Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறம் மாறும் உறவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு முடிவு வராட்டி......!!! பாப்பம்.....!!! :lol:

  • Replies 61
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மானுட வாழ்வின் அடிநாதம் என்பது தன் சந்ததியை இப்பூவுலகில் விட்டுச் செல்வது..! ஆண் நல்லதொரு துணையைத் தேடி தன் சந்ததியை விட்டுச்செல்ல முயற்சிக்கிறான். பெண் என்பவள் சரியான துணையைத் தேர்ந்தெடுத்து நல்ல வித்துக்களை விட்டுச் செல்ல நினைப்பாள்..! மனிதனின் படிப்பு, வசதி, தேக ஆரோக்கியம் போன்றவற்றுக்கான தேடலின் தார்ப்பரியமும் இதுதான்..!  :rolleyes:

இப்படியான ஒரு தேடலில் தனது வாரிசு ஒன்றினுள்ளேயே தனது சந்ததியை ஒரு மனிதன் விட்டுச் செல்ல நினைப்பானாயின் அவன் சாதாரண மானுடத் தத்துவத்தின்பால் இயங்குபவன் அல்ல. மனவியாதி உள்ளவர்களால் மட்டுமே இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்..! :unsure: அத்தகைய ஒரு மனநோயாளியைக் கட்டி மேய்க்கும் சாந்தினி போன்ற பெண்களும் ஒருவகையில் மனநோயாளிகளே..!! :blink:

எது எவ்வாறாயினும், இரு மனநோயாளிகளின் கதையை எழுதி எங்களை வெறுப்பேற்றிய சுமோ அக்காவை இக்களத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :D

அநேகமாகச் சுமோவின் தேடல்கள், சமுதாயத்தின் அடித்தளத்து வண்டல்களைத் தேடுவதாகத் தான் இருக்கும்! :o

நானும், தனிப்பட்ட முறையில் வன்மையாகக் கண்டிக்கிறேன்! :D

களத்தின் சார்பாக இசை ஏற்கெனவே கண்டித்து விட்டார்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சமுகத்தில் நடக்கும் அவலங்களை கதையாக மாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் கண்டிக்க என்ன இருக்கு..? :D

எல்லா ஊத்தையலும் எங்க சமூகத்திலும் இருக்கு என்பதனை ஏற்றுக்கொளுகின்ற மனப்பக்குவம் வரவேண்டும்....:(

தொடர்ந்து சமுக அவலங்களை கதையாக்க வாழ்த்துக்கள் அக்கா

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறேன் ஒன்று அவன் ஜெயிலில் இருக்க வேண்டும் அல்லது தற்கொலை செய்திருக்க வேண்டும்.
 
சாந்தினி அவனை ஜெயிலிருந்து வெளியே எடுத்துக் காப்பாற்றி இருந்தால் முதலில் அவவைத் தான் வெட்டிப் போட வேண்டும்.
 
எங்கட‌ பெண்கள் பலர் கண்கண்ட‌ தெய்வம் என நம்பிறதும்,பிள்ளைகள் பிறந்தவுட‌னே தங்களுக்கு வயசு போயிட்டுது என உட‌ம்பை கவனிக்கிறேல,கணவர்மார்களோடு படுப்பதில்லை அதனால் பெரும்பாலன ஆண்கள் வெளியால மேயப் போறது :D  ஆனால் இவன் சொந்த வீட்டிலே கை வைச்சு இருக்கிறான் என்னத்தை சொல்ல :(
 
இந்த கதையை சுமோ வேண்டும் என்று எழுதின மாதிரி எனக்குப் படுது...இன்னொரு திரியில் அப்பா மடியில பொம்பிள்ள இருக்கிறதைப் பற்றி விவாதித்திருந்தது ஞாபகம் வருது :lol:

கட்டின புருசனை  இரண்டுவேலை மூண்டுவேலையெண்டு துரத்தி வேலையை வாங்குறது....சொந்தவீடு வாங்கிறது......உள்ள கடனைக்காட்டி அவைனை ஓய்வில்லாமல் கண்டகண்ட வேலைக்கு துரத்துறது.....அவனும் குடும்பத்துக்கு நல்லதை நினைச்சு இயந்திரமாய் வேலை செய்யிறான்......அப்பிடியிருந்தும் அவன்பாவி வேலையாலை வரேக்கை ஒழுங்காய் சாப்பாடு சமைச்சு குடுக்கிறேல்லை....விடிஞ்சால் பொழுதுபட்டால் ரிவி,கொம்பியூட்டர்,ரெலிபோன் பணியாரங்கள்.......எல்லாம் முடிய நித்திரை.....ஏதும் பிரச்சனையெண்டால் பிள்ளையளை சாட்டி தப்புறது..........ஏதும் கடன்பில்,காசுதேவை வந்தால் மட்டும் அன்பே ஆருயிரே! இல்லாட்டி அங்கை கிடக்குது எடுத்துப்போட்டு சூடாக்கி சாப்பிடுமன்..........இப்பிடித்தான் கன இடங்களிலை கதை போகுது.
 ஒரு ஆணுக்கு.........பெண் என்பவள் அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்கவேண்டும். குடும்பம் கலையாது.சஞ்சலப்படாது :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணுக்கு.........பெண் என்பவள் அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்கவேண்டும். குடும்பம் கலையாது.சஞ்சலப்படாது  :icon_idea:

ஆயிரத்தில் ஒரு வார்த்தை, குமாரசாமி அண்ணை! :D

உங்கள் வாய்க்குச் சர்க்கரை தான் போடவேணும்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தில் ஒரு வார்த்தை, குமாரசாமி அண்ணை!

:D

 ஒரு ஆணுக்கு.........பெண் என்பவள் அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்கவேண்டும். குடும்பம் கலையாது.சஞ்சலப்படாது :icon_idea:

இதுதான் குமாரசாமி, நறுக்காக சொல்லிவிட்டீர்கள் இருவரியில்.

சுமோ நீங்க ஒரு மாதிரியான ஆள்போலகிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா சொன்னது ஒரு வாழ்க்கைத் தத்துவம்..! ஆனால் பலரால் பின்பற்றப்படுவதில்லை..! அந்தக்காலத்தில் பாட்டிமார் பெண்களுக்கு காதுக்குள் ஓதி அனுப்பியதாக அறியமுடிகிறது..! :D புலம்பெயர் வாழ்வில் துடுப்பு இல்லாத படகுபோல் ஆகிவிட்டார்கள் பல பெண்கள்..! :lol:

இந்த ஊரில, பாட்டிமாருக்கு எங்க போறதாம்? :o

தொலைபேசிக்குள்ளாலையும், காதோட வச்சுச் சொல்லலாமா? :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா சமூகத்திலும் கொலைகாரர் இருப்பது போன்றுதான், முறையற்ற உறவு கொள்பவர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன தண்டனையோ அதை பெற்று கொடுக்க எமது மமூகம் முன் வரவேண்டும்.தண்டனை ஒன்றுதான் முறையற்றவர்களை நெறிப்படுத்தும், இதில் எந்த சமராசத்துக்கும் இடம் இல்லை.தந்தை மகள் உறவு ஒரு அற்புதமான உறவு, அதை கொச்சை படுத்துபவர்களை ஒரு போதும் மன்னிக்க முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தைப் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

மானுட வாழ்வின் அடிநாதம் என்பது தன் சந்ததியை இப்பூவுலகில் விட்டுச் செல்வது..! ஆண் நல்லதொரு துணையைத் தேடி தன் சந்ததியை விட்டுச்செல்ல முயற்சிக்கிறான். பெண் என்பவள் சரியான துணையைத் தேர்ந்தெடுத்து நல்ல வித்துக்களை விட்டுச் செல்ல நினைப்பாள்..! மனிதனின் படிப்பு, வசதி, தேக ஆரோக்கியம் போன்றவற்றுக்கான தேடலின் தார்ப்பரியமும் இதுதான்..!  :rolleyes:

இப்படியான ஒரு தேடலில் தனது வாரிசு ஒன்றினுள்ளேயே தனது சந்ததியை ஒரு மனிதன் விட்டுச் செல்ல நினைப்பானாயின் அவன் சாதாரண மானுடத் தத்துவத்தின்பால் இயங்குபவன் அல்ல. மனவியாதி உள்ளவர்களால் மட்டுமே இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்..! :unsure: அத்தகைய ஒரு மனநோயாளியைக் கட்டி மேய்க்கும் சாந்தினி போன்ற பெண்களும் ஒருவகையில் மனநோயாளிகளே..!! :blink:

எது எவ்வாறாயினும், இரு மனநோயாளிகளின் கதையை எழுதி எங்களை வெறுப்பேற்றிய சுமோ அக்காவை இக்களத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :D

மனோ வியாதி உள்ள பலர் எம்  சமூகத்திலும் உள்ளனர். ஆனால் பலரை அடையாளம் காண முடிவதில்லை. கண்டாலும் வெளியே சொல்லப் பயந்து சொல்லாது விட்டுவிடுவர்.

அநேகமாகச் சுமோவின் தேடல்கள், சமுதாயத்தின் அடித்தளத்து வண்டல்களைத் தேடுவதாகத் தான் இருக்கும்! :o

நானும், தனிப்பட்ட முறையில் வன்மையாகக் கண்டிக்கிறேன்! :D

களத்தின் சார்பாக இசை ஏற்கெனவே கண்டித்து விட்டார்! :icon_idea:

வண்டல்களை முழுவதும் வழித்தெடுக்க முடியாவிடினும், எம்மால்
முடிந்தவரை வெளியே எடுத்தால்த்தான் நீர் சுத்தமாகும். கிணற்றுள் இறங்கி
கலக்குவதற்க்குத்தான் யாரும் முன்வருவதில்லை. முன்வருபவரையும் விடுவதில்லை.

சமுகத்தில் நடக்கும் அவலங்களை கதையாக மாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் கண்டிக்க என்ன இருக்கு..? :D

எல்லா ஊத்தையலும் எங்க சமூகத்திலும் இருக்கு என்பதனை ஏற்றுக்கொளுகின்ற மனப்பக்குவம் வரவேண்டும்.... :(

தொடர்ந்து சமுக அவலங்களை கதையாக்க வாழ்த்துக்கள் அக்கா

நன்றி சுண்டல் உங்கள் ஆதரவுக்கு. ஆண்கள் பலருக்கே பிற ஆண்கள் செய்யும்
அடாவடிகளை ஏற்றுக்கொள்ளும் துணிவும் மனமும் இல்லை என்பதே உண்மை.
 
இதுதான் குமாரசாமி, நறுக்காக சொல்லிவிட்டீர்கள் இருவரியில்.

சுமோ நீங்க ஒரு மாதிரியான ஆள்போலகிடக்கு

ஒரு மாதிரி என்பதில் பல அர்த்தங்கள் இருக்கின்றன வந்தி. நீங்கள் எந்த
ஒருமாதிரியைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெளிவாகக் கூறினால், நானும்
தெளிவான பதில் தர முடியும்.

கட்டின புருசனை  இரண்டுவேலை மூண்டுவேலையெண்டு துரத்தி வேலையை வாங்குறது....சொந்தவீடு வாங்கிறது......உள்ள கடனைக்காட்டி அவைனை ஓய்வில்லாமல் கண்டகண்ட வேலைக்கு துரத்துறது.....அவனும் குடும்பத்துக்கு நல்லதை நினைச்சு இயந்திரமாய் வேலை செய்யிறான்......அப்பிடியிருந்தும் அவன்பாவி வேலையாலை வரேக்கை ஒழுங்காய் சாப்பாடு சமைச்சு குடுக்கிறேல்லை....விடிஞ்சால் பொழுதுபட்டால் ரிவி,கொம்பியூட்டர்,ரெலிபோன் பணியாரங்கள்.......எல்லாம் முடிய நித்திரை.....ஏதும் பிரச்சனையெண்டால் பிள்ளையளை சாட்டி தப்புறது..........ஏதும் கடன்பில்,காசுதேவை வந்தால் மட்டும் அன்பே ஆருயிரே! இல்லாட்டி அங்கை கிடக்குது எடுத்துப்போட்டு சூடாக்கி சாப்பிடுமன்..........இப்பிடித்தான் கன இடங்களிலை கதை போகுது.
 ஒரு ஆணுக்கு.........பெண் என்பவள் அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்கவேண்டும். குடும்பம் கலையாது.சஞ்சலப்படாது :icon_idea:

நீங்கள் கூறும் காரணங்களாலா குடும்பம் சஞ்சலப்படுவது?? அதுவே முழுக்க
முழுக்கக் காரணமாக முடியாது. பெண்ணியத்தை அடக்க நினைக்கும் ஆணின் அறிவற்ற நிலையில் விளைவதும், அவன் மனதிலெழும் அடக்கமுடியா நோயுமே காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா சமூகத்திலும் கொலைகாரர் இருப்பது போன்றுதான், முறையற்ற உறவு கொள்பவர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன தண்டனையோ அதை பெற்று கொடுக்க எமது மமூகம் முன் வரவேண்டும்.தண்டனை ஒன்றுதான் முறையற்றவர்களை நெறிப்படுத்தும், இதில் எந்த சமராசத்துக்கும் இடம் இல்லை.தந்தை மகள் உறவு ஒரு அற்புதமான உறவு, அதை கொச்சை படுத்துபவர்களை ஒரு போதும் மன்னிக்க முடியாது.

உண்மைதான் சித்தன். இதில் கருத்தை எழுதிய ஆண்கள் பலரும் எதோ

கடமைக்கு எழுதினார்களே அன்றி சமூக அக்கறை அதில் காணப்படவில்லை. என்னைக்கேட்டால் அரபு நாடுகளின் சட்டம் போன்று சொந்தப் பிள்ளையிடமே தவறு செய்பவனுக்கு ஓட்ட நறுக்கிவிட வேண்டும்.

எனது இந்தத் திரியை வாசித்த மூன்று பேர் எனக்கு மெயில் செய்திருந்தனர்.

மூவரும் வெவ்வேறு வகைகளில் தமக்குத் தெரிய நடந்துகொண்டிருக்கும் சிறுவர் துர்ப்பிரயோகங்களை பற்றிக் கூறி என்னிடம் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது இருக்கு என்கின்றனர். அதற்குக் காரணம் சமூகத்தின் முன்னால் தம் முகம்  காட்டப் பயம் மட்டுமன்றி அதனால் வரும் கோபங்களுக்கும் பிரிவுகளுக்கும்  முகங்கொடுக்கத் துணிவற்றிருப்பதே காரணம்.

நான் மற்றவர் போல் இல்லை.இதை வாசிக்கும் பெண்களோ ஆண்களோ உங்களுக்குத் தெரிந்து இப்படி ஏதாவது நடப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் என்னுடன் தொடர்புகொண்டு உரியவர்களின் விபரம் தந்தால்  நான் உரிய முறையில் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க முடியும்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தை தாயின் கழுத்தை நெரிப்பதையும், தாய் உணர்வற்று மரம்போல் கீழே
விழுவதையும் பார்த்த அந்த மகள் பயத்தில் தன்னையும் தந்தை ஏதாவது
செய்துவிடுவார் என எண்ணி, கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடியது. மகள் ஓடும்
சத்தம் கேட்ட அவன் மகளைப் பிடிப்பதற்காய் தானும் படிகளில் இறங்கி
ஓடுகிறான். மகளோ கீழ் வீட்டுக் கதவைத் தட்டுகிறாள். தகப்பன் ஓடிப்போய் மகளை
எட்டிப் பிடிக்கவும் கீழ் வீட்டினர் கதவைத் திறக்கவும் சரியாக இருக்கிறது.

ஒன்றுமில்லை என்றுவிட்டு அவன் மகளின் கையைப் பிடித்து இழுக்க, மகள் இவர்களின்

கையை எட்டிப் பிடிக்க, பயத்துடன் காணப்பட்ட அந்தப் பிள்ளையின் முகமும்,
கோபத்துடன் இருந்த அந்த காமுகனின் முகமும் அவர்களுக்கு எதோ தவறு நேர்கிறது
என்பதை சொல்லிவிடுகின்றது.

பிறகென்ன அவர்கள் உடனே போலீசுக்குத் தகவல் தர, அவர்கள் உடனே வந்ததால்  சாந்தினியின் உயிர் காப்பாற்றப்பட்டு அவனை சிறையிலும் போட்டாயிற்று. ஆனால் கவுன்சில் பிள்ளைகள் மூவரையும்
பொறுப்பெடுத்து ஆறு மாதங்கள் சாந்தினியிடமே கொடுக்காது வைத்திருந்தனர்.
பின் அவளைப் பலமுறை விசாரித்து அவளிடம் தவறில்லை என நிரூபணமான பின்னரே
பிள்ளைகளைக் கொடுத்தனர். ஆனால் சாந்தினி பாவம் நத்தை போல் ஓட்டுக்குள்
சுருங்கி யாருடனும் அதிகம் பேசாது, பழகாது தானும் தன் பாடுமாய்..........
சகோதரர்களும் பெற்றோர்களும் அப்பப்ப வந்து போவதனால் மகிழ்வாகக் கழிய
வேண்டிய அவள் வாழ்க்கை...... எதோ போகிறது.

இப்படியான ஒரு கருவை தொட்ட சுமேக்கு பாராட்டுகள். எம் சூழலில் இன்னபிற காரணங்களால் நடக்கும் முறை தவறிய  இப்படியான விடயங்களை மூடி வைத்து கலாச்சாரம் பேணும் எம் சமூகத்தில் ஒரு பெண்ணாக இதை எழுதியிருப்பது துணிச்சலான விடயம்.

ஒரு நாவலில் சொல்ல வேண்டிய விடயத்தினை சிறுகதைக்குள் அடக்கிக் கொண்டதால் கதை பல இடங்களில் திமிறிக் கொண்டு நிற்கின்றது.  வயது குறைந்த மகளின் விருப்பத்துடன் தான் இது நடப்பதாகக் காட்டியதும் பின் தாய் அறிந்ததைக் கண்டவுடன் தாயிடம் அணைவதும் இயல்பானதாக இருக்கின்றது.  இதே போன்ற கருவைத்தான் ஷோபா சக்தியின் 'ம்' நாவலும் தொட்டு இருந்தது. ஆனால்  அந்த நாவலில் தந்தையின் மனப்பிறழ்வுக்கு காரணமாக கொடூர அரசியல் சூழழுக்குள் வாழ்ந்து இருந்த ஆணைக் காட்டியிருந்தார். இங்கு வெறுமனே வேலையில்லாமல் திண்டு போட்டு திமிர் எடுத்து நிற்பவரையும் கணவனை எதிர்க்க துணிவின்றிய ஒரு கோழைத் தனமான பெண்ணையும் காட்டியிருக்கின்றீர்கள்.

என் ஊர் சுண்டுக்குளியில் எம் வீட்டுக்கு முன்னால் இருந்த ஒழுங்கைக்குள் ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். . ஓரளவுக்கு தம்மை தனிமைப்படுத்தியே வாழ்ந்து வந்தனர். ஊரை விட்டு வந்து பல ஆண்டுகளின் பின் மீண்டும் போகும் போது 'எங்கே அவர்கள்' என்று விசாரித்தேன்.  அவர்களைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. ஆனால் அவர்களைப் பற்றி சொன்னவர் சொன்ன விடயம் அதிர்ச்சி அளித்தது. இருவரும் தந்தை-மகள் உறவாக இருந்து தாய் இறந்தவுடன் கணவன் - மனைவியாக வாழ்ந்த குடும்பம் என்று சொன்னார். அவர்கள் இருவரும் சேர்ந்து தான் மிச்ச பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருந்தனர்.

இந்த கதையை பற்றி இன்னும் அதிகம் எழுதலாம்... எழுதியமைக்கு சுமேக்கு மீண்டும் வாழ்த்துகள். அதிகம் எழுதுவதுடன் இன்னும் அதிகம் வாசியுங்கள். மொழி இன்னும் அழகுறும்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான கருவை தொட்ட சுமே அன்டிக்கு நன்றிகள்.

எனக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன

1.நான் அறிந்த வரையில் எந்த ஒரு ஆணுமே வேலைக்கு போகாமல் இருப்பதற்கு பின்னிற்பார்கள் .ஆனால் இங்கு கூறியவர் வேலைக்கு போகாமல் இருப்பதற்குரிய காரணம் கூறப்படவில்லை

2.தாம்பத்தியத்தை தொல்லை என்று நினைப்பது ஏன் என்று புலப்படவில்லை

3.எனக்கு தெரிந்து கணவன் மனைவி அன்பாக இருக்கும் குடும்பங்களில் இப்பிடி நடப்பதாக தெரியவில்லை

4.இப்பிடி நடப்பதற்கு எங்கே பிழை என்பதை யாரும் கூறவில்லை.வெறுமனே நீங்கள் கூறுவதை போல ஆண் பெண்ணை அடக்குவதற்காக செய்ததாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் நினைக்கிறேன் கணவன் மனைவி பிள்ளைகள் என்ற பிணைப்பு இங்கே விடுபட்டு போனது தான் இதற்கு உண்மையான காரணம் .இங்கே சாந்தினி பிழை விட்டதாக தான் கூறுவேன்.எத்தனையோ குடும்பங்களில் இப்படி பிணைப்பில்லாத கணவன் மனைவி இருந்தாலும் தாய்க்கு பிள்ளைகள் மீது அதிக பிணைப்பு இருக்கும் போது இப்பிடியான தவறுகள் நடப்பது குறைவு என்பதை கண்டிருக்கிறேன்.இங்கே சாந்தினிக்கு அப்பிடி பிள்ளைகள் மீது பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை.பிள்ளைகள் விரும்பியது தகப்பன் வாங்கி கொடுக்கும் போது பிள்ளைகள் தானாகவே தகப்பனிடம் ஒட்டிவிடும்.மனைவி கணவனிடமும் பிள்ளைகளுடனும் ஒட்டாமல் இருக்கும் போது கணவனுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது தன்னுடைய மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டியதை இன்னொரு இடத்தில் பெற்றுக்கொள்வதற்கு.அது தன் மகளாயிருந்தாலும்

சிலர் அதை இன்னொரு பெண்ணிடம் தேடுவார்கள் சிலர் அதை மதுவில் தேடுவார்கள் சிலர் இலகுவாக அடைய நினைப்பார்கள்.அடிப்படை கணவன் மனைவி அன்பு என்பதும் எங்கே பிழை என்பதை அறியாமல் இருப்பதுமே.

அந்த கணவன் செய்தது பிழை தான் ஆனால் அதுக்கு அடிப்படையை ஆராயாமல் ஒட்ட நறுக்க வேணும் எண்ட வாதம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

Edited by வாதவூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தினியிடம் பிள்ளைகளை ஒப்படைத்திருக்கக் கூடாது.. ஏற்கனவே ஒருமுறை உயிராபத்து நிறைந்த ஒரு சூழலில் குழந்தைகளை வைத்திருந்திருந்த குற்றத்தைச் செய்திருக்கிறார்.. இன்னுமொருமுறை அதைச் செய்யமாட்டார் என்பது என்ன நிச்சயம்? :unsure:

சாந்தினியின் அந்தச்செயலை கணவனுடன் வாழ்கிறேன் என்று சமூகத்திற்குக் காட்டுவதற்கான சுயநலச் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூகத்தின் பேசாப்பொருளை பேசிய சுமோவுக்கு நன்றி. 14 வருடத்தில் தனது கணவரை பற்றி அறியாமல் எப்படி சாந்தினி வாழ்ந்தார். இவர் கொடுத்த இடங்களால் தான் அவரது கணவர் அளவுக்கு மீறி சுதந்திரத்தை எடுத்துக்கொண்டார் என எடுக்கலாமா É  ஆபத்து நேரும் வரை சாந்தினி பொறுத்திருந்தது பிழை. ஆரம்பத்திலேயே அவரது கணவரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.அவருக்கு மன நோய் எனில் அதற்கான இடத்துக்கு அனுப்பப்பட்டிருக்க (counsiling)வேண்டும்.ஆபத்து நிகழும் வரை காத்திருந்து பிள்ளைகளின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்.

சமுதயபிறழ்வுகளை வெளிக்கொணரும் சுமே அக்காவுக்கு நன்றி.

கணவரின் அறையில் பெண் பிள்ளைகள் நேரத்தை செலவிடும்போது மனைவி பிள்ளைகளிடம் அது குறித்து கேட்காமல் விட்டது தவறு. சிரித்துக்கொண்டே போனாள் ..அடிக்கடி கணவரின் அறையில் இருந்தார்கள்... (மற்றவர்களை கூட அனுமதிக்காத) என்பதெல்லாம் சந்தேகத்துக்கு இடமானவை. அவை குறித்து சாந்தினி விசாரித்திருக்க வேண்டும்.

மேலை நாடுகளில் கணவனுக்கு தண்டனை கொடுபதற்கு பதிலாக மனநல ஆலோசனையே வழங்குவார்கள். இன்னும் இரண்டு ஒரு ஆண்டுகளில் கணவன் வெளியிலே வந்துவிடுவார். உண்மையில் கணவருக்கு இருப்பது மனநோயே. ஆனால் இந்த சம்பவங்களுக்கு பிறகு சாந்தினியும் குழந்தைகளும் ஒரு நல்ல மன நல வைத்தியரை அணுகி ஆலோசனைகள் பெறுவது நல்லது. இது போன்ற சம்பவங்கள் பிற்காலத்தில் அந்த பிள்ளைகளை பிழையான வழியில் செல்லவும் வழிவகுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊரில, பாட்டிமாருக்கு எங்க போறதாம்? :o

தொலைபேசிக்குள்ளாலையும், காதோட வச்சுச் சொல்லலாமா? :icon_idea:

வெறும் தொலைபேசி அழைப்புகள் அதே விளைவுகளைக் கொடுக்குமா? :huh: பொறுத்திருந்து பாரப்போம்.. :D

யாழ்களத்தின் காளைகளுள் ஒன்று கல்யாணம் கட்டும்வரை ஒரு சிறிய விளம்பர இடைவேளை..! :D

"கடந்த வாரம் இப்பிடித்தான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது மகள் தகப்பனின் அறைக்குள் இருந்து சிரித்தபடி ஓடிவந்தாள். இவள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சின்ன மகள் சொல்லிவிட்டு ஓடிய வார்த்தைகளைக் கேட்ட   இவளுக்கு அதிர்ச்சியில் ஒன்றும் ஓடவில்லை".

தவறு நடக்கிறதோ என்று ஐயம் வந்த பின்னும் கூட அதைப் பற்றி கண்டு பிடிக்க அவவின் பதி பக்தி விடவில்லை. 

ஒரு மனிதத்தன்மை அற்ற யந்து விற்கும் ,  முட்டாள் பெண்ணுக்கும் குழந்தைகளை கொடுத்த ஆண்டவன் தான் குற்றவாளி .
 
இந்தக்கதைக்கு ஆன பின்னூட்டதில் கீழ்க்காணும் கருத்தும், இந்தகருத்தை ஆமோதித்து இடப்பட்ட கருத்துகளும் மனதிற்கு வேதனை தந்ததது. 

 "ஒரு ஆணுக்கு.........பெண் என்பவள் அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்கவேண்டும். குடும்பம் கலையாது.சஞ்சலப்படாது "
கு. சா. அண்ணா, புன்கையூரான், வந்தியத்தேவன், இசைக்கலைஞ்ஞன், சுண்டல் , 
குமாரசாமி அண்ணா சொன்னது ஒரு வாழ்க்கைத் தத்துவம்தான், அந்தக்காலத்தில் இருந்து சொல்வதுதான், இப்படியாகப் பெண் இருந்தால், குடும்பம் கலையாது.சஞ்சலப்படாதுதான்,
 
ஆனால் இந்தக்கதைக்கு எப்படி, இப்படி ஒரு கருத்து பொருந்தும் ?
தான் புளுகியத்தை கண்டு கொண்டு சொன்னதற்கே மனைவியை அடிக்கும் மிருகம், சோம்பேறி, வீட்டில் சும்மா இருந்தும் மனைவியை அடிமைபோல் தன் வேலை அனைத்தையும் செய்விப்பவன்,பெற்ற குழந்தை யோடு, ....... காமுகன், ஆண் என்ற உருவம் தனக்கு இருப்பதால் தான் ஆதிக்கம் செய்ய நினைப்பவன்.
இவனுக்கு அல்லது இவன் போன்றோருக்கு  ....பெண் என்பவள் அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்கவேண்டுமா ?. 
 
அப்படி புழுவாக இருந்து ஒரு பெண் குடும்பம் காக்க வேண்டுமா?
 
குமாரசாமி அண்ணா, யாழ் வாசகராக, நறுக்கென்று, திருக்குறளாக நீங்கள் எழுதும் கருத்துகளை யாழ் வாசகரான காலம் முதல் ரசித்து வாசிக்கும் நான், உங்களை குறை கூற இதை எழுதவில்லை.
இப்படி எழுதி விடீர்களே என்ற ஆதங்கத்தில் தான் எழுதினேன்.
 
ஒரு ஆண் அன்பான காதலனாக, நண்பனாக, மனிதத்தை மதிப்பவனாக இருந்தால் பெண்ணும்,அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்க குடும்பம் கலையாது.சஞ்சலப்படாது
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமதி.. இந்தக் கதைக்கு உரிய கருத்தாக அதை எடுக்கவில்லை.. ஒரு பொதுக்கருத்தாகவே எடுத்துக்கொண்டேன்..

மனைவி என்ன ரகமாக இருந்தாலும் அந்தப்பிறப்பின் செயல் ஏற்புடையதல்ல.. மனிதப்பிறப்பாகவே கருத முடியாது..

மற்றபடி அது எங்களது ஒரு சிறிய அங்கலாய்ப்புதான்..! :D

முக்கியமான கருவை தொட்ட சுமே அன்டிக்கு நன்றிகள்.

எனக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன

1.நான் அறிந்த வரையில் எந்த ஒரு ஆணுமே வேலைக்கு போகாமல் இருப்பதற்கு பின்னிற்பார்கள் .ஆனால் இங்கு கூறியவர் வேலைக்கு போகாமல் இருப்பதற்குரிய காரணம் கூறப்படவில்லை

2.தாம்பத்தியத்தை தொல்லை என்று நினைப்பது ஏன் என்று புலப்படவில்லை

3.எனக்கு தெரிந்து கணவன் மனைவி அன்பாக இருக்கும் குடும்பங்களில் இப்பிடி நடப்பதாக தெரியவில்லை

4.இப்பிடி நடப்பதற்கு எங்கே பிழை என்பதை யாரும் கூறவில்லை.வெறுமனே நீங்கள் கூறுவதை போல ஆண் பெண்ணை அடக்குவதற்காக செய்ததாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் நினைக்கிறேன் கணவன் மனைவி பிள்ளைகள் என்ற பிணைப்பு இங்கே விடுபட்டு போனது தான் இதற்கு உண்மையான காரணம் .இங்கே சாந்தினி பிழை விட்டதாக தான் கூறுவேன்.எத்தனையோ குடும்பங்களில் இப்படி பிணைப்பில்லாத கணவன் மனைவி இருந்தாலும் தாய்க்கு பிள்ளைகள் மீது அதிக பிணைப்பு இருக்கும் போது இப்பிடியான தவறுகள் நடப்பது குறைவு என்பதை கண்டிருக்கிறேன்.இங்கே சாந்தினிக்கு அப்பிடி பிள்ளைகள் மீது பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை.பிள்ளைகள் விரும்பியது தகப்பன் வாங்கி கொடுக்கும் போது பிள்ளைகள் தானாகவே தகப்பனிடம் ஒட்டிவிடும்.மனைவி கணவனிடமும் பிள்ளைகளுடனும் ஒட்டாமல் இருக்கும் போது கணவனுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது தன்னுடைய மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டியதை இன்னொரு இடத்தில் பெற்றுக்கொள்வதற்கு.அது தன் மகளாயிருந்தாலும்

சிலர் அதை இன்னொரு பெண்ணிடம் தேடுவார்கள் சிலர் அதை மதுவில் தேடுவார்கள் சிலர் இலகுவாக அடைய நினைப்பார்கள்.அடிப்படை கணவன் மனைவி அன்பு என்பதும் எங்கே பிழை என்பதை அறியாமல் இருப்பதுமே.

அந்த கணவன் செய்தது பிழை தான் ஆனால் அதுக்கு அடிப்படையை ஆராயாமல் ஒட்ட நறுக்க வேணும் எண்ட வாதம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

வாதவூரான் ,

 ".அது தன் மகளாயிருந்தாலும்"

  :o  சீ ....ஆண்களே இந்தக் கருத்தை  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அந்த கணவன் செய்தது பிழை தான் ஆனால் அதுக்கு அடிப்படையை ஆராயாமல் ஒட்ட நறுக்க வேணும் எண்ட வாதம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

 என்ன ஒரு  இனப்பற்று  :D

தாம்பத்தியத்தை தொல்லை என்று நினைப்பது ஏன் என்று புலப்படவில்லை
தாம்பத்தியம் என்பது உடல் மட்டும் சம்மந்தப் பட்டதல்ல, மனதை புண்படுதுபவருடன் இணைவதைத்தான்  தொல்லை என்று நினைப்பது.
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமதி, உங்கள் அங்கலாய்ப்பு புரிகின்றது!

ஆங்கிலத்தில் 'Substance over form' என்று ஒரு வார்த்தைப்பிரயோகம் இருக்கு, அதைத்தான் கு.சா அண்ணா சொன்னார்.

அதுக்காக, அரைகுறை உடுப்போடை 'சுயிங்கம்' சப்பிறதை, நினைச்சு அவர் சொல்லவில்லை! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

 எங்கள் ஊரில் என் தாயுடன் கற்பித்த ஆசிரியை ஒருவர் தன் கணவரை விட்டுப் பிரிந்திருந்தார். நான் அம்மாவும்
மாமியும் கதைப்பதை தவறுதலாகக் கேட்க முடிந்தது. அந்த ஆசிரியரின் கணவரும்
சொந்தத் தங்கைக்கும் தகாத உறவு இருப்பதாகவும், அந்த ஆசிரியை திருமணம்
செய்தபோதே அதை அறிந்துவிட்டதாகவும், எத்தனை தரம் சொல்லியும் அவர்கள்
கேட்கவில்லை என்றும் அதனால் தான் பிரிந்துவிட்டதாகக் கூறினாரெனவும் அந்த ஆசிரியை பற்றிக் கூறிக்கொண்டிருந்தார்.

அவருக்கு இரு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும். பிள்ளைகள் வளர்ந்து A/L படிக்கும் வரை அவர் கணவரைப் பிரியவில்லை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள். பிள்ளைகள் தலைஎடுத்தபின்னர் தான் அவருக்குத் துணிவு ஏற்பட்டது.

பல பெண்கள் இப்படித்தான். நன்றி நிழலி.

நான் நினைக்கிறேன் கணவன் மனைவி பிள்ளைகள் என்ற பிணைப்பு இங்கே விடுபட்டு போனது தான் இதற்கு உண்மையான காரணம் .இங்கே சாந்தினி பிழை விட்டதாக தான் கூறுவேன்.எத்தனையோ குடும்பங்களில் இப்படி பிணைப்பில்லாத கணவன் மனைவி இருந்தாலும் தாய்க்கு பிள்ளைகள் மீது அதிக பிணைப்பு இருக்கும் போது இப்பிடியான தவறுகள் நடப்பது குறைவு என்பதை கண்டிருக்கிறேன்.இங்கே சாந்தினிக்கு அப்பிடி பிள்ளைகள் மீது பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை.பிள்ளைகள் விரும்பியது தகப்பன் வாங்கி கொடுக்கும் போது பிள்ளைகள் தானாகவே தகப்பனிடம் ஒட்டிவிடும்.மனைவி கணவனிடமும் பிள்ளைகளுடனும் ஒட்டாமல் இருக்கும் போது கணவனுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது தன்னுடைய மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டியதை இன்னொரு இடத்தில் பெற்றுக்கொள்வதற்கு.அது தன் மகளாயிருந்தாலும்

சிலர் அதை இன்னொரு பெண்ணிடம் தேடுவார்கள் சிலர் அதை மதுவில் தேடுவார்கள் சிலர் இலகுவாக அடைய நினைப்பார்கள்.அடிப்படை கணவன் மனைவி அன்பு என்பதும் எங்கே பிழை என்பதை அறியாமல் இருப்பதுமே.

அந்த கணவன் செய்தது பிழை தான் ஆனால் அதுக்கு அடிப்படையை ஆராயாமல் ஒட்ட நறுக்க வேணும் எண்ட வாதம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

நிழலி கூறியதுபோல், இதை நீட்டிக் கொண்டு போனால் கதை பெருத்துவிடும்
என்பதாலும், இப்படியான கதைகள் எல்லோருக்கும் வாசிக்கும் ஆர்வத்தை
ஏற்படுத்தாது என நான் எண்ணியதாலும்  விரிவாக எழுதவில்லை.

மனித
உறவுகளும் வாழ்வுமுறையும் பெரும்பாலும் எல்லோருடையதும் ஒன்றாக இருந்தாலும்
சில விதிவிலக்குகளும் உண்டுதானே. மற்றவர் விடயம் எல்லாமே எமக்குத்
தெரிந்திருக்கும் என்று இல்லையே. எல்லாவற்றையும் அவர்கள் கூறவும்
மாட்டார்கள். சில தந்தைமார் தம் தவறை மறைக்க தாயைப் பற்றி இல்லாதது
பொல்லாதது சொல்லி பிள்ளைகள் மனதில் தாய் பற்றிய தவறான அபிப்பிராயத்தை
ஏற்படுத்திவிடுகின்றனர். பகுத்தறியத் தெரியாத் பிள்ளைகள், தாயைப் பற்றிய
 தவறான எண்ணத்துடனேயே வளருமானால் பின்னால் அந்த அபிப்பிராயத்தை மாற்றிக்
கொள்ள முடியாது, தாயை வெறுக்கும் நிலைக்குக் கூடப் போயுள்ளனர்.

மனைவி
ஒன்றும் தெரியாத கெட்டவளாகத்தான் இருக்கட்டுமே. அதற்காக ஒரு தந்தை தன்
பிள்ளையிடமே நடப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கேடுகெட்டவர்கள்
மனநோயாளிகளாகவே இருக்கட்டுமே, அவர்கள் நோயைக் குணப்படுத்தி மன்னித்து விடச்
சொல்கிறீர்களா வாதவூரன் ??????

சாந்தினியிடம் பிள்ளைகளை ஒப்படைத்திருக்கக் கூடாது.. ஏற்கனவே ஒருமுறை உயிராபத்து நிறைந்த ஒரு சூழலில் குழந்தைகளை வைத்திருந்திருந்த குற்றத்தைச் செய்திருக்கிறார்.. இன்னுமொருமுறை அதைச் செய்யமாட்டார் என்பது என்ன நிச்சயம்? :unsure:

சாந்தினியின் அந்தச்செயலை கணவனுடன் வாழ்கிறேன் என்று சமூகத்திற்குக் காட்டுவதற்கான சுயநலச் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது...

சில குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் பேச்சு வார்த்தையே பெரிதாக இருக்காது. ஆனால் கணவனும் மனைவியும் பிள்ளைகளை  மையமாக வைத்து வாக்கையைக் கொண்டு நடத்துவர். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சாந்தினியில் கூடத் தவறு உண்டுதான். ஆனால் இப்படியான விடயங்கள் கண்ணால் காணாமல் ஒரு சிறு பிள்ளை கூறிய ஒரு வசனத்தை வைத்து, முடிவெடுக்க முடியாததென்பது தான் உண்மை. நேரில் கண்டபோது அந்தத் தாய் தன்  கடமையை தன் கணவனை எதிர்த்துச் செய்தார் தானே. அதனால் சாந்தினியின் மேல் முழுப் பழியையும் போடா முடியாது இசை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.