Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார் -சித்தார்த்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"மத்திய அரசினது தலையீடு இல்லாத எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய சமஸ்டி தீர்வொன்றே எமக்கு பொருத்தமானது" என தெரிவித்தார் புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

இன்று யாழப்பாணத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

"எமக்கான நியாயமான தீர்வாக சமஸ்டி தீர்வே அமைய முடியும். ஆனால் இந்த இனவாத அரசு அவ்வாறான தீர்வொன்றை தரப்போவதில்லை என்பது நிச்சயம்" எனவும் அவர் தெரிவித்தார்.

 

26 வருடங்களிற்கு முன்னதாக தமிழ் தரப்புக்கள் நிராகரித்த 13வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபையை தப்ப வைத்துக்கொள்ள நாம் இப்போது போராட வேண்டியிருக்கின்றது.கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு சென்று  மாகாணசபைக்கான அதிகாரங்களை தக்க வைக்க டெல்லியில் பலரையும் சந்திக்க வேண்டியிருக்கின்றது.யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையெல்லாம் 13 பிளஸ் பற்றி கதைத்த மகிந்த இப்போது 13 இனில் இருப்பவற்றையும் வெட்டுவதில் முன்னுக்கு நிற்கின்றார்.

 

சர்வதேச அழுத்தங்கள் மூலம் தீர்வொன்று வருமென்பதில் சந்தேகமே.அவ்வாறான சூழல் இப்பிராந்தியத்தில் நிகழுமானால் அது அதிசயமே.ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இந்தியப்படையினர் நின்றிருந்த வேளை அமுல்படுத்த முடியாதவற்றை இப்போது செய்வதென்பது கேள்விக்குறியே என அவர் மேலும் தெரிவித்தார்.அத்துடன் தமிழர்கள் தற்போது பலவீனப்படுத்தப்பட்ட நிலையினிலேயே உள்ளனர்.இந்தியாவை பொறுத்த வரையினில் தமிழ் மக்களிற்கு தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டுமென்ற மனோ நிலையில் இப்போதிருப்பதாகவும் நான் கருதவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

அரசியல் ரீதியாக பிரபாகரனுக்கும் எனக்குமிiடையே  ஒத்த கருத்துக்கள் இல்லாத போதும் பிரபாகரனை நான் பிரமிப்புடன்  மதிக்கின்றேன்.  30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார்.இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார்.பிரபாகரனுக்கு அஞ்சிப்பதுங்கிய மஹிந்த முதல் பல தெற்கு தலைவர்களை நான் நன்கு அறிவேன்.

 

முள்ளிவாய்க்காலில் போராட்டம் தோற்றுப் போய்விட்டதென்பதை தெரிந்திருந்தும் இறுதிக் கணங்களிலும் தற்கொலைப் போராளிகளாக வெடிக்கும் கரும்புலிகளை பிரபாகரனாலேயே உருவாக்க முடிந்திருந்தது. அதிலும் இந்தியாவிலும் கொழும்பிலுமென அனைத்து வசதி வாய்ப்புக்களுடனும் வாழ்ந்து வந்திருந்த போதும் பிரபாகரனது ஒற்றை உத்தரவினையடுத்து வெடித்து சிதறும் கரும்புலிகளை அவர் உருவாக்கியிருந்தார்.இத்தகைய இராணுவக் கட்டமைப்பு சார்ந்து  ஈழத்தை உலகை திரும்ப்பிப்பார்க்க வைத்த வகையில் அவர் மதிப்பிற்குரியவரேயென சித்தார்த்தன் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையினில் தெரிவித்தார்.

 

இந்தியாவினில் 6 ஆயிரம் போராளிகளையும் களத்தில் 15 ஆயிரம் போராளிகளையும் 1983 களிலேயே தமது அமைப்பு கொண்டிருந்த போதிலும் அவர்களை ஒருங்கிணைக்கவோ பேணவோ முடியாமல் போனமையாலேயே தாம் பின்னடைவை அடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93113/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அழுத்தங்கள் மூலம் தீர்வொன்று வருமென்பதில் சந்தேகமே.அவ்வாறான சூழல் இப்பிராந்தியத்தில் நிகழுமானால் அது அதிசயமே.ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இந்தியப்படையினர் நின்றிருந்த வேளை அமுல்படுத்த முடியாதவற்றை இப்போது செய்வதென்பது கேள்விக்குறியே என அவர் மேலும் தெரிவித்தார்.அத்துடன் தமிழர்கள் தற்போது பலவீனப்படுத்தப்பட்ட நிலையினிலேயே உள்ளனர்.

 

....இத்தகைய இராணுவக் கட்டமைப்பு சார்ந்து  ஈழத்தை உலகை திரும்ப்பிப்பார்க்க வைத்த வகையில் அவர் மதிப்பிற்குரியவரேயென சித்தார்த்தன் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையினில் தெரிவித்தார்.

'சுடலை ஞானம்'... 'சுடலை ஞானம்'னு தமிழ்ப் பதங்களை கேள்விப்பட்டுள்ளேன். இப்போ அதற்கு உதாரணமும் கிட்டியுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்த்தனுக்கு ஞானம் பிறந்திருக்கு. அதே போல அவரின் நண்பர் அர்ஜுனுக்கும் கூடிய விரைவில் ஞானம் பிறக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

"கண் கெட்ட பின், சூரிய நமஸ்காரம்"

Edited by தமிழ் சிறி

சர்வதேச அழுத்தங்கள் மூலம் தீர்வொன்று வருமென்பதில் சந்தேகமே.அவ்வாறான சூழல் இப்பிராந்தியத்தில் நிகழுமானால் அது அதிசயமே.ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இந்தியப்படையினர் நின்றிருந்த வேளை அமுல்படுத்த முடியாதவற்றை இப்போது செய்வதென்பது கேள்விக்குறியே.....?????

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அழுத்தங்கள் மூலம் தீர்வொன்று வருமென்பதில் சந்தேகமே.அவ்வாறான சூழல் இப்பிராந்தியத்தில் நிகழுமானால் அது அதிசயமே.ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இந்தியப்படையினர் நின்றிருந்த வேளை அமுல்படுத்த முடியாதவற்றை இப்போது செய்வதென்பது கேள்விக்குறியே.....?????

ஐயா என்ன சொல்ல வாரீங்க?

  • கருத்துக்கள உறவுகள்

இதன் தார்ப்பரியம் என்னவென்றால்

புலிகளைப்பற்றி  பேசாமல்

புலிகளின் தியாகத்தைப்பற்றி  பேசாமல்

பிரபாகரன் பற்றி  பேசாமல்.................

 

தாயகத்தில் இனி கால் வைக்கமுடியாது.

அவர் ஐயா நானுமுள்ளேன் என்கின்றார் .அதையெல்லாம் போய் பெரிசா எடுத்திகிட்டு ,சிலர் அதற்குள் வீர வசனங்கள் வேறு .

நாளைக்கு ராஜபக்சா கூப்பிடால் இதே வசனங்கள் தலை கீழாக மாறிவிடும் .ஒன்றாய் இருந்த என்னை விட ஏதோ உங்களுக்கு அவரை தெரியும் போல் .

 

இன்று அவர் அங்கு இருப்பதற்கும் நாங்கள் வெளியில் இருப்பதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான் அது .

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கைவிட்டு விட்டதால் வந்த வெறுப்பு பிரபாகரன் மீதான காதலாகக் கசிந்து கண்ணீர் மல்கிறது. இதை விட நல்லா நடிப்பாங்க. சங்கரியே செல்லாக்காசாகி அலையுற நிலையில் இவர்களை எந்தச் சிங்களவன் மதிப்பான்..!!

 

இவர்களுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் கொடுத்ததே பிரபாகரன் தானே..! அப்படி இருக்க..

 

இந்தத் துரோகிகள் வவுனியாவில் நின்று கொண்டு போட்ட ஆட்டம்.. எமது விடுதலைப் போராட்டத்தை அழிக்க செய்த செயல்கள் கொஞ்ச நெஞ்சமில்ல. அதற்கு பிரபாகரனோ தமிழ் மக்களோ தண்டிக்கத் தேவையில்லை. இவர்கள் கூடி நின்று கூத்தடித்த சிங்களவனே தண்டிப்பான். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஐயா நானுமுள்ளேன் என்கின்றார் .அதையெல்லாம் போய் பெரிசா எடுத்திகிட்டு ,சிலர் அதற்குள் வீர வசனங்கள் வேறு .

நாளைக்கு ராஜபக்சா கூப்பிடால் இதே வசனங்கள் தலை கீழாக மாறிவிடும் .ஒன்றாய் இருந்த என்னை விட ஏதோ உங்களுக்கு அவரை தெரியும் போல் .

 

இன்று அவர் அங்கு இருப்பதற்கும் நாங்கள் வெளியில் இருப்பதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான் அது .

 

 

உள்ளே இருக்கிறீர்களோ.............

வெளியில் இருக்கிறீர்களோ .................
உங்களுக்கும் முகவரி! பிரபாகரன்தான்.
நீங்கள் இருக்கிறீர்கள் என்று காட்டிக்கொள்ள. உங்களுக்கு புலிகளை விட்டால் யாரும் இல்லை என்பதைத்தான். மாறி மாறி எழுதியும் சொல்லியும் வருகிறீர்கள்.
 
எங்களுடைய முகவரி என்றும் எமது வீட்டு விலாசம்தான்.
தமிழ் ஈழம்!
 
எமக்கு யார் இருக்கிறார்கள்.............. யார் இல்லை என்பது ஒரு பொருட்டில்லை.
கூடியிருந்தவர்கள் .............
எமது வீட்டை காவல் செய்தவர்கள் ..........
இல்லை என்கிற கவலை மட்டும்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.