Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் முதல் செயற்கைக்கோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

chaina.jpg

[size=2][size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கனவிற்கிணங்க உருவாகிவரும் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது.

மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில் ஏவப்படவுள்ளன.

சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுதினம் ஏவப்படவுள்ள இந்த சற்றலைட் ஆனது 2013ஆம் ஆண்டு ஜூன் மாத்தின் பின்னர் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கான கட்டுப்பாட்டு மைய வேலைகள் கண்டி - பல்லேகலவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரும் வியாழன் முதல், தனக்கென சொந்தமாக தொலைத்தொடர்பு சற்றலைட் வைத்திருக்கும் நாடுகளில் 45ஆவது இடத்தினையும் ஆசியாவில் 3ஆவது இடத்தினையும் இலங்கை பெறவுள்ளமை சிறப்பானதாகும்.

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சொந்த தொலைத்தொடர்பு சற்றலைட் உள்ள நாடு என்ற பெருமை இலங்கையைச் சாரவுள்ளது.

சீன ஏவுதளத்தில் தயார்நிலைப்படுத்தப்படும் இலங்கையின் புதிய தொலைத்தொடர்பு சற்றலைட் படத்தினையே இங்கு காண்கிறீர்கள். (படங்கள் - சுப்ரீம்செட்.கொம்)

01(741).jpg

02(601).jpg

03(404).jpg

04(281).jpg

05(192).jpg

06(129).jpg

07(91).jpg

001(49).jpg

002(28).jpg

003(12).jpg[/size][/size]

[size=2][size=4]http://tamil.dailymi...0-10-49-08.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சைக்கிள் செஞ்சு வித்தமாதிரி, இனிமேல் இலங்கை பெயரில் சீனாவின் ஒரு உளவு செய்மதி வலம்வரக் காத்திருக்கிறது.. :D

[size=4]சைனா சட் என்று சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கு.[/size]

[size=4]அப்பே பாசாவை சீனருக்கு தெரியாது போலும். [/size]

[size=4]அப்போ இதில் எது மணிவண்ணன் என்ற தொழில் அதிபர் கனவு காணும் சுப்பசட்? அவர் கண்பது நைட்மெயாரா?[/size]

[size=4](முன்வளம் திறக்கும் விமானம் அமெரிக்காவின் சீ-17 என்று நினைக்கிறேன்-ரூசிய பெயரில் இருக்கிறது. அது ஏன் இங்கே என்று யாருக்காவது தெரியுமா?)[/size]

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சொந்த தொலைத்தொடர்பு சற்றலைட் உள்ள நாடு என்ற பெருமை இலங்கையைச் சாரவுள்ளது.

கூடவே அணுஆயுதங்களையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சொந்தமாக வைத்திருந்தால் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் சம பலத்தை கொண்டநாடு என்ற பெருமையும் சிறிலங்காவை சேரும் ..... :D

வரும் வியாழன் முதல், தனக்கென சொந்தமாக தொலைத்தொடர்பு சற்றலைட் வைத்திருக்கும் நாடுகளில் 45ஆவது இடத்தினையும் ஆசியாவில் 3ஆவது இடத்தினையும் இலங்கை பெறவுள்ளமை சிறப்பானதாகும்.

பிறகென்ன என்னும் கொஞ்சம் முயற்சித்தால் முதலாவது நாடு என்ற பெருமையும் தட்டிக்கொள்ளலாம். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த IL-76TD-90VD ரக சரக்கு விமானம் ரஸ்ய விமான கம்பனியான VOLGA-DNEPR GROUP க்கு சொந்தமானது.

இந்த IL-76TD-90VD ரக சரக்கு விமானம் ரஸ்ய விமான கம்பனியான VOLGA-DNEPR GROUP க்கு சொந்தமானது.

நன்றி வணங்காமுடி. ரூசியர்கள் வியாபாரரீதியில் வெற்றி அடையாவிடாலும் நன்றாக விமானம் கட்டுவார்கள். நான் ருசியர்களின் antonov 225 சில படங்களைப் பார்த்து அது உண்மையா என சந்தேகப்படுவதுண்டு.

antonov225faci1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியாக இருந்தாலும் ஏதாவது பக்கத்து வீட்டில் விழுந்து விடாத விடத்து பாராட்டுவம்... :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இந்தியா??????????????????

antonov225faci1.jpg

இதென்ன பூராயமபா?

இதென்ன பூராயமபா?

இந்த படம் photoshop ஆ உண்மையா தெரியவில்லை. Antonov-225 என்று தேடினால் இந்த படம் வருகிறது.

ஆனால் Antonov-225 தானாம் உலகின் மிகப்பெரிய விமானம். 1980 களில் கட்டப்பட்டது. மேற்குநாடுகள் விமானத் தளங்களை மாற்ற மறுத்து இதை வியாபார ரீதியில் தலை எடுக்கவிடாமல் செய்த்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படம் photoshop ஆ உண்மையா தெரியவில்லை. Antonov-225 என்று தேடினால் இந்த படம் வருகிறது.

ஆனால் Antonov-225 தானாம் உலகின் மிகப்பெரிய விமானம். 1980 களில் கட்டப்பட்டது. மேற்குநாடுகள் விமானத் தளங்களை மாற்ற மறுத்து இதை வியாபார ரீதியில் தலை எடுக்கவிடாமல் செய்த்துவிட்டார்கள்.

உது போட்டோ சொப் படம். ஒரு இறக்கையில் மூன்று வீதம் படி மொத்தம் ஆறு இயந்திரங்கள் மாட்டுமே இந்த AN 225 வகை விமானங்களுக்கு உண்டு.

cartoon-of-the-day-22_11-600-1.jpg

சைனா சட் கிளம்பவில்லை என்று கேள்வி. 5 நாட்களுக்கு தொழில் நுட்பப்பிரச்சனையாம்.

[size=5]The scheduled launch of the communication satellite, a joint venture of SupremeSAT(Pvt)Ltd and China’s state owned CGWIC has been delayed by five days due to the weather condition, space system, engineer Rohitha Rajapaksa told Daily mirror.[/size]

[size=5]http://www.dailymirror.lk/news/23672-launch-of-satellite-delayed.html[/size]

[size=5] [/size][size=5]மகிந்தாவின் ஒரு மகன் "விண்வெளி பொறியியலார்" :wub:[/size]

[size=5]இன்று திகதி 22 . இன்னும் ஐந்து நாட்கள் பிந்தினால், 22+ 5 = 27 ! [/size]

[size=5]ஏவப்படும் செய்மதி நாட்டின் இறையாண்மைக்கும் வலய நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்: திஸ்ஸ[/size]

[size=4]இலங்கை வான் பரப்பில் உள்நாட்டு தேசியக் கொடியுடன் காணப்படும் சீன செய்மதி இலங்கையின் அனைத்து உள்ளக இரகசியங்களையும் பெற்று வருகின்றது. இது நாட்டின் இறையாண்மைக்கும் வலய நாடுகளின் பாதுகாப்புகளுக்கும் அச்சுறுத்தல் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். [/size]

[size=4]நாட்டில் பொது மக்களின் பிரச்சினைகள் புறம் தள்ளப்பட்டுள்ளது. ஊடகங்கள் அரசியல் மயமாக்கப்பட்டமையினால் உண்மையான தகவல்கள் மக்களிடையே போவதில்லை எனவே பொது மக்களின் நலன் கருதி ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பாடல் செயலணியொன்றை அமைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.தே.க. வின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விஷேட நிகழ்ச்சியின் போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையிள் அனைத்து வளங்களையும் இன்று வெளிநாட்டவர்களுக்கே அரசு விற்றுள்ளது. குறிப்பாக சீனாவிற்கு நிலத்தை விற்றும் போதாது என்று வானத்தையும் சேர்த்து அரசாங்கம் விற்பனை செய்துள்ளது.

சர்வதேச சட்டத்தின் படி ஒரு நாட்டில் வான் பரப்பில் செய்மதி அந்நாட்டு அரசாங்கத்தினால் அனுப்ப முடியும் ஆனால் அரசாங்கம் தனக்குள்ள உரிமையை சீனாவிற்கு விட்டுக் கொடுத்து சீனாவின் செய்மதியை இலங்கை வான் பரப்பில் இலங்கை தேசியக் கொடியுடன் அனுப்பி வைத்துள்ளது.

இதனால் உள்நாட்டு அனைத்து இரகசியங்களையும் சீனா பெற்றுக் கொண்டு வருகின்றது. நாட்டில் பொது மக்கள் இன்னோரன்ன பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர். ஆனால் ஏனைய நாட்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு செல்கின்றார் என்றார்.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=1756

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கோடிக்கணக்கில் கடனில் மூழ்கும் நிலையில் சற்றலைட்டின் அவசியம் தான் என்ன??

  • கருத்துக்கள உறவுகள்

செயற்கைக்கோள் ஏவுவது பிற்போடப்பட்டது

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012 08:39

விண்ணுக்கு ஏவப்படவிருந்த தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) ஐந்து நாட்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக பொறியியலாளர் ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாகவே செயற்கைக்கோளை ஏவுவதை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53206-2012-11-22-03-10-21.html

தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து இன்று வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

22112012-md-hr-2.jpg

[size=5]இன்று திகதி 22 . இன்னும் ஐந்து நாட்கள் பிந்தினால், 22+ 5 = 27 ! [/size]

நன்றி அகுத. இலங்கையை வேணுமென்று சுத்திவிட்டு, மாவீரர் நாள் கொண்டாடுகிறது சீனா. இல்லை என்றால் 5 நாள் கணக்கு தேவை இல்லை.

மேலும் இந்த சைனா சட் இந்தியாவுக்கு பெரிய ஆப்பு மாதிரி தெரிய வில்லை. பாகிஸ்த்தான் சீனா இரண்டுமே தேவையனவை இந்தியாக்கு மேலே வைத்திருக்கின்றன. அமெரிக்க விண்வெளிக்கலங்கள் நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், புலிகளின் கப்பல்கள் எங்கெங்கெல்லாம் சுத்துகின்றன என்பதை தொடர்ந்து படம் எடுத்திருந்தன. இது இலங்கையின் கடல் பரப்பு அமெரிக்காவின் கண்காணிப்பில் இருப்பதை காட்டியது. அண்மையில் சில விடையங்கள், இலங்கைக்கு பக்கத்தில், சர்வதேச நிலையங்களில், அமெரிக்கா தொழில்ப்படுவதை காட்டியிருந்தது. இதன் படி இங்கையை ஒட்டி அமெரிக்க நடமாட்டத்தை கவனிக்கதான் இந்த சைனா சட் போல தெரிகிறது.

இலங்கையின் பெயரில் சீனா இந்த மாதிரி வின்வெளிக்கலம் அனுப்புவதை பார்த்தால் GSP+ வைத்தும் சீனா தான் அமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி இலங்கையூடாக செய்கிறார்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கலில் சிக்கியது சிறிலங்காவின் செயற்கைக்கோள்.

சிறீலங்கா | ADMIN | NOVEMBER 22, 2012 AT 22:32

சிறிலங்காவின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபரின் இளைய மகனும், இந்தத் திட்டத்துக்கான பொறியியலாளருமான றோகித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மோசமான காலநிலை காரணமாக இந்த செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவும் செயற்பாடுகள் ஐந்து நாட்களுக்குப் பிற்போடப்பட்டுள்ளது.

செயற்கைக்கோளை ஏவும் புதிய நேரம் நாளை அறிவிக்கப்படும் என்று றோகித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த செயற்கைக்கோள் சிறிலங்கா நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சீனாவின் சீ சங் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவிருந்தது குறிப்பிடத்தக்கது

http://thaaitamil.com/?p=38990

இது இலங்கையினுடையது அல்ல, ஒவ்வொருனாட்டுக்கும் சடிளையிட்டுக்கான இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.

பெரியாநாடுகள் தக்கான ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை தாண்டியவுடன் சிரியனாடுகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் உரிமையைப் வேண்டி தாம் அனுப்புவார்கள்.

சீனாவிடம் பட்ட கடனைக்க் காட்டி சீனாவே இந்த இடத்தைப் பெற்றிருக்கும்.

புகல்ப்பிரியரான மகிந்த தாம் விடுவதாக வெடி கொளுத்துகிறார்.

இதைப் போன்று இன்னும் பல இந்த பிராந்தியத்தில் உள்ளதால் இதனால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை.

மொத்தத்தில படிக்காத சிங்கள காட்டுவாசிகளின் வாக்குகளை கவர முடியுமே தவிர வேற எதுக்கும் இது உதவப்போறதில்லை.

இப்போதெல்லாம் இது இலாபகரமானதுமில்லை, ஒன்றைச்செய்து விண்வெளிக்கு அனுப்புவதிலும் பார்க்க மலிவான விலையில் சேவைகளை வாங்க முடியும்.

விரும்பியவர்கள் இந்த இணைப்புக்குப் போனால் பல புதிய விடயங்களை அறியலாம்.

http://www.o3bnetworks.com/

சிங்களத்தின் கொழுப்பு மிக்க பாடல் நல்லவேளை செயற்கைக் கோள் இன்னும் கிளம்பவில்லை. சீனாக் காரன் விக்கிற மணிக் கூடே ஒழுங்கா ஓடாது இதில செயற்கைக் கோள் இலங்கைக்கு. மூன்சூறு தான் போக வழிய காணம் இதில விளக்குமாத்தை வேற காவின கதை

http://www.youtube.com/watch?v=JbWoxgnDmis

[size=4]ஆம், பல தனியார் நிறுவனங்களே, குறிப்பாக தொலைபேசி நிருவனங்கள், தமது சொந்த செய்மதி கலங்களை அனுப்பியுள்ளது. [/size][size=1]

[size=4]எனவே முன்னூறு மில்லியன்களை செலவழித்து அனுப்பது பெருமை தரும் விடயமே ஆனால் பாணுக்கே வழியில்லாத மக்கள் அதிகமாக உள்ள நாட்டிற்கு இது தேவையில்லை. [/size][/size]

இதை யாழ் குடா மீது நிறுத்தினால் இந்தியக் காட்டுமிராண்டிகளின் தென் கடல், கரையோர நடமாட்டங்களை நன்கு கண்காணிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்மதியை அனுப்புவதற்கு 4200 கோடி ரூபா செலவீடு

By General

2012-11-24 10:00:37

உலகின் 45 ஆவது நாடாக செய்மதியை அனுப்புவதற்காக அரசாங்கம் 4200 கோடி ரூபாவை செலவழித்துள்ளது. இந்த நிதியானது சீனாவிடம் இருந்து முற்று முழுதாக வணிக கடன் அடிப்படையில் பெறப்பட்டுள்ளது.

ஆனால் வரவு செலவுத்திட்டத்தில் மகளிர் விவகார அமைச்சுக்கு 10 கோடி ரூபாவே என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விதவைப் பெண்கள் செல்லொனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் குறித்த புனர்வாழ்வுசெயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனினும் அரசாங்கம் செய்மதிக்காக வணிகக் கடனாக பெறப்பட்ட 4200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=1796

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.