Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காட்சியும்.....புலம்பலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பசு மாடு தன்சல்....  

வெசாக் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் எட்டு குடும்பங்களுக்கு படையினரால் பசு மாடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வெசாக் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் 511ஆவது படையணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்;, 511 ஆவது படையணின் கட்டளைத் தளபதி ஜெனரல் சமரசிங்க மற்றும் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் மாடுகளை வழங்கி வைத்தனர்.

Cow-Dansal.jpg

http://www.virakesari.lk/article/local.php?vid=4774

மானிப்பாய் மருதடி பிள்ளையார் என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைவரும் அறிந்திருப்பார்கள்.மானிப்பாய் சந்தியில் நடுநாயகமாக ,வயலும் வயல் சார்ந்த இடத்தில் வயலை பார்த்தபடி சிவனே என இருந்தார் ,இருக்கின்றார், இருப்பார்.எனது பெற்றோருக்கு அவர்களின் பெற்றோர் அறிமுகம் செய்து வைக்க அவர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.சிறு வயதிலிருந்து சென்று வருகின்றேன். அந்த ஊருக்கு அவர் சைவ மன்னர்களால் அறிமுகமானாரா அல்லது தனிநபரகளின் மூலம் அறிமுகமானாரா என ஞான் அறியேன் பராபரனே. பயம் இருக்கும் வரை பக்தி இருக்கும்.அது தனிநபர் ஆகட்டும் சமுகமாகட்டும்.யாழ்நகரில் பல கோவில்கள் போரினால் பாதிக்கப்பட்டது.மீண்டும் அவை புனர்நிர்மானம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றது.இதில் புலம்பெயர்ந்த மக்களின் பங்கு அலப்பரியது என்றால் மிகையாகாது. ஆனால் மருதடியானின் கதை வேறுமாதிரியானது.எந்த போராலும் அவனின் இருப்பிடம் சேதமாக்கப்படவில்லை.பக்தர்களின் புது கோவில் கட்ட வேண்டும் என்ற ஆசையால் கோவிலை உடைத்தார்கள் எட்டு வருடங்களுக்கு முதல் இந்த கோவிலை கட்டிதருவதாக சொன்ன ஒருவர் புலம்பெயர்ந்த நாட்டில் கைது செய்யபட்ட படியால்(உண்மை பொய் தெரியாது)தொடர்ந்து கட்டமுடியாது போய்விட்டது என சிலர் சொன்னார்கள்.இருந்தும் புலம்பெயர்ந்தவர்கள் தங்களால் இயன்றளவு பண உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். பிரித்தானிய ஆட்சியில் அதிகாரமும்,ஆயுதபலமும் இருந்த காலத்தில் அமெரிக்கன் மிசனரியினரால் வைத்தியசாலை கட்டப்பட்டது அதனுள் கிறிஸ்தவ தேவாலயமும் கட்டப்பட்டது.எதிரே ஜெசுநாதர் குடி வர பிள்ளையார் முகத்தை திருப்பி வயலை பார்க்கத்தொடங்கிவிட்டார் என்று ஊர் மக்களிடையே ஒரு கதை உண்டு. வைத்தியசாலை மூலம் சில நன்மைகள்கிடைக்க தொடங்க முன்னாள் தீவிர பிள்ளையார் பக்தர்கள் சிலர் ஜெசு பக்கம் சாயத்தொடங்கிவிட்டார்கள். ஜெசு பக்தர்கள் அன்னிய மொழியையும் சமயத்தையும் பின்பற்ற தொடங்கினார்கள்.தலைநகர் கொழும்பில் அவர்களுக்கு அரச உத்தியோகமும் சலுகைகளும் கிடைக்க தொடங்கின.பொருளாதர வசதியில் பின் தங்கியோர் தமிழ்மொழி பேசி கிறிஸ்தவ மதத்தை தழுவி ஊரில் சில சலுகைகள் பெற்று வாழ்ந்தனர்.பொருளாதர வசதி படைத்தோர் ஆங்கில மொழி பேசி கிறிஸ்தவ மதத்தை தழுவி கொழும்பு கருவாக்காட்டிற்கு புலம் பெயர்ந்தனர். மீண்டும் மானிப்பாய் மருதடியானுக்கு அருகில் அரச அதிகாரமும் ,ஆயுதமும் தாங்கிய கட்டமைப்பு உண்டு..பொருளாதார வசதிகள் குறைந்தோருக்கு மாடுகள் வழங்குகிறார்கள்,தன்சல என அறியாத பெயரும் இடுகிறாகள் .பொருளாதார வசதி படைத்தோர் ஜனாதிபதியுடனும் ,இராணுவ ,பொலிஸ் அதிகாரிகளுடன் கலியாண சமையல் சாதம் உண்ணுகிறார்கள்.மீண்டும் அந்த மண்ணில் ஒருமொழியும் மதமும் அறிமுகப்படுத்த அத்திவாரம் போடுகிறார்கள்........மக்கள் மாறக்கூடும்... பன்சலவில் தான் தன்சல நடக்கவேண்டும் ஆனால் இன்று கோவிலில் தன்சல நடக்கின்றது.காலப்போக்கில் மருதடி பன்சலவாகி தன்சல நடக்க சந்தர்ப்பம் உண்டு.இதற்கு சில ஊர்மக்களின் ஆதரவும் கிடைக்க கூடும்.7 மாடுகளை தன்சல செய்ய இரண்டு பொதுமக்களும் பத்திற்குமேற்பட்ட படைத்தரப்பினர் சமுகளித்திருக்கிறார்கள்.அதுவும் இராணுவ சீருடையுடன்.மதசடங்கு நிகழ்வில் படை அதிகாரம் ஏன்? என்ன காரணத்திற்காக இதை நான் புலம்புகின்றேன் என்றால்,அந்த மண்ணில் எந்த மதமும் இல்லாத ஒர் இனம் வாழ்ந்து வந்திருக்கின்றது.காலப்போக்கில் சைவம்,கிறிஸ்தவம் ,இஸ்லாம்,போன்ற மதங்கள் படைப்பலம்,ஆயுதப்பலம்,வியாபார பலம்,பக்திபலம் போன்றவற்றால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இனிமேலும் பல மதங்கள் அந்த மண்ணில் தோன்றும்,அழியும்.தமிழும் சைவமும்,தமிழும் கிறிஸ்தவமும்,தமிழும் இஸ்லாமும்,தமிழும் இந்துவும் ......தற்பொழுது மண்வாசிகளிடையே நிலைத்து நிற்கின்றது.பெளத்தமும் சிங்களமும் நிலைத்து நிற்குமா?

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயர் காலத்தில் மிஷனறிகள் பல ஊர்களில், இருந்திருந்தாலும்....
மானிப்பாய் மக்களைப் போல் அவர்கள் சீக்கிரம் மதம் மாறவில்லை,
அதனை.. கருத்தில் கொண்டு... மானிப்பாய மக்களை பௌத்தர்களாக்குவது சுலபம் என்று சிங்களம் நினைத்திருக்கலாம்.
பதிவுக்கு நன்றி புத்தன். மானிப்பாய் மக்களை, அந்த மருதடியான் தான்... காப்பாத்த வேணும். :D

மானிப்பாயாருக்கு ஏனிந்த பொன்ஸ் குணம் ?
 
இங்க ஒரு குடும்பத்திற்குள் சண்டை. பெண்ணும் பிள்ளைகளும் மதம் மாறிவிட்டார்கள்.
 
Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் கட்டி முடிக்காவிட்டால், விகாரையாகக் கட்டி பிள்ளையாரை ஒரு ஓரமாக எழுந்தருளச் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாருக்குத் தெரியாதா அவரைக் காப்பாற்ற???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானிப்பாயாருக்கு ஏனிந்த பொன்ஸ் குணம் ?
 
இங்க ஒரு குடும்பத்திற்குள் சண்டை. பெண்ணும் பிள்ளைகளும் மதம் மாறிவிட்டார்கள்.
 
எங்கட எழுத்தாளர் மாதிரி, எழுதுகிறது மருதடியான், பெயர் மாத்திரம் புத்தன்- கொர்ர்ர்

பை தா வே, வாட் இச் தி மீனிங் ஒப் பொன்ஸ் குணம்/ பீப்ப்ல்ஸ் ?

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் இணுவிலில் ஆங்கிலேயர்கள் வைத்தியசாலை, தேவாலயம் ,பாடசாலை கட்டினார்கள். ஆனால் மக்கள் மதம் மாறவில்லை என்று இணுவில் சனங்கள் பெருமையாகச் சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மேல் மலம் கொட்டிய சிங்களவன் இன்று மாடுகளை இனாமாக கொடுக்கிறான். சிங்களவன் நல்லவனா கெட்டவனா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயர் காலத்தில் மிஷனறிகள் பல ஊர்களில், இருந்திருந்தாலும்....

மானிப்பாய் மக்களைப் போல் அவர்கள் சீக்கிரம் மதம் மாறவில்லை,

அதனை.. கருத்தில் கொண்டு... மானிப்பாய மக்களை பௌத்தர்களாக்குவது சுலபம் என்று சிங்களம் நினைத்திருக்கலாம்.

பதிவுக்கு நன்றி புத்தன். மானிப்பாய் மக்களை, அந்த மருதடியான் தான்... காப்பாத்த வேணும். :D

நன்றிகள் தமிழ் சிறி......எல்லா மானிப்பாயாரும் மதம் மாறாவில்லை';;; அப்படி மாறினவன் கருவாகாட்டில் வசதியாக வாழ்கிறான்.......அதாவது வெள்ளைகளுக்கு ஒட்டுக்குழு வேலை பார்த்தவர்கள்....தற்பொழுது சிங்களாஆட்சியாளருக்கு ஆதரவு கொடுத்து தப்பிபிழைத்தல் போல்.....

மானிப்பாயாருக்கு ஏனிந்த பொன்ஸ் குணம் ?
 
இங்க ஒரு குடும்பத்திற்குள் சண்டை. பெண்ணும் பிள்ளைகளும் மதம் மாறிவிட்டார்கள்.
 
மானிப்பாயர் பயங்கர சுழியங்கள் அதுதான் இந்த பொன்ஸ் குணம் எங்கேயும் தப்பிபிழைத்துவிடுவான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோயில் கட்டி முடிக்காவிட்டால், விகாரையாகக் கட்டி பிள்ளையாரை ஒரு ஓரமாக எழுந்தருளச் செய்யலாம்.

நன்றி கிருபன் பிள்ளையாரும் ஞாணக்கொழுந்து.....புத்தனும் ஞாணக்கொழுந்து :D

பிள்ளையாருக்குத் தெரியாதா அவரைக் காப்பாற்ற???

சனம் அவரை காப்பாற்றினால் தான் அவரால் தப்பி பிழைக்கமுடியும்....

பிள்ளையாருக்குத் தெரியாதா அவரைக் காப்பாற்ற???

சனம் அவரை காப்பாற்றினால் தான் அவரால் தப்பி பிழைக்கமுடியும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட எழுத்தாளர் மாதிரி, எழுதுகிறது மருதடியான், பெயர் மாத்திரம் புத்தன்- கொர்ர்ர்

பை தா வே, வாட் இச் தி மீனிங் ஒப் பொன்ஸ் குணம்/ பீப்ப்ல்ஸ் ?

எழுத்தாளர் என்று என்னை குறிப்பிட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..... :D புத்தனும் மருதடியானும் ஒன்றே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் இணுவிலில் ஆங்கிலேயர்கள் வைத்தியசாலை, தேவாலயம் ,பாடசாலை கட்டினார்கள். ஆனால் மக்கள் மதம் மாறவில்லை என்று இணுவில் சனங்கள் பெருமையாகச் சொல்லுவார்கள்.

மானிப்பாய் பிரதேச சபை......அத்துடன் அது ஒரு தேர்தல் தொகுதியும் அதாவது அது பரந்த பிரதேசம் .....சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்கள் எல்லாம் சேர்த்துதான் மானிப்பாய்....... அதுசரி அப்பு இணுவிலோ......இப்ப ஆஞ்சநேயர் பக்தர்கள் இணுவிலில் அதிகம் இருக்கினம் போலகிடக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மேல் மலம் கொட்டிய சிங்களவன் இன்று மாடுகளை இனாமாக கொடுக்கிறான். சிங்களவன் நல்லவனா கெட்டவனா?

மில்லியன் டொலர் கேள்வி நூணா...... :D .......அம்மான்மார் ,மாஸ்ரர் மார்,சிவப்புகட்சிக்காரர்,வீணை வாசிப்போர் , ,முற்போக்குவாதிகள், முற்போக்கு எழுத்தாளர்கள் எல்லாம் சொல்லியினம் சிங்களவன் த..கிரேட்......The Great

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மேல் மலம் கொட்டிய சிங்களவன் இன்று மாடுகளை இனாமாக கொடுக்கிறான். சிங்களவன் நல்லவனா கெட்டவனா?

இதன்படி  பார்த்தால்

மாடுகளைவிட  தமிழர்கள் தீண்டப்படாதவர்கள்

சிங்களத்துக்கும் உலகுக்கும்........... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.