Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு தேவையானது: கத்தியா, புத்தியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அலுவலகத்தில் ஒரு நண்பர். வெள்ளையர். அமெரிக்கர்.
 
ஒரு விடயம், துல்லியமாக சொன்னார்: அசந்து போனேன். மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியவில்லை.
 
உலகின் அண்மைய ஆயுத விடுதலைப் போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே ஒரு போராட்டம் எத்தியோபியாவிற்கு எதிரான எரித்திரிய மக்கள் முன்னெடுத்த போராட்டமே ஆகும்.
 
அந்த போராட்ட அமைப்பின் தலைமை ஒரு பட்டம் பெற்ற பொறியியலாளர். மிகச் சரியான முடிவுகளை மிகச் சரியான தருணங்களில் எடுத்திருந்தார்.
 
உங்கள் போராட்ட தலைமைக்கும் அந்த போராட்ட தலைமைக்கும் இருந்த மிகப் பெரிய வேறுபாடு இது ஒன்று தான் என்றார். 
 
*****
 
எமது இனமானது கல்வியினால் முன்னேறிய இனம்.
 
வட அமெரிகாவில், அமெரிக்க சுதந்திர பிரகடனத்துடன்,  முதலாவது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வீழ, இரண்டாவது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், மத்திய, தென் கிழக்கு, தூர கிழக்கு ஆசிய நாடுகளில் வீறுடன் எழுந்தது.
 
இந்தியாவின் கல்கத்தாவில், சுதந்திர அமெரிக்காவில் இருந்து வந்த 'மிசினரிமாரில்' சந்தேகம் கொண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட, மொரிசியஸ் செல்லும் நோக்கத்துடன் புறப்பட்டு வழியில் யாழ் குடாவில் இறங்கி அங்கேயே தங்க முடிவு செய்ய, பின்னர் இலங்கையில் அமெரிக்க மிசினரி அமைத்த 12 நிறுவனக்களில் 9 யாழ் குடாவில் அமைந்தது.
 
கல்வியில் சிறந்ததால், பிரிட்டிஷ் அரசு எம்மவரை, தென் இலங்கை, தென் இந்தியா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் என அரச வேலைகளுக்கு கொண்டு சென்றது.
 
சில வருடங்களுக்கு முன்னர், லண்டனில் கள்ள மட்டை கும்பல் ஒன்றை கூண்டோடு பிடித்த பொலிசார் ஒரு பத்திரிகை மகாநாடு நடாத்தினர். ஒரு போலீஸ் அதிகாரி, எக்காளமாக, இவர்கள் அகதிகள், தமிழர்கள், இங்கு வந்து இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
 
வெகுண்ட படித்த தமிழர்கள் பலர் சேர்ந்து 'The Times'  பத்திரிகையில் முழுப் பக்க விளம்பரம் ஒன்று போட்டார்கள்.
 
அந்த அதிகாரியின் கருத்து தவறு. ஒரு சில தவறானவர்கள் நடத்தை வைத்து தமிழர்கள் குறித்த அவர் வெளியிட்ட கருத்து எமக்கு ஏற்புடையது அல்ல. 
 
எமது இனம் இரண்டாவது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நிர்வாக இயந்திரத்துக்கு தோல் கொடுத்த இனம். இங்கே உள்ள தமிழர்கள் அனைவரும் அகதிகள் அல்ல.   6,000 டாக்டர்களையும், 5,000 பொறியியலாளர்களையும், 18,000 கணக்காளர்களையும் இந்த நாட்டுக்கு தந்த கல்வியில் பெருமை கொண்ட ஒரு இனம் என அந்த விளம்பரம் சொல்லியது.
 
அந்த அதிகாரி மன்னிப்பு கோர, அரசியல் வாதிகள் பார்வை எம்பக்கம் திரும்பியது.
 
ஆயுதங்கள் மௌனித்த பின்னர், படித்தவர்கள் வெளி வந்தது ஒரு முக்கிய விடயம். மறுபுறம் சிங்களத்தில் படிப்பறிவில்லா கூட்டம் அரசாங்கம் நடத்துகின்றது. கூடவே எமக்கு நன்மை தரக் கூடிய தவறுகளும்....
 
இந்த தருணத்தில் தேவையானது: கத்தி அல்ல, புத்தி தான்.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அமெரிக்க நண்பர் கொசொவோவை விட்டுவிட்டார்.. பலத்துடன்கூடிய புத்தியே வெல்லும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அமெரிக்க நண்பர் கொசொவோவை விட்டுவிட்டார்.. பலத்துடன்கூடிய புத்தியே வெல்லும்.. :D

மரமண்டைகள் சர்வதேச ஆட்சிகளில் இருந்தால் எதுவும் வெல்லாது

பயங்கரவாதமே வெல்லும்

அதுவே சிறீலங்காவில் வென்றது....... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
அலுவலகத்தில் ஒரு நண்பர். வெள்ளையர். அமெரிக்கர்.
 
ஒரு விடயம், துல்லியமாக சொன்னார்: அசந்து போனேன். மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியவில்லை.
 
உலகின் அண்மைய ஆயுத விடுதலைப் போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே ஒரு போராட்டம் எத்தியோபியாவிற்கு எதிரான எரித்திரிய மக்கள் முன்னெடுத்த போராட்டமே ஆகும்.
 
அந்த போராட்ட அமைப்பின் தலைமை ஒரு பட்டம் பெற்ற பொறியியலாளர். மிகச் சரியான முடிவுகளை மிகச் சரியான தருணங்களில் எடுத்திருந்தார்.
 
உங்கள் போராட்ட தலைமைக்கும் அந்த போராட்ட தலைமைக்கும் இருந்த மிகப் பெரிய வேறுபாடு இது ஒன்று தான் என்றார். 

புத்தி என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.அமெரிக்கருக்கு  ஒரு வேளை தெரியாத உண்மை மேற்படி எதியோப்பிய எரித்திரிய போரில் போது இரு நாட்டின் தலைமையில் இருந்தவர்கள் மிக நெருங்கிய உறவினர்கள். இதனால் அவர்களுக்குள் பேரம்  பேசி பிரிய இலகுவாக இருந்தது. தகவல்: எரித்திரிய, எதியோப்பிய நண்பர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அமெரிக்க நண்பர் கொசொவோவை விட்டுவிட்டார்.. பலத்துடன்கூடிய புத்தியே வெல்லும்.. :D

கொசோவா, கிழக்கு திமோர் போன்றவை, முறையே மேற்குலக (குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம்), அவுஸ்திரேலியா ஆதரவுடனே தனி நாடாகின.

தென் சூடான் கூட வெளி ஆதரவுடன் தான் தனி நாடாகியது.

எரித்திரியா விடுதலைப் போரில் எந்த வித வெளி ஆதரவு இல்லாமல் வென்ற பின்னர், ஐ நா அழைக்கப் பட்டு, குடியோப்பம் பெறப்பட்டு மக்கள் அங்கீகாரம் அளித்தவுடன் தான் தனி நாடாகியது. இங்கே பலமும் புத்தியும் இருந்தது.

பாகிஸ்தான் தனி நாடாகிய விடயத்தில், சரியான நேரத்தில் அந்த கோரிக்கையினை வைக்கும் புத்தி இருந்தது.

பங்களாதேஷ் போரில், பலம் இருக்கவில்லை, ஆனால் இந்திய ஆதரவு கோரிப் பெறும் புத்தி இருந்தது.

எம்மிடம் பலம் இருந்த அளவுக்கு புத்தி இருக்கவில்லை. அது பிரிட்டிஷ்காரர் சுதந்திரம் தரும் போது, பாகிஸ்தான் உதாரணம் இருந்தும், இருக்கவில்லை.

1987 ல் இந்திய ஆமி வந்த போதும் இருக்கவில்லை. பின்னர் யுத்த களத்தின் போதும் இருக்கவில்லை.

விமானப் படை களம் வந்த நேரமும் புத்திசாலிதனமானது அல்ல. 

இனியாவது புத்தியினைப் பாவிப்போம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழத்தின் புவியியல் சார்ந்த அமைவிடமும்  எரித்திரிய மற்றும் கொசவோவின் 

புவியியல் அமைவிடமும் வேறுவேறானது. 

அத்துடன் அவர்களுடன் மோதிய எதிரிகளின்

நட்பு நாடுகள் அமெரிக்க மற்றும் மேற்குலக வல்லாதிக்க சார்புடையவையும் அல்ல.

புத்தி எங்களிடம் நிறைய உண்டு. கத்தியும் இருந்தது 

இருந்தும் பலன் இதுவரை பூச்சியம்.

இந்தியா என்ற இன்றும் உடையாமல் என்றோ உடையக் காத்திருக்கும்

ஹிந்திய பிராமண இனவெறி. 

 கிழக்கு தீமோர் , பொஸ்னியா ,  தென் சூடானும்,  எரித்திரியாவுக்கும் அண்மைய காலங்களிலோ இல்லை அதன் பிறகோ சுதந்திரம் அடைந்தன... 

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி.. உங்கள் கருத்துடன் உடன்பாடு இல்லை.. அதனால் என்ன.. :D ஒவ்வொருவருககும் ஒவ்வொரு கருத்து..

கொசோவா, கிழக்கு திமோர் போன்றவை, முறையே மேற்குலக (குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம்), அவுஸ்திரேலியா ஆதரவுடனே தனி நாடாகின.

தென் சூடான் கூட வெளி ஆதரவுடன் தான் தனி நாடாகியது.

எரித்திரியா விடுதலைப் போரில் எந்த வித வெளி ஆதரவு இல்லாமல் வென்ற பின்னர், ஐ நா அழைக்கப் பட்டு, குடியோப்பம் பெறப்பட்டு மக்கள் அங்கீகாரம் அளித்தவுடன் தான் தனி நாடாகியது. இங்கே பலமும் புத்தியும் இருந்தது.

பாகிஸ்தான் தனி நாடாகிய விடயத்தில், சரியான நேரத்தில் அந்த கோரிக்கையினை வைக்கும் புத்தி இருந்தது.

பங்களாதேஷ் போரில், பலம் இருக்கவில்லை, ஆனால் இந்திய ஆதரவு கோரிப் பெறும் புத்தி இருந்தது.

எம்மிடம் பலம் இருந்த அளவுக்கு புத்தி இருக்கவில்லை. அது பிரிட்டிஷ்காரர் சுதந்திரம் தரும் போது, பாகிஸ்தான் உதாரணம் இருந்தும், இருக்கவில்லை. 1897 ல் இந்திய ஆமி வந்த போதும் இருக்கவில்லை. பின்னர் யுத்த களத்தின் போதும் இருக்கவில்லை.

விமானப் படை களம் வந்த நேரமும் புத்திசாலிதனமானது அல்ல. 

இனியாவது புத்தியினைப் பாவிப்போம்.

பலவீனமானவர்களால் அறிவை வைத்து எதையும் சாதிக்க முடியாது...    வெற்றி( அது அரசியலாகட்டும்) பெறுவதை விட பெற்ற வெற்றியை தக்கவைப்பதே மிகக்கடினமானது...   இதை சொன்னவர் எங்கட தலைவர்... 

ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவுவதில்லை...

சிங்களவனிட்டை இருந்து விலத்தி இந்தியரிட்டையோ ஐரோப்பியனிட்டையோ அடிமையாவதை விட சிங்களவனிட்டையே அடிமையாக இருந்து விட்டு போகலாம்...     

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
செர்பியாவை பழிவாங்குவதற்காகவே ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் சேர்ந்து கோசோவா பிரிவதற்கு ஆதரவளித்தார்கள். காரணம் செர்பியா ரஷ்யாவின் செல்லப்பிள்ளை.
 
பாவம் அதனால் தான் இன்றைக்கும் தனது நாட்டுக்கு வெளிய செல்ல முடியாத ஒரு தலைவரா எரித்திரிய ஜனாதிபதி இருக்குறார் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அதனால் தான் இன்றைக்கும் தனது நாட்டுக்கு வெளிய செல்ல முடியாத ஒரு தலைவரா எரித்திரிய ஜனாதிபதி இருக்குறார் 

புலம் பெயர்ந்து நாடு திரும்பிய எரிதிரியர்களினால், எரித்திரிய பொருளாதார வளம் பெருகுகின்றது. 17%
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அலுவலகத்தில் ஒரு நண்பர். வெள்ளையர். அமெரிக்கர்.

ஒரு விடயம், துல்லியமாக சொன்னார்: அசந்து போனேன். மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியவில்லை.

உலகின் அண்மைய ஆயுத விடுதலைப் போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே ஒரு போராட்டம் எத்தியோபியாவிற்கு எதிரான எரித்திரிய மக்கள் முன்னெடுத்த போராட்டமே ஆகும்.

அந்த போராட்ட அமைப்பின் தலைமை ஒரு பட்டம் பெற்ற பொறியியலாளர். மிகச் சரியான முடிவுகளை மிகச் சரியான தருணங்களில் எடுத்திருந்தார்.

உங்கள் போராட்ட தலைமைக்கும் அந்த போராட்ட தலைமைக்கும் இருந்த மிகப் பெரிய வேறுபாடு இது ஒன்று தான் என்றார். "

நாதமுனி ஒரு சிறந்த தகவலை முன்வைத்தார் அதை ஒவ்வொருவரும் தமது புத்திக்கும் அனுபவத்துக்கும் பொருத்தமான அளவுகோல்களால் அளந்து தமது கருத்துக்களை பதிவு செய்கின்றார்கள்

நான் எனது பதிவுகளைப் பதியமுன் எனது I Q எவ்வளவு என்று இலவசமாக அறிய விரும்பினேன்

http://www.free-iqtest.net/ இந்தத் தளத்திலிருந்து எனது I Q 131 என்று தெரிந்துகொண்டேன்

You have an IQ of 131

http://www.iq-test.com/free-iq-test/ இந்தத் தளத்திலிருந்து எனது I Q

Based on your performance on the IQ test we estimate your IQ score to be:

Your IQ score lies within a range of 133 up to 149, or it may be even higher!

வேறு ஒரு தளத்தில் I Q முடிவுகளை ஒப்பீடு செய்ய விரும்பினேன்

Terman's classification was (6):

IQ Range

Classification

140 and over Genius or near genius

120-140 Very superior intelligence

110-120 Superior intelligence

90-110 Normal or average intelligence

80-90 Dullness

70-80 Borderline deficiency

Below 70 Definite feeble-mindedness

(Terman wrote the Stanford-Binet test (1), which has a SD of 16.)

Later, Wechsler thought that it would be much more legitimate to base his classifications on the Probable Error (PE) so his classification was (6):

Classification IQ Limits Percent Included

Very Superior 128 and over 2.2

Superior 120-127 6.7

Bright Normal 111-119 16.1

Average 91-110 50

Dull Normal 80-90 16.1

Borderline 66-79 6.7

Defective 65 and below 2.2

இதிலிருந்து நான் புத்திசாலியா இல்லையா எனது கணக்குகள் எல்லாம் சரியாகும் என்று நான் சொல்ல விரும்பவில்லை

இதற்கு நான் ஒருவரை உதாரணமாக் காட்ட விரும்புகின்றேன் அவர் Electrical Engineer ஆக இலங்கைப் பல்கலைக் கழகத்தில் முதல்தர மாணவனாகச் சிய்தியடைந்தார் பின்பு Cambridge University இல் கணிதத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார் பின்பு பேராதனைப் பொறியியல் பீடத்தில் கணிதம் விரிவுரையாளராக பணிபுரிந்தார்

ஆனால் அவருடைய கணக்குகள் எதுவும் சரிவரவில்லை

1) J R க்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டினார் பதவி பறிபோனது

2) அரசியலில் நுழைந்தார் மழைக்கும் பாடசாலையில் ஒதுகியிராதவர்களிடம் கல்லெறி வாங்கினார்

3) "தமிழர்களுக்குப் பிரச்சனைகள் இருக்கின்றன நான் ஜனாதிபதியாக வந்தால் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பேன் " என்ற வாக்குறுதியுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் ஆனால் அந்தத் தமிழர்கள் அவருக்கு வாக்களிக்காமல் "தமிழர்களுக்குப் பிரச்சனைகள் எதுவும் கிடையாது " என்று கூறிய சரத் பொன்சேகா க்கு வாக்களித்தர்ர்கள்

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை " என்பதற்கு உதாரணமாக இருக்கும் - மேலே குறிப்பிட்ட - ஒருவர் கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன அடுத்தது நமது தமிழ் இனம்

கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன நினைத்தால் இன்றும் உலகின் ஏதாவதொரு பல்கலைக் கழகத்தில் மாதம் குறைந்தது 5000 usd வேலையொன்று கிடைக்கும்

அவர் மாத்திரம் பாவம் அல்ல அவரை ஒதுக்கிய தமிழர்களும்தான்

நாம் சரியான முடிவுகளை எடுக்கின்றோமா ??????

மற்றவர்களின் நடத்தைகளை விமர்சிப்பதை விடுத்து நாங்கள் சிலர் கத்தியைத் தூக்காமல் புத்தியை மாத்திரம் மூலதனமாக் கொண்டு இனமானம் காக்கும் நோக்கத்துடன் சில தொழில்களை உருவாக்க எண்ணியுள்ளோம் உங்களின் I Q கணிசமானதாக இருந்தால் kuddy60@gmail.com என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் I Q முடிவையும் தெரியப் படுத்துங்கள்

"புதியதோர் உலகம் செய்வோம்"

நிர்வாகத்தினருக்கு இந்தக் கருத்து தவாறானதாக கருதினால் இதை நீக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவாசி,

உங்கள் பதிவினை ஆர்வத்துடன் வாசித்தேன்.

தமிழில் ஒரு பழமொழி:

'ஆசை இருக்கு பஞ்சாயம் பண்ண, அதிஸ்டம் இருக்கு பஞ்சாயத்துக்கு குடை பிடிக்க' 

நீங்கள் என்ன தான் கல்வி அறிவு குறித்து சொன்னாலும், அவரவர்களுக்கு ஒரு எழுத்து, தலைவிதி (destiny). அதை நீங்கள் சொல்லும் IQ மதிப்பீடு மாத்திவிடாது.

படிப்புக்கு அப்பால் ஒருமனிதனுக்கு தேவையானது 'common sense' ம் பட்டறிவும். இதனை ஆங்கிலத்தில் 'street smartness' என்பார்கள்.

அங்கே, தமிழ் மொழியில் பயின்று, இங்கே வந்து வெள்ளையர்களுடன் போட்டி போட்டு அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது இருக்கிறது என்பது எனது கருத்து. இதனை அங்கு பாடசாலைகளில் சொல்லிக்கொடுப்பதிலையே.

என்னை தனிபட்ட ரீதியில் 'impress'  பண்ணியவர்கள் இருவர். ஒருவர் பிரபாகரன் அடுத்தவர் பிரேமதாசா.

இருவரும் பெரும் கல்வி அறிவு இல்லாதவர்கள். ஆனால், தமது வாழ் நாள் இலட்சியம் எதுவென இளமையிலே அறிந்து, திட்டமிட்டு செயல்பட்டு அதிலே உச்சம் அடைந்தது காட்டினார்கள்.  இவர்களுக்கு நீங்கள் IQ குறித்து பேசி இருந்தால், உருப்படியா எதாவது வேலை செய்யுங்கள் என்று சொல்லி இருப்பார்கள்.

கருப்புக்கொடி காட்டி வேலை இழந்ததால், அரசியலுக்கு, அதுவும் இடது சாரி அரசியலுக்கு வந்து, வோட்டு போடுங்கள் என்றால் எப்படி?

நீங்கள் இவரை சொல்கின்றீர்கள். நான் இன்னுமோர் பதிவில் வேலை இல்லா  Oxford phd காரர், கோயில் ஒன்றின் பக்கத்தில், பக்தர்கள் இலவச பிரசாத்தினை விட்டு விட்டு, தன்னிடம் தோசை வாங்கி சாப்பிட வருவார்கள் என்று தோசைக்கடை திறந்து, கை சுட்ட கதை சொல்லி இருகின்றேன்.

அவரது IQ குறித்து என்ன சொல்ல முடியும்? இதுதான் 'street smartness' and 'basic common sense'. இதற்கும் IQ மதிப்பிட்கும் தொடர்பு இருபதாக தெரிய வில்லை.

'street smartness': இதனை தமிழ் சொல்வடையில், 'ஆள் நல்ல அடிபட்ட ஆள்', 'சுழியர்', எம்டன்' என்பார்கள்

Edited by Nathamuni

எமது போராட்டம் பயங்கரவாதம் ஆகித்தான் அழிந்தது .

பல சந்தர்ப்பங்கள் வந்தும் கெடு குடி சொற்கேளாது என்ற பதத்திற்கு அவர்கள் மிக பொருத்தமானவர்கள் ஆகியே அழிவை தேடிக்கொண்டார்கள் .

எமக்கு சரியானது நியாயமானது என்று பட்டால் மட்டும் காணாது .இந்த விடயம் அவர்களுக்கு கடைசிவரை விளங்கவில்லை புலம் பெயர்ந்த அவர்கள் ஆட்களுக்கு இன்னமும் விளங்கவில்லை .புல்லரிக்கும் கதைகளில் மெய்சிலிர்க்க பழகிவிட்டார்கள் .அது எங்கே போய் முடிய போகின்றது என்பது பற்றி எள்ளவுவும் விளக்கமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி குறிப்பிட்ட அமெரிக்கரின் கூற்று என்னுள்ளில் எடுபடாமல் போனதற்கான காரணம் ஒன்றுதான்.. அதாவது அவர் நடந்து முடிந்த ஒன்றை வைத்து அலசி ஒரு காரணத்தைக் கண்டறிந்துள்ளார்.. இதை நாம் எல்லோருமே செய்யலாம்.. இதற்கான சிறப்பான தகுதிகள் எதுவும் தேவையில்லை..

ஆனால் ஒரு அரசியல் களத்தில் அல்லது போராட்டக்களத்தில் நின்றுகொண்டு எதிராளியின் கணக்கை எடைபோட்டு வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு முடிவுகளையும் எடுப்பது எல்லோருக்கும் கைவரப்பெற்றது அல்ல..

எல்லோரும் சுலபமாக ஒன்றை மறந்துவிடுகிறோம்.. 2008 இல் "நான் ஒரு தமிழன்" என்று ஒரு அயலவனிடம் சொல்லும்போது இருந்த மனநிலைக்கும் இன்றைய மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை நாங்கள் உணரத் தலைப்பட வேண்டும்.. உனக்கான சுதந்திரத்தின் தேவையை உன் உள்மனது முதலில் அறிந்திருக்கவேண்டும் என்பது நிரூபணம் ஆகியிருக்கும்..

அன்று தலைமை சரியான முடிவுகளை எடுத்ததா? பதிலுக்குப் பொறுமை தேவை. :D

ஒன்றுமட்டும் உறுதி.. இந்த நான்கண்டு காலங்கள் பல நடிகர்களையும் ஏமாற்றுக்காரர்களையும் தோலுரிக்க உதவியுள்ளது.. புலிகள் இல்லாவிட்டால் தீர்வு நிச்சயம்.. அமைதி நிச்சயம்.. அபிவிருத்தி நிச்சயம் என்று பேசிய நாடுகள், அமைப்புக்கள் இன்று சங்கடத்தைச் சந்தித்துள்ளன.. நாடுகள் மட்டத்தில் சங்கடம் என்பது சிறிய விடயல்ல..

பொறுத்திருந்து காண்போம்.. :D

இதைச்சொன்னவர் அமெரிக்கர் என்பதால் முதலில் ஒன்றைக் கூறவேண்டும். அமெரிக்கர் என்பது ஒரே குணமுடைய ஒரு குழுமத்தைக் குறிக்கும் சொல்போல் தெரியினும், எப்படி உலகில் எந்த இனமும் ஒருமைத்தன்மையானது அல்லவோ அதுபோல் தான் அமெரிக்கரும். அடிப்படைவாத மதக்கூட்டம், இனவெறியுடையோர், பண மற்றும் அதிகார வெறிகொண்டோர், குடும்பப் பெருமை பேசுவோர், பல்கலைக்கழகப் பெருமை பேசுவோர் என்று ஏகப்பட்ட விடயங்கள் கொண்ட சாம்பார் தான் அமெரிக்காவும். எல்லாச் சமூகத்தைப் போல அவர்களிற்குள்ளும் அறிவாளிகளும் இருக்கிறார்கள் அடிமுட்டாள்களும் இருக்கிறார்கள். எல்லாச் சமூகத்தைப் போலவும் அவர்களிற்குள்ளும் அதிகாரம் சொற்பமான விகிதத்தினரிடமே இருக்கிறது. ஆனால் அமெரிக்கர் சொன்னதை மறுக்கமுடியவில்லை என்பது சற்றுக் கடினமாக இருக்கிறது.
 
பல்கலைக்கழகங்களில், காலதிகாலமாக உள்ளவிடயங்களைத் தங்களிற்கும் புரிகிறது என்று பரிசோதனை மூலமாகவும் கட்டுரை மூலமாகவும் காட்டி பட்டங்கள் பெறுபவர்கள் தான் பெரும்பான்மை. இவர்கள் சார்ந்து அதிகம் உலகம் அலட்டிக்கொள்வதில்லை. பட்டம் என்பது பெரும்பான்மை நேரங்களில் ஒரு இராணுவச்சிப்பாய்க்கான மனநிலையினை ஒருவர் அடைந்தமைக்கான சான்றிதழாகத் தான் இருக்கிறது. சிந்தனைக்கும் பட்டத்திற்கும் இடையேயான தொடர்பு ஒருமுகமானதல்ல.
 
எங்கள் போராட்டத்தை எடுத்துக்கொள்வோம். அன்று தொட்டு இன்று வரை, எங்களிற்குள் இடதுசாரியம் பேசும் மிகப்பெரும்பான்மையானவர்கள் யாரோ சிந்தித்தவற்றின் சரத்துக்களையும் அந்தச் சரத்துக்களைக் காவிநிற்கும் புத்தகங்களின் பெயர்களையும் மனப்பாடம் பண்ணி அவைசார்ந்து தங்களிற்குள் யார் அதிகம் பாடமாக்கினோம் என்று அடிபடுகிறார்களே அன்றி, அந்தச் சரத்துக்களை விதைகளாகத் தங்கள் அகங்களில் தூவி, அவ்விதைகள் எவ்வாறு தங்களிற்குள் முளைத்தன என்பதைக் காட்டக்கூடியவர்கள் அருமையிலும் அருமையாகவே இருக்கிறார்கள். போராட்டத் தலைமைகளில், எத்தனையோ பேர் பல சரத்துக்களையும் புத்கங்களையும் அறிந்தவர்கள். தாங்கள் மனப்பாடம் பண்ணியதை பொதுவெளியில் ஒப்பிக்கக்கூடியவர்க்ள். அதனால் அவர்கள் படித்தவர்கள் என்றொரு விம்பம் இருந்தது. எங்கள் சமூகத்தில் படிப்;பென்றாலே மகுடி தானே. உமாமகேஸ்வரன் நிலஅளவையாளராகப் படித்ததால் புளட்டைப் படித்தவன் இயக்கம் என்று ஊரில் சொன்னவர்களிற்கும் பொறியியலாளர் நடத்திய எரித்திரிய போராட்டம் என்று சொன்ன உங்கள் நண்பரிற்கும் இடையே தோலலின் நிறம் மட்டுமே வேறுபடுகிது. சிந்தனை ஒன்றினை மனப்பாடம் பண்ணுபவனிற்கும் சிந்திப்பவனிற்கும் இடையே பலத்தவேறுபாடு. என்னைப் பொறுத்தவரை, எங்கள் போராட்ட வரலாற்றில் சுய சிந்தனை என்பதைக் காணமுடிந்த ஒரே அமைப்பு புலிகள் தான். பெட்டிக்குள் நின்று எந்தப் பிரச்சினையும் அணுகமுடியாது. 
 
சில வினாடிகள் சிரிப்பவர்கள் சிரிப்பதற்காக விட்டுவிட்டு,;...
 
ஐயர் எழுதிய புத்தகத்தில் கூட செட்டி என்ற பாத்திரத்தில் தலைவரிற்கு இருந்த ஈhப்பினை சண்டியனின் முட்டாள்த்தனமாகவே காட்டுவதற்கான பிரயத்தனம் இருக்கிறது. அதுபோல் ஹிட்லர் மீதான தலைவரின் கவனம் முதற்கொண்டு எங்கெங்கெலாம் இழிவிற்கும் நகைச்சுவைக்கும் சாத்தியங்கள் கிடைத்னவோ அங்கெல்லாம் 'பாசிஸ்ட்' என்ற கற்பிதத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒப்பீடுகள் நடந்தன. இதில் வியப்பில்லை, சித்தாந்தங்களின் சரத்துக்களை மட்டும் பாடமாக்கி ஒப்பிக்கும் கூட்டத்திற்கு, ஹிட்லரைப் பார்ப்பவன் ஹிட்லரின் பொது விம்பத்தை விரும்புவனாகமட்டும் தான் தெரிவான். செட்டியைப் பார்ப்பவன் குற்றவாளியாகவும் கடத்தற்காரனாகவும் மட்டும் தான் தெரிவான். ஏனெனில் புத்தங்களின் பக்கங்களில் எழுதப்பட்டற்றை எழுத்துக்கூடி மனப்பாடம் பண்ணும் கூடடத்திற்கு அதுதான் கைவரும். பட்டத்தைச் சான்றிதழிற்காக மட்டும் அடைபவனால் அப்படி மட்டும் தான் சிந்திக்க முடியும். வைத்தியர்கள் கம்பவுண்டர்களாக இன்ன குணங்குறி தெரிந்தால் இன்ன குளிசை குடு என்று பாடமாக்குபவர்களாக இருக்கையில் அறிந்து ஆவணப்படுத்தப்பட்ட நோய்கள் மட்டுமே, அதுவும் நோயக்கிருமிகள் மருவாதிருக்கும் வரையே, அந்த வைத்தியக் கம்பவுண்டர்களால் ஏதேனும் பலன் இருக்குக். 
 
ஆயுதப்போராட்டம் என்ற வழிமுறையாகட்டும், வட்டுக்கோட்டைத்தீர்மானமாகட்டும் கையைத்தூக்கின சனம் சிந்திச்சுத் தூக்கியதாய் இல்லை. சொன்ன இடத்தில் புள்ளடி போட்டமை தான் அதிகம் நடந்தது. அது விநோதமில்லை. எல்லா சுமூகத்திற்குள்ளும் தலைமைகள் சொற்ப விகிதம் தான். ஆனால் எங்கள் பிரச்சினை, போராட்டத் தலைமை என்று, அதுவும ;ஆயுதப் போராட்டத் தலைமை என்று கிளம்பியவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களைகத் தவிர மற்றவர்களிற்குத் தாம் என்ன தொடங்குகிறோம் என்ற தெளிவின்றி இருந்து. அதாவது சான்றிதழோடு வந்தவனை நம்பித் தொழிலைக் கொடுத்ததுபோல அது. ஆயுதப்போராட்டம் சரியான தேர்வா இல்லை என்றோ, ஈழம் தேவையா இல்லையோ என்று எந்த விவாதமும் நடக்கவில்லை. அனைவரும் தங்கள் பெயர்களில் ஈழத்தைச்சேர்த்து, ஏதேனும் ஒரு சிறு குண்டையும் எடுத்துக்கொண்டு தான் இயக்கம் கட்டினார்கள். ஆனால், அவர்களால் ஓடமுடியவில்லை. காரணம், புத்தகத்தில் வரிவரியாக எப்படி ஓடுவது என்று இருந்தால் தான் அதைப்பார்த்து அவர்களால் ஓடமுடியும்.
 
என்னைப் பொறுத்தவரை, எங்கள் போராட்டத்தில் இருந்த ஒறியினலான ஒரே ஒரு தலைமை என்றால் அது தலைவர் மட்;டும் தான். என்ன பிரச்சினை என்றால் சிந்தனைகளைச் சரத்துக்களாகப் புத்தகங்களின் ஒற்றைகளில் மட்டும் கண்ட கூட்டத்திற்கு, நடைமுறை உலகில் ஒறியினலான ஒன்றைக் காண்கையில் அதைக்கிரகிக்கும் பக்குவம் கிட்டுவதில்லை. கம்பவுண்டர் வைத்தியர் புதுநோயைப் பார்த்தது போன்றது தான் அவர்களின் நிலை.
 
எமது போராட்டம் தோற்றுப்போனது. அதில் இரண்டாம் கருத்திற்கிடமில்லை. ஆனால் தோற்றதன் காரணம் பட்டம் பெற்றவன் தலைமைதாங்கவில்லை என்பதல்ல. ஆயுதப்போராட்டம் வேண்டும் என்றால், அதை அதன் உச்சவடிவில் நடத்தியவர்கள் புலிகள் மட்டுமே. நெளிவுசுழிவு தெரியவேண்டும், இராசதந்திரம் தெரியவேண்டும்; என்று கதைப்பவர்கள் எப்போதுமே கதைக்காது விடுவது என்னவெனில், முள்ளிவாய்க்கால் வரை புலிகள் பிரதிநிதித்துவப் படுத்திய மக்கள் ஆயுதப்போராட்டம் அவசியமானது என்றும் அது தான் வேண்டும் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். புலிகள் தங்களை ஆயுதப்போராட்டக்காரர்களாகத் தான் என்றும் ஒழிவு மறைவு இன்றிக் காட்டினார்கள். இதில் தலைமை என்பது பன்மைத்துவமானதாக இருக்கவேண்டும், மக்களிற்கு எது அதியுச்ச பலன் என்று கண்டறிந்து சொல்பவர்களாக இருக்கவேண்டும், அதற்கேற்ப நிலைமைகளை மாற்றுபவர்களாக இருக்கவேண்டும் என்று பாடம் எடுக்கும் பலர் பாயிற்கடியில் உருட்டிவிடும் விடயம் என்னவெனில், தனி ஈழம் என்பதும் ஆயுதப்போராட்டம் என்பதும் மேற்சொன்ன அத்தனைக்கும் முரணானது. அதாவது, மேற்சொன்ன விடங்கள் அனைத்தும் தனி ஈழம் என்ற விடயத்தையும் ஆயுதப்போராட்டம் என்ற விடயத்தையும் தளர்த்துகையில் மட்டும் தான் சாத்தியம். அதாவது, தீர்விற்கான வழியில் பிரச்சினையின் வரைவிலக்கணைத்தை மாற்றுவது அது. அதாவது, அணுகப்படும் பிரச்சினையானது, தனித் தமிழ்ஈழம் எடுப்பது என்பதாக இருக்கையில், அது அடைய முடியாதது எனவே அதைக் கைவிட்டுவிடுங்கள் என்பது தான் அந்தக் கூற்று. அது இன்று நியாயமான கூற்றாகத் தெரிகிறது என்றபோதும், புலிகள் பிரதிநிதித்துவம் செய்த மக்கள் என்றைக்கும் அதனைத் தங்கள் அவாவாக எடுத்துரைக்கவில்லை. ஈழம் என்பதைக் கைவிடுங்கள் என்ற கோரிக்கை என்றைக்கும் மக்களால் புலிகளிற்குக் கூறப்படவில்லை.
 
புலிகள் செய்தது, சாகும் வரை, தங்களிற்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும், தங்களிடம் தரப்பட்ட பிரச்சினையான 'தனித் தழிழ் ஈழம் எடுத்தல்' என்ற பிரச்சினையினை எவ்வாறு தீர்ப்பது என்று அது நோகி முயன்றது தான். இடையில் அன்ரன் பாலசிங்கம் அவர்க்ள் தனி ஈழத்திற்கு மாறான ஒன்றினைப் பற்றிப் பேசும் ஒரு தளத்தினைத் தெட்டத் தெளிவாக இந்த மக்களிற்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அது புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட தளமா பாலசிங்கம் அவர்களின் தன்னிச்சையான செயற்பாடா என்ற தேவை அற்ற விவாதத்திற்கு அப்பால், அப்படி ஒரு தளம் ஏற்படுத்தப்பட்டது மறுக்க முடியாது. அது இரு தசாப்த்த ஆயுதப் போரின் பின் ஏற்படுத்தப்பட்ட தளம். மக்கள் முன் வைக்கப்பட்ட ஒரு பொதுசன வாக்கெடுப்புப் போன்றது அது. மக்கள் அந்தத் தளத்தினைப் பற்றிக் கொண்டார்களா? இது தான் சரி ஈழம் என்ற பேச்சை விடுங்கள் என்று அழுத்தம் கொடுத்தார்களா? பொது மக்களை விடுங்கள், புத்திசீவிகள் என்று சுயதம்பட்டம் அடிப்போர் அப்படி ஒரு மாற்றம் வேண்டிக் கட்டுரை எழுதிக் குவி;த்தார்களா? மக்களை நீட்டப்பட்ட கொம்பைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று இராப்பகலாகப் பிரச்சாரம் செய்தார்கள். இல்லையே, 
 
பாலசிங்கம் அவர்கள் மீதான விசனங்கள் தானே உருவாகின. ஒரு பேச்சிற்கு விவாதத்திற்கு, பாலசிங்கம் அவர்கள் சொன்னது உண்மையில் புலிகள் தங்களிற்குள் ஆராய்ந்து மக்கள் முன் சாடைமாடையாகக் கூறிய மாற்றம் என்று ஏன் நாம் எடுக்க முடியாது. வெற்றி பெற்ற இராணுவங்கள் போன்று செயற்பட்ட புலிகள், மக்கள் தொடர்பு என்ற விடயத்தில் மக்களை நாடி பிடித்துப் பார்க்கும் ஒரு நாடகமாக பாலசிங்கம் அவர்கள் வாயிலாக அதை ஏன் கூறியிருக்க முடியாது. தமிழ் செல்வன் பால அண்ணை சண்டை என்ற விடயங்கள் எல்லாம் கூட கட்டமைக்கப்பட்டன என்ற சாத்தியம் ஏன் இருந்திருக்க முடியாது? ஆனால் மக்கள் அதனைப் பற்றவில்லை. தனித் தமிழம் தான் ஒரே முடிவென்றிருந்தார்க்ள். பின் புலிகளிற்கு என்ன வழி? குடைசிவரை காசு குடுத்தவன் ஈழம ;கேட்டுத் தான் காசு குடுத்தான். போராடப்போன போராளி ஈழம் வேண்டித் தான் போராடினான்.  ஆப்படி இருக்கையில் பிரச்சினையினை மாற்றி இருக்க வேண்டும் என்று இப்போது கூறுவது சற்று அழாப்பலாககத் தானே இருக்க முடியும்.
 
எனவே புலிகள் செய்தது தம்மிடம் தரப்பட்ட பிச்சினையான தமிழ் ஈழம் எடுத்தல் என்பதை தீர்ப்பதற்காக வாழும் வரை போராடியது தான். என்னென்ன புது வழிகளில் பெட்டிக்கு வெளியே சிந்திக்கலாமோ சிந்தித்தார்க்கள். ஆனால் அவர்களிடம் கொடுக்கப்படட பிரச்சினையின் வரைவிலக்கணத்தை மாறவிடாது வைத்திருந்தவர்கள் நாங்கள். அதன் முழுப்பொறுப்பும் இறந்த புலிகளினுடையது அல்ல. வாழும் எங்களுடையது.
 
 சான்றிதழ் எதையேனும் மட்டும் தனது அடையாளமாகக் கருதும் கூழ்முட்டை ஒன்றினால மட்டும் தான் சொல்லமுடியும் பட்டம் இல்லாதது தான் தோல்விக்குக் காரணம் என்று. அவர்களிற்குப் புரியும் படியாக சிந்தனைத் தளத்தில் விழக்கவும்முடியாது. ஏனெனில் அதற்கு தலைவரின் அணுகுமுறைகள் முதலில் சரத்துக்களாக புத்தங்களில் அச்சாகி அதை சான்றிதழ் வழங்கும் கட்டிடங்கள் தலையில் தூக்கிக் கொண்டாடி, அவற்றைப் படிப்பதற்குக் கட்டணம் அறிவிட்டு, வகுப்பiறியின் முன்னால் ஒரு மனிதன் நின்று பாடம் எடுத்துப், பின் அதற்குச் சோதனை வைத்து, அந்தச் சோதனையில் பலரைப் பெயிலாக்கி சிலரைப் பாஸ் பண்ணி, அது தகமையாகி, அதனால் தொழில் கிடைக்கும் என்றால் மட்டும் தான் அவர்களிற்கு அது புரியும். அப்பிடி அதுகளிற்கு அது புரிஞ்சுதான் எவரிற்கு என்ன பலன்.
 
ஆனால், ஒன்று தெரிகிறது, நாங்கள் ஒரு இனமாக, உயரவேண்டும் என்றால் எங்களைப் பற்றி நாங்கள் நிறையப் புத்தகங்கள் எழுதவேண்டித் தான் இருக்கிறது. ஏனெனில் நடந்துமுடிந்த எங்களின் கதைககள் பற்றி எங்களிற்கே இன்னும் அதிகம் புரிதல்கள் இல்லாமல் தான் நாட்கள் நகர்கின்றன. 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி குறிப்பிட்ட அமெரிக்கரின் கூற்று என்னுள்ளில் எடுபடாமல் போனதற்கான காரணம் ஒன்றுதான்.. அதாவது அவர் நடந்து முடிந்த ஒன்றை வைத்து அலசி ஒரு காரணத்தைக் கண்டறிந்துள்ளார்.. இதை நாம் எல்லோருமே செய்யலாம்.. இதற்கான சிறப்பான தகுதிகள் எதுவும் தேவையில்லை..

ஆனால் ஒரு அரசியல் களத்தில் அல்லது போராட்டக்களத்தில் நின்றுகொண்டு எதிராளியின் கணக்கை எடைபோட்டு வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு முடிவுகளையும் எடுப்பது எல்லோருக்கும் கைவரப்பெற்றது அல்ல..

எல்லோரும் சுலபமாக ஒன்றை மறந்துவிடுகிறோம்.. 2008 இல் "நான் ஒரு தமிழன்" என்று ஒரு அயலவனிடம் சொல்லும்போது இருந்த மனநிலைக்கும் இன்றைய மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை நாங்கள் உணரத் தலைப்பட வேண்டும்.. உனக்கான சுதந்திரத்தின் தேவையை உன் உள்மனது முதலில் அறிந்திருக்கவேண்டும் என்பது நிரூபணம் ஆகியிருக்கும்..

அன்று தலைமை சரியான முடிவுகளை எடுத்ததா? பதிலுக்குப் பொறுமை தேவை. :D

ஒன்றுமட்டும் உறுதி.. இந்த நான்கண்டு காலங்கள் பல நடிகர்களையும் ஏமாற்றுக்காரர்களையும் தோலுரிக்க உதவியுள்ளது.. புலிகள் இல்லாவிட்டால் தீர்வு நிச்சயம்.. அமைதி நிச்சயம்.. அபிவிருத்தி நிச்சயம் என்று பேசிய நாடுகள், அமைப்புக்கள் இன்று சங்கடத்தைச் சந்தித்துள்ளன.. நாடுகள் மட்டத்தில் சங்கடம் என்பது சிறிய விடயல்ல..

பொறுத்திருந்து காண்போம்.. :D

இசை,

நாம் ஆழமாக உள்ளே போகத் தேவை இல்லை. சிறு உதாரணம் தருகின்றேன்.

புலிகள் இயக்கம், கொரில்லா இயக்கமாக, (கைக்கடக்கமாக) சிறிதாக இருந்த காலங்களில் முடிவுகள் தலைமையினால் கச்சிதமாக எடுகப்பட்டன.

ஆல் போல் தளைத்த போது முடிவுகள் எடுப்பது ஒரு தனி மனிதரால் செய்ய முடியாதது என்பதால், delicate செய்யப்பட்டது. 

இங்கே தான் தவறுகள் ஆரம்பித்தன என்பது எனது கருத்து. சரியான நபர்களிடம் இந்த பொறுப்பு வழங்கப் பட்டதா என்பது குற்த்து சொல்ல எனக்கு அனுபவம் இல்லை.

முக்கியமாக, வெளிநாடுகளில் சேர்க்கும் நிதியில் 100 க்கு 20% சேகரிப்பவர்களுக்கு எனும் மிகத் தவறான முடிவு, பெரும் குழுக்களையும், மக்கள் போலீசில் ரகசியமாக புகார் தரும் வகையில் பெரும் கிரிமினல் நடவடிக்கைகளை (கடத்தல், பயமுறுத்தல். தாக்குதல், தமக்கு இடையே கொலைகள்) ஊக்குவித்து, இறுதியில் புலிகள் இயக்கமே இங்கு தடை செய்யும் அளவு போனது.

இவ்வாறு நிதி சேகரித்தவர்கள், சேகரிக்கும் நாடுகளில் வசிப்பவர்களக இருபதில்லை. சரியான தகவல்களுடன் வேறு நாடுகளில் இருந்து வந்திருப்பார்கள். 

பெரும்பாலும் சில இடங்களில், 100% ஆட்டையைப் போட்ட நிகழ்வுகளும் உண்டு என கேள்விப் பட்டேன்.

அவர்களது இன்றைய நிதி நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

நம்பி இருந்த வெளிநாட்டு நிதி ஆதரவில் விழுந்த தடையே தலைமையை மனச் சரிவுக்கு உள்ளாக்கி இருக்கக் கூடிய இயக்கத்தின் சரிவின் ஆரம்பம் என நினைக்கின்றேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி.. தவறுகள் நடந்திருக்கலாம் என்பதை நான் நம்பவில்லை.. தவறுகள் நடந்தன என்பதையே நான் நம்புகிறேன்.. சிறு இயக்கமாக இருக்குமாபோதே நடந்துள்ளன.. ஆனால் முடிந்தவரை தடுத்தும், சமாளித்தும் போகப்பார்த்தார்கள்..

சமாதான காலத்தில் ஒரு முன்னாள் போராளியை சந்தித்திருந்தேன்.. கருணாவின் பிரிவு பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.. ஆயுதப் போராடாடத்துக்க என்று ஒரு எல்லை உண்டு என்றார்.. அவர் சூசகமாகச் சொன்னது எமது போராட்டமும் முடிவுக்கு வரப்போகிறது என்பது.. இன்னொருவரைக் கண்டபோது புலிகள் ஒருகாலத்தில் மக்களோடு மக்களாகிவிடுவாரகள் என்றார்.. ஆர்ட்லறி படை வைத்திருப்பவர்கள் எப்படி எல்லாவற்றையும் விட்டுப்போட்டு மக்களோடு வாழத் தலைப்படுவார்கள் என்று நான் பெரிதாக எடுக்கவில்லை.. ஆனால் இரட்டைவாய்க்காலோடு அந்த எண்ணம் மாறிவிட்டது..

இது தலைமைக்குத் தெரியாமல் இருந்திருக்குமா?

நான் எனது பதிவுகளைப் பதியமுன் எனது I Q எவ்வளவு என்று இலவசமாக அறிய விரும்பினேன்

http://www.free-iqtest.net/ இந்தத் தளத்திலிருந்து எனது I Q 131 என்று தெரிந்துகொண்டேன்

You have an IQ of 131

தலிவரே இப்ப வாசித்தவுடன் அந்த தளத்தில் போய் ஒரு IQ Test  செய்து பார்த்தேன்.
 
ஒரு பட்ச் ஒன்று தந்தார்கள்.
 
அதை இங்கே போடுகிறேன். நீங்களும் உங்கள் பட்சை போடலாமே. ( ஒரு நம்பகத்தன்மைக்குத்தான். எங்கட விலாசத்தையும் காட்டின மாதிரியும் இருக்கும். :D  இரவு 11 மணிக்கு மண்டக்காய்ச்சலோட எடுத்தது. இல்லாவிட்டால் எங்க‌ட‌ ஐ.கியூ. 200 தாண்டி கூவிக்கொண்டு போய் இருக்கும்   :wub: )
 
l124.gif
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பயனுள்ள  விவாதமாக உள்ளது

தொடருங்கள் உறவுகளே..............

ஒரு.....பேட் நியூஸ்  :(
 
அந்த பட்சுகளை உல்டா செய்வதற்கும் வழி இருக்கிறது.  :(
 
ஸோ....... நம்பகத்தன்மை சடுதியாக வீழ்ச்சி கண்டுவிட்டது !!
 
வேறு தளங்கள் இருக்கிறதா பார்க்கலாம். 
  • கருத்துக்கள உறவுகள்

படிப்புக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கிறதோ தெரியாது.. ஆனால் தனிநபர் சொத்துக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் உண்டு.. :icon_idea:

தற்போதைய இந்தியாவில் சொத்துக்கள் இல்லாததால் ஜின்னா தைரியமாக பாகிஸ்தானைப் பிரித்துக் கேட்க முடிந்தது.. எமது தலைமைகள் கொழும்பில் சொத்துக்கள் வைத்திருந்ததால் ஒருங்கிணைந்த இலங்கையைக் கேட்டுப் பெற்றார்கள்.. பல்லக்கில் பவனி வந்தார்கள்..! :icon_idea:

இன்று கனிமொழியையும், சன் குழுமத்தையும், டி.ஆர் பாலுவையும் சிங்களப் பகுதிகளில் முதலீடு செய்ய வைத்துள்ளார்கள்...! நாடுகளின் முதலீடுகள் தனிக்கதை.. :rolleyes:

புலம்பெயர் தமிழர் இலங்கையில் முதலீடு செய்யவதும் சிக்கலிலேயே முடியும்.. அவ்வாறு முதலிட்டால் முதலாளிகளின் அரசியல் பார்வை தமது சொத்துக்களைப் பாதுகாக்கும் போராட்டத்தில்தான் போய் முடியும்.. ஆக, இது வேலைக்கு ஆகிறதில்ல.. :D கொக்கு தலையில் வெண்ணையை வைத்துப் பிடிப்பது போன்றது..

அதேவேளை, அமெரிக்கா, இந்தியா, சீனா எல்லாம் தாராளமாக இலங்கைத்தீவில் முதலீடு செய்வது நீண்டகால நோக்கில் நன்மை பயக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் போராட்டத்தை எடுத்துக்கொள்வோம். அன்று தொட்டு இன்று வரை, எங்களிற்குள் இடதுசாரியம் பேசும் மிகப்பெரும்பான்மையானவர்கள் யாரோ சிந்தித்தவற்றின் சரத்துக்களையும் அந்தச் சரத்துக்களைக் காவிநிற்கும் புத்தகங்களின் பெயர்களையும் மனப்பாடம் பண்ணி அவைசார்ந்து தங்களிற்குள் யார் அதிகம் பாடமாக்கினோம் என்று அடிபடுகிறார்களே அன்றி, அந்தச் சரத்துக்களை விதைகளாகத் தங்கள் அகங்களில் தூவி, அவ்விதைகள் எவ்வாறு தங்களிற்குள் முளைத்தன என்பதைக் காட்டக்கூடியவர்கள் அருமையிலும் அருமையாகவே இருக்கிறார்கள். போராட்டத் தலைமைகளில், எத்தனையோ பேர் பல சரத்துக்களையும் புத்கங்களையும் அறிந்தவர்கள். தாங்கள் மனப்பாடம் பண்ணியதை பொதுவெளியில் ஒப்பிக்கக்கூடியவர்க்ள். அதனால் அவர்கள் படித்தவர்கள் என்றொரு விம்பம் இருந்தது. எங்கள் சமூகத்தில் படிப்;பென்றாலே மகுடி தானே. உமாமகேஸ்வரன் நிலஅளவையாளராகப் படித்ததால் புளட்டைப் படித்தவன் இயக்கம் என்று ஊரில் சொன்னவர்களிற்கும் பொறியியலாளர் நடத்திய எரித்திரிய போராட்டம் என்று சொன்ன உங்கள் நண்பரிற்கும் இடையே தோலலின் நிறம் மட்டுமே வேறுபடுகிது. சிந்தனை ஒன்றினை மனப்பாடம் பண்ணுபவனிற்கும் சிந்திப்பவனிற்கும் இடையே பலத்தவேறுபாடு. என்னைப் பொறுத்தவரை, எங்கள் போராட்ட வரலாற்றில் சுய சிந்தனை என்பதைக் காணமுடிந்த ஒரே அமைப்பு புலிகள் தான். பெட்டிக்குள் நின்று எந்தப் பிரச்சினையும் அணுகமுடியாது. 
 
சில வினாடிகள் சிரிப்பவர்கள் சிரிப்பதற்காக விட்டுவிட்டு,;...
 
ஐயர் எழுதிய புத்தகத்தில் கூட செட்டி என்ற பாத்திரத்தில் தலைவரிற்கு இருந்த ஈhப்பினை சண்டியனின் முட்டாள்த்தனமாகவே காட்டுவதற்கான பிரயத்தனம் இருக்கிறது. அதுபோல் ஹிட்லர் மீதான தலைவரின் கவனம் முதற்கொண்டு எங்கெங்கெலாம் இழிவிற்கும் நகைச்சுவைக்கும் சாத்தியங்கள் கிடைத்னவோ அங்கெல்லாம் 'பாசிஸ்ட்' என்ற கற்பிதத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒப்பீடுகள் நடந்தன. இதில் வியப்பில்லை, சித்தாந்தங்களின் சரத்துக்களை மட்டும் பாடமாக்கி ஒப்பிக்கும் கூட்டத்திற்கு, ஹிட்லரைப் பார்ப்பவன் ஹிட்லரின் பொது விம்பத்தை விரும்புவனாகமட்டும் தான் தெரிவான். செட்டியைப் பார்ப்பவன் குற்றவாளியாகவும் கடத்தற்காரனாகவும் மட்டும் தான் தெரிவான். ஏனெனில் புத்தங்களின் பக்கங்களில் எழுதப்பட்டற்றை எழுத்துக்கூடி மனப்பாடம் பண்ணும் கூடடத்திற்கு அதுதான் கைவரும். பட்டத்தைச் சான்றிதழிற்காக மட்டும் அடைபவனால் அப்படி மட்டும் தான் சிந்திக்க முடியும். வைத்தியர்கள் கம்பவுண்டர்களாக இன்ன குணங்குறி தெரிந்தால் இன்ன குளிசை குடு என்று பாடமாக்குபவர்களாக இருக்கையில் அறிந்து ஆவணப்படுத்தப்பட்ட நோய்கள் மட்டுமே, அதுவும் நோயக்கிருமிகள் மருவாதிருக்கும் வரையே, அந்த வைத்தியக் கம்பவுண்டர்களால் ஏதேனும் பலன் இருக்குக். 
 
ஆயுதப்போராட்டம் என்ற வழிமுறையாகட்டும், வட்டுக்கோட்டைத்தீர்மானமாகட்டும் கையைத்தூக்கின சனம் சிந்திச்சுத் தூக்கியதாய் இல்லை. சொன்ன இடத்தில் புள்ளடி போட்டமை தான் அதிகம் நடந்தது. அது விநோதமில்லை. எல்லா சுமூகத்திற்குள்ளும் தலைமைகள் சொற்ப விகிதம் தான். ஆனால் எங்கள் பிரச்சினை, போராட்டத் தலைமை என்று, அதுவும ;ஆயுதப் போராட்டத் தலைமை என்று கிளம்பியவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களைகத் தவிர மற்றவர்களிற்குத் தாம் என்ன தொடங்குகிறோம் என்ற தெளிவின்றி இருந்து. அதாவது சான்றிதழோடு வந்தவனை நம்பித் தொழிலைக் கொடுத்ததுபோல அது. ஆயுதப்போராட்டம் சரியான தேர்வா இல்லை என்றோ, ஈழம் தேவையா இல்லையோ என்று எந்த விவாதமும் நடக்கவில்லை. அனைவரும் தங்கள் பெயர்களில் ஈழத்தைச்சேர்த்து, ஏதேனும் ஒரு சிறு குண்டையும் எடுத்துக்கொண்டு தான் இயக்கம் கட்டினார்கள். ஆனால், அவர்களால் ஓடமுடியவில்லை. காரணம், புத்தகத்தில் வரிவரியாக எப்படி ஓடுவது என்று இருந்தால் தான் அதைப்பார்த்து அவர்களால் ஓடமுடியும்.
 
என்னைப் பொறுத்தவரை, எங்கள் போராட்டத்தில் இருந்த ஒறியினலான ஒரே ஒரு தலைமை என்றால் அது தலைவர் மட்;டும் தான். என்ன பிரச்சினை என்றால் சிந்தனைகளைச் சரத்துக்களாகப் புத்தகங்களின் ஒற்றைகளில் மட்டும் கண்ட கூட்டத்திற்கு, நடைமுறை உலகில் ஒறியினலான ஒன்றைக் காண்கையில் அதைக்கிரகிக்கும் பக்குவம் கிட்டுவதில்லை. கம்பவுண்டர் வைத்தியர் புதுநோயைப் பார்த்தது போன்றது தான் அவர்களின் நிலை.
 
எமது போராட்டம் தோற்றுப்போனது. அதில் இரண்டாம் கருத்திற்கிடமில்லை. ஆனால் தோற்றதன் காரணம் பட்டம் பெற்றவன் தலைமைதாங்கவில்லை என்பதல்ல. ஆயுதப்போராட்டம் வேண்டும் என்றால், அதை அதன் உச்சவடிவில் நடத்தியவர்கள் புலிகள் மட்டுமே. நெளிவுசுழிவு தெரியவேண்டும், இராசதந்திரம் தெரியவேண்டும்; என்று கதைப்பவர்கள் எப்போதுமே கதைக்காது விடுவது என்னவெனில், முள்ளிவாய்க்கால் வரை புலிகள் பிரதிநிதித்துவப் படுத்திய மக்கள் ஆயுதப்போராட்டம் அவசியமானது என்றும் அது தான் வேண்டும் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். புலிகள் தங்களை ஆயுதப்போராட்டக்காரர்களாகத் தான் என்றும் ஒழிவு மறைவு இன்றிக் காட்டினார்கள். இதில் தலைமை என்பது பன்மைத்துவமானதாக இருக்கவேண்டும், மக்களிற்கு எது அதியுச்ச பலன் என்று கண்டறிந்து சொல்பவர்களாக இருக்கவேண்டும், அதற்கேற்ப நிலைமைகளை மாற்றுபவர்களாக இருக்கவேண்டும் என்று பாடம் எடுக்கும் பலர் பாயிற்கடியில் உருட்டிவிடும் விடயம் என்னவெனில், தனி ஈழம் என்பதும் ஆயுதப்போராட்டம் என்பதும் மேற்சொன்ன அத்தனைக்கும் முரணானது. அதாவது, மேற்சொன்ன விடங்கள் அனைத்தும் தனி ஈழம் என்ற விடயத்தையும் ஆயுதப்போராட்டம் என்ற விடயத்தையும் தளர்த்துகையில் மட்டும் தான் சாத்தியம். அதாவது, தீர்விற்கான வழியில் பிரச்சினையின் வரைவிலக்கணைத்தை மாற்றுவது அது. அதாவது, அணுகப்படும் பிரச்சினையானது, தனித் தமிழ்ஈழம் எடுப்பது என்பதாக இருக்கையில், அது அடைய முடியாதது எனவே அதைக் கைவிட்டுவிடுங்கள் என்பது தான் அந்தக் கூற்று. அது இன்று நியாயமான கூற்றாகத் தெரிகிறது என்றபோதும், புலிகள் பிரதிநிதித்துவம் செய்த மக்கள் என்றைக்கும் அதனைத் தங்கள் அவாவாக எடுத்துரைக்கவில்லை. ஈழம் என்பதைக் கைவிடுங்கள் என்ற கோரிக்கை என்றைக்கும் மக்களால் புலிகளிற்குக் கூறப்படவில்லை.
 
புலிகள் செய்தது, சாகும் வரை, தங்களிற்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும், தங்களிடம் தரப்பட்ட பிரச்சினையான 'தனித் தழிழ் ஈழம் எடுத்தல்' என்ற பிரச்சினையினை எவ்வாறு தீர்ப்பது என்று அது நோகி முயன்றது தான்.
 
இடையில் அன்ரன் பாலசிங்கம் அவர்க்ள் தனி ஈழத்திற்கு மாறான ஒன்றினைப் பற்றிப் பேசும் ஒரு தளத்தினைத் தெட்டத் தெளிவாக இந்த மக்களிற்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அது புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட தளமா பாலசிங்கம் அவர்களின் தன்னிச்சையான செயற்பாடா என்ற தேவை அற்ற விவாதத்திற்கு அப்பால், அப்படி ஒரு தளம் ஏற்படுத்தப்பட்டது மறுக்க முடியாது. அது இரு தசாப்த்த ஆயுதப் போரின் பின் ஏற்படுத்தப்பட்ட தளம். மக்கள் முன் வைக்கப்பட்ட ஒரு பொதுசன வாக்கெடுப்புப் போன்றது அது. மக்கள் அந்தத் தளத்தினைப் பற்றிக் கொண்டார்களா? இது தான் சரி ஈழம் என்ற பேச்சை விடுங்கள் என்று அழுத்தம் கொடுத்தார்களா? பொது மக்களை விடுங்கள், புத்திசீவிகள் என்று சுயதம்பட்டம் அடிப்போர் அப்படி ஒரு மாற்றம் வேண்டிக் கட்டுரை எழுதிக் குவி;த்தார்களா? மக்களை நீட்டப்பட்ட கொம்பைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று இராப்பகலாகப் பிரச்சாரம் செய்தார்கள். இல்லையே, 
 
பாலசிங்கம் அவர்கள் மீதான விசனங்கள் தானே உருவாகின. ஒரு பேச்சிற்கு விவாதத்திற்கு, பாலசிங்கம் அவர்கள் சொன்னது உண்மையில் புலிகள் தங்களிற்குள் ஆராய்ந்து மக்கள் முன் சாடைமாடையாகக் கூறிய மாற்றம் என்று ஏன் நாம் எடுக்க முடியாது. வெற்றி பெற்ற இராணுவங்கள் போன்று செயற்பட்ட புலிகள், மக்கள் தொடர்பு என்ற விடயத்தில் மக்களை நாடி பிடித்துப் பார்க்கும் ஒரு நாடகமாக பாலசிங்கம் அவர்கள் வாயிலாக அதை ஏன் கூறியிருக்க முடியாது. தமிழ் செல்வன் பால அண்ணை சண்டை என்ற விடயங்கள் எல்லாம் கூட கட்டமைக்கப்பட்டன என்ற சாத்தியம் ஏன் இருந்திருக்க முடியாது? ஆனால் மக்கள் அதனைப் பற்றவில்லை. தனித் தமிழம் தான் ஒரே முடிவென்றிருந்தார்க்ள். பின் புலிகளிற்கு என்ன வழி? குடைசிவரை காசு குடுத்தவன் ஈழம ;கேட்டுத் தான் காசு குடுத்தான். போராடப்போன போராளி ஈழம் வேண்டித் தான் போராடினான்.  ஆப்படி இருக்கையில் பிரச்சினையினை மாற்றி இருக்க வேண்டும் என்று இப்போது கூறுவது சற்று அழாப்பலாககத் தானே இருக்க முடியும்.
 
எனவே புலிகள் செய்தது தம்மிடம் தரப்பட்ட பிச்சினையான தமிழ் ஈழம் எடுத்தல் என்பதை தீர்ப்பதற்காக வாழும் வரை போராடியது தான். என்னென்ன புது வழிகளில் பெட்டிக்கு வெளியே சிந்திக்கலாமோ சிந்தித்தார்க்கள். ஆனால் அவர்களிடம் கொடுக்கப்படட பிரச்சினையின் வரைவிலக்கணத்தை மாறவிடாது வைத்திருந்தவர்கள் நாங்கள். அதன் முழுப்பொறுப்பும் இறந்த புலிகளினுடையது அல்ல. வாழும் எங்களுடையது.
 
 சான்றிதழ் எதையேனும் மட்டும் தனது அடையாளமாகக் கருதும் கூழ்முட்டை ஒன்றினால மட்டும் தான் சொல்லமுடியும் பட்டம் இல்லாதது தான் தோல்விக்குக் காரணம் என்று. அவர்களிற்குப் புரியும் படியாக சிந்தனைத் தளத்தில் விழக்கவும்முடியாது. ஏனெனில் அதற்கு தலைவரின் அணுகுமுறைகள் முதலில் சரத்துக்களாக புத்தங்களில் அச்சாகி அதை சான்றிதழ் வழங்கும் கட்டிடங்கள் தலையில் தூக்கிக் கொண்டாடி, அவற்றைப் படிப்பதற்குக் கட்டணம் அறிவிட்டு, வகுப்பiறியின் முன்னால் ஒரு மனிதன் நின்று பாடம் எடுத்துப், பின் அதற்குச் சோதனை வைத்து, அந்தச் சோதனையில் பலரைப் பெயிலாக்கி சிலரைப் பாஸ் பண்ணி, அது தகமையாகி, அதனால் தொழில் கிடைக்கும் என்றால் மட்டும் தான் அவர்களிற்கு அது புரியும். அப்பிடி அதுகளிற்கு அது புரிஞ்சுதான் எவரிற்கு என்ன பலன்.
 
ஆனால், ஒன்று தெரிகிறது, நாங்கள் ஒரு இனமாக, உயரவேண்டும் என்றால் எங்களைப் பற்றி நாங்கள் நிறையப் புத்தகங்கள் எழுதவேண்டித் தான் இருக்கிறது. ஏனெனில் நடந்துமுடிந்த எங்களின் கதைககள் பற்றி எங்களிற்கே இன்னும் அதிகம் புரிதல்கள் இல்லாமல் தான் நாட்கள் நகர்கின்றன. 

நன்றி  ஐயா

தோல்வி  என்ற ஒரு முடிவிலிருந்து எழுதப்படும் விமர்சனங்கள் எப்பொழுதும் உண்மை தராது

களத்தில் நின்றவர்களுடன் சேர்ந்து பயணித்துவிட்டு

தோல்வியைக்காரணம் காட்டி கை நீட்டுவது விமர்சனம் ஆகாது.

ஒவ்வொருவரும் தம்மை தாமே சுயவிமர்சனம் செய்யணும்   முதலில்.

தோல்விக்கு பின் கருத்து எழுதுபவர்கள் பலர் முன்னாள் புலிகள் தான் .

புலிகளின் போராட்டம் எங்கே போய் முடியபோகின்றது என்று பல தளங்களிலும் இருந்து மிக ஆக்கபுர்வமான அறிவுபூர்வமான ஆக்கங்கள் வந்துகொண்டுதான் இருந்தன .எல்லாம் ஆயுதம் முனைப்புகளுக்கு முன் எடுபடவே இல்லை .

படிப்பு ,தகமை என்றெலாம் நாங்கள் எழுதுவது புத்தகப்படிப்பு அல்ல .போராட்டத்தில் என்ன நடந்தது நடக்கின்றது என்பது பற்றி எதுவித அறிவும் இல்லாமல் முன்னே ஓடிய குதிரைக்கு காசை கட்டிவிட்டு அது விழுந்து போக அதற்கான காரணங்கள் அளப்பல்கள் சளாப்பல்கள் தொடருது .

புலிகளில் இருந்து எண்பதுகளிலேயே கருத்தியல் காரணங்களுக்காக பிரிந்தவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் .ஐயரின் பதிவு அனைத்தையும் அப்பட்டமாக சொல்லும் ஒரு சாட்சி.வெறும் ஆயுதத்தை நம்பி போரட்டம் நடாத்தியவர்கள் புலிகள் மட்டுமே .அதுதான் அவர்களின் வெற்றியும் தோல்வியும் ஆகும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.