Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா படையினரில் அதிகளவு முஸ்லிம் புலனாய்வாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Fonseka.jpg
சிறிலங்கா உளவுப் பிரிவில் அதிகளவில் முஸ்லிம்கள் உள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சோக தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் அவர்களுடன் சண்டையிட்டு முஸ்லிம் இராணுவ வீரர்களும் உயிர்த் தியாகம் செய்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முஸ்லிம்கள் எவ்வித ஒத்தாசைகளையும் வழங்கவில்லை.மாறாக, அரச படையினருக்கே அவர்கள் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
 
பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுடனான நட்பை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும். முஸ்லிம்கள் நாடுகள் கூட எம்மோடு மிக நட்புக் கொண்டவை.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் போன்றோர் எம்முடன் இணைவார்களாயின் அவர்களை மாலையிட்டு வரவேற்க நாம் தயாராகவுள்ளோம். இவ்வாறு சரத் பொன்சேகா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காட்டிக்கொடுப்பும் ஒரு காரணம். 1990 களில் இவர்களை ஊரைவிட்டு வெளியேற்ற வேண்டி வந்தமைக்கு.

 

இப்ப தான் பூனைக்குட்டி வெளிய வருகுது..! :(:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்காக வக்காளத்து வாங்குபவர்கள் முன்னாள் இராணுவத்தளபதியின் கருத்துக்கு என்ன சொல்லப் போகின்றார்கள் ....

 

அத்தனை பெரும் இருந்தும் இப்ப என்ன பயன் பள்ளிவாசல்கள் தொடக்கம் உலமா சபைவரை வீதிக்கு கொனந்தாச்சு.

 

 

தேவை முடிஞ்சா இதுதான் தருவாங்கள்... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்தனை பெரும் இருந்தும் இப்ப என்ன பயன் பள்ளிவாசல்கள் தொடக்கம் உலமா சபைவரை வீதிக்கு கொனந்தாச்சு.

 

 

தேவை முடிஞ்சா இதுதான் தருவாங்கள்... 

(முஸ்லிம்களுக்கு ) தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை (தமிழர்களுக்கு) எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேணும் என்று இருந்தவர்களுக்கு சரியான தீர்ப்பு என்று சொல்லுகின்றீர்கள். 

தமிழர்களை அழிக்க முஸ்லீமகள் சிங்களத்திற்கு தேவைப்பட்டனர்.

 

இன்று முஸ்லீம்களை கொத்தா விரும்ப மாட்டார். இவர்கள் மெல்ல மெல்ல அகற்றப்படுவார்கள். கறிவேப்பிலைகள் கதைகள் முடிந்தன :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காட்டிக்கொடுப்பும் ஒரு காரணம். 1990 களில் இவர்களை ஊரைவிட்டு வெளியேற்ற வேண்டி வந்தமைக்கு.

 

இப்ப தான் பூனைக்குட்டி வெளிய வருகுது..! :(:rolleyes:

ஐயா

ஏற ஏற தடக்கிவிழுந்தவன்தான் காரணத்தைக்கண்டு பிடிப்பான் 

வெளியில் நின்றவனுக்கு எப்படி வலி  தெரியும்??? :(

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அழிக்க முஸ்லீமகள் சிங்களத்திற்கு தேவைப்பட்டனர்.

 

இன்று முஸ்லீம்களை கொத்தா விரும்ப மாட்டார். இவர்கள் மெல்ல மெல்ல அகற்றப்படுவார்கள். கறிவேப்பிலைகள் கதைகள் முடிந்தன :(

 

முஸ்லீம்களை அழிக்க சிங்களத்திற்கு தமிழர்கள் துணைபோக மாட்டார்கள். சிறிலங்கா உளவுப் பிரிவில் அதிகளவில் முஸ்லிம்கள் உள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே தெரிவித்துள்ளார். சிங்களத்திற்கு அதுவே போதுமானது.

Edited by Paanch

அண்மையில் ஒரு முஸ்லீம் பேராசிரியர் இது நடக்கவில்லை என்றும் அதை தமிழர் ஒத்துக்கொள்ளாதபடியால்தான் தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் எற்படுகுதில்லை என்பது போலவும் ஒரு போலி அறிக்கை வெளிவிட்டிருந்தார்.

 

அதற்கு பதிலாகத்தான் பொன்சேக்கா இப்போது இந்த ஆப்பிறுக்கலை செய்திருக்கிறார்.

 

உண்மையான இனங்களுக்கிடையன நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் பிழைகள் ஒதுக்கொள்ளப்படவேண்டும். இதை முன்னெடுக்கவே பிரபல தமிழ்கருத்துக்களுக்கெதிராக சென்று பலதடவை கூட்டமைப்பும், சம்பந்தரும், காரணங்களுக்கு மேலாக யாழ் முஸ்லீம்களை வெளியேற்றியது தவறு என்று மன்னிப்பு கேட்டிருந்தனர்.

 

சுயநல முஸ்லீம் தலைமைகளை அதை ஏற்க மறுத்து அஸ்வார், கக்கீம் போன்றவர்கள் சம்பந்தரை எதிர்த்ததினால்தான் இன்று பொன்சேக்காவுக்கு தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்குமிடயில் இப்படி ஒரு ஆப்பிறுக்கலை நடத்த முடிகிறது. இனித்தன்னும் முஸ்லீம் தலைமைகள் அரசும், பொன்சேக்காவும் சொல்பவை சுய நலத்துக்காவே என்பதை உணர்ந்து தங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு தமிழருடன் இணங்கி வாழ முன் வரவேண்டும். கிழக்கு முஸ்லீம் மக்களின் வாக்குக்களுக்கு எதிராக சென்று தமக்கு மந்திரிப்பதவிகள் வாங்க கூடாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சரத் கூட தமிழர்,முஸ்லிம்களை கொழுவி விட்டு கூத்து  பார்ப்பதற்கு ஏற்றவாறு அறிக்கைகளை விடுகிறார்.(  அவர் சொன்ன கூற்று உண்மையான போதும்).அதே நேரம் முஸ்லிம்களின் வாக்குகள் தனக்கு அடுத்த தேர்த்தலில் கிடைக்குமென கனவு காண்கிறார்.

 

நாங்கள் இஸ்லாமியர்களை சகோதரர்களாக பார்க்க அவர்கள் எங்களை அழிக்க கோடரிக் காம்பாக செயற்பட்டுள்ளார்கள்  :( 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது தெரிந்த விடயம்தானே.. ஆனால் சரத் கூறுவது பிரிவினையை வலுப்படுத்துவதற்கானது..

 

சரத் அறியாத ஒன்று.. சிங்களவர் எட்டி உதைத்தாலும் காலடியில் வீழ்ந்தும் சாமரம் வீசுவார்கள் நம் சகோதரர்கள்..! அவ்வளவு பாசம் மிக்க தலைமையைக் கொண்டிருப்பவர்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இஸ்லாமியர்களை சகோதரர்களாக பார்க்க அவர்கள் எங்களை அழிக்க கோடரிக் காம்பாக செயற்பட்டுள்ளார்கள்  :(

 

இது பல வழிகளிலும் தரிசித்த உண்மை.

 

நாங்கள் கொழும்பில் கல்வி கற்கும் போது சில சிங்கள விமானப்படையைச் சேர்ந்தவர்களும் கூட கல்வி கற்றார்கள். அவர்கள் புலிகளைப் பற்றி எல்லாம் கதைப்பார்கள். சிலர் நல்லவிதமாகக் கூடக் கதைப்பார்கள். எங்களுக்கோ உள்ளூரப் பயம். கதைவிட்டு கதை புடுங்கிறாங்களோ என்று.

 

ஆனால் அன்றைய பொழுதுகளில் கொழும்பில் நடந்த குண்டு வெடிப்பொன்றின் போது.. பல்கலைக்கழக நிர்வாகிகள் சிங்களவர்களாக இருந்த போதும் எங்களை உடனடியாக வீடுகளுக்குச் செல்லக் கேட்டுக் கொண்டனர். நாங்கள் வந்த பஸ்ஸில் அதே சிங்கள விமானப்படையினரும் வந்தனர். பஸ் மருதானைக்கு அருகில் சிங்களப் படையினரால் வழிமறிக்கப்பட்டது. எங்களுக்கோ உள்ளூர நடுக்கம். சிங்கள விமானப்படையினருக்கு நாங்கள் யார் என்பதும் தெரியும்.

 

சிங்களப் படையினன் ஒவ்வொரு ஆளாக சோதித்து முடித்து எங்களின் ரேன் வர.. ஐடியை காட்ட அவனும் பார்த்திட்டு கடந்து போக அனுமதித்துவிட்டான். எங்களுக்கு பின்னால் வந்த அந்த விமானப்படை ஆட்களும் கடந்து வந்துவிட்டார்கள். கடந்து வந்தவர்கள் நேராக எங்களிடத்தில் வந்து பயவெண்ட எப்பா என்றார்கள்..! பெருத்த நிம்மதி.

 

அதே நாள்.. வீட்டருகில் வந்து கதை கேட்டுக் கொண்டு நின்ற அயல் வீட்டு அங்கிளோடு.. தமிழில் கதைத்துக் கொண்டு நிற்க.. அந்த வழியாக வந்த முஸ்லீம்கள் சிலர்.. தாங்கள்.. சி ஐ டி என்று சொல்லி எங்களை விசாரணை நடத்தினார்கள்..!

 

சிங்களவர்கள் கூட காட்டாத வெறுப்பை முஸ்லீம்கள் தமிழ் மக்கள் மீது காட்டிய பல சந்தர்ப்பங்களை நாங்களே கடந்து வந்திருக்கிறோம்..!

 

செம்மணி.. கிருசாந்தி குமாரசாமி இனப்படுகொலையில் கூட முஸ்லீம் கூலிப்படைகளின் செயலே சிங்களப் படையினர் கூட்டுப் படுகொலை செய்யத் தூண்டி இருந்தது. பின்னர் அவர்கள் அப்புறூவல்களாகவும் மாறி இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ் இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்ததிலும் முஸ்லீம் படை அதிகாரிகளின் உளவுப் பிரிவினரின் பங்களிப்பே அதிகம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாகான பிரச்சன கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான்  ....

நாங்க லண்டன் சந்தியில நிண்டு ....  அரபு நாட்டு வெத்திலைய குதப்பி கொண்டு இருக்க வேண்டியது தான் ...
 

இன்னுமொரு கொஞ்ச காலம்தான் .....

 

தமிழர் 2 லட்சம் வடக்கார் வெளிநாட்டுக்கு ஒடி வந்திடுவாங்கள் .....

 

வடக்கிலயும் பிரச்சன சுமூகமா முடிஞ்சிடும் ....  :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரத் சும்மா ஆளில்லை

எங்கே எப்போது எதைக் கூற வேண்டும் எழுத வேண்டும் என்பது அவருக்குத் தெரியும் :)

 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு தமிழ் மொழியில் பகை இல்லை அவர்களின் பிரச்சனை தமிழ் மொழி பேசுவோர் சைவர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இருப்பதுதான்.... தொடர்ந்து தமிழ்மொழி நிலைக்க வேண்டுமெனில் அவர்களை அவர்கள்பாட்டில் விடவேண்டியதுதான் சிறந்தது.. அவர்களை சகோதரர்களாக பாவித்து அரசியல் நடத்தவேண்டும் என்பது எல்லாம் சுத்த முட்டாள்தனம்.. தொடர்ந்து இன்னும் இரண்டு தலைமுறைக்கு மேல் அவர்களால் தமிழ்மொழியை சிறிலங்காவில் நிலைநிறுத்தமுடியும் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.அந்த தமிழை சோனகதமிழ் என்றும் சொல்லாக்கூடும்.எம்மால்(புலம்பெயர்ந்தோர்) எமது பரம்பரைக்கே தமிழை பரப்பமுடியவில்லை. தமிழ் எவராலும் பேசப்படட்டும் வரவேற்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.