Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

கேணல் ரமணன் வீரவணக்கம்

col%2Bramanan.jpg

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

(கந்தையா உலகநாதன்)

திருப்பளுகாமம் மட்டக்களப்பு

பிறப்பு - 14.10.1965

வீரச்சாவு - 21.05.2006

பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலைஇ மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்து வைக்கும் பழுகாமம்இ நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின் வரலாற்றுத் தொன்மை பற்றி மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் (ஏட்டுச் சுவடிப் பிரதி- வித்துவான் சா.இ.கமலநாதன்) புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம்

col_ramanan_port_200.jpg.

நினைவூட்டல்

படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து அந்தப் பாடசாலை உருவாவதற்கு அத்திவாரமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனை வருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு மைதானமும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் பரிசோதனைச் சாலையுமாக அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள்.

Ramanan_6.jpg

அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப் போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பாடசாலையை ஒரு உழவு இயந்திரம் நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையா விட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழவு இயந்திரத்தை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் திருப்தி தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின் புறத்தில் பதுங்கிக் கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக்குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு. உழவு இயந்திரத்தின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்து கொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள்.

சிலர் சாதாரண உடையில் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்து கொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதே போல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக் கொண்டிருந்தார்கள்.

மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்து கொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழவு இயந்திரத்தைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல்.

coloanl_ramanan1.jpg

தலை தெறிக்கத் தப்பி ஓடியோர் போக விழுந்துகிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப் பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்து கிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம் ரமணன்.

ramanan.jpgஅந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் வயது அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு வருடம்தான் ஆகியிருந்தது.

கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும்இ தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர்.

அடுத்த தங்கையும் போராளியாக பல வருடங்களை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாக இருந்து இப்போது காவற்றுறையில் பணியாற்றுபவர். போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் அனுபவித்த வேதனைகளும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்து கொண்டிருந்தது.

அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடையஇ அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டியவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள்.

ltte_ramanan.jpg
தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு. நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன்இ துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல்களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார்.

ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப்பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்திரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம்.Col.%2BRamanan%2B2.jpg

"ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.

தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று" என்கிறார்

தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு.

 

maaverar.jpg

-----------------------------------

Ramanan, an accomplished Planning Commander- Balraj, Pottu [TamilNet, Thursday, 25 May 2006, 08:10 GMT]

Senior LTTE Commander Col. Balraj, addressing the people gathered in Kilinochchi Wednesday to pay respects to Tiger Senior Commander Col. Ramanan said Ramanan was a gifted planning Commander skilled in handling information. Meanwhile, the Tiger Intelligence Chief Pottu, in an interview to the National Television of Tamil Eelam (NTT), on Wednesday revealed that Ramanan was a key brain behind the weakening of the Razeek paramilitary group in Batticaloa, sources from Kilinochchi said.

balraj_garlanding_ramanan.jpg
LTTE Special Commander Col. Balraj garlanding the photo of late LTTE commander Col. Ramanan

Colonel Balraj speaking at the event said that Ramanan's sudden appearance in an unexpected location, was one of the main reasons that forced renegade Karuna to abandon the idea of holding a ground in Batticaloa, and flee from his base.

ltte_col_balraj_140.jpg
Col. Balraj
"One of the key strategies of the LTTE is its impenetrable secrecy," Balraj said. "Col. Ramanan had served the liberation struggle for 20 long years. Even I didn't have the opportunity to meet him until a few months ago. Not all of our key cadres are exposed to the world outside," Col. Balraj said.

Striking a political note, Col. Balraj said that among all the leaders in the south, Ranasinghe Premadasa was a realist. Of all the Sinhala leaders, he was one who had the courage to strike a deal," observed Balraj.

"But, he too was poisoned by the deep rooted Sinhala supremacist mindset."

"Having slain the JVP rebel leader Rohana Wijeweera, Premadasa thought he could deal in the same way with our leadership," Balraj said.

"Now, the incumbent Sri Lankan president too is pursuing a similar path leading his nation to a dead end," Balaraj said.

"The Fourth Eelam War will be the final war, and a terrible war that will bring the long awaited liberation to our people and our homeland. We are certainly positioned to be victorious. The people are with us and our leader will lead us to victory," concluded Balraj.

The event, paying homage to Col. Ramanan was held in the Cultural Hall in Kilinochchi around 4.00 p.m Wednesday presided by Mr. S. Sivapalan of Kilinochchi district Upsurging Assembly, began with the lighting of the Principal Flame by Pon. Thiyagam, the officer in charge of Martyrs Resting Homes, attended by several key commanders, public figures and large number of local residents.

The two bothers of Col. Ramanan, LTTE cadres, garlanded Late. Ramanan's photograph while Senior Commander Col. Balraj, Deputy political head S. Thangan and Thamilini Head of the Women political wing, garlanded the photograph.

Thamilini, addressing the audience said, "We have, in the struggle for freedom, lost able combatants and talented commanders at its various stages. Col. Ramanan's demise comes as a shock to all of us. His death has brought us unbearable pain and grief, she said.

"It is an unenviable position for a warrior to carry out his tasks in the period driven by dangerous agenda of the Sri Lanka Government hidden behind a ficticious peace process. Col. Ramanan, though facing a cunning and calculated shadow war unleashed on Tamil Eelam by the Sinhala Lanka, built up our strength and forces in Southern Tamil Eelam through his extraordinary skill as military leader and the rapport he enjoyed with the people of the region and our combatants.

"Each tragic loss in our struggle for liberation leaves us injected with fresh vigour and determination. Col. Ramanan is not dead. He is here with us in the numerous combatants in whom he had instilled all his talents and tactics. They will surely win us the beautiful Southern Tamil Eelam." said Thamilini.

Col. Ramesh, paying tribute to Late. Col. Ramanan said, "Ramanan stood steadfast by our leader when Karuna turned traitor. With the skill of an efficient surgeon he successfully removed the poisonous elements in Southern Front. Though he has been taken from us unexpectedly, the plans he drew for the complete liberation of Southern Tamil Eelam and the many cadres he trained for the mission are with us. We will fulfill his dreams when we redeem the entire Tamil Eelam soon."

----------------------------------

Peace sacrificed for counter insurgency by Colombo - Col. Jeyam [TamilNet, Wednesday, 24 May 2006, 17:42 GMT]

“The Sri Lankan government and its forces, obsessed with the idea of destroying our movement, has, without realising the strategic advantages of making peace, used various counter insurgency tactics throughout the peace process to kill our cadres,” said Colonel Jeyam, a top commander of the LTTE, addressing crowds gathered in Mullaitivu to pay their respects to Colonel Ramanan, who was assassinated Sunday by a Sri Lanka Army sniper.

ramanan_24_05_06_02_54806_200.jpg
ramanan_24_05_06_03_54810_200.jpg
Commander Col. Ramesh
ramanan_24_05_06_09_54834_200.jpg
Mr. K. V. Balakumarn, Senior LTTE member.
Col. Ramanan, Deputy Head of the LTTE Military wing of Batticaloa district was shot dead Sunday whilst inspecting the LTTE Forward Defence Line at Vavunathivu in Batticaloa. After paying their respects, senior LTTE commander and officials delivered speeches paying tribute to Ramanan, saluting his exemplary personal qualities and hailing his accomplishments during his twenty years dedicated service to the Tamil freedom struggle.

"Col. Ramanan was a great inspiration for the fighters in the east of the island. He skilfully liberated our territories from Karuna when he defected to the enemy. Ramanan then went on to build up a strong force there under Commander Bhanu,” Colonel Jeyam said.

“We remember how in 1987 we lost two of our District Commanders, Pulendran and Kumarappa, when the Indians, mediating between the Sri Lankans and us, failed to save the lives of our commanders who were abducted [by the Sri Lanka Navy] in the seas during that peace engagement.”

“That tactic didn't help the enemy quell our movement. In fact, few believed that we could resist the world’s fourth largest military might. But we did. We did so under the strategic guidance of our leadership and with the support base of our people. Even when we were forced to withdraw from Jaffna, the urban base, and lead the Tamil struggle from the remote jungles of Manal Aru, we achieved the unthinkable this way.”

“We have shaken hands with the enemy on four different occasions in a bid to resolve the conflict peacefully. During this latest internationally assisted four-year peace engagement, our representatives have gone around and shook hands with many diplomats in Europe.”

“The whole world has had the opportunity to come here during the peace process, if they truly wanted to understand our situation. Can we expect those who failed to understand our political plight during the last four years of peaceful engagement to ever be able to understand it? What do you think?" asked Colonel Jeyam.

“I can see the people of Tamil Eelam getting ready for the war. We know where we should stand –on the power of our people’s support, the guidance of our leader, on the sacrifices we have made for freedom in our own territory, be it Vavuniya, Jaffna, Mannar, Manal Aru, Batticaloa or Amparai.”

“Nobody can defeat us now when the Tamil people have resolved to decide our own destiny,” Colonel Jeyam further said.

"Two different but complimentary tactics have been adopted by the successive Sinhala regimes to quell the Tamil freedom struggle led by the LTTE. The peace process is the soft side of this strategy while the hard one is the systematic killings of our able commanders and talented Tamil activists.”

“But our enemies are wrong in assuming that they can weaken us. Experience shows that both the struggle and the LTTE grow in strength and power after each assassination and each peace process.”

“Ramanan's loss is of course irreparable. But he has dedicated his very life as a stepping stone in the direction of victory which we will taste soon," said Col. Jeyam.

The event in Vanni paying homage to Colonel Ramanan was held at Puthukudiruppu Sri Subramaniam Maha Vidyalayam Wednesday around 10.30 a.m. headed by the President of Mullaitivu District People Consortium, Mr. Vethavanam.

Thamilarasan, Col. Ramanan's brother and Odduchuddan Regional Head of the LTTE, lit the lamp before the late officer’s portrait while another brother, Parathan, an LTTE cadre, garlanded it.

Colonel Ramesh lit the flame of sacrifice at the event and garlanded Col. Ramanan's portrait. He was joined by Colonel Jeyam, senior LTTE member Mr. K. V. Balakumaran, Peace Secretariat Director, Mr. S. Pulidevan, Mr. Illanthirayan (Marshall) of the Peace Secretariat, Mr. Seeralan, Deputy Head of the political wing in Batticaloa District and Mr. S. Selvanayagam, the principal of the Maha Vidyalam.

Mr. Illanthirayan, former head of the LTTE Political Wing in Batticaloa, following Col. Jeyam, hailed the personal qualities of Col. Ramanan.

"Martyr Ramanan, knew every one in the southern Tamil Eelam and everyone there knew him. He was a master in translating our movement’s leader's political and military strategies into skilful techniques in practice,” Mr. Illanthirayan said.

“It was Colonel Ramanan who surmounted the efforts by the traitor Karuna to split the LTTE through the wedge of regionalism. Though he is no more with us, the techniques and tactics Colonel Ramanan developed will be with us in our struggle to achieve our desired goal," said Mr. Ilanthirayan.

Colonel Ramesh said: “Ramanan's feats in the fields of war and intelligence cannot be covered in a short speech. He comes from a family which has been in the forefront of resistance to Sri Lanka armed forces. He has nine siblings, out of which two brothers and a sister are members of LTTE.”

“All his feats in the struggle are not known because the victories he reaped and the way in which he achieved them cannot be openly revealed now.”

“He was a great source of strength and a talented fighter in southern Tamil Eelam and he was killed precisely for these incredible qualities," said Col. Ramesh.

Mr. K. V. Balakumaran said, "We already owe a great deal to the people of southern Tamil Eelam. I had admired Col. Ramanan for his wonderful personality which had two distinct sides. One was filled with spontaneous love and the other replete with military skill and intelligence. People possessing this unique blend of qualities rarely live long. Usually they die young. We have an exemplary model in Ramanan to be emulated in pursuing our liberation struggle."

ramanan_24_05_06_01_54802_435.jpg

---------------------------------

Col. Ramanan's remains buried with military honours in Thandiyady [TamilNet, Thursday, 25 May 2006, 01:18 GMT]

The remains of Col. Ramanan, the Deputy Head of the LTTE Military wing, assassinated by a Sri Lanka Army (SLA) sniper at Vavunativu Forward Defence Line (FDL) Sunday the 21st May 2006 was buried with military honour at the Thandiyady Martyrs Resting Home Wednesday evening around 6.00 p.m, attended by several leading citizens, LTTE cadres and residents of Amparai and Batticaloa districts, sources in Batticaloa said. 

col_ramanan_port_200.jpg
Late Col. Ramanan, Deputy Commander of Batticaloa - Amparai Military Wing of the LTTE
Black flags were flown along streets, and shops, schools, offices and other institutions in Batticaloa Amparai districts were closed as the districts residents paid respects to the senior Commander Ramanan, a native Pallukamam in Batticaloa, sources said.

Late Ramanan's remains was first kept Sunday at Thenaham in Karadiyanaru for people to pay their last respects and later at Kokkadicholai Ramakrishna Mission Vidyalayam. It was then taken to Pallukamam Kandumani Maha Vidyalayam through Mahiladitivu, his wife's birth village.

From Palukamam it was then taken Wednesday to Vellaveli and kept at Kalaimahal Vidyalayam and later taken through Perativu to Thandiyady Maha Vidyalayam around 3.00 p.m, where residents paid homage.

ramanan_funeral_01.jpg
LTTE Special Commander Col. Bhanu paying last respects to Col. Ramanan in Batticaloa.

After ceremonial offering flowers, the remains was brought to Thandiyady Martyrs Resting Home where it was buried around 6.00 p.m with military honours, LTTE sources said.

Tamil National Alliance (TNA) parliamentarian Mr. P. Ariyanenthiran, LTTE Batticaloa district Commander Col. Banu, Batticaloa Political Head Thayamohan, Women Political Head Kuveni, Commander Piraba, Chief of Head Office Amuthan, Head of Rajan College Keethan, LTTE Division Commanders, Combatants and several hundred people participated in the final rites.

ramanan_funeral_04.jpg

Thayamohan presided at the event where Col. Banu, Kuveni, Amuthan, Keethan and P. Ariyanenthiran M. P. spoke praising the contribution of Col.Ramanan to Tamil eelam struggle.

A hartal condemning Col. Ramanan's assassination was observed in Kalvanchchikudi from Tuesday and there was no traffic to Kalmunai, sources said.

ramanan_funeral_02.jpg
Col. Ramanan leaves behind his wife and two children.
 
Posted

கேணல் ரமணன் அவர்களுக்கு நினைவு வீரவணக்கம்..!

Posted

கேணல் ரமணன் அவர்களுக்கு நினைவு வீரவணக்கம்..!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேணல் ரமணன்  அவர்களுக்கு என் வீரவணக்கம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேணல் ரமணன் அவர்களுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
Posted

வீரவணக்கம் !

 

Posted (edited)

என்றும் எம் நினைவை விட்டு அகலாத கேணல் ரமணன் அண்ணாவிற்கு வீர வணக்ககள் 

 



941232_430400400388862_397458693_n.jpg

கேணல் ரமணனின் வீரவணக்க நிகழ்வில் தளபதிகள் - போராளிகள் .

168238_430399263722309_1173596224_n.jpg

கேணல் ரமணனின் வீரவணக்க நிகழ்வில் அவரின் மனைவி ....

 

971917_430401193722116_1461621640_n.jpg

கேணல் ரமணனின் வீரவணக்க நிகழ்வில் போராளிகளின் அணிவகுப்பு ....

 

 

Edited by யாழ்அன்பு
Posted

என்றும் எம் நினைவை விட்டு அகலாத கேணல் ரமணன் அண்ணாவிற்கு வீர வணக்ககள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக  தமது இன்னுயிரை  ஈகம் செய்த  இந்த வீரத்தளபதிக்கு எனது  வீரவணக்கங்கள் !!!
  • 7 years later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted


 

புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாம்! மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

spacer.png

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் 15ஆம் வீரவணக்க நாள் இன்றாகும்

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் தெரிவித்த கருத்து மீள் பதிவு.

ரமணனை எனக்கு மிக நீண்ட நாட்களாகத் தெரியும். 1987 இன் ஆரம்பத்தில் அல்லது அதற்கு முன்னைய காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு அண்மையாக உள்ள அம்பிலாந்துறைக் கிராமத்தில் சிறிலங்கா படையினருடைய நகர்வு ஒன்றைத் தடுத்து நடத்திய சண்டை ஒன்றிலேயே எம்முடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகச் செயற்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு அம்பாறை காடு, மேடுகள், வயல்வெளிகள் எல்லாவற்றிலும் நாம் நீண்ட பயணங்களை நீண்ட நாள்கள் ஒன்றாகச் செய்திருந்தோம். பல்வேறு நடவடிக்கைகளிலே அவர் சேர்ந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகவும் அதன் பின்னர் றீகனின் அணியிலே ஒரு பகுதிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

அவரது குடும்பத்தினரதும் போராட்டப் பங்களிப்புக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து அவரது சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டிலே ஒருவராக இணைக்க நான் விரும்பியிருந்தேன். ஆனாலும், மாவட்டத்தின் தேவை கருதி அங்கே ஒரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக அவர் தனித்துவமாகச் செயற்பட்டிருந்தார்.

அவர் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த காலத்திலே வெற்றிகரமான பல நடவடிக்கைகளைச் செய்திருந்தார். அவற்றில் நான் நேரடியாக தொடர்புபட்டிருக்காத போதிலும் கூட அவருடைய நடவடிக்கைகள் எனக்கு வியப்பையும், பெருமையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தத்தக்க வெற்றிகளை அவர் பெற்றிருந்தார்.

 

hGKsXGmHSUo5Wt8q31uA.jpg

 

குறிப்பாகச் சொல்வதானால், சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரி சகபந்து என்பவர் மீது ஒரு வெற்றிகரமான கரும்புலி நடவடிக்கையையும், அதனைத் தொடர்ந்து இன்று கருணா போல் அன்று செயற்பட்ட ராசிக் என்ற துரோகி மீதான வெற்றிகரமான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளையும் அவரது புலனாய்வுச் செயற்திறன் சார்ந்த வெற்றிகளாக மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையாகின.

கருணாவின் துரோகம் வெளிப்பட்ட வேளையிலே ரமணன் அதிர்ச்சியுற்றிருந்தார். இவ்வாறு துரோகத்திற்கான செயற்பாட்டை மனதிலே வைத்துக் கொண்டு இந்த மனிதரால் எவ்வளவு தூரம் இவ்வாறு நடிக்க முடிந்தது என அவர் ஆச்சரியப்பட்டிருக்கின்றார். அந்தத் துரோகத்தை முறியடிப்பதிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். மிக ஆபத்தான பணிகளை பொறுப்பேற்றுக் களத்திலே இறங்கியிருந்தார். அது எல்லோருக்கும் தெரியும்.

தமிழீழத் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த மாறாத பற்றுறுதியும் விடுதலை என்பதில் அவருக்கிருந்த பூரணமான தெளிவும் தான் அவ்வாறான தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் ஆபத்தை எதிர்கொள்வதற்கும் அவருக்கு உறுதுணையாக இருந்ததென்றால் மிகையில்லை என்றார் பொட்டு அம்மான்.

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரணமன்

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரணமன் ஆகிய மாவீரரின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

zEfRGnqUxPPgDqMGZzED.jpg

பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக்கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பள்ளி, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர.

பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணிபோல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும்போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்துவைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின் வரலாற்றுத் தொன்மை பற்றி “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” (ஏட்டுச் சுவடிப் பிரதி- வித்துவான் சா.இ.கமலநாதன்) புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம்.

படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து அந்தப் பாடசாலை உருவாவதற்கு அடித்தளமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு விளையாட்டுத்திடலும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் ஆய்வு கூடமும் அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள்.

அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப்போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பள்ளியை ஒரு உழுவூர்தி நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையாவிட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழுவூர்தியை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் நிறைவு தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின்புறத்தில் பதுங்கிக்கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக் குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு.

உழுவூர்தியின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்துகொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர் இயல்பான பொது உடையில் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்துகொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதேபோல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக கொண்டிருந்தார்கள். மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்துகொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழுவூர்தியைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல.

 

ZsJcA3cCj9U2QePdk3lu.jpg

 

தலை தெறிக்கத் தப்பி ஓடியோர்போக விழுந்துகிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்துகிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன்.

அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் அகவை அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது.

கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல ஆண்டுகளை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாகவிருந்து தமிழீழக் காவற்றுறையில் பணியாற்றுபவர்.

போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் எதிர்கொண்ட துயரங்களும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்துகொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது.

இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டி யவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு.

 

 

 

நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல் களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப் பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்தி ரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம். “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று,” என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப் புக் காலத்தில் தனித்துவமான திட்டங்களைத் தீட்டி தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்திய ரமணன் தம்பிலுவில் துரோகிகளின் முகாம் தகர்ப் பில் ஒரு பகுதித் தலைமையை ஏற்றுச் சமர் செய்தவர். அந்தச் சமரில் விழுப்புண்ணடைந்தவர். அதன் பின், பூநகரித் தவளைச் சமரிலும், ஆனையிறவுப் பீரங்கித் தளத்தின் மீதான தாக்குதலிலும் அணித் தலைமைப் பங்கேற்றுப் படை நடத்தியவர். ஜயசிக்குரு விஞ்ஞானகுளச் சமரின்போது விழுப்புண்ணடைந்தார்.

கேணல் ரமணனின் போராட்ட வாழ்வின் தொடக்க நாட்களில் இருந்தே அவரோடு நெருக்கமாகப் பழகியவரும் பல சமர்க்களங்களை அவரோடு பகிர்ந்துகொண்டவருமான கேணல் ரமேஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, “ஒரு சமரிலே ரமணனின் சம்பந்தம் இருப்பதைப் போராளிகள் அறியும்போது அவர்களுக்கு நம்பிக்கையும் சிறிலங்கா படையினர் அறியும் போது அவர்களுக்குப் பயமும் ஏற்படு வதுண்டு. அந்தளவிற்கு ரமணனின் திட்ட மிடல்கள் புகழ்பெற்றவையாக இருந்தன.” என்றார். படைத்துறைச் செயற்பாடுகளைப் புலனாய்வுத் தன்மையோடு நகர்த்துவது ரமணனின் தனித்துவம்.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம். துரோகி கருணா எமது மாவீரர்களை அவமதிக்கும் வகையில் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நீசத்தனத்தில் இறங்கியபோது கொதித்தெழுந்த உள்ளங்களில் ரமணன் முக்கியமானவர். அவமானத்தில் இருந்தும் அழிவிலிருந்தும் எமது மக்களையும் போராளிகளையும் காப்பாற்றும் பணியில் மிகப் பழுவான பணியொன்றை விரும்பி ஏற்கிறார் ரமணன். மிகச் சில போராளிகளுடன் மட்டக்களப்புப் பகுதியைப் பின்புறமாக அண்மித்து உள் நுளைகிறார். ரமணன் வந்துவிட்ட செய்தி விடுதலையை விரும்பிய மக்களுக்குத் தேனாக, துரோகி கருணாவிற்கோ இடியாகக் கேட்கிறது. ஏற்கனவே வாகரையை இழந்துவிட்ட கருணா இப்போது மாவடி முன்மாரியையும் இழந்து கொண்டிருப்பதைக் காண்கிறான். இந்த நேரத்தில் ரமணன் தொடுத்த தந்திரோபாயத் தாக்குதலால் நிலை குலைந்துபோய் தனது கையாட்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கருணா தப்பியோட முயற்சிக்கிறான். முதல் அணியாக குடும்பிமலைப் பிரதேசத்திற்குள் நுழைந்து கருணாவினால் கடைசி நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட நீலனின் வித்துடலை மீட்ட அணி ரமணனுடையது.

அதன் பின்னர் சிறிலங்கா படைப் புலனாய்வினரும் ஒட்டுக்குழுக்களும் செய்த பெரும்பாலான சதிகளை முறியடித்து மாவடி முன்மாரிப் கோட்டத்தின் காவலனாகவும் மட்டக்களப்பின் துணைத் தளபதியாகவும் இருந்த கேணல் ரமணன் வவுணதீவிலுள்ள போராளிகளின் காவலரண் களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது எதிரியின் சதிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவடைகிறார்.

மண்ணின் மணத்தோடும் அதற்கேயுரிய இயல்புகளோடும் சீற்றத்தோடும் வளர்ந்த ரமணன் அந்த மண்ணின் தனிச் சிறப்பான கலைகளிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கியவர். பூநகரித் தகர்ப்பின் பின் எழுதுமட்டுவாள் ஜெயந்தன் முகாமில் அவர் எலும்புக்கூட்டு உடையணிந்து நடனமாடியதைப் பார்த்தவர்கள் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள். தளங்களில் நடக்கும் கலை நிகழ்வுகளில் பாடியதோடு மட்டுமல்லாது தான் கற்றதும், எதிரியை மறைந்திருந்து சுட்டதுமான பள்ளியின் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ஈகைச்சுடர் திலீபன் நினைவு நிகழ்வின்போது தனது உற்றவரும் பெற்றவரும் பார்த்திருக்க தலைவனைப் பற்றிய பாடலைப் பாடியதும் அனைவரது கண் முன்னும் அகலாது நிற்கும். கலைகளோடு மட்டுமல்லாது விளையாட்டுக்களிலும் நேரே பங்கெடுத்து போராளிகளுடன் விளையாடி தளத்தை உற்சாகமாக வைத்திருந்த நாட்களும் பதிவுகளுக்குரியவை.

சுனாமியின் பின்னான நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டபோது, எதிரியால் இலக்குவைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மக்களோடு நின்றதும் நினைவழியா நிகழ்வுகள். பன்சேனைக் கிராமத்தில் திலீபன் மருத்துவமனையைக் கட்டுவதற்கான அவரின் காத்திரமான பங்களிப்பு அந்தக் கட்டிடத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதிலும் கண்முன் ஆடும்.

பழுகாமமும் அதற்குத் தலைப்பாகை கட்டி நிற்கும் ஒட்டிச் சதுப்பு நிலமும் ரமணனுடைய நினைவுகளைத் தன் ஆழங்களில் தாங்கி நிற்கின்றன. கண்ணாக் காடுகளின் சலசலப்பிலும் கொக்குப் பீச்சல் திடலில் ஓய்வு கொள்ளும் பறவையினங்களின் பாட்டிலும் ரமணனின் பெயர் நிச்சயம் சொல்லப்படும். தாயகப் பயணப் பாதையில் விழுமுன்னமே முளை விட்ட விருட்சமாகத் தனது தனித்துவமான போர் உத்திகளைத் தந்து சென்ற ரமணன் என்றும் அந்த உத்திகளின் வடிவத்திலும் நினைவுகளின் ஆழத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் 2006

 

https://www.thaarakam.com/news/c8c5354e-88a7-46ee-ad4a-fa302cadb4f5

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிக்க நன்றி ரஞ்சித். யாழில் நீண்ட விளக்கம் கொடுக்க கூடிய மிக அரிதான கருத்தாளர்களில் நீங்களும் வழவனும் அடக்கம்.    உங்களை ஏன் @ பண்ணினேன் என்பதை வழவனுக்கான பதிலில் காண்க🙏. நான் போட்ட ஜெய்ஹிந்தின் அர்த்தம் அநேகமாக அனைவரும்கும் விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். அதுதான் முழு நேர மேற்கு எதிர்ப்பு பிரச்சாரகர்களின் உண்மையான கபட நோக்கம். ஏனையவர்களின் பிரச்சனை வேற. அவர்கள் நல்லவர்கள். ஆனால் எமக்கு நடந்த பிழைக்கு மேற்கு மட்டுமே தவறு என்பது போல் அவர்களை புல் டைம் காரர் மூளை சலவை செய்கிறார்கள். அதுதான் நீங்கள் சுட்டிய அளவுக்கு கொள்கை பிறழ்வு ஏற்பட காரணம். அதே போல் எப்போதும் ஒரு hero worship இல் இருந்து இவர்களுக்கு பழகிவிட்டது. அதனால்தான் தலைவருக்கு பின், சீமான், புட்டின் என அலைகிறார்கள். உப்பு கல்லும் வைரமும் ஒன்றென கருதி. இவர்களை போலவே முழு புலம்பெயர் சமூகத்தையும் மந்தைகள் ஆக்கி விடலாம் என்பதுதான் புல்டைம் காரர்களின் திட்டம். பார்க்கலாம்…. We are fighting a good fight, keep at it👍 இது எம்போன்றோருக்கு சரி… ஆனால் சம்பளத்து வேலை செய்பவர்கள் சதா அதே விடயத்தை எழுதி கொண்டே இருக்க வேண்டும்… அல்லது டெல்லியில் இருந்து கோல் வரும்🤣
    • போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 2 மீன் அடிச்ச ஆப்பு !   மணலாறு காட்டுக்குள் அலைந்து திரிந்த அந்த மனிதர்களின் வீரம் பற்றி யாரும் அறிய மாட்டார்கள். குண்டுகளும் துப்பாக்கிகளும் கிளைமோர்களும் தான் அவர்களுக்கு அதிகம் பிடித்தவை. உணவு என்பது அவசியமற்று போகும் போதெல்லாம் எங்கோ ஒரு இலக்கில் எதிரி சிதறப் போகும் யாதார்த்தம் நிமிர்ந்து நிற்கும். இலக்குக்காக அந்த மனிதர்கள் அலைந்த நாட்கள் கொஞ்சமல்ல. ஓய்வு என்பது மரணத்துக்கு பின் என்பது அவர்களது இயல்பாக இருக்கலாம். ஓய்வின்றி தேசியத்தலைவரின் எண்ணங்களுக்கு அந்த மனிதர்கள் வண்ணம் பூசி வெற்றி என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். 1996 முல்லை மண்ணில் முப்படைகளும் குந்தி இருந்து எம் மக்களுக்கு கொடுத்த பெரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளியிட்டனர் விடுதலைப்புலிகளின் சண்டையணிகள். யாழ்ப்பாணத்தை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த பின் விடுதலைப்புலிகள் பலமிழந்துவிட்டதாக பரப்புரை செய்து கொண்டிருந்த சிங்களத்துக்கு நெத்தியடி கொடுத்த விடுதலைப்புலிகளின் அணிகளில் இவர்களும் இருந்தார்கள். பெரும் வெற்றியை எமக்குத் தந்துவிட்டு மீண்டும் மணலாறுக் காட்டை வதிவிடமாக கொண்டு எதிரிக்காக அலைந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறு தான் அவர்களில் இருந்த வேவுப் போராளிகளின் அணி ஒன்று வேவுக்காக சென்று திரும்பிய போது புன்னகையோடு இலக்கை கூறுகிறார்கள். “மரியதாஸ் ( பின்நாட்களில் “ஜெயசிக்குறு” நடவடிக்கையில் கப்டன் மரியதாஸ் வீரச்சாவு) அண்ண 10 பேரண்ண வடிவா குடுக்கலாம்…” ரைபிள் எல்லாத்தையும் நிலத்தில வைச்சிட்டு சென்றிக்கு ஒருத்தன் மட்டும் நிக்கிறான் மற்றவ குளிக்கிறாங்கள் கிளைமோர் ஒன்று செட் பண்ணினால் 10 பேரையும் தூக்கலாம்” எந்த இடத்தில? தளபதி ஆவலோடு வினவுகிறார். அண்ண எங்கட சின்னக் குளத்தில அண்ண. மணலாறு காட்டிடையே விடுதலைக்காக பயணித்துக் கொண்டிருந்த மூத்த போராளியும் அந்த வேவு அணிகளுக்கான அணித்தலைவனாகவும் இருந்த மரியதாஸ்க்கு வேவுத்தகவல் பிரியோசனமானதாகவே தோன்றியது. அந்த இலக்கு அவர்களின் வேவு வலயத்துக்குள் கொண்டுவரப்படுகிறது. அடிச்சால் பத்து சிங்களப் படையைக் கொண்ட எதிரியின் ஒரு அணி உயிரிழக்கும். அந்த குளம் எம்மவர்களின் பார்வை வீச்சில் இருந்து தப்பிக்க முடியாத அளவிற்கு வேவுப் போராளிகள் காத்திருந்தார்கள். தளபதி ஊடாக தலைவரின் அனுமதிக்காக திட்டம் அனுப்பப்படுகிறது. உடனடியாக திட்டம் அனுமதிக்கப்பட மகிழ்வில் பூரித்து போகிறார்கள் அவர்கள். குளத்தின் இந்தக்கரை எம்மவர்களாலும் மறு கரை இராணுவத்தாலும் சூழப்பட்டருந்தது. தினமும் குளிப்பதற்காக குறித்த நேரத்தில் அந்த அணி வந்து போகிறது. இது அந்த காலத்தில் அரியதான ஒரு இலக்கு. தொடர் வேவுகள் இலக்கை உறுதிப்படுத்திக் கொள்ள அன்றைய காலை வேளை அவர்களுக்காக குளத்துக்குள் ஒரு கிளைமோர் தயாராக காத்திருக்கிறது. இரவோடு இரவாக மரியதாஸ் கிளைமோரை குளத்து நீரின் அடியில் புதைத்திருந்தான். காத்திருக்கிறார்கள். அடிச்ச மறு நிமிடம் தங்களை எதிர்த்து தாக்க வேறு அணி வரலாம் அவர்கள் எம் அணிகளை நோக்கி பாரிய தாக்குதல் செய்யலாம் என்ற நியம் மரியதாஸ் தலமையிலான போராளிகளுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் அதற்கும் தயாராகவே காத்திருந்தார்கள். அப்போதெல்லாம் எம் வெடிகுண்டு தொழில்நுட்பம் வயிரின் மூலம் மின் கொடுக்கப்பட்டு வெடிக்க வைப்பதே. அதனால் நீண்ட மின் கடத்தக்கூடியதான தொலைபேசி வயரை குளத்து நீரின் அடியால் மிக சிரமத்தோடு தாட்டு கிளைமோரை நிலைப்படுத்துகிறார் மரியதாஸ். நீரிற்கு வெளியிலும் மண்ணுக்குள் வயரை தாட்டு குளக்கரையில் இருந்த பெரும் காட்டுக்குள் கொண்டு வருகிறார். இப்போது எல்லாம் தயார். மின்கலத்தின் மூலம் வெடிக்க வைக்க தயாராக காத்திருக்கிறார்கள் அந்த மனிதர்கள். மரியதாஸ் கண் இமைக்காமல் இராணுவ அணியை அவதானித்த்துக் கொண்டிருக்கிறார். தூர சில உருவங்கள் காட்டை விட்டு வெளி வருவது தெரிகிறது. இராணுவ அணி உடைகளை கழைந்து குளிப்பதற்காக குளத்துக்குள் இறங்குகின்றனர். அவர்களில் சிலர் துப்பாக்கியோடும் சிலர் குளிப்பதற்கான பொருட்களோடுமே வந்திருந்தனர். குளத்துக்குள் இறங்கி சிலர் குளிக்க இரண்டு மூன்று பேர் அருகில் இருந்த கற்களில் உடைகளை தோய்க்கத் தொடங்கி இருந்தனர். இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் நெருக்கமாக வந்து விட்டது. மரியதாஸ் மின் இணைப்பை மின்கலத்தின் மூலம் கொடுக்கிறான். “ஏமாற்றம்…” கிளைமோர் வெடிக்காமல் சதி செய்தது மின்கலத்தில் மின் இல்லை என்று நினைத்து வேறு மின்கலத்தின் மூலம் மீண்டும் முயற்சி செய்த போது அதுவும் தோல்வி. மனம் வெறுத்துப் போக குளத்தையே வெறித்து பாக்கிறார்கள். ச்சீ… தப்பீட்டாங்கள்… அனைவரும் மனம் வெறுத்து அந்த குளக்கரையோரம் நீண்டு நிமிர்ந்த மரங்களின் அடியில் படுத்து கிடக்கிறார்கள். இலக்கு தப்பி விட்டது. வந்த அணி திரும்பி விட்டது. தளபதிக்கு விடயம் தெரிவிக்கப்பட்டு இவர்களும் அன்று முழுவதும் அந்த காட்டோரம் படுத்திருந்து தாம் தயாராக்கி வைத்த கிளைமோரை மீட்க குளத்துக்குள் இறங்குகிறார்கள். கிளைமோரை தூக்கி வெளியில் வந்து பார்த்த போது சிரிப்பதா அழுவதா என்று நிலை தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.என்னண்ண ஆச்சு? இங்க பார் மீன் என்ன செய்திருக்கு என்று? அட நாசமா போன மீன்கள் இப்பிடி வயர கடிச்சு தின்டிருக்குதகள்? இடையில் அறுபட்டு கிடந்த வயரைப் பார்த்து மீன்களை திட்டத் தொடங்கினான் ஆறுமுகம். விடுடா அதுகளுக்கு தெரிஞ்சு போச்சு போல இவங்கள் ஆமிய மட்டுமல்ல எங்களையும் சேர்த்து சாகடிக்க போறாங்கள் என்று அது தான் அதுகள் எங்களுக்கு எதிரா போர்க்கொடி தூக்கி இருக்குதுகள். என்று இரகசியமாக கூறி சிரித்து விட்டு முகாம் மீண்டார்கள். அதில் ஒருவனுக்கு மட்டும் அந்த இலக்கு தவறியது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நீரைத் தவிர வேறு இடத்தில் கிளைமோரை பொருத்தினால் இலக்கு வலயத்துக்குள் அந்த அணி முழுவதும் வராது அதனால் அவர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு. அதனால் சிந்தனையை கூர்மையாக்கிக் கொண்டான். என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து களைத்த அவனுக்கு வயர்லெஸ் ( wireless ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனை கருத்தரித்தது. அதாவது வயர் இணைப்பு இல்லாது வெடிக்க வைக்கும் தொழில் நுட்பம். உதாரணத்துக்கு ரிமோட்கொன்ரோல் (remote control ) தனக்கு தோன்றியதை மரியதாஸ்க்கு தெரியப்படுத்தினான். மரியதாஸுக்கும் அது சரியான ஒன்றாகவே பட்டது. சிந்தனை செயலாக்கம் பெற்றது இரண்டு வோக்கிகள் அதற்காக பயன்படுத்தப்பட்டன. ஒரு வோக்கியின் ஒலிபெருக்கிக்கு செல்லும் வயரில் இருந்து கிடைக்கும் மின்சாரம் கிளைமோரோடு இணைக்கப்படுகிறது. அந்த மின்சாரத் தூண்டல் கிளைமோரை வெடிக்க வைக்க போதுமானதா என்று சரிபார்க்கப்பட்டு அதற்கான மின்சாரத் தூண்டலை அதிகரிக்க செய்யும் ஒரு இலத்திரனியல் பகுதி அதனுடன் இணைக்கப்படுகிறது. அதன் மூலம் கிளைமோருக்கான வெடிப்பிக்குத் தேவையான மின்சாரம் சரி செய்யப்படுகிறது. இப்போது இவர்கள் கையில் இருக்கும் வோக்கியின் PTT அமத்தப்பட்டால் கிளைமோருடன் இணைக்கப்பட்ட வோக்கியில் இருந்து மின்சாரம் பாச்சப்படும் அந்த மின் தூண்டல் வெடிப்பியை வெடிக்க வைத்து கிளைமோர் வெடிக்கும் இலக்கு தவறாது சிதறும். ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. அதாவது இவர்கள் அந்த திட்டத்துக்காக பயன்படுத்திய வோக்கியின் இலக்கம் 328. இதே இலக்கத்தில் எதிரியும் தொடர்பை பேணுவானாக இருந்தால் அல்லது வோக்கியின் அழைப்பு வலயத்துக்குள் இருந்து வேறு எதாவது வோக்கியில் இருந்து அந்த இலக்கத்துக்கு PTT அழுத்தப்பட்டால் கட்டாயமாக கிளைமோர் வெடித்து சிதறும். ஆனாலும் எமது அணிகளுக்கு இந்த இலக்கத்தை பாவிக்க வேணாம் என்ற ஒரு கட்டளையை வழங்கி ஆபத்தை தவிர்க்கலாம். ஆனால் எதிரி…? யோசித்த போது இறுதியாக முயற்சி செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவர்களாக நடவடிக்கையில் இறங்கினர் மரியதாஸ் தலமையிலான அணி. அந்த நெருக்கடியான காலமானது தொழில்நுட்ப அறிவியல் வளராத இயக்க வரலாற்றின் பக்கத்தை கொண்டது. ஆனாலும் கிடைக்கும் பொருட்களின் மூலம் உயர் பயன்பாட்டை பெறக்கூடிய விடுதலைப்புலிகளின் போராளிகள் தமது உயர் தொழில்நுட்ப அறிவை தம் சிந்தனைகளுக்கூடாகவே வளர்த்துக் கொண்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடே இந்த கிளைமோர் தாக்குதல்.சில வாரங்கள் கடந்து போக, மீண்டும் வேவுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட அந்த இரவு அவர்களுக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது சிலவேளைகளில் இதுவும் தவறினால்? அனைவரின் மனதிலும் இதுவே எழுந்த கேள்வி. வெடிக்காமல் போனால் பரவாயில்லை தவறி இலக்கு வர முன் வெடித்தால்? இலக்கு பிசகி விடும் அதே நேரம் இப்படியான இலகுவாக கிடைக்கும் இலக்குக்காக நீண்ட காலங்கள் காத்திருக்க வேண்டி வரும். அனைவரும் அந்த குளக்கரையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மரியதாஸ் கையில் வெடிக்க வைக்கும் வோக்கி இருந்தது. இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் வருகிறது. இவர்களின் மனப் பதட்டம் அதிகரிக்கிறது. வந்தவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு தமக்கான ஆபத்து காத்திருப்பதை அறியாது சிரித்து மகிழ்கின்றனர். மரியதாஸின் கையில் இருந்த வோக்கியின் PTT அழுத்தப்படுகிறது. அந்த காலை நேரம் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாது கிளைமோர் வெடித்து சிதறிப் போக சிங்களத்து சிப்பாய்கள் 9 பேர் அந்த இடத்திலையே சிதறிப் போனார்கள் காவல் பணியில் இருந்த ஒரு இராணுவம் மட்டும் காயத்தோடு தப்பித்து சென்று விட இலக்கை துவம்சம் செய்த வோக்கிக்கு ஒரு முத்தத்தை கொடுக்கிறான் மரியதாஸ். உடனே பின்தளம் திரும்ப கட்டளையிடுகிறான். அனைவரும் வெற்றி பெற்றுக் கொண்டு தளம் திரும்பினர். மரியதாஸ் தலமையிலான மணலாறு மாவட்ட படையணியின் வேவுப் போராளிகளின் இந்த தாக்குதலானது சிங்களத்துக்கு தடுமாற்றத்தையும் எமக்கு மகிழ்வையும் தந்த போது, அடுத்த இலக்கைத் தேடி அந்த மனிதர்கள் அந்த பெரும் காட்டுக்குள் ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தார்கள்… கவிமகன்.இ 22.11.2017
    • சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம்     இது வட தமிழீழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்திருந்தது.             அங்கு பயின்ற மருத்துவர்களும் தாதியரும்   நடுவில் அமர்ந்திருப்பவர் படைய மருத்துவர் லெப். கேணல் சத்தியா அவர்கள்                 பின்னாளில்         திருவுருவப்படத்திற்கு வலது பக்கம் அமர்ந்திருப்பவர் மரு. சத்தியமூர்த்தி ஆவார்.
    • பெரியார் ராமசாமியைத் தனது பேரன் என்று சீமான் ஒரு காலத்தில் அழைத்துவந்தார். இதனை ஒரு கூட்டத்தில் கிண்டலடித்துப் பேசிய பெரியாரின் உண்மையான பேரனான இளங்கோவன், "நாந்தான் பெரியாரின் உண்மையான பேரன், சீமான் கள்ளப்பேரன், அவன் பெரியாரின் சின்னவீட்டிற்குப் பிறந்தாலும் பிறந்திருப்பான்" என்று கூறியிருந்தார். அதன்பிறகு பெரியாரை தனது பேரன் என்று கூறுவதைச் சீமான் தவிர்த்து விட்டிருக்கலாம். இப்போது இளங்கோவனின் மரணத்திற்குத் துக்கம் விசாரிக்கச் சென்றிருக்கத் தேவையில்லை. அவரது அரசியல் அவருக்குத்தான் புரியும். அதனால் எமக்கேதும் நடக்கப்போவதில்லை. 
    • ரைட்டு….உங்களுக்கும் வெம்புது ஆனால் வலிக்காத மாதிரியே நடிக்கிறீர்கள்… பார்ப்போம் எத்தனை வருடங்களுக்கு இப்படி…. உள்ள அழுகிறேன்….வெளிய சிரிக்கிறேன்…நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்கிறேன் என்று இருக்கப்போகிறீர்கள் என. ———- கடந்து போயிருக்கலாம்….  செய்தே ஆக வேண்டும் என்றால்…. இரங்கலை சுருக்கமாக ஒரு டிவீட்டுடன் முடித்திருக்கலாம்…. எவன் செத்தாலும் அதை வைத்து பிண-அரசியல் செய்யும் அண்ணனுக்கு - இறந்தது இந்த இனத்தின் வஞ்சகன் என்பது கூடவா தெரியவில்லை.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.