Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்குற்றங்கள் மீதான நடவடிக்கை - சிறிலங்கா இராணுவத் தளபதியைத் துளைத்தெடுத்த அமெரிக்க அதிகாரி

Featured Replies

போர்க்குற்றங்கள் மீதான நடவடிக்கை - சிறிலங்கா இராணுவத் தளபதியைத் துளைத்தெடுத்த அமெரிக்க அதிகாரி [ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013, 02:29 GMT ] [ கார்வண்ணன் ]

vikram-singh-jegath-jeyasoorya.jpgசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் மட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள, தெற்கு, தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் விக்ரம் சிங் நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் பற்றிக் சூலரும் கலந்து கொண்டார். 

இதன்போது, இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

எனினும், இந்தச் சந்திப்பின் போது, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், அண்மையில் சிறிலங்கா இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை தொடர்பாகவும், விக்ரம்சிங் பேசியதாக தெரிய வருகிறது. 

குறிப்பாக சிறிலங்கா இராணுவத்தின் அண்மைய அறிக்கையில் வடக்கில் போர் இடம்பெற்ற சூழலில் காணாமற்போனவர்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ள கருத்துகள் குறித்து, போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிக்க துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்தும் விக்ரம்சிங் விசனத்தை வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.puthinappalakai.com/view.php?20130129107684

 சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் மட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள, தெற்கு, தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் விக்ரம் சிங் நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 

 

கோத்தாவை சந்திக்கவில்லை இன்னும். சந்தித்தால்..பல வியங்களை ஒப்புவித்துவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விக்ரம் சிங் என்பவர் சிங்களத் தளபதிகளை மிரட்ட வந்தவர் என்று நாங்கள் நினைத்தால் அது மிகப்பெரும் தவறு. அவர் என்ன செய்ய வந்திருக்கிறார் என்று பேசு முன்னர், அவர் வகிக்கும் பதவியைச் சர்ற்றுப் பாருங்கள். அவர், ஆசிய கொள்கை வகுப்புப் பிரிவிலும், பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி அடக்குப் பிரிவிலும், விசேட நடவடிக்கைப் பிரிவிலும், வெளிநாட்டு இராணுவங்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் பிரிவிலும் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் இலங்கை விவகாரங்களைக் கைய்யாண்டு புலிகள் 2009 இல் அழிக்கப்படுவதற்கு தனது பங்களிப்பையும் வழங்கியவர். அதிலும் மேலாக இவர் ஒரு இந்தியர். சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பாகச் செயற்பட்ட இந்திய அதிகாரிகளின் நடவடிக்கைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஐ. நாவின் விஜய் நம்பியார், அமெரிக்காவின் விக்ரம் சிங்....இப்படியே நீளும் இந்திய அதிகாரிகளின் பட்டியல். இவர் நிச்சயம் இலங்கை அரசையோ அல்லது இராணுவத்தையோ கண்டிக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் செய்ததற்குப் பாராட்டுத் தெரிவிக்கவே அவர் அங்கு போயிருக்கிறார். இங்கே சொல்லப்படும் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய அவரது கேள்விக் கணைகளுக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் எந்தத் தொடர்புமே கிடையாது. நீங்களும் அவர் வகிக்கும் பதவி பற்றி வாசித்துப் பாருங்கள்.

http://thecable.foreignpolicy.com/posts/2012/04/25/names_vikram_singh_promoted_at_pentagon http://www.defense.gov/bios/biographydetail.aspx?biographyid=340 http://www.cnas.org/node/75

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விக்ரம் சிங் என்பவர் சிங்களத் தளபதிகளை மிரட்ட வந்தவர் என்று நாங்கள் நினைத்தால் அது மிகப்பெரும் தவறு. அவர் என்ன செய்ய வந்திருக்கிறார் என்று பேசு முன்னர், அவர் வகிக்கும் பதவியைச் சர்ற்றுப் பாருங்கள். அவர், ஆசிய கொள்கை வகுப்புப் பிரிவிலும், பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி அடக்குப் பிரிவிலும், விசேட நடவடிக்கைப் பிரிவிலும், வெளிநாட்டு இராணுவங்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் பிரிவிலும் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் இலங்கை விவகாரங்களைக் கைய்யாண்டு புலிகள் 2009 இல் அழிக்கப்படுவதற்கு தனது பங்களிப்பையும் வழங்கியவர். அதிலும் மேலாக இவர் ஒரு இந்தியர். சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பாகச் செயற்பட்ட இந்திய அதிகாரிகளின் நடவடிக்கைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஐ. நாவின் விஜய் நம்பியார், அமெரிக்காவின் விக்ரம் சிங்....இப்படியே நீளும் இந்திய அதிகாரிகளின் பட்டியல். இவர் நிச்சயம் இலங்கை அரசையோ அல்லது இராணுவத்தையோ கண்டிக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் செய்ததற்குப் பாராட்டுத் தெரிவிக்கவே அவர் அங்கு போயிருக்கிறார். இங்கே சொல்லப்படும் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய அவரது கேள்விக் கணைகளுக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் எந்தத் தொடர்புமே கிடையாது. நீங்களும் அவர் வகிக்கும் பதவி பற்றி வாசித்துப் பாருங்கள்.

http://thecable.foreignpolicy.com/posts/2012/04/25/names_vikram_singh_promoted_at_pentagon http://www.defense.gov/bios/biographydetail.aspx?biographyid=340 http://www.cnas.org/node/75

 

 

இணைப்புக்கு நன்றி.

சிங், கொழும்பில் உள்ள இனங்கள் பற்றிய சர்வதேச ஆய்வு நிறுவனத்தில், இலங்கை, இந்தியா. நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில்

உள்ள சிறுபான்மை இனத்தவரின் உரிமைகள் பற்றியும் பாதுகாப்பு பற்றியும் செய்யப்பட்ட ஆய்வை

அங்கிருந்தே நிருவகித்திருக்கிறார். இதை நீங்கள் குறிப்பிடவில்லையே? ஏனோ? இதுவும் அந்த இணைப்பில் தானே இருக்கிறது?

 

 

மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல அமெரிக்காவின் இலங்கை விவகாரங்களை கையாண்டு வீடுதலைப்புலிகளை அழிக்க 2009ல் பங்களித்திருப்பதாக இந்த இணைப்பில் இல்லையே? நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?

Edited by Jude

  • தொடங்கியவர்

வழமையில் இப்படியான குழுக்கள் அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்யத்தக்கதாகவே அமைக்கப்படும். போரின் பின் பிளேக் எதிர்பார்த்த திசையில் நாடு போகவில்லை. எனவே அனுப்பட்ட குழு போரின் பின்னர் என்ன நடந்தது என்றதை கண்டறிய முயலும்.

இந்தியாவிலிருந்து பார்த்தசாரதியை இந்திரா காந்தி அனுப்பியதின் நோக்கமும் ராஜிவ் அவரை திருப்பி அனுப்பி மலையாளிகளை அனுப்பதொடங்கியதும் அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்யவே. எனவே இந்த குழு போரின் பின்னர் எப்படி அமெரிக்கா எமாற்றப்பட்டது என்றதை கண்டறியும். அந்த முயற்சியில் ,தேவை இல்லாத கேள்விகள் கேட்டு,  இலங்கையை ஆத்திரமடைய செய்யும் சந்தர்ப்பம் இருக்கிறது.

Edited by மல்லையூரான்

he Center for a New American Security (CNAS) is a Washington, D.C.-based think tank established in 2007 by co-founders Michèle Flournoy and Kurt M. Campbell which specializes in U.S. national security
issues. CNAS's stated mission is to "develop strong, pragmatic and
principled national security and defense policies that promote and
protect American interests and values."[1] CNAS focuses on terrorism and irregular warfare, the future of the U.S. military, the emergence of Asia as a global power center, and the national security implications of natural resource consumption. Deputy Secretary of State James Steinberg has called CNAS "an indispensable feature on the Washington landscape."[2] Speaking at the CNAS annual conference in June 2009, U.S. Central Command Commander GEN David Petraeus observed that "CNAS has, in a few short years, established itself as a true force in think tank and policy-making circles"[3]

The Obama administration has hired several CNAS employees for key jobs.[4] Founders Michèle Flournoy and Kurt Campbell currently serve as the Undersecretary of Defense for Policy and the Assistant Secretary of State for East Asian and Pacific Affairs, respectively. In June 2009 The Washington Post
suggested, "In the era of Obama...the Center for a New American
Security may emerge as Washington's go-to think tank on military
affairs."[4] CNAS scholars include John Nagl,[5]David Kilcullen, Andrew Exum, Thomas E. Ricks, Robert D. Kaplan,[6] and Marc Lynch.


CNAS is relatively small, with around 30 employees and a budget under $6 million.[7]


In a speech to the United States Military Academy at West Point on February 25, 2011, Secretary of Defense Robert Gates quoted CNAS President John Nagl and Senior Advisor and Senior Fellow Lieutenant General David Barno, USA (Ret.) for their recommendations on improving promotion policies in the military.[8]


CNAS experts have been quoted in numerous national media outlets, including but not limited to Foreign Policy,[9]The New York Times,[10]The Washington Post,[11]The Wall Street Journal,[12]The National Interest,[13]The Daily Show with Jon Stewart,[14]C-SPAN,[15]NBC,[16]NPR,[17]CNN,[18] and PBS.[19]

 

http://en.wikipedia.org/wiki/Center_for_a_New_American_Security



Mr. Singh managed a five-country Ford Foundation project on minority
rights and security in Bangladesh, India, Nepal, Pakistan, and Sri Lanka
for the International Center for Ethnic Studies in Colombo.
He was also
a reporter for the Voice of America in Sri Lanka and South Africa. Mr.
Singh has co-authored CNAS reports including Making America Grand Again: Toward a New Grand Strategy and The Power of Balance: America in iAsia and
is a contributor to several publications including Armed Forces
Journal, Orbis, and the Financial Times. He was awarded a 2002 Foreign
Language and Area Studies Fellowship, is an International Fellow of
Columbia University, and has received a Superior Honor Award from the
Department of State. Mr. Singh holds a B.A. in history from the
University of California at Berkeley and an M.A. in international
security policy from Columbia University.



இவர் சிறிலங்காவில் வேலை செய்தது நீலன் தீருச் செல்வத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்புக்காக.இதுவும் அமெரிக்கப் பண உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.அனேகமா அவர் சி அய் ஏயின் சார்பில் இந்த அமைப்பில் வேலை செய்து தகவல்களைத் திரட்டி இருக்கலாம். அவர் அமெரிக்காவின் நலங்களையே பிரதிபலிப்பார். அவர் ஒரு சீக்கியர் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இப்படியான பரபரப்பான தலைப்புக்களைப் போடுவதை தமிழ் ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.தலைப்புக்கும் செய்திக்கும் சம்பந்தமேயில்லை.சிறிலங்காவின் போர்க்குற்ற சம்பந்தமான விசாரணைகளில் இந்தியர்களான நம்பியார் நாராயணன் சிவசங்ர்மேனன் எல்லோருக்கும் பங்கு உண்டு அவர்களைக் காட்டிக் கொடுப்பாராஃஇந்தியரான இந்த சிங்.ஏதாவது உருப்படியான காரியங்கள் நடந்தபின் செய்தியைப் போட்டால் பரவாயில்லை. இது ஆடறுக்க முதல் ----- முக்காற்பணம் கதையாகத்தான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புதினப்பலகையை துளைத்து எடுக்க வேண்டும்.

சிறிலங்கா இராணுவத் தளபதியைத் துளைத்தெடுத்த அமெரிக்க அதிகாரி

 

இது தேசீயப் போதையில் அனுபவிக்கப்படும் சுய இன்பம். ஒரு மாயை உலக அரசியலை கற்பனை செய்து அதில் சிங்கள அரசுக்கெதிராக அமரிக்க மேற்குலகம் திரும்பி தமிழீழத்தை தட்டில் வைத்து தரும் என்ற கனவை எல்லோரும் காணுங்கள் என்று போதிப்பது. இதன் எதிர்வினையாக இக் கனவுடன் மக்கள் இருந்தால் போதும் போர்க்குற்றங்களுக்கு எதிராக மக்கள் செயற்படத்தேவையில்லை என்ற சூட்சுமம் ஒளிந்துள்ளது. பரபரப்பான செய்திகளுக்குள் ஒளிந்திருக்கும் சூட்சுமம் முற்றுமுழுதாக சிங்களப் பேரினவாதத்திற்கே சாதகமானது. இவ்வினத்தை வழிநடத்த முற்படுகின்றவர்களின் அதி உயர் புத்திசாலித்தனம் இவ்வாறான போதை. இதற்கெதிரான சிந்தனை அனைத்தும் துரோகமாக்கப்படுகின்றது.

70 துகளில் வந்த  மித்திரன் அதிர்ச்சியூட்டும் தலையங்களைத்  தந்தது. அதே  மாதிரி ஈழமுரசு, ஈழநாடு போன்றவைகள் போராட்டத்தினையும் பரபரப்புச் செய்தியாகத் வெளியிட்டன. அதன் பின்பு வந்த  இராணுவ அரசியல் ஆய்வுப் பெருந்தகைகள் அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சிகள் செய்தார்கள். அதன் பரிணாம வளர்ச்சியாக இவை.

 

கேட்டால் 'ஊடகம்' என்பார்கள். அந்தப் பழைய ஆராய்வுகளை எழுதிய பேப்பர்கள் அவசரத்திற்கு ஏதோ ஒன்றை துடைக்கவாவது பிரயோசனப்பட்டது.

  • தொடங்கியவர்

பீரிசை சந்திப்பதைத் தவிர்த்தார் விக்ரம் சிங் [ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 01:08 GMT ] [ கார்வண்ணன் ]

vikram-singh.jpgசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர்கள் குழு நேற்று நடத்திய சந்திப்பில், தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிப் பாதுகாப்புச்செயலர் விக்ரம் சிங் கலந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரப் பிரிவைச் சேர்ந்த பிரதி உதவிச்செயலர்கள் விக்ரம்சிங், ஜேம்ஸ் மூர், ஜேன் சிம்மர்சன் ஆகியொரைக் கொண்ட குழு கடந்த ஐந்து நாட்களாக சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது. 

இந்தக் குழுவினர் கொழும்பு வந்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தனர். 

அதையடுத்து யாழ்ப்பாணம் சென்ற அவர்கள், பின்னர் கொழும்பில் பல்வேறு சந்திப்புகளிலும் ஈடுபட்டு வந்தனர். 

இறுதியாக நேற்று அவர்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்தனர். 

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் நேற்று நடந்த சந்திப்பில் ஜேம்ஸ் மூர் மற்றும் ஜேன் சிம்மர்சன் மற்றும் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கல் சிசன் ஆகியோர் மட்டும் கலந்து கொண்டனர். 

இந்தச் சந்திப்பில் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிப் பாதுகாப்புச்செயலர் விக்ரம் சிங் பங்கேற்கவில்லை. 

முக்கியமான இந்தச் சந்திப்பில் விக்ரம் சிங் பங்கேற்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130131107694

இலங்கை வந்த இவர்கள் கூட்டமைப்பை முதலில் சந்தித்து பெரிய கடுப்பை ஏற்படுத்தி விட்டனர் போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.