Jump to content

மரக்கறி ஒயெஸ்ரர் கோழிக் கறி: நிழலி


Recommended Posts

என் குழந்தைகளுக்கு மரக்கறிச் சாப்பாடு என்றால் இலகுவாக உள்ளே போகாது. எப்பவும் ஏதாவது ஒரு அசைவ உணவு வேண்டும். ஆகக் குறைந்தது Chicken இருந்தால் தான் விரும்பிவினம் (அப்பனை மாதிரி என்று அவசரமாக முடிவெடுக்கக் கூடாது. எனக்கு மரக்கறி சாப்பாடு மிகவும் பிடிக்கும்)

சரி, இப்படியே போனால் பிள்ளைகளுக்கு மரக்கறியே பிடிக்காமல் போய்விடும் என்பதற்காக நான் கண்டு பிடித்த ஒரு தீர்வுதான் மரக்கறிகளையும் கோழியையும் கலப்பது.

தேவையானவ

1. கோழி: முழுக் கோழி (நாட்டுக் கோழி என்றால் இன்னும் நல்லம்)

2. Oyster souse

மரக்கறிகள்:

3. Red pepper

4. Green pepper

5. லீக்ஸ்

6. கோவா

7. தக்காளி

8. கொஞ்சம் Spinach

இவற்றுடன்

9. உள்ளி: உள்ளிப் பல்லுகள் 10

10.வெங்காயம்

11. கறுவாப்பட்டை (optional)

12. மிளகாய்த் தூள்

13. இஞ்சி மற்றும் உப்பு

மிக முக்கியமாக

12. நல்லெண்ணை

முன் செய்முறை:

1. முதலில் மரக்கறிகளை வெட்டவும். வெட்ட முதல் சிறிதளவு உப்புப் போட்ட நீரில் நன்கு கழுவவும்.

2. மிளகாய்த் தூளையும், மஞ்சளையும் கோழி இறைச்சி மீது போட்டு நன்கு கிளறவும்.

3. அதன் மேல், oyster souse இனை விடவும். இதன் அளவு உங்கள் அறிவுக்கு ஏற்ப

4. நன்றாக குழைத்து (குரைத்து அல்ல) 15 நிமிடங்கள் விடவும்.

5. உள்ளியையும் இஞ்சியையும் உங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு சிறிதாக அரியவும். அப்பதான் பிள்ளைகள் சாப்பிடுவினம்

6. வெங்காயத்தை ஓரள்வுக்கு பெரிதாக அரியவும்.

7. தக்காளி, red pepper, green pepper, கறுவாப்பட்டை என்பனவற்றை மிகச் சிறிதாக அரியவும். அப்பதான் பிள்ளைகள் சாப்பிடுவினம்

செய்முறை:

8. தாச்சியில் (Non stick pan) நல்லெண்ணை விட்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். உணவின் ருசி எப்பவும் மிதமான சூட்டில் தான் கிடைக்கும்.

9. எண்ணெய் மிதமான வெப்ப நிலைக்கு வந்தவுடன் இறைச்சியை போடவும்

10. கண்டிப்பாக மூடியால் மூடவும்

11. 5 நிமிடங்களில் வெட்டிய, அரிந்த எல்லா மரக்கறிகளையும் (இஞ்சி, உள்ளி உட்பட) போட்டு மூடியால் மீண்டும் மூடவும்

12. இன்னொரு 5 நிமிடங்களில் வேண்டுமென்றால் கொஞ்சம் தண்ணீர் விடவும். இது கறி ஓரளவுக்கு தண்ணியாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு. ரொட்டி போன்றவற்றை சாப்பிட ஓரளவுக்கு குழம்பு வேண்டும்.

13. வெந்து விட்டது என்று உங்கள் அறிவு சொன்னவுடன் இறக்கி விடவும்

14. நல்லா ஒரு பிடி பிடிக்கவும்.

உப்பின் அளவு பற்றி இதில் சொல்லவில்லை. அது உங்கள் அறிவுக்கு ஏற்ப.

இந்த கறியை என் பிள்ளைகள் மட்டுமல்ல என் மனைவியும் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். வாரத்தில் ஒரு நாளாவது இதனை கடந்த 3 மாதங்களாகச் செய்கின்றேன்.

முற்று முழுதாக செய்து பார்த்து சொல்லும் முறை இது

அடுத்தது ஒயெஸ்ரர் கணவாய்ப் பொரியல்.

Link to comment
Share on other sites

இதை அப்படியே கொஞ்சம் உறைப்பு கூடப் போட்டு , புக்கையினுள் கலந்தால் கோழிப்புக்கை எண்டு வடமராட்சியில் பிரபல்யம் . காச்சல் தடிமன் எல்லாத்துக்கும் சூப்பர் சாமான் :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரிதான் நிழலிக்கு சமையல் இப்ப அத்துபடியாக்கும். சரி நானும் செய்து பாத்துச் சொல்லுறன் :D

Link to comment
Share on other sites

சரிதான் நிழலிக்கு சமையல் இப்ப அத்துபடியாக்கும். சரி நானும் செய்து பாத்துச் சொல்லுறன் :D

ஓம் அக்கா,

மனிசியை எல்லா நேரங்களிலும் சமைக்கச் சொல்ல முடியாது. அவருக்கும் களைத்துப் போகும் நேரங்கள் நிறைய இருக்கும். உண்மையில் இரண்டு பிள்ளைகளை சமாளிப்பது என்பது இரண்டு அரசுகளை நடத்துவதற்கு சமம். அவர் களைத்து இருக்கும் போது சமையலிலாவது பங்கு கொள்வம் எண்டுதான் சமைக்க வெளிக்கிட்டது.

இப்ப அது பிள்ளைகளுக்கும் பிடிச்சு இருக்கு. ஒரு மாற்றம் என்பதால் அவர்களுக்கு பிடிக்குது.....ஒவ்வொரு நாளும் நானே சமைத்தால் நானே அவர்களின் வில்லன் ஆவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை அப்படியே கொஞ்சம் உறைப்பு கூடப் போட்டு , புக்கையினுள் கலந்தால் கோழிப்புக்கை எண்டு வடமராட்சியில் பிரபல்யம் . காச்சல் தடிமன் எல்லாத்துக்கும் சூப்பர் சாமான் :D :D .

இது சக்கரைப் புக்கையிலா வெண் புக்கையிலா செய்வது ? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்...செய்து பார்த்து விட்டு எப்படி இருக்குது என்று எழுதுகிறேன்...ஏன் "ஒஸ்ட்டர் சோஸ்"பாவித்தனீங்கள்?அதை அநேகமாக கடலுணவுக்கு தானே சேர்ப்பார்கள் :unsure:

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்...செய்து பார்த்து விட்டு எப்படி இருக்குது என்று எழுதுகிறேன்...ஏன் "ஒஸ்ட்டர் சோஸ்"பாவித்தனீங்கள்?அதை அநேகமாக கடலுணவுக்கு தானே சேர்ப்பார்கள் :unsure:

கடலுணவின் வாசம் இறைச்சிக்கும் வந்தால் எப்படி இருக்கும் என்று அறியத்தான் அதனை முதலில் பயன்படுத்த ஆரம்பித்தேன்....இப்ப அதுவே ஒரு வழக்கம் ஆகிட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது.. ஆனால் நான் சைவமாக மாறிவிட்டேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது.. ஆனால் நான் சைவமாக மாறிவிட்டேன்!

உது எப்ப?

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கின்றது.. ஆனால் நான் சைவமாக மாறிவிட்டேன்!

இன்றுடன் எம் நட்பு முடிவுக்கு வருகின்றது :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது எப்ப?

ஆரம்பத்தில் சைவம், இடையில் அசைவம், இப்போது சில வருடங்களாக சைவம், ஆனால் வெளியிடங்களில் விதிகளைத் தளர்த்துவது உண்டு. இல்லாவிட்டால் பெரிய விலாசம் காட்டுகின்றார் என்று நினைப்பார்கள்.

மீனைப் பற்றி எதுவுமே தெரியாது என்பதால்தான் கோமகனின் சில்லெடுப்புப் பெயர்ப் போட்டியில் வருவன எல்லாம் புதுமையாகத் தெரிகின்றன!

இன்றுடன் எம் நட்பு முடிவுக்கு வருகின்றது :) :)

விதி வெளியில் தளர்த்தி வைத்துள்ளேன் (இப்படியான நட்புக்களைத் தக்க வைக்க!)

Link to comment
Share on other sites

நான் ஒயிஸ்ற்றர் சோஸ் போட்டுக் கோளி சாப்பிட்டதில்லை. ஆனால் ஒயிஸ்றர் நிறைய சாப்பிட்டிருக்கிறேன்.

Oysters Aphrodisiac என்று பொதுவாக ஒரு எண்ணம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு. முழுக்கோழியை விழுங்கமுடியாது, அரைக்கோழியில் செய்த் பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=73453

இது என்னுடைய கோழிச் சாம்பார்...எல்லோரும் இதை நக்கலடித்தார்கள் :D

Link to comment
Share on other sites

இண்டைக்கு ஒருக்கா நானும் செய்துபார்ப்போம் .

கிட்டதட்ட உதே சாயலில் நூடில்ஸ் செய்வோம் ஆனால் நல்லெண்ணெய் ,கோவா,தக்காளி,ஸ்பினச் ,உள்ளி ,இஞ்சி ஒன்றும் போடுவதில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது ஏற்க்களவே நான் செய்வது.கொஞ்சம்(கொஞ்ச அல்ல)வேறுபாடு.மற்றும் படி எல்லாம் ஒன்டுதான்.என்டாலும் நன்றி உங்கள் பதிவுக்கு. :)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இதே முறையில் நாங்களும் செய்வோம்.ஆனால் கோழிகாலை துப்பரவு பண்ணி அவித்துவிட்டு மரக்கறி எல்லாம்போட்டு பிரட்டி எடுத்து பின் அவித்த கோழிக்காலை பிய்த்து பிய்த்து அதற்கள் போட்டு கறியாக்கி இறக்கிய உடன் கொஞ்சம் கீரை வகை களையும் போட்டு பிரட்டிவிடுவோம்.

தகவலுக்க நன்றி நிழலி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.