Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈச்சை மரத்து வேர்களே.. கப்பல் ஏற முதல்.. எங்கள் கதை கேளுங்கள்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kathankudi8.jpg

 

{சோழன் ஆண்ட தமிழன் வாழ்ந்த பூமியில் கப்பலேறி குடியேற வரும் அரபுத் திமிர்கள்.. பேரீச்சை மரங்கள். ஈழத்தின் கிழக்கின் காத்தான்குடி என்ற ஊர் இன்று முழு முஸ்லீம் கிராமமாகி அரபு வடிவம் எடுக்கிறது}

 

அரபிய

மணற்படுக்கையின்

அற்புதங்களே

ஈச்சை மரத்து வேர்களே..

கூலிகளாய்

நாம் அங்கு

சிந்திய வியர்வை

சிதறிய நீரில்

வளர்ந்து பெருத்த திமிர்களே..!

 

எட்ட வளர்ந்து

கனி தரும் போது

ஒட்டகமாய்

தாங்கி நின்று

பறித்துப் பெட்டியில் அடைத்து

ஏற்றி விட்டு

நாம் கூனி விட்டோம்..!

எஜமானர்களின்

எண்ணெய் காசில்

நீரோ

நிமிர்ந்து நின்று

மினுமினுக்கிறீர்..!

 

விமானம் ஏறி

ஆசை கொண்டு

அரபுலோகம் வர

தங்கை மீது

பழிமுடித்து

அவள் தலை கொய்தீர்..!

நீரோ..

வேரூன்ற

கப்பலேறி

தமிழீழம் வருகிறீர்

காத்தான்குடியில்

குந்திவிட..!

குடியிருந்துவிட..!!

 

சுவட்டு எண்ணெய்கள்

நேற்றைய மரணத்தின்

பெறுதிகள்.

உங்கள் பணத்திமிரின்

மதத்திமிரின்

தேட்டங்கள்..!

 

ஈழ மண்ணில்

என்ன இருக்கு..

விதவைகளான

எம் சகோதரிகள் தான் இருக்கு..!

மிச்சம் என்ன....

உம் சோதரர்கள்

கொன்று புதைத்த

சோதரத் தமிழன்

இரத்த ஈரம் தானுண்டு..!

 

இன்னும்

என்ன ...

உறிஞ்ச வருகிறீர்

சொந்த நிலம் இழந்து

அநாதைகளாய் நாம் இங்கு..!

மூச்சுத் தான் மிச்சம்

அதைவும்

அல்லாவுக்கு

அடகு கேட்காதீர்..!

 

விட்டு விடுங்கள்

எம்மை..

நிம்மதியாய் வாழ்கிறோம்.

நெடும் பனை நடுவே

நொங்குண்டு..

வாகை நிழலில்

செண்பகத்தின்

சிறகடிப்பில்

உந்தி எழும்

சுதந்திர

தேசக்காற்றிழுத்து.!

 

 

DSC03780%20%281%29.JPG

 

{ஈழம்: காத்தான்குடி... இன்று.}

 

Edited by nedukkalapoovan

  • Replies 82
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது வடக்கில் இருந்து வெளியேற்றியது நல்ல செயல்தான் போல் இருக்கு.. இந்த எண்ணம் வரக்காரணம் சாதாரண முஸ்லீம் குடிமக்கள் அல்ல.. அவர்க்ளைப் பிரதிநிதிப்படுத்தும் இனவாத சுயநலத் தலைமைகள் அந்த மக்களைப் பலிக்கடா ஆக்குகிறார்கள்..!

 

பொதுபலசேனா ஏன் இந்த ஆட்டம் போடுது எண்டும் விளங்குது..

கடந்த 100 வருடங்களில் காத்தான் குடி எப்ப தமிழ் ஊராக இருந்தது?

 

சோழன் கூட ஆக்கிரமிப்பாளன் தான். நாம் சோழ வம்சத்தின் அடிகள் அல்ல. தமிழர்கள் சோழ ஆக்கிரம்பிப்பின் / தென் இந்திய படையெடுப்பின் பின் வந்து குடியேறியவர்கள் என்று சொல்லும் சிங்களப் பேரினவாதத்தின் கூற்றைத் தான் முதல் வரியில் இட்டு மெச்சி கவிதை எழுதியுள்ளீர்கள் நெடுக்கு.

 

காத்தான் குடியில் ஈச்ச மரம் வருவதால் தமிழர் வாழ்வுக்கு எந்த விதத்தில் எதிரானதாக அமையும் என்று சொல்லவும் நெடுக்கு.

 

தமிழர் வாழும் பிரதேசங்கள் எங்கும் அரச மரமும் அதன் கீழ் புத்த சிலைகளும் புத்த விகாரைகளும் விதைக்கப்பட்டு தமிழ் பேசும் நிலங்கள் யாவும் பெளத்த சிங்கள மயப்படுத்தப்பட்டு வரும் நேரத்தில் இந்த கவிதை ஈச்ச மரங்களை கேள்வி கேட்குது.

 

 

சிங்கள இனவாதத்துக்கு சற்று சளைத்ததில்லை தமிழ் இனவாதம் என்பதுக்கும் அது இன்னொரு இனவாதத்துடன் தன் நலங்களுக்காக கூட்டு வைக்கும் என்பதுக்கும் உங்கள் கவிதையும் அது வந்திருக்கும் காலகட்டமும் ஒரு பெரும் சான்று.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1. 100 வருடங்கள் மலையகத்திலும் தான் தமிழ் மக்கள் இருக்கினம்.. அங்கு பனை மரமா.. வேப்பமரமா.. நாட்டப்படுகிறது..??! இதே போன்ற ஒரு செயலை.. வடக்குக் கிழக்கிற்கு அப்பால் முஸ்லீம்கள் நீண்ட காலம்.. பொரும்பான்மையாக வாழும் பகுதியில் செய்யட்டும் பார்க்கலாம்..??!

 

எந்த வரலாற்றியல் குறிப்புச் சொல்கிறது.. காத்தான்குடி முஸ்லீம்களின் பூர்வீக பூமி என்று..????! அந்த வரலாற்றுக் குறிப்பில் எப்ப இருந்து இந்த குடித்தொகைப் பரம்பல் ஆரம்பமானது.. எப்படி சுற்றிவர தமிழ் கிராமங்கள் இருக்க இது நடுவில் முளைத்தது என்ற ரகசியமாவது இருக்கா..???! இருந்தால் முதலில் அதனை இனங்காட்டுங்கள்..!!!

 

2. சோழன் ஆக்கிரமிப்பாளன் என்பதற்கு அப்பால் அவன் தமிழன். ஈழத்தில் வாழ்ந்த தமிழர்களுடன் வாழ்வியல்.. கலாசார.. மத.. மொழி.. பிராந்திய இசைவுகளைக் கொண்டவன். அந்த வகையில் சோழனின் வருகை ஆக்கிரமிப்பல்ல..! நாம் இன்று அகதிகளாக தமிழகம் செல்வது ஆக்கிரமிப்பா..??! எந்தத் தொடர்பில் செல்கிறோம்.. தமிழர் அங்குள்ளனர் என்று தானே. அதே வகையினதே சோழனின் வரவு. அந்த வகையில்.. சோழன் ஆண்ட பூமியில் இதுவும் அடங்குகிறது.. என்பதில் என்ன வரலாற்றுத் தவறுண்டு..???!

 

3. சோழனின் வரவை ஆதரிப்பதன் மூலம்.. அதற்கு முன்.. ஈழத்தில் தமிழர்கள் வாழவே இல்லை என்ற நிலைப்பாட்டை நாம் எடுப்பதாக நீங்கள் சிங்கள பேரினவாதத்தின் குறிப்போடு.. கற்பனையாக ஒன்றை நிறுவ முற்படுகிறீர்கள். சோழன் ஈழத்துக்கு வர அங்கு அவன் தனது இனம் வாழ்வதை அடையாளம் கண்டு கொண்டதும் அதன் அடிப்படையில்.. அவனால் நீண்ட காலம் அங்கு ஒரு ஸ்திரமான ஆட்சியை நிறுவ முடிந்ததும் வரலாறு..! அதை நீங்களோ.. சிங்களப் பேரினவாதிகளோ.. இஸ்லாமிய முஸ்லீம் மதவெறிகளோ.. ஒட்டுக்குழு.. விட்டேறிகளோ.. மாற்றிட முடியாது.

 

4. இல்லாத ஒன்றைப் புகுத்துவதிலும் உள்ள ஒன்றை காக்கலாமே..! இல்லாத பேரீச்சை ஏன் எங்கிருந்தோ இங்கு கொண்டு வந்து.. இந்த நிலம் அதற்குச் சமன் என்று இனங்காட்ட வேண்டும். இந்தப் பேரீச்சைகளின் விளை பொருள் இலங்கைச் சோனர்களின் பேரீச்சம் பழத் தேவையை தீர்க்குமா..??! மன்னாரில் மரமுந்திரிகையையோடு சிங்களம் சிலாவத்துறை கொண்டச்சியை ஆக்கிரமித்தது போல.. இதுவும் ஒரு வகை ஆக்கிரமிப்பே..! முஸ்லீம் மற்றும் சிங்கள ஆக்கிரமிப்புக்களின் மையமாக இன்று வடக்கில் மன்னார் திகழ்கிறது.

 

அரசும்.. வேம்பும்.. அந்த இடத்தில்..இயல்பாக வாழும் தாவரங்கள். அவற்றின் பரம்பலோடு.. மதம் நுழைந்தது.. என்று சொல்வது முட்டாள் தனம். அதேபோல்.. இந்த நகரம் முஸ்லீம்களின் பூர்வீகம் என்று இனங்காட்ட இல்லாத பேரீச்சை இருக்கென்று காட்டுவது.. மோசமான மதவெறியின் அடையாளமாகும். அதனால் தான் பேரீச்சையின் வரவு குறித்து.. அதனிடம் கேள்வி கேட்கிறது ஆக்கம்..!!!

 

5.ஆம்.. இயல்பாக.. அயனமண்டலப் பிரதேசத்தில் பரவி இருக்கும் அரச மரங்களின் கீழ் புத்தரை வைத்து அங்கெல்லாம் புத்தர் வசிக்கிறார் என்று சொல்லி பேரினவாத சிங்களப் பயங்கரவாதிகள்.. ஆயுத பலத்தை தங்களின் கையில் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை அவர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டி அடுத்துவிட்டு சிங்களவர்களைக் குடியமர்த்துவது போல.. இன்று காத்தான்குடியை சுத்த அரபு முஸ்லீம் இஸ்லாமிய பிரதேசமாக இனங்காட்டி அந்த மத அடிப்படைவாத வெறியை.. அடிப்படையாகக் கொண்டு வடக்குக் கிழக்கு எங்கும்... தமிழ் கிராமங்கள் மீது முஸ்லீம் மதவாத வெறியர்கள் தொடரும்.. நிலப்பறிப்பு ஆக்கிரமிப்பு என்பது.. சிங்களப் பேரினவாதத்தின் கொள்கைக்கு சிறிதும் வித்தியாசமானதல்ல.

 

அம்பாறையிலும் மட்டக்களப்பிலும்.. இந்தப் போரின் முன்னும்.. போதும்.. பின்னும்.. அபகரிக்கப்பட்ட.. குறிப்பாக முஸ்லீம் காங்கிரஸின்.. ஹிஸ்புல்லா கூட்டத்தால் அடித்து விரட்டப்பட்டு அபகரிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் பற்றிய அக்கறையை நீங்கள் எப்போதாவது வெளியிட்டு இருக்கிறீர்களா..??! ஈச்சை மரம்.. காத்தான்குடிக்கு வருவதற்கு பொங்கி எழுந்து ஆதரவு தரும் நீங்கள் சொந்த மக்களை அதே காத்தான்குடி ஓட ஓட விரட்டுவதை என்ன என்று சொல்கிறீர்கள்...???!

 

காத்தான்குடிக்கு ஈச்சை மரம் வருவதல்ல.. பிரச்சனை. காத்தான்குடி அரபு மயமாகி.... அதனை அண்டிய பிரதேசங்கள்.. புனித இஸ்லாமிய பிரதேசங்களாகும் நிலை தோன்றினால்.. அங்கு பூர்வீகமாக... வாழும் தமிழ் மக்களின் நிலை என்ன என்ற அக்கறை தான்... ஈச்சை மரத்தை நோக்கி கேள்விகளைக் குவிக்கச் செய்கிறது. கல்முனையில் செய்த படுகொலைகளை அப்படியே மறைத்துவிட்டு... காத்தான்குடி படுகொலைகளை தூக்கிப் பிடிக்கும் இந்தக் கூட்டம்.. கல்முனையில் அவர்கள் செய்த இனப்படுகொலைக்கு என்ன பரிகாரம் தேடிக் கொண்டார்கள்.. இதுவரை. ஒரு கண்ணீரஞ்சலி செலுத்தியுள்ளார்களா..??!

 

ஆம்.. தமிழர்கள்.. தம்மை சமமாக.. உரிமையோடு.. நடத்துபவர்களின் முன் இனவாதிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர்களை மத மேலாதிக்க வெறியோடு முஸ்லீம்களும்.. இன மொழி மத மேலாதிக்க வெறியோடு சிங்களவர்களும் அடக்கி ஆள நினைக்கின்ற போது தமிழர்கள் தங்களின் இனத்துவத்தால் தம்மை பலப்படுத்தியே ஆக வேண்டும். அந்த இடத்தில் தமிழ் இனவாதம் என்பதற்கும் அப்பால் தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்கவும் குரல்கொடுக்கவும் உரிமைகளை எப்பாடுபட்டாவது மீட்கவும் காக்கவும் போராடவும் வேண்டும்.

 

அதன் ஒரு வடிவமே இது.

 

யாழ்ப்பாணத்தில் சோனக தெரு எப்படி ஒரு புற்றுநோயின் மையமாக உள்ளதோ.. அதேபோல்.. காத்தான்குடி தமிழர்களிடம் இருந்து முழுத் தென் தமிழீழத்தை கபளீகரம் செய்யக் கூடிய ஒரு புற்றுநோயின் hot spot ஆக உருவெடுத்துள்ளது. அது இன்று வியாபிக்கவும் ஆரம்பித்துள்ளது. இதனை இட்டு தமிழ் மக்கள் எச்சரிக்கை இன்றி சும்மா வாழாதிருக்க முடியாது.

 

இப்படி ஒரு நிலை அமெரிக்காவிற்கோ.. இஸ்ரேலுக்கோ..  இந்தியாவிற்கோ.. சீனனுக்கோ.. வருமானால்.. அமெரிக்கன்... போர் தொடுத்து அழிப்பான். இஸ்ரேல் ஆக்கிரமித்து அழிக்கும்.. இந்தியன்.. இந்துத்துவத்தால் வன்முறையை வீசி அழிப்பான். சீனன் ரகசியமா கதையை முடிச்சிடுவான். சிங்களவன்.. பொதுபல சேனையை விட்டு அடிப்பான். தமிழர்கள் நாங்களோ.. கருத்தியலால் உணர்த்த விளைகிறோம். உணரச் செய்ய முனைகிறோம். அவ்வளவே..! இதனை தமிழ் இனவாதம் என்று நீங்கள் உச்சரிக்க விரும்பினால் தாராளமாக உச்சரித்துவிட்டுப் போகலாம். எமது மக்களின் மண்ணும் இருப்பும் உரிமையையும் காக்க அது வகை செய்யும் என்றால் நிச்சயம் அதனை ஏற்றுக் கொள்ள பின்நிற்கப் போவதில்லை.  :icon_idea::)

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நெடுக்கின் கருத்துடன் உடன்பாடுண்டு

அது எமது தாய் மண்மீதான பற்று சார்ந்து.

எமது தாயக பூமியைப்பறி கொடுப்பது என்பது வேதனையளிப்பது.

அதில் நடக்கும் மாற்றங்கள்

அதில் ஏற்படுத்தப்படும் குழப்பங்கள்  மனதில் பெரும் தாக்கங்களை ஏறற்படுத்தக்கூடியன..

 

அதேநேரம் நிழலி  சொல்லவருவதையும் மறுக்கமுடியாது

உலகம் பூராகவும் பரவி

அங்கெல்லாம் எமது சம்பிரதாய  பழக்கவழிக்கங்களை  கொண்டு திரிந்து கொண்டு

மற்றவரைக்கைகாட்ட கொஞ்சம் கூச்சமாகத்தானிருக்கிறது

 

ஆனால் நாம் எவரது மண்ணிற்கும் உரிமை கோருபவர்களல்ல

எம்மை எம் மண்ணில் வாழவிடாததால்தான் புலம்  பெயர்ந்தோம்

என்ற தர்மம் எம்மிடமிருப்பதால் எமது மண்ணைக்காப்பதற்கான கூவுதலைக்கூடவா நாம் செய்யக்கூடாது.... :(

காத்தான் குடி இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பிரதேசம். முஸ்லிம்கள் 200 வருடங்களுக்கு முன்பே வாழ்ந்த பல இடங்கள் கிழக்கில் இருக்கின்றன. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் எப்படி பூர்வீக பிரதேசமோ அதே போன்றே கிழக்கின் பல ஊர்களும், வடக்கின் சில பிரதேசங்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் பூர்வீக பிரதேசங்கள். இதனை நீங்கள் ஏற்கின்றீர்களோ இல்லையோ என்பதுக்கும் அப்பால் அவை முஸ்லிம்களினது சொந்த பிரதேசங்கள். 

 

கிழக்கில் சுற்றி வர தமிழர் பிரதேசங்கள் இருக்க இடையில் முஸ்லிம் பிரதேசம் இருப்பதும், சுற்றிவர முஸ்லிம் பிரதேசம் இருக்க தமிழர்களின் ஊர்கள் இருப்பதும் வரலாற்று ரீதியிலானது. இதனை மாற்ற முடியாது. 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்த குடிசன பரம்பலின் படிதான் இன்றும் பார்க்கபப்ட வேண்டும் என்றால் நாங்கள் கற்கால மனிதர்களின் நாகரீகத்தினைத் தான் இன்றும் கடைப்பிடிக்க வேண்டும்.

 

பேரீச்சை மரம் வளர்வதற்கான இயற்கை சூழல் அங்கு இருக்கும் போது அதனை கொண்டு வந்து நடுவதில் எந்த தவறும் இல்லை.  பனையும் பலாவும் மலையக மண்ணில் விளைவதற்கான புவியியலும் காலநிலையும் இல்லை என்பதால் அங்கு வளர்க்கப்படுவதில்லை.

 

நீங்கள் என்ன சொல்ல முனைகின்றீர்கள். கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் தமக்குப் பிடித்த ஒரு மரத்தை அரபு நிலத்தில் இருந்து கொண்டு வந்து  நடுவதற்கு தமிழர்களிடம் / உங்களிடம் வந்து அனுமதி கேட்டு நிற்க வேண்டும். நீங்கள் மனது வைத்து ஓம் என்று அனுமதி கொடுத்தால் தான் அவர்கள் நட வேண்டும்; இல்லயென்றால் நடக்கூடாது என்றா....

 

தமிழர் பிரதேசங்களில் பல விடயங்களுக்கு நாம் இன்றும் தமிழகத்திடம் இருந்துதான் பலதை எதிர்பார்க்கின்றோம். கோவில் கும்பாவிசேசத்தில் இருந்து ஸ்தபதி வரைக்கும் இந்த பட்டியல் நீளும். நாமும் எம் நிலத்தில் இப்படியான விடயங்களைச் செய்வதற்கு எவரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை.  அதே போன்றுதான் முஸ்லிம்களுக்கும் அதே உரிமை இருக்கு. இதனை கேள்வி கேட்பதற்கு எமக்கு தேவை எதுவும் இல்லை.

 

யாழ்ப்பாணத்தில் இருக்கும் சோனகத்தெருவை நீங்கள் எப்படி புற்று நோயின் மையம் என்கின்றீர்களோ அதே போன்று தான் சிங்களவர்கள் தெற்கில் உள்ள தமிழர்களின் அனைத்து இடங்களையும் புற்று நோயின் அமைவிடங்கள், மையவிடங்கள் என்கின்றனர். அதனை நாங்கள் சிங்கள இனவாதம் என்கின்றோம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கு அபிவிருத்தி காத்தான்குடியில் மட்டுமே 

நிழ்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒரு நேரத்தில் முஸ்லீம்கள் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றளவிற்கு 

அவர்களின் பெருக்கம் அதிகரித்துவிடும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முதல் இருந்தே மலையகத்திலும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர் தானே. 200 வருடங்கள் என்ன ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும்.. ஒரு நிலப்பரப்புத் தொடர்ச்சி இன்றி முஸ்லீம்கள் குறுநிலக் குறிச்சிகளாக ஒட்டி வாழ்ந்துள்ளனரே தவிர.. இவர்கள் பூர்வீகமாக வாழ்ந்ததற்கான அடையாளம் இல்லை. காரணம்..இஸ்லாம் என்பது வர்த்த நடவடிக்கைகளோடு ஈழத்தீவை அடைந்த ஒன்று. இதுதான் வரலாற்றியல் உண்மை.

 

காத்தான்குடியில் முன்னர் தமிழ் மக்களும் கணிசமாக வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்று அங்கு தமிழ் மக்கள் வியாபாரத்திற்காகச் செல்வது கூட ஆபத்தான ஒன்றாக உள்ளது. ஏன் காத்தான்குடி தாண்டி தமிழ் மக்களின் அயற்கிராமங்களுக்குச் செல்வது கூட ஒரு காலத்தில் சவால் மிக்கனவாக இருந்தன. இன்றும் அந்த நிலை தொடர்கிறது. இப்படியான ஒரு சர்ச்சைக்குரிய இடமே காத்தான்குடி.

 

மேலும்.. காத்தான்குடியில் வாழ்பவர்கள் அரபியர்கள் கிடையாது. 24/7 பேரீச்சம் பழம் சாப்பிடும் பழக்கமும் இலங்கைச் சோனகர்களிடம் கிடையாது. அவர்களும் சோறும் கறியும் சாப்பிடும் கூட்டம் தான்.  அவர்கள் பாரம்பரிய மரபியல் ரீதியில்... பெரிதும் ஒத்திருப்பது உள்நாட்டு மக்களை. அந்த வகையில் இவர்களின் மதம் மட்டுமே தனி. அது அவர்களை தனி ஒரு இனமாக காட்டமாட்டாது. முஸ்லீம்கள் மத்திய கிழக்கில் இருந்து வந்ததற்கான அடையாளமாகவும் அது இருக்க முடியாது.

 

பேரீச்சம் மரம் அரபியாவில் பன்னெடும் காலமாக உள்ளது. முஸ்லீம்கள் இலங்கையில் எல்லா இடமும் வாழ்கின்றனர். கிழக்கை விட தெற்கிலும் மேற்கிலும் அதிகம் வாழ்கின்றனர். ஏன் அங்கெல்லாம் இந்த மரத்தை நாட்டும் உத்தேசம் பிறக்கவில்லை..??! காத்தான்குடியில் மட்டும் அது தெரிந்து நாட்டப்படுவதோடு அங்கு அரபிய ஆதிக்கமும் அடையாளங்களும் கொண்டு வரப்படுவதன் பின்னணி என்ன..???! ஏன் ஈச்ச மரம்.. காலியில் முளைக்காதா..??! கண்டியில் முளைக்காதா..???! மாவனல்லையில் முளைக்காதா..???! மருதானையில் தான் முளைக்காதா..??! நான் நினைக்கிறேன்.. மருதானை சாகிராவில் ஒன்றிரண்டு நிற்க வேண்டும் என்று...! ஏன் அங்கெல்லாம் அதனை விஸ்தரிக்க முடியவில்லை. இப்படி ஒரு அரபிய அடையாளமாக.. அமைக்க முனையவில்லை..??!

 

சாதாரணமாக பேரீச்சம் மரத்தை நட வேண்டின் அதனை எப்பவோ கொண்டு வந்து நட்டிருக்கலாம். ஆனால் இன்று.. அதுவும் காத்தான்குடியில் நடப்பட என்ன காரணம்..???! அதுவும் அரபு நாடுகளின் தலையீட்டோடு இவை நடைபெற என்ன காரணம்..??! இதன் பின்னால் இஸ்லாமிய மதப் பரம்பலும் அதன் பிராந்திய ஆதிக்கத்துக்குமான வித்துக்கள் இடப்படுகின்றன. இவை தமிழ் மக்களைப் பொறுத்த வரை ஆபத்தானது. ஏனெனில் சிங்களவர்களைப் போல தமிழர்கள் இலங்கைத் தீவில் அதிகார மையத்தில் இல்லை. சிங்களவர்களிற்கு இஸ்லாமிய முஸ்லீம்களால் ஆபத்து வரும் போது அதனை தடுக்கும் ஆற்றல் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு உண்டு.

 

ஆனால் முஸ்லீம்களோடு நிலப் பகிர்வு செய்து வாழும் தமிழ் மக்களிற்கு அந்த நிலை இல்லை. அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் 2009 மே க்குப் பின் மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வரும் நிலையில் முஸ்லீம் அரசியல்வாதிகளாலும் வர்த்தகர்களாலும் குழுக்களாலும் விரட்டி அடிக்கப்பட்டு நிலப்பறிப்புக்கு ஆளாகி வரும் நிலையில்..காத்தான்குடி பேரீச்சம் காடாவது.. சாதாரண ஒரு நிகழ்வாக கருதப்பட முடியாதுள்ளது.

 

நாங்கள் முஸ்லீம்கள் தமிழர்களின் அனுமதி கேட்டு பள்ளிவாசல் கட்டச் சொல்லவில்லை. அல்லது பேரீச்ச மரத்தை நாடு பூரா நாட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை. பேரீச்சமரம் தெரிந்தெடுக்கப்பட்டு.. பிரச்சனைக்குரிய பகுதிகளில் நாட்டப்படுவதன் நோக்கம் என்ன என்று தான் கேள்வி கேட்கிறோம். இவை ஆபத்தான பின் விளைவுகளை தமிழ் மக்களுக்கு தரலாம் என்று தான் எச்சரிக்கின்றோம். இதில் இனவாதம் கிடையாது. முஸ்லீம் மத அடிப்படைவாதிகளாலும் மதவாத அரசியல் சக்திகளாலும் ஜிகாத் மற்றும் அதன் ஊர்காவல் படையினராலும்.. தமிழ் மக்கள் இன்னல்களை அனுபவித்தவர்கள் என்ற வகையில் இன்றும் பல இன்னல்களை அவர்கள் அனுபவித்து வருகின்றனர் என்ற வகையில்.. இது எச்சரிக்கையாக அமைகிறது.

 

தமிழ் மக்களும் பதிலுக்கு உசாராக இருக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் மூலமே அரபிய அடையாள ஆக்கிரமிப்போடு.. தென் தமிழீழம் கபளீகரம் செய்யப்படுவதிலும் இருந்து பாதுகாக்கப்பட முடியும்.

 

நீங்கள் விரும்பினால்.. காத்தான்குடியில்  பேரீச்சம் காடு அமைத்துக் கொண்டது போல.. காலியில்... மாவனல்லையில்.. அனுராதபுரத்தில்.. புத்தளத்தில்.. அமைத்துக் கொடுங்கள். பொதுபல சேன அதற்கு அனுமதி அளித்தால்..!

 

காத்தான்குடியில்.. பேரீச்சம் மரங்கள் அரபிய அடையாளங்களோடு மத வெறியர்களால் திணிக்கப்படுவது தான் பிரச்சனையே தவிர இலங்கைத் தீவு எங்கும் பேரீச்சமரம் புகுத்தப்படும் தாவர இனமாக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட்டு.. நடப்பட்டால் தமிழ் மக்கள் அதற்காக நிச்சயம் கவலைப்படும் நிலை வராது..! புதிய வகை நெல்லின அறிமுகம் போல அது அமையலாம். ஆனால் அது காத்தான்குடிக்கு என்று அமைவது தான் பிரச்சனை.. ஆபத்து..!  :):icon_idea:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

-------

 

எட்ட வளர்ந்து

கனி தரும் போது

ஒட்டகமாய்

தாங்கி நின்று

பறித்துப் பெட்டியில் அடைத்து

ஏற்றி விட்டு

நாம் கூனி விட்டோம்..!

எஜமானர்களின்

எண்ணெய் காசில்

நீரோ

நிமிர்ந்து நின்று

மினுமினுக்கிறீர்..!

 

----

 

ஈழ மண்ணில்

என்ன இருக்கு..

விதவைகளான

எம் சகோதரிகள் தான் இருக்கு..!

மிச்சம் என்ன....

உம் சோதரர்கள்

கொன்று புதைத்த

சோதரத் தமிழன்

இரத்த ஈரம் தானுண்டு..!

 

இன்னும்

என்ன ...

உறிஞ்ச வருகிறீர்

சொந்த நிலம் இழந்து

அநாதைகளாய் நாம் இங்கு..!

மூச்சுத் தான் மிச்சம்

அதைவும்

அல்லாவுக்கு

அடகு கேட்காதீர்..!

 

விட்டு விடுங்கள்

எம்மை..

நிம்மதியாய் வாழ்கிறோம்.

--------

 

ஈழத்து முஸ்லீம்களுடன் என்றுமே... உடன்பாடு காண முடியாது.

இது காலம் கற்றுத் தந்த பாடம்.

மனதிலுள்ள ஆத்திரத்தை... அழகிய கவிதையாக வடித்த, நெடுக்ஸ்சிற்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கு அபிவிருத்தி காத்தான்குடியில் மட்டுமே 

நிழ்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒரு நேரத்தில் முஸ்லீம்கள் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றளவிற்கு 

அவர்களின் பெருக்கம் அதிகரித்துவிடும்

 

இப்பவே ஆயிட்டினமே. 1990 இல் யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லீம்களை விட இப்போது அநேகர் அங்கு வர்த்தகம் என்ற போர்வையில் வந்து ஆக்கிரமித்துள்ளனர். மட்டு நகரில் இருந்து யாழ்ப்பாணத்தாரை வெளியேறு என்று வெளியேற்றி வீரம் காட்டினார் முரளிதரன். இப்போ மட்டு நகரின் அநேக வர்த்தக மையங்கள் முஸ்லீம்களுக்குச் சொந்தமாகி உள்ளன.

 

நான் அறிய எங்கள் உறவினர்கள் பலர் கல்முனையில் கடை வைத்திருந்தார்கள். இன்று அந்த நகரமே முஸ்லீம் மயமாகியுள்ளது.

 

எங்கள் தந்தை மூதூரில் வைத்தியப் பணி ஆற்றிய போது நிறைய தமிழ் மக்கள் வாழ்ந்ததாகச் சொன்னார். ஆனால் இன்றோ அது தமிழ் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டு முஸ்லீம் தனி அலகாக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல்.. மன்னார் கேதீஸ்வரத்தை அண்டிய மாந்தை.. மற்றும் அதை அண்டிய பகுதிகளும்.. நானாட்டான் போன்ற பிரதேசங்களும்... இவர்களின் ஆதிக்கத்தின் கீழ். அங்கிருந்தும் தமிழ் மக்களை விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். இது உண்மையில் 1985 களிலேயே ஆரம்பமாகிவிட்டதை என்னால் அங்கு அரச பணியாற்றிய உறவினர்களின் தரவோடு சொல்ல முடியும். இப்போது அது உச்சம் பெற்றுள்ளது. அதேபோல் இப்போ முல்லைத்தீவு முள்ளியவளையில் பலாத்காரமாக தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன.

 

வவுனியாவிலும் கணிசமான நிலப்பரப்பு தமிழ் மக்களால் இழக்கப்பட்டுள்ளது. அரசியல் அடாவடித்தனங்கள் மூலம் அவை பறிக்கப்பட்டுள்ளன.

 

கிளிநொச்சியிலும் வியாபார நிலைய ஆக்கிரமிப்புக்களை தொடங்கியுள்ளனர்.

 

இங்கெல்லாம் பேரீச்சம் மரத்தை நாட்ட நிழலி அனுமதிப்பார். ஏனெனில் அது அவர் வீட்டுச் சொத்தில்லைத் தானே..! ஊரான் வீட்டுச் சொத்தைப் பறிகொடுத்து அவர் முஸ்லீம்- தமிழ் நல்லுறவைப் பேணப் போறாராம் என்று கனவு காண்கிறார்.

 

தமிழ் மக்களின் நிலங்களைப் பறித்துக் கொண்டு.. அவர்களை அவர்களின் நிலங்களில் இருந்து.. விரட்டி அடித்துக் கொண்டு.. {இது 1990 இடம்பெயர்வோடு நடக்கவில்லை.. 1986 இலேயே அம்பாறையில் தொடங்கியது.. இன்று வரை தொடருது...} தமிழ் மக்களோடு சகோதரத்துவம் பேண முடியாது.. என்பதை சிலர் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.

 

தமிழ் மக்களின் மனங்களை வெல்லக் கூடிய காரியங்களை செய்யாமல் அவர்களைத் தொடர்ந்து ஆத்திரமூட்டக் கூடிய விடயங்களையே முஸ்லீம் மதப் பயங்கரவாதிகளும் அவர்களின் அரசியல் அடிவருடிகளும் செய்து வருகின்றனர். இந்த நிலையில்... எம் மத்தியில் சிலர்.. இதனை கண்டிக்காமல் கண்மூடி இருந்து கொண்டு.. கண்டிப்பவர்களை நோக்கி தமிழ் இனவாதம் என்கின்றனர். அவர்களுக்கு இனவாதத்தின் அடிப்படை வரவிலக்கணம் கூடத் தெரியாமல் தான் இவ்வளவு காலமும் அரசியல் பேசியுள்ளனர்.

 

ஒரு இனம் தனது இருப்பு அழிகிறது அதை தடுக்க குரல் கொடுப்பதை எல்லாம் இனவாதம் என்றால் பலஸ்தீனியர்கள் பேசுவதும் இனவாதம் தான். அதையேன் காத்தான்குடி அனுமதிக்கிறது. வரவேற்கிறது. அவர்களுக்காக ஆர்ப்பாட்டம் போடுகிறது. அவர்கள் என்ன தமிழ் பேசும் முஸ்லீம்களா..??! இதனை எம்மை நோக்கி தமிழ் இனவாதிகள் என்று விளிப்போர் தான் விளக்க வேண்டும். செய்வார்களா..???! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நெடுக்கின் கருத்துடன் உடன்பாடுண்டு

அது எமது தாய் மண்மீதான பற்று சார்ந்து.

எமது தாயக பூமியைப்பறி கொடுப்பது என்பது வேதனையளிப்பது.

அதில் நடக்கும் மாற்றங்கள்

அதில் ஏற்படுத்தப்படும் குழப்பங்கள் மனதில் பெரும் தாக்கங்களை ஏறற்படுத்தக்கூடியன..

அதேநேரம் நிழலி சொல்லவருவதையும் மறுக்கமுடியாது

உலகம் பூராகவும் பரவி

அங்கெல்லாம் எமது சம்பிரதாய பழக்கவழிக்கங்களை கொண்டு திரிந்து கொண்டு

மற்றவரைக்கைகாட்ட கொஞ்சம் கூச்சமாகத்தானிருக்கிறது

ஆனால் நாம் எவரது மண்ணிற்கும் உரிமை கோருபவர்களல்ல

எம்மை எம் மண்ணில் வாழவிடாததால்தான் புலம் பெயர்ந்தோம்

என்ற தர்மம் எம்மிடமிருப்பதால் எமது மண்ணைக்காப்பதற்கான கூவுதலைக்கூடவா நாம் செய்யக்கூடாது.... :(

விசுகு அண்ணாவின் சிவப்பு நிற கருத்துக்கள் குறித்து..

இனப்பரம்பலின்போது இன அடையாளங்களைக் காவுதல் எல்லா இனங்களிலும் நடப்பதுதான்.. ஆனால் அந்த வாதத்தை இங்கே வைப்பதாக இருந்தால் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றாகிறார்கள்.. இன்னொரு விஜயன் கதை..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனம் இன்னொரு இனத்துடன் இணைந்திருப்பது அல்லது கலந்திருப்பது புற்றுநோயல்ல. ஆனால் ஒர் இனம் வஞ்சகத்தால், தனக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தினால் இருக்கும் இனத்தை அடித்துத் துரத்தி அழித்துவிட்டு அந்த மண்ணுக்குச் சொந்தம் கொண்டாடுவதும், அதற்கான அடையாளங்களைத் தோற்றுவிப்பதும், புற்றுநோயை விடவும் கொடியது. இந்த உண்மை புரியாவிட்டால் பெரியார் கூறியதுபோல் தமிழர்கள் இன்றும் அடிமைகளே. அடிமைத்தனத்திற்கு அமையவே சிந்தனைகளும், செயற்பாடுகளும் தோற்றம்கொள்ளும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாடம் என்ற மாதிரி

இலங்கை முஸ்லீம்கள் தங்கள் அடையாளத்தை அடிக்கடி மாற்றித் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். அவர்கள் இலங்கையில் இழப்பதற்கு என்று 

எதுவுமேயில்லை. கிடைப்பதெல்லாம் அவர்களுக்கு லாபமே .

 

வர்த்தகம் என்ற போர்வையில் நாட்டிற்குள்  நுழைந்த  இலங்கை இஸ்லாமியர்கள்

தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான முரண்பாட்டையும் அதனூடாக வெடித்த போரையும் சாதகமாக்கிக்கொண்டு 

தாங்கள் வாழ்ந்த பூர்வீக நிலம் தான் கிழக்கு என்பது வேடிக்கையானது.

 

அனைவரும் மொழியால் ஒன்றுபட்டாலும் மதத்தின் பெயரால் 

இலங்கை முஸ்லீம்கள் தங்களை தனி இனம் என அடையாளப்படுத்த நினைப்பது

இன்னும் வேடிக்கையானது

 

கவிதை எழுதியவிதம் நன்று .

சிங்களவன் எமக்கு செய்வது   சரியென்று தான் இங்கு பலர் சொல்லுகின்றார்கள் போல கிடக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சிங்களவருக்கும் தமிழருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடாவது தெரியுமா..??!

 

சிங்களவர்கள் இலங்கைத் தீவை கட்டி ஆளும் இராணுவ பலம் பொருந்திய ஆட்சிப் பீடத்தில் உள்ள அதிகார வர்க்கத்தின் தயவுகொண்ட.. பேரினவாதிகள்.

 

தமிழர்கள்... சிங்களவர்களாலும்.. முஸ்லிம் மத அடிப்படைவாதிகளாலும் அதனைப் பின்பற்றும் மத அடிப்படை முஸ்லிம் அரசியல்வாதிகாளும் ஆயுத ரீதியிலும்.. (அண்மையில் விக்கிலீக்ஸ் கூட முஸ்லீம் ஆயுதக்குழுக்களின்ன் செயற்பாடு பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. இன்று வரை ஒரு தமிழ் பேசும் முஸ்லீமும் இதய சுத்தியோடு.. இதனை ஏற்றுக் கொண்டதில்லை.) அரசியல் ரீதியிலும்.. பொருண்மிய ரீதியிலும் பிரதேச ரீதியிலும்.. ஒடுக்கப்படும் ஒரு இனம்.

 

அடித்தால்.. ஒடுக்கினால்.. விரட்டினால்.. உரிமை பறிக்கப்பட்டால்.. ஏன் என்று கேட்க நாதியற்ற ஒரு அடிமைப்பட்டுள்ள இனமான தமிழினம்.. தனது இருப்பு மேலும் மேலும் இழக்கப்படக் கூடாது என்று கருதுவது கத்துவது.. எந்த வகையில் சிங்களவர்கள் செய்யும் இனப்படுகொலைக்கு நிகராகும். பேரினவாதத்திற்கு நிகாராகும்.

 

காத்தான்குடிப் படுகொலை என்பது கல்முனைப் படுகொலையின் தொடர்ச்சி. எமது மக்களில் 250 பேரை வெட்டி எரித்த கொடூரத்தின் தொடர்ச்சி. அதனை எங்கே ஒரு முஸ்லீம் கண்டிக்கட்டும் பார்க்கலாம். காத்தான்குடி படுகொலைக்கு இன்றும் நீலிக்கண்ணீர் வடிக்கும் ஒட்டுக்குழு ஆக்கள் தங்கள் சொந்த இனம் அதே முஸ்லீம்களால் வேட்டையாடப்பட்டதற்கு இன்று வரை ஒரு இரங்கல் கூட வடித்தத்தில்லை. இந்த நிலையில் ஒப்பீட்டுக்குத் தான் ஆளில்லை என்று நாங்கள் இங்க அழுகிறமாக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

.

சிங்களவன் எமக்கு செய்வது   சரியென்று தான் இங்கு பலர் சொல்லுகின்றார்கள் போல கிடக்கு .

இலங்கை முழுவதும்  சிங்களத்திற்குச் சொந்தம் என வாதாடும்

உங்களுக்கு அப்படித்தான் தெரியும்.

ஈழத் தமிழன் வரலாற்றில் இல்லாத காலமாக  வாழ்ந்த பூமிதான் இலங்கை 

சிங்களவன் வந்து குடியேறிய பின்னர் ஈனத் தமிழர் ஒருசிலர் 

அவர்களுக்குத் துணைசெல்ல எல்லாம் மாறிவிட்டது.

என்ன செய்வது  :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை.. கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கான எதிர்விளைவுதான் காத்தான்குடிப் படுகொலைகள் என்றால் வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்று சொல்வதுபோல் இருக்கு.. :unsure:

கல்முனையில் கொலைகள் நடந்தவுடன் ஏன் .. காவல்துறையில் முறையிட்டிருக்கலாமே.. :rolleyes: அல்லது ஐநா அலுவலகத்தில் ஒரு மகஜர் கொடுத்திருக்கலாம்.. அதுசரி.. புலம்பெயர் தேசியவாதிகளுக்கு இதெல்லாம் எங்கே விளங்கப்போகுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இனவாதிகளாக இருக்கும்வரை தமிழீழம் கனவில் மாத்திரம்தான் இருக்கும்!

மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து இருக்கும் எமது சமூகம், எமது பண்பாடுகளை, வீதியில் தேர் பவனி, பறவைக் காவடி, ஊரில் இருந்து காவி வருவது நல்ல விடயம். ஆனால் தமது மார்க்கத்தையும், அது தோன்றிய இடத்தையும் பெருமையாக முஸ்லிம்கள் நினைத்தால் அது சீரழிவு.

இனவாதத்தையும் இனப்பற்றையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது..

இனவாதம் என்றால் என்ன? (பி.இரயாகரனனின் கட்டுரையில் இருந்து)

========================

எந்த முற்போக்கான கூறையும் இனவாதம் கொண்டிருப்பதில்லை. பிற்போக்கான சமூகக் கூறைக்கொண்டது. இது சுயநலமிக்கது. சமூகநலனுக்கு எதிரானதும். தனிமனித குறுகிய நலன் சார்ந்தது. பிற்போக்காளனின் இருப்புக்கான ஒன்று தான் இனவாதம். சமூகத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தவே இனவாதம் பயன்படுகின்றது.

இனவாதம் பிற இன மக்களை எதிரியாகப் பார்க்கின்றது. சொந்த இனத்தை ஒடுக்கி ஒருங்கிணைக்கின்றது. இன முரண்பாடு போன்று, சமூகத்தின் பிற முரண்பாடுகளை களைவதில்லை. அதை தனக்குள் முன்னிறுத்தி, அதைப் பாதுகாக்கின்றது.

இன ஒடுக்குமுறைக்கு எதிரான இனவாதம், அறிவுபூர்வமான அடிப்படையைக் கொண்டிருப்பதில்லை. இனவாதம் தன்னைத் தான் தனக்குள் குறுக்கிக் கொண்டு தான், தன்னை வெளிப்படுத்த முடியும். பரந்த சமூகக் கூறாக தன்னை ஒரு நாளும் வெளிப்படுத்த முடியாது. அதற்கான விரிவான தளம் இனவாதத்துக்குள் இருப்பதில்லை. இதனாலேயே அது சுயமற்றது. மற்றைய இனத்தை இழிவுபடுத்தி பெருமை பேசும் மனித விரோதம் சார்ந்தது. இதனாலேயே வன்முறை சார்ந்து தன்னை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. குறுகிய தனிமனித கூறாகத்தான், தன்னைக் குறுக்கி வெளிப்படுத்த முடியும். இதனால் மற்றொரு பிற்போக்கைச் சார்ந்து தான், தன்னை முதன்மைப்படுத்தும். ஒட்டுண்ணித்தனமானது.

தன்னை நியாயப்படுத்த முடியாதது. தன்னை சுயமாக நிலைநிறுத்த முடியாதது. அனைத்து பிற்போக்கான கூறுகளுடனும், தன்னை பினைத்துக் கொள்கின்றது. ஜனநாயகத்தை, தனிமனித சுதந்திரத்தை மறுப்பதை ஆதாரமாகக் கொண்டது.

வட கிழக்கு அபிவிருத்தி காத்தான்குடியில் மட்டுமே 

நிழ்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒரு நேரத்தில் முஸ்லீம்கள் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றளவிற்கு 

அவர்களின் பெருக்கம் அதிகரித்துவிடும்

 

Kalmunai (Tamil: கல்முனை, Sinhala: කල්මුනේ Kalmune) is a city in the Ampara District of Eastern Province, Sri Lanka. It had a total population of 106,780 as of 2011.[2] It is the one and only Muslim-majority municipality in the country. When Muslims in Colombo were expelled by Portuguese in 17th century, they fled to Kandy and sought refuge with the king in Kandy. Then the king (Rajasingan 11) resettled these Muslim refugees in Kalmunai (8000 refugees) and Kattankudy (4000). Kalmunai was the Royal farm of the king. Because of this settlement, it became a Muslim-majority area.[3]

 

http://en.wikipedia.org/wiki/Kalmunai

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தக் கவிதையை நெடுக்ஸ் சாத்திரிக்கும் 40-வது இலக்கியச் சந்திப்புக்கும் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் என்று இப்போதுதான் அவதானித்தேன். :wub:

இலங்கை முழுவதும்  சிங்களத்திற்குச் சொந்தம் என வாதாடும்

உங்களுக்கு அப்படித்தான் தெரியும்.

ஈழத் தமிழன் வரலாற்றில் இல்லாத காலமாக  வாழ்ந்த பூமிதான் இலங்கை 

சிங்களவன் வந்து குடியேறிய பின்னர் ஈனத் தமிழர் ஒருசிலர் 

அவர்களுக்குத் துணைசெல்ல எல்லாம் மாறிவிட்டது.

என்ன செய்வது  :D

எதற்கும் கொஞ்சமாவது எமது வரலாற்றை படியுங்கள் .அரை குறைகளால் தான் முக்கால்வாசி பிரச்சனையும் .

நான் முதல் எடுத்துக்காட்டாக வாழ்ந்துகொண்டுதான் மற்றவர்களுக்கு புத்தி சொல்ல நினைப்பவன் .அடக்குமுறை ,சாதி ,சீதனம் ,இலங்கை பொருட்கள் புறக்கணிப்பு இவையெல்லாம் பற்றி இங்கு வந்து அலட்டிக்கொள்ளும் பலரெ அதை தாங்கள் பின் பற்றுவதில்லை ,இதுவே தமிழன் பிழைப்பாக போய்விட்டது .

 இன்னொரு இனத்தை மதத்தை அடக்க நினைப்பதும் இழிவு படுத்துவதும்  பெருமையாக இங்கு பலர் நினைக்கின்றார்கள் .அதை பிழை என்று சொல்பவர்களை சிங்களவனுக்கு துணை போவதாக குற்றசாட்டு வேறு .

புலிகள் செய்த மாபெரும் தவறுகளில் இதுவும் ஒன்று வெறும் இனவாதத்தை மக்களுக்கு ஊட்டியது .இதில் இருந்து நீங்கள் எல்லாம் வெளிவந்தால் தான் எமக்கு விடுதலை சாத்தியம் .

  • கருத்துக்கள உறவுகள்

Kalmunai (Tamil: கல்முனை, Sinhala: කල්මුනේ Kalmune) is a city in the Ampara District of Eastern Province, Sri Lanka. It had a total population of 106,780 as of 2011.[2] It is the one and only Muslim-majority municipality in the country. When Muslims in Colombo were expelled by Portuguese in 17th century, they fled to Kandy and sought refuge with the king in Kandy. Then the king (Rajasingan 11) resettled these Muslim refugees in Kalmunai (8000 refugees) and Kattankudy (4000). Kalmunai was the Royal farm of the king. Because of this settlement, it became a Muslim-majority area.[3]

 

http://en.wikipedia.org/wiki/Kalmunai

 

தகவலுக்கு நன்றி தப்பிலி.

இங்கு, சில சனத்துக்கு... ஈழத்தின் மூத்த மகனான‌ தமிழன் மீது, குறை பிடித்து....

சிங்களவனுக்கும், முஸ்லீமுக்கும்... வால் பிடித்து, நக்கிக் கொண்டிருப்பதையே... தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

என்ன.... செய்வது, அவர்களின் மூளை அப்படி வளர்ச்சியடைந்து விட்டது. விசர்க்கூட்டங்கள்.

ஆட்டு மூளையை சாப்பிட்டால், இந்தக் குணம் தான்.... வரும். :lol:  :D

Edited by தமிழ் சிறி

சிங்கள அரசுகளின் நயவஞ்சக பிரித்தாளும் தந்திரங்களுக்குள் பலியாகிப் போன முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயல்களால் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் எதிர்பதன் பெயர்தான் தமிழ் இனவாதம்.  தமிழ் சமூகத்தில் இருந்து சிங்களத்துக்கு விலை போன தலைவர்களைப் போன்றுதான் முஸ்லிம் தலைவர்களும் விலை போயினர்.

 

முஸ்லிம் குழுக்களாலும், முஸ்லிம் ஊர்காவல் படைகளாலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும், தமிழர் விடுதலைக்கு அனைத்து விதமான விதங்களிலும் முஸ்லிம் தலைமகள் எதிரான செயல்களில் அன்று தொடக்கம் நேற்று வரைக்கும் முயன்றதும் மறக்கக் கூடியது அல்ல. அத்துடன் இன்று வரைக்கும் அதனை முஸ்லிம் தலைமைகள் மற்றும் புலி எதிர்ப்பு பேர்வழிகள் ஏற்றுக் கொண்டதும் இல்லை என்பதும் மறுக்கக் கூடியது இல்லை.

 

ஆனால் இவற்றுக்கும் அப்பால் சாதாரண முஸ்லிம் மக்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரங்களும் இருக்கின்றன. அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் நிலம் இருக்கின்றது. அவர்களுக்கென்று தனித்துவமான மதமும், கலாச்சாரமும் இருக்கின்றன. வெறுமனே தலைவர்களின் தவறுகளுக்காக ஒரு இனத்தின் மீதே காழ்ப்புணர்வும், வஞ்சகமும், நிந்தனையும் செய்வதும் அதனூடாக அவர்களின் உரிமைகளை கேள்வி கேட்பதும் தான் இனவாதத்தின் அம்சம். அதுதான் தமிழ் இனவாதம்.

 

இன்று எம்மை போன்று ஒரே மொழி பேசும் மலையக மக்களும் கூட தாம் ஒரு தனித்துவமான இனம் என்று பார்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். தமக்கென தனியான பிரச்சனைகள், கலாச்சார அம்சங்கள் இருப்பதால் தாம் ஒரு தனித்துவமான இனம் என்பதை கோருகின்றனர். 

 

இன்று இலங்கையில் சிறுபான்மை தேசின இனங்கள் ஓரளவுக்கேனும் கெளரவமாக உரிமைகளுடன் வாழ ஒன்றுடன் ஒன்று இணைவது மாத்திரமே ஒரு வழியாக இருக்கின்றது.  அத்தாவுள்ளா, அஸ்வர் போன்ற தீவிர முஸ்லிம் அடிப்படைவாதிகளையும் மீறி இந்த இணைவு பற்றி சிந்திக்கும் தேவையும், தலைமுறையும் இப்போது அங்கு இருக்கின்றது.  

 

எமது பொது எதிரி சிங்கள் பேரினவாதம்.  அந்த பேரினவாதத்தின் செயல்கள் இன்று முஸ்லிமகளையும் பதம் பார்கும் போது பேரினவாததுடன் கூட்டுச் சேர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கி இன்னும் அதிகமாக சிங்கள பேரினவாத்தினை பலப் படுத்தப் போகின்றோமா, இல்லை சிறுபான்மை இனங்களுடன் ஒன்றிணைந்து சிங்கள பேரினவாதத்தினை முறியடிக்க போகின்றோமா என்பதே எமக்குள்ள தெரிவுகளாகும்.

 

 

Kalmunai (Tamil: கல்முனை, Sinhala: කල්මුනේ Kalmune) is a city in the Ampara District of Eastern Province, Sri Lanka. It had a total population of 106,780 as of 2011.[2] It is the one and only Muslim-majority municipality in the country. When Muslims in Colombo were expelled by Portuguese in 17th century, they fled to Kandy and sought refuge with the king in Kandy. Then the king (Rajasingan 11) resettled these Muslim refugees in Kalmunai (8000 refugees) and Kattankudy (4000). Kalmunai was the Royal farm of the king. Because of this settlement, it became a Muslim-majority area.[3]

 

http://en.wikipedia.org/wiki/Kalmunai

 

ஆஹ நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இனம் அந்த ஊரினை தன் சொந்த ஊராகக் கொளவதில் என்ன தவறு? அதுவும் இன்னொரு இனத்தினை விரட்டி விட்டு குடியேற்றப் படவில்லை என்பதையும் கவனிக்க.

 

அத்துடன் இன்னும் ஒன்று புலனாகின்றது. 17 ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரையான 1970 கள் வரைக்கும் பிரச்சனை இல்லாமல் இருந்த தமிழ் முஸ்லிம் மக்கள் 70 களின் பின் தான் அதிகளவில் முரண்படத் தொடங்கியுள்ளனர். இந்த முரண்பாடுகளைத் தோற்றுவித்தவர்கள் தான் சிங்கள பேரினவாதிகள். அவர்கள் தான் எம் பொது எதிரி.

 

சிங்கள பேரினவாதத்தின் பலத்தை ஒடுக்குவதற்கும் சுய கெளரவத்துடன் வாழ்வதற்கும்  தமக்குள் முரண்பட்டு பலகீனமாகிக் கிடக்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் கண்டிப்பாக ஒன்றிணைய வேண்டும் என்பதைத்தான் இந்த தகவல் எமக்கு காட்டி நிற்கின்றது.

Edited by நிழலி
எ.பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இனவாதிகளாக இருக்கும்வரை தமிழீழம் கனவில் மாத்திரம்தான் இருக்கும்!

மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து இருக்கும் எமது சமூகம், எமது பண்பாடுகளை, வீதியில் தேர் பவனி, பறவைக் காவடி, ஊரில் இருந்து காவி வருவது நல்ல விடயம். ஆனால் தமது மார்க்கத்தையும், அது தோன்றிய இடத்தையும் பெருமையாக முஸ்லிம்கள் நினைத்தால் அது சீரழிவு.

இனவாதத்தையும் இனப்பற்றையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது..

இனவாதம் என்றால் என்ன? (பி.இரயாகரனனின் கட்டுரையில் இருந்து)

========================

எந்த முற்போக்கான கூறையும் இனவாதம் கொண்டிருப்பதில்லை. பிற்போக்கான சமூகக் கூறைக்கொண்டது. இது சுயநலமிக்கது. சமூகநலனுக்கு எதிரானதும். தனிமனித குறுகிய நலன் சார்ந்தது. பிற்போக்காளனின் இருப்புக்கான ஒன்று தான் இனவாதம். சமூகத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தவே இனவாதம் பயன்படுகின்றது.

இனவாதம் பிற இன மக்களை எதிரியாகப் பார்க்கின்றது. சொந்த இனத்தை ஒடுக்கி ஒருங்கிணைக்கின்றது. இன முரண்பாடு போன்று, சமூகத்தின் பிற முரண்பாடுகளை களைவதில்லை. அதை தனக்குள் முன்னிறுத்தி, அதைப் பாதுகாக்கின்றது.

இன ஒடுக்குமுறைக்கு எதிரான இனவாதம், அறிவுபூர்வமான அடிப்படையைக் கொண்டிருப்பதில்லை. இனவாதம் தன்னைத் தான் தனக்குள் குறுக்கிக் கொண்டு தான், தன்னை வெளிப்படுத்த முடியும். பரந்த சமூகக் கூறாக தன்னை ஒரு நாளும் வெளிப்படுத்த முடியாது. அதற்கான விரிவான தளம் இனவாதத்துக்குள் இருப்பதில்லை. இதனாலேயே அது சுயமற்றது. மற்றைய இனத்தை இழிவுபடுத்தி பெருமை பேசும் மனித விரோதம் சார்ந்தது. இதனாலேயே வன்முறை சார்ந்து தன்னை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. குறுகிய தனிமனித கூறாகத்தான், தன்னைக் குறுக்கி வெளிப்படுத்த முடியும். இதனால் மற்றொரு பிற்போக்கைச் சார்ந்து தான், தன்னை முதன்மைப்படுத்தும். ஒட்டுண்ணித்தனமானது.

தன்னை நியாயப்படுத்த முடியாதது. தன்னை சுயமாக நிலைநிறுத்த முடியாதது. அனைத்து பிற்போக்கான கூறுகளுடனும், தன்னை பினைத்துக் கொள்கின்றது. ஜனநாயகத்தை, தனிமனித சுதந்திரத்தை மறுப்பதை ஆதாரமாகக் கொண்டது.

 

அது சரி கிருபண்ணா.. யார் இந்த பி.இரயாகரன்..

 

இந்த வரவிலக்கணத்தை அவர் வரைய எந்தெந்த அரசியல்.. சமூகவியல்.. தத்துவங்களை.. வரலாறுகளை.. நூல்களைப் பாவித்து உருவாக்கினார் என்று கூற முடியுமா..???! என்னென்ன ஆய்வுகளை ஆதாரமாக்கினார்.. என்று சொல்ல முடியுமா..??!

 

ஏன்னா இந்த வரவிலகணத்திற்கு ஒரு அடிப்படையையும் காணவில்லை. அவரின் சொந்த எண்ண ஓட்டம் விருப்பு வெறுப்பு மட்டுமே அதில் பிரதிபலித்திருப்பதாகத் தெரிகிறது. அது உங்களின் எண்ண ஓட்டத்தோடு நெருங்கிப் போவதால்.. நீங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்கள் போலும். இதனையே எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கடப்பாட்டுக்குரிய வகையில் இது வரவிலக்கணப்படுத்தப்பட வில்லை.!

 

இவரின் இந்த வரவிலக்கணம் எந்த peers குழுவால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர்களின் அரசியல் சமூக அறிவியலுக்கான கல்வி தகமைகள் என்ன..???! அனுபவங்கள் என்ன..???!

 

இது எந்த அங்கீகரிக்கப்பட்ட journal இல் சரி பார்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது..??!

 

சும்மா நானும்.. இதுதான் முற்போக்கு.. இதுதான் பிற்போக்குன்னு வரையறுத்து.. ஒரு வரவிலக்கணம் சமர்ப்பிக்கலாம். அது எல்லாம் வரவிலக்கணம் ஆகாது..!

 

நீங்கள் எழுதி உள்ள படியான.. வரவிலக்கணப்படி.. உலகில் எல்லோருமே இனவாதிகள் தான். யாருமே சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்ல. ஏனெனில் எல்லா இனங்களுக்கும் ஒரு பொது எதிரி இனம் இருந்துள்ளது..! இல்லையேல் ஏன் அடிமை நிலையை உணரப் போகிறார்கள்.. உரிமை பறிப்பை உணரப் போகிறார்கள்.. போராட போகிறார்கள்..?!

 

தமிழர்கள் எமக்கு சிங்களப் பேரினவாதத்திற்கு ஈடான அச்சுறுத்தல் முஸ்லீம் மத அடிப்படைவாத வெறியர்களிடம் இருந்தும் வருகிறது..! தமிழர்கள் இப்போ இருமுனை அச்சுறுத்தலோடு தம் இருப்பை உரிமைகளை நிலத்தை அரசியலை பொருண்மியத்தை தக்க வேண்டிய நிலையில்.. சகட்டு மேனிக்கு தமிழ் இனவாதம் என்று..வரவிலக்கணம் வகுத்து சரணடைதல் அரசியல் செய்ய முடியாது..! அது எம்மை எமது நிலத்திலேயே நிரந்தர அடிமைகளாக்கி வைக்கும்..! :):icon_idea:

 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.