Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விநாயகம் பிரான்ஸில் கைது :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விநாயகம் பிரான்ஸில் கைது :

17 நவம்பர் 2012

விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விநாயகம் பிரான்ஸ் காவற்துறையினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் பிரான்ஸ் வலையமைப்பின் தலைவரான ரீகன் என அழைக்கப்படும் பரிதியின் கொலை தொடர்பாகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாரீஸ் நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவில் உள்ள புலிகளின் வலையமைப்பில் விநாயகம் அணியினர் பலம் பொருந்திய அணியாக கருதப்படுகிறது. விநாயகம் 2009 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு சென்றதுடன் அங்கு புலிகளின் வலையமைப்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அதேவேளை கொலை செய்யப்பட்ட பரிதி நெடியவன் அணியின் முக்கிஸ்தர் எனக் கூறப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85510/language/ta-IN/article.aspx

  • Replies 100
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பரிதி கொலை வழக்கில் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான விநாயகம் கைது?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான விநாயகம், பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள நாடேடு செய்தி வெளியிடப்பட்டுள்ளது..

புலிகளின் மற்றுமொரு சிரேஸ்ட தலைவரான பரிதி எனப்படும் றீகன் பிரான்சில் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் ஒரு பிரிவிற்கு விநாயகம் தலைமை வகிக்கின்றார். இன்னுமோர் பிரிவிற்கு நெடியவன் தலைமை வகிக்கிறார்.

பிரான்ஸின் பாரிஸ் பொலிஸார் விநாயகத்தை கைது செய்துள்ளனர். பரிதி கொலையுடன் இலங்கை அரசாங்கத்தை தொடர்புபடுத்த புலிகள் முயற்சித்ததாக சிங்கள நாடேட்டு செய்தி தெரிவித்துள்ளது. பரிதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்றாம் நபர் விநாயாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.myoor.com...ayakam-arrested

[size=4]இந்த செய்தி உண்மையானது மாதிரி தெரியவில்லை. ( பிரான்ஸ் கூகிள் இல் தேடினேன் ) [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி சிங்களப்பத்திரிகை தான் வெளியிட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. திசை திருப்ப முயல்கிறது அரசாங்கம்

இது போன்ற முடிவைத்தான் இந்த கொலையில் ஏற்படுத்துவார்கள்.

இது போன்ற முடிவைத்தான் இந்த கொலையில் ஏற்படுத்துவார்கள்.

[size=4]அது உண்மையில்லாமல் அப்படி முடித்தால் அது பிரெஞ்சு நாடு தனக்குத்தானே ஆபத்தை தேடும் செயலாக இருக்கும். [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேணல் பரிதி படுகொலை – கோத்தவின் விநாயகம் பிரான்ஸில் கைது.

சிறீலங்கா | ADMIN | NOVEMBER 17, 2012 AT 12:12

புலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களை பிரிவு படுத்தி தேசவிடுதலையை மழுங்கடிக்கவும் தேசிய மாவீரர் நாளையும் குழப்புவதற்கும் கோத்தபாயவினால் தயார்படுத்தப்பட்டு தலைமைசெயலகம் என்றபெயரில் உருவான குழுவின் தலைவரான விநாயகம் (கதிர்காமத்தம்பி அறிவழகன்) பிரான்ஸில் கைது .

கேணல் பரிதி எனப்படும் றீகன் படுகொலை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் விநாயகம் கைது வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. பரிதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்றாம் நபர் விநாயாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் மேலும் பலபேர் கைது செய்யப்பட்டுளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

இவரது மனைவியும், பிள்ளையும் வன்னியில் படையினரால் பாதுகாப்பில் திருகோணமலையில் உள்ளார்கள். இவரது தலைமையில் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைசெயலகம் என்று இயங்கிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .

http://thaaitamil.com/?p=38602

புலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களை பிரிவு படுத்தி தேசவிடுதலையை மழுங்கடிக்கவும் தேசிய மாவீரர் நாளையும் குழப்புவதற்கும் கோத்தபாயவினால் தயார்படுத்தப்பட்டு தலைமைசெயலகம் என்றபெயரில் உருவான குழுவின் தலைவரான விநாயகம் (கதிர்காமத்தம்பி அறிவழகன்) பிரான்ஸில் கைது .

யாரைத்தான் நம்புவது!

  • கருத்துக்கள உறவுகள்

கதைய முதல்ல இருந்து சொல்லுங்க அண்ணே !!

  • கருத்துக்கள உறவுகள்

கொலை குற்றத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திக்கு இடம் இல்லை அனால் விசாரணை செய்கின்ற அதிகாரிகள் இந்த குழு மோதல்களை வைத்து இலங்கை புலணாய்வு பிரிவு கூட இதில் சமந்தப்பட்டு இல்லை வேறு எவரும் இதில் சமந்தப்பட்டு இருக்க கூடிய சாத்தியங்களையும் விசாரிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் தேச விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த இருவர்.. தமிழர்கள்.. பலியிடப்பட்டுள்ளார்கள்..! இது சிங்களத்துக்கு இன்னொரு இராஜதந்திர வெற்றி..! தொடர்ந்து அழிவது நாமே.. அவர்கள் அல்ல.

இதனை சிந்திக்க முடியாதவர்களாய் இன்னும் மக்கள்...! அதுவும் இந்த மாவீரர் நினைவு காலத்தில்.. இவ்வாறான துன்பியல்களை சிங்களமும் சர்வதேசமும் எம்மிடையே விதைக்க காரணங்கள் உண்டு. அவற்றை ஆராயாமல்.. எமக்கிடையே பிளவுகளையே அதிகரிக்கத்துக் கொண்டு நிற்கிறார்கள் இன்னொரு சதிகாரக் கூட்டத்தினர். சிங்களத்துக்கு மறைமுக சேவகம் செய்பவர்கள். இவை எல்லாம்.. செய்த குற்றங்களை மறைக்க.. சிங்களம் போடும் நாடகங்களோ.. யார் அறிவார்..??! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் தேச விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த இருவர்.. தமிழர்கள்.. பலியிடப்பட்டுள்ளார்கள்..! இது சிங்களத்துக்கு இன்னொரு இராஜதந்திர வெற்றி..! தொடர்ந்து அழிவது நாமே.. அவர்கள் அல்ல.

இதனை சிந்திக்க முடியாதவர்களாய் இன்னும் மக்கள்...! அதுவும் இந்த மாவீரர் நினைவு காலத்தில்.. இவ்வாறான துன்பியல்களை சிங்களமும் சர்வதேசமும் எம்மிடையே விதைக்க காரணங்கள் உண்டு. அவற்றை ஆராயாமல்.. எமக்கிடையே பிளவுகளையே அதிகரிக்கத்துக் கொண்டு நிற்கிறார்கள் இன்னொரு சதிகாரக் கூட்டத்தினர். சிங்களத்துக்கு மறைமுக சேவகம் செய்பவர்கள். இவை எல்லாம்.. செய்த குற்றங்களை மறைக்க.. சிங்களம் போடும் நாடகங்களோ.. யார் அறிவார்..??! :icon_idea:

வணக்கம் நெடுக்கு

எமக்குள் சில ஊடுருவல் இருப்பதாகவும் அவையே எம்மிடையேயான பிளவுகளுக்கு காரணம் எனவும் தற்பொழுது சிலரால் விதைக்கப்பட் ட நஞ்சு எம்மையே விழுங்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

சிலரது குடும்பங்கள் அங்கு பிணை வைக்கப்பட்டு இவர்கள் இங்கு இறக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கதைகள் உண்டு.

அப்படி ஏதாவது பயமுறுத்தல் இருந்தால்

பிரெஞ்சு காவல்துறையிடம் இவர்கள் உண்மையை சொல்லவேண்டி வரலாம்.

அதற்கு இது போன்ற விசாரணைகளை எம்மால் தற்போதைய சூழலில் செய்ய முடியாதபோது இது போன்ற பிரெஞ்சுப்பொலிசாரின் விசாரணைகள் நன்மை தரலாம் என்பதே எனது அவா.

அப்பாவிகள் எவரையும் பிரெஞ்சு காவல்துறை பலியிடாது என்பது எனது நம்பிக்கை.

இது பொய்யான செய்தி என்றே தெரிகிறது. சிறிலங்கா தூதரகத்தின் மீதான குற்றச்சாட்டை திசை திருப்ப இந்தச் செய்தி பரப்பப்பட்டிருக்கக் கூடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரது மனைவியும், பிள்ளையும் வன்னியில் படையினரால் பாதுகாப்பில் திருகோணமலையில் உள்ளார்கள்.

இவர்களை பணயம் வைத்தேயும் நடத்தியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பலநோக்கங்கள் இருக்கலாம் ...... இதனை தமிழகர்கள் ஆகிய நாங்கள்தான் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்படவேண்டும் ....... இந்த பிரச்சனையை வைத்து தமிழர்களிற்குள் ஏற்படும் முறன்பாடுகள் எதிரியின் நோக்கங்களை நிறைவேற்றுவதாக அமையக்கூடாது என்பதே எனது கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விநாயகம்

இவர்தான் கதிர்காமத்தம்பி என்ற புனைபெயரில் ஆக்கங்கள். கட்டுரைகல் எழுதுபவரா?

  • கருத்துக்கள உறவுகள்

கொலையை யார் செய்திருந்தாலும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.இந்தச் செய்தி உண்மையானால்(விநாயகம் கைது செய்யப்பட்டது)விநாயகம் தன் குடும்பத்தினருக்கு உயிராபத்து இருந்தால் அதை பிரெஞ்சு காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.2 பேருமே விடுதலைக்காகப் போராடியவர்கள்.இந்தச் சந்தர்பத்தைப் பாவித்து புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு சிங்கள அரசு கட்டாயம் முயலும்.புலம் பெயர் தமிழர்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக நிற்க வேண்டிய காலகட்டம் இது.

[size=5]இந்தச் செய்தி பொய்யானது என்றே நினைக்கிறேன். இலண்டனில் இருந்துதான் இந்தச் செய்தி பரப்பப்பட்டது. என்னை தொடர்புகொண்டும் பலர் கேட்டார்கள்.[/size]

[size=5]பிரெஞ்சு காவல்துறை வட்டாரத்திலே அல்லது பிரெஞ்சு ஊடக வட்டாரத்திலோ இதை உறுதிப்படுத்த முடியவில்லை.[/size]

[size=5]ஆனால் விநாயகத்தை கைது செய்யும்படி பாரிசிலுள்ள பலர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கிடைத்தது.ஒருவர் தொடர்பாக பலர் முறைப்பாடு செய்தால் அவரை காவல்துறை அழைத்து விசாரிப்பது வழமையான நடைமுறை. ஆனால் விநாயம் விடயத்தில் அவ்வாறு நடந்ததாகவும் தெரியவில்லை[/size]

[size=5]இங்கே குழுவாத நலன்களை முன்வைத்து செய்திகளுக்கு தலை கால்வைத்து வியாபாரம் செய்ய பலரும் முயல்கிறார்கள்.[/size]

[size=5]தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை கலைக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் பிரான்சின் மேல்முறையீட்டு நீதிமன்றம் சிபார்சு செய்தது.ஆனால் பிரெஞ்சு அரசாங்கம் அதை செய்யவில்லை.தற்போது விடுதலைபபுலிகளையும் அவர்களுக்கு சார்பான அமைப்புக்களையும் பிரெஞ்சு மண்ணில் செயற்பட அனுதிப்பது ஆயுத வன்முறைக்கும் குழு மோதல்களுக்கு இடமளிக்கும் என்ற கருத்து காவல்துறை மட்டத்திலும் அரசாங்க மட்டத்திலும் மேலோங்கியிருகக்pறது.[/size]

[size=5]இதைத்தான் இந்த வியாபாரிகள் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.[/size]

[size=5]விநாயகம் கைது செய்யப்பட்டால் அந்த தகவலை தந்த காவல்துறை வட்டாரம் எது? அதை வெளியிட்ட பிரெஞ்சு பத்திரிகை எது? என்ற தகவலை ஆதரபூர்வமாக வெளியிடவேண்டும். உதாரணமாக பாரிதியன் கொலையுடன் சம்பந்தப்பட்வர்கள் என்று கைது செய்ப்பட்ட இருவர் பற்றிய தகவலை லு பிகாரே லுபரிசியன் லு மொண்ட் ரிஎப் வண் தொலைக்காட்சி பிஎப்எம் ரிவி முதலான பெரும்பாலான அனைத்து பிரெஞ்சு ஊடகங்களும் வெளிட்டன.[/size]

[size=5]நான் பிரெஞ்சு காவல்துறையினர் செய்;தி தொடர்பு பிரிவை தொடர்பு கொண்டு கேட்டபோது இதுபற்றிய எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்றும் பொதுவாக ஒரு குற்றச்செயல் பற்றிய புலன்விசாரணையில் ஈடுபடும் காவல்துறை பிரிவினர் அது தொடர்பாக வெளிவரும் செய்திகள் அதை வெளியிடும் நிறுவனங்கள் தனிநபர்கள் பற்றிய தகவல்களை கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள் என்றும் தெரிவித்தனர்.[/size]

[size=5]ஏனவே தயவு செய்து செய்தி எழுதும் போது அந்த செய்தியை தெரிவித்தவர் யார்? எங்கே? எப்போது? என்ற விபரங்களை குறிப்பிட்டு எழுதுங்கள்.வதந் 'தீ' எமது இனத்தின் ஒற்றுமையை பொசுக்கிவிடும் என்பதை மறக்க வேண்டாம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் மாவீரர் நாளைக்குழப்ப 2 தரப்பும் முயல்வதாகத் தெரிகிறது.

[size=5]இந்தச் செய்தி பொய்யானது என்றே நினைக்கிறேன். இலண்டனில் இருந்துதான் இந்தச் செய்தி பரப்பப்பட்டது. என்னை தொடர்புகொண்டும் பலர் கேட்டார்கள்.[/size]

[size=5]பிரெஞ்சு காவல்துறை வட்டாரத்திலே அல்லது பிரெஞ்சு ஊடக வட்டாரத்திலோ இதை உறுதிப்படுத்த முடியவில்லை.[/size]

[size=4]கைதான [/size][size=4]இருவர்கள் [/size][size=4]பற்றிய தகவல்கள் ஏதும் உள்ளனவா? நன்றிகள். [/size]

Edited by akootha

[size=3]தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் தற்போது இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்குவதாக சந்தேகிக்கப்படுபவரும் ,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்று தன்னிச்சையாக அறிவித்து புலம்பெயர் நாடுகளில் பல குழப்பங்களை ஏற்படுத்திவரும் அணியின் தலைவராக கருதப்படும் விநாயகம் என்பவர் கேணல் பரிதி அவர்களின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசிடம் சரணடைந்து அல்லது சிறீலங்கா ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பின் அவர்களுடன் சேர்ந்தியங்கிவரும் குறுகிய சில முன்னாள் போராளிகளை கொண்டதே இந்த தலைமைச் செயலகம் என்றும் அதன் தலைவராகவே விநாயகம் என்பவர் செயற்பட்டு வந்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்,கடந்த கிழமை பிரான்ஸில் சுட்டு கொலைசெய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளரான கேணல் பரிதி அவர்களின் கொலையுடன் தொடர்பு படுத்தியே விநாயகம் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் காவல்துறையினரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விரிவான செய்திகளை ஈழதேசத்தில் எதிர்பாருங்கள்.[/size]

மூலம்: http://eeladhesam.co...chten&Itemid=50

Edited by நிழலி

சிலர் யாழில் யார் யாரின் வீடுகள் சோதிக்க படுகின்றன என்று அவலாக தேடுகிறார்கள்.

இதன் கருத்து விநாயகம் கைது செய்யப்பட வேண்டும் என்று பலர் ஆவலாக இருக்கின்ற்னர். இப்போதைக்கு பிரான்சு பத்திரிகைகளில் வருவதை மட்டும் நம்புவதுதான். சரி.

அவசரமாக காட்டிக்கொடுப்பதற்கு விநாயகத்திற்கு ஒரு காரணம் இருக்கென்று முடிவெடுக்க கூடாது.

[size=1]

[size=4]குழம்பிய குட்டையிலும் மீன் பிடிக்கலாம்.[/size][/size][size=1]

[size=4]குட்டையை குழப்பியும் மீன் பிடிக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]குழம்பிய குட்டையை மேலும் மேலும் குழப்பியவண்ணமும் இருக்கலாம். [/size][/size]

[size=1][size=4]குழம்பிய குட்டையிலும் மீன் பிடிக்கலாம்.[/size][/size]

[size=1][size=4]குட்டையை குழப்பியும் மீன் பிடிக்கலாம். [/size][/size]

[size=1][size=4]குழம்பிய குட்டையை மேலும் மேலும் குழப்பியவண்ணமும் இருக்கலாம். [/size][/size]

விட்டில் தானாக தேடிப்போய் நெருப்பில் விழுவது.

அரசு பாவிக்கும் முறைகளை நாம் ஏன் திருப்பிவிடக்கூடாது?

Edited by மல்லையூரான்

விட்டில் தானாக தேடிப்போய் நெருப்பில் விழுவது.

அரசு பாவிக்க முறைகளை நாம் ஏன் திருப்பிவிடக்கூடாது?

[size=1]

[size=4]பணம், பலம், ஒற்றுமை .. இவற்றை விட அரசு என்ற கவசம். [/size][/size][size=1]

[size=4]சில விசயங்களை செய்யலாம், ஆனால் இரண்டாவது ஆளுக்கும் தெரியக்கூடாது. [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.