Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணம் என்றும் இந்துக்களின் ராஜ்யதானியமாகவே அதன் கலை கலாச்சார அம்சங்களோடு இருக்கும். சங்கிலிய மன்னனின் வாரிசு விசேட செவ்வி

Featured Replies

H.R.H.+Raja+Remigius+Kanagarajah.jpg யாழ்பாண இராச்சியத்தின் மன்னனாக இருந்து 1621ம் ஆண்டு போத்துக்கீசரால் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட சங்கிலி மன்னனின் 28 வது வாரிசு என நெதர்லாந்திலிருந்து வெளிவந்திருக்கின்றார் ரெமிகிஸ் கனகராஜா. இவரை கடந்த 2005 ம் ஆண்டு போத்துக்கீசர் சங்கிலி மன்னனின் வாரிசு என அங்கீகரித்துள்ளனர். உலகிலுள்ள பல அரச குடும்பத்தினருடனும் யாழ்பாண இராச்சிய மன்னனாக தான் தொடர்பில் இருப்பதாக இலங்கைநெற் இற்கு அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

செவ்வி கண்டவர் பீமன்.

கேள்வி: உங்களுக்கும் மன்னன் சங்கிலியனுக்கும் இடையேயான உறவு முறை என்ன?

பதில்: நான் சங்கிலிய மன்னனின் 28 வது வாரிசு.

கேள்வி: உங்கள் 28 பரம்பரைகள் தொடர்பில் விளக்கமாக கூறமுடியுமா?

பதில்: இலங்கையின் யாழ்பாண ராட்சியத்தை கடைசியாக ஆண்டவர் சங்கிலி ராஜா சேக ராஜ சேகர மன்னன். இவர் சிங்கை பரராஜசேகர அரசனின் மூன்றாவது மனைவி மங்கத்தம்மாளுக்கு பிறந்தவர். இவருக்கு பிறந்த ஒரு மகனின் பெயர் பெரியபிள்ளை பண்டாரம். அவருக்கு பிறந்து ஒரு மகன் முடிக்குரிய இளவரசன் காகோ. இவர் யாழ்பாண இராட்சிய இராணுவத்தில் சேனாதிபதியாக இருந்தவர். காகோ விற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த இரட்டைக்குழந்தைகளில் ஒருவரின் பெயர்தான் சங்கிலி மன்னன். அவரிலிருந்து பரராச பண்டாரம், வீரபாகு, புவிராஜ பண்டாரம், குருநாதர், வேதநாயகம் என எனது பாட்டன் பூட்டன் பரம்பரை வருகின்றது. இங்கே நான் இருபத்தி எட்டாவது பரம்பரையில் இருக்கின்றேன்.

கேள்வி: உங்களது பெற்றோர் ?

பதில்: அம்மாவின் பெயர் - மகேஸ்வரி மரினா அரசரெட்ணம்
அப்பாவின் பெயர் - தம்பிராஜா கனகராஜா

கேள்வி: நீங்கள் தாய்வழியில் அரச பரம்பரையை சேர்ந்தவரா அன்றில் தந்தை வழியிலா?

பதில்: தாய் வாழியில்.

கேள்வி: நீங்கள் தான் யாழ்பாண ராட்சியத்தின் மன்னன் என உரிமை கோரியுள்ளீர்கள். இந்தக்காலப்பகுதியில் இதற்கு தகுதியானவர்கள் இன்னும் உங்கள் பரம்பரையில் எத்தனை பேர் உள்ளனர்.

பதில்: தற்போது நானே அதற்கு தகுதியுடையவனாக உள்ளேன். என்னையே ர்நயன ழக வாந சுழலயட ர்யரளந ழக துயககயெ யாழ் அரச குடும்பத்தின் தலைவனாக தெரிவு செய்துள்ளார்கள்.

கேள்வி: உங்களை யாழ்பாண ராட்சியத்தின் மன்னனாக யார் யார் ஏற்றுக்கொண்டுள்ளனர்?

பதில்: உலக நாடுகளிலுள்ள அரச குடும்பங்களும், போத்துக்கீசரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். போர்த்துக்கீசர் என்னை அங்கீகரித்து 2005 ஆம் ஆண்டு சான்றிதழ் ஒன்றையும் வழங்கியுள்ளார்கள்.

கேள்வி: நீங்கள் போத்துகீசர் வழங்கிய சான்றிதழைப் பெற்றுள்ளீர்கள். உங்கள், பூட்டன் சங்கிலி மன்னன் போத்துக்கீசருக்கு எதிராக போராடினார். போத்துக்கீசரின் அழைப்பை ஏற்று மதம்மாறிய சுமார் 600 தமிழரை மன்னாரில் சங்கிலி ராஜ சேக ராஜ சேகர மன்னன் வாளால் வெட்டிக்கொன்றதாக வரலாறு கூறுகின்றது. இதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: ஆம் அவர் 600 பேரை வெட்டிக்கொன்றார். அவர் செய்தது சரி. இவர்கள் எப்படி அவ்வாறு செய்ய முடியும்? நானாக இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன். இன்று போத்துக்கீசர் எனக்கு இந்தச் சான்றிதழைத் தந்ததும் நான் ரோமன் கத்தோலிக்கத்தை தழுவுகின்றேன் என்ற எண்ணத்தில்தான். ஆனால் நான் இன்றும் இந்து மதத்தைச் சார்ந்தவனாகவே இருக்கின்றேன். நான் ரோமன் கத்தோலிக்கத்தை தழுவுபவனாக இருந்திருந்தால் என்னை இந்த உலகம் யாழ்பாணத்தில் நிலை நிறுத்தியிருக்கும், எனக்கு எவ்வளவோ செய்திருக்கும்.

கேள்வி: இலங்கையின் யாழ்பாண ராட்சியத்தின் மன்னனாக நீங்கள் 2005 ம் ஆண்டு போத்துகீசரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளீர்கள். சுமார் 400 ஆண்டுகளுக்கு பின்னர் இது எவ்வாறு சாத்தியமானது?

பதில்: 2003 ம் ஆண்டிலேயே அரச குடும்பம் ஒன்று இருக்கின்றது என நான் வெளியே வந்தேன். அதற்கு முன்னர் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வந்தோம். இருந்தாலும் எமது அரச குடும்ப பாரம்பரிய சம்பிரதாயங்களை எமக்குள்ளே மிகவும் கடைப்பிடித்து வந்தோம்.

கேள்வி: பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தோம் என்று கூறுகின்றீர்கள், எந்தவகையிலான பிரச்சனைகள் என்பதை விளக்கமாக கூற முடியுமா?

பதில்: போத்துக்கீசர் நாட்டை விட்டு வெளியேறும்போது அரச குடும்பத்தின் சகலரையும் அடியோடு அழித்தார்கள். இதே நிலை பிரித்தானிய ஆட்சிக்காலத்திலும் இருந்தது. இதை தொடர்ந்து எமது பரம்பரையினர் இலங்கையில் மறைவாகவே வாழவேண்டியிருந்தது. 1948.02.04 திகதி எமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டாலும் 1972 ம் ஆண்டுவரை நாம் பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்து வந்தோம். 22.05.1972 ம் திகதியே இலங்கை தனக்கென ஒரு அரசியல் யாப்பினை உருவாக்கி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாக இயங்கும் உரிமையைப் பெற்றது என்பதை எவரும் மறந்து விடமுடியாது. அதாவது பிரித்தானியர் எமக்கு சுதந்திரம் வழங்கிவிட்டதாக கூறியிருந்தாலும் 1972.05.22 ம் திகதி வரை அவர்களால் எதையும் அங்கு செய்யக்கூடிய நிலைமைகளே இருந்தது. இந்தக்கால கட்டத்தில்தான் நான் பிறந்தேன் அப்போதும் எமது பெற்றோர் ஒருவகை அச்சத்திலேயே வாழ்ந்தனர். அரசபரம்பரையினர் என்ற காரணத்திற்காக அழிக்கப்பட்டுவிடுவோம் என நாங்கள் மாத்திரம் அச்சம் கொண்டிருக்கவில்லை, கண்டிய அரச மன்னர்களுக்கும் இதே நிலைதான் காணப்பட்டது. அவர்களும் இப்போதுதான் இந்தியாவிலிருந்து வெளியே வந்துள்ளார்கள்.

கேள்வி: அவர்கள் எப்போது, எதற்காக இந்தியா சென்றிருந்தார்கள்?

பதில்: கண்டிராட்சியம் பிரித்தானியர் கையில் வீழ்ந்தபோது கண்டியின் கடைசி மன்னனாக இருந்த சிறி விக்ரம ராஜசிங்கனை பிடித்து இந்தியாவுக்கு அனுப்பினார்கள். அவரை வேலூர் சிறையில் அடைத்தார்கள். அவர் 30.01.1832 சிறையிலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரும் முற்றாக இலங்கையிலிருந்து பிரித்தானியரால் இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

கேள்வி: மன்னன் சங்கிலியனுக்கு என்ன நடந்தது என சரியாக கூறுங்களேன்?

பதில்: 1621 போத்துக்கீசருக்கு மன்னன் சங்கிலியன் வரி கட்டவேண்டிய பிரச்சினை ஒன்று இருந்து. இந்த நிலையில் அவர் இந்தியாவுக்கு அவரது குடும்பத்துடன் தப்பிச்செல்ல முற்பட்டபோது, போத்துக்கீசரால் சிறைப்பிடிக்கப்பட்ட அவர், யாழ்.நல்லூர் சிறைச்சாலையில் அடைத்து வைத்திருந்து, இந்தியாவிற்கு கொண்டு சென்று கோவாவில் அவரை 1623ம் ஆண்டு தூக்கிலிட்டார்கள்.


கேள்வி: நீங்கள் எங்கே பிறந்தீர்கள் ? உங்கள் ஆரம்ப மற்றும் உயர் கல்வியை எங்கு கற்றீர்கள் என்பது பற்றி கூறுங்கள்..

பதில்: நான் இலங்கையின் நாவலப்பிட்டி எனும் நகரத்திலேயே பிறந்தேன். அதற்கு ஒரு காரணமும் உண்டு. சங்கிலிய மன்னரை போத்துக்கீசர் இந்தியாவுக்கு கொண்டு சென்றனர். அதேநேரத்தில் அவர்கள் எங்கள் பரம்பரையை பூண்டோடு அழிக்கும் வேலைகளையும் செய்திருந்தனர். சங்கிலிய மன்னன் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டபின்னர், எமது குடும்பத்தை சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். குறிப்பாக சங்கிலிய மன்னனின் எத்தனையோ மனைவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்ற வரலாறுகளை நீங்களும் படித்திருப்பீர்கள். இந்சந்தர்ப்பத்தில்தான் எமது பரம்பரையில் இருந்த வீரபாகு மன்னர் பூண்டுலோயோவிற்கு சென்று தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தார். அவ்வாறு எஞ்சியவர்களில் வந்தவன்தான் நான்.

எனது ஆரம்ப கல்வியை நாவலப்பிட்டியில் ஆரம்பித்தேன். பின்னர் தலைநகர் கொழும்புக்கு வந்தோம். அங்கு மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியிலும் அலெத்தியா இன்டர்நெஷ்னல் பாடசாலையிலும் கல்வியை தொடர்ந்தேன்.

கேள்வி: யாழ்பாணத்தில் உங்கள் அனுபவம்.

பதில்: சிறுபிராயத்தில் விடுமுறைகளுக்கு சென்றிருக்கின்றேன்;. பின்னர் அங்கு உத்தியோகத்திற்கு சென்றேன்.

கேள்வி: என்ன உத்தியோகம் புரிந்தீர்கள்?

பதில்: 1987ம் ஆண்டு இலங்கையிலே இந்திய இராணுவம் கால்பதித்த பின்னர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கான வட மாகாண இணைப்பாளராக கடமை புரியச் சென்றிருந்தேன்.

கேள்வி: யாழ்பாணத்தில் உங்கள் அனுபவங்களை கூற முடியுமா?

பதில்: நான் யாழ்பாணத்தில் கால்பதித்த காலத்தில் அங்கு ஓர் இக்கட்டான சூழ்நிலையே காணப்பட்டது. அங்கு சென்று இறங்கியபோது எனக்கு தங்குவதற்கு இடமொன்றுகூட இருக்கவில்லை. ஆரம்பத்தில் யாழ் வைத்தியசாலையிலும், பின்னர் சுபாஸ் ஹோட்டலிலும் தங்கியிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியாக மக்களுக்கு சேவை புரிந்து கொண்டிருந்தேன்.

கேள்வி: எவ்வாறான சேவையை செய்து கொண்டிருந்தீர்கள்?

பதில்: மருத்துவ பாசறைகள் நடாத்துவது, பாலாலியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளை பார்வையிட்டு அவர்களின் குறைகளை நிரப்புவது, பிரிந்து குடும்பத்தினர்களுடனான தொடர்பாடலுக்கு உதவுவது, உணவுப் பற்றாக்குறைகளை நீக்குவது போன்ற செயற்பாடுகளை செய்து கொண்டிருந்தேன். மேலும் யாழ் கச்சேரியில் இருந்து கொண்டு அங்குள்ள மக்களுக்கான போக்குவரத்து அனுமதி பத்திரங்களையும் வழங்கிக்கொண்டிருந்தேன். இவ்வாறு செய்து கொண்டிருக்கின்றபோது, ஒருமுறை கிரனைட் தாக்குதலுக்கும் உள்ளானேன். பின்னர் இத்தாக்குதல் தமிழ் இயக்கம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய இராணுவத்தினர் என்னிடம் தெரிவித்தனர்.

கேள்வி: நீங்கள் சங்கிலிய மன்னனின் வாரிசுகளில் ஒருவர் என்பதை இந்திய இராணுவம் அறிந்து வைத்திருந்ததா?

பதில்: இந்திய இராணுவத்தின் மேலதிகாரிகளில் ஒரு சிலர் மாத்திரமே நான் யார் என்பதை அறிந்திருந்தார்கள்.

கேள்வி: நீங்கள் நாவலப்பிட்டி , கொழும்பு என பல்வேறு பாடசாலைகளில் கல்வி கற்று யாழ்பாணம் வரை உத்தியோகத்திற்கும் சென்றுள்ளீர்கள். இலங்கையில் சிங்கள மக்களோ, அன்றில் அரசாங்கமோ நீங்கள் சங்கிலிய மன்னனின் வாரிசு என்பதை அறிந்து கொண்டிருந்தார்களா?

பதில்: அரசாங்கம் அதை அறிந்து வைத்திருந்தா இல்லையா என்பது தொடர்பில் என்னால் கூற முடியாது. ஆனால் என்னுடன் பழகிய நண்பர்கள் , அதில் சிலர் இலங்கை இராணுவத்தில் இன்றும் இருக்கின்றார்கள.; மற்றும் எங்கள் அயலவர் யாவருக்கும் நான் யாழ் அரச குடும்பத்தின் வாரிசு என்பது தெரியும்.

கேள்வி: அவர்கள் எவ்வாறு உங்களுடன் பழகினார்கள்?

பதில்: எந்தவித வித்தியாசமும் இன்றி அன்பாக பண்பாக பழகினார்கள். இலங்கையில் 1977 ம் ஆண்டு இனக்கலவரங்கள் மூண்டபோது சிங்கள மக்களே எங்களைக் காப்பாற்றினார்கள். அந்த நேரத்தில் நாங்கள் மொரட்டுவ பிரதேசத்தில் வாழ்;ந்தோம். சிங்களக்காடையர்கள் எங்கள் வீட்டை தாக்கவந்தபோது அயல்வீட்டிலிருந்த சிங்கள மக்களே எங்களை தங்கள் வீட்டில் ஒழித்து வைத்து உயிரைக்காப்பாற்றினார்கள். இவர்களுக்கும் நான் யார் என்பது தெளிவாக தெரிந்திருந்தது.. அந்தவகையில் அவர்கள் தொடர்பில் என்னிடம் நல்லதோர் நம்பிக்கை உண்டு.

கேள்வி: நீங்கள் நெதர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியமை, அதற்கான பின்னணி தொடர்பில் கூறமுடியுமா?

பதில்: நான் யாழ்பாணத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கொழும்பிலும் ஜேவிபி பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. அதன்பொருட்டு நான் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியின் விபத்து சேவைப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் பரா மெடிக்ஸ் ஆக வேலை செய்து கொண்டிந்தேன். அந்த நேரத்தில் ஜேவிபி நாடெங்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டது. அதில் எங்களுடன் கடமையாற்றிக்கொண்டிருந்த வைத்தியர் ஒருவரும் உயிரிழந்தார். வைத்தியசாலையிலிருந்து எமது சேவையை சர்வதே செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைக்காரியாலயத்திற்கு மாற்றினோம். அங்கே ஒரு வார்ட் ஒன்றை அமைத்து காயப்படுகின்றவர்களுக்கு சிகிச்சை அளித்தோம். இச்சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவம் மற்றும் ஜேவிபி ஆகிய இருதரப்பிலுமிருந்து நேரடி அச்சுறுத்தல்கள் வந்தன. இதன்காரணமாக கொழும்பிலிருந்து வெளியேறி நெதர்லாந்திற்கு வந்து, எனது நிலைமையை எடுத்துக்கூறி, இங்கு தங்குவதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டேன்.

கேள்வி: இலங்கையில் நடந்த 30 வருடகால போராட்டம் தொடர்பில் உங்கள் கருத்து?

பதில்: ஆரம்பத்தில் போராட்டத்தை யாவரும் ஆதரித்தார்கள் என்பதையும், அது நியாயமான போராட்டம் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் போராடப்புறப்பட்டவர்கள் நாங்கள் மாத்திரந்தான் போராடவேண்டும் என சகல போராட்ட இயக்கங்களையும் அழித்தொழித்திருக்காமல், அனைவரது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து அவர்களது ஆலோசனைகளையும், பெற்று செயற்பட்டிருந்தால் இன்றைய நிலைமை வந்திருக்காது. இந்தப்போராட்டத்தின் பெயரால் தமிழ் குழுக்களால் விலைமதிப்பற்ற தமிழ் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. போராட்டத்தின் தோல்விக்கு முக்கிய காரணமும் அதுதான்.

கேள்வி: புலிகள் உங்களை தொடர்பு கொண்ட சந்தர்ப்பம் உண்டா?

பதில்: புலிகளின் தலைவர்களான தமிழ்செல்வன், புலித்தேவன் போன்றோர் தொலைபேசியில் பேசியிருக்கின்றார்கள். அவர்களுக்கு நான் அப்போது கூறினேன். காலம் கடந்து சென்றுவிட்டது. இனியாவது நல்லது நடக்கவேண்டுமாக இருந்தால் தற்போது உங்களுக்கு இருக்கின்ற ஒரே ஒருவழி சரணாகதி அடைவது தான், மக்களுக்குச் செய்யக்கூடிய சிறந்த செயலாக இருக்கும் என்று தெரிவித்தேன்.


கேள்வி: தமிழ்ச் செல்வன், புலித்தேவன் ஆகியோர் என்ன பேசினார்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா?

பதில்: அவர்கள் எனக்கும் நோர்வே நாட்டு அரசனுக்குமிடையேனா உறவு தொடர்பில் அறிந்து வைத்திருக்கின்றார்கள். நோர்வே மன்னனுக்கும் எமது தரப்பு பிரச்சினைகள் பற்றி எடுத்துக்கூறும்படி விஷேடமாக வேண்டுடினார்கள். அதை அவர்கள் கூறினாலும், இல்லாவிட்டாலும் நான் செய்து கொண்டி இருந்தேன்; இருக்கின்றேன். இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை இருதரப்புத் தவறுகளையும் உலகத் தலைவர்களுக்கு அறிவித்து இருக்கின்றேன்.

என்னிடம் இருக்கின்ற அரசனுக்கு சொந்தமான வாழ், உடைகள், கிரீடம் போன்றவற்றை கையளிக்குமாறும் அவற்றை புலிகளின் அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கபோவதாகவும் கூறினார்கள்.

நான் யாழ்பாணத்திற்கு வரமுடியாது விட்டால் எனது பொருட்களை தரமுடியாது என அவர்களிடம் கூறினேன்.


கேள்வி: தமிழீழம் சாத்தியம் என நினைக்கின்றீர்களா?

பதில்: இல்லை. இந்த விடயத்தில் ஒன்றை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். தமிழீழம் என்பது கிடைத்தால் தலைமைப்பதவிக்காக சில நேரங்களில் ஒட்டுமொத்த தமிழினமும் அழிய நேரிடலாம். இதை நாம் வரலாற்றில் கண்டிருக்கின்றோம்.

கேள்வி: அவ்வாறாயின் தமிழீழம் தமிழ் மக்களுக்கு தேவையில்லை என்று கூறுகின்றீர்களா?

பதில்: தேவையில்லை என நான் கூறவில்லை. ஆனால் யாழ்ப்பாண இராட்சியம் ஒரு தனி இராட்சியமாகத்தான் இருந்தது. அதை யார் இணைத்தார்கள்? தமிழர்கள்தான் அதை இணைத்தார்கள். பிரித்தானியர் இலங்கையைவிட்டுப் போகும்போது அவர்கள் அதை தனிராட்சியமாகவே இருக்கவிட்டிருக்கவேண்டும். மாறாக தமிழர்கள் அதை இணைக்க கோரியிருக்கின்றார்கள். இப்போது அதை பிரி என்று கேட்டு சந்தித்த அழிவுகள் போதும். இப்போது நந்திக்கொடியை தூக்கி கொண்டு நிற்பதில் அர்த்தம் இல்லை. அவர்கள் பிரித்தானியன் வெளியேறும்போது நந்திக்கொடியுடன் நின்றிருக்கவேண்டும். அப்போது நான் பிறந்திருக்கவில்லை. நான் பிறந்திருந்தால் நந்திக்கொடியுடன் சென்று இந்தக்கொடியின் கீழ் தனித்துவாக இருக்கப்போகின்றோம் என ஒற்றைக்காலில் நின்றிருப்பேன். அதற்காகத்தான் நான் இப்போது வெளியே வந்துள்ளேன். என்னை பொறுத்தவரையில் யாழ்பாணம் ஓர் தனி ராட்சியம்.

கேள்வி: யாழ்பாணம் ஒரு தனி ராட்சியம் எனக்கூறுகின்றீகள். அதன் எல்லைகள் குறித்து கூறுவீர்களா?

பதில்: பண்டுகாப அரசன் காலத்தில் இலங்கை பிகிட்டி ரட்ட, மாயா ரட்ட , ருகுணு ரட்ட என மூன்றாக பிரிக்கப்பட்டிருந்தது.


கேள்வி: அவ்வாறாயில் இணைந்த வடகிழக்கு என தற்போது தமிழர் தரப்பால் முன்வைக்கப்படும் கோரிக்கை புதிய விடயமாக இருக்கின்றதே.. உங்கள் கருத்து என்ன?

பதில்: யாழ்ப்பாண இராட்சியம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்;களில் சிற்றரசர்கள்தான் ஆட்சி புரிந்து கொண்டிருந்திருக்கின்றார்கள். ஆனால் இணைந்திருக்கவில்லை. வடகிழக்கு இணைப்பு புதிதுதான்.

கேள்வி: இலங்கை அரசாங்கம் உங்களை அங்கீகரித்திருக்கின்றதா?

பதில்: இலங்கை அரசாங்கம் என்னை அங்கீகரிக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை. அவர்களுக்கு மேலே நான் உள்ளேன். நான் யாழ்பாண இராச்சிய மன்னனின் வாரிசு என்பதை மீண்டும் ஒருமுறை கூறுகின்றேன்.

கேள்வி: இன்று உலகிலே மன்னர்கள், மகாராணிகள் பலர் மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வரிசையில் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் உங்களை யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாக அங்கீகரித்து மக்களின் வரிப்பணத்தில் வாழ வழிவிடுமாயின் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: இல்லை.

கேள்வி: ஏன் என்று கூறுங்கள்?

பதில்: காரணம், நான் மக்களின் மன்னன். மக்களின் பணத்தில் நான் வாழ மாட்டேன். உதாரணத்திற்கு நான் நெதர்லாந்து நாட்டிற்கு வந்திருந்தபோது, இந்நாட்டின் உதவிப்பணம் எனக்கு வழங்கப்பட்டது. அந்தப்பணம் ஒர் அகதிக்கான உதவிப்பணமாக வழங்கப்படவில்லை. ஒரு அரசனுக்கான உதவிப்பணமாகவே வழங்கப்பட்டது. ஆனால் அதை நான் தொடர்ந்து அனுபவிக்க விரும்பவில்லை. எனது சட்டத்தரணி ஊடாக இந்நாட்டில் வேலைசெய்வதற்கு அனுமதி கோரினேன். அந்த அனுமதி கிடைத்தது. நெதர்லாந்துக்கு வந்த ஒரு வருடத்தில் உழைத்து வாழ ஆரம்பித்து விட்டேன்.

கேள்வி: உலக மன்னர்கள் மகாராணிக்களிடம் பரம்பரைச் சொத்துக்கள் உண்டு. உங்களிடம் மன்னன் சங்கிலியனின் பரம்பரை சொத்துக்கள் ஏதாவது உண்டா?

பதில்: சொத்துக்கள் உண்டு.

கேள்வி : எங்கு ? அதன் பெறுமதி தொடர்பில் கூறமுடியுமா?

பதில் : இல்லை. கூறமுடியாது.

கேள்வி: நீங்கள் புலம்பெயர்ந்திருக்கின்ற தேசத்தில் பல்வேறுபட்ட போராட்டங்கள் நாடத்தப்பட்டிருக்கின்றது. நடந்து கொண்டிருக்கின்றது. இந்தப்போராட்டங்கள் உங்களுக்கு திருப்தி அளிப்பனவாக இருக்கின்றதா?

பதில்: இல்லை.

கேள்வி: காரணம் அறியலாமா?

பதில்: அவர்கள் அதை ஒழுங்காக செய்யவில்லை. புலிக்கொடியை மாத்திரம் தூக்கி கொண்டு போய் தெருவில் நின்று கத்தி வேலையில்லை. ஆட்களுடன் பேச வேண்டும். தமிழ் மக்கள் ஒன்று சேரவேண்டும். ஆனால் தமிழ் மக்கள் ஒன்று சேர விருப்பப்படுகின்றார்கள் இல்லை.

இந்த இடத்தில் ஒருவிடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒருமுறை பிரித்தானியா வந்திருந்த போது, தொலைபேசியில் என்னை அழைத்த அவர் ' மன்னரே! தமிழ் மக்களை ஒன்றிணைப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஓவ்வொருவரும் ஒவ்வொருவழியில் ஒவ்வொரு கொடியை கொண்டு செல்கின்றார்கள். ஒரே வழியில் செல்ல இணங்குகின்றார்கள் இல்லை.' என்றார்.

புலம்பெயர் தேசத்தில் புலிக்கொடியை தூக்கி கொண்டு சென்றவர்கள் என்னையும் அழைத்துக்கொண்டு எங்கள் இராச்சியத்தின் மன்னன் இங்கே இருக்கின்றார், அவர் சொல்வதையும் கேளுங்கள் என்று சென்றிருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

அங்கு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இங்குள்ள மக்கள் யுத்தத்திற்கு பணம் கொடுத்தார்கள். சிலர் வட்டிக்கு பணம் எடுத்து கொடுத்தார்களாம் என்றும் கேள்விப்பட்டேன். அனால் அவர்கள் இப்போது அங்குள்ள மக்களுக்கு ஒன்றும் செய்கிறார்கள் இல்லை. இவர்கள் இப்போதுதான் செய்யவேண்டும். அங்குள்ள சனங்கள் பாவங்கள்.

கேள்வி: உலகின் சில நாடுகள் உங்களை யாழ்பாண இராச்சியத்தின் மன்னனாக ஏற்றுக்கொண்டிருக்கின்றது. உங்களுடைய செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பதை கூறுவீர்களா?

பதில்: நான் இங்கிருந்து கொண்டு நாட்டில் நடக்கின்ற விடயங்களை அவதானிக்கின்றேன். எனது அவதானங்களை சகல மன்னர்களுக்கும் தெரியப்படுத்துகின்றேன். இவற்றைத்தான் இன்றைய நிலையில் என்னால் செய்யமுடியும். மேலும் அவர்களின் உதவியுடன் நாட்டில் இறங்குவதற்கு வழி பார்க்கின்றேன்.

கேள்வி: நாட்டில் இறங்குவதற்கு வழிபார்க்கின்றேன் என்கின்றீர்கள். அங்கு உங்கள் வேலைத்திட்டம் என்னவாக இருக்கப்போகின்றது?

பதில்: அங்கு சென்றால் எனது வளங்களை ஒருங்கிணைத்து மக்களுக்கு செய்ய முடிந்ததை செய்வேன். இந்தப் பூமியிலே மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கு இடமிருக்கின்றது. அவ்வாறே தமிழ் மக்களும் சுதந்திரமாக இருப்பதற்கு ஒரு இடம்வேண்டும் என்பதை உணர்த்துவேன்.

கேள்வி: அரசியலில் இறங்குவீர்களா?

பதில்: நான் 2003 இல் வெளியே வந்தபோது, அரச குடும்பத்தின் அடையாளமாகவே வெளிவந்தேன். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதற்கு அரசியலில் இறங்கவேண்டி வந்தால் அதையும் செய்வேன்.

கேள்வி: எவ்வாறானதோர் அரசியல் கட்சியை தெரிவு செய்வீர்கள்?

பதில்: தமிழ் மக்களின் நலன்சார்ந்ததோர் கட்சியாக அது இருக்கும்.

கேள்வி: இன்று இலங்கையிலே இருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள் தொடர்பாக நீங்கள் திருப்தி அடைகின்றீர்களா?

பதில்: எனக்கு அவர்களில் திருப்தியும் இல்லை. நம்பிக்கையும் இல்லை.

கேள்வி: காரணம் அறியலாமா?

பதில்: காரணம், அவர்கள்; இன்று தமக்கு முன்னே நிற்கும் கடமைகளைத் தவிர்த்து, உலகம் சுற்றிக்கொண்டு திரிகின்றார்கள். வெளிநாடுகளுக்கு சென்று மற்ற நாடுகளுடன் பேசி பிரயோசனம் ஒன்றும் இல்லை. முதலில் அவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் பேசவேண்டும். எமது பிரச்சினைக்கு இலங்கைக்குள்ளேயே தீர்வு காண முடியும்.

நான் இவர்களை பார்த்து ஒன்றை கேட்கின்றேன். நீங்கள் யாரிடம் சம்பளம் வாங்குகின்றீர்கள்? இலங்கை அரசாங்கத்திடம்தான் கைநீட்டி சம்பளம் வாங்குகின்றீர்கள். ஏன் உங்களுக்கு அந்த அரசாங்கத்துடன் பேச முடியாது?

கேள்வி: எமது பிரச்சினை தொடர்பில் வெளிநாடுகளுடன் பேசுவதால் எமக்கு எந்தப் பலனும் கிட்டப்போவதில்லை என்பதா உங்கள் கருத்து..

பதில்: எந்தப்பலனும் கிடைக்கப்போவதில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் தீர்வுக்கான அடித்தளம் இலங்கையிலேயே போடமுடியும், போடப்படவேண்டும் என்பதுவே எனது கருத்து.

எனவே இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசுடன் பேசி அதற்கான அடித்தளத்தைப் போடவேண்டும். இன்று தமிழ் அரசியல் தலைமைகள் ஒவ்வொரு திசையில் செல்வதால்தான் தமிழ் அரசியல்வாதிகள் பலர் சிங்களத் தலைமையை கொண்ட அரசியல் கட்சிகளில் இணைந்தார்கள். குறிப்பாக எங்களுடைய மாமன்மார் கூட அப்படித்தானே சென்றார்கள்.. எனவே அவ்வாறு அவர்கள் சென்றதை நான் குறை கூறமாட்டேன். சரியானதோர் தமிழ் தலைமை, தமிழ் மக்கள் அனைவரையும் ஒரே குரலாக ஒரே குடையின் கீழ் இணைத்திருக்க வேண்டும்.

இன்று புலிகளைப் பாருங்கள் அவர்கள் அமெரிக்காவில் , நோர்வேயில் , பிரான்சில் என மூன்றாக பிளவு பட்டு நிற்கின்றார்கள்.

கேள்வி: உங்களுடைய மாமன்மாரா...? யார் அவர்கள்?

பதில்: முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்.

கேள்வி: தமிழ்த் தலைமைகளில் ஏற்பட்டிருக்கின்றதாக நீங்கள் கூறுகின்ற இடைவெளியை நிரப்புவதற்கு என்ன முயற்சி செய்திருக்கின்றீர்கள்?

பதில்: இது தொடர்பில் ஏதாவது செய்வதற்கு என்னுடன் ஒருவரும் கதைக்கின்றார்கள் இல்லையே. இன்று இலங்கைப்பத்திரிகைகளில் என்னுடைய பெயர் கூட வெளிவருவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காரர் விடுறாங்கள் இல்லை.

கேள்வி: யாழ்பாண இராச்சியம் தனியான இராச்சியம். இறுதியாக சங்கிலி மன்னன் எனும் தமிழ் மன்னனால் ஆளப்பட்ட இராச்சியம். எனவே இந்தப்பகுதி தொடர்ந்தும் தமிழராலேயே ஆளப்படவேண்டும் என அடம்பிடிக்கும் அதே தலைமைகள் அந்த மன்னனின் வாரிசை இருட்டடிப்பு செய்கிறார்களா? நம்ப முடியவில்லையே.. காரணம் என்னவாக இருக்கும்?

பதில்: நீங்கள் அதை நம்பலாம். இதை எனக்கு பல பத்திரிகைக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனது செய்திகளை நான் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரிக்க முற்பட்டபோது, அந்தச் செய்திகளை பிரசுரிக்காத பத்திரிகைகள் 'தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உங்கள் செய்திகளை போட வேண்டாம் என்று சொல்கின்றார்கள்' என என்னிடம் சொல்லியிருக்கின்றார்கள். இதற்கு காரணம் அவர்கள் என்னைக்கண்டு மிரள்கின்றார்கள். ஆனால் நான் யாரதும் வயிற்றில் அடிப்பவன் அல்ல.

கேள்வி: நீங்கள் பிரசுரிக்க முற்பட்ட செய்திகள் தடுக்கப்பட்டன என்று கூறினீர்கள.; ஒரு உதாரணம் கூறமுடியுமா?

பதில்: சங்கிலி மன்னனின் சிலை உடைக்கப்பட்டதாக ஊடகங்களின் வெளியான செய்தியை அறிந்து எனது தரப்பு செய்தியை வெளியிடுவதற்கு நான் முயற்சித்தபோதும் தடுக்கப்பட்டேன்.

கேள்வி: சங்கிலி மன்னனின் சிலைக்கு என்ன நடந்தது?

பதில்: அந்தசிலை புனரமைக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் தவறாக வழிநடத்தப்பட்டது. நானும் இச்செய்திகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் அந்த செய்திகள் வெளிவந்து சில மணத்தியாலங்களில் எங்கள் கோவில் ஐயர் தொலைபேசியில் அழைத்து ' மகாராசா! இந்தச் சிலை விடயத்தில் ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிடவேண்டாம், அதை நாங்கள்தான் புனரமைக்கின்றோம். அதற்காக எங்கள் கோவில் பணம்தான் செலவிடப்படுகின்றது' என்றார்.

தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வாள் கோணிவிட்டது, வாள் கீழே பார்க்கின்றது என்று எத்தனையோ கதைகளைச் சொன்னார்கள். அரசியல் இலாபம் தேடினார்கள். இந்தவிடயத்தை வைத்து மக்களை ஏமாற்றாதீர்கள் என்ற செய்தியை நான் சொல்ல முற்பட்டபோது, ரிஎன்ஏ அதை விரும்பவில்லை.


கேள்வி: இறுதியாக சங்கிலி மன்னன் தமிழனா? தெலுங்கனா?

பதில்: தமிழன். எங்கள் பரம்பரை சிங்கை ஆரியனில் இருந்து தொடங்குகின்றது. சிங்கை ஆரியன் பாண்டிய வம்சத்திலிருந்து வருகின்றார். எங்கள் வரலாறு செவ்வக்க தேசத்திலிருந்து ஆரம்பமாகின்றது. எங்களுக்கு கிடைத்த சிம்மங்கள் நந்திக்கொடி, துளசிமாலை, சங்கு, பட்டம் ஆரியப் பேரரசு என நீண்டு செல்கின்றது. யாழ்பாணத்தில் எமது ஆலயமாக கைலாச பிள்ளையார் ஆலயம் இருந்தது. ஆரியச்சக்கரவர்த்தி இந்த ஆலயத்திலேயே மூன்று நேரமும் வணங்கி வந்தார். அவரது பெயரில் இன்றும் அங்கு பூசைகள் நடைபெற்று வருகின்றது. இந்த ஆலயத்தில் முதல் முதல் குருக்களாக இருந்தவர் கங்காதர ஐயர். அவரது பரம்பரையில் வந்தவர்களே இன்றும் இவ்வாலயத்தில் உள்ளனர்.

கேள்வி: மக்களுக்கான உங்கள் செய்தி என்ன?

பதில்: யாழ்பாணம் என்றும் இந்துக்களின் ராஜ்யதானியமாகவே அதன் கலை கலாச்சார அம்சங்களோடு இருக்கும். மக்களுக்கு என்றோ ஒரு நாள் நல்ல காலம் திரும்பி வரும்.




யாழ்பாண இராச்சியத்தின் வரலாறு இங்கே

 
 

மூலம்: http://www.ilankainet.com/2013/04/blog-post_8522.html

 

Edited by இணையவன்

உவர் இவ்வளவு காலமும் எங்கை போனவராம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒருமாதிரி அரசனைத் தேடிக் கண்டுபிடிச்சாச்சு!

 

 

கேள்வி: நீங்கள் போத்துகீசர் வழங்கிய சான்றிதழைப் பெற்றுள்ளீர்கள். உங்கள், பூட்டன் சங்கிலி மன்னன் போத்துக்கீசருக்கு எதிராக போராடினார். போத்துக்கீசரின் அழைப்பை ஏற்று மதம்மாறிய சுமார் 600 தமிழரை மன்னாரில் சங்கிலி ராஜ சேக ராஜ சேகர மன்னன் வாளால் வெட்டிக்கொன்றதாக வரலாறு கூறுகின்றது. இதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: ஆம் அவர் 600 பேரை வெட்டிக்கொன்றார். அவர் செய்தது சரி. இவர்கள் எப்படி அவ்வாறு செய்ய முடியும்? நானாக இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன். இன்று போத்துக்கீசர் எனக்கு இந்தச் சான்றிதழைத் தந்ததும் நான் ரோமன் கத்தோலிக்கத்தை தழுவுகின்றேன் என்ற எண்ணத்தில்தான். ஆனால் நான் இன்றும் இந்து மதத்தைச் சார்ந்தவனாகவே இருக்கின்றேன். நான் ரோமன் கத்தோலிக்கத்தை தழுவுபவனாக இருந்திருந்தால் என்னை இந்த உலகம் யாழ்பாணத்தில் நிலை நிறுத்தியிருக்கும், எனக்கு எவ்வளவோ செய்திருக்கும்.

 

 

தானாக இருந்தாலும் போட்டுத்தள்ளியிருப்பாராம் !

 

போட்டுத்தள்ளுவது ஒரு கலையாகவே காலா காலத்துக்கும் இருந்துவருகின்றது.

 

 

 

 

 

Edited by சண்டமாருதன்

  • கருத்துக்கள உறவுகள்

தானாக இருந்தாலும் போட்டுத்தள்ளியிருப்பாராம் !

 

போட்டுத்தள்ளுவது ஒரு கலையாகவே காலா காலத்துக்கும் இருந்துவருகின்றது.

 

 

போட்டுத்தள்ளாத ஒரு சமுதாயம் சொல்லுங்கோ பார்ப்பம்.ஏன் டக்ளஸ் கூட அதை தான் செய்கிறார்.

யாழ்ப்பணத்திற்கு இவனும் இவனின் கூட்டமும் வந்தால் யாராவது மதிப்பு கொடுப்பீர்களா?

நான் - கொடுக்கமாட்டேன் ஏனேன்றால் நாம் சோழர் பரம்பரை :)

மற்றது எங்களுக்கு ஒரு ராஜாவோ அல்லது அவனது குழாமோ தேவையில்லை..இப்பவே இவனை மாதிரி ஆக்களை ஒதுக்கி விடனும்

 

 

 



டக்கி இவன் வீட்டில் பெண் எடுத்து விட்டு..பிறகு தான் தான் ராஜா என்றால் ..என்ன செய்வது

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய்... முத்தீட்டுது.
மந்திகைக்கோ... அங்கோடைக்கோ... போக வேண்டிய ஆள். :D

 

Edited by தமிழ் சிறி

இவரை பற்றிய உரையாடல்கள் 2004 ஆம் ஆண்டிலேயே யாழ் களத்தில் நடந்தது. அதன் இணைப்பை தேடி பிடிக்க வேண்டும் :rolleyes: .

 

இவர் ஒரு தொலைக்காட்சி தொடரிலும் வந்து போய் உள்ளார்.

 

http://tv.nytimes.com/2012/01/31/arts/television/undercover-princes-royalty-goes-incognito-on-tlc.html?_r=0

 

 

 

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

இவரை பற்றிய உரையாடல்கள் 2004 ஆம் ஆண்டிலேயே யாழ் களத்தில் நடந்தது. அதன் இணைப்பை தேடி பிடிக்க வேண்டும் :rolleyes: .

-------

 

சில வருடங்களுக்கு முன் ஒரு புத்தாண்டில்... "தமிழ் மக்களுக்கு, மன்னரின் வாழ்த்துக்கள்" என்னும் பொருள் பட புத்தாண்டுச் செய்தி அனுப்பியிருந்ததும்... யாழ்களத்தில் வந்திருந்தது.

பின் இவர்களின் உறவினர் ஒருவர், மகிந்த ராஜபக்ஸவின் தூரத்து உறவினர் ஒருவரை திருமணம் செய்து... மகிந்த குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும்... இதே யாழ்களத்தில் யாரோ... இணைத்திருந்தார்கள்.

மொத்தத்திலை... தலையிலை, நட்டு லூசான ஆள். :D

  • கருத்துக்கள உறவுகள்

 

கேள்வி: உங்களுடைய மாமன்மாரா...? யார் அவர்கள்?

பதில்: முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்.

 

கேள்வி: புலிகள் உங்களை தொடர்பு கொண்ட சந்தர்ப்பம் உண்டா?

பதில்: புலிகளின் தலைவர்களான தமிழ்செல்வன், புலித்தேவன் போன்றோர் தொலைபேசியில் பேசியிருக்கின்றார்கள். அவர்களுக்கு நான் அப்போது கூறினேன். காலம் கடந்து சென்றுவிட்டது. இனியாவது நல்லது நடக்கவேண்டுமாக இருந்தால் தற்போது உங்களுக்கு இருக்கின்ற ஒரே ஒருவழி சரணாகதி அடைவது தான், மக்களுக்குச் செய்யக்கூடிய சிறந்த செயலாக இருக்கும் என்று தெரிவித்தேன்.

 

 

 

இவர் லஷ்மன் கதிர்காமரின் வாரிசே ஒழிய சங்கிலிய மன்னனின் வாரிசல்ல. அந்த வகையில் இவரின் வாயால் என்ன வரும் என்பது தெளிவாகத் தெரிந்த விடயமே..!

 

தமிழீழம் தேவையில்லை.. வன்னியில் நுளம்புக்கு மருந்து அடியுங்கோ என்று சொன்னாலும் சொல்லுவார்..!

 

மேலும்.. தமிழ்செல்வன் அண்ணா எழும்பி வந்து இவரட்டக் கெஞ்சினவர்.. போரை நிறுத்தச் சொல்லி...! இவர் மறுத்தவராம்.

 

இந்தாளே நெதர்லாந்தில் ஒரு அகதி. இவரை புலிகள் தொடர்பு கொண்டு.. கேட்டவை..அதுவும் தமிழ்செல்வன்.. அண்ணா புலித்தேவனோட...!

 

காலம்.. இப்ப காகம் கூட சொல்லும் நான் தான் தமிழ் மக்களின் தலைவனுன்னு..!

 

தமிழ் மக்களின் ஒற்றுமையை பற்றி கதைக்கிற இவர்.. தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்த என்னத்தை வெட்டிப்புடுங்கினவராம்..???!

 

இவருக்குப் பிரச்சனை.. தமிழீழம்.. புலிக்கொடி... தமிழ் மக்களின் ஒற்றுமை. (இவை இனத்தை தேசத்தை காட்டிக்கொடுத்து.. விற்றுப் பிழைக்கிற.. சில..தமிழர்களுக்கு கசுப்பான 3 விடயங்கள். அந்த வகையில் இவர் யார் என்பதை இலகுவான இனங்காண முடிகிறது.)

 

இது 3 ஐயும் இன்னும் இன்னும் எவ்வளவுக்கு சீரழிக்க முடியுமோ அவ்வளவுக்கு சீரழிச்சு தங்கட வாய்ச் சொல் வீரத்தைக் காட்டி.. சிங்களவனுக்கு கால அமுக்கப் போறார். அதுக்கு இவ்வளவு பாடுபடுறாங்கப்பா..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்.. என்னைக் கூப்பிடுவார் யாருமில்லை.. என்னிடம் உள்ள ஒரு பட்டியலின்படி பார்த்தால் நானும் இன்னொரு அரசனின் வாரிசுதான்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுகாலமும் இவையள் எங்க இருந்தவையாம் ?

 



எங்களுக்கு தெரிந்தவர் வீரன் பாதுகாவலன் தலைவர் பிரபாகரன் மட்டும்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலி மன்னன் பரம்பரையிலிருந்து, இப்படியொரு நிறம் கூட வருமா? :o

 

சட்டநாத கோவில், பூசகரின்ர பரம்பரையை, இந்தாள் மாறிக் குழப்புது! :rolleyes:

மன்னா வருக, விரைவில் தனிநாடு கிடைத்துவிடும் t3730.gif

Edited by mampalam

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலி மன்னன் பரம்பரையிலிருந்து, இப்படியொரு நிறம் கூட வருமா? :o

 

சட்டநாத கோவில், பூசகரின்ர பரம்பரையை, இந்தாள் மாறிக் குழப்புது! :rolleyes:

 

கல்வியங்காட்டார்.. அப்படித்தான் சொல்லிக் கொள்வார்கள் புங்கை. தாங்கள் சங்கிலியன் வம்சம் என்று. அங்குள்ள செங்குந்தர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் இது பெரிய கெளரவப் பிரச்சனை.

 

இது குறித்த ஆய்வுகளை கலைப்பீடத்தை.. விஞ்ஞான பீடத்தைக் கொண்டு இயங்கும்.. யாழ்ப்பாணத்தில் வெட்டிக்கு இருக்கும் பல்கலைக்கழகம்.. செய்தால் நன்றாக இருக்கும்.

 

அதன் மூலமே.. இந்தப் புலுடாக்களுக்கு முடிவு கட்டலாம். எனக்கு ஒன்று புரியவில்லை.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.. வெறும் பட்டதாரிகளை உருவாக்கி விடுவதோடு அதன் கடமை முடிந்தது என்று நினைக்கிறதா.. அதற்குரிய சமூகப் பொறுப்பை அது உணர்ந்து செயற்படுவது வெகு குறைவாக உள்ளது. ஏன் இந்த அசமந்தப் போக்கோ தெரியவில்லை.

 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதிலும் சரி சமூகக் கட்டுமானத்தை மீளமைப்பதிலும் சரி.. எந்த ஒரு அக்கறையும் இன்றி அதன் துணைவேந்தர்களும் பீடாதிபதிகளும் உள்ளனர்.

 

அதேவேளை கொழும்புப் பல்கலைக்கழகம்.. உட்பட்ட தென்பகுதிப் பல்கலைக்கழகங்கள்.. சிறீலங்கா அரசின் போர் திட்டமிடல் தொடங்கி தமிழினப் படுகொலையை மூடி மறைக்கிறது வரைக்கும் சிங்கள அரசோடு இணங்கி விரும்பிச் செயற்படுகின்றன..!

 

யாழ் பல்கலைக்கழகத்தின் சோம்பேறித்தனம் தான்.. துணிச்சலின்மை தான்.. எமது மக்களின் துயருக்கும்.. இப்படியான வரலாற்றுப் புழுகர்கள் தோன்றவும் காரணம்..! :icon_idea:

 

Edited by nedukkalapoovan

போட்டுத்தள்ளாத ஒரு சமுதாயம் சொல்லுங்கோ பார்ப்பம்.ஏன் டக்ளஸ் கூட அதை தான் செய்கிறார்.

 

நீங்கள் எல்லா சமுதாயத்திலும் உள்ளதுதானே போட்டுத்தள்ளுவதை நியாயப்படுத்த முற்படுகின்றீர்கள்.

 

ஏராளமான சமூகங்கள் சண்டைகள் உயிர்ப்பலிகளுடாகத்தான் மாற்றங்களை சந்தித்து நாகரீகமான சமூகமாக மாறியுள்ளது. ஆனால் மாற்றங்களுக்கு வளியில்லாமல் இன்றுவரை போட்டுத்தள்ளுவதில் குறியாய் இருப்பது எமது சமூகமே.

 

சங்கிலியன் கிறிஸ்த்துவ மத தமிழர்களை வெட்டிச் சாய்த்த கதைகள் என்னும் செவிவழியாக தொடர்கின்றது. மாதா சுருபங்களை தூக்கிக்கொண்டு காடுகளுக்குள் மக்கள் அகதியாக வாழ்ந்துள்ளார்கள். மடுமாதா சுருபத்தை காப்பாற்ற பெரும்பாடு பட்டுள்ளார்கள். பின்னர் புலிகள் காலத்தில் இஸ்லாமியத்தமிழர்கள் விரட்டியடிப்பு. காத்தான் குடி படுகொலை எல்லாம் உலகறிந்த ஒன்று. சேரசோழ பாண்டியராகட்டும் சங்கிலியன் தெடங்கி புலிகள் ஏனைய இயக்கங்கள் ஆகட்டும் சொந்த இனத்தை சர்வநாசம் பண்ணி அடுத்த இனங்களுக்கு அடிமையாக்கினார்கள் தவிர இனத்தை கட்டியெழுப்பவில்லை. மதம் சாதி பிரதேசம் என்பது காலா காலத்துக்கும் வக்கிரம்பிடித்த ஒன்றாக இன்றுவரை நிலைக்கின்றது. நாகரீகமடையாத காட்டுமிராண்டிநிலையில் ஒரு இனம் உலகில் இருக்கின்றது என்றால் அது தமிழினம்தான். டொக்டர் ஆகிட்டம் எஞ்சினீயர் ஆகிட்டம் நாங்கள் காட்டுமிராண்டியா என்று சிலர் எண்ணத்தோன்றும், மதம் சாதியத்தை தக்கவைப்பதில் இப்படியான படித்த முட்டாள்களின் பங்கே முதன்நிலையில் உள்ளது. தொழில்சார் அறிவு உள்ள காட்டுமிராண்டிகள் அவர்கள். ஆதலால் எல்லாச் சமூகமும் போட்டதுதானே நாங்களும் போட்டதுதானே என்று சொல்வது அபத்தம். ஏனைய சமூகங்கள் மாற்றத்தை சந்தித்த சமூகம் இது மாற்றத்தை மறுக்கும் உலகின் இழிவான சமூகம்.

 

அமைச்சரையும் நீங்கள் இழுத்துள்ளதால், அமைச்சரை போட்டுத்தள்ள பத்து பதினைந்து முறை முயற்சியெடுக்கப்பட்டு அதற்காக சில தற்கொலைதாரிகள் கூட உயிர்விட்டுள்ளார்கள். அமைச்சரின் பத்திரிகையாளர்கள் பத்திரிகை வித்தவர்கள் வாங்கியவர்கள் அரசியல் பேசியவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் போட்டுத்தள்ளப்பட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் அமைச்சர் எடுத்த ஆயுத நடவடிக்கை கடுகளவு ஏனையவர்கள் எடுத்தது மலையளவு. இருந்தபோதும் எல்லா சமூகங்களையும் அரவணைத்து யாழை தனது முத்திரையாக்கி சங்கிலிய மன்னர் சிலையை மீள நிறுவிய அமைச்சர யாழ்பாணத்தின் உண்மையான தற்போதைய மன்னராக விளங்குகின்றார். வெண்தாடி வேந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒரு மாணிக்கதாசனையோ, ஒரு ராசிக்கையோ, ஒரு புளட் மோகனையோ போட்டுத்தள்ளாமல் ஒரு போராட்டம் நடாத்தி இருக்க முடியுமா? நான் சொல்ல வந்ததை நீங்கள் தான் திசை திருப்பி நீங்கள் சொல்வதற்கு ஞாயம் கற்பிக்க முயல்கிறீர்கள்.
 
வெள்ளையர்கள்  கிறிஸ்தவமதத்துக்கு மாறும் படியும் இல்லாவிட்டால் கொலை செய்யார்வர்கள் எனில் இதன் மறுதலையும் உண்மையாகலாம் தானே.

 

 

 

 

2009 ற்கு பின்  சிறிலங்காவில் போட்டுத்தள்ளப்பட்ட தமிழர்கள் அனைவரும் கருணா,பிள்ளையான், டக்ளஸ், சிறிலங்கா ராணுவத்தால் 100% போட்டுத் தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.மாற்றங்கள் வேண்டவே வேண்டாம் என்பதில் குறியாக இருப்பவர்கள் யார் என உங்களுக்கு இப்போ சொல்ல தேவை இல்லை என நினைக்கிறேன்.

 

 

 

 

 

 

புலிகள் காலத்தில் இருந்த சாதிய கட்டுப்பாடு இப்போதும் எப்போதும் இல்லை என்பதை யாரும் அறிவார்கள்.அவர்கள் தற்போது இல்லாத சமயத்தில் புற்றீசல் போல் கிழம்பி சாதியத்தை யார் ஊதிப்பெருப் பிக்கிறார்கள் என்பது தெரியாத விடயம் அல்ல. அரசு ஊக்குவிக்கிறது என்பதற்கப்பால் உடந்தையாக செயற்படுபவர்களை என்ன செய்வது? இதற்கு டக்ளஸ் என்பவர் நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்து தானும் உடந்தையாவது மட்டுமில்லாமல் தான் தலித்துக்கு உதவுவது போல் நடித்து அவர்களின் வாக்கை பெறுவதே ஒரே ஒரு நோக்கம் என்பதையும் அறியாதவர்கள் இலர்.

 

 

 

 

 

அமைச்சரை போட்டுத்தள்ளுவது ஒரு புறமிருக்க அமைச்சரின் மக்கள் விடுதலை படை( என்ன ஒரு பெயர்)யில் இருந்த ராஸிக் என்பவர் தானாக இயங்கவில்லை. டக்ளஸால் இயக்கப்பட்டவர் என்பதும் ஏதோ டக்ளஸ் விவேகானந்தர் போல கதைப்பதும் கேலிக்குரியது.பத்திரிகையாளர் முதல் பாமர மக்கள் வரை உரிமை கோராமல் கொன்றவர்களில் முதன்மையானவர். புலிகளை காட்டிக்கொடுப்பதிலும் கொள்ளை வழிப்பறி என இன்னோரென்ன அட்டூளியங்களை இன்று வரை செய்து கொண்டு இருப்பவர் எப்போ எப்படி செத்தால் யாருக்கு என்ன கவலை?? .அது சரி என்ன திருப்பு முனை இவருக்கு ஏற்பட்டு ஆயுதத்தை கைவிட்டார் என கூறமுடியுமா?? ஆக அலன் தம்பதியை கடத்தி மொக்கயீனப்பட்டதும் :icon_mrgreen: காரைநகர்  கடற்படை தளத்தின் கடற்படையை கலைவு காட்டியதும் :icon_mrgreen:  இவரை ஆயுதப்போராட்டத்தை கைவிடச் செய்ததா??
  • கருத்துக்கள உறவுகள்

மன்னரில் கத்தோலிக்கரை கொலைசெய்ததே யாழ்ப்பான அரசின் முடிவின் ஆரம்பாகும்

 

Edited by poet

 

அமைச்சரை போட்டுத்தள்ளுவது ஒரு புறமிருக்க அமைச்சரின் மக்கள் விடுதலை படை( என்ன ஒரு பெயர்)யில் இருந்த ராஸிக் என்பவர் தானாக இயங்கவில்லை. டக்ளஸால் இயக்கப்பட்டவர் என்பதும் ஏதோ டக்ளஸ் விவேகானந்தர் போல கதைப்பதும் கேலிக்குரியது.பத்திரிகையாளர் முதல் பாமர மக்கள் வரை உரிமை கோராமல் கொன்றவர்களில் முதன்மையானவர். புலிகளை காட்டிக்கொடுப்பதிலும் கொள்ளை வழிப்பறி என இன்னோரென்ன அட்டூளியங்களை இன்று வரை செய்து கொண்டு இருப்பவர் எப்போ எப்படி செத்தால் யாருக்கு என்ன கவலை?? .அது சரி என்ன திருப்பு முனை இவருக்கு ஏற்பட்டு ஆயுதத்தை கைவிட்டார் என கூறமுடியுமா?? ஆக அலன் தம்பதியை கடத்தி மொக்கயீனப்பட்டதும் :icon_mrgreen: காரைநகர்  கடற்படை தளத்தின் கடற்படையை கலைவு காட்டியதும் :icon_mrgreen:  இவரை ஆயுதப்போராட்டத்தை கைவிடச் செய்ததா??

 

 

டாக்கியின் வலது கை வெள்ளவத்தையில் சங்கிலிகள் பல காலம் அறுத்து கையும் களவுமாக பிடிபட்டவன். 

 

இந்த கூட்டமே ஒரு கள்ள கூட்டம்.  அதில் டாக்கி பெரிய கள்ளன். பங்கு குடுத்தால் சரி, இவன்களுக்கு எம்மினத்தில் அக்கறை எங்கே. எல்லாம் வேஷதாரிகள்

வெந்தாடி வேந்தனின் கைத்தடிகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நீட்டி முழக்குவதில் கெட்டிக்காரர்கள்.

 

 

 

அமைச்சரை போட்டுத்தள்ளுவது ஒரு புறமிருக்க அமைச்சரின் மக்கள் விடுதலை படை( என்ன ஒரு பெயர்)யில் இருந்த ராஸிக் என்பவர் தானாக இயங்கவில்லை. டக்ளஸால் இயக்கப்பட்டவர் என்பதும் ஏதோ டக்ளஸ் விவேகானந்தர் போல கதைப்பதும் கேலிக்குரியது.பத்திரிகையாளர் முதல் பாமர மக்கள் வரை உரிமை கோராமல் கொன்றவர்களில் முதன்மையானவர். புலிகளை காட்டிக்கொடுப்பதிலும் கொள்ளை வழிப்பறி என இன்னோரென்ன அட்டூளியங்களை இன்று வரை செய்து கொண்டு இருப்பவர் எப்போ எப்படி செத்தால் யாருக்கு என்ன கவலை?? .அது சரி என்ன திருப்பு முனை இவருக்கு ஏற்பட்டு ஆயுதத்தை கைவிட்டார் என கூறமுடியுமா?? ஆக அலன் தம்பதியை கடத்தி மொக்கயீனப்பட்டதும் :icon_mrgreen: காரைநகர்  கடற்படை தளத்தின் கடற்படையை கலைவு காட்டியதும் :icon_mrgreen:  இவரை ஆயுதப்போராட்டத்தை கைவிடச் செய்ததா??

 

 

 

யாழ்பாண ராசதானியின் மாமன்னர் 28ம் ரெமிகிஸ் தானும் போட்டுத்தள்ளியிருப்பார் என்ற கருத்தில் இருந்து போட்டுத்தள்ளுவது குறித்தே எனது கருத்து சுட்டிக்காட்டப்படுகின்றது. மேற்கண்ட கருத்தில் போட்டுத்தள்ளுவதை ஒரு புறம் வைத்துவிட்டு வேறெங்கோ சுற்றி சுழன்று கேள்வி கேட்கப்படுகின்றது.

 

சரியான விடையின் கீழ் கோடிடுக

1- டக்ளசும் புலியும் தமிழர்கள். (முற்றுப்புள்ளி) இந்த இரண்டு தமிழ்குழுக்களில் தமிழ்மக்களை கொன்றது அவலப்படுத்தியது நிர்கதியாக்கியது யார் அதிகம்?

 

A- புலிகள், B - டக்ளஸ், C- இலங்கை அரசு, D- இந்திய அரசு.

 

2- தமிழ்மக்களை அதிகம் கொன்றது யார்?

 

 A- புலிகள், B - டக்ளஸ், C- இலங்கை அரசு, D- இந்திய அரசு.

 

இதற்குள் நாம் என்னத்தை மல்லுக்கட்டியும் விடையை மாற்ற முடியாது. புதிய கேள்விகளை உருவாக்குவதே சிறந்தது. புதிய கேள்விகளில் என்றாலும் எமக்குள் நாம் போட்டுத்தள்ளுவது குறித்த கேள்வி இல்லாமல் இருந்தால் நல்லது. அவ்வளவுதான் இங்கு சொல்லக்கூடியது.

 

(நான் கைத்தடி நீங்கள் கைப்புள்ள அவ்வளவுதான் வித்தியாசம்)

  • கருத்துக்கள உறவுகள்

3) ஆப்கன்களை அதிகம் கொன்றது யார்?

அ) அமெரிக்கப் படைகள்

ஆ) கனேடியப்படைகள்

இதையும் அமெரிக்காவில் ஒருதரம் கேட்டுப்பார்க்கலாம்.. :D

புது கேள்விகள்,

தொடர்ந்தும் தமிழரை துன்புறுத்துவது யார்? அவர்களோடு கைத்தடியாக கழிவோயில் வீசுவது எந்த குழு?

தமிழரை அதிகம் கொன்ற இலங்கை அரசுடனும்(300,000) கொஞ்சமா கொன்ற(9,000) இந்திய அரசுடனும் கைபுள்ளயாக இருந்தது(இருப்பது) எந்த குழு?

பத்து விகித கொலை பழியை போட்டாலும் உங்கள் வெந்தனும் அவரது கூலி சேனையும் 30,900 

தமிழரை கொன்றிருக்கிறார்கள்.

நீங்கள் தமிழரை பாதுகாப்பது என படங்காட்டுவது கொஞ்சம் உறுத்தகிறது.

கடைசியா ஒரு கேள்வி,  

மணல், மீன், பஸ், நிலம் என்று தமிழர் சொத்துகளை சுரண்டி உங்கள் வெந்தய ராசா பசில் சக்கரவர்த்திக்கு கப்பம் கட்டாவிட்டால் என்ன நடக்கும்?

 

சர்வதேசத் தேர்வில் இந்தக் கேள்விகள் வராது. இது யாழ்களத்துக்கான கேள்வி பதில். சரியான விடை சார்பான விடைகளுக்கு பச்சைப்புள்ளிகள் அவ்வளவுதான்.

 

பிரதானகேள்விகள் கேட்கப்பட்டு எழுதப்பட்டு விடுதலைப்போராட்டம் என்ற தேர்வில் படுதோல்வியடைந்து பயங்கரவாதமாகி மே 18 ல் முடிவுகளும் வெளியாகிவிட்டது. மறு தேர்வுக்கு இடமில்லை.

அதற்க்காக ஒட்டுக் குழுக்களின் கொலைகளை இரண்டகர்களின் மனித அழிப்பை யாரும் சரி என்று சர்வதேசமோ இல்லை தமிழ் இனமோ சான்றிதழ் கொடுக்கவில்லை நண்பரே

மன்னரில் கத்தோலிக்கரை கொலைசெய்ததே யாழ்ப்பான அரசின் முடிவின் ஆரம்பாகும்

 

படிகிடி எழுவதில் பயன் இல்லை. 

 

சரிதான் லோரன் சோடி அல்மெய்டா சிங்களவரை அடிமை படுத்திய விததை இனகே விவதத்திகாக எழுத முடியுமா?  பிலிமாத்தலவையும், எகிலபொலவும் கண்டி ராசியத்தை காட்டிக்கொடுத்த கதையை எழுத முடியுமா?

 

ஒரே ஒரு இராச்சியம் தன் சொந்தக் காலில் நின்று போத்துக்கிசரால் கொண்டுவரப்பட்ட சிங்கள கூலிப்படையுடன் போரிட்டு சுதந்திரம் இழந்த இராச்சியம் யாழ்ப்பாண இராச்சியம்.

கொலை செய்யபட்டவர்களை பற்றியும், மதம் மாறியவர்களை பற்றியும் பொய்யட்டால் சொல்லபடுவதும், போத்துக்கீசரால் எழுதி வைத்திருக்கபட்டதுமான சரித்திரங்கள் மட்டுமே உண்டு. இந்த சரித்திரமும் பொய்யட்டல் நம் கண் முன்னால் புலிகள் பற்றி எழுதப்படும் சரித்திரத்தின் இன்னொரு திரிப்பே. இவர்கள் எதற்காக மதம் மாறினார்கள், எதற்காக கொல்லப்பட்டர்கள் என்பது திரிக்கபட்ட சரித்திரம். இந்த பொய்யை  நிரூபிக்க  நெதர்லாண்டில் இருக்கும் ******, அரசிடமிருந்து தனது சொதுக்களை பாதுக்காக தானும் அப்படித்தான் கொலை செய்திருபேன் என அறிக்கை விடும்படி கேட்கப்பட்டிருக்கிறார். இதானால் சங்கிலியன் ஒரு மத வெறியன் மாதிரி கதை திரிக்க இந்த ***** உதவிக்கு போகிறார். இந்த***** மன்னர் ராஜபக்ஷ்சாவிடம் தனக்கு இராசியம் பேறத்துடிக்கிறார். வடமாகாணத்தேர்தலில்

சங்கிலியன் பக்கத்தால் எழுதபட்டகொலை தண்டணைக்கான காரணத்தை எனக்கு பொய்யட்டால் தர முடியுமா?

 

 

போதுக்கீசர் யாழ்ப்பாணத்தை வென்றது சிங்கள கூலிப்படைகளை வைத்து. ஆனால்  அவர்கள் கோட்டையை வென்றது எந்தப் படையும் இல்லாமல். போத்துக்கீசர் வெறும் மத மாற்றத்தை வைத்து கோட்டையில் அரசுரிமை பெற்றர்கள். இது யாழ்பாணம் வந்து மத மாற்றங்களை போத்துக்கீசர் ஆரம்பிக்க முதல் சங்கிலியன் தெரிந்து வைத்திருந்த உண்மை.  மற்றப்படி யாழ்ப்பானத்தில் அமெரிக்கன் மிசன் வலு இலகுவாக மத மாற்றங்களை செய்து வெற்றி கண்டதும் இன்று கிறிஸ்தவர்கள்தான் தமிழர்களில் பலமான தமிழ் நாட்டுக்கோரிக்கையை முன்னெடுக்கிறார்கள் எனபதும் தான் இந்த  நெதர்லாந்து ***** சங்கிலியன் செய்தது மத துவேச கொலை என்பதும் தானும் அப்படி செய்திருபேன் என்று மத துவேச கொலையை நியாபடுத்தும் அறிக்கையின் நோக்கமாகும்.

 

 

கோட்டையில் மதம் மாறியவர்கள் பற்றி நாம் போத்துக்கீசரால் எழுதி வைத்திருக்கும் சரித்திரம் பற்றி அறிவோம். இவர்கள் கோட்டையை போதுக்கீசருடன் பங்கு போட்டுகொள்ளவே மதம் மாறினார்கள். இது போலவே சங்கிலியனின் எதிரிகள்தான் முதலில் மதம் மாறினார்களா என்ற கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்க்க நெதர்லாந்து ***** தான் இன்னமும்  இந்து மதம் என்று மறைக்கிறார். ஆனால் அவரின் பரமபரை இந்துக்கள் இல்லை.. 

 

கோத்தாவால் வடக்கின் மான்னராக புகழப்பட்ட செயலாளர் நாயகம் பதவி பெறுவது சந்தேகமாக அரசால் கருதப்படும் நேரத்தில் அரசு இப்படி ஒருவரை களம் இறக்கி கூட்டமைப்புக்கு எதிராக தூண்டி விட்டிருக்கிறது. **************** *********

 

நியானி: கடுமையான பதம் ஒன்றும் ஊகத்தின் அடிப்படையிலான அவதூறு ஒன்றும் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

யாழ்பாண ராசதானியின் மாமன்னர் 28ம் ரெமிகிஸ் தானும் போட்டுத்தள்ளியிருப்பார் என்ற கருத்தில் இருந்து போட்டுத்தள்ளுவது குறித்தே எனது கருத்து சுட்டிக்காட்டப்படுகின்றது. மேற்கண்ட கருத்தில் போட்டுத்தள்ளுவதை ஒரு புறம் வைத்துவிட்டு வேறெங்கோ சுற்றி சுழன்று கேள்வி கேட்கப்படுகின்றது.

 

சரியான விடையின் கீழ் கோடிடுக

1- டக்ளசும் புலியும் தமிழர்கள். (முற்றுப்புள்ளி) இந்த இரண்டு தமிழ்குழுக்களில் தமிழ்மக்களை கொன்றது அவலப்படுத்தியது நிர்கதியாக்கியது யார் அதிகம்?

 

A- புலிகள், B - டக்ளஸ், C- இலங்கை அரசு, D- இந்திய அரசு.

 

2- தமிழ்மக்களை அதிகம் கொன்றது யார்?

 

 A- புலிகள், B - டக்ளஸ், C- இலங்கை அரசு, D- இந்திய அரசு.

 

இதற்குள் நாம் என்னத்தை மல்லுக்கட்டியும் விடையை மாற்ற முடியாது. புதிய கேள்விகளை உருவாக்குவதே சிறந்தது. புதிய கேள்விகளில் என்றாலும் எமக்குள் நாம் போட்டுத்தள்ளுவது குறித்த கேள்வி இல்லாமல் இருந்தால் நல்லது. அவ்வளவுதான் இங்கு சொல்லக்கூடியது.

 

(நான் கைத்தடி நீங்கள் கைப்புள்ள அவ்வளவுதான் வித்தியாசம்)

 

 

 

 

 
இன்றும் தமிழர்களை வதைக்கும் ஒட்டுக்குழு(க்கள்) எவை?
 
1 .ஈ.பி.டி.பி
 
2. புளட்
 
3.ரெலோ
 
4.ஈரோஸ்
 
கள்ள வாக்கு மூலம் தமிழ் மக்களை பேய்க்காட்டும் ஒட்டுக்குழுக்கள் எவை?
 
 
1 .ஈ.பி.டி.பி
 
2. புளட்
 
3.ரெலோ
 
4.ஈரோஸ்
 
சிறிலங்கா அரசபடைகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுப்பதும் சொத்துக்களை சூறையாடுவதும் பெண்களிடம் சேட்டை செய்பவர்கள் யார்?
 
1 .ஈ.பி.டி.பி
 
2. புளட்
 
3.ரெலோ
 
4.ஈரோஸ்
 
கேள்விகள் தொடரும். விடைகளை சண்டமாருதன் விரைவில் தருவார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.