Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசந்தம் தொலைந்த வாழ்வு

Featured Replies

எப்படி அம்மா  இந்த எழுத்து நடை....... 

 எனக்கு பொறாமையா இருக்கு கதை எழுதுவம் என்று இருந்தா கொஞ்சம் எழுதிப்போட்டு மூடி வைச்சுட்டு போறதை தவிர முடியவில்லை. 

கதை சூப்பர் அம்மா 

காத்திருக்கிறேன்.....................

  • Replies 239
  • Views 17.6k
  • Created
  • Last Reply

தொடருங்கள் சுமே....

 



Quote:"இண்டையோட எல்லாத்தையும் மறந்துபோட்டு படிப்பில கவனத்தை வையம்மா. கல்வி எனக்குத்தான் இல்லை. என்ர பிள்ளைக்கு ஆண்டவன் குடுத்திருக்கிறார் எண்டு சந்தோசப்பட்டன். அந்த சந்தோசம் நீடிக்கிறது உன்ர கையில்தான் இருக்கு. இதுக்கு மிஞ்சி நான் ஒண்டும் சொல்ல ஏலாது என்று விட்டுப் போய்விட்டார்"

 

அடித்து திருந்த ஒன்றும் குழந்தையல்ல. சிலரை திருந்தவே முடியாது, சூடுபடனும்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களே இப்பிடி பொம்பிளையளை குறைச்சு எழுதலாமே ?? ஆனால் இப்பிடித்தான் கதை எழுதினால் எடுபடுதோ தெரியேலை . உங்கடை கதைக்கு வாழ்த்திறன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த நண்பி அலை, இசை, புங்கை, வந்தி, சுண்டல், ரதி, நேற்கொழுதாசன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

 



எப்படி அம்மா  இந்த எழுத்து நடை....... 

 எனக்கு பொறாமையா இருக்கு கதை எழுதுவம் என்று இருந்தா கொஞ்சம் எழுதிப்போட்டு மூடி வைச்சுட்டு போறதை தவிர முடியவில்லை. 

கதை சூப்பர் அம்மா 

காத்திருக்கிறேன்.....................

 

தன்னடக்கம் என்பது இதுதான். உங்கள் கதைகளை நான் வாசித்துள்ளேன்.

 



நீங்களே இப்பிடி பொம்பிளையளை குறைச்சு எழுதலாமே ?? ஆனால் இப்பிடித்தான் கதை எழுதினால் எடுபடுதோ தெரியேலை . உங்கடை கதைக்கு வாழ்த்திறன் .

 

நான் உள்ளதை உள்ளபடி எழுதுபவள். பெண்ணாக இருப்பதனால் இப்படி எழுதக்கூடாது என்று இல்லைத்தானே மைத்திரேயி. இது உன்மைச் சம்பவம் என்பதால் என்னால் என் விருப்பத்துக்கோ அல்லது உங்கள் விருப்பத்துக்கோ எழுத முடியவில்லை.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பகுதி 5

வசந்தி எப்படி வசந்தனைச் சந்திப்பது என யோசித்துப் பார்த்தாள். அவள் சிந்தனைக்கு எதுவுமே எட்டவில்லை. எத்தனை மகிழ்வாய் போய்க்கொண்டிருந்தது வாழ்வு. நேற்றுவரை இப்படியாகுமென அவள் கனவில் கூட நினைக்கவில்லையே. தந்தையை நினைக்கப் பாவமாகத்தான் இருக்கு. அதுக்காக நான் வசந்தனை மறக்க முடியுமோ? என மனம் எண்ணியது. அவளுக்கு நெருக்கமான நண்பிகள் கூட இல்லை. அல்லது அவர்களிடமாவது தன் உள்ளக் கிடக்கையைப் பகிர்ந்து கொள்ளலாம். இது தனியே என்ன செய்வது? ஒரே ஒரு முறை அவனைச் சந்தித்துவிட்டால் போதும். அதன்பின் எல்லாவற்றையும் அவனே பார்த்துக்கொள்ளுவான் என்று என்னும்போதே அவன் என்னை எந்த வழியிலாவது  தொடர்புகொள்ள முயற்சித்துக் கொண்டு இருக்கிறானோ அல்லது பெற்றோர் சொல்லைக் கேட்டு பேசாதிருக்கிறானோ  என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென நினைவில் வந்தவர் தேவகி அக்கா.

அவரை இவளுக்குப் பிடிக்கும். அவருக்குக் கூட  இவளைப் பிடிக்கும் என்பதை அவர் இவளைப் பார்த்து வாஞ்சையுடன் சிரிக்கும் சிரிப்பிலிருந்து அறிந்து கொண்டுள்ளாள். ஆனால் இருவரும் பெரிதாகக் கதைத்ததில்லை. வீட்டினரை எதிர்த்து காதல் மணம் செய்து
கணவனுடன் தனியாக மகிழ்வாக வாழ்கிறார். முன்பு கிட்டவும் சேர்க்காத பெற்றோரும் உறவினரும் அவருக்கு குழந்தை பிறந்ததும் எல்லாம் மறந்து ஒன்றாகிவிட்டனர். அவர்தான் சரியான ஆள். என் நிலையைப் புரிந்துகொள்ளக் கூடியவர். ஆனால் எப்படி அவரின் வீட்டுக்குச் செல்வது? என்னை வீட்டில் பூட்டி வைக்கவில்லைத்தான். ஆனால் வெளியே போகிறேன் என்றதும் எங்கே போறாய் என அம்மாவிடம் இருந்து கேள்வி வரும். தேவகி அக்காவிடம் என்று கூற முடியாது. கோயிலுக்கும் போக முடியாது. இத்தனைக்கும் ஊரெல்லாம் இவள் கதை பரவி ஆளாளுக்குக் குசுகுசுத்துக்கொண்டு இருப்பர். சரி இன்னும் பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு வாரம் இருக்கவேண்டியதுதான். அடுத்த வாரம் பரீட்சைப் பெறுபேறுகள் வருகின்றன. அதைப் பார்க்கப் போகும் சாட்டில் தேவகி அக்கா வீட்டுக்கும் போய்வரவேணும் எனத்  தீர்மானித்தவள் தான் சாதாரணமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டாள்.

ஆனால் அம்மா இவளுடன் முன்புபோல் கதைப்பது நின்றுவிட்டிருந்தது. அது அவள் மனதை வேதனைப் படுத்தினாலும், வசந்தனின் பிரிவு தந்த வேதனை அதை வென்றதால் இவள் அவன் நினைவிலும் தவிப்பிலும் தாய் தந்த வேதனை மறந்தாள். இவளுக்குக் கீழே இரு சகோதரிகள். இருவரும் கூட முன்புபோல் தன்னிடம் கதைத்துச் சிரிப்பதில்லை என்னும் எண்ணம் தோன்ற, நான் கூட இந்தப் பிரச்சனைக்குப் பிறகு யாருடனும் வலியப் போய் கதைப்பதில்லைத் தானே என தன்னைத்தானே தேற்றியும் கொண்டாள்.

அந்த நாளும் வந்தது. இவள் காலை ஏழு மணிக்கே எழுந்து வெளிக்கிட, அம்மா என்ன இப்பவே வெளிக்கிட்டிட்டாய் என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தார். கனநாள் பள்ளிக்கூடம் போகேல்லை. எல்லாரும் வெள்ளன வருவினம் அதுதான் என்று இழுத்தவளை சரி போனமா ரிசல்றைப் பாத்த்தமா என்று வந்திடவேணும் என ஒரு கண்டிப்புடன் கூறிவிட்டுச்  சென்றுவிட்டார். இவளுக்கு மனதில் திடீரென ஒரு சந்தோசம் எட்டிப் பாத்தது. நான் இன்று எப்படியும் பள்ளிக்குப் போவேன் என நினைத்து வசந்தும் வருவாரோ என நினைக்கையிலேயே மனம் படபடத்தது.

ஒருமுறை இவளை வியப்பில் ஆழ்த்த அவன், இவள் பள்ளி முடிந்து வெளியே வர பள்ளிக்கு முன்னால் சைக்கிளுடன் நின்றிருந்தான். இவளுக்கு சந்தோசத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. யாராவது பார்த்துவிடுவார்களோ என்னும் பயம் ஒருபுறமும் அவனுடன் பள்ளியின் முன்னால்  நின்று கதைக்க முடியாது என்ன செய்வது என யோசனையுடன் அவள் நிக்க அவனோ சிரிப்புடன் வசந்தி யோசிக்காமல் கெதியா சயிக்கிள்ள ஏறும் என்று சயிக்கிளை அருகில் கொண்டுவந்து நிறுத்தினான். இவளுக்கு முன்னால் ஏறி இருக்க ஆசை இருந்தாலும் பயத்தில் பின் இருக்கையில் அமர்ந்து தலையை யாரும் பார்க்காது குனிந்து கொண்டாள்.
என்னத்துக்கு பள்ளிக்கூடத்துக்கே வந்தனீங்கள். யாராவது பாத்தால் வீட்டை சொல்லிப் போடுவினம் என அவனுக்கு மட்டும் கேட்கும்படி முனுமுனுத்தாள். எங்கட ஊரில இருந்து உம்மை விட யார் வாறவை இங்க படிக்க. நீர் போய்ச் சொன்னாலொழிய ஒருத்தரும் சொல்ல மாட்டினம். நான் வேறை ஒரு அலுவலாய் வந்தனான்.கையோட  உம்மையும் கூட்டிக் கொண்டு போவம் என்று உம்மட்டை வந்தனான் என்றான். அவனோடு சைக்கிளில் செல்வது மகிழ்வாகத்தான் இருந்தது. கொஞ்சத்தூரம் சென்றதும் அவன் அவளை இறங்கி முன்னால் வந்து இருக்கும்படி கேட்டான். அவளுக்கு பயமாகவும் ஆசையாகவும் இருந்தது. பின் பயத்தை ஆசை வென்றது. இவர்களின் ஊருக்கு முதல் ஊரில் உள்ள தரிப்பிடத்தில் இறக்கிவிட்டு அவன் சென்றதை எத்தனைநாள் மனதுள் மீட்டு மகிழ்ந்திருக்கிறாள். இன்று தேவையற்று இந்த நினைப்பு ஏன் வந்து தொலைத்தது என எரிச்சலுடன் எண்ணினாலும் அவன் இன்று வருவான் என்னும் நம்பிக்கையில் எரிச்சல் சற்றுக் குறைய, தரிப்பிடம் சென்று பேருந்துக்காகக் காத்திருந்தாள்.

பள்ளி செல்லும் வரை ரிசல்ஸ் எப்படி வருமோ என்னும் எண்ணத்திலும் பார்க்க வசந்தன் பற்றிய நினைவே ஓடியதில் யாழ்ப்பாணம் வந்ததுகூடத் தெரியவில்லை. பள்ளியில் மற்றைய மாணவிகள் ரிசல்ஸ் பற்றிய பதைப்புடன் வெள்ளனவே  வந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் வசந்தனின் நினைப்பு தூரப் போக, இப்பதான் ஓரளவு அவள் பெறுபேறுகள் எப்படி வருமோ என யோசனை ஓடியது. ஆளாளுக்கு தமக்கு அப்படிவரும் இப்படிவரும் என கூறினர். இவளுக்கு எதுவென்றாலும் கெதியா வந்து தொலையட்டும் என்னும் மனநிலையே இருந்தது.

நேரம் நெருங்க நெருங்க எல்லோரும் ஒருவித படபடப்புடம் காத்திருந்தனர். தலைமை ஆசிரியரின் அறையின் முன் எல்லோரும் நின்றாலும் அவர்கள் கூப்பிடும் வரை யாரும் உள்ளே போக முடியாது தவிக்க இவளின் பெயர் ஆறாவதாக அழைக்கப்பட்டது. இவளுக்கு 1B, 3C. பல்கலைக்கழக அனுமதி கடினம் என எண்ணியவளுக்கு தன்மீதே கோபம் வந்தது. கொஞ்சம் கவனமாகப் படித்திருக்கலாம் என்னும் எண்ணமும் அப்பா என்ன சொல்லுவாரோ என்ற எண்ணமும் மேலோங்க சோர்ந்துபோய் அவ்விடத்தை விட்டகன்றாள். வெளியே வந்ததும் மற்றவர் சூழ்ந்துகொண்டு இவள் பெறுபேறுகளை அறிய முனைப்புக் காட்டினர். இவள் ஆர்வமின்றி கேட்டவர்களுக்கு எல்லாம் உள்ளபடி கூறிவிட்டு, மற்றவரின் பெறுபேறுகளை அறியும் ஆர்வம் கூட எழாதவளாய்  பேருந்துத்  தரிப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

தொடரும் ..........
 
 



 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. காதல் படுத்தும் பாடு.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி இசை. :rolleyes:

ம்ம்...................... தொடருங்கள் சுமே, வாசிக்க ஆவல்  :D



உது தான் சொல்லுறது படிக்கிற காலத்தில் காதலில் விழக்கூடாது எண்டு, யாரப்பா கேக்கினம் :D



நீங்கள் உங்கட கதையையும் எழுதுங்கோ சுமே வாசிக்க ஆவல் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ல இருந்து இந்த பள்ளிகூடத்துக்கு உங்களை தவிர யார் வாறவை எண்டு கேக்கிறதா பாத்தால்.... இணுவிலில் இருந்து வேம்படிக்கு போன சுமே அக்காவ தான் யாபகம் வருது....... அப்ப இது உங்க கதையா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேம்படிக்கு சுற்றிவர எத்தனையோ ஊர்கள் இருக்குச் சுண்டல். அதோட இத்தனை சீக்கிரம் என் கதையை எழுதிவிடுவேனா??? :D :D

அத்துடன் என்கதை இதுபோல் சோகமானது இல்லை. நன்றி வருகைக்கு.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காதல் மிகவும் வலிமையானது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், தாய், தந்தை, தங்கைகள் போன்ற அனைத்து உறவுகளையும் தூக்கியெறியும் அளவுக்குப் போகுமெனின்,
அது ஒரு வெறி நிலைக்குச் சென்றுவிட்டது என்பதே எனது எண்ணமாகும். ஆனால், கதை இதுவரையும், ஒரு விதமான உடல் தொடர்பான பாலியல் கவர்ச்சியே இருவருக்கும் இடையில் உள்ளது போல நகர்ந்து  செல்கின்றது. ஒருவேளை, வசந்தி சுயநலவாதியா, அல்லது அவளது காதல் அவளது சிந்தனைகளைக் கட்டிப்போடுகின்றதா என்பது எனக்குப் புரியவில்லை. உங்கள் கதை, பதில் சொல்லும் என எதிர்பார்க்கின்றேன். தொடருங்கள், சுமே!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி புங்கை.

 

என்னப்பா சுமே எங்க மிச்சக் கதை??

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா சுமே எங்க மிச்சக் கதை??

வரும் அதுவரை பொறுமை மச்சி பொறுமை. :lol:

 

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 6

பேருந்துத் தரிப்பிடத்தில் வந்து அதிலிருந்த இருக்கையில் அமர்ந்து வசந்தன் வருவான் எனக் காத்திருக்க ஆரம்பித்தாள் வசந்தி. வாகனங்கள் வீதியால் போய் வந்துகொண்டிருந்தனவே அன்றி வசந்தனைக் தான் காணவில்லை. பேருந்துகளும் மாறிமாறி வந்து நேரம் இரண்டு மணித்தியாலங்கள் கடந்தும் போனது, அவன் இனி வர மாட்டான் என்பது மனதில் ஒரு சோர்வை உண்டாக்க வேறு வழியின்றி வந்த பேருந்தில் ஏறி அமர்ந்தவள் போகும் போது தேவகி அக்காவைப் பார்த்துவிட்டுத் தான் போவது என  முடிவெடுத்தாள்.

பேருந்து மெதுவாக நகர்வதுபோல் இருந்தது. அவன் ஏன் வரவில்லை என்னும் கேள்வி மலையாய் அவளை அழுத்த மனதோடு சேர்ந்து மொத்த உடலும் சோர்வடைந்தது. அவன் அவளுக்காக பலமுறை யாழ்ப்பாணம் வந்தவன்தான். அவனுடன் சேர்ந்து காதல் வெற்றிபெற வேண்டும் எனத் துர்க்கை அம்மன் கோயிலுக்கு நேர்ந்து அவனோடு அங்கு மிதியுந்தில் சென்றதும், அவனோடு சுற்றுவதற்காகவே ஒவ்வொரு கோயிலாகச் சென்றதும் இருவரும் ஒவ்வொரு முறையும் சுபாஸ் கபேயில் ஐஸ்கிறீம் உண்டதும் நேற்றுப்போல் அவளுக்கு நினைவில் நிற்கையில் அவனுக்கு மட்டும் எல்லாம் மறந்துவிட்டதோ என்னும் ஐயமும் அவளுக்கு எழுந்தது.

தங்கள் ஊர் வந்ததும் பேருந்தை விட்டு இறங்கி தேவகி அக்காவின் வீட்டை நோக்கிச் சென்றவள் வாசலை அடைந்ததும் அக்கா அக்கா என இருமுறை அழைத்தாள். இவள் குரல் கேட்டு வெளியே வந்த தேவகி ஆச்சரியத்துடன் என்ன வசந்தி அதிசயம் என்ர வீட்டுக்கு வந்திருக்கிறியள். உள்ளே வாங்கோ என மகிழ்வுடன் அழைத்தார். இண்டைக்கு ரிசல்ட் வந்ததாக்கும். நல்ல ரிசல்டே உங்களுக்கு என ஆவலாக விசாரித்தவர், வசந்தியின் முகவாட்டம் கண்டு என்ன பிரச்சனை வசந்தி என்று முடித்தார். நல்ல ரிசல்ட் இல்லை அக்கா. B 3C யூனிவேசிட்டி போறது கஷ்டம் என்று கூறித் தலை குனிந்தாள். சரி கவலைப் படவேண்டாம் வசந்தி. இன்னும் ஒருதரம் எடுக்கலாம் தானே என ஆறுதல் கூறிவிட்டு இன்னும் வீட்டை போகவில்லையோ? உங்கட அம்மா அப்பாக்கு ஏமாற்றமாத்தான் இருக்கும். சரி மனதைத் தளர விடவேண்டாம் என்று அவர் முடிக்க முதலே அதில்லை அக்கா உங்களிட்டை முக்கியமான கதை ஒன்று கதைக்க வேணும் என்று இழுத்தாள். தயங்காமல் சொல்லுங்கோ என்ன விசயம் என்றதும், தன் பிரச்சனையை சொல்லி வசந்தனை பார்க்கவே முடியவில்லை. நீங்கள் ஒருக்கா அவரோட கதைக்கிறியளோ அக்கா என்று கெஞ்சுவது போல் இவள் கேட்ட விதம் தேவகியை சம்மதிக்க வைத்தது.

மேற்கொண்டு தேவகி கேள்விமேல் கேள்வி கேட்கவில்லை. இவளின் நிலையும் வசந்தனின் நிலையும் அவருக்கு நன்றாகவே விளங்கியது. இருந்தாலும் இப்ப எதுவும் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்து, நான் நாளைக்குப் பின்னேரம் உங்களுக்குச் சொல்லுறன். நீங்கள் இப்ப வீட்டை போங்கோ என அவளை அனுப்பி வைத்தார்.

இப்ப வசந்திக்கு தேவகி அக்கா எப்படியும் வடிவாக் கதைப்பார் என்னும் நம்பிக்கையில் ஒருபுறம் நின்மதி ஏற்பட்டாலும், வீட்டில் ரிசல்ட் பற்றி அப்பா என்ன சொல்லப் போறாரோ என்ற பயமும் ஏற்பட மெதுவாக வீட்டை அடைந்தாள். படலை திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த தாய் இவளின் முகத்தை வைத்தே ஊகித்துவிட்டார். என்ன கோட்டை விட்டிட்டியாக்கும் என்று  வேண்டா வெறுப்பாகக் கூறியவுடன் இவளுக்கு அழுகையில் கண்கள் நனைந்தது. மனதில் எவ்வளவு கவலையோட வாறன் ஒரு தாயாக இருந்து எனக்கு ஆறுதல் கூறாமல் வந்ததும் வராததுமா எப்பிடி குத்தல் கதை போட ஒரு பெற்ற தாயால் முடிகிறது என எண்ணியவள் ஒரு B 3C என்று கூறிவிட்டு ஒன்றும் கூறாமல் நின்றாள். அதுதான் படிக்கிறதை விட்டிட்டு வேற அலுவல் பாத்தால் உப்பிடித்தான். எங்கட குடும்பத்தில  ஒண்டாவது உருப்படும் எண்டு பாத்தா. ம்  என நீண்ட பெருமூச்சு விட்டு தன் இயலாமையில் நொந்த தாயார், போ போ  இனி நிண்டு என்ன பிரயோசனம் என்று தன் வெறுப்பை உமிழ்ந்தார்.

இவளும் தான் என்ன செய்வது, தன் அறைக்குச் சென்று பாயை விரித்துவிட்டு ஆடைகளைக் கூட மாற்றாது அப்படியே படுத்தாள். ஒன்றன்பின் ஒன்றான ஏமாற்றத்தினால் உள்ளத்துடன் உடலும் சேர்ந்து சோர செய்வதறியாது அப்படியே கிடந்தாள். அப்பா எப்ப வருவாரோ என்ன சொல்வாரோ என்ற ஏக்கத்துடன் அப்பாவும் தான் என்ன செய்வார் பாவம். என் மேல் வைத்த நம்பிக்கையில் மண் விழப்போகிறது. ஆனாலும் அம்மாவைப்போல் கண்டபடி கதைக்க மாட்டார் என்பதனால் மனம் சமாதானமடைந்தது போல் இருக்க, எப்படித் தூங்கினாள் என்று அவளுக்குத் தெரியவில்லை.

என்ன பிரச்சனை எனினும் அவளுக்கு தூக்கம் மட்டும் வந்துவிடும். ஓரிரு நாட்களைத் தவிர தூக்கம் தொலைத்த நாட்கள் மிகக் குறைவு. யாரோ உலுப்புவது போல் இருக்க கண்விழித்துப் பார்த்தவள், தன் சிறிய தங்கை தன் கைகையைப் பிடித்து தன்னை எழுப்புவதை உணர்ந்து என்ன என்றாள். அப்பா வரட்டாம் என்றுவிட்டு ஓடிவிட்டாள் தங்கை. எழுந்து வெளியே வந்தவள் தந்தையைப் பார்த்தாள் . அவருக்கு ஏற்கனவே அம்மா எல்லாம் சொல்லித்தான் இருப்பார். இருந்தாலும் என்ன வந்தது என்று கேட்டார். அவரின் குரலிலிருந்த சோர்வு இவளுக்கு மனதைத் தைக்க, தன் புள்ளிகளைக் கூறினாள். இனி என்ன செய்யப் போவதா உத்தேசம் என்று கேட்டு இவளைப் பார்வையால் அளந்தார். திரும்ப எடுக்கிறன் அப்பா என்று இவள் கூற, இனிப் பள்ளிக்கூடத்தில எடுக்க ஏலாதாமே என தனக்கும் கொஞ்சம் விஷயம் தெரியும் என்று காட்டினார். ஓமப்பா பிறைவேற்றா போட்டு எடுக்கலாம் என்றாள் இவள். நான் ஒண்டும் சொல்ல ஏலாது. படிப்புத்தான் பின்னடிக்குக் கை குடுக்கும் எண்டது உனக்குத் தெரியாததில்லை. கொஞ்சம் கவனமாப் படிச்சிருந்தால் ஒரு வருசம் வீணாக்கவும் தேவையில்லை. சரி இனியாவது ஒழுங்காப் படி என்றுவிட்டுப் போய்விட்டார்.

தந்தையும் தாயைப்போல் இருந்திருந்தால் தன் துன்பம் இருமடங்காகி இருக்கும். நல்ல வேளை என பெருமூச்சு விட்டவள் வெளித் திண்ணையில் அமர்ந்தாள். அத்தனையையும் மீறி தேவகி அக்கா எப்ப கதைப்பா. எப்ப எனக்குச் சொல்லுவா. வசந்தன் என்ன சொல்லுவார் என்னும் நினைப்பே அவளைச் சூழ்ந்தது. அடுத்தநாள் மாலை வரை அவளால் நின்மதியாக இருக்க முடியவில்லை. மீண்டும் தன் கொப்பியை எடுத்து சிவாய நம என எழுதத் தொடங்கினாள். 

அடுத்தநாள் மாலை வரை பத்தாயிரம் சிவாயநம எழுதி முடித்துவிட்டு, இவ்வளவும் எழுதி இருக்கிறேனே. அதுக்குப் பலன் இல்லாமல் போகாது என மனதுள் எண்ணியபடி தேவகி அக்காவைக் காணப்  புறப்பட்டாள். எங்கே போகிறாய் எனத் தாய் கண்களால் கேட்க கோவிலுக்குப் போட்டுவாறன் என்றுவிட்டு அம்மா என்ன சொல்லப் போறாவோ என்னும் பதைப்பில் இருக்க, தேவையில்லாத அலுவல் ஒண்டுக்கும் போகாமல் கோவிலுக்குப் போட்டு வந்திடவேணும் என்று தாய் கூறியவுடன், வேறு ஏதும் கூறுமுன் அவ்விடத்தில் நின்று அகன்றாள். ஓட்டமும் நடையுமாக தேவகி வீட்டுக்குச் சென்றவளை வாரும் வசந்தி என்று தேவகி சிரிப்பின்றி வரவேற்ற விதம் வயிற்றில் புளியைக் கரைக்க, கதைச்சனீ ங்களோ அக்கா என்றுவிட்டு ஆவலாய் தேவகியின் முகத்தைப் பார்த்தாள்.


தொடரும்............

 

ம்ம்........................ தொடருங்கள் சுமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி அலை. நன்றி நிலா அக்கா வருகைக்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, உங்கள் பகுதி-5, முடிய நானும், 'சிவாயநம' எழுதத் தொடங்கினேன். நாலு றீம் பேப்பர் முடிஞ்சபிறகு தான், சிவபெருமான் கண் திறந்திருக்கிறார். :o  

 

எனக்கென்னவோ, வசந்தியின் அப்பாவை மிகவும் பிடிக்கிறது! :D

 

நீங்கள் தொடருங்கோ! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

//என்ன பிரச்சனை எனினும் அவளுக்கு தூக்கம் மட்டும் வந்துவிடும். ஓரிரு நாட்களைத் தவிர தூக்கம் தொலைத்த நாட்கள் மிகக் குறைவு.//

 

இந்த வசனங்களைப் பார்த்தால் எனக்கு சுயசரிதைபோல் தென்படுகிறது.. :D தொடருங்கள்..! :D

 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீராம ஜெயம் 

ஸ்ரீராம ஜெயம் 

ஸ்ரீராம ஜெயம் 

ஸ்ரீராம ஜெயம் 

ஸ்ரீராம ஜெயம் .........1008

 

 

இந்த கதையாவது சுபமாக முடிக்கனும் சுமே, நன்றாக போகின்றது, தொடருங்கள் 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த புங்கை,இசை, உடையார் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

 



சுமே, உங்கள் பகுதி-5, முடிய நானும், 'சிவாயநம' எழுதத் தொடங்கினேன். நாலு றீம் பேப்பர் முடிஞ்சபிறகு தான், சிவபெருமான் கண் திறந்திருக்கிறார். :o  

 

எனக்கென்னவோ, வசந்தியின் அப்பாவை மிகவும் பிடிக்கிறது! :D

 

நீங்கள் தொடருங்கோ! :icon_idea:

 

ஆக 4 றிம் தான் முடிஞ்சதே புங்கை. சரி என்னால எழுதின புண்ணியம் உங்களுக்குத்தானே.

 

 



//என்ன பிரச்சனை எனினும் அவளுக்கு தூக்கம் மட்டும் வந்துவிடும். ஓரிரு நாட்களைத் தவிர தூக்கம் தொலைத்த நாட்கள் மிகக் குறைவு.//

 

இந்த வசனங்களைப் பார்த்தால் எனக்கு சுயசரிதைபோல் தென்படுகிறது.. :D தொடருங்கள்..! :D

 

சத்தியமா சுயசரிதை இல்லை இசை :D

 

 



ஸ்ரீராம ஜெயம் 

ஸ்ரீராம ஜெயம் 

ஸ்ரீராம ஜெயம் 

ஸ்ரீராம ஜெயம் 

ஸ்ரீராம ஜெயம் .........1008

 

 

இந்த கதையாவது சுபமாக முடிக்கனும் சுமே, நன்றாக போகின்றது, தொடருங்கள் 

 

பத்தாயிரம் எழுதினால் தானாம் பலன். ஆனபடியால் தொடர்ந்து எழுதுங்கோ உடையார். :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ சுமே

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, நன்றாக போகின்றது, தொடருங்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீராம ஜெயம் 

ஸ்ரீராம ஜெயம் 

ஸ்ரீராம ஜெயம் 

ஸ்ரீராம ஜெயம் 

ஸ்ரீராம ஜெயம் .........1008

 

 

இந்த கதையாவது சுபமாக முடிக்கனும் சுமே, நன்றாக போகின்றது, தொடருங்கள் 

 

சுபமாக முடிந்தால் அது சுமேயின் கதையில்லை உடையார். சோகமாக முடிவதே சுமேயின் கதை. :lol:

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த புத்தன், விசுகு அண்ணா, சாந்தி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.