Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவித்த பனங்கிழங்கு துவையல்- சமையல் குறிப்பு - 13

Featured Replies

இது காரமும் இனிப்பும் கலந்த சிற்றுண்டி. பனங்கிழங்கு கிடைக்கும் காலங்களில் வீட்டில் செய்வார்கள்.

தேவையான பொருட்கள்.

1. அவித்த பனங்கிழங்கு -- 4

2. செத்தல் மிளகாய் - 2 (நடுத்தரம்)

3. மிளகு - 8-10

4. தேங்காய் பூ - 1/2 கப் (125 மி. லி. அளவு கரண்டி)

5. உப்பு -   சுவைக்கு ஏற்ப 

6. சீனி/சர்க்கரை - 2 மேசை கரண்டி/ சுவைக்கு ஏற்ப.

7. உள்ளி - ஒரு பல்லு, (நடுத்தரம்)

dscn2741h.jpg

செய்முறை 

1. அவித்த பனங்கிழங்கை குந்து எடுத்து/ வார்ந்து , சிறிய துண்டுகளாக முறித்து/ வெட்டி கொள்ளவும்.

 சிறிய உரலில் இடிப்பதாயின் 

2. செத்தல் மிளகாய், உப்பு, மிளகு என்பவற்றை உரலில் போட்டு நன்கு பொடியாக்கவும்.

3. உள்ளியை சேர்த்து இடிக்கவும்.

4. முறித்து வைத்த கிழங்கை பகுதி பகுதியாக போட்டு இடிக்கவும்.

5. கிழங்கு துண்டுகள் ஓரளவு இடிபட்டு வந்ததும், தேங்காய் பூ , சீனி இரண்டையும் கலந்து நன்கு இடிக்கவும்.

6. இப்போ துவையல் பசைத்தன்மையாக குழைந்து வரும்.

7. உரலில் இருந்து இறக்கி, துவையலை பந்தாக உருட்டி பரிமாறவும்.

Food processor இல் அரைப்பதாயின்.

2. தேங்காய் பூ , செத்தல் மிளகாய், உள்ளி, உப்பு என்பவற்றை போட்டு முதலில் அரைக்கவும், மிளகை  பொடியாக்கி போடவும்.

3. கலவை அருவல் , நொருவலாக அரைபட்டதும், முறித்து வைத்த கிழங்கை போட்டு அரைக்கவும்.

4. இறுதியாக சீனியை போட்டு அரைத்து இறக்கி, உருண்டையாக உருட்டி கொள்ளவும்.

dscn2751x.jpg

இது இரண்டு பேருக்கான சிற்றுண்டிக்கு போதும்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், குளக்காட்டான்!

சும்மா இருந்த நாக்கில் நீரூற வைத்துவிட்டீர்கள்!

இதை அடிக்கடி நாங்கள் செய்வதுண்டு! செத்தல் மிளக்காயக்குப் பதிலாகத் தோட்டத்திலிருந்து, உடனே பிடுங்கிய பச்சை மிளகாய் தான் போடுவோம்!  :D

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள் குளக்காட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி குளம்ஸ்.நாங்களும் பச்சை மிழகாய் போட்டதாகதான் ஞாபகம்.இங்கு ஒரு நாளும் செய்ய வில்லை.இதைப்பாத்தவுடன் நாவூறுது.அது சரி சீனி போடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி குளம்ஸ்.நாங்களும் பச்சை மிழகாய் போட்டதாகதான் ஞாபகம்.இங்கு ஒரு நாளும் செய்ய வில்லை.இதைப்பாத்தவுடன் நாவூறுது.அது சரி சீனி போடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை.

உங்களைப் போல ஆக்களுக்குச் சீனி போடுவதில்லை! குழந்தைப் பிள்ளையளுக்குக் கொஞ்சம் வேறயா எடுத்துவைச்சுச் சீனி கலந்து குடுக்கிறவை! :D

  • தொடங்கியவர்

நன்றிகள், குளக்காட்டான்!

சும்மா இருந்த நாக்கில் நீரூற வைத்துவிட்டீர்கள்!

இதை அடிக்கடி நாங்கள் செய்வதுண்டு! செத்தல் மிளக்காயக்குப் பதிலாகத் தோட்டத்திலிருந்து, உடனே பிடுங்கிய பச்சை மிளகாய் தான் போடுவோம்!  :D

நன்றி. மிளகாய் காரத்துக்கு தானே. பச்சை மிளகாயின் சுவை சிறிது வித்தியாசப்படும். எங்கள் வீட்டில் செத்தல் மிளகாய் தான் போடுவது.

பகிர்விற்கு நன்றிகள் குளக்காட்டான்.

நன்றி 

பகிர்வுக்கு நன்றி குளம்ஸ்.நாங்களும் பச்சை மிழகாய் போட்டதாகதான் ஞாபகம்.இங்கு ஒரு நாளும் செய்ய வில்லை.இதைப்பாத்தவுடன் நாவூறுது.அது சரி சீனி போடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை.

நன்றி. சீனி அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி தான். கட்டாயம் என்று இல்லை. எங்கள் வீட்டில் சீனி போட்டும் செய்வதுண்டு, போடாமலும் செய்வதுண்டு. அதனால் தான் சுவைக்கேற்ப என போட்டேன்.

dscn2751x.jpg

உருண்டை ஏன் அதிகம் மஞ்சள் நிறமாய் உள்ளது? தேங்காய்பூ கலவையினாலா? அல்லது கமெராவின் பாதிப்பா? நாம் செய்து உண்ணும் உருண்டையில் தேங்காய் பூ, இனிப்பு கலப்பது இல்லை. அதன் நிறம் மென் பச்சையாக தோன்றும்.

Edited by போக்குவரத்து

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இருக்கேக்க இதச் சாப்பிட்டுப் போட்டு மனுசர் படுறபாடு சொல்லிமாளாது .கண்ணால அருவி கொட்டும்  அவ்வளவு உறைப்பு 

அதுக்குப் பிறகு பல்லுக்க கொழுவின  தும்பை எடுக்க ஒராள் வேணும்  :)

  • தொடங்கியவர்

உருண்டை ஏன் அதிகம் மஞ்சள் நிறமாய் உள்ளது? தேங்காய்பூ கலவையினாலா? அல்லது கமெராவின் பாதிப்பா? நாம் செய்து உண்ணும் உருண்டையில் தேங்காய் பூ, இனிப்பு கலப்பது இல்லை. அதன் நிறம் மென் பச்சையாக தோன்றும்.

பனங்கிழங்கின், நிறம் மெல்லிய  பழுப்பு மஞ்சள். அதற்கும் செத்தல் மிளகாயும் சேர்க்கும் பொது இந்த நிறத்தில் வந்தது.

பச்சை மிளகாய் சேர்த்து இடித்தால் பச்சை நிறமாக தோறும் தானே. :) 

ஊரில இருக்கேக்க இதச் சாப்பிட்டுப் போட்டு மனுசர் படுறபாடு சொல்லிமாளாது .கண்ணால அருவி கொட்டும்  அவ்வளவு உறைப்பு 

அதுக்குப் பிறகு பல்லுக்க கொழுவின  தும்பை எடுக்க ஒராள் வேணும்  :)

அது உண்மை தான். தும்பு பெரிய பிரச்சனை. :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இருக்கேக்க இதச் சாப்பிட்டுப் போட்டு மனுசர் படுறபாடு சொல்லிமாளாது .கண்ணால அருவி கொட்டும்  அவ்வளவு உறைப்பு 

அதுக்குப் பிறகு பல்லுக்க கொழுவின  தும்பை எடுக்க ஒராள் வேணும்  :)

நந்து, இதுக்கொரு வழியிருக்கு! :D

அவித்த பனங்கிழங்கை, இரண்டாகப் பிழந்தபின்னர், அவற்றை ஒவ்வொன்றாக ஒரு சுளகின் மேல், மல்லாத்தி வைத்துக், ஒரு கரண்டியால், நீங்கள் தனியாகக் கிழங்கை மட்டும் வழித்தெடுக்கலாம்! தும்பு தனியாக வந்துவிடும்! மரம் சீவும் போது வரும் சீவல்கள் மாதிரி வரும்!  பின்னர் துவையலைச்க் செய்யலாம்! நீங்கள் நினைப்பது போல், அதிக நேரம் எடுக்காது!

பொதுவாக தும்பு எடுத்து தான் இடிக்கிறது. நீங்கள் சொல்லும் முறை வித்தியமாக இருக்கிறது.

மேலே போட்ட படத்தில் வெளிபகுதியில் தும்பு பெருமளவில் எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் கிழங்கின் உள்  இருக்கும் துப்பை எடுப்பது முடியாத காரியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்க்க வாயூறுது. கடவுளே இதெல்லாத்தையும் எண்ட கண்ணில ஏன் காட்டுறாய்

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க வாயூறுது. கடவுளே இதெல்லாத்தையும் எண்ட கண்ணில ஏன் காட்டுறாய்

உங்கள நீண்ட நாள்களூக்கு பிறகு காண்பதில் மிக்க மகிழ்ச்சி சுப்பர் அண்ணை ஆப் கேசாகே :)

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் பழைய ஆக்களெல்லாரையும் மீண்டும் ஒரே நேரத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

குளக்காட்டானின் பனங்கிழங்கு துவையல்.. அந்தளவுக்கு மகிமை பொருந்தியது போல் உள்ளது. பகிர்விற்கு நன்றி குளம்ஸ்.

இதில் எங்கட அம்மம்மா.. பச்சை மிளகாய்.. தேங்காய் சொட்டு.. இதர ஸ்பைஸ்..எல்லாம் போட்டு உரலில இட்டு..உலக்கையால்..துவைச்சு.. உருட்டித் தருவா.. சூப்பரா இருக்கும்.

சிலவேளைகளில் உறைப்புக்குப் பதிலா.. சீனியும் சேர்க்கிறவா..!

உரலில் இடித்தது தான் சுவை. இதற்கு பிளண்டரோ.. கிரைண்டரோ பாவிப்பதில்லை..! நான் நினைக்கிறேன்.. தும்பு மற்றும் சரியான பதத்தில் எடுக்க முடியாது என்பதற்காகவாக இருக்கலாம். :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

பார்க்க வாயூறுது. கடவுளே இதெல்லாத்தையும் எண்ட கண்ணில ஏன் காட்டுறாய்

நன்றி.

யாழின் பழைய ஆக்களெல்லாரையும் மீண்டும் ஒரே நேரத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

குளக்காட்டானின் பனங்கிழங்கு துவையல்.. அந்தளவுக்கு மகிமை பொருந்தியது போல் உள்ளது. பகிர்விற்கு நன்றி குளம்ஸ்.

இதில் எங்கட அம்மம்மா.. பச்சை மிளகாய்.. தேங்காய் சொட்டு.. இதர ஸ்பைஸ்..எல்லாம் போட்டு உரலில இட்டு..உலக்கையால்..துவைச்சு.. உருட்டித் தருவா.. சூப்பரா இருக்கும்.

சிலவேளைகளில் உறைப்புக்குப் பதிலா.. சீனியும் சேர்க்கிறவா..!

உரலில் இடித்தது தான் சுவை. இதற்கு பிளண்டரோ.. கிரைண்டரோ பாவிப்பதில்லை..! நான் நினைக்கிறேன்.. தும்பு மற்றும் சரியான பதத்தில் எடுக்க முடியாது என்பதற்காகவாக இருக்கலாம். :)

பலருக்கு பிடித்திருக்கிறது. நன்றி :) . உரலில தான் பொதுவாக இடிக்கிறது. கிர்ரைண்டர் செய்முறை, புலம் பெயர் நாட்டில் உரல் இல்லாதவர்களுக்காக.

நான் ஒரு சிறிய கல்லுரல் வாங்கி வைத்துள்ளேன்.. :)

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

சீனி, உப்பு, செத்தல்மிளகாய் எல்லாம் போட்டு... அருமந்த பனங்கிழங்கு பழுதாய்ப் போய் விடுமோ... என்று பயமாயிருக்கு, குளக்காட்டான்.

  • தொடங்கியவர்

சீனி, உப்பு, செத்தல்மிளகாய் எல்லாம் போட்டு... அருமந்த பனங்கிழங்கு பழுதாய்ப் போய் விடுமோ... என்று பயமாயிருக்கு, குளக்காட்டான்.

உங்களுக்கு பனங்கிழங்கின் சுவை வேறு எந்த சேர்மானமும் இல்லாமல் பிடித்திருந்தால் அப்படியே சாப்பிடலாம். மேலே எழுதின பலரது கருத்தையும் பார்த்தால், உந்த சேர்மானம் பலருக்கு பிடித்துள்ளது போல் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்லு உரலிலை இடிச்சால் இன்னும் நல்லாய் இருக்கும் . பனங்கிழங்கு உடம்புக்கு நல்லது . உங்கடை றெசிப்பி நல்லாய் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

பனங்கிழங்கு,இராசவள்ளி,மரவள்ளி கிழங்கு போன்றன அதிகம் சாப்பிட்டால் உடம்பு வைக்குமா?

பனங்கிழங்கு,இராசவள்ளி,மரவள்ளி கிழங்கு போன்றன அதிகம் சாப்பிட்டால் உடம்பு வைக்குமா?

அளவோடு சாப்பிட்டு மிகுதியை மற்றவர்களுக்கு கொடுத்தால் உடம்பு வைக்காது

  • தொடங்கியவர்

பனங்கிழங்கு,இராசவள்ளி,மரவள்ளி கிழங்கு போன்றன அதிகம் சாப்பிட்டால் உடம்பு வைக்குமா?

வந்திய தேவன் சொன்ன பதில் சரியானது.

எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதில் தங்கி இருக்கிறது.

மேலும்

இதற்கு நீங்கள் ஆம் / இல்லை என்று ஒற்றை பதிலை எதிர்பார்த்தீர்கள் என்றால் கஷ்டம் தான்.

பொதுவாக கிழங்கு வகைகளில் மாச்சத்து அதிகம் என்றாலும், அவற்றில் இருக்கும் மாச்சத்து எவ்வளவு விரைவில் சமிபாடடைந்து குருதியில் குழுக்கொசின் அளவை அதிகரிக்கிறது என்பதிலும், கிழங்கு  வகைகளில் எவ்வளவு நார் சத்து இருக்கிறது என்பதை கொண்டே உடல் நிறை அதிகரிக்க செய்யுமா இல்லையா என தீர்மானிக்க முடியும்.

குருதியில் விரைவில் குளுகோசின் அளவை அதிகரிக்க செய்யும் உணவுகள் சலரோக நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல. அதே நேரம் உடலில் விரைவாக குளுகொசின் அளவை அதிகரிக்க செய்யும் உணவுகளை அளவு கணக்கிலாமல் சாப்பிட்டால் உடல் நிறை அதிகரிக்கவும் செய்யும்.

உதரணத்துக்கு உருளை கிழங்கை தோல் நீக்கி சமைத்தால் அதில்  இருந்து கிடைக்கும் ஊட்டசத்துகளின் அளவு மிக குறைவு, மாச்சத்து அதிகம், குருதியில் விரைவில் குழுக்கொசின் அளவை அதிகரிக்க செய்யும்.

பனங்கிழங்கின், இராச வள்ளி கிழங்கின் மாச்சத்து எவ்வளவு விரைவில் சமிபாடு அடைந்து குருதியில் குழுக்கொசின் அளவை அதிகரிக்க செய்யும் என தெரியாது, 

உங்களுக்கு உண்மையில் எந்த உணவு பொருட்கள் குருதியில் குழுக்கொசின் அளவை சடுதியாக அதிகரிக்கிறது/ சிறிது சிறிதாக அதிகரிக்கிறது, எந்த உணவுகள் உடல் எடை அதிகரிப்பை தவிர்க்க உதவும் என அறிய விருப்பம் என்றால் 

அளவு எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறது என்பதை பொறுத்து உணவுகளை பிரிக்கலாம்.  இவ்வாறு பிரிக்க பயன்படும்

சுட்டியை "Glycaemic Index"  என அழைப்பர்.  இந்த சுட்டி கூடிய உணவுகளை உண்பதை  சலரோகம் உள்ளவர்கள், அதிகரித்த உடல் நிறை, இரத்த அழுத்தம்

உள்ளவர்கள் தவிப்பது நல்லது.

இந்த சுட்டி அதிகம் உள்ள உணவுகளுக்கு உதாரணம்.

மசித்த உருளை கிழங்கு - 70

வெள்ளை பாண் - 70

வெள்ளை அரிசி சோறு- 98

Cheerios - 74

Baguette ( பாண்)- 95

Cornflakes - 84

இந்த சுட்டி மத்திய அளவில் உள்ள உணவுகள்.

குஸ்  குஸ் - 65

Muesli, non toasted - 56

முழு கோதுமை பாண் (whole wheat bread)- 69

பசுமதி அரிசி சோறு - 58

மிக குறைந்த சுட்டி உள்ள உணவுகள்.

கச்சான்/ நிலகடலை - 14

பால் - 27

அவித்த சிந்தாமணி கடலை - 42

முழுமையான பட்டியலை பார்க்க 

http://www.weightlos...ndex_tables.htm

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120268

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 பனங்கிழங்கு போகம் வந்திட்டால் எங்கடை வீட்டிலை  துவையல் அந்தமாதிரி களைகட்டும்....சொல்லி வேலையில்லை.......சீனி சக்கரையேல்லாம் போடமாட்டம்.......மிளகும் உள்ளியும் செத்தலும் அந்தமாதிரி தூக்கும்.அதுவும் மர உரலிலை போட்டு இடிச்சு துவைச்சால் இன்னும் விசேசம் கண்டியளோ...... :wub:
குழைக்காட்டான்ரை செய்முறையை நாங்கள் புளுக்கொடியல் மா உருண்டைக்குத்தான் பாவிக்கிறனாங்கள். ம்....அதுவும் அந்தமாதிரித்தான் இருக்கும் :) .....இஞ்சை பிறந்துவளர்ந்ததுகளுக்கு உந்த அருமையெல்லாம் எங்கை தெரியப்போகுது?
நன்றி குழைக்காட்டான்.

நீங்கள் சொல்வது சரியே பனை மற்றும் பனை சம்பந்தப்பட்ட பொருட்கள் எமது வாழ்வோடு ஒன்றியவை, மிகவும் கவலைக்குரிய விடயம் போர்க்காலத்தின் போது கணிசமான பனைமரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மீள்நடுகை என்பது அவசியமாகின்றது.

நன்றி.  புழுக்கொடியல் மாவுக்கு தேங்காய் பூ போட்டு குழைத்து சாப்பிடுவோம். நீங்கள் சொல்லும் முறையில் செய்ததில்லை. ஒரு நாளைக்கு செய்து பார்த்தால் போச்சு.

நீங்கள் சொல்வது சரியே பனை மற்றும் பனை சம்பந்தப்பட்ட பொருட்கள் எமது வாழ்வோடு ஒன்றியவை, மிகவும் கவலைக்குரிய விடயம் போர்க்காலத்தின் போது கணிசமான பனைமரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மீள்நடுகை என்பது அவசியமாகின்றது.

நீங்கள் சொல்வது முக்கியமான விடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.