Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் சிங்கிள் சிங்கங்கம்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உடம்பில தெம்பிருக்கேக்க உப்பிடித்தான் யோசிக்க வைக்கும் சுபேசு. உங்களை உசுப்பேத்தி விட்டுவிட்டு மற்றவர்கள் பேசாமல் கலியாணம் கட்டி தங்கட வாழ்க்கையைப் பாத்துக் கொண்டிருப்பின. கடைசியா நீங்கள் மட்டும் தனிய இருந்து புலம்பவேண்டி இருக்கும்.

 

இன்று ஒருவர் சொன்னார்.. ஊரில இருந்து கொண்டு.. வெளிநாட்டுக்கு போகனுன்னு ஆசைப்பட்டம்.. வாழ்க்கை ஆகா ஓகோ என்று அமையும் எண்டு.... இஞ்ச வந்து.. தலை நிமிருறத்துக் கிடையில தலைல சொட்டை விழுந்திட்டு.. சரி அதுதான் விதி என்று.. ஊரில இருந்து ஒன்றைக் கட்டிக் கொண்டு வந்தா.. அது நாடு பழகிறத்துக் கிடையில.. பிள்ளை வளர்ந்து ஸ்கூலுக்குப் போச்சுது. சரி பிள்ளை தான் வளர்ந்திட்டுது.. என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டால்.. அது ஒருத்தனைக் கூட்டிக் கொண்டு வந்திருந்திச்சு. சரி அதுக்கும் ஒரு வாழ்க்கை வேணும் தானே என்றிட்டு.. இருக்க.. இப்ப என்னட்டான்னா.. வேலையிடத்தால பென்சன் கேட்கச் சொல்லுறாங்கள்.. ! இப்ப மொத்தத்தில.. வீட்டில மனிசியும் பிரச்சனை.. பிள்ளையும் பிரச்சனை.. வேலையும் பிரச்சனை.. எங்க போய் தலையை முட்டிக்கிறது. இதிலும் ஊரோட தனிய இருந்து வாழ்க்கையை என்ஜோய் பண்ணிட்டு செத்திருந்தாலும் மேல் என்று சொல்லி.. வேதனைப்பட்டார்.

 

இப்படி ஓடி ஓடி காலத்துக்கு காலம் ஒவ்வொன்றை எதிர்பார்த்து.. தேடி தேடி.. காலத்தை வீணடிச்சது தான் மிச்சம். வாழ்க்கையயோ.. நினைச்ச மாதிரி அதை அனுபவிக்கிறத்துக்கிடையில  முடியுறன் என்று கொண்டு நிற்குது.. என்றார் தத்துவஞானி போல..!

 

இதுதான் குடும்ப.. வாழ்க்கை என்று அறிந்த பின்னும் அதில போய் தடையில.. தலையை.. முட்டிக்கிட்டு நின்று முன்னேற முடியாமல் புலம்புறது.. முழு முட்டாள் தனம். பாதையை சரியா வகுத்து செல்வதே வாழ்க்கை. வாழ்க்கை வாழ்வதற்கே.. வீணப்படிதற்கல்ல..! இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய விசயம் இது. எனக்கு இன்னொரு அனுபவத்தை தந்தது இன்றைய நாள்.  :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ ஜடியா கேக்கிறமாதிரி இருக்கு  :D

ஒரு தெளிவு பெறத்தான் அண்ணை.. குடும்பத்தில் வீழ்ந்து நாசமாவது நீங்கள் என்றாலும் பட்ட துன்பங்களைகேட்டு உதில்விழுந்து துலையாமல் வாழ்வது எங்களைப்போன்ற உங்கள் தம்பிகளாகட்டும்.. :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்டர்! அவன் தம்பியனுட்டை (சுபேஸ்) வயது வட்டுக்கை போக என்ன செய்யிற பிளான் எண்டு ஒருக்கால் கேட்டுச்சொல்லுங்கோ? :(  இப்பவே கலியாணம் கட்டினால்தானே ......பிற்காலத்திலை கூடமாட துணையெண்டு சொந்தமாய் நாலுபேர் இருப்பினமெண்டு எடுத்து சொல்லுங்கோ :(

குமாரசாமி அண்ணை..பொழுதுபோகாட்டி யாழ் இருக்கு..பம்பலடிக்க உங்களைப்போன்ற அண்ணண்தம்பிகள் இங்கிருக்கிறீர்கள்..அதைவிட வெளி உலகத்தில் நிறைய பொழுதுபோக்கு வசதிகள் இருக்கு..செத்தால் பார்க்க அரசாங்கம் இருக்கு..இதுக்கு மேல என்ன கவலை அண்ணா..எனக்கெண்டா விளங்கேல்ல எதுக்கு கல்யாணம் கட்டவேணும் என்று... :(

கலியாணம் கட்டாத வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா...

 

காலையில் எழும்பி அப்படியே பல்லுத் தீட்டாமல் மனிசியை போய் இறுக்க அணைத்து கன்னத்தில ஒரு 'இச்' என்று முத்தம் கொடுத்துவிட்டு (அதற்கும் முதல் இரண்டு வால்களும் நித்திரையால எழும்பவில்லை என்று ஒருக்கா செக் பண்ணிவிட்டு), மனிசிதரும் பதில் முத்தத்தினை கன்னத்தில் பெற்றுக் கொண்டு நாள் ஒன்றை ஆரம்பிக்கும் சுவை இருக்கே, அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும் அதன் சுவை என்னவென்று!

 

மனசு சரியாக இல்லாமல் இருக்கும் போது, யாரிடமாவது அதனை சொல்லி மனசை ஆறுதப் படுத்தவேண்டும் என்று தவிக்கும் போது, எங்கள் மூஞ்சை இருக்கும் விறுத்தத்தினைப் பார்த்து தானே கண்டு பிடிச்சு "ஏன் ஒரு மாதிரி இஞ்சி தின்ற குரங்கு போல இருக்கின்றீர்கள்" என்று வாஞ்சையுடன் மனிசி கேட்கேக்கு 'அட நம்மளையும் உத்துப் பார்த்து கவனிக்க ஒரு சீவன் இருக்கு" என்று உணரும் போது வருமே ஒரு பாதுகாப்பு உணர்வு,அதை என்னவென்பது!

 

வேலை எல்லாம் முடிந்து வீட்டுக்குள் போகும் போதே 'அப்பா வந்துட்டார்' என்று  பிள்ளைகள் வந்து குதிக்கும் போதும், ஒரு நாவலை வாசிக்கும் போது முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு தாங்களும் தங்கள் வயதுக்குரிய புத்தகங்களை வாசிக்கும் போதும், 'இது என்ற அப்பா' என்று உரிமைக் குரல் எழுப்பி சண்டை பிடிக்கும் போதும்,  வருமே ஒரு சந்தோசம்! ஒரு கோடி கொடுத்தாலும் வராது!

 

இப்படியான சந்தோசங்களை எல்லாம் தனக்கு ஒருத்தியும் கிடைக்கிறாளில்லை என்ற கடுப்பில கலியாணம் எல்லாம் ஒரு விடயமா என்று விரக்தியில் வெந்து வேகி கிடக்கும் சுபேசு போன்ற சின்னப் பெடியங்களுக்கு எங்க தெரியப் போகுது. :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒர் ஆணுக்குப் பல வடிவங்கள் இருந்தாலும் கணவன் என்ற பொறுப்பு மிகவும் பெறுமதியானது. தனது உயிரையும் உள்ளத்தையும் உடலையும் ஆட்கொள்ளும்  உண்மையான ஆண்மகனைக் கணவனாக அடையப்பெற்ற பெண் மிகவும் பாக்கியவதியாக இருப்பாள். கணவன் என்ற பொறுப்பு அடுத்தபடியாக தந்தை என்ற மகத்துவமான பதவியைத் தந்துவிடுகின்றது.

 

மொத்தத்தில் பெண்மையைக் காணாத ஆண்மை முழுமையடைவதில்லை. ஒரு பெண்ணிடம் முழுமையாகச் சரணடைந்த ஆண்மை என்றும் தோற்பதில்லை. :)

 

அதுதான் கேட்கிறன் ஏன் உந்த வில்லங்கத்தை விலைக்கு வாங்குவான் பொறுப்பு என்ற பேரில் என்று கேட்கிறன்..? 
 
 
இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி வாலி அண்ணா? பெண்மையை கண்டு ஆண்மை எப்படி பூரணமாகிறது என்று விளக்க முடியுமா..? :(
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி வாலி அண்ணா? பெண்மையை கண்டு ஆண்மை எப்படி பூரணமாகிறது என்று விளக்க முடியுமா..? :(

ஏன்.. அவருக்கு எச்சரிக்கைப்புள்ளி வாங்கித் தாற பிளானா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணை..பொழுதுபோகாட்டி யாழ் இருக்கு..பம்பலடிக்க உங்களைப்போன்ற அண்ணண்தம்பிகள் இங்கிருக்கிறீர்கள்..அதைவிட வெளி உலகத்தில் நிறைய பொழுதுபோக்கு வசதிகள் இருக்கு..செத்தால் பார்க்க அரசாங்கம் இருக்கு..இதுக்கு மேல என்ன கவலை அண்ணா..எனக்கெண்டா விளங்கேல்ல எதுக்கு கல்யாணம் கட்டவேணும் என்று... :(

உனக்கொரு சந்ததி,வம்சம் வேணுமெல்லே தம்பி? பம்பல் எப்பவும் அடிக்கலாம்.அண்ணன் தம்பி எப்பவும் கூடமாட இருக்கமாட்டாங்கள்....ஏனெண்டால் குடிகுடித்தனம் எண்டு வாழுறவங்கள்...நெடுக கைகுடுக்கமாட்டாங்கள்..எனெண்டால் எல்லாரும் ஒரேமாதிரி இருக்கமாட்டாங்களேல்லே.....செத்தால் அரசாங்கம் இருக்கு எண்டு நினைக்கிற அளவுக்கு உன்ரை கூட்டுவள் சரியில்லை ராசா வெளியிலை வா ராசா....உலகம் உனக்கு வீதி....சுற்றிவா :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அந்தந்த வயசில வரும் பருவக்கோளாறுகள்... :D

 

நாங்களும் உங்கள் வயதில் இம்மாதிரி விடலைத்தனமாக சிலிப்பிகொண்டு திரிந்தவர்கள்தான்..! ஆனால் இப்பொழுது பாருங்கள், அன்பான மனைவி, குழந்தைகள், பேரன்,பேத்திகளென வாழ்வின் ஓவ்வொரு பரிமாணத்தையும் சுவைத்து மனிதனாய் பிறந்ததின் புரிந்தும் புரியாத அர்த்தங்களை இன்னும் சுவாரசியமாய் தோண்டிக்கொண்டிருக்கிறோம் வாழ்க்கை என்ற சுரங்கத்தின் மறுஎல்லையை நோக்கி...! :)

நீங்கள் என்னடாவென்றால் சுரங்கத்தின் அருகவே போகாமல் தூரமாய் நின்று, போறவனைப் பிடிக்க முட்டிக்கொண்டு வீண் கதை கதைக்கிறீர்கள்...!!

 

வீட்டிலுள்ள பெரியோர்களைச் சொல்லணும்..உங்களை ரெண்டு தட்டு தட்ட... :lol:

 

 

ராஜவன்னியன் அண்ணா...போங்கண்ணா...கல்யாணம்தான் அந்த வயசில் வரும் பருவக்கோளாறு என்று நினைக்கிறேன்..அந்தகோளாறில் ஒரு ஆர்வத்தில் போய் கல்யாணம் கட்டியவர்கள்தான் இப்ப ஆயுள்டண்டனை அனுபவிக்கிறார்கள் என்பது எம் கணிப்பு..கல்யாணத்தின் பின் இழக்கப்படுபவைகளில் ஒன்று தனிமனித சுதந்திரமும் என்பது எம் கணிப்பு.. :icon_idea:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்கும் அவர் அவர் விருப்பப்படி வாழ உரிமையுண்டு, எது உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை தருமோ அதன்படியே வாழலாம். 

இந்தக்கருத்து யதார்த்தமானது..ஆனால் மகிழ்ச்சி என்று பிறர் சொல்லகேட்டு போய் திருமணபந்தத்தில் விழுபவர்களுக்கு ஏற்கனவே அதில் விழுந்து உழல்பவர்கள் ஒருபோதும் உண்மையை சொல்லி எச்சரிப்பதில்லை..தாங்கள் தவறி விழுந்துவிட்டோம் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள அவர்களின் தன்மானமொருபோதும் இடம் தருவதில்லை...வஞ்சகமாக கல்யாணத்தின் பின் தான் சொர்க்கமே இருக்கென்று அதில் இழுத்துவிடுகிறார்கள்..

 

 

 

 

மேலே கூறியது போன்று பெண்மையை அடையாவிட்டால் இப்பிறவிப்பயனை அடையாமல் இவ்வாழ்க்கையை பூர்த்தியாக்கியதாகிவிடும் என்பது எனது கருத்து  :) . ஒருநாள் இறந்து மேல்லோகம் செல்லும்போது எமதர்மன் கேட்பான் நீயெல்லாம் பூமியில் இருந்து என்ன பயன், அதுவும் ஆணாக இந்தனை ஆயுதங்களோடு பிறந்தும் அதனை சரியாக பயன்படுத்தவில்லையே, நீ நரகத்திற்கு செல் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

எல்லாரும் பிறவிப்பயனை அடைந்துவிடமாட்டீர்கள்,முழுமை அடையமாட்டினம் என்றெல்லாம் புழுகித்தள்ளுகிறீர்கள்..அதென்ன பிறவிப்பயன்,முழுமை என்று யாரும் சொல்கிறீர்கள் இல்லையே..? :(

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி, சபேசு!

 

இந்த விசயங்களில மற்ற ஆக்களைக் கேட்டு முடிவெடுக்கக் கூடாது!  கவிஞர் கண்ணதாசன் கூடக் கையை விட்டுப் போட்டார்!

 

'சென்றவனைக் கேட்டால் வந்து விடு என்பான்!

வந்தவனைக் கேட்டால், சென்றுவிடு' என்பான்!

 

இதை விடத் தெளிவான (?) விளக்கம் ஒருத்தராலேயும் தர ஏலாது!

 

நான், உங்கட வயதில இருந்தால், ஒரு 'ஏழு' வருசத்துக்கொரு தரம், இருவரது சம்மதத்தின் பேரிலும், மீளப் புதுப்பிக்கக் கூடிய விதமாக, ஒரு ஒப்பந்த அடிப்படியில கலியாணத்தைக் கட்டிப் பார்க்கிறது! முதல் ஏழு வருசத்தில, பிடிச்சுக் கொண்டுதெண்டா, மீளவும் புதுப்பிக்கலாம், இல்லாவிட்டால். உள்ளதைப் பங்கிட்டுக் கொண்டு, மாற வேண்டியது தான்! இரண்டாம் தரமும், புதுப்பிச்சியள் எண்டால். மூண்டாம் தரத்துக்குப் புதுப்பிக்க வேண்டிய, ஆர்வமும், தேவையும், இரண்டு பேருக்குமே, இல்லாமல் போய்விடும்!  :D

 

இது தான், புதிய தலைமுறைக்கு, ஒரு நல்ல வழி என்று நினைக்கிறேன்! :icon_idea:

இந்தக்கருத்து யதார்த்தமானது..ஆனால் மகிழ்ச்சி என்று பிறர் சொல்லகேட்டு போய் திருமணபந்தத்தில் விழுபவர்களுக்கு ஏற்கனவே அதில் விழுந்து உழல்பவர்கள் ஒருபோதும் உண்மையை சொல்லி எச்சரிப்பதில்லை..தாங்கள் தவறி விழுந்துவிட்டோம் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள அவர்களின் தன்மானமொருபோதும் இடம் தருவதில்லை...வஞ்சகமாக கல்யாணத்தின் பின் தான் சொர்க்கமே இருக்கென்று அதில் இழுத்துவிடுகிறார்கள்..

 

 

 

 

எல்லாரும் பிறவிப்பயனை அடைந்துவிடமாட்டீர்கள்,முழுமை அடையமாட்டினம் என்றெல்லாம் புழுகித்தள்ளுகிறீர்கள்..அதென்ன பிறவிப்பயன்,முழுமை என்று யாரும் சொல்கிறீர்கள் இல்லையே..? :(

 

நீங்கள் எப்பொழுதாவது இப்படி யாரிட்டையும் வாங்கியிருக்கிறிங்களா?t4809.gif வாங்கினால் தான் அருமை தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
கலியாணம் கட்டுவது கட்டாயமா..?

 

 
ஏன் மனுசனாய்ப் பிறந்தவங்கள் கலியாணம் கட்டவேணுமா..? ஏன் தனிய வாழமுடியாதா..? தனியவாழுறதில எவளவு நின்மதி.. கலியாணம் கட்டினவன் யாழ்களத்திலகூட நின்மதியாய் எழுத முடிகிறதா..? இல்லைத்தான.. இண்டைக்கு இரவு பசிக்குது எண்டு திடீர் ப்ளான் போட்டு பாரிஸ் போனம் றெஸ்டாரண்ட்..நள்ளிரவு ஆகுமரை அங்கை இருந்து பெடியளோட பமபலடித்து சாப்பிட்டுவிட்டு வந்தம்..இதுவே கல்யாணம் ஆனால் நடக்குமோ.., நடக்கத்தான் மனுசிமார் விடுவளவையோ..? நள்ளிரவுக்கு மேல ஆளைக்காணேல்லை எண்டால் போனே பயந்துபோற அளவுக்கு கோல்வரும்..திட்டுவிழும்..காதுக்காலை ரத்தம் வரும்..கடவுளே கல்யாணம் கட்டினவனைப்பார்த்து பரிதாபப் படுகிறார்..இந்த லட்சணத்தில கல்யாணம் ஒரு கேடா..? மனுசன் வேலைக்கு போனமாம் வேளைக்கு வீட்டுக்கு வந்தமா..வெளியால போனமாம்...ஊரை சுத்தினமாம்..எண்டு ஒற்றையாய் திரிகிற வாழ்க்கையில்தான் எவ்வளவு சந்தோசம்..இதை எல்லாத்தையும் இழந்து ஒருகல்யாணம் கட்டவேணுமா.., கல்யாணம் கட்டியவர்களே உங்களை மனதை திறந்து சொல்லுங்கோ பதில்..கட்டாதவன் எல்லாம் என் கட்சியில் சேருங்கோ..இன்றுமுதல் நாம் சிங்கிள் சிங்கங்கம்கள் என்று சபதமெடுங்கள்..

 

 

நீங்கள் கலியாணம் கட்டி ஒழுங்குமுறையா இருந்தால் ஏன்தம்பி மனிசிமார் உங்களுக்கு காதுக்காலை ரத்தம் வரப்பண்ணினம் ??

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேஸ்

 

எல்லாம் எல்லோருக்கும் எங்கும் கிடைக்கும்தான்

ஆனால் வாழ்க்கையின் படிமுறை  அல்லது வளர்ச்சி  என்ற ஒன்று உண்டு

அது திருமணம் செய்வதால் மட்டுமே முடியும்

நீங்கள் உடலுறவுக்கும் திருமணத்துக்கும் முடிச்சு போடுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்

அது வாழ்வில் சில நிமிடங்கள் மட்டுமே.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்பொழுதாவது இப்படி யாரிட்டையும் வாங்கியிருக்கிறிங்களா?t4809.gif வாங்கினால் தான் அருமை தெரியும்.

 

 

உதை கல்யாணம் கட்டினப் பிறகு தான் வேண்டோனுமே...சுபேஸ் ஏற்கனவே யாரிட்டையும் வேண்டியிருப்பார் :lol:

நீங்கள் எப்பொழுதாவது இப்படி யாரிட்டையும் வாங்கியிருக்கிறிங்களா?t4809.gif வாங்கினால் தான் அருமை தெரியும்.

 

 

வாங்கி இருந்தால் பெடியன் ஏன் இந்தக் கேள்வியைக் கேக்குது  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வாங்கி இருக்க மாட்டார் கொடுத்திருப்பார்.....

நீங்கள் எப்பொழுதாவது இப்படி யாரிட்டையும் வாங்கியிருக்கிறிங்களா?t4809.gif வாங்கினால் தான் அருமை தெரியும்.

 

ஒரு கொஞ்சநேர சந்தோசத்திற்காக வாழ்நாள் முழுவதையும் கொடுக்க முடியுமா?

 

 

எனக்கு புங்கையின் ஐடியா பிடித்திருக்கிறது.  :lol:  :lol: :lol:  

ஏதும் கருத்துகள் வைத்து கள உறவுகள் மனதை வேதனைப்படுத்த விரும்பவில்லை. இன்னும் எவ்வளவுகாலம் நான் யாழில் இருக்கிறேனோ தெரியாது. அதுவரைக்கும் நான் ஜாலியா பம்பலடிச்சு கதைக்க விரும்பிறன். இனிமேல் யாழில் என்வரவு குறைந்து விடும் என்றெல்லாம் கொஞ்ச காலமாவே சுபேஸ் அண்ணா யாழில் எழுதி வந்ததை பார்த்ததும் ஆளுக்கு கல்யாணம் ஓகே ஆயிடிச்சு போல. நைசா இப்ப இப்பிடி சொல்லி வைத்து விட்டு பின்னர் யாழை விட்டு கழர நினைக்கிறார் என்று guess பண்ணியிருந்தால் சுபேஸ் அண்ணா இப்படி ஒரு திரி ஆரம்பித்திருக்கிறார். :o:icon_idea:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.