Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீயும் ஊரவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"அண்ணே எங்க போகவேணும்"

பஸ்வண்டியை விட்டு கீழே இறங்கியவுடன் அந்த குரலை கேட்க மனதில் என்னை அறியாமலே ஒரு மகிழ்ச்சி ,"மாத்தயா கொயத யன்னே" என்ற குரல் போய் அண்ணே எங்க போகவேணும் என்றது எனது சனத்துடன் நான் ஜக்கியமானது போன்ற ஒர் உணர்வு உண்டானது.கையில் இருந்த ஒரே ஒரு பையையும் தூக்கிக் கொண்டு

"தம்பி மானிப்பாய் போகவேணும் ஒட்டோவில மீற்றர் இருக்கோ,மீற்றர் போடுவீரோ"

"அண்ணே இங்க மீற்றர் இல்லை மானிப்பாய்க்கு போக 400 ரூபா வரும்"

"என்ன வழமையாக 300 ரூபா தானே கொடுக்கிறனான் ,நீங்கள் என்ன நானூறு கேட்கிறீங்கள்".

. யாழ்நகரில் ஒட்டோ ஒடத்தொடங்கிய பின்பு கொழும்பில் இருந்து வந்த பஸில் இறங்கி இப்பதான் முதல் முதலாக ஒட்டோவில ஏறி ஊருக்கு போறன் என்ட விசயம் ஒட்டோக்காரனுக்கு தெரியாது என்ற எண்ணத்தில் அப்படி ஒரு பொய்யை சொல்லி பேரம் பேசினேன்.

"அண்ணே இப்ப எல்லோரும் நானூறு தான் எடுக்கிறவையள்,வந்து ஏறுங்கோ"

நாலு டொலர்தானே வரும் எங்கன்ட காசில என நினைத்தபடியே போய் ஏறினேன்.ஊருக்கு போராய் கண்ட சனத்தோடயும் வாயை கொடுக்காதே என கொழும்பில இருக்கிற உறவுகள் அறிவுரை சொன்னதிற்கு ஏற்ப நானும் பெரிதாக ஒட்டோ சாரதியுடன் பேச்சுக்கொடுக்கவில்லை. "அண்ணே இப்ப குளிராக இருக்கு மத்தியானம் பயங்கர வெய்யில் அடிக்கும்" என்று சொல்லி எனது மெளனத்தை கலைத்தார்.

"அப்படியா"

"மானிப்பாயில் எவடத்த "

"சுதுமலை சந்தியடிக்கு போங்கோ கிட்ட போன பிறகு வீட்டை காட்டுகிறேன்"

"அண்ணே வெளிநாடோ,கொழும்போ"

"நான் கொழும்பு " ஒட்டோவில் ஏறியவுடன் யாழ்நகரை வியப்பாக பார்த்த பார்வையில் சாரதிக்கு விளங்கியிருக்கும் மச்சான் வெளிநாடு என்று.வெளிநாடு என சொல்லாமைக்கு முக்கிய காரணம் சுயபாதுகாப்புத்தான். "இதில திருப்புங்கோ வலக்கை பக்கம் வாற நாலாவது வீட்டடியில் நிற்பாட்டுங்கோ"பேசியபடியே நானூறு ரூபாவை கொடுத்துவிட்டு ஒட்டோ போனபின்பு இடக்கை பக்கம் இரண்டாவதாக இருக்கிற எனது பெரியம்மா வீட்டை சென்றேன்.இதுவும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தான். இவர் பெரிய தேசியவீரன் இவருக்கு சுயபாதுகாப்பு என்ன கோதாரிக்கு என நீங்கள் எண்ணக்கூடும்,ஆனால் ஒரு பிரபல எழுத்தாளரை கண்டவுடன் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டு மாலை மரியாதை செய்துவிடுவார்களோ என்ற பயம் தான்.

கிணற்றில் குளிக்கலாம் என்று போனால் அங்கு கப்பியும் இல்லை துலாவும் இல்லை..."தம்பி இங்க வந்து பாத்ரூம்மில் குளி" .

குளித்து விட்டு பெரியம்மா தந்த சுடான தேனீரை பருகிவிட்டு .மருதடியானை தரிசிக்கலாம் என வெளிக்கிட்டேன். பெரியம்மாவுக்கு தெரிந்த ஒட்டோசாரதியை ஒழுங்கு படித்தித் தந்தார்.அவர் தெல்லிப்பளையில் இருந்து புலம்பெயர்ந்து 20 வருடமாக மானிப்பாயில் வாழ்பவர்.என்னுடைய வயதுதான் இருக்கும் இருந்தும் என்னை தம்பி என்று அழைத்தார் .அவரைவிட இளமையாக அவருக்கு தெரிந்திருக்கிறேன் எல்லா புகழும் அவுஸ்ரேலியாவுக்கே.. "தம்பி மருதடிக்கோ விட,நீங்கள் அந்த அம்மாவுக்கு என்ன முறை?"

" ஒம் மருதடிக்கு விடுங்கோ அவவின்ட தங்கைச்சியின் மகன்"

அவரின் கேள்விகளுக்கு பதிலளித்தபடியே , பள்ளிபருவத்தில் உலா வந்த வீதியையும் அறிந்தவர்கள் வீடுகளையும் பார்த்த படியே சென்றேன்.வீதியில் அறிந்தவர் எவரும் கண்னில் படவில்லை.

வயலும் வயல் சார்ந்த இடத்தில் நம்மட மருதடியான் வீற்றிருந்தான்.முன்பு பழைய கட்டிடத்தில் கம்பீரமாக ஒளிவீசிகொண்டிருந்தவனை புதுதாக கோயில் கட்டுவதாக வெளிக்கிட்டு எழு வருடமாக கொட்டிலில் வைத்திருக்கிறார்கள்.

அவனையும் வீழ்ந்துவணங்கி ,யாராவது தெரிந்தவர்கள் வருவார்கள் ஊர் விடுப்பு அறியலாம் என சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். வயயோதிபர் ஒருவர் அருகில் வந்து

"தம்பி ஊருக்கு புதுசோ என்றார்."

"இல்லை நான் இந்த ஊர்தான்"

"நான் முப்பதுவருசமா இந்த கோயிலுக்கு வந்து போறன் உம்மை கண்டமாதிரி தெரியவில்லை,நீர் ஆர்ட மோன்,உம்மன்ட வீடு எங்கயிருக்கு "

"அண்ணே நீங்கள் முப்பது வருசமா வந்து போறீயள் நான் பிறந்ததில் இருந்து வந்து போறன்.உந்த மருதடியானிட்ட கேளுங்கோ சொல்லுவான்"என்று சொல்லிவிட்டு ஒட்டோவில் வந்து ஏறி சுதுமலை அம்மன் கோவிலுக்கு போக சொல்லிவிட்டு மீண்டும் வீதியை நோட்டம் விட்டேன் அறிந்தவர் எவரும் கண்ணில் படவில்லை. ஒட்டோவுக்குரிய பணத்தை கொடுத்து விட்டு ஆலயத்தினுள் சென்றேன் சுதுமலை அம்மன் கோவிலிலும் புனர்நிர்மாண வேலைகள் நடை பெறுவதால் மூலஸ்தானத்தில் இருந்த அம்மனும் அவரது குடுமபத்தினரும் வெளியே குடிபெயர்ந்து இருந்தனர்.ஒரு விதத்தில் எனக்கும் நன்மையைக இருந்தது.தூரத்தில் இருந்து மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனின் உருவம் இலகுவில் தெரியாது ஆனால் புதிதாக குடிபெயர்ந்த இடத்தில் அம்மனின் உருவம் நன்றாகவே தெரித்தது.வணங்கிவிட்டு தெரிந்தவர்கள் யாராவது கண்னில் படுகிறார்களா என நோட்டம் விட்டேன்.நான் அறிந்தவர் எவரும் இல்லை.என்னை அறிந்தவர்கள் யாரும் இல்லை.கோவிலின் வெளியே வந்து அமர்ந்திருந்தேன்.பூஜை முடிந்து வீடு செல்ல வந்த ஐயர்

"தம்பி ஊருக்கு புதுசோ, இந்த பக்கம் நான் உங்களை காணவில்லை" என கேட்டார்.

"இல்லை ஐயா நான் இந்த ஊர்தான்"

"அப்ப உங்கன்ட வீடு எங்க இருக்கு"

25 வருடங்களுக்கு முதல் எங்களுக்கு சொந்தமாய் இருந்த நான் ஒடி விளையாடிய,பாடசாலையில் உயர்கல்வி படிக்கும் பொழுது சைக்கிளில் மதிலில் சாய்த்துவிட்டு பெடியங்களுடன் அரட்டை அடித்த வீட்டை சொன்னேன்.உடனே அவர் தற்பொழுதைய சொந்தகாரனின் பெயரை சொல்லி அவரின் தம்பியோ என கேட்டார் .

"இல்லை ஐயா இப்ப அவர்தான் வாங்கி இருக்கிறார் நாங்கள் வீட்டை வித்து 20 வருசத்திற்கு மேலாய் ஆகிவிட்டது"

"அது தானே பார்த்தேன் 20 வருசத்திற்க்கு மேலாக இந்த கோவிலில் பூஜை செய்கிறேன் எனக்கு தெரியாத ஆட்களா இந்த ஊரில்”

ஐயரின் பூர்வீகத்தை அறிவோம் எண்டுபோட்டு முந்தி இந்த கோவிலில் பூஜை செய்த குருக்களின் சொந்தமோ நீங்கள் என்று கேட்டேன்.

"அவரை உங்களுக்கு தெரியுமோ,அவர் என்ட மாமா "

"உங்களுக்கு அவரை எப்படி தெரியும்"

"எங்கன்ட திருவிழாவில் அவரிட்டதான் காளாஞ்சி வாங்கிறனான்"

"எந்த திருவிழா உங்கன்ட"

"ஒன்பதாம் திருவிழா "

"அட நீங்கள் ஒன்பதாம் திருவிழா உபயகாரரின்ட ஆட்களே,முதலே சொல்லியிருக்கலாம் "சரி நான் வீட்டை போயிற்று வாறன் பிறகு சந்திப்போம்.

நடந்து வீடு செல்லும் பொழுதும் யாராவது என்னை அடையாளம் கண்டு கதைப்பார்களா என்ற ஏக்கத்துடனே வீடு சென்றடைந்தேன்.

அடுத்த நாள் காலை 5 மணிக்கு கோவில் மணியோசை கேட்டு விழித்தேன்.தொடர்ந்து 'விநாயகனே விணை தீர்ப்பவனே' என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலிக்கதொடங்கியது.குளித்து மீண்டும் கோவிலுக்கு சென்றேன்.

சுதுமலை அம்மன் கோவிலின் வளவில் சிவனுக்கும்,முருகனுக்கும் வைரவருக்கும் தனி கோவில்கள் உண்டு.சிவன் கோவில் திருவிழாவிற்கே நான் ஊருக்கு சென்றேன்.அந்த திருவிழா எனது மாமா உயிருடன் இருக்கும் பொழுது செய்து வந்தார் .அவர் கொழும்பில் இருந்தபடியால் திருவிழாவுக்குரிய பணத்தை அனுப்புவார் நான் தான் தெற்பை போடுவதுவழமை.பிற்காலங்களில் நான் புலத்தில் இருந்து பணம் அனுப்புவேன் பெரியம்மா செய்து கொண்டிருந்தார்.

25 வருடங்களின் பின்பு மீண்டும் என் பணத்தில் தெற்பை போட்டு வழிபடும் சந்தர்ப்பம் முதல்தரம் கிடைத்தது.அன்று ஒருத்தரும் என்னிடம் நீங்கள் யார்? ஊருக்கு புதுசோ என்ற கேள்வியை கேட்கவில்லை?மூலஸ்தானத்தை பார்த்தேன் சிவலிங்கம் என்னை பார்த்து "டேய் நீயும் ஊரவன் தான்டா"என்ற மாதிரி இருந்தது.

என் ஊர்கோவில் என்னை அடையாளப்படுத்த உதவிற்று..எல்லா புகழும் கோவிலுக்கே....இதற்குதான் அந்த காலத்தில் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொன்னார்களோ என எண்ண தோன்றுகிறது.

ஒரு இனத்தை அழிக்க பல வகையிலும் முயற்சி செய்தும் அவர்களின் ஆத்மீக பலம் அந்த மக்களை மீட்டுள்ளது என்பதை நேரில் கண்டேன்.எந்த இசங்களும் ,ஆயுதங்களும்,தனிமனித சித்தாத்தங்களும் செய்ய முடியாததை கோவில் செய்துள்ளது.

ஒம்நமசிவாய....

புத்தனுக்கு கிறுக்கு பிடிச்சிட்டு நினைக்க வேண்டாம்....

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ புரியிற  மாதிரி  இருக்கு

ஆனால் புரியல

தப்பு உங்கட இல்லை

எனது பார்வை பிழை

ஆனால் மாத்த மாட்டன்  சொல்லிப்போட்டன்

 

(திருத்தம் - எழுத்துப்பிழை)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1, "மாத்தயா கொயத யன்னே" என்ற குரல் போய் அண்ணே எங்க போகவேணும் என்றது எனது சனத்துடன் நான் இல்லை..."தம்பி இங்க வந்து பாத்ரூம்மில் குளி" .

"

2.""அட நீங்கள் ஒன்பதாம் திருவிழா உபயகாரரின்ட ஆட்களே,முதலே சொல்லியிருக்கலாம் "சரி நான் வீட்டை பாடல்

 

3.மூலஸ்தானத்தை பார்த்தேன் சிவலிங்கம் என்னை பார்த்து "டேய் நீயும் ஊரவன் தான்டா"என்ற மாதிரி இருந்தது.

 

4. ஒரு இனத்தை அழிக்க பல வகையிலும் முயற்சி செய்தும் அவர்களின் ஆத்மீக பலம் அந்த மக்களை மீட்டுள்ளது என்பதை நேரில் கண்டேன்.எந்த இசங்களும் ,ஆயுதங்களும்,தனிமனித சித்தாத்தங்களும் செய்ய முடியாததை கோவில் செய்துள்ளது.

 

 

புத்தன் நன்றாக இருக்கிறது -

1. எனக்கும் இந்த அனுபவம் இருக்கு.."இசற பகிண்ட" என்பதை எப்படி தமிழில் சொல்லுவது என்று- "மணியன்ன அடுத்த ஹோல்ட் இறக்கம் "...கொழும்பில திரித்து போட்டு யாழ்பாணத்தில் பஸ்ஸில் பயணம் செய்யும் போது வார ஒரு வித தயக்கம்

2 . உங்களை யாருக்குமே தெரியவில்லை- உங்களுடைய காசையும் குடும்பத்தையும் தெரிகிறதே தவிர "புத்தனை" தெரியாது

3..உங்களை தெரிந்தவர் அவர் மட்டும்தான் - இந்த கதையில்

4. நீங்கள் சொல்லுவது விளங்கவில்லை...2 க்கும் 3 க்கும் முரணாகவே 4 வது இருக்கிறது ..

நேரம் இருந்தால்  4 வதில் என்ன சொல்லுகிறீர்கள் என்று சொல்லவும்..மற்ற கள உறவுகள் சொன்னாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் .

மீண்டும் ஒருமுறை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ புரியிற  மாதிரி  இருக்கு

ஆனால் புரியல

தப்பு உங்கட இல்லை

எனது பார்வை பிழை

ஆனால் மாத்த மாட்டன்  சொல்லிப்போட்டன்

 

(திருத்தம் - எழுத்துப்பிழை)

 

நன்றிகள் விசுகு ...குடியுரிமை இல்லை,சொந்த வீடு இல்லை தெரிந்த,அறிந்தமக்கள் இல்லை இருந்தாலும் அந்த கோவில் உறவு மட்டும் என்னை அந்த ஊரவன் என்ற உரிமையை தந்தது போன்ற ஒர் உணர்வு ஏற்பட்டது.....அவ்வளவுதான் விசுகு ...மீண்டும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-

1. 4 வதில் என்ன சொல்லுகிறீர்கள் என்று சொல்லவும்..மற்ற கள உறவுகள் சொன்னாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் .

மீண்டும் ஒருமுறை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

 

கோவில் தேவையில்லை,கடவுள் வழிபாடு முட்டாள் தனம் ,புரட்சி என்ற கொள்கைக்கு தமிழர் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் எதிரி இனத்தை இலகுவாக அழித்திருப்பான்..மதம் இருந்தபடியால் ஒரளவுக்கேனும் தப்பிபிழைக்க கூடியதாக இருந்துள்ளது என நான் நம்புகிறேன்......உதாரணத்திற்கு செல்வசந்நிதி கோவிலை ,தேரை அழித்தார்கள் ஆனால் மீண்டும் அதே இடத்தில் அதே பொலிவுடன் காட்சியளிக்கின்றது..மக்கள் ஒன்று கூடுகிறார்கள் இந்த மக்கள் ஒன்று கூட அந்த கோவில்தான் துணை புரிந்துள்ளது.பக்தி மூலம் மக்கள் ஒன்றுகூடுவது அதிகம்...இதனால் மொழி தப்பி பிழைக்கசந்தர்ப்பம் அதிகமுண்டு....வருகைக்கும் கருத்துபகிர்வுக்கும் நன்றிகள் வொல்கனொ

  • கருத்துக்கள உறவுகள்

ஊரைவிட்டுப் பல வருடங்கள் பிரிந்திருந்தாலும் பிறந்த ஊர் எப்போதுமே நினைவில் இருப்பதால் அந்நியமாகத் தெரியாதுதான். ஆனால் சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னர் அங்கிருப்பவர்கள் அந்நியனாகப் பார்க்கும்போது அதனை மனம் ஒப்ப மறுப்பதற்குக் காரணம் நாம் அந்த ஊரவன் என்ற நம்பிக்கையைத் தகர்க்காமல் வைத்திருக்கத்தான்.

புலம் பெயர்ந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் புலம் பெயர் நாட்டின் குடியுரிமையை எடுத்தாலும் மனத்தளவில் புலம் பெயரவில்லை என்பதையும், ஊரில் உள்ளவர்களோடு ஒட்டுதல் குறைந்தாலும் ஊரினைத் துறந்த ஏக்கம் தொடர்கின்றது என்பதையும் கதை சொல்லுகின்றது. எனினும் மனதை நெகிழ வைக்கக் கூடியவற்றைத் தவிர்த்தது போன்று தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் புத்தன். இப்பிடி அடிக்கடி எழுதிக்கொண்டிருங்கோ. 

 

கடவுள் இல்லை எண்டு சொல்லுறவனுக்கு கடவுள் இல்லை, கடவுள் இருக்கு எண்டு நம்புறவனுக்கு கடவுள் இருக்கு. கடவுள் இல்லை எண்டு சொல்லுறவனுக்கு கடவுள் இருக்கு எண்டு நிரூபிக்க ஏலாது அதேபோல கடவுள் இருக்கு எண்டு சொல்லுறவனுக்கு கடவுள் இல்லையெண்டு நிரூபிக்க ஏலாது.

 

நான் கடவுள் இருக்கெண்டு நம்புறவன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புத்தன். இப்பிடி அடிக்கடி எழுதிக்கொண்டிருங்கோ. 

 

கடவுள் இல்லை எண்டு சொல்லுறவனுக்கு கடவுள் இல்லை, கடவுள் இருக்கு எண்டு நம்புறவனுக்கு கடவுள் இருக்கு. கடவுள் இல்லை எண்டு சொல்லுறவனுக்கு கடவுள் இருக்கு எண்டு நிரூபிக்க ஏலாது அதேபோல கடவுள் இருக்கு எண்டு சொல்லுறவனுக்கு கடவுள் இல்லையெண்டு நிரூபிக்க ஏலாது.

 

நான் கடவுள் இருக்கெண்டு நம்புறவன்.

 

சுப்பண்ணா

நான் கடவுள் இருக்க  வேண்டும் என்று  நம்புறவன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா

நான் கடவுள் இருக்க  வேண்டும் என்று  நம்புறவன். :)

சரி சரி உங்கட வகையையும் விட்டுட்டன், இணைச்சு கொ(ல்லு)ள்ளுவம் :)

  • கருத்துக்கள உறவுகள்

இடபெயர்வுகளுக்குப் பின்னும்  புலப்பெயர்வுகளுக்குப் பின்னும்  

அறிந்தவர்களைத் தேடிய புத்தனை நினைக்கக் கவலையாகத்தான் இருக்கின்றது :D  

 

இன்னும் வருடங்கள் செல்லச் செல்ல கோவில்களை வைத்துத் தான்

நாங்கள் குடியிருந்த வீடுகளைக் குத்து மதிப்பாகக் கண்டுபிடிக்கலாம் :) .

 

புத்தனுக்கு நன்றிகள்   

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் 18 வருடங்களின் பின் தாயகம் சென்றபோதும் என்னுடன் படித்த ஒருவருமின்றி என்னை அடையாளம் காணாத பலரைப் பார்த்தபோது மனதில் ஒரு வெறுமையும் ஏமாற்றமும் வந்தது உண்மை. அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் 18 வருடங்களின் பின் தாயகம் சென்றபோதும் என்னுடன் படித்த ஒருவருமின்றி என்னை அடையாளம் காணாத பலரைப் பார்த்தபோது மனதில் ஒரு வெறுமையும் ஏமாற்றமும் வந்தது உண்மை. அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி புத்தன்.

 

டக்கென்று வயசாகிவிட்டதால் அங்கிருந்தவர்களுக்கு உங்களை அடையாளம் காணமுடியாதிருந்திருக்கும். அடுத்தமுறை போக முன்னர் முகப்புத்தகத்தில் பல நண்பர்களை உருவாக்கி அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். இல்லாவிட்டால் அடுத்த இலக்கியச் சந்திப்பு யாழ்ப்பாணம் நடைபெறும்போது போய்ப்பாருங்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் உங்கள் கதைகளில் பல 'சோகம் கலந்த உண்மைகள்' புதைந்து கிடக்கின்றன!

 

எங்கள் ஊரிலும், இப்படி ஒரு கோவிலுக்குப் போனேன்! ஒரு அருச்சனை, செய்ய மனம் உந்தியது. கோவில் மிகவும் நவீனமாகி இருந்தது. 'மணிமண்டபம்' ஒன்று கூடப் புதிதாக முளைத்திருந்தது. 

 

ஆனால், ஐயர் மட்டும் இல்லை. யாழ்ப்பாணத்திலிருந்து, வருவாராம். நாலு கோவில்களுக்கு, அவர் தான் பூசை செய்கிறாராம்!

 

ஆறு காலப் பூசை, நடந்த கோவில்? :o

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நான் உலாவிய அதே இடங்கள் கோவில்கள் நான்போனாலும் இதே நிலைமைதான் இருக்கும். ஆனால் எனக்கு இன்னமும் போகமுடியாத நிலை அதுசரி சுதுமலை அந்த இயலாத ஐயர் இருகிறாரா.

போகிற எல்லாருக்கும் இதே பிரச்சனை தான்.
 
அங்க இருக்கிற சனத்தைப் பார்த்தாலும் பாவமாக இருக்கும். ஒருவர் முகத்திலும் பெரிதாகச் சந்தோசம் இல்லை..
 
ஏதோ வாழ்கிறார்கள்..
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

போகிற எல்லாருக்கும் இதே பிரச்சனை தான்.
 
அங்க இருக்கிற சனத்தைப் பார்த்தாலும் பாவமாக இருக்கும். ஒருவர் முகத்திலும் பெரிதாகச் சந்தோசம் இல்லை..
 
ஏதோ வாழ்கிறார்கள்..

 

 

எல்லாருக்கு அசைலம் அடித்து விட்டு விசிட் பண்ணுகிற வாய்ப்புகள் கிடைக்குமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

. எனினும் மனதை நெகிழ வைக்கக் கூடியவற்றைத் தவிர்த்தது போன்று தோன்றுகின்றது.

 

அது எல்லாம் ஐந்து நட்சத்திர எழுத்தாளர்களினால் முடியும் , எங்களை போன்ற கிறுக்கல் மன்னர்களுக்கு கஸ்டம் ....கிருபன் நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புத்தன். இப்பிடி அடிக்கடி எழுதிக்கொண்டிருங்கோ. .

 

நான் கிறுக்கி கொண்டே இருப்பேன் நீங்கள் பச்சை புள்ளிகளை போட்டு என்னை உட்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேணும் :D வருகைக்கு நன்றிகள்

இடபெயர்வுகளுக்குப் பின்னும்  புலப்பெயர்வுகளுக்குப் பின்னும்  

அறிந்தவர்களைத் தேடிய புத்தனை நினைக்கக் கவலையாகத்தான் இருக்கின்றது :D  

 

இன்னும் வருடங்கள் செல்லச் செல்ல கோவில்களை வைத்துத் தான்

நாங்கள் குடியிருந்த வீடுகளைக் குத்து மதிப்பாகக் கண்டுபிடிக்கலாம் :) .

 

புத்தனுக்கு நன்றிகள்   

 

நன்றிகள் வாத்தியார் கோவில்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம்...

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் 18 வருடங்களின் பின் தாயகம் சென்றபோதும் என்னுடன் படித்த ஒருவருமின்றி என்னை அடையாளம் காணாத பலரைப் பார்த்தபோது மனதில் ஒரு வெறுமையும் ஏமாற்றமும் வந்தது உண்மை. அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி புத்தன்.

 

நன்றிகள் சுமே....என்னுடன் 120 பேர் 9ஆம் வகுப்பு வரை படித்தார்கள் 4 பேரைமட்டும் இந்த முறை என்னால் சந்திக்ககூடியதாக இருந்தது..

புத்தன் உங்கள் கதைகளில் பல 'சோகம் கலந்த உண்மைகள்' புதைந்து கிடக்கின்றன!

 

எங்கள் ஊரிலும், இப்படி ஒரு கோவிலுக்குப் போனேன்! ஒரு அருச்சனை, செய்ய மனம் உந்தியது. கோவில் மிகவும் நவீனமாகி இருந்தது. 'மணிமண்டபம்' ஒன்று கூடப் புதிதாக முளைத்திருந்தது. 

 

ஆனால், ஐயர் மட்டும் இல்லை. யாழ்ப்பாணத்திலிருந்து, வருவாராம். நாலு கோவில்களுக்கு, அவர் தான் பூசை செய்கிறாராம்!

நன்றிகள் புங்கையூரன்...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்,கடவுள்மார் ஐயர்மரையும் சேர்த்து புலம் பெயர்வைத்துவிட்டார்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நான் உலாவிய அதே இடங்கள் கோவில்கள் நான்போனாலும் இதே நிலைமைதான் இருக்கும். ஆனால் எனக்கு இன்னமும் போகமுடியாத நிலை அதுசரி சுதுமலை அந்த இயலாத ஐயர் இருகிறாரா.

 

நன்றிகள் சாத்திரியார்....இயலாத ஐயர் இறந்து பல (ஏழு) வருடங்கள் ஆகிறது .அவரின் சகோதரியின் பிள்ளைகள் இப்ப அந்த கோவிலில் பூஜை செய்கிறார்கள்.

போகிற எல்லாருக்கும் இதே பிரச்சனை தான்.
 
அங்க இருக்கிற சனத்தைப் பார்த்தாலும் பாவமாக இருக்கும். ஒருவர் முகத்திலும் பெரிதாகச் சந்தோசம் இல்லை..
 
ஏதோ வாழ்கிறார்கள்..

 

நன்றிகள் ஈசன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....எப்படி சந்தோசம் இருக்கும்....

எல்லாருக்கு அசைலம் அடித்து விட்டு விசிட் பண்ணுகிற வாய்ப்புகள் கிடைக்குமே?

 

அப்ப சுழியன்களாக இருந்தால் இப்ப போய்வந்திருக்கலாம் :D

கருத்து எழுதி பச்சை புள்ளி வழங்கியோருக்கும்,கருத்து எழுதாமல் பச்சை புள்ளி வழங்கியோருக்கும் பச்சை அலை சார்பாக நன்றிகள் பல.....

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட இடைவெளிக்குப்பின் ஊருக்கு போற எல்லோரும் சந்திக்கிற அவலம் தான் இது.நனறி புத்து பகிர்வுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட இடைவெளிக்குப்பின் ஊருக்கு போற எல்லோரும் சந்திக்கிற அவலம் தான் இது.நனறி புத்து பகிர்வுக்கு.

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சுமே....என்னுடன் 120 பேர் 9ஆம் வகுப்பு வரை படித்தார்கள் 4 பேரைமட்டும் இந்த முறை என்னால் சந்திக்ககூடியதாக இருந்தது..

 

9ம் வகுப்புக்குப் பிறகு என்ன செய்த நீங்கள்?

முகநூலில் ஊடாக முன்பு தெரிந்தவர்களைத் தேடி வருகிறேன். பலரை அடையாளம் காணமுடியாதாக இருக்கிறது. எங்கட சந்ததிகள் கொடிய இனப்பிரச்சனையினால் உலகப்பந்தின் வெவ்வேறு பாகத்திலும் சிதறிப்போய் இருக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

9ம் வகுப்புக்குப் பிறகு என்ன செய்த நீங்கள்?

முகநூலில் ஊடாக முன்பு தெரிந்தவர்களைத் தேடி வருகிறேன். பலரை அடையாளம் காணமுடியாதாக இருக்கிறது. எங்கட சந்ததிகள் கொடிய இனப்பிரச்சனையினால் உலகப்பந்தின் வெவ்வேறு பாகத்திலும் சிதறிப்போய் இருக்கிறோம்.

 

யுனிவசிட்டிக்கு டிகிரி எடுக்க போயிட்டேன்.... :D.... 4 பேர் தான் ஊரில இருகினம் மற்றவையள் எல்லாம் குடியும் குடித்தன்மாகவும் வெளிநாட்டில இருக்கினம்.... இப்ப இனப்பிரச்சனை இல்லையாம் எல்லோரும் திரும்பி போவினமே அப்பு?...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உண்மைப்பதிவுகள் பெறுமதியானவை.
தொடருங்கள் புத்தன்.
சுதுமலை எனக்கு பழக்கப்பட்ட இடம்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.