Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசந்தம் தொலைந்த வாழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவளுக்குப் பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு எப்படி மறுப்புச் சொல்வது என எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிக அருகில் வந்தவன், அவள் முகத்தைக் கைகளால் பற்றி உதடுகளில் முதல் முத்தம் கொடுத்திருந்தான். அவளுக்கு வெலவெலுத்து விட்டது. அவனைத் தள்ளிவிட்டு அவன் கூப்பிடக் கூப்பிட வீடு வந்து சேர்ந்தவள், குலைப்பன் காச்சல் கண்டவர்போல் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.

 

முத்தங்கள் வெலவெலப்பாய் இருக்குமோ? :lol:

 

அப்பாடா, வாழ்கையில் கனக்க 'மிஸ்' பண்ணிப்போட்டம் போலத்தான் கிடக்குது! :o

 

நீங்கள் தொடருங்கோ, சுமே!

  • Replies 239
  • Views 17.6k
  • Created
  • Last Reply

தொடருங்கள் சுமே, மற்றவர்களுக்கு அறிவுரை செல்லும் நீங்களே நீண்ட இடைவெளிவிடலாமா? விரைவில் தொடரை முடித்துவிடுங்கள், நிம்மதியா திட்டிப்போட்டு போகலாம். முடிக்கும்வரை திட்ட முடியாமலிருக்கு

:lol:  

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கருமம் உதட்டில முத்தத்துக்கே குலப்பன் காச்சல் எண்டா போக போக மலேரியா வாந்தி பேதி எல்லாம் வர போது போல....

அது சரி இப்பிடி முத்தம் வாங்கிட்டு வந்து காச்சலால படுத்திருக்கிற பொண்ணுங்களையே பேய் பிடிச்சிட்டுது என்று வேப்பிலையால அடிக்கிறவை? :(:D

முத்தங்கள் வெலவெலப்பாய் இருக்குமோ? :lol:

அப்பாடா, வாழ்கையில் கனக்க 'மிஸ்' பண்ணிப்போட்டம் போலத்தான் கிடக்குது! :o

நீங்கள் தொடருங்கோ, சுமே!

அண்ணே ஸ்டில் it's நாட் டூ லேட் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தங்கள் வெலவெலப்பாய் இருக்குமோ? :lol:

 

அப்பாடா, வாழ்கையில் கனக்க 'மிஸ்' பண்ணிப்போட்டம் போலத்தான் கிடக்குது! :o

 

நீங்கள் தொடருங்கோ, சுமே!

 

நீங்கள் எல்லாம் வேஸ்ட் புங்கை. இனி ஒண்டும் செய்ய ஏலாது.

தொடருங்கள் சுமே, மற்றவர்களுக்கு அறிவுரை செல்லும் நீங்களே நீண்ட இடைவெளிவிடலாமா? விரைவில் தொடரை முடித்துவிடுங்கள், நிம்மதியா திட்டிப்போட்டு போகலாம். முடிக்கும்வரை திட்ட முடியாமலிருக்கு

:lol:  

 

திட்டுவது என்ற முடிவோடதான் இருக்கிறியள். :D

 

 

இதென்ன கருமம் உதட்டில முத்தத்துக்கே குலப்பன் காச்சல் எண்டா போக போக மலேரியா வாந்தி பேதி எல்லாம் வர போது போல....

அது சரி இப்பிடி முத்தம் வாங்கிட்டு வந்து காச்சலால படுத்திருக்கிற பொண்ணுங்களையே பேய் பிடிச்சிட்டுது என்று வேப்பிலையால அடிக்கிறவை? :(:D

அண்ணே ஸ்டில் it's நாட் டூ லேட் :D

 

எல்லாரும் உங்களை மாதிரி இருக்க முடியுமே சுண்டல்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

படம் போட முடியவில்லை சாந்தி மன்னிக்கவும்

சரி படம் வேண்டாம் கதை மிச்சத்தையும் தாங்கோ. :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                                     பகுதி 3

 

 

நினைக்க நினைக்க வசந்திக்கு எதோ செய்தது. இப்பிடிச் செய்து போட்டாரே. ஐயோ ஏதும் நடந்தால் நான் என்ன செய்வது. வெளியில தலை காட்ட முடியுமோ. அம்மாக்குத் தெரிஞ்சால் கொண்டே போட்டுடுவா. இதை ஆரிட்டைக் கேக்கிறது. என்ன செய்யிறது எண்டே தெரியேல்லையே எனத் தனக்குள் குழம்பித் தவித்துக்கொண்டு இருக்கும் போது, நாலாம் வீட்டு சாந்தா மூன்று மாதம் கர்ப்பிணியாய் இருந்தபோது படியால விழுந்து கர்ப்பம் கலைந்தது நினைவுக்கு வந்தது.

உடனே இவள் கிணற்றுக் கட்டில் ஏறி நின்று பலமுறை கீழே குதித்தாள். பலமுறை இருந்து எழும்பி அப்பியாசம் செய்தாள். இன்னும் நாலு நாட்கள் தான் இருக்கு. அது தாண்டினால்த்தான் நின்மதி என இவள் மனம் எண்ணியது. அந்த நான்கு நாட்களும் இவள் வசந்தனைப் பார்க்கவில்லை. ஒரு நாள் பார்க்காது இருக்க முடியாதவள் அவனைப் பார்க்கும் எண்ணமே அற்றவளாக நாட்களைக் கழித்தாள்.

வசந்தனோ ஒவ்வொரு நாளும் இவள் வருவாள் வருவாள் என தாம் சந்திக்கும் இடங்களிலெல்லாம் போய் வந்ததுதான் மிச்சம்.  அவளைக் காண முடியவில்லை. என்ன இவள், ஒரு முத்தம் இதுக்குப் போய் இப்பிடிக் கோவிச்சுக் கொண்டு  நிக்கிறாளே என எண்ணி, நான் பேசாமல் இருந்தால் இப்பிடியே விட்டுவிடுவாளோ என்னும் பயமும் சேர்ந்துகொள்ள, அவள் வீட்டுக்கே போய்ப் பார்ப்பது என்று முடிவெடுத்தான்.

அவன் ஏற்கனவே படிப்பிக்கச் சென்றதால் அவள் வீட்டினர் மட்டுமல்ல யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்று எண்ணியபடி  வசந்தியின் வீட்டை நோக்கி சென்றான். பூட்டியிருந்த படலையைத் திறந்துகொண்டு முற்றத்துக்குச் சென்றவன் சைக்கிளை நிப்பாட்டிவிட்டு வசந்தியின் பெயர் சொல்லி அழைத்தான். அவன் சென்றிருந்தபோது அவள் மட்டுமே வீட்டில் இருந்தாள். அவனின்
அழைப்புக் கேட்டதும் எப்படி விரைவாக வெளியே வந்தாள் என்றே அவளுக்குத் தெரியவில்லை.

தன்னைத் தேடி அவன் வந்திருப்பதே பரவசத்தைத் தர வாய் ஏன் வந்தீங்கள் என்று கேட்டது. என்ன நீர் ஒரு முத்தத்துக்கு இப்படிப் பயந்து ஒழிந்சால் நான் என்ன செய்யிறது. உம்மைக் காணாமல் நாலு நாளும் நான் என்ன பாடுபட்டன் எண்டு உமக்கு விளங்காது என்று பொரிந்து தள்ளினான்.

எனக்கு பீரியட் என்னும் வரேல்லை. வந்தால்த்தான் நின்மதி. உங்களுக்கென்ன என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம். அதை வரவேண்டாம் எண்டு நான் சொன்னனானோ என்றான் இவன் எரிச்சலுடன். தப்பித் தவறி நான் ப்ரெக்னெண்டா வந்தால் பிறகு தற்கொலைதான் செய்யவேணும் என்னும் அவளை இவளுக்கு தட்டிக்கிட்டிப் போட்டுதோ என்ற சந்தேகத்தில் பார்த்தவன், ஏன் உம்மை யாரும் கெடுத்துப் போட்டாங்களோ என்று இவன் கேட்க , செய்யிறதையும் செய்துபோட்டு தெரியாதமாதிரிக் கேட்காதைங்கோ. நீங்கள் தானே அண்டைக்கு வாயில கொஞ்சினனீங்கள், பிறகு ஒண்டும் நடக்காதமாதிரிக் கதைக்கிறீங்கள் என்று சொன்னவள் அழத்தொடங்க, அப்பத்தான் அவனுக்குப் பொறி தட்டியது. எடி விசரி கொஞ்சினால் பிள்ளை பிறக்காதடி. ஐயோ உன்னைக் கட்டிப்போட்டு நான் என்ன செய்யப்போறனோ தெரியாது எனத் தலையில் அடித்துச் சிரித்தவனை  இவள் ஒன்றும் விளங்காமல் பார்த்தாள். இதுக்கே நாலு நாளா  ஒளிச்சிருந்தனீர். பட்டிக்காடு, யாழ்ப்பாணம் போய்ப் படிச்சு என்ன புண்ணியம் என்றவனைப் பார்த்து அப்ப ஒண்டும் நடக்காதே எனக் கேட்டவளுக்கும் சிரிப்பு எட்டிப் பாத்தது.

பின்னேரம் கோயிலடிக்கு வாரும். உமக்கு உதைப்பற்றி வகுப்பெடுத்துப் போட்டுத்தான் மிச்ச வேலை என்றவன் நாலு நாளுக்கும் சேர்த்து இண்டைக்கு தரவேணும் என்றபடி சைக்கிளைத் தள்ளியபடி சென்றுவிட்டான். இவளுக்கு நினைக்கக் கூச்சமாகவும் இருந்தது. நல்ல காலம் இவர் இப்ப வந்தது. அல்லது யோசிச்சு யோசிச்சே எனக்கு வருத்தம் வந்திருக்கும் என எண்ணியபடி அவனை மாலை சந்திக்கும் நினைப்புடனே வீட்டுக்குள் போனாள்.

மலை அவன் குழந்தை பிறப்பது எப்படி என்று ஆரம்பிக்கவே, இப்ப ஒண்டும் வேண்டாம் கலியாணம் கட்டினபிறகு சொல்லுங்கோ என்று கறாராகச் சொல்பவளை சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். இன்னும் ஒரு கிழமையில ரிசல்ட் வந்திடும். பிறகு என்னையும் மறந்து யூனிவேசிற்றிக்குப் போவிடுவீர் என்ன என்றுவிட்டு அவளைப் பார்த்தான்.
எனக்கு நம்பிக்கை இல்லை. நான் வடிவாப் படிக்கேல்லை. நான் உங்களைக் கலியாணம் கட்டிக் கொண்டு இருந்தாக் காணும் என்றாள். நாங்கள் கலியாணம் கட்டுறதுதான். அதுக்காகப் படிக்கிறேல்லையே. வேலைவெட்டி இல்லாமல் நானும் இருக்கிறன். நீர் படிச்சு முடியும். நானும் ஏதும் வேலை எடுத்துவிடுவன். அதுக்குப் பிறகு கலியாணம் கட்டுவம். அதுதான் நல்லது என்றவன் கூற்றை ஆமோதிப்பதுபோல் தலையசைத்தாள்.

அடுத்தநாள் சந்திப்பைப் பற்றி இருவரும் திட்டமிட்டுவிட்டு வீட்டுக்குப் போனார்கள். அன்றுடன் அவர்கள் சந்தோசம் பறிபோகப் போவதை அவர்கள் உணரவில்லை.

தொடரும்....

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

Wall-of-Frustration-295x300.jpeg

 

என்னத்தை எழுதிறது, எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன், சுமே! :o

Edited by புங்கையூரன்

தொடருங்கள் சுமே, ஆவசிக்க மிக ஆவல்  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப யாழிலை ரமணி சந்திரனின்ரை ஸ்ரைல் கதையள் கூடவாய் இருக்கு .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கை, அலை,

மைத்திரேயி, எனக்கு ரமணிச்சந்திரன் கதைபோல் எழுத ஆசை இல்லை. இப்பிடியும் நடந்தது என்று காட்டவே எழுதினேன். பயம் வேண்டாம்.

 

Wall-of-Frustration-295x300.jpeg

 

என்னத்தை எழுதிறது, எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன், சுமே! :o

 

புங்கை  அண்ணா சுவத்துக்கு மற்ற பக்கம் வந்து பாருங்க நானும் இப்படித்தான் முட்டிக்கொண்டு நிக்கிறன். :D

எங்கே போய் முட்டுறது என்பதுக்கு அவசியமில்லாமல் பக்கத்திலேயே சுவர் இருந்தது எவ்வளவு வசதியாகபோயிட்டு  :lol:  :lol:

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்
எடி விசரி கொஞ்சினால் பிள்ளை பிறக்காதடி
அட இப்படி சனமும் அந்த காலத்தில இருந்திருக்கு.....காய் ...பேய்காய் இல்லை....
  • கருத்துக்கள உறவுகள்

புங்கை  அண்ணா சுவத்துக்கு மற்ற பக்கம் வந்து பாருங்க நானும் இப்படித்தான் முட்டிக்கொண்டு நிக்கிறன். :D

எங்கே போய் முட்டுறது என்பதுக்கு அவசியமில்லாமல் பக்கத்திலேயே சுவர் இருந்தது எவ்வளவு வசதியாகபோயிட்டு  :lol:  :lol:

நான் நினைச்சன், நீங்கள் ஏதோ, சாமி . கீமி, கும்பிடுறீங்கள் எண்டு! :D

 

statues-head-wall.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு சுமோ அக்கா.. நீங்கள் தொடருங்கள்..! சுவற்றில் தலையை முட்டும் புங்கையையும், பகலவனையும் பீரங்கிக்குள் போடுவம்.. cannonball.gif

 

:D

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சன், நீங்கள் ஏதோ, சாமி . கீமி, கும்பிடுறீங்கள் எண்டு! :D

 

statues-head-wall.jpg

 

அப்ப இரண்டு பேருமே சாமி கும்பிடவில்லையோ??

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு சுமோ அக்கா.. நீங்கள் தொடருங்கள்..! சுவற்றில் தலையை முட்டும் புங்கையையும், பகலவனையும் பீரங்கிக்குள் போடுவம்.. cannonball.gif

 

:D

 

நீங்களாவது  நெஞ்சில பாலை வார்த்தீர்கள் இசை நன்றி. :D :D

 

 

நன்றி புத்தன் வரவுக்கு.

 

நான் நினைச்சன், நீங்கள் ஏதோ, சாமி . கீமி, கும்பிடுறீங்கள் எண்டு! :D

 

statues-head-wall.jpg

 

என்ன புங்கை அண்ணா... நான் சுவரிலே முட்டுற படத்தை போடச்சொல்லி அனுப்பினால்,நான் பெண்கள் ஓய்வறையை எட்டிப்பார்க்கும் படத்தை போட்டுவிட்டீங்கள்.  :lol:  :lol:

 

 

 

கதை நல்லாயிருக்கு சுமோ அக்கா.. நீங்கள் தொடருங்கள்..! சுவற்றில் தலையை முட்டும் புங்கையையும், பகலவனையும் பீரங்கிக்குள் போடுவம்.. cannonball.gif

 

:D

 

 

ரொட்டி சுட்டுக்கொண்டிருந்த இசை எப்போ பீரங்கி சுட தொடங்கினீங்க.? :icon_idea:

இசை கட்டுறது தான் உங்க வேலை இடிக்கிறது எங்கட வேலை.  :D

எதையும் பேசி தீர்க்கலாம் எதுக்கு வன்முறை  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Wall-of-Frustration-295x300.jpeg

 

என்னத்தை எழுதிறது, எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன், சுமே! :o

சரி சரி காணும் தலையை எடுங்கோ வீணா உடைபடப்போறீங்கள். :lol:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புங்கை அண்ணா... நான் சுவரிலே முட்டுற படத்தை போடச்சொல்லி அனுப்பினால்,நான் பெண்கள் ஓய்வறையை எட்டிப்பார்க்கும் படத்தை போட்டுவிட்டீங்கள்.  :lol:  :lol:

 

எட்டிப்பாக்கிற கண்ணுக்கு இதுதான் பரிசு.

gun.gif

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 4

 

 

அடுத்து மூன்று நாட்கள் வசந்தி அவர்கள் சந்திக்கும் இடத்துக்குப் போய் காவலிருந்ததுதான் மிச்சம். வசந்தன் வரவில்லை. நான் வராமல் இருந்ததுக்கு எனக்குத் திரும்பச் செய்கிறாரோ என்று எண்ணியவள் நாலாம் நாளும் கடந்ததும் தான் எதோ பிரச்சனை என்ன நடந்துதோ அவருக்கு என எண்ணியவள். என்ன செய்யிறது எனத்தெரியாது தவித்தாள். வேறு வழியில்லை. தன் கடைசித் தங்கையிடம் கடிதம் ஒன்று எழுதி வசந்தனுக்குக் கொடுத்து விட வேண்டியதுதான் என எண்ணி தாமதிக்காது எழுதி முடித்து, அதை ஒரு கொப்பியின் கவருக்குள் வைத்து ஒட்டி, தங்கையைக் கூப்பிட்டு வசந்தன் மாஸ்ரரிட்டைக் கொண்டுபோய் குடுத்துட்டு வாங்கோ என்றதுமல்லாமல் ஆரிட்டையும் சொல்லக் கூடாது என்று சொல்லி ஒரு ரூபாவும் கொடுத்தவுடன் தங்கையும் மகிழ்வுடன் இவள் கொடுத்த கொப்பியுடன் ஓடிப் போனாள்.

தங்கை போட்டு வர எப்பிடியும் பதினைந்து நிமிடங்கள் ஆகும். அதுவரை பொறுமையிழந்து வாசலுக்கும் வீட்டுக்குமாக இவள் நடந்ததை தாய் கவனித்துவிட்டார். என்ன வசந்தி அங்கயும் இஞ்சையும் ஓடித்திரியிறாய் ஏதும் பிரச்சனையோ என்றதும் ஒன்றுமில்லை அம்மா என்றுவிட்டு உள்ளே சென்று அமைதியாய் இருக்க முனைந்தாள். முடியவில்லை. கடவுளே அவருக்கு ஒன்றும் ஆகி இருக்கக் கூடாது என்றுவிட்டு எதுக்கும்  சிவாய நாம என்று கொப்பியில் ஆயிரம் முறை எழுதுவம் என முடிவெடுத்து எழுதவும் தொடங்கினாள்.

நூறு, இருநூறு, முந்நூறு என்று நானூறை நெருங்கும் நேரம் படலை வேகமாகத் திறக்கப்பட்டு முருகேசு முருகேசு என யாரோ இவள் தந்தையை உறுக்கும் சத்தம் கேட்டது. இவள் தந்தைக்கு ஊரிலுள்ளவர்களிடம் மதிப்பு இருந்தது. அவரை முருகேசர் என ஒரு அன்போடுதான் கூப்பிடுவார்களே தவிர இதுவரை அவரை இப்படிக் கோபமாக ஒருவரும் அழைத்ததில்லை. யாரென எட்டிப் பார்த்தவளுக்கு நெஞ்சு ஒருகணம் நின்று பின் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. வசந்தனின் தந்தை இவளின் தங்கையைக் கையில் பிடித்தபடி கோபத்தோடு நின்றுகொண்டிருந்தார். இவள் உடனே தன் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

அவரின் சத்தம் கேட்டு குசினிக்குள் இருந்த தாய் யோசனையோடு வெளியே வந்தார். பிள்ளையளைப் பெத்தா ஒழுங்கா வழக்கத் தெரியவேணும். ஓசியில மாப்பிளை பிடிக்க நீங்களே சொல்லிக் குடுத்துத் தான் வளக்கிறியளாக்கும். அதுக்கு என்ர மகன் தானோ கிடைச்சுது. வேறை ஆற்றையன் பிள்ளையைப் பாருங்கோ என அவர் போட்ட சத்தத்தில் தாய் கூனிக் குறுகி நின்றார். மெதுவாக் கதையுங்கோ அயலட்டை ஆட்களுக்குக் கேட்கப் போகுது என தாய் மெதுவாகக் கெஞ்சுவதுபோல் சொல்வது இவளுக்குக் கேட்டது. உன்ர மேள் என்ர மகனுக்கு இந்தச் சின்னனிட்டை கடிதம் குடுத்து விட்டிருக்கிறாள். நாலு நாளுக்கு முந்தி ரண்டுபேரும்  கோவிலடியில கதைத்துக்கொண்டு நிண்டதைக் கண்டு நான் அவனுக்குப் புத்திசொல்லி வச்சிருக்கிறன். என்ர மகன்ர பக்கம் உன்ர பிள்ளையைத் தலை வைத்துப் படுக்க வேண்டாம் என்று சொல்லு என்றுவிட்டு மீண்டும் படலையை அடித்துச் சாற்றுவதன் மூலம் தன கோபத்தை வெளிப்படுத்தியதாக எண்ணி அவர் சென்றுவிட்டார். ஸ்தம்பித்துப் போய் நின்ற தாய் அவர் சென்றதும் தங்கையிடம் கடிதத்தை வாங்கிப் பார்த்தவர் கோபத்துடன் உள்ளே வந்தார்.

என்ன இதெல்லாம். படிக்கிற பிள்ளை என்று உன்னை நாங்கள் தலையில தூக்கி வச்சுக் கொண்டாட நீ  என்ன வேலை செய்திருக்கிறாய். இத்தனை நாளா மானத்தோட இருந்தனாங்கள்  இனி எப்பிடி ரோட்டால போறது. நீ கேட்டதும் இல்லாமல் அந்தாஹ் சின்னனைத் தூது விடுறியோ??அந்த மனிசன் கத்தின கத்தில இப்ப அயலட்டைச் சனங்களுக்கு விளங்கியிருக்கும். ஐயோ நான் என்ன செய்யிறது என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அழ வசந்தி, அம்மா என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ என வசந்தியும் சேர்ந்து அழ, பார்த்துக் கொண்டு நின்ற தங்கை தந்தையைக் கூப்பிட ஓடுகிறாள்.

தாய் அடித்திருந்தாலாவது பரவாயில்லை. இவளை மேற்கொண்டு எதுவுமே கேட்காமல் இவள் கிட்டப் போனபோது என்னைத் தொடாதை போ அங்காலை என்றது,  தீ சுட்டதுபோல் வலி தந்தது. அவள் ஒன்றும் சொல்லாது அழுதபடி தன் அறைக்குள் சென்று முடங்கினாள். அம்மா எழுந்து செல்லும் சத்தம் கேட்டது. இரண்டு திட்டுத் திட்டிவிட்டால் எல்லாம் சரியாகியிருக்கும். ஆனால் எதுவும் கூறாது இருப்பது அவளின் மூளையை மரக்கச் செய்தது. அப்பா ஒரு நாளும் அவளைத் திட்டியது கூட இல்லை. இன்று வந்து என்ன சொல்வாரோ என யோசனை ஓடியது. வசந்தன் வீட்டில் அவருக்கு என்ன சொன்னார்களோ என்ற யோசனையினூடு வசந்தனாக இன்னும் இவளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்பதும் கேவலை உண்டாக்க சத்தம் வெளியே வராது சிறிதுநேரம் அழுதாள். வசந்தனை எப்பிடியாவது சந்திக்கவே வேணும். என்ன செய்வது யாரின் உதவியை நாடுவது என எவ்வளவு யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

படலை மீண்டும் திறக்கப்பட வருவது தந்தை தான் என ஊகித்தவள் நெஞ்சத் துடிப்பு அதிகரிப்பதை உணர்ந்து நெஞ்சில் கைவைத்து அழுத்திப் பிடித்தாள். வீட்டுக்குள் அப்பா வந்துவிட்டார் என என்னும்போதே வசந்தி என்ற கண்டிப்பான குரலும் உங்கட அருமை மேளைச் செல்லம் குடுத்து குட்டிச் சுவராக்கினதுதான் மிச்சம். கண்டவன் வந்து வாசல்லில கத்த வச்சிட்டாள் என்ற அம்மாவின் சொல்லம்பு தைக்க இவள் மெதுவாக வந்து கதவோடு ஒண்டியபடி நின்றாள்.

தாய் வசந்தனின் தந்தை வந்து கூறிவிட்டுப் போனவற்றை எல்லாம் சொல்லி ஐயோ இனி என்னெண்டு நான் ரோட்டால போறது. குடும்ப மானமே போச்சு என்றதும்  நீ பேசாமல் இரு என்று தாயை அடக்கிவிட்டு, இஞ்ச பாரம்மா வசந்தி நான் மற்றவை மாதிரி உன்னைத் திட்ட மாட்டன். எதோ எங்கட கெட்ட காலம் இப்பிடிக் கேட்கவேண்டியதாப் போச்சு. இண்டையோட எல்லாத்தையும் மறந்துபோட்டு படிப்பில கவனத்தை வையம்மா. கல்வி எனக்குத்தான் இல்லை. என்ர பிள்ளைக்கு ஆண்டவன் குடுத்திருக்கிறார் எண்டு சந்தோசப்பட்டன். அந்த சந்தோசம் நீடிக்கிறது உன்ர கையில்தான் இருக்கு. இதுக்கு மிஞ்சி நான் ஒண்டும் சொல்ல ஏலாது என்று விட்டுப் போய்விட்டார். நான் நினைத்த அளவு ஒன்றும் இல்லை என்று இவள் மனம் நின்மதியானது மட்டுமன்றி மீண்டும் மனம் வசந்தனை எப்படித் தொடர்பு கொள்ளலாம் எனச் சிந்திக்கத் தொடங்கியது.


தொடரும்...............

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

ம்ம்.... தொடருங்க.  மிச்சம் 2 கிழமையால் தானே எழுதுவியள், நாங்களும் வாசிக்க ஆவலாக்கும் :D பிறகு வந்து பச்சை குத்திறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான தந்தை.. இனிமேலாவது மடத்தனத்தைக் கைவிடுவாரா வசந்தி? :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பக்கம் நாங்களும் வரலாமா? அடல்ஸ் ஒன்லி படம் மாதிரி கதை ஓடிட்டு இருக்கு..... இபிடியான கில்மா க்களையும் உங்க கதையில சேர்ப்பது தான் உங்கள் தனித்துவம் சுமே ஆன்டி ....ஆனாலும் கொஞ்சம் விரிவா எழுதிநிங்கள் எண்டா இன்னும் நல்லம்....:D

  • கருத்துக்கள உறவுகள்

மகள் திருந்துவாள் எண்டு, தன்ர கௌரவத்தையும் பற்றிக் கவலைப்படாமல், ஆறுதல் படுத்திவிட்டுத் தகப்பன் வெளிய போக முந்தியே, வசந்தனைப் பார்க்கிறதுக்குத் திட்டம் போடுற மகளை நினைக்கப், பாவம், தகப்பன் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது! :o

 

தொடருங்கள், சுமே! :D

  • கருத்துக்கள உறவுகள்

வசந்திக்கு வயித்தில வசந்தனின்ட பிள்ளையை வேண்டின பிறகு தான் அறிவு வரும் :(

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.