Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க நடை சீமான் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் சீமான்தான் என்பது மிகப் பெரிய மோசடி. தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவே. முள்ளிவாய்க்காலின் பின்பே இந்த மாற்றம் ஏற்பட்டது.

மற்றைய கட்சிகள் மீது நம்பிக்கை இழந்திருந்த இளைஞர்கள் சீமானின் உரைகளை கேட்டு அவர் பின் திரண்டார்கள் என்பது ஓரளவு உண்மை. ஈழத் தமிழர்களுக்கு போராட வேண்டும் என்று துடிப்போடு இருந்தவர்கள் தமக்கேற்ற ஒரு தலைவனை தேடிக் கொண்டிருந்தார்கள். சீமான் அந்த இடத்தை நிரப்புவார் என்று நம்பினார்கள்.

சீமான் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. மாற்றம் ஏற்பட்டதை புரிந்து அதை ஒரு எழுச்சியாக மாற்ற முற்பட்ட ஒருவர். ஆனால் யார் கண் பட்டதோ? இன்றைக்கு சீமானை விட்டு இளைஞர்கள் ஓடுகின்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டார்.

முள்ளிவாய்க்கால் படுகொலையையே யுத்த நிறுத்தம் என்றதிற்குள் மூடி மறைக்க முயன்றவர்..தான் உங்கள் தலைவர் கருணாநிதி. அதனை மீறி.. சீமான்.. வைக்கோ.. போன்ற உறவுகள் தான் அடிமட்ட மக்களிடம் உண்மையை கொண்டு சென்றார்கள். அதன் விளைவே இன்றைய மாற்றம். இந்த உண்மையைக் கூட ஏற்றுக் கொள்ளாத நீங்கள் எல்லாம் தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கக் கூட தகுதியானவர்களா என்பது கேள்விக்குரியது..!

உங்களால் முடியாததை மற்றவர்கள் செய்யும் போது பாராட்டா விட்டாலும் பறுவாயில்லை தூற்றாதீர்கள்..! அப்படித் தூற்றுவது சராசரி மனிதப் பண்பு கூட இல்லை..! :icon_idea::)

  • Replies 246
  • Views 15.2k
  • Created
  • Last Reply

அந்த வகையில் இந்த இயக்கத்தை தமிழ்நாட்டிற்கு ஆபத்தான ஒன்றாகப் பார்க்கிறேன். தமிழ்நாட்டின் பல்லினக் கூறுகளை கணக்கில் எடுக்காமல் எழுப்பப்பட்டுள்ள "தமிழர்" கோசம் ஆபத்தானது.

ஒரு உதாரணம் சொல்கிறேன். இன்றைக்கு தமிழ்நாட்டின் மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் அருந்ததியர்கள். இவர்கள் தெலுங்கர்கள். தேவர் சமாதியில் எழுப்பப்படும் "நாம் தமிழர்" கோசம் எதில் முடியும் என்பதில் எனக்கு நிறைய அச்சம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேனாவிற்கும் "நாம் தமிழர்" இயக்கத்திற்கும் நான் அதிக வித்தியாசத்தை காணவில்லை.

அப்படியே இருந்தால் தான் என்ன..! நீங்கள் அதை விட்டு விலகி இருந்து.. ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றுக்கு இருக்கிற அரசியலை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு ஒரு விடிவைக் கொண்டு வாறது. அதைவிட்டிட்டு.. எதுக்கு சீமானின்ர மூச்சியை பார்த்திக்கிட்டு அவர் வாயால என்ன வருகுது என்று திரிகிறீர்கள்.

உங்களால் ஆக்க பூர்வமாக.. எதுவும் முடியாது. முடிந்தது எல்லாம் குட்டையை குழப்பிறது மட்டுமே..! :lol::D

சபேசன் சரியாகத்தான் சொல்லியுள்ளார் நெடுக்ஸ்.. ஜேர்மன் வட்ட திமுக செயலாளர் அல்லவா சபேசன்.. :icon_idea: சீமான் அவருக்குப் போட்டிதானே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வகையில் இந்த இயக்கத்தை தமிழ்நாட்டிற்கு ஆபத்தான ஒன்றாகப் பார்க்கிறேன். தமிழ்நாட்டின் பல்லினக் கூறுகளை கணக்கில் எடுக்காமல் எழுப்பப்பட்டுள்ள "தமிழர்" கோசம் ஆபத்தானது.

ஒரு உதாரணம் சொல்கிறேன். இன்றைக்கு தமிழ்நாட்டின் மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் அருந்ததியர்கள். இவர்கள் தெலுங்கர்கள். தேவர் சமாதியில் எழுப்பப்படும் "நாம் தமிழர்" கோசம் எதில் முடியும் என்பதில் எனக்கு நிறைய அச்சம் உண்டு.

தெலுங்கர் தெலுங்கானா கேட்கும் போது.. பல்லினக் கூறுகள் பற்றி கதைக்க மாட்டினம்... தமிழன் தமிழ் நாட்டுக்கு ஆட்சியுரிமை கோருவது மட்டுமே பல்லினத்தை சிதைக்குதாமில்ல. :lol:

ஜேர்மனியில உங்க தாத்தா தானே அரசியல் செய்யுறார்.. உங்கட தேசியத்தை கட்டிக்காக்க. ஜேர்மன்காரன் போடுற சலுகையில் வாழ்ந்து கொண்டு.. பல்லின தேசியம் காக்கிறது போல.. தமிழகத்தான் தமிழகத்தை ஆண்டு கொண்டு.. போடுற சலுகையில் தெலுங்கன்.. பல்லின தேசியம் காக்கட்டுமேன். தமிழன் என்ன ஆந்திராவிலா நாம் தமிழர் என்று கோசம் போடுறான். இல்லையே..! :D

அது சரி.. நீங்கள் என்ன வடிவில் போராடிக் கொண்டு.. இதனை மற்றவர்கள் மீதும்.. (கலைஞன் உட்பட) சீமானிற்கும் சொல்கிறீர்கள் என்று அறிந்து கொண்டால்.. நாமும் உங்களிற்கு ஆதரவளிக்க ஏதாவது வழி இருக்கோ என்று பரிசீலிக்கலாம்.

நீங்களும் அதே குட்டையில் தான் கிடக்கிறீர்கள்.. அதில் இருந்து கொண்டு.. செயலைச் செய்யும் சீமானை நோக்கி.. கூவுவது.. உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல..! :D:lol:

நான் சீமானைப் போன்று கூவிக் கொண்டு எனது செயற்பாடுகளைச் செய்யவில்லை.   இன்னொரு இனத்தின் அழிவைப் பயன்படுத்தி நான் அரசியல் லாபம் பார்க்க முனையவில்லை.   மக்களின் அவலத்தைப் பயன்படுத்தி ஒரு மாபெரும் தலைவனின் உத்தமத்தைக் களையவில்லை.   உணர்ச்சிகரமாகப் பேசி, இளைஞர்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்கவில்லை.   

தமிழீழத்திற்காகவும் எமது மக்களுக்காகவும் நான் எனது செயற்பாடுகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.   காலம் வரும்போது, அவை தானாக வெளிப்படும்.  உங்களது ஆதரவு தேவைப்படும் என நினைக்கும்பட்சத்தில் உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.  என்னைப் பொறுத்தவரை, தலைவரின் பெயரை உச்சரிப்பதற்கு சீமானைவிட அதிக உரிமையும் தகுதியும் எனக்கிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேனாவிற்கும் "நாம் தமிழர்" இயக்கத்திற்கும் நான் அதிக வித்தியாசத்தை காணவில்லை.

சிமான் இல்லாட்டி நமக்கென்ன...நம்மகிட்டதான் கவிழாத கட்டுமரம் ஒண்ணு எப்பவுமே இருக்கே...  :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நான் சீமானைப் போன்று கூவிக் கொண்டு எனது செயற்பாடுகளைச் செய்யவில்லை.   இன்னொரு இனத்தின் அழிவைப் பயன்படுத்தி நான் அரசியல் லாபம் பார்க்க முனையவில்லை.   மக்களின் அவலத்தைப் பயன்படுத்தி ஒரு மாபெரும் தலைவனின் உத்தமத்தைக் களையவில்லை.   உணர்ச்சிகரமாகப் பேசி, இளைஞர்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்கவில்லை.   

தமிழீழத்திற்காகவும் எமது மக்களுக்காகவும் நான் எனது செயற்பாடுகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.   காலம் வரும்போது, அவை தானாக வெளிப்படும்.  உங்களது ஆதரவு தேவைப்படும் என நினைக்கும்பட்சத்தில் உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.  என்னைப் பொறுத்தவரை, தலைவரின் பெயரை உச்சரிப்பதற்கு சீமானைவிட அதிக உரிமையும் தகுதியும் எனக்கிருக்கிறது. 

நீங்கள் உணர்ச்சிய தூண்டவில்லை. ஒரு இனத்தை அழிக்கவில்லை. இன்னொரு இனத்தை காயப்படுத்தவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கவில்லை. மக்களை அவலத்துக்குள் தள்ளவில்லை. ஆனால்.. அந்த மக்களின் விடிவுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள்.

அந்தோ இது உண்மையில் பிரமாதமான ஒரு போராட்ட வடிவம். ஆனால் அதனை ஏன் மறைக்கிறீர்கள். அந்தப் போராட்ட வடிவத்தை வெளியில் மக்களுக்கு இனங்காட்டினால்.. மக்கள் மிக மகிழ்ச்சியோடு அதை பின்பற்றுவார்கள். உங்களுக்கு தீவிர ஆதரவு கிடைக்கும். சீமானின் வழிமுறைக்கு பெரிய சாட்டை அடி கிடைக்கும். இன்று சீமானின் பின்னால் உள்ளவர்கள் நாளை உங்கள் பின்னால் ஓடி வருவார்கள். நீங்களும் மிக இலகுவாக தேசிய தலைவரின் இலட்சியத்தை வெற்றிடுவீர்கள். தமிழ் மக்களுக்கும் ஒரு விடிவு கிடைச்சிடும்.

அப்படித்தக்க அற்புதமான உங்கள் போராட்ட வடிவத்தை உலகின் கண்களில் இருந்து மக்களின் பார்வையில் இருந்து நீங்கள் மூடிமறைச்சுக் கொண்டு சீமானின் வெளிப்படையான போராட்ட வடிவத்தைக் குறை சொல்வது நியாயம் அல்ல. உங்களின் போராட்ட வடிவத்தை மக்களுக்கு வெளிக்காட்டிவிட்டு சீமானின் போராட்ட வடிவம் மீது காறி உமிழ்வதே.. அல்லது மக்கள் உமிழச் செய்வதே சிறப்பாகும். அதைச் செய்வீர்களா..??  நீங்கள் ரகசியமாக செய்து முடிக்கும்.. காலம் வரும் வரை அந்த ரகசியத்துக்காக காத்துக் கொண்டிருந்தால்.. இன்றுள்ள தமிழினம்..நாளை இருக்குமோ என்ற நிச்சயமற்ற சூழலில் சீமான் முன்னிலை பெறுவது தவிர்க்க முடியாதது ஆகும்.

எனவே உங்கள் போராட்ட வடிவத்தை யாழ் களத்தினூடு பகிரங்கப்படுத்துவதே சிறப்பு. அதைச் செய்யாமல் நீங்கள் சீமானுக்கு பாடம் எடுப்பதும் நியாயமல்ல. ஏனெனில் அவர் வெளிப்படையாக மக்களிடம் என்ன செய்கிறோம்..செய்யப் போறம் என்று சொல்லியே செயற்படுகிறார். திரைமறைவு போராட்டம் செய்யவில்லை..! அது (உங்களின் திரைமறைவுப் போராட்டம்) எந்தளவு வெற்றி அளிக்கும் என்றும் தெரியாது..! மக்கள் ஆதரவையும் திரட்டாது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

நீங்கள் சொல்வது சரி.  ஆனால், சீமான் அதற்கேற்ற ஆள் அல்ல என்பதே எனது வாதம்.  தமிழகம் மூலம் இந்தியாவில் மாற்றங்களை கொண்டுவரவேண்டியது மிகவும் அவசியம்.  அதற்கு வைகோ, ஜெயலலிதா போன்றோர்களே பொருத்தமானவர்கள்.    சீமானது தீவிரவாத, உணர்ச்சிப் பேச்சுக்கள் குறுகிய காலத்திற்கு எடுபடலாம்.  ஆனால், நீண்டகாலத்தில் அது எமக்குப் பாதகமாகவே இருக்கும்.  சீமானின் புலிக்கோசம் அவர் தன்னை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் ஒரு ஆயுதம் மட்டுமே.  வைகோவின் புலிகளுக்கான ஆதரவு அவரது மனப்பூர்வமான ஆதரவு.  ஆனால், சீமானது வெறும் வேசம் மட்டுமே.  அவரது அரசியல் ஞானமும் மட்டுப்படுத்தப்பட்டதே.  இவருக்கு ஆதரவு கொடுப்பது எமது மக்களை நாமே ஏமாற்றுவதற்குச் சமன்.  நாம் சரியானவருக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால், தகுதியற்ற ஒருவருக்கு ஆதரவு கொடுத்து அவரை வளர்த்து  மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை உருவாகுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே எனது வாதம்.  இனிமேலாவது, நாம் சிந்தித்து, பொருத்தமானவர்களுக்கு மட்டும் ஆதரவு கொடுத்து அவர்களை வளர்த்துவிடுவோம்.  பொருத்தமற்றவர்களைப் புறந்தள்ளி களைகளை வளரவிடாது தடுப்போம்.

நேற்றுத் தடம்  மாறிய ஜெயலலிதா நம்பத்தாகவராகவும் முந்தைய நாள் மாறிய சீமான் நம்பத்தகாதவராகவும் இருக்க முடியுமா?.

தமிழக அரசியலில் இன்று மாற்றம் வந்துவிட்டது. தலைவர்கள் இனிமேல் தடம் மாறும் போது காரணத்துடன் தான் மாறுவார்கள். மாணவர்கள் அதை வெளிப்படுத்துகிறார்கள். முன்னைய ஆதரவுகள், எதிர்ப்புக்கள் எல்லாம் வெறும் கும்பலில் கோவிந்தா நிலையில் நின்று செய்யப்பட்டவை.  அறிவு பூரவமானவை அல்ல.கருணாநிதி நிறையப் படிப்பித்திருக்கிறார். அதை சுட்டிக்காட்டித்தான் சீமான் முன்னால் வந்தார். அதாவது தனது கத்தியை உருவிவைத்திருக்கிறார்; தன்னை குத்த தாயராகிறார் என்பது அவசரமான எதிர்வு கூறல். 

தமிழ் நாட்டில் ஜனரஞ்சகமான கவர்ச்சி அரசியலுக்கு இன்னமும் தேவை இருக்கிறது.  SJV மாதிரி மேடையில் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டோ அல்லது சம்பந்தர் மாதிரி கேள்வி கேட்டவுடன் ஏசிக்கலைத்துவிட்டோ அங்கு கட்சி ஒன்றை கட்டி எழுப்ப முடியாது. ஒரு கரையில் மாயப்பேச்சு கருணாநிதி. மற்றய கரையில் அழகு ராணி அக்ரெஸ் ஜெயலலிதா. இவர்களை மேவித்தான் செய்தி மேலே மக்களுக்கு அனுப்படவேண்டும். இந்த இரண்டு சுவர்களுக்குமிடையில் மட்டிக்கொண்டு , மக்களை கவரமுடியாமல்  வை. கோ. சந்திக்கும் அதே தோல்வியை எல்லோரும் சந்தித்தால் தமிழ் நாட்டில் விழிப்பை கொண்டுவரமுடியாது.  சீமான் சில கவர்ச்சி,விலாச  நடத்தைகளை பின்பற்றவேண்டியது இடத்து யதார்த்தம்.  எனவே கவர்ச்சிப் பாகத்தில் உண்மை இருக்க வேண்டியதில்லை எனபதால் முழு நடத்தையிலும் உண்மை இல்லை என்று தட்டிக்கழிக்க முடியாது.

 ஒரு கதையில் ஒருவர் மற்றவரை முதன் முதலாக சந்தித்த போது" நீங்கள்" என்று அழைத்துக் கதைக்க  ஆரம்பித்தார்.  மற்றவர் " என்ன நீ இப்பவே 'நீங்கள்' எங்கிறாய், ஆளைப்பார்த்தால் கொஞ்சம் பொறுக்க 'நீ' என்ன போகிறாய் போலிருக்கு" என்று கலவரப்படத்தொடங்கினார். இருந்தாலும் இருவரும் சேர்ந்து இயங்கிய சிலவருடங்களில் அந்த எதிர்வு கூறலை சரியாக்குவது போல  அவர்களுக்கிடையில் இருந்த உறவு மாற ஆரம்பிக்கிறது. இதனால் அந்த எதிர்வு கூறலுக்கு அடிப்படை இருந்தாகிவிடுமா?  சீமான் மீது பிழை சாட்டத்தக்க சம்பவம் இதுவரையில் ஒன்றும் இல்லையே. 

Edited by மல்லையூரான்

ஒன்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் அவலம் நிகழும் வரை தமிழ்நாட்டில் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. நாங்கள் மொத்தமாய் அழிந்த பின்புதான் தமிழ்நாடு விழித்துக் கொண்டது.

ஏதாவது செய்ய வேண்டும் என்று தவித்த இளைஞர்கள் ஒரு தலைவனை தேடித் திரிந்தார்கள். சீமானின் உணர்ச்சி மிகுந்த உரைகளைக் கேட்டு அவர் பின் பலர் அணிவகுக்க தொடங்கினார்கள். (இதே போன்று ஒரு இளைஞர் படை ஒரு காலத்தில் வைகோவின் பின்பும் திரண்டது)

பின்பு அவருடைய தளும்பல்கள் இளைஞர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. பலர் விட்டு விலகத் தொடங்கினார்கள்.

சீமான் போன்றவர்களை நம்பிப் பலன் இல்லை என்ற முடிவில் மாணவர்கள் போராட்டத்தை தங்கள் கையில் எடுத்தார்கள்.(மாணவர் போராட்டம் என்பது சீமானால் வந்தது என்பது அந்த வகையில் பார்த்தால் உண்மைதான்).

  • தொடங்கியவர்

நான் சீமானைப் போன்று கூவிக் கொண்டு எனது செயற்பாடுகளைச் செய்யவில்லை.   இன்னொரு இனத்தின் அழிவைப் பயன்படுத்தி நான் அரசியல் லாபம் பார்க்க முனையவில்லை.   மக்களின் அவலத்தைப் பயன்படுத்தி ஒரு மாபெரும் தலைவனின் உத்தமத்தைக் களையவில்லை.   உணர்ச்சிகரமாகப் பேசி, இளைஞர்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்கவில்லை.   

தமிழீழத்திற்காகவும் எமது மக்களுக்காகவும் நான் எனது செயற்பாடுகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.   காலம் வரும்போது, அவை தானாக வெளிப்படும்.  உங்களது ஆதரவு தேவைப்படும் என நினைக்கும்பட்சத்தில் உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.  என்னைப் பொறுத்தவரை, தலைவரின் பெயரை உச்சரிப்பதற்கு சீமானைவிட அதிக உரிமையும் தகுதியும் எனக்கிருக்கிறது. 

தமிழச்சியின் அருமையான கருத்திற்கு  பத்து பச்சைகள் அள்ளிகொடுக்கின்றேன் .அடுத்தவன் எமக்கு விடுதலை எடுத்துதருவான் என எண்ணாமல்  நாம் எல்லோரும் முடிந்ததை செய்துகொண்டிருந்தாலே எமக்கு விடுதலை கிடைத்துவிடும் .

தமிழச்சியின் அருமையான கருத்திற்கு  பத்து பச்சைகள் அள்ளிகொடுக்கின்றேன் .அடுத்தவன் எமக்கு விடுதலை எடுத்துதருவான் என எண்ணாமல்  நாம் எல்லோரும் முடிந்ததை செய்துகொண்டிருந்தாலே எமக்கு விடுதலை கிடைத்துவிடும் .

அதுதானே!

ஆனால் நாளைய அலுவலை பார்க்க கிறிகெட் மச் இருக்கு.

இன்றைய அலுவலுக்கு எந்த மூவி நல்லாயிருக்கும்? :unsure:

:unsure:

:unsure:

சும்மா இருந்து சிங்களவன் பெற்ற சுதந்திரம் பெறுக இவ்வையகம்.

ராஜ நடை ராமதாஸ் பற்றி இப்பொழுது இங்குள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

நீங்க வேற  போதாதுக்கு.

எனக்கும் நம்பிக்கை இருக்கு சீமானால் இதை விட மேலும் எழுச்சிய தமிழ்நாட்டில் வரச்செயலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் போன்றவர்களை நம்பிப் பலன் இல்லை என்ற முடிவில் மாணவர்கள் போராட்டத்தை தங்கள் கையில் எடுத்தார்கள்.(மாணவர் போராட்டம் என்பது சீமானால் வந்தது என்பது அந்த வகையில் பார்த்தால் உண்மைதான்).

மாணவர்களின் போராட்டம் அரசியல்சாராத போராட்டம் என்ற தனிவடிவில் இருப்பதை சீமான் விரும்புகிறார். அதேவேளை சீமானின் ஆதரவு அங்கு பகிரங்கமாக அளிக்கப்பட்டதும்.. நாம் தமிழர் அமைப்பினர் மாணவர்களுக்கு ஆதரவளிப்பதும் உங்களால் மறைக்கப்பட்ட பகிரங்க உண்மை.

மேலும்.. அண்ணன் சீமான் முள்ளிவாய்க்காலில் ஒரு பேரவலம் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கள நிலைமையை அவதானித்து அறிவித்துக் கொண்டிருந்ததையும்... தமிழக மக்களை அறிவூட்டிக் கொண்டிருந்ததையும் சகிக்க முடியாமல் தான் அவரை உள்ள தூக்கி போட்டார் கருணாநிதி.

நீங்கள் கடந்த காலத்தை மறைச்சு பேசலாம் என்று நினைக்கும் ஒருவராக உள்ளதில் இருந்து நீங்கள் எப்படிப்பட்ட அரசியலை விரும்புவர் என்ற உண்மையும் இங்கு அப்பட்டமாக வெளிவருகிறது..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

சீமான் மட்டுமா மாணவர் போராட்டத்தை ஆதரிக்கிறார். தங்கபாலுவும், வாசனும் கூடத்தான் அதரிக்கிறார்கள். ஆதரிப்பது பிரச்சனை அல்ல. போராட்டத்திற்கு தாம்தான் காரணம் என்கின்ற உரிமை கோரலை ஒரு தனிநபர் செய்வது மோசடியானது. எல்லோரையும் விட பாலச்சந்திரனின் படத்தை வெளியில் கொண்டு வந்தவருக்கு அதில் அதிக பங்கிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கபாலு மாணவர்களால் விரட்டி அடிக்கப்பட்டார். அவரின் ஆதரவின் உள்நோக்கத்தை மாணவர்கள் அழகாக வெளிப்படுத்தினர். ஆனால் அண்ணன் சீமானின் ஆதரவை மாணவர்கள் மிக அன்போடு ஆர்வத்தோடு வரவேற்றனர். இங்கு தான்..  அந்த நெருக்கம் தென்படுகிறது.

அண்ணன் சீமான் மாணவர்களின் போராட்டம் தன்னெழுச்சியானது அதற்கு நாம் தமிழர் கட்சியின் ஆதரவு என்றும் உண்டு.. அது அரசியல் சாராத போராட்டமாக இப்போது போல் என்றும்.. இருக்க வேண்டும்.. என்று சொன்ன பின்னரும் கூட.. அதற்குள் இல்லாத இட்டுக்கதைகளை நீங்கள் முன் வைப்பதன் நோக்கம் என்ன..??! இதுவே உங்களுக்குப் பிழைப்பாப் போச்சுது. :lol::icon_idea:

இதற்குள்.. ராமதாஸை செருகினீர்கள்.. இப்போ.. பாலச்சந்திரனை செருகுகிறீர்கள். உங்கள் நோக்கத்தை நாங்கள் நீண்ட காலம் அறிந்தவர்கள் என்பதால்.. விளைவுகளை அறிந்து கருத்தாடுவோம். ஆனால் எல்லா கள உறவுகளும் அப்படியல்ல. அந்த வகையில் உங்கள் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையோடு கள உறவுகள் கருத்தாடல் செய்ய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்துகிறீர்கள்.! :D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழச்சியின் அருமையான கருத்திற்கு  பத்து பச்சைகள் அள்ளிகொடுக்கின்றேன் .அடுத்தவன் எமக்கு விடுதலை எடுத்துதருவான் என எண்ணாமல்  நாம் எல்லோரும் முடிந்ததை செய்துகொண்டிருந்தாலே எமக்கு விடுதலை கிடைத்துவிடும் .

இதை செய்யவேண்டிய நேரத்திலை செய்திருக்கலாம்.....அப்பவும்  நொள்ளும் எள்ளும்.....இப்பவும் அதே......சிறு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் இனத்தின் நலன்கருதியாவது மிண்டு குடுத்திருக்கலாம்.பின்விளைவுகளை முன்கூட்டியே தெரிந்தவர்கள் சகலதையும் சமாளித்து விடுதலையை பெற்றிருக்கவேண்டும்.

தமிழச்சி அக்காவின் பல கருத்துகளுடன் எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அவர் பிரயோசனமான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக நான் நம்புகிறேன். :rolleyes: ஆனால் அதற்காக அவர் கருத்துகளுக்கு இந்த திரியில் ஆமா போடுபவர்களோ அல்லது அவர் கருத்துக்கு பச்சை போடுபவர்களோ அவ்வாறு முயற்சிகள் எடுப்பதாக நான் நம்பவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். :D

அதேநேரம் தலைவர் பெயரை உச்சரிப்பதற்கு சீமான் அண்ணாவை விட அதிக உரிமையும் தகுதியும் உங்களுக்கு இருப்பதாக காட்டிக்கொள்ள நினைக்காதீர்கள். அது சீமான் அண்ணாவை பிழை பிடித்து விட்டு உங்களை பெருமைபடுத்தி சொல்வது போல் உள்ளது. :icon_idea:

தமிழச்சி அக்கா,
நீங்கள் கனடாவில் என்ன செய்தாலும் கனடா நிலையும் தமிழ்நாட்டு நிலையும் வேறு என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கனடாவில் மேற்கொள்ளும் முயற்சிகளை போல் மட்டும் தமிழ்நாட்டில் மேற்கொண்டால் அங்கு கண்ணை மூடிக்கொண்டு பாராமுகமாகவே இருப்பார்கள். பலன் கிடைக்காது.

மாணவர் எழுச்சி, மக்கள் எழுச்சி போன்றன ஏற்பட்டால் தான் மக்கள் குரலை தமிழ்நாடு செவி சாய்க்க முற்படும், பின்னர் இந்திய ரீதியில் அழுத்தங்களை கொடுக்க முன்வரும். (அதை இந்தியா ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளாதது அடுத்த பிரச்சினை.)

இறுதிக்கட்ட போரின்போதும் மாணவர் எழுச்சி ஏற்பட ஆரம்பித்து அது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் அன்று எமது நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலையை பலர் அறிந்திருக்கவில்லை. அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் படுகொலை காணொலிகளும் அது பற்றிய செய்திகளும் பாலச்சந்திரன் படுகொலையும் மக்கள் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் உண்மை. ஆனால் தமிழக, இந்திய ஊடகங்களில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை சம்பவங்கள் வராமல் திட்டமிட்டு மறைக்கப்பட்ட போது அவற்றை வெளிப்படையாக கூறி மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்களால் தான் இனப்படுகொலை பற்றி மக்கள் பலர் அறிந்து கொண்டார்கள் என்பதையும் நாம் மறந்து விட கூடாது. அவ்வாறான பங்களிப்புகளை செய்தவர்களில் சீமான் அண்ணாவும் ஒருவர்.

தமிழ்நாட்டில் இன்று எழுந்த மாணவர் எழுச்சி தன்னெழுச்சியாக இருந்தாலும் அவ்வாறான தன்னெழுச்சி தோன்றுவதற்கு இவர்கள் முன்னர் மேற்கொண்ட பல செயற்பாடுகளும் காரணம் என்றால் மிகையாகாது.

இன்றும் தமிழகத்திலுள்ள பல மக்களுக்கு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி தெரியாது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி பிரச்சாரம் செய்ய இப்பொழுது மாணவர்களும் முன்வருகிறார்கள். இந்த மாற்றங்களை தமிழகத்தில் ஏற்படுத்தியது நீங்களோ நானோ அல்லது இங்கு சீமான் அண்ணாக்கு எதிராக குரல்கொடுப்பவர்களோ அல்ல. :)

"இங்கே நாங்கள் உரிமையிழந்து, மானமிழந்து, அழிகிறோம், கையெட்டும் தூரத்திலுள்ள தாய்க்கொடி, தொப்புள் கொடி உறவுகள் என்ன செய்தார்கள்..? ஏன் மவுனம் காக்கிறார்கள்...? ஏன் மானாட... மயிலாடா வில் லயித்து எங்கள் நிலையை மறக்கிறார்கள்?" எனக் குமுறும் ஈழ உறவுகளே, பல்வேறு நெருக்கடிகளுக்கிடையேயும் சில தலைவர்களாவது ஈழக் கொள்கையை இங்கே உயிர்ப்புடன் வைத்திருக்க அவசியம் தேவை, இல்லையெனில் இங்கேயிருக்கும் ஆயிரத்தெட்டு உள்நாட்டு பிரச்சனைகளில், ஈழம் சார்ந்த கொள்களும், அதன் அடிப்படை பிரச்சாரங்களும் அமிழ்ந்து அடித்துச் செல்லப்பட்டுவிடும்..

ஆகவே இம்மாதிரி தலைவர்கள், தங்கள் சுயலாப அரசியலுக்கு சில நேரம் ஈழத்தை கையிலெடுத்தாலும், அந்த அரசியலை எப்படி உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என சிந்திப்பதே நல்லதொழிய, பாத்திரம் சரியல்ல..கோணலாக இருக்கு.. எனக் குறை கூறி, அதனுள்ளே இருக்கும்(அவர்கள் கொண்டு செல்லும்) ஈழமென்ற பொன்னான திரவத்தை கவிழ்த்துக்கொட்டி, உங்கள் கனவை கானல் நீராக்கிவிடாதீர்கள்!

நன்றி.

நல்ல கருத்து அண்ணா. பச்சை இல்லை. பின்னர் போடுகிறேன். :)
 
Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் மட்டுமா மாணவர் போராட்டத்தை ஆதரிக்கிறார். தங்கபாலுவும், வாசனும் கூடத்தான் அதரிக்கிறார்கள். ஆதரிப்பது பிரச்சனை அல்ல. போராட்டத்திற்கு தாம்தான் காரணம் என்கின்ற உரிமை கோரலை ஒரு தனிநபர் செய்வது மோசடியானது. எல்லோரையும் விட பாலச்சந்திரனின் படத்தை வெளியில் கொண்டு வந்தவருக்கு அதில் அதிக பங்கிருக்கிறது.

இதிலிருந்தே.... உங்களது, தமிழ்நாட்டு அரசியல் அறிவை புரிந்து கொள்கின்றோம். சபேசன்.

தமிழ்நாட்டு காங்கிரசில்... எத்தனை, கோஸ்டி இருக்கு என்று, உங்களுக்குத் தெரியுமா?

மாணவர் போராட்டத்தில்... தங்கபாலுக்கு கிடைத்த கல்லெறி தெரியுமா?

மூப்பனாரின் மகன் வாசன், என்றுமே.... தமிழீழத்துக்கு ஆதரவானவர்.

விடை.. விரைவில், கிடைக்கும்.

தமிழகத்தில்... காங்கிரஸ் காணாமல் போகும்.

ஒன்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் அவலம் நிகழும் வரை தமிழ்நாட்டில் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. நாங்கள் மொத்தமாய் அழிந்த பின்புதான் தமிழ்நாடு விழித்துக் கொண்டது.

யாருக்கும் காங்கிரசின் ஆமி முள்ளிவாய்க்குள் நின்று போராடியது தெரிந்திருக்கவில்லை. இரகசியங்களை கோத்தா போன்றவர்கள் மெல்ல மெல்ல வெளிவிட்டார்கள். அழிவு பற்றி எந்த பத்திரிகையும் எதுவும் வெளிவிட வில்லை பலர் யாழிலும் கட்டுரை வரைந்தாக சொல்லப்படுகிறது. அவைகூட வியூகம் பற்றியயவை மட்டுமே. யாழ் தன்னும் அழிவின் அளவை, புலம் பெயர் சமூகம், தமிழ் நாடு, சர்வதேச நாடுகள் அறியத்தக்கதான முறையில் வெளிவிட்டிருக்கவில்லை. அழிவின் ஆள் கணக்குப் போட்டவர் மன்னர் ஆயர். இது LLRC முன் காட்டவே. முகுதி எதுவும் நடக்கவில்லை. அழிவு நடந்தை தெரியாவிட்டால், தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை அழிவு நடக்கவில்லை. இந்த காலத்தின் சீமான் முதல் கொண்டு பலர் கருணாநிதியினால் சிறையில் போடப்பட்டு எழுச்சி வரராமல் பாது காக்கப்பட்டது. அவர்களுக்கு உண்மையை மறைத்த துரோகி கருணாநிதி. பலர் இப்படி உண்மையை மறைத்த  கருணாந்தியை காப்பாற்றிவிட்டு, அப்பாவிகளாக இருந்த மக்கள் மீதும், மாணவர்கள் மீதும் குற்றம் சாட்டுகிறார்கள். 

கருணாநிதி தமிழ் நாடு மக்களை எழுச்சி அடையவிடாமல்அடக்கியது மத்திய தேர்தலுக்கு முன்னர்.  போரின் தார்ப்பரியம் தெரிந்த பின்னர் சீமானின் பிரசாரம் முழு அளவில் ஆனது. அந்த பிரசாரத்தால். கருணாநிதி எதிர்க்கட்சிக்கு தன்னும் போக முடியாமல் தோற்றார். கருணாநிதியின் தோல்வியின் பின்னர் ஜெயலலித்தா அரசுக்கு மத்தியில் எந்த சொல்லும் இருக்கவில்லை. கருணாநிதியும் வழக்கு மூலம் கையாளப்பட்டிருந்தார்.  இழந்த மதிப்பை டெசொ கூட்டத்தில்  கருணாநிதி பெற முயன்றபோது தமிழ்ஈழம் என்ற சொல்லுக்கு தடை வந்தது. மத்தியில் தமிழ் மக்களுக்கு அரசியில் செல்வாக்கிருக்கவில்லை. காங்கிரஸ் இரண்டாம் ஐ. நா பிரேரனையில் என்ன செய்யும் என்பது தெரிந்திருக்க வில்லை. தமிழ்நாடு முறுக்கேறிய நிலையில் இருந்தது. அப்போது மாணவர் எழுச்சி ஆரம்பமானது. 

ஏதாவது செய்ய வேண்டும் என்று தவித்த இளைஞர்கள் ஒரு தலைவனை தேடித் திரிந்தார்கள். சீமானின் உணர்ச்சி மிகுந்த உரைகளைக் கேட்டு அவர் பின் பலர் அணிவகுக்க தொடங்கினார்கள். (இதே போன்று ஒரு இளைஞர் படை ஒரு காலத்தில் வைகோவின் பின்பும் திரண்டது)

 இப்படி எழுதுவது இங்கே சமர்பிக்கத்தாக எந்த ஆதாரத்தையும் பின்னணியாக கொள்ளாத ஒரு (வி)யூகம் மட்டுமே.  மாணவர் எழுச்சிக் காலத்தில் சீமானின் செய்த பிராசாரதிலும் பார்க்க பலமடங்காக மாநிலத்தேர்தல் நேரம் செய்திருந்தார்.  மாணவர் எழுச்சி நேரம் சீமான் மற்றத் தலைவர்களுக்கு சமனாக  மத்திய அரசின் ஐ.நா பிரேரணையை  நிலைப்பாட்டை தன்னும் எதிர்த்தாரா தெரியாது. ஆனால் பொய்யட் மாணவர் போராட்டத்தை பற்றி எழுதிய போது  இந்தப் போராட்டம் பருமனின்  1969 நடந்த இந்தி எதிர்ப்புகளை விட பாரதூரமானது என்று எழுதியிருந்தார். 

பின்பு அவருடைய தளும்பல்கள் இளைஞர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. பலர் விட்டு விலகத் தொடங்கினார்கள்.

அண்ணா சம்பத், தமிழரசுக்கட்சி- நவரத்தினம் இவர்களின் விழுக்காட்டை வைகோ சந்திக்காதது பெருமையே  ஆழ்மையில் இருக்கும் கட்சியை விட்டு விட்டு போய் SJV, அண்ணா, M.G.R வென்றார்கள்.  இது எப்போதும் நியதி அல்ல.  கருணாநிதிவிட்ட தளம்பல்களில் 100ல் ஒன்று வை.கோ விட்டவில்லை.  கருநாந்தி தளம்பலகள் அல்ல பல நாடகங்களையே நடத்திவிட்டும் மத்தியில் என்றார். ஆனல் வை.கோவால் நவரத்தியனம் மாதிரியே மக்களை கவர முடியவில்லை. 

சீமான் போன்றவர்களை நம்பிப் பலன் இல்லை என்ற முடிவில் மாணவர்கள் போராட்டத்தை தங்கள் கையில் எடுத்தார்கள்.(மாணவர் போராட்டம் என்பது சீமானால் வந்தது என்பது அந்த வகையில் பார்த்தால் உண்மைதான்).

இதை மாணவர்கள் எங்கே சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியாது. ஆதரம் இணைக்கப்படும் வரை இதுவும் இன்னொரு (வி)யூகமாக இருக்கலாம். 

பலவற்றை தப்பாக விளங்கியதால் வந்த கருத்து இது. முதல் தப்பான விளக்கம் விழிப்பூட்டுவதற்கும் ,  பாடசாலையில் படிப்பிப்பதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமை. இதில் கருத்தெழுதியவர்கள் விழிப்பூட்டியதால் எழுச்சி வந்ததாகத்தான் கூறினார்கள். சிலர் மாணவர்களுக்குச் சீமான் பாடம் புகட்டியதாக எழுதியிருப்பத்தாக வைத்து கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வழமையில் வாத்தியார் எதுவரையும் படிபித்தாரோ அது வரையும் தான் மாணவர்கள் போய் இருப்பார்கள். வாத்தியார் 6 ஆம் வகுப்புக்கு படிப்பித்தால் மாணவர்கள் இரண்டாம் வகுப்பிலோ அல்லது 10ம் வகுப்பிலோ சேரமாட்டார்கள்.  ஆனால் விழுப்பூட்டல் நடை பெற்றால் போதைனையை பெற்றோர் எழுச்சியால் வெகு இலகுவாக போதகரை கடந்து போவார்கள். விழிப்பு நடைபெறாவிட்டால் போதகர் நேரத்தை வீணாக்கியதுதான் மிச்சம். இதை விளங்கி வைத்திருந்தால் இப்படி ஒருகருத்துவைபட்டிருக்காது. சீமானுக்கு மாணவர் எழுச்சி ஒரு வெற்றியே.  

தமிழச்சி அக்காவின் பல கருத்துகளுடன் எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அவர் பிரயோசனமான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக நான் நம்புகிறேன். :rolleyes: ஆனால் அதற்காக அவர் கருத்துகளுக்கு இந்த திரியில் ஆமா போடுபவர்களோ அல்லது அவர் கருத்துக்கு பச்சை போடுபவர்களோ அவ்வாறு முயற்சிகள் எடுப்பதாக நான் நம்பவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். :D

அதேநேரம் தலைவர் பெயரை உச்சரிப்பதற்கு சீமான் அவர்களை விட அதிக உரிமையும் தகுதியும் உங்களுக்கு இருப்பதாக காட்டிக்கொள்ள நினைக்காதீர்கள்.  :icon_idea:

தமிழச்சி அக்கா,

நீங்கள் கனடாவில் என்ன செய்தாலும் கனடா நிலையும் தமிழ்நாட்டு நிலையும் வேறு என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கனடாவில் மேற்கொள்ளும் முயற்சிகளை போல் மட்டும் தமிழ்நாட்டில் மேற்கொண்டால் அங்கு கண்ணைமூடிக்கொண்டு பாராமுகமாகவே இருப்பார்கள். பலன் கிடைக்காது.

மாணவர் எழுச்சி, மக்கள் எழுச்சி போன்றன ஏற்பட்டால் தான் மக்கள் குரலை தமிழ்நாடு செவி சாய்க்க முற்படும் பின்னர் இந்திய ரீதியில் அழுத்தங்களை கொடுக்க முன்வரும். (அதை இந்தியா ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளாதது அடுத்த பிரச்சினை.)

இறுதிக்கட்ட போரின்போதும் மாணவர் எழுச்சி ஏற்பட ஆரம்பித்து அது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் அன்று எமது நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலையை பலர் அறிந்திருக்கவில்லை. அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் படுகொலை காணொலிகளும் அது பற்றிய செய்திகளும் பாலச்சந்திரன் படுகொலையும் மக்கள் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் உண்மை. ஆனால் தமிழக, இந்திய ஊடகங்களில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை சம்பவங்கள் வராமல் திட்டமிட்டு மறைக்கப்பட்ட போது அவற்றை வெளிப்படையாக கூறி மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்களால் தான் இனப்படுகொலை பற்றி மக்கள் பலர் அறிந்து கொண்டார்கள் என்பதையும் நாம் மறந்து விட கூடாது. அவ்வாறான பங்களிப்புகளை செய்தவர்களில் சீமான் அவர்களும் ஒருவர்.

தமிழ்நாட்டில் இன்று எழுந்த மாணவர் எழுச்சி தன்னெழுச்சியாக இருந்தாலும் அவ்வாறான தன்னெழுச்சி தோன்றுவதற்கு இவர்கள் முன்னர் மேற்கொண்ட பல செயற்பாடுகளும் காரணம் என்றால் மிகையாகாது. இன்றும் பல மக்களுக்கு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி தெரியாது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி பிரச்சாரம் செய்ய இன்று மாணவர்களும் முன்வருகிறார்கள்.

இந்த மாற்றங்களை தமிழகத்தில் ஏற்படுத்தியது நீங்களோ நானோ அல்லது இங்கு சீமான் அண்ணாக்கு எதிராக குரல்கொடுப்பவர்களோ அல்ல. :)

நல்ல கருத்து அண்ணா. பச்சை இல்லை. பின்னர் போடுகிறேன். :)

துளசி, விடுதலைப் புலிகளைப் பற்றியும் எமது போராட்டம் பற்றியும் எமக்குத் தெரிவதற்கு முன் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்திருந்தது நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்.  எமது போராட்டத்தைக் கட்டியெழுப்பியதில் தமிழ்நாட்டு மக்களுக்கும் பங்குண்டு.   அவர்களின் தூய தமிழுணர்வை நான் என்றுமே மறக்க மாட்டேன்.  தமிழ்நாட்டு மக்கள் வேறு.  சீமான் வேறு என்பதுதான் இங்கு வாதம்.  தமிழ்நாட்டு மாணவர் எழுச்சிக்குக் காரணம் இரண்டு பெண்மணிகள்தானே தவிர, இங்கு குறிப்பிட்டிருப்பவர்கள் எவரும் அல்ல.  உலக அரசியல் நன்கு அறிந்தவர்களுக்கு அது விளங்கும்.  மேலதிகமாக அதனைப் பற்றி இங்கு பிரஸ்தாபிக்க விரும்பவில்லை. 

 தலைவர் பெயரை உச்சரிப்பதற்குப் புலத்திலிருந்து உண்மையான உணர்வோடும் இதயசுத்தியோடும் செயற்பட்ட அனைத்துச் செயற்பாட்டாளர்களுக்கும் சீமானைவிட அதிக உரிமையும் தகுதியும் இருக்கிறது.  பல ஆண்டுகளாக குளிரென்றும், பனிப்பொழிவென்றும் பாராது செயற்பட்டவர்கள் நாங்கள்.  வீடு, வீடாகச் சென்று பணம் சேகரித்து அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் நாங்கள்.   தலைவருக்காகவும் அமைப்பிற்காகவும் நாம் வாழும் நாடுகளின் அரசியல் தலைவர்களோடு முட்டுப்பட்டு, முகமுடைந்து ஏன் அடிக்கடி காவல்துறையினராலும் புலனாய்வுத் தறையினராலும் கண்காணிப்பிற்குள்ளாகி இன்றும் அவர்களுடைய கண்காணிப்புப் பார்வையிலிருந்து விலத்தப்படாமல் எம்மினத்திற்காக, எம்மக்களுக்காக, இடம், பொருள், ஏவலுக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களும் நாங்கள்தான்.  நாம் செய்தவற்றின் ஒரு தூசியைக்கூட இவர் செய்யவில்லை.  இவர் செய்ததெல்லாம் மேடை போட்டு தன்னை விற்றதே தவிர வேறொன்றுமில்லை.  ஆனால், நாம் தலைவர் பெயரை உச்சரிப்பதற்கு உரிமை இருந்தும் அடக்கியே வாசித்து வருகிறோம். 

தமிழ்நாட்டு அரசியல் தெரியாமல் நான் இங்கு கருத்து வைக்கவில்லை துளசி.  நான் நன்றாக அறிந்த விடயங்கள் பற்றி மட்டுமே இங்கு கருத்துக்கள் வைப்பதுண்டு.  மற்றவர்கள்போல், நான் கண்டபடி கருத்துக்கள் வைப்பதில்லை.  மேலதிகமாக இங்கு எழுத விரும்பவில்லை.

விடுதலைப்புலிகளையும் போராட்டத்தையும் பற்றி தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருந்தார்களா இல்லையா என்பதல்ல பிரச்சினை. இறுதியில் நடைபெற்ற இனப்படுகொலை விடையங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டன என்பதையே குறிப்பிட்டிருந்தேன். சீமான் அண்ணாவும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஒன்று என்று நான் எங்குமே சொல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களிடம் எமது பிரச்சனைகளை கொண்டு சென்ற நபர்களில் இவரும் ஒருவர்.

தமிழக மாணவர் எழுச்சி தன்னெழுச்சியானது என நான் நம்புகிறேன். இங்கு பலர் ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்டது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள். நீங்களும் அவ்வாறு தான் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. அது உங்கள் விருப்பம். இன்னொரு பெண்மணியாக யாரை குறிப்பிட்டுள்ளீர்களோ தெரியவில்லை. அது பற்றி நீங்கள் கருத்து கூற விரும்பாததால் நானும் கேட்கவில்லை.

ஆனால் உங்கள் வழியில் உங்களுக்கு பதிலளிப்பதானால்,

ஒருவேளை மாணவர் எழுச்சிக்கு இரு பெண்கள் காரணம் என நீங்கள் நினைத்தால் அவர்களால் தூண்டிவிடப்பட்டவர்கள் மற்ற மாணவர்களை பார்த்து வாடா மச்சான் போராடலாம் என்று கேட்டவுடன் போராட செல்லுமளவில் மாணவர்கள் இருந்திருக்கவில்லை. அதையும் மீறி போராட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதற்கு காரணம் ஈழ பிரச்சினை. அதை மாணவர்களிடம், மக்களிடம் பலகாலமாக கொண்டு போய் சேர்த்தவர்கள் சீமான் அண்ணாவும் மற்றும் பலரும். மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ததாகட்டும் சேனல் 4 காணொலி தமிழகத்தில் பார்க்க முடியாமல் தடை செய்யப்பட்டிருந்த போது மக்களை கூட்டம் கூட்டி அதை போட்டுக்காட்டி எமது பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றதாகட்டும் சீமான் அண்ணா உட்பட பலரின் முயற்சி அது. மற்றபடி கலைஞரோ அல்லது ஜெயலலிதாவோ அதை செய்திருக்கவில்லை.

எனவே சீமான் அண்ணா ஒரு தூசியை கூட செய்திருக்கவில்லை என்ற உங்கள் கருத்தை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

நீங்கள் பலவாறு துன்பப்பட்டிருக்கிறீர்கள் என்பது சரி. ஆனால் துன்பப்பட்டமைக்காக மற்றவர்களை விட நாம் தான் உயர்ந்து நிற்கிறோம் என்ற எண்ணம் எழுவது தவிர்க்கப்பட வேண்டியது.

எத்தனை பேர் போராடினார்கள் என்பதை விட எத்தனை பேரை போராட வைத்தார் என்பதிலேயே வெற்றி தங்கியுள்ளது. (முகநூல் :)) அந்த வகையில் உங்களை விட அதிகமாக ஈழப்பிரச்சினையை மக்களிடம் (அதுவும் தமிழக மக்களிடம்) கொண்டு சென்று சேர்த்தவர்களில் சீமான் அண்ணாவின் பங்கு அளப்பரியது. எனவே தலைவர் பெயரை உச்சரிக்கும் தகுதி உங்களை விட சீமான் அண்ணாவுக்கு அதிகமாகவே உள்ளது.  :rolleyes: இதை கூறுவதற்காக மன்னிக்கவும். :rolleyes:

ஆனால் பொதுவான எனது கருத்து,

தலைவர் பெயரை யாரும் உச்சரிக்கலாம். எம் தலைவர் பிரபாகரன் தான் என்று தமிழக மக்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களும் இப்பொழுது உச்சரிக்கிறார்கள். அதில் தவறும் இல்லை. தான் தான் ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவன் அல்லது புலிகளின் தலைவன் என இன்றைய நிலையில் யாராவது கூறினால் தான் அது விமர்சனத்துக்கு ஒப்பானது. அவ்வாறு சீமான் அண்ணா கூறியிருக்கவில்லை. அவரும் தலைவர் பிரபாகரன் என்றே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

எங்காவது முகநூலில் யாராவது சீமான் அண்ணா தான் புலிகளின் தலைவர் அல்லது ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவர் என்று நாளைக்கே போட்டால் கூட அதை சீமான் அண்ணாவின் கருத்தாக எடுத்து அவரை விமர்சிப்பதில் அர்த்தமும் இல்லை. :wub: மற்றபடி அவர் நாம் தமிழர் கட்சிக்கு தலைவராக இருந்தால் அது பற்றி விமர்சிக்க எமக்கு உரிமையில்லை. அது அவர் கட்சி.

சீமான் அண்ணா அப்படி நடக்க போகிறார், இப்படி நடக்க போகிறார், அவர் நோக்கம் தவறானது, பணத்தை சுருட்ட போகிறார், அவரால் எமக்கு தீமை என்று சும்மா குறை சொல்வதை விடுத்து அவர் அப்படி இப்படி நடந்தால் அதன் பின்னர் நாம் சொல்லாமலேயே தமிழக மக்கள் அவரை புறக்கணிப்பார்கள். இன்று வரைக்கும் அவரால் எமக்கு தீமை வரவில்லை.அப்படியிருக்க அவர் மேலான விமர்சனம் அவசியமற்றது.

இங்கு அர்ஜுன் அண்ணா எதற்காக இந்த படத்தை இவ்வளவு நக்கலடிக்கிறாரோ தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியின் கொடி புலிக்கொடி. அதை பறக்க விட்டு தமது கட்சியினர் மத்தியில் நடந்து வருவதை சிங்க நடையா ராஜ நடையா என்று ஆராய்ச்சி பண்ணி அவரை பவர் ஸ்டார், புலிக்கேசி என விமர்சிப்பது தேவையில்லாத வேலை.

Edited by துளசி

திரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. களவிதிகளை மீறாத வகையிலும், தமிழர்களின் விடுதலைக்காக உண்மையாகப் பாடுபடும் தமிழக உணர்வாளர்களைப் புண்படுத்தாமலும் ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடருங்கள்.

தவறு ஒன்றும் இல்லை .இந்தியா ஒரு ஜனநாயக நாடு :D .நீங்கள் விரும்பியதை செய்யலாம் .பவர் ஸ்டார் தான்தான் சூப்பர் ஸ்டாருக்கு போட்டி என்பது போலத்தான் உதுவும் .

இங்கு சீமானை பார்க்க சிரிப்புதான் வருகின்றதே ஒழிய ஒரு மரியாதை வரவில்லை .(புலிகேசி தான் நினைவில் வருகின்றது ).

அர்சுனின் கருத்துக்களைப்படிக்கும் போது மரியாதை வருவதுண்டா? 

அவரின் கருத்து அவரின் மனதில் சீமானான இருந்தால், அதில் வரும் "மொக்குக்குகூட்டம்"  என்ற சொலவடை கறுப்புச்சட்டை போட்ட காவலாளி. அந்த கவலாளி அவரின் கருத்துக்களுக்கு முன்னே வருபவன்.

  • கருத்துக்கள உறவுகள்

சூசை அண்ணாவின் இறுதி உரையாடல் இருந்தால் யாராவது ஒருக்கா இணைச்சு விடுங்கப்பா......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.