Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி கதறல்......

Featured Replies

விவாதத்தை மீண்டும் சரியான திசைக்கு கொண்டு வந்த யாழ்வாலிக்கு நன்றி! என்னிடம் ஒரு முக்கியமான கேள்வி உண்டு. கருணாநிதிக்கு எடுத்துக் கொடுப்பதாகவும் வைத்துக் கொள்ளலாம். நாங்கள் இப்படி அழியப் போகிறோம் என்பதை நாங்கள் கருணாநிதிக்கு சரியான முறையில் தெரியப்படுத்தினோமா?

  • கருத்துக்கள உறவுகள்

  கருணாநிதியின் விலகல்; இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கை - ஜெயலலிதா jaya232545345.jpg

திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்திருப்பது ஒரு கபட நாடகம். இந்திய அரசை காலம் கடக்க வைத்து, இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கையாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், “இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, “தி.மு.க. மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. 

2009-ம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் கருணாநிதி. அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்து விலகவோ, மத்திய அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவோ இல்லை. இலங்கைத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி இலங்கை அரசின் குண்டு மழையினால் கொன்று குவிக்கப்பட்டதற்கு கருணாநிதி தான் காரணம். இந்தச் சமயத்தில் மத்திய அமைச்சரவைக்கு அளித்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால் இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். இதை செய்யவில்லை. இது தமிழர்களுக்கு எதிரான மிகப் பெரிய துரோகம். 

அப்போதே கண்டித்திருக்க வேண்டும் 

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட ஓரளவு வலுவான தீர்மானத்தை இந்திய அரசு வலுவிழக்கச் செய்த போதாவது கருணாநிதி அதனைக் கண்டித்து இருக்க வேண்டும். 

ஆனால், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ததே இந்தியா தான் என்று பட்டவர்த்தனமாக அனைவருக்கும் மத்திய அரசே பிரதமரின் கடிதத்தை வெளியிட்டு தெரியப்படுத்தியது. 

அப்போதும் கருணாநிதி அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. இது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருணாநிதியின் துரோகம். அவ்வாறு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நீர்த்துப் போக செய்த சூழ்ச்சியில் கருணாநிதிக்கும் பங்கு உள்ளது. எனவே தான் அதைப் பற்றி அப்போது அவர் எதையும் சொல்லவில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 

பொறுப்பில் இருந்து நழுவுகிறார் 

இவ்வாறு மத்திய அரசை எதிர்த்து வலிமையாக குரல் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவவிட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சொல்லொணாத் துயரங்களுக்கு எல்லாம் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கருணாநிதி, தன்னுடைய பொறுப்பிலிருந்து நழுவும் வகையில், தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். 

இது மட்டுமல்லாமல், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக இந்தியா அமைதி காத்து வருவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றும், இப்பிரச்சனையில் இந்தியா வலுவான வரலாற்று சிறப்புமிக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், அந்தத் தீர்மானத்தை வலுவடையச் செய்ய என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் நான் விரிவான கடிதம் ஒன்றை பாரதப் பிரதமருக்கு நேற்று எழுதியுள்ளேன். 

டில்லியில் தீர்மானம் போடுவதா? 

இந்நிலையில் 18.3.2013 அன்று ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்ததும் கருணாநிதி அளித்த பேட்டியில், இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க் குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தத் திருத்தங்கள் அடங்கிய தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தான் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு எதிராகவும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், வலுவான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டால் தான் இலங்கைக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க இயலும். ஆனால், கருணாநிதி, இந்திய நாடாளுமன்றத்தில் இதைப் போன்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார். 

மறுபரிசீலனையும் செய்வாராமே! 

அவரது இன்றைய பேட்டிக்குப் பின் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, 21.3.2013 வரை காலம் இருப்பதாகவும், அதற்குள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தி.மு.க. தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்றும் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் உறுதியான பயனளிக்கக் கூடியது அல்ல. மாறாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் தான் தீர்மானங்களுக்கு திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதுவும் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும். 

அவ்வாறு செய்யாமல், இந்திய அரசை காலம் கடக்க வைத்து, இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கையாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. அலுத்து போயிருச்சுங்க.. 

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இது போன்ற எண்ணற்ற நாடகங்களை மக்கள் கண்டு அலுத்துப் போயுள்ளனர். 

மீண்டும் கொண்டு வரப்பட்ட டெசோ அமைப்பிற்கு மக்களிடமும், மாணவர்களிடமும் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் தற்போது அரங்கேற்றியுள்ள நாடகத்தின் மூலம் தன் மீது ஏற்பட்டுள்ள நீங்காத பழியை குறைத்துக் கொள்ளலாம் என்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் எண்ணம் நிறைவேறாது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கபட நாடகங்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்” என்று கூறியுள்ளார்.

http://www.kanyakumarinews.com/menu.php?value=newsfull&ids=5362

விவாதத்தை மீண்டும் சரியான திசைக்கு கொண்டு வந்த யாழ்வாலிக்கு நன்றி! என்னிடம் ஒரு முக்கியமான கேள்வி உண்டு. கருணாநிதிக்கு எடுத்துக் கொடுப்பதாகவும் வைத்துக் கொள்ளலாம். நாங்கள் இப்படி அழியப் போகிறோம் என்பதை நாங்கள் கருணாநிதிக்கு சரியான முறையில் தெரியப்படுத்தினோமா?

அழிகிறோம் என்பதை சிறு குழந்தையே அறியும்.கருணாநிதிக்கு நேரஞ்சல் செய்தால் தான் விளங்குவாரா அண்ணா?

அழிகிறோம் என்பது சிறு குழந்தைக்கே தெரியும் என்றால் எதற்காக அப்பொழுது நடந்த தேர்தலில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது? விருதுநகரில் எதற்காக வைகோ தோற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்?

கருணாநிதியும், மத்திய அரசும் உண்மை செய்திகளை மக்களுக்கு செல்ல விடாமல் தடுத்தனர்.இதனால் தான் தேர்த்தலில் வெல்ல முடிந்தது.மீண்டும் படு தோல்வியை தழுவி கொண்டார்களே!!!

  • கருத்துக்கள உறவுகள்

விவாதத்தை மீண்டும் சரியான திசைக்கு கொண்டு வந்த யாழ்வாலிக்கு நன்றி! என்னிடம் ஒரு முக்கியமான கேள்வி உண்டு. கருணாநிதிக்கு எடுத்துக் கொடுப்பதாகவும் வைத்துக் கொள்ளலாம். நாங்கள் இப்படி அழியப் போகிறோம் என்பதை நாங்கள் கருணாநிதிக்கு சரியான முறையில் தெரியப்படுத்தினோமா?

உங்கள் கேள்வியின் நியாயத் தன்மையை உணர்கின்றேன். போரின் இறுதி வாரங்களில் யாழ்ப்பாணத்திலேதான் இருந்தேன். இரட்சகர்கள் வருவார்கள் காப்பாற்றப்படுவோம் என மக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.

ஆனால் பழுத்த அரசியல்வாதி கலைஞர் வேண்டுமென்றே பழிவாங்கினார் என்பதே உண்மை.

அண்ணா உங்கள் உடபிறந்த சகோதரன் அடிபட்டு கீழே விழுந்து காயப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறான் என்று யாரோ ஒருவர் வந்து சொல்லுகிறார் என வைத்துக்கொள்வோம். உங்களுக்குச் சரியான முறையில் அறிவிக்கவில்லை என்று பேசாமல் இருப்பீர்களா? இல்லைத் துடித்துப் பதைத்து அந்த இடத்துக்கு ஓடுவீர்களா?

தெரிந்தும் கலைஞர் பேசாமல் இருந்தார்.

சபேசன் அண்ணா இப்படியே கதைச்சுக் கிட்டு இருந்தார் என்றால்..நான் அவருக்கு சூப்பில பாப்பா கொன்டுவந்து குடுப்பன்..... :D  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அழிகிறோம் என்பது சிறு குழந்தைக்கே தெரியும் என்றால் எதற்காக அப்பொழுது நடந்த தேர்தலில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது? விருதுநகரில் எதற்காக வைகோ தோற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்?

சிதம்பரத்தின் வெற்றியும், வைகோவின் தோல்வியும்... சந்தேகத்துக்கு இடமானது.

அந்தத் தேர்தலில்... பல கள்ள விளையாட்டுக்கள்... காங்கிரஸ் கட்சியால்... அரங்கேற்றப் பட்டது.

இது, பல இணையத்தளங்களில் வெளிவந்தது. இன்றும்... கூட, சிதம்பரம் வெற்றி பெற்றது, செல்லாது... என்று,

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு, தீர்ப்பு வழங்கப் படாமல்... இழுவையில்... இருக்கின்றது.

இது, தான்... இந்திய(இத்தாலிய) சனநாயகம்.

என்னுடைய சகோதரன் கீழே விழுந்து உயிருக்குப் போரடிக் கொண்டிருக்கிறான் என்று செய்தி வராமல் "சின்ன காயம்தான், அதெல்லாம் சமாளிக்கலாம், நடந்து போயே எல்லாவற்றையும் முடித்துவிடுவேன்" என்று செய்தி வந்து அத்துடன் பார்க்கப் போவதால் என்னுடைய வேலையும் போய்விடும் என்றால் அப்பொழுது நான் என்ன முடிவெடுப்பேன் என்கின்ற கோணத்தையும் பார்க்க வேண்டும்.

இப்பொழுது கலைஞர் தரப்பில் இருந்து பார்ப்போம். ஈழத்தில் இருந்து உதவி கேட்கிறார்கள். மறுபுறம் எதிர்கட்சிகளின் ஆலோசனையையும் கேட்கிறார்கள், இன்னொருபுறம் தாங்களே சமாளிப்போம் என்றும் சொல்கிறார்கள். அழிந்து கொண்டிருப்பது உண்மை என்றாலும் எதுவும் செய்ய முடியாது. மத்தியில் ஆட்சியை கவிழ்க்கின்ற பலம் இல்லை. ஈழத்திற்கு உதவ முற்பட்டால் தன்னுடைய ஆட்சிதான் போகும். குடும்பமே சிறைக்கு போக வேண்டி வரும். கட்சியும் அழிந்து போய் விடும். உதவியும் ஈழத்திற்கு போய் சேராது. இப்பொழுது என்ன செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தின் வெற்றியும், வைகோவின் தோல்வியும்... சந்தேகத்துக்கு இடமானது.

அந்தத் தேர்தலில்... பல கள்ள விளையாட்டுக்கள்... காங்கிரஸ் கட்சியால்... அரங்கேற்றப் பட்டது.

இது, பல இணையத்தளங்களில் வெளிவந்தது. இன்றும்... கூட, சிதம்பரம் வெற்றி பெற்றது, செல்லாது... என்று,

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு, தீர்ப்பு வழங்கப் படாமல்... இழுவையில்... இருக்கின்றது.

இது, தான்... இந்திய(இத்தாலிய) சனநாயகம்.

எல்லாம் அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்.. இது 2009 வரையிலான தமிழக அரசியல் நிலை.. காங்கிரசுக்கு 5 வீத வாக்கு வங்கி இருந்தது.. திமுக அல்லது அதிமுக முதுகில் சவாரி செய்யும்போது அந்த ஐந்து வீத வாக்குகள் வெற்றியைத் தேடித்தருவது தவிர்க்க முடியாதது..!

ஆனால் இனிமேலும் அந்த நிலை இல்லை.. காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் உள்ள வாக்கு வங்கியும் பறிபோகும் நிலை..! :D

ஆம், இன்றைய நிலை அதுவாக இருக்கலாம். 2009 மே மாதத்தில் நாங்கள் அழிந்த பின்புதான் தமிழ்நாட்டில் அது உறைத்தது. அதன் பிறகு வந்த தேர்தல்கள் காங்கிரஸ் கட்சியை பதம் பார்த்தன. இதை ஏன் 2009இன் ஆரம்பத்தில் நாங்கள் செய்யாமல் விட்டோம். "அனைவரும் அழியப் போகிறோம்" என்கின்ற செய்தியை சரியான முறையில் தமிழ்நாட்டில் சேர்க்காமல் விட்டோம். கடைசி நிமிடம் மட்டும் "உள்ளே வரவிட்டு அடிக்கும் கதையை" ஏன் பேசிக் கொண்டிருந்தோம்?

சபேசன்.. நீங்கள் சொல்வது சரியா என்று ஒருதரம் சிந்தித்துப் பாருங்கள்..!

தமிழகத்தில் அப்போது எழுச்சி ஏற்படாமலா போனது? உருவான எழுச்சியை காவல்துறையின் உதவியோடும், கல்விக்கூடங்களை மூடியும் அடக்கியது கலைஞர்தானே.. ஒரு தொலைக்காட்சியாவது ஈழக்கொடுமைகளை ஒளிபரப்பினவா? ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சியும் மிரட்டப்பட்டதை வேல்முருகன் அண்மையில் தெரிவித்திருந்தாரே..

எழுச்சியைத் தடுத்த கலைஞர், போராட்டத்தை தான் கடத்திக்கொண்டு போனார்.. மனிதசங்கிலி, உண்ணாவிரதம் என்று வகைவகையான காட்சிகள்..! மக்களும்.. ஆகா தலைவரே இறங்கிட்டாருப்பா என்று ஒதுங்கியதுதான் வரலாறு..

தகவலை நாங்கள் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை என்பதைவிட அங்கே தடுத்தார்கள் என்பதுதான் உண்மை.. இன்று மாணவர்கள் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள்..! காரணம் தடுப்பதற்கு அங்கே கலைஞர் பதவியில் இல்லை.. மறுவளமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதில் அனுகூலம் உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் ..ஊரிலை பலமான சந்திப்பு போலை.....உங்களைப் போன்ற புண்ணியவான்களால்(?)நமது இனம் சிறப்புடன் வாழவழிசமைக்கப் பட்டுளது (அழிக்க)....

Edited by alvayan

அத்தனையும்... உண்மை இசை.

முதல்வர் ஜெயலலிதா கூட... முன்னைய ஆட்சியில், "சோ" போன்ற ஈழ எதிர்ப்பாளர்களின் கருத்தை செவி மடுப்பதுண்டு. இப்போது.... நடக்கும் மாணவர் போராட்டத்தின் முன், அவர்களின் கருத்துக்களைக் கேட்டு நடந்தால்... ஆட்சிக்கே.. இழுக்கு வந்து விடும், என்ப‌தை... ந‌ன்கே புரிந்திருக்கின்றார். அத்துட‌ன்... (ச‌சிக‌லா) ந‌ட‌ராஜ‌னின், ஜெனிவா விட‌ய‌மும், அவவின்... க‌ண்ண‌சைவில்லாம‌ல்... ந‌ட‌ந்திருக்காது... என்று, ந‌ம்புகின்றேன்.

சபேசன் ..ஊரிலை பலமான சந்திப்பு போலை.....உங்களைப் போன்ற புண்ணியவான்களால்(?)நமது இனம் சிறப்புடன் வாழவழிசமைக்கப் பட்டுளது (அழிக்க)....

சிலருக்கு... இதுவே... பிழைப்பாய் போச்சுது, அல்வாயன்.

பெரு மூச்சுத்தான்... விட‌ முடியும்.

கருணாநிதி டெசோவைத் தூசு தட்டிக் கொண்டுவந்தும் ஒன்றும் உருப்படியாகச் செய்யவில்லை. மத்திய அரசில் இருந்து வெளியேறியும் ஒன்றையும் சாதிக்கவில்லை என்பவற்றுக்கு அப்பால் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தால் எரிச்சலில் இருக்கின்றார் என்பதைத்தான் இந்தச் செய்தி உணர்த்துகின்றது.

அவருக்கு ஈழத் தமிழ்மக்களை தனது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்தியே பழக்கப்பட்டுவிட்டது. அதனால் முதல்வர் ஜெயலலிதா ஏதாவது நல்லதைச் செய்து பெயரை எடுத்து அடுத்த தேர்தலிலும் வென்றுவிடுவாரோ என்று பயம் கொள்கின்றார்.

தனக்கு ஜால்ராப் போடுவதற்கு சில கறுப்புச் சட்டை போட்ட 'அறிஞர்களை'யும் கலைஞர் வைத்திருக்கிறார்.

அதில் ஒருவரான வீரமணி என்பவர் இன்று ஒரு கருத்தைத் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

டெசோ போட்ட தீர்மானங்களால் தானாம்ஜெயலலிதா சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

இரண்டு வாரங்களில் எல்லாம்முடிந்து விடும் என பிரபல 'அரசியல் ஆய்வாளர்களால்' எதிர்வு கூறப்பட்ட மாணவர்களின்  போராட்டங்கள் காரணமாக அரசியல் நகர்வாகவே இந்தத் தீர்மானத்தைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

ஆனால் இதற்கும்டெசோவிற்கும் முடிச்சுப்போடும் ஐயா வீரமணியை ஜால்ரா என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வது?

சரியான ஒரு அரசியல் தலைமை இல்லாமல் சின்னப் பையன்கள் என்று சொல்லப்பட்ட மாணவர்கள் அரசியல் வாதிகளை இந்தளவிறகு ஆட்டி வைத்ததே அவர்களது போராட்டத்தை வெற்றிகரமான போராட்டம் என்று சொல்வதற்குப் போதுமானது.

இங்கே கலைஞரை தாக்குவதை மட்டுமே சிலர் தங்களின் அரசியலாகக் கொண்டிருப்பதை நான் கண்டிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. நாளை அவர்கள் மீண்டும் ஆளும்கட்சி ஆவார்கள். அப்பொழுது அவர்களிடம் போய் நிற்க வேண்டி வரும்.

2. கலைஞரின் தவறை பற்றி மட்டும் பேசுவதன் மூலம் தாங்கள் செய்த தவறுகள மறைப்பதற்கு ஒரு கூட்டம் ஓடுப்பட்டு திரிகிறது

கலைஞரை குற்றம் சாட்டுவதை மட்டும் அரசியலாக கொண்டவர்களை ஆழமாகக் கவனித்தாலே போதும், நிறைய உண்மைகள் தெரியவரும். மெதுமெதுவாக என்றாலும் எல்லாவற்றையும் கட்டாயம் பேசுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் கேள்வியில் அர்த்தம் இருக்கிறது. விரைவில் அதன் தாக்கம் தெரியும். திமுக வெளியே வந்தது. மத்தியில் ஆட்சி கவிழவில்லை. 2009இல் வெளியே வந்திருந்தாலும் ஆட்சி கவிழ்ந்திருக்காது. ஆகவே திமுக ஏன் அதை செய்திருக்க வேண்டும் என்ற கேள்வி இனிக் கேட்கப்படும். ஆனால் யாரும் தர்க்கரீதியான பதிலை தரப் போவது இல்லை. மீண்டும் கருணாநிதியை திட்டி பதிலை எழுதிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் சிந்தனையை உருவாக்கும். பொறுத்திருந்து பாருங்கள்

2009 நிலையை நீங்கள் அறிந்தும் அறியாதது போல கருணாநிதிக்கு வக்காளத்து வாங்குகிறீர்கள். 2009 இந்திய நடுவன் அரசுக்கான தேர்தல் ஆண்டாக இருந்தது என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களோ அல்லது மறக்க முற்படுகிறீர்களோ தெரியவில்லை.

அன்று அதனை வாபஸ் வாங்கி இருந்தால்.. காங்கிரஸ் இன்னும் அடிவாங்கி இருக்கும். மேலும் அந்தத் தேர்தலுக்கு முன்னே அதனை ஆரம்பிச்சிருக்கலாம்.

இப்போ அடுத்த ஆண்டில் மீண்டும் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில்.. திமுக விலகினாலும் மற்றவர்கள் விலகி தமது பெயரை கெடுக்கமாட்டார்கள் என்று தெரிந்து தான் கருணாநிதி இந்த நாடகமே ஆடினார் என்பதை நீங்கள் மறைக்க முற்படுவது.. அபந்தம். :icon_idea:

இந்த விலகலின் நோக்கம் சட்டமன்றத் தேர்தலில் வாங்கின அடியை மீண்டும் வாங்காமல் தப்பிக்கும் தந்திரோபாயமே அன்றி.. ஈழத்தமிழர் விசுவாசம் அல்ல..!

  • கருத்துக்கள உறவுகள்
 
கலைஞர் தொடர்ந்தும் தவறு செய்து கொண்டிருக்கிறார். அல்லது தனது வாக்கு வங்கியை எப்படியாவது காப்பாற்ற டெசோ மாநாடு,மத்திய அரசை விட்டு வெளியேறல் என நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார்.இது தமிழ் நாட்டின் சாதாரண  மக்களே அன்றாடம் பேசிக்கொள்கிறார்கள்.
 
ஒரு காலத்தில் பிரபாகரன் தன்னை அழிக்க போகிறார் என ஜெயலலிதா சொன்னவர் என்பதும் தெரியும். ஆனால் தற்போது என்ன செய்கிறார் தமிழ் மக்களுக்கு என்பதை தமிழ் மக்கள் சிந்திப்பதா அல்லது பழையனவற்றை கிழறிக்கொண்டு இருப்பதா என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
 
நாளை கலைஞர் முதல்வராகி தமிழ் மக்களுக்கு நன்மை செய்தால் தமிழ் மக்கள் வேண்டாம் என்றா சொல்லப்போகிறார்கள். நிகழ்தகவு அவர் செய்ய மாட்டார் என்றே சொல்கிறது.

முன்னொரு காலம் எம் ஜி ஆரை ப் பின்பற்றி புலிகளுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்தார்.

பின்னர் ஜெயா காலத்தில் அவரைப் பின்பற்றி வை.கோ மூலம் புலிகள் தன்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர் என்று கூறி வை.கோ வை கட்சியில் இருந்து நீக்கி.. ஸ்ராலினை முன்னிலைப்படுத்தினார்.

இப்போ.. ஜெயா.. ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுத்து மக்கள் ஆதரவை தக்க வைப்பதை சகித்துக் கொள்ள முடியாது..

பல்டி நடனம் ஆடுகிறார்.

கருணாநிதியின் அரசியல் என்பது எப்போதுமே ஈழத்தமிழர்களை ஏமாற்றும் அரசியலாக இருந்துள்ளதே தவிர.. உண்மையாக அக்கறை கொண்ட ஒன்றாக இருந்ததில்லை.

2009 இல் சட்டமன்றத்தில் ஈழத்தமிழர் நலன் காக்கும்.. எந்த தீர்மானமும் கொண்டு வர முடியாது.. மத்திய அரசின் கொள்கையையே மாநில அரசு பின்பற்ற வேண்டும்.. எம் கைகள் கட்டப்பட்டிருக்கு என்று சாட்டுச் சொன்ன கருணாநிதியின் இடத்தில் இருந்து கொண்டு தான்.. ஜெயா இன்று.. மத்திய அரசை கலங்கடிக்க பல காரியங்களை ஆற்றுகின்றார்.

அன்று கருணாநிதியால் ஏன் அவை இயலாமல் போனது.. எல்லாம் சொக்கத்தங்க விசுவாசம் தான். :lol::D

இப்பொழுது மீண்டும் கருணாநிதிக்கு வருகிறேன்! தயவுசெய்து யாராவது கருணாநிதியால் 2009இல் இந்தப் படுகொலைகளை எப்படி தடுக்க முடிந்திருக்கும் என்பதை சரியான முறையில் சொல்லுங்கள். ஒரு வரைவின் மூலமாக இதை, இதை அவர் செய்திருந்தால் இது, இது நடந்திருக்கும், அதன் மூலம் எமது அழிவு தடுக்கப்பட்டிருக்கும் என்று விளங்கப்படுத்துங்கள். இதை ஒரு சவாலாக விடுக்கிறேன்.

தி.மு.க மத்திய தேர்தலில் எப்போதுமே அதிக தொகுதிகளை பெறுவது. போலி உண்ணாவிரதமிருக்காமல் 2009 தேர்தலில் காங்கிரசை எதிர்த்துக்கேட்டிருந்தால அதற்குமுந்தைய தேர்தலில் பெற்றிருந்தது போல அதிக தொகுதிகளை பெற்றிந்திருப்பார். அதிக மந்திரிப்பதவிகள் கிடைத்திருந்திருக்கும். கருணாநிதி விலகும் போது எதிர் அணி பலம் கூடியாக இருந்திருக்கும். இதனால் காங்கிரஸ் கருணாநிதியை கூட்டில் வைத்திருக்க அவர் கேட்பவற்றை செய்த்திருக்கும்.  ஆனல் அவர் உண்ணா விரதமிருந்து எல்லோரையும் ஏமாத்தி தானும் ஏமாந்து கனி மொழியும் சிறைக்கு போய் வந்திருக்கிறா. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், இன்றைய நிலை அதுவாக இருக்கலாம். 2009 மே மாதத்தில் நாங்கள் அழிந்த பின்புதான் தமிழ்நாட்டில் அது உறைத்தது. அதன் பிறகு வந்த தேர்தல்கள் காங்கிரஸ் கட்சியை பதம் பார்த்தன. இதை ஏன் 2009இன் ஆரம்பத்தில் நாங்கள் செய்யாமல் விட்டோம். "அனைவரும் அழியப் போகிறோம்" என்கின்ற செய்தியை சரியான முறையில் தமிழ்நாட்டில் சேர்க்காமல் விட்டோம். கடைசி நிமிடம் மட்டும் "உள்ளே வரவிட்டு அடிக்கும் கதையை" ஏன் பேசிக் கொண்டிருந்தோம்?

தமிழீழம் ஈழத்தமிழரின் விருப்பல்ல.. என்று கனிமொழியையும் பாலுவையும் காங்கிரஸ் எம்பிக்களோடு ராஜபக்சவை சந்திக்க அனுப்பி சொல்ல வைச்சவர் தான் உங்கள் கருணாநிதி..!

அன்று அமெரிக்க சிறீலங்காத் தூதரான பிளேக்கும் 95% தமிழ் மக்கள் தமிழீழத்தை கோரவில்லை என்று தன்னாய்வு அறிக்கை விட்டார்.

அதற்கும் கருணாநிதியின் அணுகுமுறைக்கும் அதிக வித்தியாசம் இருக்கவில்லை.

ஆனால் இன்று.. தனி ஈழம்.. தமிழீழம் என்பதற்கான விருப்பறியும் ஜனநாயக வழிமுறை தேர்தலை நடத்துங்கள்.. தமிழீழம் அமைவதன் மூலமே ஈழத்தமிழரின் நலன்காக்க முடியும் என்று 8 கோடி தமிழ் மக்களின் வாக்குகளை பிரதிநிதிப்படுத்தும் ஒரு சபையான சட்டசபை ஒரு மனதாக இயற்றியுள்ள தீர்மானம் என்பது பிளேக்கினதும்.. காங்கிரஸ் எம்பிக்களினதும்.. சிறீலங்கா அரசினதும் கூற்றுக்கள் தவறு என்ற அடிப்படை இராஜதந்திர வெற்றியை எமது போராட்ட இலக்கிற்கு அளித்துள்ளது.

விடுதலைப்புலிகள் கூட உணர்ந்திருந்தார்கள்.. வெறும் ஆயுத வெற்றி மூலம் தமிழீழத்தை அடைய முடியாது என்று. இன்றேல் எப்பவோ தலைவர் தமிழீழப் பிரகடனம் செய்திருப்பார். தமிழீழம் என்பதன் எல்லையை வகுத்துக்காட்டினார் தலைவர் ஒரு De facto state ஆக தமிழீழத்தை அமைத்து.

இருந்தாலும் அதற்கான சட்ட அங்கீகாரமானது அவ்வளவு இலகுவில் கிடைக்கக் கூடிய ஒன்றல்ல. அதுவும் பயங்கரவாத முலாம் பூசப்பட்ட அமைப்பின் கையில் அந்தத் தேசம் இருப்பது அதற்கு உகந்ததும் அல்ல.. என்பதையும் புலிகள் அறிந்து கொண்டு தான்.. பேச்சு மேடைக்கு வந்தார்கள். கடைசி வரை அந்த முலாமில் இருந்து வெளியேறப் போராடினார்கள். முடியவில்லை. செத்தாவது அதை அகற்ற முடிவு கட்டினார்கள். இன்று எல்லாம் அடிப்படையில் இருக்குது. ஆனால் சரியான நகர்வுகள் இன்மையால் தோல்வி என்ற ஒரு எண்ணப்பாடே விதைக்கப்பட்டுக் கொண்டிருக்குது.

இந்த இடத்தில் தமிழக மாணவர்களினதும் அரசினதும்.. சிறு கட்சிகளினதும்.. உந்துதலே.. மீண்டும் நாம் எமது தேசத்துக்கான அங்கீகாரத்தின் முதற்படி நோக்கி நகரச் செய்துள்ளது. தனி ஈழத்தை தமிழக சட்டமன்ற முதல்வர் தானே.. வலியுறுத்தி.. ஐநா மன்ற மேற்பார்வையில் சர்வசன வாக்கெடுப்புக்கு அதனைக் கொண்டு வருவதன் மூலம்.. தமிழ் மக்கள் அதற்கு அளிக்கும் ஆதரவை ஜனநாயக ரீதியில் காட்டச் செய்து.. அதனை..உலகம்  அங்கீகரிக்கச் செய்யலாம் என்ற முக்கிய நகர்வு அங்கு நடந்தேறியுள்ளது.

புலிகளின் அச்சுறுத்தலால் 5% தமிழர்கள் அங்கீகரித்தாக சர்வதேசத்தால் சிறீலங்காவால்.. காட்டப்பட்ட  ஒன்றை இன்று 8 கோடி தமிழர்கள் சார்ப்பான சபை அங்கீகரித்துள்ளதானது.. அதற்கு சர்வதேச அங்கீகாரம் கோரி வாக்களிப்பு கோரி உள்ளமையானது ஒரு மகத்தான இராஜதந்திர வெற்றி ஆகும்.

இதுவும் புலிகள் தேடித்தந்த ஒன்று தான்.. மறைமுகமாக..! இதனை நீங்கள் உணராமலா கருத்து வைக்கிறீர்கள். ஏன் இதனை கருணாநிதி இவ்வளவு காலமும் செய்யவில்லை. டெசோ தீர்மானத்திலும் மத்திய அரசின் செல்லப்பிள்ளையாக இருக்க விரும்பி.. தமிழீழத்தை.. தனி ஈழத்தை நீர்த்துப் போகச் செய்தவர் தானே இந்தக் கருணாநிதி.

அதுக்கு என்ன சொல்லுறீங்க..???! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கருணாநிதி அன்று தொடக்கம் ஈழத்தமிழர்களின் விசுவாசியல்ல....70களில் இருந்தே அவ்வப்போது ஈழத்தவர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்பவர்.
இப்பவும்..இனிமேலும் கருணாநிதிக்கு ஆதரவாக பேசுபவர்களின் நிலமையையும்  அனைவரும் கவனத்திலெடுக்க வேண்டும்.
 
அளந்தது அவ்வளவுதான்.

கருணாநிதியும்... அவர்களின் பின் புலப் பணமும், எவராலும் நினைத்துப் பார்க்க முடியாத, ஆசியாவின் முதன்மைக் கோடீஸ்வரர்கள். தமிழனைச் சார்ந்து.. தமிழனால்... வளம் பெற்ற, புதுப் பணக்காரர்கள். அவர்களுக்கு... தமிழினம் என்பது, இரண்டாம் பட்சமே. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை... இவர்கள். சுருட்டிக் கொண்டே.. இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

483779_4852210271498_794255724_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தா செல்லாது செல்லாது.... ஜெயா டிவி க்கு பட உரிமைய தந்தா தான் வெளியிட விடுவம்.....:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.