Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின்கவலை.என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம்.இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை.

பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்:

நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம் தான். பெண்கள் விடயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும்.

பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம் தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.

நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம்.

இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர். பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர்.

நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.

பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது.

எனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம் போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும். உங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போக வேண்டும்.

அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விடயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும்? என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள்.

இன்றைய 21ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத் தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம் கவர் கள்வனாவது நிச்சயம்.

Thanks: Dinasari

  • Replies 67
  • Views 41.5k
  • Created
  • Last Reply

தகவலுக்கு மிக்க நன்றிகள் பாஸ் ......முயற்சிக்கிறேன் :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முயற்சியிங்கள் கைவசம் நிறைய ஐடியா இருக்கு ஒவோண்டா தாறன் சாம்பிளுக்கு இப்ப ஒண்டு இந்தா பிடிங்க....

காதலிச்சிட்டு அல்லது கல்யாணம் பண்ணிட்டு இந்த பொம்பளைங்க கூட போராடும் சில அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்

#1. .காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் இதே விஷயத்தை

ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்......

:D

டிப்ஸ் நம்பர் 2 நாளைக்கு...,

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு மிக்க நன்றிகள் பாஸ் ......முயற்சிக்கிறேன் :D  :D

யார்அது சுண்டல் ஃபீலிங்கா பேசிக்கிட்டு இருக்கப்ப கெக்க புக்கன்னு சிரிக்கிறது... :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் SMS ஐடியாவை முயற்சித்துப் பார்க்க வேணும் :D

இதென்ன யாழ் களத்தில எப்ப பாத்தாலும் பெண்களுக்கு எது புடிக்கும் புடிக்காது கவருவதற்கு என்ன செய்ய வேண்டும்? ... இல்லை கேக்கிறன் ஏதோ பெண்கள் தேவலோத்தில இருந்து ஸ்ரெய்டா வந்து இறங்கிய தேவதைகள் போலும் ... ஆண்கள் எல்லாம் கொத்தடிமைகள் மாதிரியும் எல்லோ கதை போகுது. முதல்ல ஆண்களை எப்பிடி சந்தோசமா வைச்சிருக்கிறந்தெண்டு பெண்களுக்கு வகுப்பெடுங்கோ. அதை விட்டிட்டு சிங்கம் மாதிரி இருக்க வேண்டிய ஆம்பிளையை சும்மா அதைச் செய் இதைச் செய் எண்டு சீரழிக்காதையுங்கோ!

மொத்ததில ஆம்பிளையை ஆம்பிளை மாதிரி இருக்கி விடுங்கோ. அவனால எப்பவும் ஒரே மாதிரித் தான் இருக்க முடியும். சும்மா பெண்டுகளை மாதிரி இடம் காலம் நேரத்துக்கு தகுந்த மாதிரி அவனால மாற ஏலாது.

அப்படி போடுயா அருவாள..ஒரு ஆம்பிளை சிங்கமாவது யாழ்ழ இருக்கு... :D

ஆண் மயிலுக்கு

தோகை உண்டு

ஆதலால் அஃது

அழகோ அழகு

என்று ஆடினேன்!!!

தோகை மட்டுமல்ல

தோகையை சுமந்து

திரியும் தேகத்தையும்

நானே பெற்றெடுத்தேன்

என்கிறது அடக்கமாய் பெண்மை!!!

ஆண் சிங்கம்

கம்பீரம் என

உரக்க சொன்னேன்!!!

அதன் அப்பனுக்கு

தெரியாது,புல்புதரில்

பெற்றெடுத்து,மறைத்து

வளர்த்ததே நான்,

என்றது பணிவாய் பெண்மை!!!

இப்படி எல்லா

நிலைகளிலும்,எல்லாவற்றிலும்

பெண்மை மேலோங்கி நிற்க!!!

ஆறறிவு படைத்த

மனிதன் மட்டும்

ஆணுக்கு பெண்

சமம் என்பதையே

ஒத்துக்கொள்ள மறுக்கிறான்!!!

நன்கு உணர்ந்தவன்

வான்நிலவை பார்க்க

இரவுக்காய் பொறுத்திருந்து

வானை அண்ணார்ந்து

பார்ப்பதில்லை!!!

அன்போடு பெற்றெடுத்த அன்னை,

பாசம் பொழியும் தங்கை

காதலை அள்ளித்தரும் மனைவி

வரமாய் பிறந்த மகள்

உற்ற தோழி இவர்களின்

முகங்களிலேயே தேய்பிறை

இல்லா நிலவையும்

நிலவொளியையும் இரவுக்காய்

காத்திராமல் எப்பொழுது

வேண்டுமோ அப்பொழுதே

கண்குளிர கண்டுக்கொள்கிறான்!!!

பெண்களை போற்றுவோம்!!!

அன்புடன் நவீன் மென்மையானவன்

:D :d :D:(:D

  • கருத்துக்கள உறவுகள்

கடலை போடு! கடலை போடுவதால் பெறும் பேறு இதுதானோ!!

போட்ட கடலையை எடுத்தாள், அவள் அவித்தாள், அது சுண்டலாகியது. சுண்டலைத் தாளிக்க மறந்தாள், அவள் மறந்ததால் சுண்டல் இப்போ ஆண்களைத் தாளிக்கிறது.

பஞ்... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெறும் பஞ் இல்லை பாஞ் இன் பஞ் :D

கண்ணா தாளிக்கிறது முக்கியம் இல்லை தாலி கட்டாமல் எப்பிடி எஸ்கேப் ஆகிறது என்றது தான் முக்கியம்...

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் பஞ் இல்லை பாஞ் இன் பஞ் :D

கண்ணா தாளிக்கிறது முக்கியம் இல்லை

தாலி கட்டாமல் எப்பிடி எஸ்கேப் ஆகிறது என்றது தான் முக்கியம்...

நீங்க

அந்த பெண்ணைத்தானே  குறிப்பிடுகின்றீர்கள் சுண்டல்?? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீ அந்த பொண்ணு நல்ல பொண்ணுனே....:D

  • கருத்துக்கள உறவுகள்

சீ அந்த பொண்ணு நல்ல பொண்ணுனே.... :D

அது தான் தாலிக்கு அடங்கமாட்டேன் என்கிறது.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் பஞ் இல்லை பாஞ் இன் பஞ் :D

கண்ணா தாளிக்கிறது முக்கியம் இல்லை தாலி கட்டாமல் எப்பிடி எஸ்கேப் ஆகிறது என்றது தான் முக்கியம்...

மனைவியின் பிறந்தகம் மட்டக்களப்பு நண்பரே, கூடவே அவள் என் மாமன் மகள். பாய்ந்தெல்லாம் தப்பமுடியாது பாயோடு ஒட்டவைத்துவிடும் மண்ணது. அப்படிக்கூட தமிழர் கலாச்சாரத்தைக் காத்துவரும் அந்தமண்ணிலேதான் இன்று பதினாறு வயதுப் பெண் செய்த அட்டூழியத்தைப் பார்த்தீர்களா? என்ன செய்யப்போகிறோம்! பெண்களுக்கு உரிமை கொடுத்துப் பாதுகாப்பது பெண்கள்தான், அது அவர்களால் மட்டுமே முடியும்!. ஆண்களால் பாதுகாப்புத்தான் வழங்க முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Okie guys டிப்ஸ் நம்பர் 2 க்கு ரெடியா?

டிப்ஸ் நம்பர்

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் :D

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் வந்த விளம்பரங்களில், பெரியோர் முதல் வாண்டுகள் வரை கவர்ந்து, சிரிக்க வைத்த விளம்பரமும் இது..

விளமபரத்தின் "ஜூ ஜூ.." க்களின் வடிவமைப்பிற்கும், கிரியேட்டிவிடிக்கும் நிச்சயம் 'ஓ' போடணும்!

அழகான(?) பெண்ணின் மனதில், யார் இடம்பிடிக்கிறார்களென சமீபத்தில் மிகப் பிரபலமாயிருக்கும் இந்த விளம்பரத்தை பாருங்கள்...

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரோ இல்லை, அரிதாரம் பூசிய திரைநாயகனோ அல்ல...மிகச் சாதாரண, தத்தி மாதிரியுள்ள ஒருவரையே நாயகி கண்டவுடன் காதல் மலர்ந்து, வெட்கித் தலைகுனிகிறாரம். :rolleyes:

ஆகவே களத்திலுள்ள விடலைகள், அதிகம் கடலை போடாமல், வயது முப்பதுக்கு மேலே ஏறினால் கல்யாண சந்தையில் எக்ஸ்பயர்டு கேஸ் (expired case) ஆகுமுன், கூடிய சீக்கிரம் வத்தலோ...தொத்தலோ எதுவாகினும் தன்னை பிடித்தவளுக்கு கழுத்தை... சாரி, கரத்தை நீட்டுங்கள்...!  :lol:

http://youtu.be/DkV8vVHo-c4

Quote" "தன்னை பிடித்தவளுக்கு கழுதை... சாரி, கரத்தை நீட்டுங்கள்" :lol:

பெண்கள் எங்கள் மனதை கொள்ளையடிக்காமல் எம்மை பாதுகாப்பது எப்படி  என்பது பற்றியும் யாராவது எழுதுவீர்களா?

இதென்ன யாழ் களத்தில எப்ப பாத்தாலும் பெண்களுக்கு எது புடிக்கும் புடிக்காது கவருவதற்கு என்ன செய்ய வேண்டும்? ... இல்லை கேக்கிறன் ஏதோ பெண்கள் தேவலோத்தில இருந்து ஸ்ரெய்டா வந்து இறங்கிய தேவதைகள் போலும் ... ஆண்கள் எல்லாம் கொத்தடிமைகள் மாதிரியும் எல்லோ கதை போகுது. முதல்ல ஆண்களை எப்பிடி சந்தோசமா வைச்சிருக்கிறந்தெண்டு பெண்களுக்கு வகுப்பெடுங்கோ. அதை விட்டிட்டு சிங்கம் மாதிரி இருக்க வேண்டிய ஆம்பிளையை சும்மா அதைச் செய் இதைச் செய் எண்டு சீரழிக்காதையுங்கோ!

மொத்ததில ஆம்பிளையை ஆம்பிளை மாதிரி இருக்கி விடுங்கோ. அவனால எப்பவும் ஒரே மாதிரித் தான் இருக்க முடியும். சும்மா பெண்டுகளை மாதிரி இடம் காலம் நேரத்துக்கு தகுந்த மாதிரி அவனால மாற ஏலாது.

இப்ப இங்க ஒரு குரூப்  தாங்க கவிண்ட  காணாது எண்டு மற்றவனையும் அடிமையாக்க 'பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி', 'மனைவியை இனிமையாய் வைத்திருப்பது எப்படி' என்று  பாடம் எடுக்க வெளிக்கிட்டிருக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன யாழ் களத்தில எப்ப பாத்தாலும் பெண்களுக்கு எது புடிக்கும் புடிக்காது கவருவதற்கு என்ன செய்ய வேண்டும்? ... இல்லை கேக்கிறன் ஏதோ பெண்கள் தேவலோத்தில இருந்து ஸ்ரெய்டா வந்து இறங்கிய தேவதைகள் போலும் ... ஆண்கள் எல்லாம் கொத்தடிமைகள் மாதிரியும் எல்லோ கதை போகுது. முதல்ல ஆண்களை எப்பிடி சந்தோசமா வைச்சிருக்கிறந்தெண்டு பெண்களுக்கு வகுப்பெடுங்கோ. அதை விட்டிட்டு சிங்கம் மாதிரி இருக்க வேண்டிய ஆம்பிளையை சும்மா அதைச் செய் இதைச் செய் எண்டு சீரழிக்காதையுங்கோ!

மொத்ததில ஆம்பிளையை ஆம்பிளை மாதிரி இருக்கி விடுங்கோ. அவனால எப்பவும் ஒரே மாதிரித் தான் இருக்க முடியும். சும்மா பெண்டுகளை மாதிரி இடம் காலம் நேரத்துக்கு தகுந்த மாதிரி அவனால மாற ஏலாது.

ஒரே குரூப் தாங்க மாறி மாறி தலைப்பைப் போடுதுங்க..!

அதுகளின்ர பிரச்சனை என்னென்று யாருக்குத் தெரியும்..!

ஆனால் ஒன்று மட்டும் விளங்குது.. இப்படி அநாவசியமாக..சதா.. பொண்ணுங்கள கணக்குப் பண்ணியே தங்க சுதந்திரமான வாழ்க்கையை சீரழிக்கப் போறாங்கன்னு மட்டும் தெளிவா விளங்குது..!

ஆனாலும் சொல்வழி கேளாது.. அந்த குரூப்..! :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோ நமது நெடுக்ஸ் அண்ணாவிற்காக டிப்ஸ் நம்பர் 3

அவங்க பேரோட முதல் எழுத்தை கார் கீ- செயின்’ல இல்லது கழுத்து செயின் ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…

:D

ம்ம்... இது நல்ல ஐடியா.

கழுத்தில நாய்ச் சங்கிலியைக் கொளுவிட்டு மற்ற பக்கத்தை அவட கையில கொடுத்தா, அவ உங்களை இன்னும் விரும்புவா. :D

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்... இது நல்ல ஐடியா.

கழுத்தில நாய்ச் சங்கிலியைக் கொளுவிட்டு மற்ற பக்கத்தை அவட கையில கொடுத்தா, அவ உங்களை இன்னும் விரும்புவா. :D

ஏனப்பா

அந்த வாயில்லா பிராணியை  இப்படி வம்பக்கு இழுக்கின்றீர்கள்...... :lol:

சுண்டல்

இதெல்லாம் வீரத்தழும்புக்கான முதல்படி

முன்னேறுங்கள்... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் சைக்கிள் கேப் ல என்ன வாயிலா பிராணி( நாய்) ஆக்கிடிங்க.... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.