Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஈழத்தை அடையும் வழி அரசியலா ..அல்லது ஆயுதமா?

Featured Replies

181038_506550179401230_1150397208_n.jpg

தமிழ் ஈழத்தை அடையும் வழி அரசியலா ..அல்லது ஆயுதமா?
**************************************************************************************
ஓர் அரசியல்-ராணுவ ரீதியான அலசல்!
*******************************************************
மு.வே.யோகேஸ்வரன்
*********************************
38 ஆண்டுகால ஈழ விடுதலைப் போராட்டம் -ஆயுதப் போராட்டம் கடந்த 1990 முதல் 2009 வரை சுமார் 19 வருடங்கள் ஈழத்தின் பெரும்பாலான பகுதிகளை புலிகள் ஆட்சி செய்யும் அளவுக்கு
வலுவும் திடமும் பெற்றிருந்ததை யாரும் மறுக்க முடியாது.புலிகளின் ஆட்சிக் காலம் என்பது மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் உயர்வு பெற்ற காலம் என்று கூறினால் அது மிகையாகாது. உலகில் எந்த நாட்டிலும் நடை பெற்றிராத வகையில் புலிகள் நிர்வாகத்தை திறம்பட நடாத்தினர் என்பதை உலகம் அறியும்.ஏன்? எதிரிகள் கூட வியந்தனர்.கற்பழிப்போ,வழிப்பறிகளோ,கொள்ளைகளோ,
ஏமாற்றுதலோ, இன்றி 19 வருடங்கள் ஆட்சி நிர்வாகத்தை எந்த நாட்டின் துணையும் இன்றி நடாத்துவது என்பது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.இத்தனைக்கும் மேலாக ஒரு தனினபர்கூட அக்கால கட்டத்தில் உணவில்லை என்று பசியால் இறந்ததாக வரலாறும் இல்லை.நிர்வாகத்தின் நேர்த்தி அப்படி இருந்தது.இரவு 12 மணிக்கு தன்னந் தனியாக வீதியால் ஒரு இளம் பெண் எதுவித பயமும் இன்றி நடந்து போன நாடு உண்டென்றால் அது ஈழம்தான்.
தமிழ் ஈழ நிர்வாக கடமைப்பு!
*****************************************
தமிழ் ஈழத்துக்கென தனியாக வங்கிகள் அமைக்கப்பட்டன .நீதி நிர்வாகத்துக்கென நீதி மன்றங்கள் அமைக்கப் பட்டன.பொருள் விநியூகத்துக்கென கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டன.விவசாய வளர்ச்சிக்கென விவசாயச் சங்கங்ககள் அமைக்கப்பட்டன.நாடகம்,நடனம்,பாட்டு,இசை,வளர்ச்சிக்கு என கலை பண்பாட்டுத்துறை அமைக்கப்பட்டது.நாட்டில் குற்றங்கள் நடந்தால் அதை தடுக்க தமிழ் ஈழத்துக்கென ஆண்-பெண்களைக் கொண்ட காவல்துறை அமைக்கப் பட்டது. மீன்பிடி வளர்ச்சிக்கென மீன்பிடி வளர்ச்சிக் கழகங்கள் அமைக்கப் பட்டன.விளையாட்டுக்கென விளையாட்டுத் துறை அமைக்கப் பட்டது. இப்படி ஒவ்வொரு துறையிலும் புலிகள் புகுந்து,திட்டமிட்டு சிறப்பாக கால் பதித்து நடாத்தி வந்தனர்.அதேவேளை,எல்லையில் தொல்லை தந்த ராணுவத்துக்கு எதிராகவும் அவர்கள் போராடினர்.தம் மண்ணுக்காக உயிரையும் துறந்தனர்.ராணுவ முகாம்களும் அடிக்கடி வீழ்ந்தன.

மூன்று பெரும் இனக்கலவரங்கள்
************************************************
இவை எல்லாம் ஆயுதப் போராட்டத்தால் கிடைத்தவைதான்.1948 முதல் அரசியல் ரீதியாக போராடிய தமிழர்கள் 1975 வரை கண்டது எதுவும் இல்லை மாறாக மூன்று பெரும் இனக்கலவரங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன்,கோடிக்கணக்கான தமிழர்களின் சொத்துக்கள் அழிந்ததுதான் மிச்சம்.1948-முதல் 1977 வரை சுமார் 30 வருடங்களாக அரசியல் ரீதியாக நடந்த போராட்டங்கள் எல்லாமே சிங்கள இனவாதிகளால் முறியடிக்கப் பட்டன..என்பது மட்டுமல்ல அகிம்சைபோர் நடாத்தியவர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.தமிழ்த் தலைவர்களின் வேஷ்டிகளைக் கூட உரிந்து 50 களில் கொழும்பு காலி முகத் திடலில் குண்டாந் தடிகளால் தாக்கினர் .சிங்கள இனவெறி பிடித்த காவல் துறையினர்.யார் கேட்டார்கள்? கேட்டாலும் நீதி கிடைத்துவிடவா போகிறது?
பிரபாகரன் என்னும் வாலிபன் உதயம் ஆனார்!
***************************************************************
1975 இல் பிரபாகரன் என்னும் ஒரு வாலிபன் ஆயுதம் தூக்கியபின்பே சிங்களம் அடங்கியது.தமிழன் கையில் ஆயுதம் வந்தபின்னர்தான் அவர்கள் மிரண்டார்கள்.இதை யாராலும் மறுக்கமுடியுமா? முடியாது.அதற்காக ஆயுதப் போராட்டம்தான் சிறந்தது என்று சொல்ல நான் வரவில்லை.ஆனால்.மனித நேயமும்,காருண்யமும்,மிக்கோர் மத்தியில் அகிம்சைப்போர் நடாத்துவதில் அர்த்தம் உண்டு.இன்று இலங்கையில் நடை பெறும் சம்பவங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு சிங்களவன் என்றால் யார் என்று சொல்ல வேண்டியதில்லை.அவனுக்கும் அகிம்சைக்கும் என்ன சம்பந்தம்?என்று யாருக்கும் தெரியாது.அப்படி இருக்க அகிம்சைக்கு அங்கே இடம் ஏது?
தமிழ் நாட்டில் மாணவர்கள் நடாத்திய அகிம்சை போர் மூலம் தமிழ் நாடு அரசு பணிந்தது.ஆனால் இந்திய மத்திய அரசு என்ன சொல்கிறது?தமிழ் நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஒன்றும் கட்டாயம் இல்லை என்று வெளியுறவு அமைச்சரே இரண்டு நாளில் கூறிவிட்டார்.இது தான் காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு.அதேவேளை எதிர்க் கட்சியான பாரதீய.ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்ன? ஈழத்தில் தமிழ் ஈழம் அமைவதை பாரதீய ஜனதாக் கட்சி அனுமதிக்காது என்று அத்வாணி,ஜஸ்வந்த் சிங்கா உட்பட பலர் கூறிவிட்டனர்.அடுத்து மூன்றாவது அணிதான் மிச்சம்.அது வருமா..வராதா..?அப்படி வந்தாலும் அங்கே செல்வி ஜெயலலிதா மட்டும் இல்லை.வடக்கர்களாகிய முலாயம் சிங்யாதவ் , மாயாவதி மமதா பானர்ஜி போன்றோர்தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சிலவேளை அ.தி.மு.க.வுக்கு 35-40 கு இடையில் ஆசனங்கள் கிடைத்தாலும் கூட தமிழ் ஈழம் அமைய இவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று கூறமுடியாது.முலாயம் சிங்,மாயாவதி இருவர் மட்டுமல்ல , மமதாவும் தமிழ் ஈழத்துக்கு எதிராகவே சமீப காலமாக கருத்துச் சொல்லி வருகிறார்கள்.அப்படியிருக்க செல்வி ஜெயலலிதாவால் தனித்து என்ன செய்ய முயும்? அங்கே ஒரே ஒரு துருப்புச் சீட்டு மட்டுமே உண்டு.மூன்றாவது அணியில் செல்வி ஜெயலலிதாவின் ஆதரவு கிடைத்தால் மட்டும் அரசு அமைக்கமுடியும் என்னும் ஒரு நிலை வரும்போது ஈழத்தை துருப்புச் சீட்டாக பாவித்து ஆதரவு அளிக்க செல்வி ஜெயலலிதா முன்வந்தால் வடக்கு அதற்குச் சம்மதிக்குமா? அப்படி சம்மதித்தாலும் கூட இறுதிவரை செல்வி
ஜெய லலிதா ஈழம் என்னும் குறிக்கோளுடன் இருப்பாரா? இல்லை இன்று அரசியல் குஷ்திக்காக அவர்போடும் ஒரு வேஷமாக பின்னர் ஈழம் கோரிக்கை கைவிடப்ப்படுமானால்?..இப்படி விடை காண முடியாத பதில்கள் எதிர் காலத்தில் இந்தியப் பொதுத் தேர்தலை மையமாக வைத்து அமையக் கூடும்.
ஆயினும் என்னைப் பொருத்தவரை ஐ.நா.வோ.அமெரிக்காவோ ஈழத் தமிழருக்கு இனி எதுவும் புடுங்காது.
அப்படி புடுங்கி இருந்தால் அண்மைய காலத்தில் புடுங்கியிருக்கமுடியும்.அமெரிக்காவும் இந்தியாவும்,சீனாவை இலங்கையில் ஓரம் கட்ட போட்ட கூட்டணிதான் ஐ.நா.வில் இலங்கைக்கு வைக்கப் பட்ட 'செக்கே'தவிர..இலங்கைமீது நடவடிக்கை எடுக்க அல்ல என்பது இப்போது புரிகிறது.அம்பாந் தோட்டையில் இருந்து சீனாவை துரத்தி அடிப்பதால் இந்தியாவும் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியும்.அமெரிக்காவுக்கும் வல்லரசு யுத்தத்துக்கு விடை கிடைக்ககூடும்.எனவே இந்த இரு நாடுகளின் பிராந்திய நலன்களுக்கு மத்தியில் ஈழ மக்களின் வாழ்வு இன்று துருப்புச் சீட்டாக பயன்படுகிறது என்பதுதான் உண்மை.
எனவே இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நான் கேட்ட கேள்விக்கு விடை இப்போது எமது கண்முன் தெரிகிறது.அரசியல் ரீதியாக ஈழத் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் என்பது வருடங்களை எண்ணும் வேலையாக இருக்குமே தவிர எந்தவித பலனும் அதனால் கிடைக்காது.இந்த வேளையில் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது 1987 இல் தலைவர் இந்திய ராணுவத்திடம் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு வந்தபோது நாங்கள் சில உறுப்பினர்கள் தலைவரை வளைத்துக் கொண்டு இப்படி கேட்டோம்.."அண்ண..ஆயுதங்களைக் கொடுத்துட்டோம் இவர்களை நம்பலாமா?" என்று.அப்போது தலைவர் கொடுப்புக்குள் சிரித்துவிட்டு இப்படிக் கூறினார்." நாங்கள் அவர்களுக்கு கொடுத்தது கழண்டுபொன,பிடியில்லாத,கறல் பிடித்த ஆயுதங்கள்தான்..எமது மக்களின் உயிரைக் காப்பாற்றுவது இந்த ஆயுதங்கள்தான் ..நல்ல ஆயுதங்கள் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கு..நீங்கள் கவலைப் படாதீர்கள்.." என்றார்.எத்தனை தீக்க தரிசனமான வார்த்தைகள் அவை? அன்று தலைவர் அனைத்து ஆயுதங்களையும் இந்திய அரசிடம் ஒப்படைத்திருந்தால் ஒட்டு மொத்தமாக தமிழ் இனத்தையே அழித்திருப்பார்கள் .புலிகளும் சாம்பராகியிருப்பர்!
அன்பர்களே..நாம் அரசியல் தீர்வு வரும் வரும் என்று நம்பலாமா? இல்லை அன்று தலைவர் சொன்னதுபோல் எமது உயிரினும் மேலான மக்களின் பாதுகாப்புக்கு இந்த ஆயுதங்கள்தான் உயிர் என்தை என்று நம்பலாமா? நேற்றுக் கூட கிளிநொச்சியில் சிங்களவர்கள் தமிழ் பத்திரிகைகளின் (உதயன்,சுடர் ஒளி)காரியாலயத்துக்குள் புகுந்து தாக்கியுள்ளனர்.நான்கு ஊழியர்கள் படுகாயம் என்று செய்தி வந்துள்ளது.எம்மிடம் ஆயுதம் இல்லையென்றால் இதுதான் இனி தொடர் கதை.என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.நம்மினத்தை காக்க நாம் ஆயுதம் ஏந்துவதுதான் ஒரே வழி என்பதையே இச் சம்பவம் எமக்கு எடுத்துக் கூறுகிறது.இல்லையேல் இன்னும் 20 ஆண்டுகளில் தமிழ் இனம் என்ற ஒன்றின் வரலாற்றுச் சுவடுகளே, ஈழத்தில் இருக்காது.!

நன்றி - முகநூல்

https://www.facebook.com/photo.php?fbid=506550179401230&set=a.342293369160246.85510.100001387588021&type=1&theater

நண்பர்களே பின்வரும் கட்டுரை கிளிநொச்சி பிடிபடும் பொழுது ;எழுதியது....
மேற்குறிப்பிட்ட தலைப்புக் குப் பொருத்தமானதாக இருப்பதால் இங்கு பதிவூ செய்கின்றே;ன....

 

ஆரசியல் தோல்வியா? இராணுவத் தோல்வியா?

 

இலங்கை வாழ் மனிதர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும்(?) மனிதர்கள் முன் மிக முக்கியமான ஒரு கேள்வி ஒன்று இன்று எழுகின்றது என்றால் சந்தேகமில்லை. அல்லது அவ்வாறு எழ வேண்டும். இன்றைய நமது தேவை இராணுவ வெற்றியா? அல்லது அரசியல் தோல்வியா? ஏன்பதே அக் கேள்வி. இதற்கான பதில் என்ன?


 

புலிகள் இராணுவரீதியாக ;தோற்கடிக்கப்படவேண்டும்! என்பதில் மனித உரிமையாளர்களுக்கும் ஐனநாயகவாதிகளுக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் அரச ஆதரவாளர்களுக்கும் மனிதாபிமானிகளுக்கும் கருத்துவேறுபாடோ மனதில் சந்தேகமோ இல்லை. ஏனனில் புலிகளின் தலைமைத்துவத்தின் ஐனநாயகமின்மை, கருத்து சுதந்திரம் இன்மை, சிறுவர்களை வன்முறையில் ஈடுபடுத்துவது, பல அமைப்பு கட்சி அரசியலுக்கு எதிராக இருப்பது, மாற்று அரசயலாளர்களை கொல்வது, மற்றும் தடை செய்வது, தன்னிச்சையாக பொது அரசியலில் ஈடுபடுவது, மற்றும் அரசியல் நோக்கமோ திட்டமோ இல்லாமை, நிலங்களையும் சுழலையும் மாசுபடுத்துவதும் வீணாக்குவதுமான செயல்களில் ஈடுபடுகின்றமை, என்பவை புலிகளின் தலைமை ஆகக் குறைந்தது இராணுவ ரீதியாகவாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்குப் இவை போதுமான காரணங்களாகும். இவ்வாறான ஆரோக்கியமற்ற செயல்களில் ஈடுபடும் புலி;களினால் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதில் சந்தேகமே இல்லை. தப்பித் தவறி அரசியல் தீர்வு ஒன்று இவர்களினால் உருவாகுமேயானால் அது நிச்சயமான ஒரு சமூக மனித விடுதலைக்கு வழிவகுக்காது என்பது நிச்சயமான ஒன்று. மேலும் இவர்களது ஆயுத பலத்;தினால் ஆரோக்கியமான சுழல் தமிழ் பேசும் மனிதர்கள் வாழும் இடங்களில் மட்டுமல்ல இலங்கையிலும் தென்இந்தியாவிலும் மற்றும் ஒரளவு புலம் பெயர் சுழலிலும் இருக்கப்போதில்லை. ஆகவே இவர்களது இராணுவப்பலம் அழிக்கப்படவேண்டும் என்பதை ஏற்பதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை. மேலும் இவர்களது இராணுவ அரசியல் வெற்றி எதிர்கால மனிதர்களுக்கு (குறிப்பாக சிறுவர்கள் பெண்கள் தொழிலாளர்கள் சதியால் அடக்கப்பட்டவர்கள்) எந்தவிதமான விடுதலையையும் பெற்றுத்தரப்போவதில்லை. ஆகவே இவர்களது இராணுவபலம் அழிக்கப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை யார் செய்வது என்பது முக்கியமானது? இலங்கை இராணுவமா???


 

இன்று இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு முன்னேறிச் செல்வது புலி எதிர்ப்பாளர்களுக்கும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். ஏனனில் அந்தளவிற்கு புலிகளின் மிலேச்சத்தனமான செயல்களால் இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் ;பாதிப்பைக் காரணங்காட்டி இராணுவத்திற்கு ஆதரவளிப்பதோ அல்லது அவர்களது வெற்றியில் மகிழ்வதோ சரியான நிலைப்பாடாக இருக்கமுடியாது என்பது புகுத்றிவாளர்களுக்கும் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கும் புர்pயும் என்பதில் சந்தேகமில்லை. ஏனனில் தமிழ் பேசும் மனிதர்கள் வாழும் பிரதேசங்கிளில் புலிகள் உட்பட பல்வேறு ஆயுதக் குழுக்கள் உருவாகுவதற்று காரணமானவர்களே இந்த இலங்கை இராணுவத்தை வழிநடாத்தும் சிறிலங்கா அரசே என்றால் மிகையல்ல. எந்தக் காரணங்களுக்காக மனிதர்கள் புலிகளை; எதிர்க்கின்றார்களோ அதே காரணங்களுக்காகவும் இலங்கை ;அரசையும் அதன் இராணுவத்தையும் அவர்கள் எதிர்க்கவேண்டும். மேலும் புலிகளைப் போல அல்லது அற்கும் மேலாக சிறிலங்கா அரசு தமிழ் பேசும் மனிதர்களின் வாழும் உரிமையையும் மற்றும் அடிப்படை ஐனநாயக உரிமைகளையும் மறுப்பவர்களாக இருக்கின்றனர். புலிகளுக்கு மாற்றாக இவர்களை ஆதரிப்பதும் இவர்களது வெற்றியில் மகிழ்வதும் புலி எதிர்ப்பாளர்களது முரண்பாடான சிந்தனையையும் இயலாமையையுமே வெளிப்படுத்துகின்றது என்பது வெளிப்டையான ஒரு உண்மை. மேலும்; புலி எதிர்ப்பாளர்கள் சிலர் அல்லது பலர் புலிகளிடமிருந்து எந்தவகையிலும வேறுபடவில்லை. அவர்களதும் தாம் ஆதிக்கம் செலுத்தும் பிரதேசங்களிலும் புலிகளைப் போன்றே மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பது நாளாந்தம் நிறுபிக்கப்படுகின்ற ஒரு உண்மை.


 

புலிகளை எதிர்ப்பது என்பது புலிகளின் தலைமையை எதிர்ப்பது என்பதாகவே இருக்கவேண்டும். மாறாக ;புலிகளின் அமைப்புக்குள் புரிந்தோ புர்pயாமலோ அல்லது நிர்ப்பந்தங்களாலோ அல்லது உணர்சியினாலோ அல்லது சுழ்லையினாலோ இணைந்திருக்கும் அங்கத்தவர்கள் குறிப்பாக சிறுவர் சுறுமியர் மற்றும் பெண்கள் மற்றும் சக மனிதர்களை; எதிர்ப்பதாக, அவர்களளை அநியாயமாக அழிப்பதாக இருக்கக் கூடாது. புலிகளின் தலைமை மேற்கொள்ளும் தவறுகளுக்கு இவர்கள் பொறுப்பல்ல. மேலும் சுழ்நிலைக் கைதிகளாக புலிகளில் இணைந்திருக்கும் சிறுவர் சிறுமியரையும் ஆண்களையும் பெண்களையும் மற்றும் தமிழ் பேசும் மனிதர்களையும் கொன்று அழிப்பதாகவே இராணுவத்தின் புலி அழிப்பு நடவடிக்கைகள் இருக்கும். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது என்பது புலிகளுக்கு ;ஆதரவளிப்பதைபோன்ற ஒரு ஆரோக்கியமற்ற செயற்பாடே. ஏனனில் இராணுவத்திற்கும் இலங்கை அரசுக்கும் வழங்கப்படும் ஆதரவு என்பது எந்தவகையிலும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை விளைவாகத் தரப்போவதில்லை. இதேபோன்று புலிகளுக்கு ஆதரவளிப்பது என்பதும் பிரச்சனைக்கு தீர்வு ஒன்றைத்தரப்போவதில்லை. அப்படி எனின் தீர்வுதான் என்ன?


 

புலிகளின் இதுகாலவரையான வன்முறை செயற்பாடுகள் எப்படி இன முரண்பாட்டிற்கான அடக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான தீர்வை தருவதற்கு பெறுவதற்கு உதவவில்லை. ஆகக் குறைந்தது பரந்துபட்ட உலக மக்களனின் ஆதரவைக் கூட பெற முடியாது உள்ளது. இதற்கு காரணம் இவர்களது அரசியலற்ற வெற்று இராணுவ மற்றும் மனிதாபிமானமற்ற வன்முறை நடவடிக்கைகளே என்றால் மிகையல்ல. இதன் மறுதலையாக போன்றது தான் இலங்கை இராணுவத்தின் புலிகள் மீதான இராணுவ வெற்றியானது தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களது அடிப்படை உரிமைகளுக்காக குரலையும் நசுக்கி குழிதோண்டிப் புதைப்பதாகவே இந்த நடவடிக்கை இருக்கும்.; அவ்வாறு நடைபெறாது எனக் கூறுவதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இதன் அர்த்தம் புலிகள் இல்லாது பிரச்சனை தீர்க்கமுடியாது என்பதல்ல. மாறாக இலங்கை அரசுக்கு இன ;முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதில் அக்கறை இல்லாது இருப்பது மட்டுமல்;ல தெளிவும் இல்லாது இருப்பது கவனிக்கத்தக்கது. ஆகக்குறைந்தது பொதுப்புத்தி கருத்தியல் கூட இம் முரண்பாடு தொடர்பாக இதுவரையும் இல்லாதிருப்பது கவலைக்கிடமானதே.


 

புலிகளின் அரசியலும் ஆயுத செயற்பாடுகளும் முரண்பாடனவைகள்hக இருக்கின்றன. பூநகரியை இராணுவம் பிடித்தவுடன் பிரபாகரன் இது தந்திரோபாய பின்வாங்களே என்றும் மேலும் மூன்று மாத காலத்தில் மீண்டும் தாக்குவோம் என்றும் கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை இச் செய்தி வெளிருவவதற்கு சில நாட்களுக்கு முன்பு அரசியல பொறுப்பாளர் நடேசன் அவர்கள பேச்சுவார்ததைக்கு தாம் தயார் எனக ;கூறியிருப்பதாக செய்திகள் தெரிவித்திருந்தன. புலிகளின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது அவர்களுக்கே தெளிவில்லாமல் இருக்கின்றது. அல்லது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு கதைத்து மனிதர்களை குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்களை தொடர்ந்தும மந்தைகளாக ஏமாற்றியே வருகின்றனர். ஆக தொடர்ந்தும் சிறுவர்களையும் பெண்களையும் மற்றும் சக மனிதர்களையும் அவர்களது உயிரையும் உழைப்பையும் பலி கொடுப்பதே அவர்களது கொள்கையாக இருக்கப்போகின்றது. தமிழீழம் என்பது யதார்த்தமற்றதாயினும் அத தமிழ் பேசும் மனிதர்களினது கனவாகவும் அந் நிலம் அவர்களது உடல்களின் புதை நிலங்களாகவும் புலிகளின் அதிகாரத்திற்கான அரசியல் ஆயதமாகவும் மட்டுமே இனிவரும் காலங்களில் இருக்கப்போகின்றது. இன்று புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்பது தமது இயலாமையின் வெளிப்பாடே. ஆல்லது மீண்டும் தம்மை பலப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய செயற்பாடே என்பது வெளிப்படையான ஒரு விடயம்.


 

ஆகவே பிரபாகரன ;அவர்களே! மூன்று மாத காலத்தின் பின் தங்களது தன்முனைப்புக்கு தீணிபோடும் மேலும் இளம் மனிதர்களை பகடைக்காயாக்கி பலிகொடுக்கும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்காது பிரச்சனையை தீர்ப்பதற்கான காத்திரமான ஆரோக்கியமான வன்முறையற்ற செயற்பாடுகளை முன்னெடுங்கள் என பாதிக்கப்படும் மனிதர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.


 

மேலும் புலிகள் இராணுவ பலம் கொண்டிருந்த காலங்களில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியிருந்தால் அது ;வரவேற்க்க கூடிய ஆரோக்கியமான விடயமான கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும். இருப்பினும் இரு தரப்பும் உடனடியாக போர் நிறுத்தி பேச்சுhவார்த்தைக்கு முன்வருவது தமிழ் பேசும் மனிதர்களைப் பொறுத்தவரை மகிழ்வான விடயமே. ஏனனில் அமைதியான ஒரு சுழலிலையே சமாதானம தொடர்பாக உரையாடலாம்.


 

இந்த இடத்தில் இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள மொழி பேசும் அமைப்பு சாரா பொது மனிதர்களினதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்பேசும் மனிதர்களினதும் பங்களிப்பு முக்கியத்துவப்படுகின்றது. இவர்கள் எந்தப் பக்கமும் சாராது சகல மனிதர்களினதும் அடிப்படை உரிமைகளுக்காக ஒன்றாக குரல் கொடுக்கவேண்டிய தேவை இன்று காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு குரலின் இன்மை, அதற்கான ஒரு இடைவெளி நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இன்று அக் குரல் கேட்கப்படுவதற்கான, அந்த இடைவெளி நிறப்பப்படுவதற்கான காலம் உருவாகிவருகின்றது அல்லது புதிய மூன்றாம் தரப்பு ஒன்று வெளிவரவேண்டியதற்கான ;காலம் நம்முன் வந்துகொண்டிருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. இது தமிழ் சிங்களம் பேசும் மனிதர்களால் கவனத்தில் எடுக்கப்படாமல் இன்னும் இருப்பது கவலைக்குரிய ஒரு விடயமே. ஏனனில் குறிப்பாக புலம் பெயர் தமிழ் பேசும் மனிதர்களின் இன்றையை செயற்பாடுகள் அவ்வாறனவையாக இருக்கின்றன.


 

புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள், இரு ;தரப்பும் போரை நிறுத்துக்கள்! பிரச்சனைக்கு தீர்வை முன்வையுங்கள்! போன்ற கோரிக்கைகளை முன்வைக்காது புலிகளுக்கு :ஆதரவாகவும் அவர்களாலும் இராணுவத்திhலும் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கு உதவுவது என்றடிப்படையில் நிதி சேகரிப்பதும் பொருட்கள் சேகரிப்பதுமான வழங்காமான போர்க்கால செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர். இது எந்தவகையிலு; இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் மேலும் குறிப்பாக புலிகளிடமும் இராணுவத்திடமும் மற்றும் ஆயுதக் குழுக்களிடமும் அகப்பட்டு சிறையுண்டு வாழும் மனிதர்களின் பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை. மாறாக இவ்வாறான செயற்பாடுகளை; முன்னெடுக்கும் புலம் பெயர் நாடுகளில் வாழும் தனிநபர்களின் குறிப்பிட் நாட்டிலான தமது அரசியல் அபிலாசைகளையும் அவர்களுக்கான சமூக அந்தஸ்தையுமே பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பவாத பிழைப்புவாத செயற்பாடுகளே. இதேபோன்று புலி எதிர்ப்பாளர்களது அரசாங்க ஆதரவு செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தைத் தவிர யாருக்கும் நன்மை அளிக்கப்போவதில்லை. இது அவர்களது இயலாமையிலிருந்து உருவாகின்ற சந்தர்ப்பவாத பிழைப்புவாத செயற்பாடுகள். ஆடிப்படையில் இருவரும் அழிவுக்கும் வன்முறைக்குமே ஆதரவளிக்கின்றனர். அப்படி எனின் என்னதான் செய்யவேண்டும்?


 

இலங்கை வாழ் மனிதர்களினதும் மற்றும் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மனிதர்களினதும் நாளாந்த வாழ்வுக்கான உத்தரவாதத்தை அளிக்கும் சுழலை உருவாக்குவதற்கு புலம் பெயர்ந்து வாழும் இலங்கை மனிதர்கள் ஒன்றாக செயற்படவேண்டிய தருணம் இது. மேலும் ஒவ்வொரு மனிதர்களினதும் அடிப்படை உரிமைகளை மதிக்கும் செயற்பாடுகளை அணைத்து தரப்பினரும் முன்னெடுக்க நிர்ப்பந்திக்குமு; செயற்பாடுகளையும் குறிப்பாக யுத்தத்தையும் வன்முறை செயற்பாடுகளையும் நிறுத்தி அனைவரும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதை வலியுறுத்தவேண்டும். இதுவே புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களின் முன் உள்ள பொறுப்பான செயற்பாடு என்றால் மிகையல்ல.


 

இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இதைவிட மோசமாக உலகின் பல பாகங்களில் ஆயுதக ;குழுக்களாலும் அடக்குமுறை அரசுகளாலும் மனிதர்கள் படும் இன்னல்கள பல பல. சொற்களில் எழுதமுடியாதவை. ஐPரணிக்க முடியாத வாழ்வை இம் மனிதர்கள் வாழ்கின்றனர்கள். இம் மனிதர்களின் விடிவுக்கு வழி சகலவிதமான ஆயுத செயற்பாடுகளுக்கும் முற்றுப்முள்ளி வைப்பதற்று உலகளாவிய ரீதியில் செயற்படுவதே. ஏனனில் இன்று உலகின் முக்கியமான இலாபகரமான வியாபாரம் என்றால் அது ஆயுத விற்பனையே. இந்த ஆயுதங்களே மனிதர்களைக் கொல்வதற்கும் அடக்குவதற்கும பயன்படுத்தப்படுன்றது. இந்த ஆயுதங்களை வாங்குவதற்கும் மனிதர்களைக் கொல்வதற்கும் அடக்குவதற்குமே புலம் பெயர் நாடுகளில் வாழும் பல மனிதர்கள் தம் உழைப்பைக் கொடுத்து பணம் வழங்குகின்றனர். இது கொள்கைரீதியான பங்களிப்பு என்பதை விட புலம் பெயர்ந்து சுகமாக பாதுகாப்பாக வாழும் மனிதர்களின் குற்ற உணர்வின் நிமித்தம் ஏற்படும் ஒரு கடமை உணர்வே இது. அதாவது குற்றஉணர்வினால் முன்னெடுக்கப்படும் ஒரு பொறுப்பற்ற செயல்.


 

ஆகவே புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள் தம் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு பொறுப்புடன் செய்யவேண்டியது காலம் இது. ஆவர்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.


 

சுகல தரப்புகளையும் யுத்தததையும் வன்முறை செயற்பாடுகைளயும் நிறுத்தி பேச்சுவார்த்தையில் பங்குபற்றுமாறு நிர்ப்பந்திப்பது.
இடைக்கால தீர்வு ஒன்றை உருவாக்கி முழுமையான தீர்வுக்காக தொடர்ந்தும் செயற்படக் கோருவது.
சுகல மனிதர்களதும் அடிப்படை வாழும் உரிமைகளை மதிக்கக் கோருவது.
குறிப்பாக எழுத்து பேச்சு சுதந்திரங்களை மதிக்க கோருவது.
சிறுவர் சிறுமியரை ஆயுதக் காலாசாரத்தில் இருந்து விடுவித்து சிறந்த கல்வியையும் வாழ்வையும் வழங்க நிர்ப்பந்திப்பது.
புல கருத்துள்ளவர்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கும் ஐனநாயக வழியில் செயற்படுவதற்குமான சூழலை உருவாக்க கோருவது.
மனிதர்களின் புதைகுழிகளில் கொலைக் களங்களிலும் உருவாகும் தமிழீழம் யாருக்கும் தேவையில்லை! அதானல் பயனுமில்லை.
தீர்வை முன்வைக்காத இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கை எந்தப் பயனுமற்ற ஆரோக்கியமற்ற காத்திரமற்ற ஒரு செயற்பாடு.
மனிதர்களிடம் வன்மத்தையும் வன்முறையையும் பகைமையையும் உருவாக்கும் இராணுவ வெற்றிகள் அல்லது தோல்விகள் யாருக்கும் வேண்டாம். இது பயனற்றது.
அனைவருக்கும் நன்மையளிக்கும் அரசியல் வெற்றியே அனைவரும் விரும்புவது. இதுவே ஆரோக்கியமானதும் மனித வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பங்களிப்பதாகும்.


 

புலம் பெயர்ந்த மனிதர்களின் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கும் ஒரு செயற்பாடே வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இலங்கையிலும் அமைதியான சமாதானமான ஒரு சூழலை வாழ்வை தோற்றுவிக்கும். மேலும் பிற உலக நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமையும்.


 

உலகத்திலிருந்து ஆயுதக் காலாசாரத்தையும் வன்முறையையும் இல்லாது ஒழிக்கும் வரை மனி வாழ்வு என்பது இருண்டதாகவும் நிச்சயமற்றதாகவுமே இருக்கும்.


 

இதற்கு தனி மனிதர்களின் பிரக்ஞையான வாழ்வும் பொறுப்பான செயற்பாடுகளுமே வழிவகுக்கும். ஓவ்வொரு தனிமனிதரிலும் ஏற்படும் மாற்றமே அனைவருக்கும் சம சந்தர்ப்பங்களை உருவாக்கும் ஒவ்வொருவரது தனித்துவங்கைளயும் உரிமைகளையும் மதிக்கும் சமூக மாற்றத்திற்கான முதற்படி. ஆல்லது சமூக மாற்றம் என்பது மனித வாழ்வின் ஒரு கற்பனையாகவே என்றும் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.


 

-மீராபாரதி

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் அரசியலும் ஆயுத செயற்பாடுகளும் முரண்பாடனவைகள்hக இருக்கின்றன. பூநகரியை இராணுவம் பிடித்தவுடன் பிரபாகரன் இது தந்திரோபாய பின்வாங்களே என்றும் மேலும் மூன்று மாத காலத்தில் மீண்டும் தாக்குவோம் என்றும் கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு ஆதாரம் தரமுடியுமா??

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே பின்வரும் கட்டுரை கிளிநொச்சி பிடிபடும் பொழுது ;எழுதியது....

மேற்குறிப்பிட்ட தலைப்புக் குப் பொருத்தமானதாக இருப்பதால் இங்கு பதிவூ செய்கின்றே;ன....

 

ஆரசியல் தோல்வியா? இராணுவத் தோல்வியா?

 

புலிகள் இராணுவரீதியாக ;தோற்கடிக்கப்படவேண்டும்! என்பதில் மனித உரிமையாளர்களுக்கும் ஐனநாயகவாதிகளுக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் அரச ஆதரவாளர்களுக்கும் மனிதாபிமானிகளுக்கும் கருத்துவேறுபாடோ மனதில் சந்தேகமோ இல்லை.

 

-மீராபாரதி

 

சரி

உங்களதும் உங்கள் எசமான வழிகாட்டிகளின் ஆசைப்படி புலிகள் அழிந்தார்கள்.

 

அதன் பின் தமிழ் மக்களின் அவலங்களுக்கு

அல்லது சிங்களத்தின் கோரத்திற்கு தங்களின் தங்கள் எசமானர்களின்  முயற்சிகள் ஏதாவது............??? :( :( :(

மீராபாரதி நடுநிலையை எடுப்பதாக ஒரு மாயையை உருவக்க முயல்கிறார். இதில் புலிகளை கண்டிப்பதில் இருந்து  ஆரம்பிக்கிறார். ஆனால் புலிகளுக்கு ஆயுதம் தூக்க இருந்த காரணங்களை வேண்டுமென்றே விட்டுவிடுகிறார். அதன் பின்னர் புலிகளை அகிம்சையில் ஆயுதப்போராட்டம் நடத்தவில்லை எங்கிறார். (இது அவரின் கருத்தாக மட்டும்தான் இருக்கிறது. நான் பிரேரிக்கும் ஒன்று அல்ல. அகிம்சை வழியில் ஆயுத்த போராட்டத்தின் வடிவம் எப்படி இருக்கும் என்பதை நான் இன்னமும் கற்பனை செய்து பார்க்கமுயலவில்லை.) புலிகள் என்ற பெயரில் ஒரு பக்க தமிழரை முதலில் தோல் உரித்துவிடுகிறார்.

 

தனது நடுநிலைமை தவறாது கொள்வதாக காட்டுவதாற்காக இப்போது மற்றப்பக்கம் வருகிறார். ஆனால் இங்கே ஆயுதப்போராட்டத்திற்கு காரணமாக பல இன கலவரங்களை நடத்தி அதில் பல தமிழரின் உயிர், சொத்துப்பத்துக்களை அழித்த அரசு அவரின் கவனத்தில் இருந்து தவறி விடுகிறது. அவரின் கண்ணில் படுவது தங்களைதாங்கள் காப்பற்ற முயலும் சுயநலமிகளான அடுத்த தமிழ் குழு."புலி எதிர்ப்பாளர்களுக்கும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும்". தனது நாடக நடு நிலைமையை காரசாரமாக அடுத்த தமிழ் பக்கம் காட்டிவிட்டு கவனமாக அரசைக் காப்பாற்றி எடுத்துவிட்ட மீராபாரதி, இலங்கையில் நடந்த கலோகொஸ்ட் மாதிரி ஒரு அழிவிற்கு ஒரு கரையில் கருணாவை, தேவனந்தாவை பெயர் சொல்லாமலும், மற்றக்கரையில்  தலைவர் பிராகரனை "புலிகளின்" தலைமை என்று பெயர் சொல்லியும் தாக்குகிறார்.

 

அதன் பின்னர் தனது நடு நிலைமையில் வைத்து ஒரு முடிவுக்கு வருகிறார். அதை அன்றைய கட்டுரையில் இருப்பத்தாக சோடித்துகொண்டுவந்து இன்றைய வாழ்வுக்கு திணிக்கிறார். கவனமாக வாசிப்போர் மனத்தை ஆராய்ந்து எழுதுகிறார்.   அதாவது அரிச்சுன் சொல்வது போல இந்த மொக்கு கூட்ட புலம் பெயர் சனத்துக்கு, ஒரு வாத்தியார் தேவைப்படுகிறது என்று முடிக்கிறார்.   அத்துடன் அவரின் நடுவுநிலைமைக் கற்பு வெறும் காற்றிலே ஊதிக்கெடுபட்டு போய்விடுகிறது.

பந்தி பந்தியாக தர்க்கித்து, அன்று அவர் புலம் பெயர் மக்களுக்கு இட்ட கட்டளை இதுதான்:

 

"புலம் பெயர்ந்த மனிதர்களின் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கும் ஒரு
செயற்பாடே வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இலங்கையிலும் அமைதியான சமாதானமான ஒரு
சூழலை வாழ்வை தோற்றுவிக்கும். மேலும் பிற உலக நாடுகளுக்கும் முன்னுதாரணமாக
அமையும்."

 

அதாவது "போருக்கு முன்னர் அரசு போரை வெல்ல வேண்டும் என்று அரசை காப்பாற்றிவிட்டு மட்டும் என்னால் போக முடியாது." (கார்த்திகை விளக்கீட்டுக்கு விளக்கேற்றிய மாணவர்களை உச்சுபேற்றிய புலம் பெயர்மக்களை கழித்துவைத்துவிட்டு)" இன்று அவலப்பட்டு போய் யழ்ப்பாணத்தில் போராளிகளுக்கு வீர வணக்கம்செய்யும் விரவன்சாவை வரைக்குக் இன்னும் காப்பாற்ற வெண்டிய கடமை எனக்கு இருக்கு" என்கிறார். புலம் பெயர் மக்களின் வசதி எப்படி? அன்று அவர் சொன்ன போதனைகளை இன்று தன்னும் கேட்டு நடக்கப் போகிறீர்களா அல்லது அவரின் அரசிடம் இன்னொரு தடவை வாங்க போகிறீர்களா?

 

(மீராபாரதி இது வரையில் கேள்விப்பட்டிருக்காவிட்டால்:  அன்றைய பிளேக் இன்று அமெரிக்க கொங்கிரசில் சொன்னது "போரின் பின்னர் தமிழருக்கு உரிமை தருவதாக கூறி இலங்கை அரசு  அமெரிக்காவை ஏமாற்றிவிட்டது")

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுடன் பொறாமையும் உடன்பிறப்பு என்பதை அனைவரும் அறிவர். ஆயினும் இங்கு மீராபாரதியால் பதிவுசெய்யப்பட்ட கட்டுரை பொறாமைகள் அத்தனைக்குமே சிகரம் வைத்த ஒரு பொறாமையாக வெளிப்பட்டு நிற்கிறது. சிங்கள அரசினதும், தமிழின எதிரிகளினதும் அராஜகத்தை விமர்ச்சிப்பது போன்று புலிகள்மேலுள்ள அதியுச்சக் காழ்ப்புணர்ச்சி மீராபாரதியின் பதிவில் வெளிப்பட்டு, வாந்தியாக வழிந்துள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுடன் பொறாமையும் உடன்பிறப்பு என்பதை அனைவரும் அறிவர். ஆயினும் இங்கு மீராபாரதியால் பதிவுசெய்யப்பட்ட கட்டுரை பொறாமைகள் அத்தனைக்குமே சிகரம் வைத்த ஒரு பொறாமையாக வெளிப்பட்டு நிற்கிறது. சிங்கள அரசினதும், தமிழின எதிரிகளினதும் அராஜகத்தை விமர்ச்சிப்பது போன்று புலிகள்மேலுள்ள அதியுச்சக் காழ்ப்புணர்ச்சி மீராபாரதியின் பதிவில் வெளிப்பட்டு, வாந்தியாக வழிந்துள்ளது.

 

முகங்கள் தெரியவரும் காலப்பகுதி  இது

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழியுங்கள், ஆனால் தமிழ் மக்களை அழிக்காதீர்கள் என்ற முதலைக் கண்ணீருடன் மீராபாரதி எழுதிய இன்னொரு புலி எதிர்ப்புக் கட்டுரையைத் தான் அவர் இணைத்துள்ளார்.

 

தன் சொந்த வாழ்வில் புலிகளால் ஏற்பட்ட ஒரு சில நெருக்கடிகளுக்கான பழிவாங்குதலாக ஒரு இனத்தின் தேசிய விடுதலைக்கான ஒரு போராட்டக் குழுவை அழிப்பதுதான் சரி என்பவர் தான் ஆன்மீகம் சாந்தி சமாதானம் என்பது பற்றியெல்லாம் மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முனைபவர் என்பது விசித்திரமானது. 

 

ஒரு கொடூர அரச இயந்திரத்துக்கு எதிராக போராடிய புலிகளின் செயல்பாடுகளையும் அந்த கொடூர அரசின் இராணுவச் செயல்பாடுகளையும் ஒரே தராசில் வைக்கின்றார். இப்படியான கட்டுரைகளை கிளிநொச்சி வீழும் போது மட்டுமல்ல அதற்கு முன்னும் பல தடவை எழுதியிருக்கின்றார்.

 

புலிகளின் தோல்வி என்பது தமிழ் மக்களின் படுதோல்வி மட்டுமல்ல இலங்கைத் தீவில் இருக்கும் அனைத்து சிறுபான்மை இனத்தவர்களினதும் படு தோல்வி என்ற உண்மை இன்று முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும்  கொடுமைகளில் இருந்து புலப்படும் தறுவாயிலும் 4 வருடங்களுக்கு முன்னர் எழுதிய புலி எதிர்ப்புக் கட்டுரையை இன்றும் தூக்கிப் பிடித்துக் கொண்டாடும் புத்திசீவியாகத்தான் வாழ்கின்றார்.

 

அண்மையிலும் தமிழக மாணவர் எழுச்சியினை பொறுக்க முடியாமல் அவர்கள் யார் நமக்காக போராட என்று கேட்டவர் தானே இவர். 

 

மனோரஞ்சனிடம் அரசியல் பாடம் கற்ற புத்திசீவி இவர்.,

 

இப்படியான புத்திசீவிகளுக்கு இன்று முற்றிலும் இராணுவ வசம் இருக்கும் வன்னிக்கு இலகுவாகச் செல்ல முடிவதும், அங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் கூட்டங்களை நடத்துவதும் இலகுவாக இருப்பது ஏன் என்று புரிகின்றது.

 

 

 

 

Edited by வைரவன்

வணக்கம்....
இங்கு பின்னுட்டம் இட்டவர்களில் ஒருவர் (nunavilan) மட்டுமே வசைபாடாது கேள்வி ஒன்றை ;முன்வைத்திருக்கின்றார்.
அவருக்கு (nunavilan) எனது பதில்....
அன்று கனடாவில் வெளிவந்த் பத்திரிகைகளின் வந்த செய்து.... அதை வாசித்த பின் எழுந்த கோவத்தினால் எழுதியது....


 

மற்றவர்களுக்கு நீங்கள் உங்கள் முகங்களை; மறைத்துக் கொண்டு வசை பாடியிருக்கின்றிர்கள்....
அதுவூம் பிழையான தகவல்கள் அல்லது தவாறன புரிதல்களுடன்...
பரவாயில்லை நீங்கள் புலத்தில் ஈழத்தில் இருந்தால் புரிந்து கொள்ள ;முயற்சிக்கின்றேன்....
ஆனால் அவ்வாறு இல்லை என்றே நினைக்கின்றேன்...
பெரும்பாலும் புலம் பெயர்ந்து இருந்து கொண்டு கன்வூகளிலும் கற்பனைகளிலும் வாழ்கின்றீர்கள்....
சிலருக்கு என்னைப் பற்றிய ;தகவல்கள் சில ;தெரிந்திருக்கின்றன... ஆனால் இவர்களுக்கு தம்மை ;அறிமுகப்படுத்தும் தைரியம் இல்லை....
ஆனால ;வசை பாடமட்டும் தைரியம் உள்ளது...
ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு கட்சியினதோ இயக்கத்தினதோ உரித்து அல்ல...
அடக்குமுறை தொடரும் வரை அதற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டம் பல்வேறு இயக்கங்களால்; கட்சிகளால் முன்னெடுக்கப்படும்...
இவர்'களின் அரசியில் தொலைநோக்குப் பார்வை பொறுப்புணர்வூ என்பவற்றைப ;பொறுத்து  ஈழத் தமிழர்களுக்கு ; விடுதலை கிடைக்கும்...
அந்த நம்பிக்கையில் த்hன் எழுதிக் கொண்டிருக்கின்றேன்....
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்....

..

 

மற்றவர்களுக்கு நீங்கள் உங்கள் முகங்களை; மறைத்துக் கொண்டு வசை பாடியிருக்கின்றிர்கள்....

அதுவூம் பிழையான தகவல்கள் அல்லது தவாறன புரிதல்களுடன்...

சிலருக்கு என்னைப் பற்றிய ;தகவல்கள் சில ;தெரிந்திருக்கின்றன... ஆனால் இவர்களுக்கு தம்மை ;அறிமுகப்படுத்தும் தைரியம் இல்லை....

ஆனால ;வசை பாடமட்டும் தைரியம் உள்ளது...

 

தமிழ் தேசியம் தொடர்பான சிற்சில செய்திகளை வெளியிடும் தமிழக தொலைக்காட்சி செய்திகளுக்கே ஈழத்தில் தமிழர் வாழும் பகுதிகளில் அனுமதி இல்லையெனும் போது, வன்னி சென்று இராணுவம் சூழ்ந்த பிரதேசங்களில் கூட்டங்கள் நடத்தக் கூடிய அளவுக்கு செல்வாக்கும் ஆதரவும் இருக்கும் உங்களுக்கு முகம் காட்டுவதில் இல்லாத சிக்கல் எமக்கு இருக்கு மிஸ்ரர் மீரா. 

 

ஒரு காலத்தில் புனை பெயரில் எழுதியவர்களுக்குள் நீங்களும் ஒருவர் என்பதை மறக்க வேண்டாம். அன்று உங்களிடம் இருந்த அரசியல் நேர்மை இன்று இருக்கா என்று தியான வகுப்பில் ஒரு முறையேனும் சுயபரிசோதனை செய்தால் நன்று ஐயா.

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தற்போது ஈழத்தமிழருக்கு விடிவென்பது சில வேளைகளில் எட்டா நெல்லிக்கனியாக இருந்தாலும்???? 
 
ஈழத்தமிழருக்கு இவ்வளவு அழிவுகள் நடந்துகொண்டிருக்கும் போதும் இன்னும் விடுதலைபுலிகளின் குறைநிறை பட்டியலுக்கு பஞ்சமேயில்லை.
ஆயுதகலாச்சாரத்தை பற்றி வாந்தியெடுப்பவர்களுக்கு:- தந்தை செல்வா காலத்திலிருந்து  ஈழத்தமிழனுக்கு சிங்களவனால் நடந்த அழிவுகளும் அவரின் அகிம்சைபோராட்ட காலத்தில்தான் நடந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
அன்றுமுதல் இன்றுவரை ஜீ.ஜீ பொன்னம்பலம் போன்ற அரிச்சுவடி அருவருடிகள் இருக்கும் வரை ஈழத்தவனுக்கு விடிவேயில்லை.

புலி அழிய வேண்டும் என்று பலரும்  எதிர்பார்த்தற்கு ஒரே காரணம் முழு தமிழனும் அழிய கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் .

இந்த நான்கு வருடங்களுமே அதற்கான மிகப்பெரும் சாட்சி .

இலங்கை அரசிசிடம் இருந்து விடுதலை பெற்று விட்டீர்களோ என்ற கேள்விக்கு பதில் .பல திசைகளிலும் அதற்கான முனைப்புகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன் .புலிகள் இருந்திருந்தால் இவை எதுவும் சாத்தியமில்லை .

உலக நாடுளிடம் இருந்து பயங்கரவாதிகள் என்ற பட்டம் பெற்றபின் அவர்களால்  எதுவும் செய்யமுடியாமல் படிப்படியாக போரட்டம் இறங்குமுகமாகிக்கொண்டுதான் வந்தது .அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை புலம் பெயர்ந்த பலருக்கு இன்னமும் இல்லை .அதற்கு மிக முக்கிய காரணம் தாங்கள் வைத்திருந்த நாட்டாண்மை வசதிகள் (பணம் ,பதவி ,அதிகாரம் ).இதனால் தான் இன்றும் தாங்கள்  தோற்றுவிடவில்லை என்பது போல் உலக அரங்குகளில் மாறி மாறி விதம் விதமாக நாடகங்கள் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் .சேர்த்து வைத்த பணம் இருக்கு பின்னால் இழுபட ஒரு கூட்டம் இருக்கு வேறு என்ன தேவை அவர்களுக்கு .

இவர்களின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு தனக்கு மிக சாதகமாக பயன்படுத்தி வருகின்றது என்பதையே இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை .இவையெல்லாம் புரிய கூடிய நிலையில்  இவர்கள் எப்போ இருந்தார்கள் .

 

 

சிலர் புலிகளை எதிர்த்து எழுத என்றுமட்டும்தான் யாழ்க்களம் வருகிறார்கள். வந்து புலிகளைத்தாக்குகிறார்கள். ஒரு பந்தி இரண்டு  பந்திகளில் அது நிற்கிற ஒழுங்குகளில் இல்லை.  புனை பெயரிலோ அல்லது இயற்பெயரிலோ புலிகளை ஆதாரிப்போருக்கு இந்த தாக்கல்கள் பாடமாக இருக்கும் என்று தெரிந்து எடுத்தவையைத்தான் எழுதுகிறார்கள். புலிகளை ஆதரிப்போரை தாக்குவோரை தாக்கினால் நீங்கள் புலத்தில் இல்லை இருந்தால் கண்டுபிடித்து சரியான ஒரு பாடம் தந்திருப்பேன் என்கிறார்களா? 

 

என்ன வகையான நியாயம்?

 

தாய் எட்டடி பாய்ந்தால் அரசின் குட்டி பதினாறடி பாயுமா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நான்கு வருடங்களுமே அதற்கான மிகப்பெரும் சாட்சி .

 

 

சிங்கள குடியேற்றங்கள் பற்றி பத்திரிகைகளில் வாசிக்கவும்.
 
தமிழர்களை வைத்தே தமிழர்களுக்கு எதிராக ஊர்வலம் நடாத்துவதை என்ன என்பது.
 
ஜெனிவாவில் தமிழர்களின் இனப்படுகொலை பற்றி பேசியவர்கள் இராணுவ புலனாய்வாளர்களால் தாக்கப்பட்டது.இன்னும் பல.
  • கருத்துக்கள உறவுகள்

புலி அழிய வேண்டும் என்று பலரும்  எதிர்பார்த்தற்கு ஒரே காரணம் முழு தமிழனும் அழிய கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் .

இந்த நான்கு வருடங்களுமே அதற்கான மிகப்பெரும் சாட்சி .

இலங்கை அரசிசிடம் இருந்து விடுதலை பெற்று விட்டீர்களோ என்ற கேள்விக்கு பதில் .பல திசைகளிலும் அதற்கான முனைப்புகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன் .புலிகள் இருந்திருந்தால் இவை எதுவும் சாத்தியமில்லை .

உலக நாடுளிடம் இருந்து பயங்கரவாதிகள் என்ற பட்டம் பெற்றபின் அவர்களால்  எதுவும் செய்யமுடியாமல் படிப்படியாக போரட்டம் இறங்குமுகமாகிக்கொண்டுதான் வந்தது .அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை புலம் பெயர்ந்த பலருக்கு இன்னமும் இல்லை .அதற்கு மிக முக்கிய காரணம் தாங்கள் வைத்திருந்த நாட்டாண்மை வசதிகள் (பணம் ,பதவி ,அதிகாரம் ).இதனால் தான் இன்றும் தாங்கள்  தோற்றுவிடவில்லை என்பது போல் உலக அரங்குகளில் மாறி மாறி விதம் விதமாக நாடகங்கள் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் .சேர்த்து வைத்த பணம் இருக்கு பின்னால் இழுபட ஒரு கூட்டம் இருக்கு வேறு என்ன தேவை அவர்களுக்கு .

இவர்களின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு தனக்கு மிக சாதகமாக பயன்படுத்தி வருகின்றது என்பதையே இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை .இவையெல்லாம் புரிய கூடிய நிலையில்  இவர்கள் எப்போ இருந்தார்கள் .

 

அரசியலில் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளை ஏன் சர்வதேசம் பயங்கரவாதி என்று நாமம் சூட்டியது என்று புரிந்து இருக்கும். 

 

விடுதலைப் புலிகள் சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக நடந்து இருந்திருந்தால் அவர்களின் செயல்கள் என்றுமே பயங்கரவாதம் ஆகி இருக்காது. இந்த விடயத்தினை தெளிவாக இன்று சிரியாவுக்கு சர்வதேசம் கொடுக்கும் ஆதரவினையும், அன்றில் இருந்து இன்று வரைக்கும் மிலேச்சாதிகார சவூதி அரேபியாவுக்கு சர்வதேசம் கொடுக்கும் ஆதரவினையும் புரிந்து கொள்பவர்களுக்கு புரியும். புலிகள் தம் சொந்தக் காலில் நிற்பதாக கனவு கண்டு சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எக்காலத்திலும் இணங்க மறுத்ததனால் பயங்கரவாத முத்திரை குத்தி அழிக்கப்பட்டவர்கள்.

 

இன்று காஸ்மீரில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளும் பயங்கரவாதிகள் என்று தான் அழைக்கபடுகின்றனர். ஆதிக்க சக்திகளின் வணிக நலங்களுக்கு எவரெவர் எதிரியோ அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் தான். புலிகளும் அவ்வாறுதான். புலிகள் குற்றம் செய்யாத அப்பழுக்கற்றவர்கள் என்று நிறுவவில்லை. ஆனால் அவர்களின் தவறுகள் பல நூற்று போராளி அமைப்புகள் விட்ட அதே தவறுகள் தான்.

 

உங்களைப் போன்றவர்களின் கோபம் என்னவென்றால், இன்றும் கூட உங்களை யாரும் தாம்பாளத்தட்டில் வைத்து ஆரத்தி எடுக்கவில்லை என்பதுதான். மக்கள் புலிகளை எவ்வளவுக்கு எவ்வளவு கோபத்துடன் பேசினாலும் கூட எக்காலத்திலும் உங்களைப் போன்ற வெற்று புலி எதிர்ப்பில் அரசியல் செய்பவர்களை மக்கள் ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை. 

 

புலி அழிந்தாலும் இருந்தாலும் உங்கள் சுயநல புலி எதிர்ப்பு அரசியல் என்றென்றும் வேகப் போவதில்லை. 

 

வரலாறு அழிக்கப்பட்ட புலிகளை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

புலி அழிய வேண்டும் என்று பலரும்  எதிர்பார்த்தற்கு ஒரே காரணம் முழு தமிழனும் அழிய கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் .

இந்த நான்கு வருடங்களுமே அதற்கான மிகப்பெரும் சாட்சி .

இலங்கை அரசிசிடம் இருந்து விடுதலை பெற்று விட்டீர்களோ என்ற கேள்விக்கு பதில் .பல திசைகளிலும் அதற்கான முனைப்புகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன் .புலிகள் இருந்திருந்தால் இவை எதுவும் சாத்தியமில்லை .

உலக நாடுளிடம் இருந்து பயங்கரவாதிகள் என்ற பட்டம் பெற்றபின் அவர்களால்  எதுவும் செய்யமுடியாமல் படிப்படியாக போரட்டம் இறங்குமுகமாகிக்கொண்டுதான் வந்தது .அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை புலம் பெயர்ந்த பலருக்கு இன்னமும் இல்லை .அதற்கு மிக முக்கிய காரணம் தாங்கள் வைத்திருந்த நாட்டாண்மை வசதிகள் (பணம் ,பதவி ,அதிகாரம் ).இதனால் தான் இன்றும் தாங்கள்  தோற்றுவிடவில்லை என்பது போல் உலக அரங்குகளில் மாறி மாறி விதம் விதமாக நாடகங்கள் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் .சேர்த்து வைத்த பணம் இருக்கு பின்னால் இழுபட ஒரு கூட்டம் இருக்கு வேறு என்ன தேவை அவர்களுக்கு .

இவர்களின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு தனக்கு மிக சாதகமாக பயன்படுத்தி வருகின்றது என்பதையே இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை .இவையெல்லாம் புரிய கூடிய நிலையில்  இவர்கள் எப்போ இருந்தார்கள் .

எந்த முனைப்புகள் என்று கொஞ்சம் எழுதினால் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

 
எந்த முனையிலும் புலிகொடியோடுதனே நிற்கிறான்?? இதுவும் கனவுலகோ? தெரியவில்லை.
நீங்கள் எந்த உலகில் இருக்கிறீர்கள் என்று முகவரியையும் போட்டு.........
முனைப்புகள் எந்த முவரியில் நடக்கின்றன என்றும் போட்டால் 
விளங்க வசதியாய் இருக்கும்.
 
நாங்கள் இருக்கும் உலகில் (அதாவது கற்பனை உலகில்) எந்த பக்கமும் புலிகொடியோடுதான் நிற்கிறார்கள்.
புலிக்கொடி இல்லாமலும் சிலர் இருக்கிறார்கள். புலியை பார்த்து வந்த காய்ச்சல் இன்னமும் மாறவில்லை ஒரே வாந்தியை எடுத்துகொண்டு சில மூலைகளில் திரிகிறார்கள். முன்பும் நாட்டை நாறடிதவர்கள் என்பதால் இவர்கள் வாந்திகள் பற்றி  மக்கள் இங்கே பெரிதாக அலட்டுவதில்லை.

வசைபாட தெரிந்தவர்களுக்கு வழி சொல்லத் தெரியவில்லை, விஷமேற்றிச் சொல்கின்றார்கள், காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில்.

 

மண்டையில் ஏறியிருப்பது எதிர்ப்பு, அதில் தமிழனின் விடிவிற்கு எழுதிக்கிழிக்கிறமென ஓநாய்களின் நீலிக்கண்ணிர்.

 

ஒன்றும் கிழிக்க வேண்டாம் ஒதுங்கியிருந்தாலே போதும்.

புலி அழிய வேண்டும் என்று பலரும்  எதிர்பார்த்தற்கு ஒரே காரணம் முழு தமிழனும் அழிய கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் .

இந்த நான்கு வருடங்களுமே அதற்கான மிகப்பெரும் சாட்சி .

இலங்கை அரசிசிடம் இருந்து விடுதலை பெற்று விட்டீர்களோ என்ற கேள்விக்கு பதில் .பல திசைகளிலும் அதற்கான முனைப்புகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன் .புலிகள் இருந்திருந்தால் இவை எதுவும் சாத்தியமில்லை .

உலக நாடுளிடம் இருந்து பயங்கரவாதிகள் என்ற பட்டம் பெற்றபின் அவர்களால்  எதுவும் செய்யமுடியாமல் படிப்படியாக போரட்டம் இறங்குமுகமாகிக்கொண்டுதான் வந்தது .அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை புலம் பெயர்ந்த பலருக்கு இன்னமும் இல்லை .அதற்கு மிக முக்கிய காரணம் தாங்கள் வைத்திருந்த நாட்டாண்மை வசதிகள் (பணம் ,பதவி ,அதிகாரம் ).இதனால் தான் இன்றும் தாங்கள்  தோற்றுவிடவில்லை என்பது போல் உலக அரங்குகளில் மாறி மாறி விதம் விதமாக நாடகங்கள் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் .சேர்த்து வைத்த பணம் இருக்கு பின்னால் இழுபட ஒரு கூட்டம் இருக்கு வேறு என்ன தேவை அவர்களுக்கு .

இவர்களின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு தனக்கு மிக சாதகமாக பயன்படுத்தி வருகின்றது என்பதையே இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை .இவையெல்லாம் புரிய கூடிய நிலையில்  இவர்கள் எப்போ இருந்தார்கள் .

 

புலிகள் அழிந்ததால் தமிழர்கள் தப்பினார்கள் என்பது அரிசுன்னின் கொமேடி. இந்த ஆள் குறந்தது ஐ.நா. உள்ளக விசாரணை அறிக்கை தன்னும் வாசிக்காமல் பொழுது பொக்கு எழுதுவது வழமை. அதில் புலிகள் அழியட்டும் என்று எதிர் பார்த்த எல்லோரையும் பற்றிச்சொல்லப்படுகிறது.  புலிகள் அழியட்டும் என்று எதிர்பார்த அரசுகளில் கடைசி அரசான காங்கிரசும் அந்த நாட்டில் அதன்  மக்களாலேயே பதவி நீக்கிவைக்கப்பட போகிறது.

 

பிரன்சிஸ் கரிசனின் ஒரு கூட்டத்திற்கு போய் பந்தம் பிடிக்கலாம் ஆனால் அது ".பல திசைகளிலும் அதற்கான முனைப்புகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன் ." என்று ஆகாது.

 

ஆனால் இதையும் எழுதி இதற்கு சில நிடங்களுக்கு முன்னர் யஸ்வந் சிங்கை பற்றி சொல்லி இருக்கும் நக்கலையும் படிப்போர் அரிச்சுனின் நாணல் நிலையை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்..

"இவர்களின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு தனக்கு மிக சாதகமாக பயன்படுத்தி வருகின்றது என்பதையே இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை
.இவையெல்லாம் புரிய கூடிய நிலையில்  இவர்கள் எப்போ இருந்தார்கள் ."

:D


 

  • கருத்துக்கள உறவுகள்

"இவர்களின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு தனக்கு மிக சாதகமாக பயன்படுத்தி வருகின்றது என்பதையே இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை

.இவையெல்லாம் புரிய கூடிய நிலையில்  இவர்கள் எப்போ இருந்தார்கள் ."

:D

யார் யாருக்கு என்ன புரிகிறது என்பதில் எந்த பயனும் இல்லை.

 
காட்டிலே மாடு மேய்ப்பவன் குறைந்த பட்சம் சில மாடுகளுக்காகிலும் வழிகாட்டியாகிறான்.
 
நீங்கள் சர்வதேச அரசியலை புரிந்துவிட்டோம் என்று பினாத்துவதில் எந்த பயனும் இல்லை.
அதை வைத்து என்ன செய்து கிழித்தீர்கள்  அல்லது கிழித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதே உங்களிடம் இருந்து யாவரும் எதிர்பார்ப்பது.
எதையாவது கிழித்து கொண்டிருந்தால் அதை ஆதரங்களுடன் இணையுங்கள்.
நீங்கள்தான் எதற்கும் அஞ்சாத சிங்கங்கள் ஆச்சே.
 
பொருளாதார சுரண்டல் என்பது மனிதர்கள் குழுமங்களாக கூடிய ஆதிகாலம் தொட்டே  தொடங்கிய ஒன்று.
நீங்கள் வளைந்து நின்றாலும் சுரண்டுவான் குனிந்து நிண்டாலும் சுரண்டுறவன் சுரண்டி கொண்டே இருப்பான் .
சுரண்டல்களை தடுத்து நிறுத்துவதே தந்திரம் என்பது.
குனிஞ்சு நிற்பதை தமிழில் வேற மாதிரி சொல்லுவார்கள்.
 
தீபத்தையும் அடக்கி வைத்துகொண்டு கூகிளுக்கும் கதவடைத்துவிட்டு அனைத்து தனிமனித சுதந்திரங்களுக்கும் தடை போட்டுவிட்டு  சீனா இருக்கிறது. எந்த ஜெனநாயக  நாடு எமக்கு சீன உறவு வேண்டாம் என்று விலகி நிற்கிறது ? அங்கே பசை  இருக்கிறது  போய் ஒட்டி கொள்கிறார்கள். உதட்டளவில் ஜெனநாயகம் பேச யாரவது வேண்டும்  அப்போது சில சதாம் உசைன்கள் உருவாக்க படுகிறார்கள்.
 
சிங்களவனின் கொள்கை தமிழனை இலங்கை தீவில் இருந்து துடைத்து எறிவது.
தமிழன் குனிஞ்சு நிற்கிறானோ நிமிர்ந்து நிற்கிறானோ என்று அவன் பார்ப்பதில்லை.
உங்களை போன்ற சில தமிழர்கள்தான் எல்லாம் புரிந்துவிட்டோம் என்று குனிஞ்சு நிற்கின்றீர்கள். அவனுக்கு வேலை சுலபம் இதைவிட இதில் என்ன அரசியல் இருக்கிறது ?
 
அப்படி ஏதும் இருந்தால் ஒரு முறை எழுதி காட்டி ....
ஒரு கருத்து களத்தில் எப்படி ஒருவரின் கருத்தை மறுத்து எதிர் கருத்தை ஆதரங்களுடன் வைக்கிறார்களோ அதைப்போல ........ ஒரு முறை என்றாலும் முயற்சி செய்து பாருங்களேன். 
 
நான் இப்படிதான் நினைக்கிறேன் இது ஒருவேளை பிழையாக இருக்கலாம்.
பிழை .... பிழை  என்று நீங்கள் ஆயிரம் தடவைகள் எழுதிகிறீர்கள். ஏன் பிழை என்று கேட்டால் . இதற்கெல்லாம் பதில் எழுத்து வேண்டிய தேவை எனக்கில்லை என்று .... உலக அதிபர்களை  சந்திக்க சென்று விடுவீர்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்....

இங்கு பின்னுட்டம் இட்டவர்களில் ஒருவர் (nunavilan) மட்டுமே வசைபாடாது கேள்வி ஒன்றை ;முன்வைத்திருக்கின்றார்.

அவருக்கு (nunavilan) எனது பதில்....

அன்று கனடாவில் வெளிவந்த் பத்திரிகைகளின் வந்த செய்து.... அதை வாசித்த பின் எழுந்த கோவத்தினால் எழுதியது....

 

மற்றவர்களுக்கு நீங்கள் உங்கள் முகங்களை; மறைத்துக் கொண்டு வசை பாடியிருக்கின்றிர்கள்....

அதுவூம் பிழையான தகவல்கள் அல்லது தவாறன புரிதல்களுடன்...

பரவாயில்லை நீங்கள் புலத்தில் ஈழத்தில் இருந்தால் புரிந்து கொள்ள ;முயற்சிக்கின்றேன்....

ஆனால் அவ்வாறு இல்லை என்றே நினைக்கின்றேன்...

பெரும்பாலும் புலம் பெயர்ந்து இருந்து கொண்டு கன்வூகளிலும் கற்பனைகளிலும் வாழ்கின்றீர்கள்....

சிலருக்கு என்னைப் பற்றிய ;தகவல்கள் சில ;தெரிந்திருக்கின்றன... ஆனால் இவர்களுக்கு தம்மை ;அறிமுகப்படுத்தும் தைரியம் இல்லை....

ஆனால ;வசை பாடமட்டும் தைரியம் உள்ளது...

ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு கட்சியினதோ இயக்கத்தினதோ உரித்து அல்ல...

அடக்குமுறை தொடரும் வரை அதற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டம் பல்வேறு இயக்கங்களால்; கட்சிகளால் முன்னெடுக்கப்படும்...

இவர்'களின் அரசியில் தொலைநோக்குப் பார்வை பொறுப்புணர்வூ என்பவற்றைப ;பொறுத்து  ஈழத் தமிழர்களுக்கு ; விடுதலை கிடைக்கும்...

அந்த நம்பிக்கையில் த்hன் எழுதிக் கொண்டிருக்கின்றேன்....

நன்றி

இது கூட கொஞ்சம் சறுக்கலாம்...........

 
நீங்கள் எவளவு  பெரிய தீர்கதரிசி உங்களது வாக்கு சறுக்கலாமா ??
 
நீங்கள் இப்படி சுருக்கமாக எழுதியிருக்கலாம் என்பது உங்களுடைய எழுத்துக்களின் ஆத்மா ரசிகன் ஆகிய எனது எண்ணம்.............
 
விடுதலை கிடைக்கும் நேரத்தில்....
யார் போராடி கொண்டு இருக்கிறார்களோ.
அவர்கள் காலத்தில் விடுதலை நிச்சயம் கிடைக்கும்.
 
இது இம்மி அளவும் சறுக்காது. கல்லிலே செதுக்கி வைக்கலாம் மீரா பாரதி சொன்னதன் படியே நடந்துச்சு என்று எல்லோரும் வியந்து போவார்கள்.

"இவர்களின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு தனக்கு மிக சாதகமாக பயன்படுத்தி வருகின்றது என்பதையே இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை

.இவையெல்லாம் புரிய கூடிய நிலையில்  இவர்கள் எப்போ இருந்தார்கள் ."

:D

 

நீங்கள் விரும்பினதை எழுதுங்கோ. ஆனால் உங்களை நம்பி யாழிலை எழுத வந்தவர்கள் நீங்கள் இப்படி திடு திடுப்பென போட்டு உடைக்க, தாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்.  :D

 

அரசு உங்களை நம்பி நடு ஆற்றுக்குள் காலை வைக்காது. ஆனால் உங்கள் நண்பர்களை நம்பி காலை விடுகிறது. அவர்கள்தான் உங்களை நம்பி யாழுக்கு வருகிறார்கள்.

வணக்கம்....
முதலாவது இந்த விவாத்தில் முக்கியமான ;விவாதப் ;புள்ளி புறக்கணிக்கப்பட்டு தனிநபர் தாக்குதல்களும் வசைபாடல்களுமெ ;நடைபெறுகின்றன....


 

இரண்டாவது நாம் போராட்;டத்தில் ஏன் தோற்றுப் போனோம் என்பதற்கான நல்ல உதாரணம் இந்த விவாதத்தில் இருக்கின்றது... அதாவது நாம ;எதையூம ;முழுமையாக பார்ப்பதற்கு தயார் இல்லை... பகுதி பகுதியாப ;பார்த்துதான் பதிலளிப்போம்... எதிர்வினையாற்றுவொம்....
இஇது ; தவறான புரிதல்களுக்கே தொடர்ச்சியாக நம்மை ;இட்டுச் செல்லும்....
எனது கட்டுரைகளின் பகுதிகளை சுட்க்காட்டித்தான் என் மீதான ;விமர்சனமல்ல ;வசைபாடல்கள் நடைபெறுகின்றன....


 

மூன்றாவது....இப்பொழுது நான் பயன்படுத்தும் பெயரும் புனைப் பெயர்தான்... ஆனால் யார் என்று அனைவருக்கும் தெரிந்த பெயர்.... இலங்கையில் 96ம் ஆண்டு வரை ;இருந்தபோது பத்திரிகையில ;வேலை செய்தபோது... பயன்படுத்தப்பட்ட ;புனைப் பெயர் எனது தெரிவல்ல.... இருப்பினும் அது முக்கியமல்ல...
புலம் பெயரந்த் பின் மட்டுமல்ல இலங்கையிலிருந்த காலங்களிலிருந்தே நான் வெளிப்படையான அரச அரசாங்க எதிர்ப்பாளர்... இவ்வாறன எதிர்ப்பு போராட்டங்களில் பங்குபற்றியிருக்கின்றேன்... வெளிப்டையான ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர்...
வெளிப்படையாக  புலிகள் இயக்கத்தின் தலைமையை மட்டுமல்ல சகல இயக்கங்களின் தலைமைகளின் தவறான அரசியல் கருத்துக்களையூம ;செயற்பாடுகளையூம் விமர்சிப்பவர்....
என்னைத் தெரிந்தவர்களுக்கு இது தெரியூம்...


 

சக நண்பர்கள் மீது விமர்சனம் இருப்பின் புனைப் பெயரில் ஒழிந்து ;கொண்டு தாக்குதலோ வசைபாடுதல்களோ ;செய்வதில்லை... அவர்களிடமே நேரடியாக தெரிவிப்பேன்...
இதுவே  அரோக்கியமான ;உறவூக்கு நல்லது என நம்புனிற்னவன்...


நானும் மனோ ரஞ்சனும் அரசியல் நிலைப்பாடுகளில் எதிர் எதிர் தளங்களில் இருப்பவர்கள்....


கருத்துக்கள் ஆரோக்கியமாக முன்வைக்கப்படின் உரையாடல்ம்...தொடர்ந்தும்...
நன்றி

இலங்கையில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என  கூறிக் கொண்டு இலங்கை அரசுக்கு செய்த கொலைகளுக்கு அடுத்ததாக அதிகமான  படுகொலைகளை செய்த அமைப்பு  எது?

 

 

சிங்களவன் தமிழர்களின் போராட்டத்தை அழிக்க  தமிழர்களைக் கொன்றான் ஆனால்  புலிகள் தமிழர்களின் போராட்டத்தை வளர்க்க சிங்களவன் , தமிழன் , முஸ்லிம்களையும் சேர்த்துக் கொன்றார்கள்.........

 

 

அதுக்காக  கொலைசெய்யப்பாட்ட அனைவரும்  நல்லவர்கள் இல்லை ஆனால் செய்ய யார் அனுமதி கொடுத்தது?  படுகொலையின்ம் பின் பெற்ற பயன்  யாது?

சசிக்கு நூறு பச்சை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.