Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருப்பி அடிக்க தயாராகும் தமிழர்கள் – 20ம் திகதி பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு

Featured Replies

 

 

17ம் திகதி சிறிலங்கா அணிக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்கள்.

boycot-srilanka.jpg?resize=310%2C400போராட்டம் நடந்த நேரத்தில் தமிழர்களின் வரவு குறைவாக இருந்ததால் தான் இச்சம்பவம் நிகழ்ந்து, சிறிலங்கா அணி வென்றதும் ஒருவகையில் நல்லதுதான் அதனால்த் தான் மீண்டும் தமிழர்களின் பலத்தை காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது, உறங்கு நிலையில் இருந்த புலம்பெயர் தமிழர்களை சிங்களவர்கள் உசுப்பிவிட்டுள்ளார்கள்.

இம்மறை சிங்களவர்கள் உணரும் தருணம் அதை நிரூபிக்கும் வகையில் இம்முறை பிரித்தானியாவில் க்கார்டிஃப் எனும் இடத்தின் மாபெரும் போராட்டத்திற்கு புலம்பெயர் அமைப்புகள் தயாராகி வருகின்றது.

இந்த முறை திருப்பி அடி எனும் கோசத்துடன் தமிழர்கள் திரள உள்ளார்கள். எதிர்வரும் 20ம் திகதி க்கார்டிஃப் மைதானத்தில் காலை 9மணிக்கு வருமாறு அனைத்து தமிழ் அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளார்கள். லண்டனில் இருந்து இலவச பேருந்து சேவையும் இடம்பெற உள்ளது அது தொடர்பான விபரங்களுக்கு இந்த இலக்கத்திற்கு அழைக்கலாம் 07448541504.

SWALEC STADIUM

CARDIFF, C11 9XR

THURSDAY, 20 JUNE 2013,

9AM T0 7.30PM

 

http://www.tamizl.com/?p=20135

 

  • Replies 53
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவன் அடிக்க நாங்கள் திருப்பியடிக்க பிறகு எல்லோரும் சேர்ந்து எங்களை அடிக்க......கோர்ட்சூட் போட்ட சனம் அடிபடுவதை பார்க்க இதுதான் சந்தர்ப்பமுங்கோ......வேட்டியுடன் அடிபட்ட சனம் இப்ப கோர்ட்சூட்டுடன் அடிபடப்போகுது.....

  • கருத்துக்கள உறவுகள்

உசுப்பேத்தி, உசுப்பேத்தியே காலம் போகுது, சில அமைப்புகளுக்கு.

 

போராட்டம் வேறு, அடிபடுவது வேறு.

 

முதலாவது தான் முக்கியம்.

 

இங்கே எம்மவர் பெயரைக் கெடுக்கும், சிங்கள அரசு தந்திரத்தினுள் சிக்க விரும்பும் இரண்டாவது வேண்டுபவர்கள் பேசாமல் இலங்கைக்குச் செல்லலாமே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பதிலடி என்பது வார்த்தைபிரயோகமே தவிர கத்தி பொல்லுகளுடன் அடிபடுவது அல்ல, செய்தியை வாசிப்பவர்க்கு போராட்ட உணர்வை வரவழைக்க செய்தியின் தலைப்பு இப்படி அமைந்திருக்கலாம். மேலும் இங்கு போராட்ட மாதிரியை விமர்சிப்பவர்களைவிட போராட்ட நோக்கத்தை விமர்சிப்பவர்களாக அவர்களது குதர்க்க மனத்தை வெளிப்படுத்துவதான இடுகையே இப்பதிவில் காணப்படுகின்றது. பெயரில் புத்தன் இருந்துவிட்டால் எல்லோரும் புத்தனாகிவிடமுடியாது. விமர்சனம் செய்வோ எல்லாம் அத்துடனேயே நின்றுவிடுவர் அதற்குப்பின்பு எதாவதொரு கடையிலோ அன்றேல் உணவு விடுதியிலோ, சிறுதொழில்நிலையங்களிலோ புழுதி தேய்க்கப் போய்விடுவர்.  இங்கு யாரும் சுத்தமில்லை, முருகதாசும் முத்துக்குமாரனும் அவணோடிணைந்த பல்லாயிரம் மாவீரர்களைத்தவிர.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கட்டுரையை எழுதியவர் தனது முகத்தை காட்டிவிட்டு அங்கு முதல் ஆளாக நின்று கொடிபிடிக்கட்டும் <_<

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பி அடிக்க வேண்டுமெனில் சிங்களக் கொடி பிடித்துக் கொண்டு நின்று கூட நின்று அடியுங்கள். தமிழீழத் தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டு நின்று முட்டாள்தனமாக நடக்காதீர்கள். அது புலத்தில் எம் போராட்டத்தை முடக்க நினைக்கும் சிங்களவனுக்குத் துணை போவதாக இருக்கும்.....

இலவச பேருந்து சேவை .எங்கயோ உதை கீதூ

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்களில் மக்களை அணி திரளச்செய்ய வேணுமென்ற நல்நோக்கில் எழுதப்படுகிற செய்திகள் முன்னெடுப்புகள் நமது போராட்டத்தின் திசையை எதிர்மறையான பாதகமான தாக்கத்தை தருகிற சாத்தியங்கள் அதிகம் நடந்துள்ளது.  இவ்விடயத்தில் இத்தகைய ஒழுங்குகளை செய்கிறவர்களும் செய்திகளை வெளியிடுவோரும் கவனத்தோடு செயற்பட வேணும்.

நாங்கள் இப்போது சர்வதேசத்தின் கண்களை திறக்க வைக்க வேண்டுமென்றே போராட்டங்களை முன்னெடுக்கிறோம். நாங்களும் திருப்பி அடிப்போம் என்ற உணர்ச்சி வசப்பட்ட எழுச்சியாளர்களாக நடந்து கொள்தல் வெற்றி தராது:
 

ஒரு இனத்தின் வாழ்வு இதில் நிதானமான முன்னெடுப்புகளும் தந்திரோபாயம் , இராஜதந்திரம் போன்ற இன்ன பிற விடயங்களில் அக்கறையெடுத்து செயற்படுதலே வெற்றி தரும்.

திரும்பவும் எங்கள் சனத்தை எழுப்ப இப்படியான தலைப்புகளும் செய்திகளும் தேவையென்று யாராவது நினைத்தால் இதில் எழுத சொல்ல என்னிடம் எவ்வித வார்த்தைகளும் இல்லை.

இந்த சிங்களவர்தான் தமிழ்ப் பெண்களை எட்டி உதைத்தவர் – காவல்த்துறையில் முறைப்பாடு

 

June 19, 2013 2:29 pm

london-abuse.jpg?resize=240%2C200

17-06-2013 அன்று சிறீலங்கா மற்றும் ஒஸ்ரேலியா அணிகளின் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது அங்கு தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள், அப்போது எதிர்பாராத விதமாக சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்கத் தொடங்கினார்கள்.

london-abuse1.jpg?resize=300%2C197அதில் சில சிங்கள காடையர்கள் தமிழ் பெண்களை எட்டி உதைத்துள்ளார்கள், அப்படி உதைத்தவர் யார் என்று இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளார் அவருக்கு பேஸ்புக்கில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

தற்போது இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது, கீழே இணைக்கப்பட்டுள்ளதுதான் அவருடைய பேஸ்புக் இனி நீங்கள் செய்ய வேண்டியது என்ன? இவரது பேஸ்புக் பக்கத்தை முகப்புத்தக நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்து இவர்களைப் போன்ற இனத் துவோசிகளை முடக்க வேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டுள்ளது.

https://www.facebook.com/nipul.thewarapperuma?

http://www.tamizl.com/?p=20338

 

நடந்ததை பிருத்தானிய மக்களுக்கு வெளிக்கொண்டுவரவேண்டும். அந்த இணைத்தளம் துரோகத்தனமாக நடப்பதுபோல் தென்படவில்லை. எனவே போகாமல் விட காரணம் கண்டு பிடிக்காமல் படங்களுடன் போய் நின்று நடந்தை மக்களுக்கு தெரிய பண்ண வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்கள் லொஜிக் பேசி காலத்தை ஓட்டுவதை கண்டறிந்துவிட்டார்கள்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்கள் லொஜிக் பேசி காலத்தை ஓட்டுவதை கண்டறிந்துவிட்டார்கள்..! :icon_idea:

 

இசை,

 

பிரித்தானியாவில், BBC TV யில் பேட்டிகளில் போலீஸ் அதிகாரிகள், தமிழர்கள் அமைதியான போராட்டக்காரர்கள். அவர்கள் மாதிரி எல்லோரும் நடந்தால் எமக்கு பிரச்னை இல்லை என்று சொல்வார்கள்.

 

இதனால் தான் ஹீத்ரோ விமான நிலையம் உள்ளேயே போராட அனுமதி கொடுத்தார்கள். சாதாரணமாக நடக்க கூடியது அல்ல இது.

 

மக்களுக்கு, சிங்களவருக்கு பதிலடி கொடுக்க வாருங்கள் என்று அழைத்தால், என்னாகும்?

 

மகிந்தா, அடுத்த முறை எதிர்ப்பே இல்லாது வருவார்.   

Edited by Nathamuni

இசை,

 

பிரித்தானியாவில், BBC TV யில் பேட்டிகளில் போலீஸ் அதிகாரிகள், தமிழர்கள் அமைதியான போராட்டக்காரர்கள். அவர்கள் மாதிரி எல்லோரும் நடந்தால் எமக்கு பிரச்னை இல்லை என்று சொல்வார்கள்.

 

இதனால் தான் ஹீத்ரோ விமான நிலையம் உள்ளேயே போராட அனுமதி கொடுத்தார்கள். சாதாரணமாக நடக்க கூடியது அல்ல இது.

 

மக்களுக்கு, சிங்களவருக்கு பதிலடி கொடுக்க வாருங்கள் என்று அழைத்தால், என்னாகும்?

 

மகிந்தா, அடுத்த முறை எதிர்ப்பே இல்லாது வருவார்.   

 

"பதில் அடி" (அடித்தால் திருப்பி அடிப்பது) என்றாலும் தமிழர் நாகரீகமாக நடந்து கொள்ளலாம்.

 

ஆனால் "பதிலடி" என்பது நடந்த ஒன்றுக்கு எதிர் வினை. வெளிவிட்ட அறிக்கை ஒன்றுக்கு பதிலடி அறிக்கை, கேள்வி கேட்கும் போது பதிலடி மறுமொழிகள், விளையாட்டு மைதானத்தில் அடித்த கோலுக்கு பதிலடி கோல்கள்......

 

எனவே நாளைய விளையாட்டுப் போட்டியில் தமிழ்ர்கள் உள்ளே அமராமல் வெளியே அமர்ந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

 

பிரித்தானியாவில், BBC TV யில் பேட்டிகளில் போலீஸ் அதிகாரிகள், தமிழர்கள் அமைதியான போராட்டக்காரர்கள். அவர்கள் மாதிரி எல்லோரும் நடந்தால் எமக்கு பிரச்னை இல்லை என்று சொல்வார்கள்.

 

இதனால் தான் ஹீத்ரோ விமான நிலையம் உள்ளேயே போராட அனுமதி கொடுத்தார்கள். சாதாரணமாக நடக்க கூடியது அல்ல இது.

 

மக்களுக்கு, சிங்களவருக்கு பதிலடி கொடுக்க வாருங்கள் என்று அழைத்தால், என்னாகும்?

 

மகிந்தா, அடுத்த முறை எதிர்ப்பே இல்லாது வருவார்.   

 

உங்களது நிலை தான் எனதும்

ஆனாலும் தலைவர் இப்படியானவர்களைக்கட்டிப்போட்ட பின் தான் சிங்களவன் முன்னேறினான் என்று சொல்பவர்களும் எம்மிடமுண்டு........

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் வைத்துத் திருப்பி அடிப்பதில் எந்தப்பயனும் இல்லை.

வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு ஊருக்குப் போங்கோ

 

முதலில் கருணாவிற்கும் டக்கிளசிற்கும் திருப்பி அடியுங்கோ   

பின்னர் சிங்களம் தானாக ஒதுங்கும்

 
இந்த விடயத்தில் உணர்வு பூர்வமாக சிந்திப்பதை விட அறிவுபூர்வமாக சிந்திப்பதே முக்கியம்.சிறீலங்காவுக்கு எதிராக பிரித்தானியாவின் சட்ட வரையறைக்க உட்பட்டு நாங்கள் நடத்திய போராட்டத்தின் வெற்றி சிங்கள வெறியர்கள் எங்கள் பிள்ளைகளை தாக்கியதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.நாங்கள் சட்டத்தை மதிப்பவர்களாகவும் சிங்களவர்கள் சட்த்தை மீறுபவர்களாகவும் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.அந்த இடத்திலே கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்ட எமது பிள்ளைகளுக்கு  எனது உளம் நிறைந்து பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
அடிக்கு அடி உதைக்கு உதை - திருப்பித் தாக்குவது பெரிய விடயமோ முடியாத விடயமோ அல்ல.ஆனால் அதனால் கிடைக்கக் கூடிய பயன் என்ன?அதனால் ஏற்படக் கூடிய பின் விளைவுகள் என்ன? என்பதை தூரநோக்கோடு யோசித்துப்பார்க்க வேண்டும்.நாங்கள் இப்படி அடிப்போம் உதைப்போம் என்கிறபோது சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு எமது ஆதரவாளர்களைப் போன்று வேடமிட்ட வன்முறைக் கும்பல் ஒன்றை அனுப்பி மிக மோசமான வன்முறையை தூண்டினால் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கணனி கருத்தாளர்கள் ஒரு கணம் சிந்தித்து பார்க்கவேண்டும்
இந்த விடயத்திலே சிறீலங்கா அரசாங்கத்தையும் அதன் ஆதரவாளர்களான பௌத்த சிங்கள பேரின வாதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால் நாங்கள் நாளைக்க பல்லாயிரக் கணக்கில் அங்கு திரள வேண்டும்.
அதிகார திமிரோடு வரும் பௌத்த சிங்கள பேரனவாதிகள் அஞ்சி ஓடும் வகையில் அவர்களின் உடலில் கைபடாமல் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணகக்pல் முற்றுகையிட்டு அவர்களை அசைய விடாமல் தடுத்து நிறுத்தி காவல்துறையினரை அழைத்து அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கூற வேண்டும்.
எந்த ஒரு பௌத்த சிங்கள பேரின வாதியும் துணிந்து அங்கு வரமுடியாத சூழ்நிலையை நாம் எமது ஒன்றுபட்ட பலத்தின் மூலம் உணர்த்த வேண்டும்.
நாளைய நிகழ்வை ஏற்பாடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து அங்கு வரும் நம்மவர்கள் யார் என்பதை உறுதிப்படத்த வேண்டும்.குழப்பம் விளைவிக்கும் வன்முறையை தூண்டும் நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படத்த வேண்டும்.இது தான் மிக முக்கியமானது.நாங்கள் வன்முறையாளர்களல்ல. எங்களது இலட்சியத்தில், எங்களது இலக்கில் நாங்கள் குறியாக இருப்போம்
 
0000000
கீழே உள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்ட செய்திக் குறிப்பு
 

எல்லை தாண்டிய அரச பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துவோம்!

 
அமைதி வழியில் " சிறிலங்காவைப் புறக்கணிப்போம்" என்று ஓவல் மைதானத்தின் முன் நின்று போராடிய எம் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள். இலங்கைத் தீவிற்குள் தலைவிரித்தாடிய அரசபயங்கரவாத வேர்கள் எல்லை கடந்து பிறநாடுகளிலும் தமிழ் மக்களைக் குறி வைப்பது அம்பலமாகின்றது. 
 
இனவழிப்பிழிருந்து தப்பி பல்லாயிரம் மைல்கள் வந்து தஞ்சம் கோரிய இன் நாட்டில் நாமுண்டு நமது வேலையுண்டு என்று இருப்பவர்களைக் கூட சிறிலங்கா அரச பயங்கரவாதம் இனி விட்டு வைக்கப் போவதில்லை. இதன் முன்னோட்டமே ஓவல் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 
 
அமைதி வழியில் போராடி வரும் எம் மக்கள் இங்கும் உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றார்கள். இவை தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடுமென அறிந்த சிங்கள இனவாதிகள் வன்முறையில் இறங்கி தமிழ் மக்களை வன்முறையைக் கையிலெடுக்க வைக்கப் பகீரதப் பிரயத்தனம் எடுப்பதனை இது நிரூபித்துள்ளது.
 
போராட்டத்தை ஏற்பாடு செய்த இளையோரும் அங்கே அமைதி வழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களும் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இதனைப் புரிந்து கொண்டு நிலைமையைக் கையாண்டது எமது தரப்பின் நியாயத் தன்மையை மேலோங்க வைத்துள்ளது.
 
அன்று நடந்த சம்பவங்களை தன்னிச்சையாக நடைபெற்ற ஒரு சம்பவமாக பிரித்தானிய தமிழர் பேரவை பார்க்கவில்லை என்பதுடன் இதனை இங்குள்ள அதிகார பீடங்கள் அனைத்தையும் தட்டிக் கேட்கும் நடவடிக்கைகளில் இறங்கி தமிழ் மக்களின் அமைதி வழிப் போராட்டங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும்.
 
எம் மக்களைத் தூண்டி விட்டு வன்முறையில் இறங்க வைக்க ஒடுக்குமுறையாளர்கள் விரிக்கும் சதிவலைக்குள் நாம் பலியாகி சனநாயகப் போராட்டத்தை முற்றாகப் பின்னடைவு செய்ய அனுமதிக்கலாகாது. நாளை நடைபெறவுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு முழுமையான பங்களிப்பை பிரித்தானிய தமிழர் பேரவை, ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கும். 
 
பிரித்தானிய தமிழர் பேரவை இதில் கலந்து கொள்ளும் மக்களுக்கான விரிவான பயண ஏற்பாடுகளை ஒழுங்கு செய்துள்ளதுடன் இவ் அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்களை பங்கு பற்றுமாறு வேண்டிக் கொள்கின்றது.
 
லண்டன் மாநகரிலிருந்து புறப்படும் வாகன ஒழுங்குகளிற்காண தொடர்புகளிற்கு (0781448493807927023912,07956158453,07940114059,07832954281)
 
Northwest London: Call 07814484938
 
Alperton Station - 9.30am
South Harrow Station - 9.45am
Rayners Lane Station - 10am
Thamilan Kaddai, Hayes - 10am
Thamilini Kaddai, Southall - 10am
 
 
Northeast London: Call 07940 114059
 
29 Burges Road, Eastham, E62BJ, near Eastham Station - 9.30am 
Katpaha Vinajagar 07940 114059 Temple, Walthamstore, E17 4PM - 10am
 
Southwest London:Call 07448541504
 
Mitcham Halford, CR42AD - 9.00 am
------------------------------------------------------------------------------------------
 
OUTER LONDON
 
 
Wolverhampton Call 07927023912
 
ASDA – 9 am
 
 
Birmingham: Call 07927023912
 
Outside Balagi Temple – 9.30 am
 
 
Coventry Call 07903842699
 
 
Nottingham: Call 07533381189
 
 
Liverpool: Call 07950367479
 
 
Bristol: Call 07960952919
 
 
Manchester: Call 07876705023
 
 
 
பிரித்தானிய தமிழர் பேரவை
cleardot.gif

 

Edited by navam

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

பிரித்தானியாவில், BBC TV யில் பேட்டிகளில் போலீஸ் அதிகாரிகள், தமிழர்கள் அமைதியான போராட்டக்காரர்கள். அவர்கள் மாதிரி எல்லோரும் நடந்தால் எமக்கு பிரச்னை இல்லை என்று சொல்வார்கள்.

இதனால் தான் ஹீத்ரோ விமான நிலையம் உள்ளேயே போராட அனுமதி கொடுத்தார்கள். சாதாரணமாக நடக்க கூடியது அல்ல இது.

மக்களுக்கு, சிங்களவருக்கு பதிலடி கொடுக்க வாருங்கள் என்று அழைத்தால், என்னாகும்?

மகிந்தா, அடுத்த முறை எதிர்ப்பே இல்லாது வருவார்.

நான் வாசித்தபோது "வாருங்கள் .. சிங்களவனுக்கு சேர்ந்து அடிபோடுவோம்" என்கிற செய்தியைப் பெறவில்லை.. மாறாக பங்கேற்பை அதிகரித்தால் வாலாட்ட மாட்டார்கள் என்கிற செய்தியையே நான் உள்வாங்கினேன்..

மேலும் தமிழர்கள் சிங்களவரிடம் வெ ளிநாட்டில் அடிவாங்குவது முதல்முறையல்ல.. 2009 மெலபனில் அடிவாங்கியுள்ளார்கள்..

ஆக, அடிப்பவன் அடித்துக்கொண்டே இருக்கிறான்.. அமைதியாக போராடப் போகும் நமக்குத்தான் நிறைய ஆலோசனைகள் கிடைக்கின்றன.. ஆலோசனைகளில் தவறில்லை.. ஆனால் போகின்ற கொஞ்ச எண்ணிக்கையையும் குறைத்துவிடுமோ என்கிற ஆதங்கமே பிரதானமாக உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாசித்தபோது "வாருங்கள் .. சிங்களவனுக்கு சேர்ந்து அடிபோடுவோம்" என்கிற செய்தியைப் பெறவில்லை.. மாறாக பங்கேற்பை அதிகரித்தால் வாலாட்ட மாட்டார்கள் என்கிற செய்தியையே நான் உள்வாங்கினேன்..

மேலும் தமிழர்கள் சிங்களவரிடம் வெ ளிநாட்டில் அடிவாங்குவது முதல்முறையல்ல.. 2009 மெலபனில் அடிவாங்கியுள்ளார்கள்..

ஆக, அடிப்பவன் அடித்துக்கொண்டே இருக்கிறான்.. அமைதியாக போராடப் போகும் நமக்குத்தான் நிறைய ஆலோசனைகள் கிடைக்கின்றன.. ஆலோசனைகளில் தவறில்லை.. ஆனால் போகின்ற கொஞ்ச எண்ணிக்கையையும் குறைத்துவிடுமோ என்கிற ஆதங்கமே பிரதானமாக உள்ளது..

 

அன்று பவ்வியமாக, அடி வாங்கியவர்கள், சிங்களத்தின் ஆணவத்தினை, அற்புதமாக விளம்பரப் படுத்தினார்கள்.
 
அவர்களும் திருப்பி அடித்திருந்தால்?
 
ஆக்களை கவனித்து, பிறகு ஆறுதலாக கொடுக்கக் கூடிய இருட்டடி கேள்விப்படவில்லையா?
 
புத்தியினை பாவிக்க வேண்டாமா? 

1340731465%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D.jp

7 விக்கெட்டுக்களால் இங்கிலாந்துக்கு வெற்றி - ஐ.சி.சி. கிண்ணத்தை வெல்ல சந்தர்பம்!

June 19, 2013  10:00 pm

lg-share-en.gif
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்துடன், தென் ஆப்பிரிக்கா அணி மோதியது.

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணித்தலைவர், தென் ஆப்பிரிக்காவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் 38.4 ஓவர்களில் 175 ஓட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. இங்கிலாந்து அணி 37.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியது.

(அத தெரண தமிழ்)
 
இங்கிலாந்து வென்றால் அது தன்னும் ஒரு சந்தோசமான விடையம் நடந்த தாகும்.
 

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 

அன்று பவ்வியமாக, அடி வாங்கியவர்கள், சிங்களத்தின் ஆணவத்தினை, அற்புதமாக விளம்பரப் படுத்தினார்கள்.
 
அவர்களும் திருப்பி அடித்திருந்தால்?
 
ஆக்களை கவனித்து, பிறகு ஆறுதலாக கொடுக்கக் கூடிய இருட்டடி கேள்விப்படவில்லையா?
 
புத்தியினை பாவிக்க வேண்டாமா? 

 

 

நாதமுனி... திருப்பி அடிக்க வேண்டும் என யாரும் சொன்னதாக நான் விளங்கிக்கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இப்போதெல்லாம் குடிசைக்கைத்தொழில் மாதிரி வீட்டுக்குவீடு ஊடகங்கள் ஆரம்பித்துவிட்டார்கள். ஏதோ கத்தரிக்காய்க்கறிக்கு சமையல் விளக்கம் தருவதுபோல் பாரதூரமான அரசியல்விடயங்களையும் சர்வசாதாரணமாக எழுதிவிட்டு போகின்றார்கள்.
 
எழுதத்தெரிந்தவர்களெல்லாம் ஊடகவியாளரல்ல.
  • கருத்துக்கள உறவுகள்

நாளைய ஆர்ப்பாட்டம். அடிதடிக்கு அல்லது பழிவாங்கல்களுக்காக அல்ல. எமது உரிமைக் குரலை ஒற்றுமையோடும்.... சிங்களத்தின் தமிழர்கள் மீதான இனப்படுகொலை மற்றும்.. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை சர்வதேச சமூகத்திடம் ஜனநாயக வழியில் எடுத்துச் சொல்வதற்காகும்.! அத்தோடு இனப்படுகொலை நாட்டிற்கு உல்லாசப் பயணம் போவதை நிறுத்தச் சொல்லி மனச்சாட்சி உள்ள மக்கள் முன் கருத்தை கவனத்தை முன் வைக்கவும் ஆகும்.

 

நாங்கள் ஆயுதம் எடுக்க வேண்டிய களம் பிரித்தானியா அல்ல. எமது நிலப்பறிப்பு நடக்கும் இடத்தில் தான் அது அமையனும். எமது.. ஆயுதங்களை எவர்கள் பறித்து சிங்களவனிடம் கொடுத்தார்களோ அவர்களே எமக்கு மீண்டும் தர வைப்பதில் தான்.. எமது இராஜதந்திரம் உள்ளதே தவிர.. ஒன்றிரண்டு சிங்களக் காடைகளின் புத்திபேதலித்த இனவெறிக்கு வன்முறையில் பதில் அளிக்கப் போய்.. கொடிய சிங்களவனை நல்லவன் ஆக்கும் செயலை தமிழ் மக்கள் செய்ய விளையக் கூடாது..!

 

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் ஒன்றிற்கு இரண்டு மடங்கு நிதானமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். முள்ளிவாய்க்காலில் வைத்து தேசிய தலைவர் துப்பாக்கிகளையும் வன்முறையையும் மெளனிக்கச் செய்துள்ள நிலையில் அவரின் முடிவுக்கு மக்கள் கெளரவம் அளித்து ஜனநாயக வழியில் சர்வதேசம் எம்மில் குறைபிடிக்க முடியாத படிக்கு.. ஏற்றுக் கொள்ளும் வழிமுறைகளோடு எமது பொது விருப்பை அவர்களின் முன் வைத்து நிற்பதே இன்றைய தேவை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தலைப்புடன் இந்தச் செய்தியை யாழ் அன்பு இணைத்திருக்கக்கூடாது.

அல்லது இந்தத் தலைப்பை யாழ் நிர்வாகம் அனுமதித்திருக்கக்கூடாது.

 

ஈழத்தில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் கூட ஈழத் தமிழர்கள்

புலம்பெயர்ந்த தேசங்களில் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள் என்று

சிங்கள அரசு செய்யும் பிரச்சாரத்திற்கு நாங்கள் உடந்தையாக இருக்க முடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை வாத்தியார்! இப்படியான தலைப்புகளும் வேண்டும்.சிந்தனை,சிந்திக்க கருத்துக்கள் வரவேண்டும். 

 

இப்போதெல்லாம் குடிசைக்கைத்தொழில் மாதிரி வீட்டுக்குவீடு ஊடகங்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.
 
 

 

 

சைக்கிள் gap பில என்னை நக்கல் அடிக்கின்ற மாதிரி தெரியுது.. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.