இந்த கருத்து களத்தின் நோக்கம் ![/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் தொடர்பாக நான் கூற முற்ப‌டுவது ஒன்றுதான். இந்திய நீதிமன்றங்கள் புலிகள் மீது குற்றத்தைச் சுமத்தி தீர்ப்பும் எழுதிவிட்டன. புலிகள் மறுத்துவிட்டார்கள். தலைவர் இதை ஒரு "துன்பியல் சம்பவம்" எனக் குறிப்பிட்டுள்ளார். நாம் அனைவருமே இதை ஒரு துன்பியல் சம்பவமாகத்தான் பார்க்கிறோம். :D

இரண்டு விட‌ய‌ங்க‌ள்

  1. மனித உரிமை அமைப்புகள், ஐநா நிபுணர்குழு அறிக்கை முதற்கொண்டு வன்னியில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிறது. இலங்கை அரசு இதை மறுக்கிறது.
  2. இந்தியாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், காஷ்மீர் போராட்டங்களில் இந்திய இராணுவம் மனித உயிர்ப் பறிப்பில் ஈடுபடுகிறது என்று தெரியவந்துள்ளது.. இந்திய அரசு இவற்றை மறுக்கிறது.

இவற்றையெல்லாம் இவர்கள் ஒத்துக்கொள்ளும்போது நாமும் உண்மைகளைக் கண்டறியலாம். அதுவரையில், இல்லாத புலிகளைக் கிளறி யாருக்கென்ன லாபம்? இருக்கும் குற்றவாளிகளை முதலில் பிடித்துக் கொடுப்போம். :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வந்த கதைகள் எல்லாவற்றையும் வாசித்த பின்னரும் உண்மையைச் சொல்லாமல் விட்டால் நல்லதல்ல....

------------------

91 இந்தியப் பொதுத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியை வெல்ல வைக்கவும், இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டவும் ஏதாவது புதிய உத்தியைக் கையாளவேண்டும் என்று நமது மலையாள நண்பர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறிப்பதற்குப் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி, ராஜீவ் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டமாதிரி ஒரு நாடகம் நடத்தப்பட்டது. ஆனால் அவர் உண்மையில் கொல்லப்படவில்லை. ராஜீவின் உடல் என்று சொல்லப்பட்டது சரியாக அடையாளம் காணப்படவில்லை என்பதை நாம் இலகுவில் மறந்துவிடக்கூடாது.

அப்படியானால் என்ன நடந்தது?

ராஜீவின் ஆளுமையற்ற தலைமை காங்கிரஸுக்கு பாதகமாக அமைந்ததால், ராகுல் காந்தியை அரசியல் வாரிசாக வளர்த்தெடுக்கும்வரை சோனியா காந்தி கட்சியையும் காந்தி குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதென்றும் அதுவரை ராஜீவ் தலைமறைவாக அவர் எப்போதும் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெறும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதித் தொகுதியில் உள்ள இரகசிய பங்களாவில் தங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

திட்டத்தின்படி மக்களின் அனுதாபத்தைத் திரட்ட ராஜீவ் தற்கொலைத்தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று எல்லோரையும் நம்பச்செய்து அனுதாப அலை மூலம் காங்கிரஸ் பதவிக்கு வந்தது. கொலையைக் காரணம் வைத்து புலிகளையும் தடைசெய்து புலிகளை அழிக்க நீண்டகாலத் திட்டம் தீட்டப்பட்டது.

தற்போது காங்கிரஸ் கட்சி நேருவின் குடும்பத்தின் கிடுக்கிப் பிடிக்குள் வந்துவிட்டது. ராகுல் காந்தி கட்சியின் தலைவராக வரக்கூடிய ஏதுநலை உள்ளது. அத்தோடு விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள். ராஜீவ் காந்தி அமேதியில் மிகவும் சந்தோஷமாகக் காலத்தைக் கழிக்கின்றார். மலையாள நண்பர்கள் தாம் சரியான மூளைசாலிகள் என்பதை மிகத் திறமையாக நிரூபணம் செய்துள்ளனர்.

-----------------

தெரியாதவற்றை பிறர் அறிய வழிசமைத்துத் தந்த யாழ் களத்திற்கு நன்றிகள்.

நீங்கள் இப்போ பினோக்கியோ கதைகளும் சொல்ல தொடங்கி விட்டீர்களா?? :D

  • தொடங்கியவர்

[size=5]

[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்போ பினோக்கியோ கதைகளும் சொல்ல தொடங்கி விட்டீர்களா?? :D

தமிழரது இன்றைய நிலை சரியாக கையாளப்படுகிறது

இனி எல்லோரும் மிளகாய் அரைப்பதற்கு வேறு எங்கும் போக மாட்டார்கள்

தமிழன் முதுகு கேட்பாரற்று இலவசமாக கிடைக்கும்போது......................... :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்போ பினோக்கியோ கதைகளும் சொல்ல தொடங்கி விட்டீர்களா?? :D

இந்தத் திரியில் ஏராளம் பினோக்கியோ கதைகள் உள்ளன. எனவே எல்லோருக்கும் பிடித்தமான பினோக்கியோ கதைகளை சொல்லுவதுதானே நல்லது.

தமிழரது இன்றைய நிலை சரியாக கையாளப்படுகிறது

இனி எல்லோரும் மிளகாய் அரைப்பதற்கு வேறு எங்கும் போக மாட்டார்கள்

தமிழன் முதுகு கேட்பாரற்று இலவசமாக கிடைக்கும்போது......................... :( :( :(

தலையில் அரைக்கிறது தெரியாது.. முதுகில் அரைத்தால் தெரிந்துவிடுமாம்!

  • தொடங்கியவர்

உதயன் ஆசிரியர் 2000 இன் ஆரம்பபப் பகுதியில் கொழும்பிலிருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் பணியிலிருந்த ரோ முக்கியஸ்த்தர்களுடன் தொடர்பிலிருந்திருக்கிறார். இவர் மூலம் புலிகளின் தலமையை அணுகியிருக்கிறது இந்திய உளவுத்துறை. புலிகளின் தலமைக்குத் தெரியாமல் கொலை நடந்திருந்தது தெரிந்திருந்தும்கூட, புலிகளின் தலமையிடமிருந்து ஒரு மன்னிப்புப் போன்ற கருத்து வெளியிடப்பட்டால் இந்தியாவுடன் நல்லுறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று வித்தியாதரன் மூலம் கிளிநொச்சிக்குத் தூது அனுப்பப்பட்டது. தமிழ்ச் செல்வனும், பாலசிங்கமும் இதை தலைவரிடம் வலியுறுத்தி சர்வதேச செய்தியாளர் மாநாடொன்றினை நடத்துமாறு தலைவரைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். அவ்வாறு நடந்த மாநாட்டில் இந்தியச் செய்தியாளர் ஒருவர் தனக்குச் சொல்லித்தரப்பட்ட கேள்வியைக் கேட்க, பாலசிங்கமும் தலைவரிடம் இப்படிக் கூறுங்கள் என்று சொல்கிறார். தான் எதிர்பார்த்த பதிலை தலைவர் கூறியதும் இந்தியா அன்றே புலிகளை அழிக்க நாள் குறித்தது.

ஆக, புலிகள் செய்யாத ஒரு கொலைக்காக அந்த இயக்கம் மட்டுமல்லாமல், அந்த இயக்கத்தை நம்பியிருந்த ஒட்டுமொத்தத் தமிழினமே முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்டது.

அப்படியானால் கொன்றவர்கள் யார்/??

[size=4]"ஒரு துன்பியல் சம்பவம்" என நாங்கள் ஏற்றுக்கொண்டதை இந்திய நடுவண் அரசு நிராகரித்து ஒரு இனப்படுகொலைக்கு துணை நின்றது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

மொசாட்டு இஸ்ரேல் காரந்தான் போட்டான் அகில உலக அண்டார்டிக்காவுக்கே தெரியும் உங்களுக்குள்ளென்ன ஏன் குத்து வெட்டு..இளிச்சவாயன் பொண்டாட்டி ஊருக்கெல்லாம் ...... சாட்டு தூங்குங்கப்ப்பா.. :icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

[size=4]நிரபாராதிகளும் குற்றவாளிகளும் [/size]

[size=1]

[size=4]மேற்குலகில் பல நிரபாராதிகள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து பின்னர் சில தடயங்கள் காரணமாக நிரபாரதியாக விடுதலையான செய்தகள் நிறைய உண்டு. பின்னர் அவர்கள் தொலைத்த வாழ்க்கைக்கு நட்ட ஈடு வழங்குவதும் உண்டு. இதேவேளை அமெரிக்காவில் டி.என்.ஏ. பரிசோதனை காரணமாக பல தூக்குச்சாவுகள் தடுக்கப்பட்டு உள்ளன. [/size][/size]

[size=1]

[size=4]இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளில் 'சட்டத்தின் முன் யாவரும் சமம்' என்று ஒன்று பெயரளவில் தான் உள்ளது. பணத்தால் நீதிபதியின் தீர்ப்பையே விலைக்கு வேண்டும் சாத்தியங்களும் உண்டு. அந்த வகையில் ஒருவர் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டால், அதிலும் அரசியல் இருந்தால், அவர் கதை முடிந்த கதை ஒன்றே. [/size][/size]

[size=1]

[size=4]இராஜீவ் என்ற பலம் மிக்க மனிதரின் கொலையை ஒரு இனத்தின் தலை மீது கட்டி அந்த இனத்தையே அழித்தது - மகா அநீதி. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு அதை மறுக்கும் குரல் தெளிவாகக் கேட்காதவரை மக்கள் அதை நம்பவே செய்வார்கள். இதுதான் வதந்தி பரவும் விதம்.

எனினும் பொய்களை உண்மைகளாக்க அதிகாரம் இருக்கவேண்டும். அதிகாரம் இல்லாதவர்களால் சொல்லப்படும் உண்மைகள்கூட பொய்களாகத்தான் கருதப்படும்.

  • தொடங்கியவர்

[size=4]எது வதந்தி இல்லை இல்லை எது பொய் என்பதுதானே விடயமே ![/size]

  • தொடங்கியவர்

[size=4]முதலில் ஐ.நா.[size=5] 9000 [/size]மக்களே முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டனர் என கூறியது.[/size]

[size=1][size=4]பின்னர் கொல்லப்பட்ட மக்கள் [size=5]40,000[/size] வரை என கூறியது [/size][/size]

[size=1][size=4]இன்றி அந்த தொகை கிட்டத்தட்ட [size=5]100,000 [/size]இருக்கலாம் என கூறுகின்றது. [/size][/size]

[size=1][size=4]எனவே அன்று நாம் அதுதான் உண்மை இல்லை இதுதான் வதந்தி என ஏற்று இருந்தால் உண்மைகள் எது இல்லை பொய் எது என தெரியாமல் போயிருக்கலாம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எது வதந்தி இல்லை இல்லை எது பொய் என்பதுதானே விடயமே ![/size]

ஒருவர் தனது சுய திருப்திக்காக ஒன்றை வதந்தி என்றும் இன்னுமொன்றை உண்மையென்றும் சொல்லி மனதளவில் சுகம் தேடலாம். ஆனால் அதையே வெகுமக்களும் நம்பவேண்டும் என்று நினைப்பது வெகுமக்களுக்கு பொதுப்புத்தி இல்லை என்ற முன் அனுமானத்தால் வரும் சிந்தனை.

உண்மை-பொய், இருள்-ஒளி, மயக்கம்-தெளிவு, அழுகை-சிரிப்பு, பயம்-துணிவு, அறிவு-அறியாமை, இனிப்பு-கசப்பு, இன்பம்-துன்பம் இவைகளில் ஒன்றை மட்டும் விரும்பினால் அதற்கு எதிரானதில் வெறுப்பு பிறக்கும். விரும்புவதை நல்லது என்றும் வெறுப்பதைக் கெட்டது என்றும் பிரித்துக் கொள்கின்றோம். விருப்பு வெறுப்பு இல்லையெனில் நல்லதுமில்லை. கெட்டதுமில்லை. உள்ளதுதான் இருக்கும். :)

[size=4]முதலில் ஐ.நா.[size=5] 9000 [/size]மக்களே முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டனர் என கூறியது.[/size]

[size=1][size=4]பின்னர் கொல்லப்பட்ட மக்கள் [size=5]40,000[/size] வரை என கூறியது [/size][/size]

[size=1][size=4]இன்றி அந்த தொகை கிட்டத்தட்ட [size=5]100,000 [/size]இருக்கலாம் என கூறுகின்றது. [/size][/size]

[size=1][size=4]எனவே அன்று நாம் அதுதான் உண்மை இல்லை இதுதான் வதந்தி என ஏற்று இருந்தால் உண்மைகள் எது இல்லை பொய் எது என தெரியாமல் போயிருக்கலாம். [/size][/size]

ஐ.நாவிற்கு உண்மைகள் தெரிந்திருந்தது. அவர்கள் அந்த நேரத்தில் உண்மைகளைச் சொன்னால் மனிதநேயச் செயற்பாட்டிற்கும் இலங்கையரசு தடை விதித்துவிடலாம் என்று எதுவும் சொல்லவில்லை. ஆனால் அதற்காக வதந்தியைப் பரப்பினார்கள் என்று சொல்லமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சந்திராசாமிக்கும், சுப்ரமணியசாமிக்கும் ராஜீவ் படுகொலையில் பங்கு உண்டு – பழ நெடுமாறன்.

தமிழீழம் | ADMIN | NOVEMBER 14, 2012 AT 23:54

ராஜீவ் படுகொலை – தூக்குக்கயிற்றில் நிஜம்’ என்னும் தலைப்பில் நண்பர் திருச்சி வேலுசாமி எழுதியுள்ள நூல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப்போகும் நூலாகும். ஏற்கெனவே தமிழக மெங்கும் பல நூறு கூட்டங்களில் அவர் தெரிவித்த உண்மைகளையே இப்போது நூலாக பதிவு செய்திருக்கிறார்.

Book-advt1-723x1024.jpg

Book-advt2-723x1024.jpg

Book-advt3-723x1024.jpg

Book-advt4-723x1024.jpg

http://thaaitamil.com/?p=38439

  • தொடங்கியவர்

இந்த நூலுக்கு பழ. நெடுமாறன் எழுதிய முன்னுரை இங்கே தரப்படுகிறது, இந்த முன்னுரையில்…

[size=2][size=4]01. ரஜீவ் கொலை நடப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே யாசர் அரபாத்தின் பிரதிநிதி ரஜீவ் காந்தியை சந்தித்து ஆபத்தை சொல்லிவிட்டார், ஆனால் அதன் பின் என்றுமே அதுபற்றி அரபாத்திடம் இந்தியா அதிகாரிகள் வினவவில்லை ஏன்..?[/size][/size]

[size=2][size=4]02. ரஜீவ் அல்லது சோனியா இருவரில் ஒருவர் இந்திராகாந்தி கொலையுடன் சம்பத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது, இது பற்றி ஆர்.கே.தவானுக்கு தெரியும் ஆனால் அவர் விசாரிக்கப்படவில்லை.[/size][/size]

[size=2][size=4]03. சுப்பிரமணியசாமியும், சுந்தரசாமியும் கொலை நடந்த நேரம் எங்கேயிருந்தார்கள் என்ற விபரம் அடங்கிய பைல் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் காரியாலயத்தில் இருந்து களவு போனது எப்படி..?[/size][/size]

[size=2][size=4]04. காலஞ்சென்ற இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசவுக்கும் இதில் சம்மந்தம் இருக்கலாம் என்று சந்தேகம் உண்டு அவரிடம் இதுபற்றி கேட்கப்படாதது ஏன்..?[/size][/size]

[size=2][size=4]05. இலண்டன் விமான நிலையத்தில் காணாமல் போன பைலை தொலைத்தவர் விசாரிக்கப்படாதது ஏன்..?[/size][/size]

http://www.alaikal.com/news/?p=117140

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை வழக்கில் தற்போதும் ஆபத்துப் படி பெறும் நீதிபதிகள்

சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முடிந்து 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் பணியாற்றிய மாவட்ட நீதிபதிகளும் நீதமின்ற ஊழியர்களும் ஆபத்துப்படி என்ற பெயரில் 30 சதவீத கூடுதல் ஊதியத்தை தொடர்ந்து பெற்று வருகின்றனர்.

சென்னையல் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றம் 1 இல் தான் 21 ஆண்டுகளுக்கு முன் இந்க்த கொலை வழக்கு விசாரணைக தொடங்கியது. 13 ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் விசாரணை காலத்தில்இந்த வழக்கின் முக்கியத்துவம் மற்றும் ஆபத்துகள் கருதில் இதில் பணியாற்றியவர்களுக்கு ஊதியத்துடன் கூடுதலாக 30 சதவீதம் ஆபத்துப டி தொகை வழங்கப்பட்டு வந்தது. இப்போது விசாரணை எல்லாம் முடிந்து வழக்கே முடிந்து விட்டாலும் இந்த ஆபத்து படி மட்டும் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றிய சுமார் 12 ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளும் ஓய்வு ö பற்ற ஊழியர்களும் தங்களது ஓய்வு தொகையுடன் இந்த 30 சதவீத கூடுதல் தொகையை பெற்று வருகின்றனர்.

இந்த நீதிமன்றத்தில் ஒரே ஒரு நாள் பணியாற்றயிருந்தாலும் கூட ஆபத்துபடி கிடைக்கும் என்பதால் இதில் பணியாற்ற பெரும் போட்டியை நடந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

http://thinakkural.com/index.php?option=com_content&view=article&id=17078:2012-11-05-06-55-24&catid=56:india&Itemid=460

இவ்வளவு இருந்தும்.. புலிகள் நினைத்திருந்தால் இந்தியாவை கலக்கி குடித்திருக்காலாம்.. ஏன் அதை செய்யாமல்.. எவ்வளவு அடித்தாலும் மௌனம் சாதித்தார்கள்?

சொல்கிறேன் கேளுங்கள்.. புலிகள் இயக்கமே ஒரு நாடகம். இது புலிகளின் முதல் முப்பது பேர் சங்கத்தினால் முன்னெடுத்து செல்லப்பட்டது. இதனால்தான் முன்னணி தளபதிகளுக்கே என்ன நடந்தது எப்படி நடந்தது எனத்தெரியாது.. கருணா தப்பியது, சூசை தப்ப முயன்றது போன்ற நிகழ்வுகள் எல்லாம் இதனால்தான். இந்தியாவினால் தயாரித்து நடத்தப்பட்ட ஒரு பாரிய நாடகத்தை சீனா முடித்து வைத்தது.

எது நினைப்பு சரியெண்டால் இது யாழினால் தணிக்கை செய்யப்படும்.. :icon_mrgreen: :icon_mrgreen:

  • தொடங்கியவர்

[size=5]conspiracy theory : [/size][size=4]வரும் காலத்[/size] [size=4]தில் இராகுல் கூட கொலை செய்யப்படலாம். எந்த இனம் அழிக்கப்படுமோ :icon_idea:[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு இருந்தும்.. புலிகள் நினைத்திருந்தால் இந்தியாவை கலக்கி குடித்திருக்காலாம்.. ஏன் அதை செய்யாமல்.. எவ்வளவு அடித்தாலும் மௌனம் சாதித்தார்கள்?

சொல்கிறேன் கேளுங்கள்.. புலிகள் இயக்கமே ஒரு நாடகம். இது புலிகளின் முதல் முப்பது பேர் சங்கத்தினால் முன்னெடுத்து செல்லப்பட்டது. இதனால்தான் முன்னணி தளபதிகளுக்கே என்ன நடந்தது எப்படி நடந்தது எனத்தெரியாது.. கருணா தப்பியது, சூசை தப்ப முயன்றது போன்ற நிகழ்வுகள் எல்லாம் இதனால்தான். இந்தியாவினால் தயாரித்து நடத்தப்பட்ட ஒரு பாரிய நாடகத்தை சீனா முடித்து வைத்தது.

எது நினைப்பு சரியெண்டால் இது யாழினால் தணிக்கை செய்யப்படும்.. :icon_mrgreen: :icon_mrgreen:

உங்கட நினைப்பு பிழை போல இருக்கு :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு இருந்தும்.. புலிகள் நினைத்திருந்தால் இந்தியாவை கலக்கி குடித்திருக்காலாம்.. ஏன் அதை செய்யாமல்.. எவ்வளவு அடித்தாலும் மௌனம் சாதித்தார்கள்?

சொல்கிறேன் கேளுங்கள்.. புலிகள் இயக்கமே ஒரு நாடகம். இது புலிகளின் முதல் முப்பது பேர் சங்கத்தினால் முன்னெடுத்து செல்லப்பட்டது. இதனால்தான் முன்னணி தளபதிகளுக்கே என்ன நடந்தது எப்படி நடந்தது எனத்தெரியாது.. கருணா தப்பியது, சூசை தப்ப முயன்றது போன்ற நிகழ்வுகள் எல்லாம் இதனால்தான். இந்தியாவினால் தயாரித்து நடத்தப்பட்ட ஒரு பாரிய நாடகத்தை சீனா முடித்து வைத்தது.

எது நினைப்பு சரியெண்டால் இது யாழினால் தணிக்கை செய்யப்படும்.. :icon_mrgreen: :icon_mrgreen:

உங்களுக்கும் கனவிசயம் தெரியும் போலை கிடக்கு.......இதுகளை எப்பவோ சொல்லியிருக்கலாமே?

உங்களுக்கும் கனவிசயம் தெரியும் போலை கிடக்கு.......இதுகளை எப்பவோ சொல்லியிருக்கலாமே?

புலிகள் இயக்கம் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்குக் காரணமே இரகசியக் காப்புத்தான். அதை எப்போதும் பேணுவது தமிழீழ விடிவிற்கு நல்லது. ஆகவே, அவர்கள் மௌனம் கலையும்வரை எம்மால் முடிந்தவரை எமது கடமைகளை முன்னெடுத்துக் கொண்டு நாமும் மௌனமாக இருப்போம்.

இவ்வளவு இருந்தும்.. புலிகள் நினைத்திருந்தால் இந்தியாவை கலக்கி குடித்திருக்காலாம்.. ஏன் அதை செய்யாமல்.. எவ்வளவு அடித்தாலும் மௌனம் சாதித்தார்கள்?

சொல்கிறேன் கேளுங்கள்.. புலிகள் இயக்கமே ஒரு நாடகம். இது புலிகளின் முதல் முப்பது பேர் சங்கத்தினால் முன்னெடுத்து செல்லப்பட்டது. இதனால்தான் முன்னணி தளபதிகளுக்கே என்ன நடந்தது எப்படி நடந்தது எனத்தெரியாது.. கருணா தப்பியது, சூசை தப்ப முயன்றது போன்ற நிகழ்வுகள் எல்லாம் இதனால்தான். இந்தியாவினால் தயாரித்து நடத்தப்பட்ட ஒரு பாரிய நாடகத்தை சீனா முடித்து வைத்தது.

எது நினைப்பு சரியெண்டால் இது யாழினால் தணிக்கை செய்யப்படும்.. :icon_mrgreen: :icon_mrgreen:

காயமே வெறும் பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா

  • தொடங்கியவர்

seemanraji.jpg

[size=2][size=4]எண்ணற்ற வினாக்களை எழுப்பும் மதிப்புமிக்க நூல்![/size][/size]

[size=2][size=4]முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை தமிழ்நாட்டின் அரசியலையும், ஈழத்தின் நம் சொந்தங் கள் நடத்திய நியாயமான, தீரமிக்க விடுதலைப் போராட்டத்தையும் பெரிதும் பாதித்த ஒரு நிகழ்வாகும். [/size][/size]

[size=2][size=4]தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இராஜீவ் காந்தியை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டி, அதை இந்திய மண்ணில் நிறைவேற்றியது என்று இராஜீவ் கொலையை புலனாய்வு செய்த மத்திய புலனாய்வுக் கழகம் கூறியது, அதனை நீதிமன்றங்கள் ஏற்று தீர்ப்பும் அளித்தன. அதன் விளைவே நமது தம்பிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி கடந்த 21 ஆண்டுகளாக சிறைக்கொட்டடிகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.[/size][/size]

[size=2][size=4]இராஜீவ் காந்தியை உண்மையில் சதித்திட்டம் தீட்டி கொன்றவர்கள் யார்? ஏன் கொன்றார்கள்? அதனால் அவர்கள் அடைந்த இலாபம் என்ன? என்கிற கோணத்தில் சிந்தித்தவர்களுக்கெல்லாம் எட்டாத பல உண்மைகளை தான் பெற்ற நேர்முகமான அனுபவங் களின் வாயிலாக, அன்றிருலிருந்து இன்று வரை தமி ழக மக்களிடம் துணிச்சலாக எடுத்துக் கூறி வருபவர் அண்ணன் திருச்சி வேலுசாமி அவர்கள். [/size][/size]

[size=2][size=4]இராஜீவ் காந்தியின் கொலை பற்றியும், அதன் பின்னுள்ள அரசி யலைப் பற்றியும், சதியைப் பற்றியும் பேசுவதற்கே பலரும் அஞ்சிய காலகட்டத்தில், இராஜீவ் கொலையில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்களின் முகங்களை தமிழ்நாட்டின் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக்காட்டினார் வேலுசாமி அவர்கள்.[/size][/size]

[size=2][size=4]இராஜீவ் கொலையின் முக்கிய சூத்திரதாரிகளான சந்திராசாமி, அரசியல் தரகர் சுப்ரமணியம் சாமி ஆகியோரின் பங்கு பற்றி இந்தியாவின் பல நாளிதழ்களும் ஊடகங்களும் அவ்வப்போது எழுதினாலும் அண்ணன் வேலுசாமி மட்டுமே அதனை தொடர்ச்சியாக, உண்மையின் குரலாய் மக்களிடம் பேசிவந்தார். ஜனதா கட்சியின் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும், இந்திய அரசியலில் சக்திமிக்க அரசியல்வாதியாகவும் திகழ்ந்த சுப்ரமணியசாமியுடன் நெருங்கிப் பழகி, அவருடைய நம்பிக்கையை பெற்றவராக இருந்தும், இராஜீவ் கொலையில் சாமிக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் முளைவிட்ட நாள் முதல், அவருடன் தனக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அண்ணன் வேலுசாமி விலைபேசியிருப்பாரேயானால் இன்றைக்கு வியத்தகு நிலையில் மிகுந்த அதிகாரமிக்க மத்திய அமைச்சராகவே உலா வந்திருப்பார்.[/size][/size]

[size=2][size=4]ஆனால், தனது வாழ்விற்கே அச்சுறுத்தலாகும் அளவிற்கு ஆபத்து நிறைந்த அந்த கொலைச் சதியைப் பற்றி, தான் அறிந்த உண்மைகள் அனைத்தையும் மக்கள் மத்தியில் சொல்வது என்று முடிவெடுத்து, தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரமாகச் சென்று விரிவாக பேசியது மட்டுமின்றி, ஜெயின் ஆணையத்தின் முன் வாக்குமூலம் தாக்கல் செய்து உண்மையை உலகிற்குப் பறைசாற்றினார்.[/size][/size]

[size=2][size=4]ஜெயின் ஆணையத்தில் வேலுசாமி அவர்களின் வாக்குமூலமும் சுப்ரமணிய சுவாமியை அவர் குறுக்கு விசாரணை செய்தததும் அவருடைய வினாக்களுக்கு பதிலளிக்க முடியாமல், வியர்வை மழையில் சுப்ரமணியசாமி நனைந்து நின்றதும், இராஜீவ் கொலையில் சதித் திட்டம் தீட்டியவர்கள் யாரென்பதை உலகம் உணர உதவியது. சுப்ரமணிய சாமிக்காக பேரம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும் இராஜீவை கொல்ல சதித்திட்டம் தீட்டியது ஜெயின் ஆணைய விசார ணையில் வெளிப்பட்ட பின்னரும் அவர்களை விசாரிக்க மத்திய புலனாய்வுக் கழகத்தின் சிறப்பு புலனாய்வுக் குழுத் தலைவர் டி.ஆர். கார்த்திகேயனின் உண்மை முகத்தை அன்றைக்கே கிழித்தெறிந்தவர் அண்ணன் வேலுசாமி அவர்கள்.[/size][/size]

[size=2][size=4]‘ராஜீவ் படுகொலை : தூக்குக் கயிற்றில் நிஜம்’ என்ற இந்த புத்தகத்தை படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. இந்தியாவைப் போன்றதொரு ஜனநாயக நாட்டில், அதன் முன்னாள் பிரதமரை, இந்த நாட்டிற்குள் இருந்தே சதி செய்து கொன்றுவிட்டு, இன்று வரை இந்திய அரசியலில் கம்பீரமாக வலம் வர முடியும் என்றால், இந்த நாட்டின் அரசியலும் அதிகாரமும் யாரால் இயக்கப்படுகிறது? சுப்ரமணியசாமியை அண்ணன் வேலுசாமி குறுக்கு விசாரணை செய்தபோது, அவர் வியர்வை மழையில் நனைந்த காட்சியை நேரில் பார்த்த இராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி முகம் சிவந்தார் என்று எழுதியுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]ஆனால் பின்னாளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, சுப்ரமணியசாமி மீது ஏன் வழக்குத் தொடரப்படவில்லை, இராஜீவ் கொலையில் அந்நிய சதி குறித்து ஆராய அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை அமைப்பு ஏன் அவரை விசாரணைக்கு உட்படுத்தவில்லை?[/size][/size]

[size=2][size=4]தமிழீழத்தின் மீது சிங்கள இனவெறியன் இராஜபக்ச தொடுத்த இனப் படுகொலைப் போருக்கு எல்லாவிதத்திலும் உதவி, ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக் காரணமாகயிருந்த, இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைத் தனது காலடியில் வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது கணவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர்கள் சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும்தான் என்று தெளிவாக தெரிந்த பின்னரும் அவர்களின் மீது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.[/size][/size]

[size=2][size=4]இப்படி எண்ணற்ற வினாக்களை எழுப்புகிறது அண்ணன் வேலுசாமி அவர்களின் இந்த மதிப்புமிக்க நூல். இப்படிப்பட்ட ஒரு நூலை வழங்கியதற்காக அண்ணன் வேலுசாமிக்கு தமிழினம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். எப்போதும் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்தப்புத்தகத்தை தவறாது வாங்கிப்படிக்க வேண்டுகிறேன்.[/size][/size]

[size=2][size=4]- செந்தமிழன் சீமான்[/size][/size]

http://www.alaikal.com/news/?p=117411

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.