Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்ன சின்ன ஞாபகங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொண்ணூறுகளின்ற  ஆரம்ப காலம், யாழ்ப்பாணத்தில ஒரு அழகான கிராமத்தின்ர மூன்று சிறு ஒழுங்கைகள் சந்திக்கும் சந்தியில் சைக்கிளில்  நின்று நாங்கள் மூவர் கதைத்துக் கொண்டு இருந்தோம். மூன்று பேரும் ஒவ்வொரு பாதையால் வந்ததால் அந்த இடம் எங்களுக்கு பொதுப்புள்ளியாயிற்று.அப்போது ஒருபாதையால் ஒருவர் சைக்கிளில் பாட்டோடு வந்து கொண்டிருந்தார்.சைக்கிள் இரண்டு பக்க பனைவேலியையும் மாறி மாறி தொட்டுக்கொண்டுவந்தது.அவருக்கு வெறி என்பதை நாங்கள் ஊகித்துக்கொண்டோம்.நான் மற்றவர்களை அவதானமாய் தள்ளி நிற்கச்சொன்னேன். அவரி வாயில் இருந்து "ராஜாதி ராஜன் இந்த ராஜா ராஜா" என்ற பாடல் ராகமாய் போய்க்கொண்டிருந்தது.

சந்திக்கு கிட்ட வரவும் அவரை துரத்தி வந்த நாய் அவரில பாயவும் சரியாய் இருந்தது.ஒரு கொஞ்ச நேரத்தில உருட்டி உருட்டி கடிச்சுப்போட்டுது.அவர் உடுத்திருந்த சாரம் கந்தலாய்ப்போயிற்று. நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து கத்தினம் நாய் விட்டிற்று போயிற்று.அந்த மனிதனைப்பார்க்க பாவமாய் இருந்தது.அயல் சனங்களும் வந்திற்றுது.நாங்கள் வந்த சனங்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பிட்டு ,அயல் வீடு ஒன்றில பழைய சாரம் வாங்கி அந்த ராஜாவுக்கு கொடுத்தம்.

அந்த ராஜா மீண்டும் இந்தப்பாட்டோட போனார்.ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை வாழ,ஒரு ராணியும் இல்லை ஆள---  என்ற பாட்டோட போனார்.

நான் அவரை மீண்டும் எதிர்பாராது வன்னியில் கண்டேன்.அதுவும் இயக்க நிறுவனமொன்றில் ஊழியராய்.அவர் என்னை அடையாளம் கண்டதை நான் உணர்ந்துகொண்டேன்.நான் அவரை அடையாளம் கண்டதாய் அவர் இறக்கும்வரை காட்டிக்கொள்ளவில்லை.அவர் ஒரு சிறந்த அர்ப்பணிப்புமிக்க ஊழியராய் இருந்தார்.கைவேலியில் காயமடைந்த மக்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருக்கும்போது செல்தாக்குதலில்

உடல் சிதறி இறந்து போனார்.அவரது தலையையும் இரு பாதங்களையும் ஒரு பலாமரத்துக்கருகில் புதைத்தோம்.புதைகுழியிட்குள் ஒரு மூக்குப்பேனியையும் அடையாளத்திட்காய் வைத்தோம்.உறவினர்களுக்கு

அவர் இறந்ததை அறிவிக்கமுடியவில்லை.           

  • ஓவியன் -
  • Replies 148
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி லியோ..

  • கருத்துக்கள உறவுகள்

ம் .... என்னத்தைச் சொல்ல தொடருங்கள் லியோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதைக் கனக்க வைக்கும் பதிவுகள், எப்படி லைக் பண்ண?? :(

ஆவணமாக்கப்பட வேண்டியவை. பகிர்வுக்கு நன்றிகள் லியோ அண்ணா :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கை,ரதி,அபராஜி,இசை,சுமேரியர்,ஜீவா தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்  

  • கருத்துக்கள உறவுகள்

மனதைக் கனக்க வைக்கும் பதிவுகள், எப்படி லைக் பண்ண??  :(

ஆவணமாக்கப்பட வேண்டியவை. பகிர்வுக்கு நன்றிகள்

தொடருங்கள்  லியோ  

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசிக்கின்றனான் ,நன்றி லியோ தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசிக்கின்றனான் ,நன்றி லியோ தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு அண்ணையோடு கதைத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது கிரிக்கட் பற்றி கதை தொடங்கிற்று.தமிழேந்தி அண்ணைதான் ஆரம்பித்துவைத்தார்.தமிழேந்தி அண்ணை ஒரு இந்திய அணி ஆதரவாளர்.அதிலும் டெண்டுல்காரின் விசிறி .அந்த நேரம் இலங்கைக்கும்

அவுஸ்திரேலியாவிட்கும்  போட்டி நடக்கயிருந்தது.தமிழேந்தி அண்ணை

அண்ணையிட்ட சொன்னார் " தம்பி சொர்ணம் இலங்கை அணியின்ர ஆதரவாளர்" . சொர்ணம் அண்ணையிட்ட சொல்லிச்சு அண்ணை சிங்களவன் எப்படியெண்டாலும் எங்களை ஒத்தவன் அவன் அப்படியில்லை.அண்ணை சொர்ணம் சொன்னதை ஆமோதித்தார்.

நான் வெஸ்ட்இண்டீஸ் ஆதரவாளன்.எனக்கு ஏனோ இலங்கை இந்தியா பிடியாது.ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தானே.அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ எதுவும் இருந்ததில்லை.அவர் அருகில் இருந்தவர்கள்  சிலர் இன்னும் உயிரோடு அங்கும் இங்கும் இருப்பார்கள்

அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.தூரத்தில் இருப்பவர்கள்தான் அவரை நா கூசாமல் விமர்சிக்கிறார்கள்.இனத்தின் விடுதலையும் மேம்பாடும்தான் அவரின் சதா சிந்தனையாய் இருந்தது. அதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம் இல்லை.ஒவ்வொரு போராளியும் மாவீரர் ஆகும்போது அந்த சுமை அவரின் நெஞ்சில் கூடிக்கொண்டே போனது. 

இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளரின் மனைவி சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் ஆலோசகரின் மனைவி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்.இன்னுமொருவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்தவர்.சில போராளிகள் சிங்கள பெண்களை மணந்திருந்தார்கள்( தேவை கருதியும்,விரும்பியும்).ஒரு தடவை சிங்களப்பெண்ணை மணந்த போராளியொருவன்  குடும்பமாய் வன்னிக்கு வந்திருந்தான்.வரும்போதே அவனது நான்கு வயது பெண்குழந்தைக்கு டெங்கு நோய் இருந்திருக்கிறது.

இங்கு சீரியஸ் ஆகிவிட்டது.பல போராளிகள் அந்த பிள்ளையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்கள்.அந்த பிள்ளைக்கு இரத்தம் ஏற்றவேண்டும் ஒரு பொறுப்பாளர் தனது இரத்தத்தை ஏற்றச்சொன்னார் ஆனால் அந்த இரத்தம் பொருந்தவில்லை.இன்னுமொரு போராளியின் இரத்தம் ஏற்றப்பட்டது.அந்த குழந்தை காப்பற்றப்பட்டதுடன் அந்த குழந்தை அந்த மருத்துவமனையில் இருந்து வெளிக்கிட மறுத்தும்விட்டது. குழந்தை பணியாளர்களுடன் மிகவும் ஒட்டிவிட்டது.பின் அந்த குடும்பம் தலைவரை சந்தித்து சிங்கள தேசத்திற்கு போனது. 

 அந்த உன்னத தலைவனை எழுதும் அருகதை எனக்கு கிடையாது.இருந்தும் சிலரின் விமர்சனம் எழுதத்தூண்டுகிறது.

-  ஓவியன்-

Edited by லியோ

இத்தனை தியாகங்களுக்கும் ஒரு விடிவில்லாமலா போகும். தொடருங்கள் உங்கள் பதிவுகளை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடேசன் அண்ணை  போராளிகளின் சிவில் பிரச்சனைகளுக்கான விசாரணைக்குழுவிற்கும்  பொறுப்பாக இருந்தார்.நான் அந்தக்குழுவில் ஒருவனாய் இருந்தேன். மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இருதடவை சந்தித்து முடிவுகள் எடுப்போம்,/ விசாரனைகளை செய்வோம்.எங்களுடைய பரிசீலனைக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.அது ஒரு பெண்ணிடம் இருந்து வந்திருந்தது.அந்தக்கடிதத்தில் இயக்கத்தின்ர ஒரு பிரிவில் சாரதியாக இருக்கும் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் தன்னை இரு வருடங்களாய் காதலித்ததாயும் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாயும் தனக்கு உதவுமாறும் கோரப்பட்டிருந்தது. அந்தப்பெண்பிள்ளையின் குடும்பமும் வறுமை நிலையில் இருந்தது.

நாங்கள் அப்போராளியின் தனி நபர் கோவையை பார்த்தபோது அதில் அவர் யாரையும் காதலிப்பதாய் குறிக்கப்பட்டிருக்கவில்லை.நாம் அந்த போராளியை வரவழைத்து அவர் மீது வந்த புகாரை தெரிவித்து பூரண விளக்கத்தை கடிதம் மூலமாய் தருமாறு கோரினோம்.  

அவர் காதலித்ததை ஏற்றுக்கொண்டு ,திருமணம் செய்ய மறுத்திருந்தார்.

அவர் மறுத்தலுக்கான காரணம் அந்தப்பெண்ணின் சகோதரன் இந்திய ஆமியுடன் சேர்ந்தியங்கிய மாற்றுக்குழுவில் இருந்து புலிகளுடனான மோதலில் இறந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது.அது தனக்கு அண்மையில்த்தான் தெரிந்ததாகவும் எழுதியிருந்தான்.நாங்கள் அந்தக்காரணத்தை ஏற்கமுடியாது நீர் திருமணம் செய்யவேண்டும் என்று கூறினோம்.அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் அண்ணையிடம்

இப்பிரச்சனையை கொண்டுபோனோம்.அண்ணை உறுதியாய்ச் சொன்னார் அந்தப்போராளி இணங்காவிடின் அவரை இயக்கத்தில் இருந்து நிறுத்தி குற்றத்திற்கு உரிய தண்டனையை வழங்குமாறு சொன்னார். அந்தப்பெண்பிள்ளைக்கும் இயக்கநிறுவனம் ஒன்றில் வேலைக்கு ஒழுங்குசெய்து குடும்ப வறுமையை தீர்க்குமாறும் கூறினார்.அண்ணை கூறியது போன்றே எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. 

  • ஓவியன் -   
  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான அனுபவப்பகிர்வுகள்.. தொடருங்கள் லியோ..

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு அண்ணையோடு கதைத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது கிரிக்கட் பற்றி கதை தொடங்கிற்று.தமிழேந்தி அண்ணைதான் ஆரம்பித்துவைத்தார்.தமிழேந்தி அண்ணை ஒரு இந்திய அணி ஆதரவாளர்.அதிலும் டெண்டுல்காரின் விசிறி .அந்த நேரம் இலங்கைக்கும்

அவுஸ்திரேலியாவிட்கும்  போட்டி நடக்கயிருந்தது.தமிழேந்தி அண்ணை

அண்ணையிட்ட சொன்னார் " தம்பி சொர்ணம் இலங்கை அணியின்ர ஆதரவாளர்" . சொர்ணம் அண்ணையிட்ட சொல்லிச்சு அண்ணை சிங்களவன் எப்படியெண்டாலும் எங்களை ஒத்தவன் அவன் அப்படியில்லை.அண்ணை சொர்ணம் சொன்னதை ஆமோதித்தார்.

நான் வெஸ்ட்இண்டீஸ் ஆதரவாளன்.எனக்கு ஏனோ இலங்கை இந்தியா பிடியாது.ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தானே.அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ எதுவும் இருந்ததில்லை.அவர் அருகில் இருந்தவர்கள்  சிலர் இன்னும் உயிரோடு அங்கும் இங்கும் இருப்பார்கள்

அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.தூரத்தில் இருப்பவர்கள்தான் அவரை நா கூசாமல் விமர்சிக்கிறார்கள்.இனத்தின் விடுதலையும் மேம்பாடும்தான் அவரின் சதா சிந்தனையாய் இருந்தது. அதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம் இல்லை.ஒவ்வொரு போராளியும் மாவீரர் ஆகும்போது அந்த சுமை அவரின் நெஞ்சில் கூடிக்கொண்டே போனது. 

இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளரின் மனைவி சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் ஆலோசகரின் மனைவி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்.இன்னுமொருவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்தவர்.சில போராளிகள் சிங்கள பெண்களை மணந்திருந்தார்கள்( தேவை கருதியும்,விரும்பியும்).ஒரு தடவை சிங்களப்பெண்ணை மணந்த போராளியொருவன்  குடும்பமாய் வன்னிக்கு வந்திருந்தான்.வரும்போதே அவனது நான்கு வயது பெண்குழந்தைக்கு டெங்கு நோய் இருந்திருக்கிறது.

இங்கு சீரியஸ் ஆகிவிட்டது.பல போராளிகள் அந்த பிள்ளையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்கள்.அந்த பிள்ளைக்கு இரத்தம் ஏற்றவேண்டும் ஒரு பொறுப்பாளர் தனது இரத்தத்தை ஏற்றச்சொன்னார் ஆனால் அந்த இரத்தம் பொருந்தவில்லை.இன்னுமொரு போராளியின் இரத்தம் ஏற்றப்பட்டது.அந்த குழந்தை காப்பற்றப்பட்டதுடன் அந்த குழந்தை அந்த மருத்துவமனையில் இருந்து வெளிக்கிட மறுத்தும்விட்டது. குழந்தை பணியாளர்களுடன் மிகவும் ஒட்டிவிட்டது.பின் அந்த குடும்பம் தலைவரை சந்தித்து சிங்கள தேசத்திற்கு போனது. 

 அந்த உன்னத தலைவனை எழுதும் அருகதை எனக்கு கிடையாது.இருந்தும் சிலரின் விமர்சனம் எழுதத்தூண்டுகிறது.

-  ஓவியன்-

அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ இருந்ததில்லை அது எல்லோருக்கும் தெரிந்த விசயம் ஆனால் தாங்கள் அவர் வழி நடப்போம் என இங்கே இருந்து சொல்லிக் கொண்டு இருப்போரிடம் அது நிறையவே இருக்குது.
 
தொடருங்கள் லியோ நீங்கள் எழுதுவதை வாசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

தொடருங்கள்  லியோ! இறுதியில் முள்ளிவாய்க்காலில் நடந்ததையும் எழுதுங்கோ. நீங்கள் அங்கு நின்றபடியால் கண்டவற்றை எழுதுங்கோ ( தலைவர் உட்பட)

ம்ம்.... நீங்கள் எல்லோரும் பார்க்கிறது விளங்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு,நந்தன்,சுண்டல் ,இசை,சாம்பவி,ரதி,அலை தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்  

Edited by லியோ

  • கருத்துக்கள உறவுகள்

தேனொழுக இங்கு விடுதலை பற்றிக் கதைப்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை. கதைக்காமல் இருப்பவர்கள் எதிரானவர்களும் இல்லை. நீங்கள் தொடருங்கள் லியோ.

  • கருத்துக்கள உறவுகள்

தேனொழுக இங்கு விடுதலை பற்றிக் கதைப்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை.

கதைக்காமல் இருப்பவர்கள் எதிரானவர்களும் இல்லை.

நீங்கள் தொடருங்கள் லியோ.

இது எதற்கு இங்கு சுமே???

உங்களுக்கு எவரையாவது அப்படி தெரிந்தால் அவரைப்பற்றி  நேரடியாக விமர்சியுங்கள்.

அதைவிடுத்து

எல்லோரையும் இது போன்று  ஒரே மட்டைக்குள் போட்டு மூடுவது ஒரு நல்ல பார்வையோ அல்லது உதாரணமோ அல்ல. :(  :(  :(  :(

எமது இனத்துக்கு இருப்பதையும் அழிக்கும் விசம் கொண்டது இப்பார்வை. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு,ஒரு சிறப்பு பயிற்சிமுகாம்.அந்த சிறப்பு பயிற்சி முகாம் வன்னியில் ஒரு காட்டினில் ஆடம்பரமற்றும், அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது.அந்த அமைப்பு பணியை முன்னாள் இம்ரான் பாண்டியன் தளபதி ராஜேஸ்தான் செய்துமுடித்திருந்தார். அந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளராய் தளபதி கடாபி இருந்தார்.நானும் கடாபியும் நல்ல நண்பர்கள் அந்த முகாமில் ஒரே தங்குமிடத்தில் தங்கியிருந்தோம்.காலை ஐந்து மணிக்கு பயிற்சிக்கு எழுந்தால் பயிற்சி முடியும்வரை ஒன்றாகத்தான் திரிவோம்.கடாபி ஆதவன்,3/8 ஆகிய பெயரிலும் அழைக்கப்படுவார்.நான் 3/8 என்றுதான் அழைப்பேன்.முன்பும் ஒரு பயிட்சிமுகாமில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அப்போது சங்கர் அண்ணாவும் எங்களுடன் இருந்தார்.

இரவு பயிற்சி முடிந்தாலும் கடாபி நிர்வாக வேலைகளை செய்துவர சாமம் ஆகிடும் எனது நித்திரையை குழப்பக்கூடாது என்று லைட் போடாமல் மெதுவாக போய் தனது படுக்கையில் படுப்பார்.போராளிகளுக்கு கண்டிப்பானவராய் தெரிவார்.எங்களுக்கு ஒரு உத்தமராய் தெரிந்தார்.அதித உழைப்பு ,இறுக்கமான நிர்வாகம் அவருடையது.சிறந்த துப்பாக்கி சூட்டாளர். சிறப்பு பயிற்சி முகாமில் ஞாயிறு ஓய்வு நாள்.அன்றும் ஒரு காலை காலை உணவிற்குப்பின் முகாமை சுற்றிப்பார்க்க இருவரும் சென்றிருந்தோம்.எல்லா இடங்களையும் பார்த்து

சூட்டு பயிற்சி நடக்கும் இடத்திற்கு போனோம்.அப்போது நல்ல சூட்டுப்  போராளி ஒருவன் ஒரு துப்பாக்கியை கடாபியிடம் காட்டி இந்த துப்பாக்கி  வலு சீராக்க ( Zero setting )வேண்டும் , சுடுகின்றபோது சரியான விலத்தல் இருப்பதாய் சொன்னான்.  அப்போது கடாபி அந்த குழுவின் தலைவனிடமும் அது பற்றி கேட்டார்.அவனும் ஆமோதித்தான் .இப்போது கடாபி அந்த துப்பாக்கியை வாங்கி எழுபத்தைந்து மீட்டர் தூரத்திலிருந்த ஏழு இலக்குகளுக்கு( Targets) ஒவ்வொரு ரவைகள் படி அடித்தார். போய் அந்த இலக்குகளை பார்த்துவருமாறு அந்த போராளியிடமும்,குழுத்தலைவனிடமும் கூறினார்.  அவர்கள் இருவரும் போய் வந்து முதல் ஆறும் குறிதவறவில்லை (Bபுள்),

ஏழாவது இலக்கில் குறிபட இல்லை என்றார்கள்.அப்போது கடாபி அந்த ஏழாவது இலக்கில் வலது கண்ணை வடிவாய் பார்த்திட்டு வாங்கோ என்றார்.இந்தத் தடவை ஆவலில் நானும் போனேன்.என்ன ஆச்சரியம் வலது கண்ணின் கறுப்புப்புள்ளிக்கூடாக சன்னம் போயிருந்தது.சாதரணமாய் சொன்னார் துப்பாக்கியில பிழை சொல்லாதையிங்கோ. கடாபி மிகச்சிறந்த சூட்டாளன் அதனால்த்தான் இயக்கத்திற்ற இருந்த ஒரேயொரு மக்னம் பிஸ்டலை கடாபியிடம் கொடுத்திருந்தார் தலைவர். 

ஒரு சிறந்த தளபதியை , சிறந்த வீரனை , சிறந்த நண்பனை , சிறந்த சகோதரனை இழந்து விட்டோம். கடாபியாய் , ஆதவனாய் எங்கள் மனங்களில் என்றென்றும் மறக்காத மாவீரனின் நினைவை தந்தமைக்கு நன்றிகள் லியோ அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

அனு , அனு  வான ஞாபகங்கள் , அதனால்தான் அதிரவைக்குது !!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுப்பகிர்வுக்கு நனறி லியோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமேரியர்,விசுகு,சாந்தி,சுவி,இசை வருகைக்கும் ஊக்கமிடலுக்கும் நன்றிகள்   

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ இருந்ததில்லை அது எல்லோருக்கும் தெரிந்த விசயம் ஆனால் தாங்கள் அவர் வழி நடப்போம் என இங்கே இருந்து சொல்லிக் கொண்டு இருப்போரிடம் அது நிறையவே இருக்குது.
 
தொடருங்கள் லியோ நீங்கள் எழுதுவதை வாசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

போராளியாய் இருப்பதற்கும்.

போராளியை ஏற்பதற்கும்.                   இடையில் நிறைய வேறுபாடு உண்டு.
போராளியாய் இருத்தல் என்பது சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்டது.
சாதாரண மனித வாழ்வு  என்பது.
குடும்பம், கோவில், குளம், சுற்றம் முற்றம், சொந்தம் பந்தம்.
என்று எல்லாவற்றையும் குழைத்து வாழும் ஒரு வாழ்வு.
 
இரண்டையும் போட்டு நீங்கள்தான் குழப்புகிறீர்கள்.
 
அனாவசியமான நம்பிக்கைகள்தான்.
ஏமாற்றத்தை கொடுக்கின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் லியோ

  • கருத்துக்கள உறவுகள்

இது எதற்கு இங்கு சுமே???

உங்களுக்கு எவரையாவது அப்படி தெரிந்தால் அவரைப்பற்றி  நேரடியாக விமர்சியுங்கள்.

அதைவிடுத்து

எல்லோரையும் இது போன்று  ஒரே மட்டைக்குள் போட்டு மூடுவது ஒரு நல்ல பார்வையோ அல்லது உதாரணமோ அல்ல. :(  :(  :(  :(

எமது இனத்துக்கு இருப்பதையும் அழிக்கும் விசம் கொண்டது இப்பார்வை. :(

நான் எழுதியதில் எந்தத் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை. தொப்பி அளவானவர்கள் போட்டுமே அண்ணா. நீங்கள் ஏன் தொப்பியை எடுத்து வைத்துக்கொண்டு தொப்பி செய்தது சரியில்லை என்கிறீர்கள்.

 தொடருங்கள் லியோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.