Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாட்டுப் பொங்கலன்று, தமிழ்சிறியின்... உண்ணாவிர‌தம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிடிலே 'விரதம்'தானே? பிறகென்ன உண்ணா விரதம்?:)

 

சரி, சரி சிறி அண்ணை, அடம் பிடிக்காதீங்கோ....நேற்றுச்சாப்பிட்ட பொங்கல் 'செமிக்கெல்லையெண்டால்...அதுக்கு இப்படியே எக்குத்தப்பா முடிவெடுக்கிறது?!:)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

சிறி ஒருக்கா நாவூற வாயூற பகுதிக்கு வந்துட்டு போறது  :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறியர்  அடிக்கடி  உண்ணாவிர மேடைக்கு பின்னால்  போய் வந்து கொண்டிருந்தபோது  புலநாயால்  எடுக்கப் பட்ட படம்

 

Indian-Couple-eating-food-at-home-Funny-

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் புலனாய் சொன்னால்  அது சரியாகத்தான் இருக்கும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழ் சிறிக்கு சங்குதான்.சாகும் வரையான உண்ணா விரதம் தோல்வியில் முடிய வாழ்த்துகள்.
அன்னிலிங்கம் நீங்க, சங்கு தான் என்கிறீர்கள். பிறகு... உண்னாவிரதம் தோல்வியில்... முடிய வேண்டும் என்கிறீர்கள்.

எனக்கு... ஒண்ணுமே புரியலியே.... (சிரிப்பு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதக் களைப்பில் இருக்கும்... போது, தமிழ்ச்சூரியனின் பேட்டிக்கு பதிலளிப்பது நமது கடமை.

கேள்வி 1 ..............வணக்கம் சிமைலி மன்னரே ...........மாட்டுப்பொங்கலன்று உங்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததற்கு ஏதாவது விசேடமான காரணங்கள் இருக்கிறதா??

முந்த நாள் வீட்டில் பொங்கிய புக்கையும், பக்கத்து வீட்டுக்காரன், முன்னாலை வீட்டுக்காரன் தந்த புக்கை, மோதகம், வடை எல்லாத்தையும்... ஒரேயடியயாய் சாப்பிட்டதால், வயிறு அப்செற்றாய்ப் போனதால்.... டயட் எடுக்க மாட்டுப் பொங்கலன்று உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தேன்.

 

கேள்வி  2.............உங்கள் சிமைலி பறிக்கப்பட்ட விதத்தில் ஏதாவது சதி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறீர்களா ???  அப்படி சந்தேகப்பட்டால் யார் யார் மீது என்று கூறமுடியுமா ??

நிச்சயமாக... சர்வதேச அளவில், சதி நடந்துள்ளது. இஸ்ரேலின் மொசாட், அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இந்தியாவின் ரோ. ஸ்ரீலங்காவின் புலநாய்வுப் பிரிவுகளின் கூட்டு முயற்சியால்... இந்தச் சதியை செய்துள்ளார்கள் என நம்புகின்றேன்.

 

கேள்வி 3.............உங்கள் உண்ணாவிரதத்தால் பயன் ஏதும் கிடைக்காவிட்டால் .மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பதாக தீர்மானித்துள்ளீர்கள் ????? [சங்கு ஊதுவதற்கு வந்தி தயாராய் இருக்கும் இவ்வேளையில் ]

உண்ணாவிரதத்தால்... பலன் கிடைக்கும் என்று நம்புகின்றேன். கிடைக்காவிடில்..... சாவதற்கு முதல் நாள், தீக்குளிக்க யோசித்துள்ளேன்.

 

கேள்வி 4............உங்கள் உண்ணாவிரதத்தின் மூலம் வெற்றி கிடைத்தால் என்ன என்ன சாப்பாடு முதலில் சாப்பிடுவீர்கள் ?

உண்ணாவிரததத்தில், வெற்றி கிடைத்தவுடன்.... மாட்டு இறைச்சியில்... செய்த கொத்து ரொட்டி தான் முதலில் சாப்பிடுவேன்.

 

மிக்க நன்றி ஐயா .பதில் கூறுவீர்கள் என நினைக்கிறேன் ..........இன்னும் பல கேள்விகள் இருக்கிறது .ஆனால் பசி எடுப்பதனால் மட்டின்  புரியாணி ஆர்டர் பண்ணியுள்ளோம்  .சாப்பிட்டு விட்டு மீண்டும் வருவோம் .....கேள்விக்கணைகளை தொடர ........அது வரைக்கும் உங்கள் உண்ணா விரதத்தை நிறுத்தாமல் தொடர வாழ்த்தி விடை பெறுகிறோம் .நன்றி :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியடைய வாழ்த்துக்கள்.

மாட்டுப்பொங்கலன்று மனிதர்கள் மனிதர்கள் உண்ணாவிரதம் இருக்க மாட்டார்களே!

நான் இருக்கிறனே... கறுப்பி. என்னைப் பார்க்க மாடு மாதிரியா தெரியுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் விரதம் இடையூறு எதுவுமின்றித் தொடர வாழ்த்துக்கள், தமிழ் சிறி!

 

நிர்வாகம், இடைக்காலத் தடையுத்தரவுக்காக விண்ணப்பிக்க முன் வந்தபோதும், நாங்கள் அதை வேண்டாமென்று மறுத்து விட்டோம்! :D

ஆராவது எனது உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்துவார்கள் என்று பார்த்தால்.... நிறுத்த வந்த நிர்வாகத்தையும், தடுத்து நிறுத்திப் போட்டீர்களே... புங்கையூரான். எல்லாரும், ஒரு முடிவோடை தான்... இருக்கிறியள் போலை கிடக்குதப்பா. (பயப்படும் சிமைலி)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேறினால் உங்கள் போர் வெற்றியென அர்த்தம்.அதன் மூலம் நீங்கள் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவருவீர்கள்.அது உங்களின் உண்ணாவிரதத்தின் வெற்றி.உங்கள் கோரிக்கைகள் நிறைவேறாது உங்கள் உண்ணாவிரதம் தொடருமாலால் உங்கள் போராட்டத்துக்கு கிடைத்த தோல்வி.விளைவு சங்குதான்.கண்ணா சங்கா லட்டா என்பது உன் கையில்.சுவிசுக்கு வாங்கப்பு.ஒரே கல்லில ரண்டு மாங்காய்.மனிசி பொங்கலுக்கு செய்த லட்டு உள்ளது.உண்ணாவிரதம் இருந்தாலும் சங்குதான்.இதை சாப்பிட்டாலும் சங்குதான்.முடிவு உங்க கையில.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொண்ட கொள்கையில் இருந்து விலகா 'கொள்கைக் குன்று' என் தலைவனின் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.  

 

என்ன இண்டைக்கு மாட்டுப் பொங்கலுக்கு பொங்கி உங்களுக்கு படைக்கலாம் என்றிருந்தேன். அதான் கவலை. :(   :D

இது என்ன.... கோதரியாய்க் கிடக்குது. ஒருவருமே.... என்னை, மனிசப் பயலாய்ப் பார்க்கவில்லையா... (கவலை முகக்குறி)

:lol:  :D  :icon_mrgreen:  :mellow:  :wub:  :icon_idea:  :blink:  :rolleyes:  இவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகித்து விரதத்தை முடிக்கவும்

 

அல்லது யாழில் breaking new ....சிறி.....

 

 

https://i.chzbgr.com/maxW500/3049411584/h6A915167/

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறி உங்கள் சிமைலி போட முடியா தவிப்பின் உணர்ச்சியை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கு, கவலைதான். இது பலரின் கூட்டுச்சதி, இதில் ராஐவன்னியனின் முக்கிய பங்கிருக்கு. இதற்க்காகவே விடுதலையில் உள்ளார். அடிக்கடி உங்கள் நிலைமயை அறியத்தரவும்

 

 

Flying-Kiss-flying-kiss-love-female-smil

 

சிமைலியே வா...வா.. ஸ்மையே வா..வா...

 



  • கருத்துக்கள உறவுகள்

முகக்குறிகளுக்கெண்டு யாழ் இணையத்தில் இணைப்பு முகவரிகள் இருக்குதானே.. :rolleyes:  அதைப் பயன்படுத்துங்கோ..  கொஞ்சம் கஷ்டம்தான்.. என்ன செய்யிறது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் உந்தகூத்து முடியேல்லையே சிறி. ஆறுதலா முடியுங்கோ விரதத்தை எங்களுக்கு ஒண்டும் அவசரமில்லை. :D :D :D :D :D :D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க "கெள" போய் என்பதற்காக மாட்டுப் பொங்கலையா உண்ணாவிரதத்திற்கு தேர்வு செய்யுறது.. ரெம்ப அபந்தம். சரி அது போகட்டும்..

 

photo-thumb-4862.jpg?_r=0

 

உங்களுக்கு சிமைலிஸ் திருப்பி தரணும் என்றால்.. நீங்கள் உந்த பிஸ்டலோட அலையுற.. கெள போய் என்ற நிலையில் இருந்து பிளே போய் என்ற நிலைக்கு வரனும்..! ஓகே..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெற்றிகரமா நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் உண்ணா விரத்தப்பந்தலில் அடுத்து என்ன ஆகுமோ என்ற கலவர முகத்தோடு கூடி இருக்கும் கள உறவுகள் அனைவருக்கும் sajeevan "s kitchen சார்பில் புரியாணி பார்ஸல் வழங்கப்படும்......

எங்களுடைய அண்ணன் தியாக சுடர் உருகும் மெழுகு வர்த்தி அணையா தீ குச்சி மணக்கும் ஊதுபத்தி

கொள்கை நாயகன் தமிழ் சிறி அண்ணா அவர்கள் தன்னுடைய பரம்பரை சொத்தான smiley களை மீட்கும் வரை அறிவித்திருக்கும் இந்த உரிமை போர் இந்த உணர்சிப்போர் இந்த கொள்கை போர் வெற்றி பெற தொடர்ந்தும் உங்கள் ஆதரவு தாரீர் தாரீர் அணி அணியாக வாரீர் வாரீர்

உயிர் smiley க்கி

உடல் ஜெனலியாக்கு

இவன்

தமிழ் சிறி இன் பாசறையில் வளர்ந்த புயல்

சுண்டல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் சாப்பிட்டுவிட்டுத்தானே உண்ணாவிரதம் தொடங்கினீர்கள் சிறி. அப்பா இரண்டு மூண்டு நாள் தாக்குப் பிடிக்கும்

நீங்க வேறை... சாப்பிட்ட, பொங்கல் இரண்டு மணித்தியாலத்திலை, செமிச்சுட்டுது சுமோ.

அருமைச்சகோதரர்  தமிழ்ச்சிறி  அவர்கள் அதிகம் உபயோகிக்கும் அதேநேரம் ஒரே ஒரு ஆயுதமான சிமிலிகளை  பறித்து அவரை மௌனமாக்கியதை கடுமையாக கண்டிக்கும் அதேவேளை இது நூறுநாள் தொடர வாழ்த்தி

  அவருக்கு இன்று படைக்கப்பட்ட பொங்கலை சாப்பிட தொடங்குகின்றேன்.

நன்றி.

நூறு நாள் உண்ணாவிரதமா.... விசுகு, ஐயோ... இப்பவே, பசி வயித்தைக் கிண்டுதே....

எங்கள் பூரண ஆதரவு எப்போதும் உண்டு 

உண்ணாவிரதத்தை எல்லாரும் வாழ்த்துகிறார்களே... தவிர, கைவிடும்படி ஒருவரும் கூறவில்லையே... என்று கவலையாயிருக்கு நந்தன்.

அட, தொடங்க முதலே பாயில படுத்து விட்டீர்கள். சரி தான்!!

 

senthuran001-150x112.jpg

சரி தான்... என்றால், "ஆள் அவுட்" ஆகி விடும், என்று சந்தோசப் படுற மாதிரி இருக்கு நாதமுனி.

யாழ் களம் புதுப்பொலிவு பெறும்பொழுது ... சில மாற்றங்கள் வரும்.

 

அந்த மாற்றங்களால் பாதிக்கப்பட்டு தமிழ்சிறி அவர்கள் உண்ணாவிரதம் இருப்பது .... வழமை  :D 

அகூதா, என்னுடையை... புனிதமான உண்ணாவிரதத்தை, இப்பிடி... உள்குத்துக் குத்தி... கிண்டலடிப்பதை கண்டிக்கின்றேன். (32 பல்லுத் தெரியும் சிரிப்பு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  582240_551807654830856_571886867_nkae_zp

 

 நானும் சிறித்தம்பிக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கிறன்.

உலகத்திலேயே முதன் முதலாக... இப்பிடி மரத்தில், தொங்கிக் கொண்டு உண்ணாவிரதம் இருந்து ஆதரவு தரும் குமாரசாமியாரைப் பார்க்க கொஞ்ச தெம்பு வருது. (லொள்ளுச் சிரிப்பு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் - நடிகை வேண்டுகோள் :D

 

 

gennnnn+-+Copy.JPG

சூப்பர் சூப்பர் நிச்சயம் கைவிடுவார் .............. :D:D:D:D:lol:

ஆ.... நம்மடை "வீக் பாயின்டை" கண்டு பிடிச்சு... நடிகைகள் மூலம் வேண்டு கோள் விடுத்தாலும், நாம்... முன் வைத்த காலை, பின் வைக்க மாட்டோம்... இசைக்கலைஞன் & தமிழ்சூரியன் (அண்ணாந்து பார்த்து சிரிப்பு)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணாவின்

உண்ணாவிரதத்தை

 

உண்ணாவிரதச்செம்மல் 

உலகம் அறிந்த கடிதக்காரக் கலைஜர் 

 

அரைமணி நேரத்தில் நன்னீர் அருந்தி 

உண்ணாவிரதத்தை முறித்துக்கொண்ட 

 

எங்கள் கறுப்புக் கண்ணாடித்  தலைவர் 

அவர்கள் முடித்து வைப்பார்கள் :lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் முடியா லக்ஷ்மி மேனன் வந்து ஜூஸ் தந்து உண்ணாவிரதத்த முடிச்சு வைச்சா தான் மேடைய காலி பண்ணுவம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10-rao-fast200.jpg

பலர் கடிதம் மூலமும், தனிமடலிலும், தொலைபேசியிலும், ஈ-மெயிலிலும்.... உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி, மன்றாடிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, எனது உண்ணாவிரதத்தை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இடைநிறுத்தி வைத்து, மீண்டும் வரும் திங்கட்கிழமை உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் படும் என்பதை.... சகலருக்கும் அறியத் த‌ருகின்றேன்.

சாகும் வரை உண்ணாவிரதமிருந்த எனக்கு, பரிபூரண ஆதரவு வழங்கிய.... வந்தியத்தேவன், அன்னிலிங்கம், தமிழ்ச்சூரியன், கறுப்பி, புங்கையூரான், தப்பிலி, சுமோ, விசுகு, நந்தன், நாதமுனி, அகூதா, குமாரசாமி அண்ணா, இசைக்கலைஞன், தமிழரசு, நீலப்பறவை, நிலாமதி அக்கா, அலைமகள், தமிழ்தங்கை, ரதி, சஜீவன், சாத்திரியார், உடையார், நெடுக்காலை போவான், சுண்டல், வாத்தியார் ஆகியோருக்கு நன்றிகள்.

எல்லோரிடமும் நகைச்சுவை உணர்வு உள்ளது தான், யாழ்களத்தில் எனக்குப் பிடித்தது. இந்தப் பதிவில்... ஒவ்வொருவரும் நல்ல உள்குத்துடன், நகைசுவையை... வெளிப்படுத்தியதை மிகவும் ரசித்தேன். மற்றைய எல்லோரினதும்... நகைச்சுவை பல இடங்களில், முன்பே அறிந்திருந்தாலும்... அமைதியாக இருந்த அன்னிலிங்கம், "கண்ணா லட்டுத் தின்ன ஆசையா" சுவிசுக்கு வா... என்று கேட்டதை, மறக்க முடியாது. ஆரம்பத்தில்... எல்லோரினதும் ப‌திலுக்கு, மேற்கோள்காட்டி பதில் எழுத்தத்தான் நினைத்தேன். நேரமின்மையால்... அது, கை கூடாமல் போனதற்கு மன்னியுங்கள் உறவுகளே. மீண்டும் ஒரு, நகைச்சுவை பதிவில் சந்திப்போம்.

இந்தப் பாடலுடன் எனது உண்ணாவிரதம், இந்தக் கிழமை நிறைவு பெறுகின்றது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதத்தை முடித்த தமிழ் சிறி எப்ப உண்ணும் -------  தொடரப்போரீர்கள்
(விரதத்தின் எதிர்ப்பதம் தெரியவில்லை அதனால்தான் கீறி விட்டேன் )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.