Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நியமித்தால்; தனித்துக் களமிறங்கும் வடக்கு தமிழரசுக்கட்சி

Featured Replies

வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமித்தால், பதிலடியாக வடக்கு தமிழரசுக் கட்சியினர் தனி அணியாக தேர்தலில் குதிப்பார்கள்.

இவ்வாறு  நேற்று இரவு வடக்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கூட்டமைப்பு தனது முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலையைச் சந்தித்து வருகிறது.

கூட்டமைப்பில் உள்ள பெரும்பான்மையானோரின் கருத்துக்களுக்கு மாறாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமிக்க முயன்று வருகிறார்.

ஆயினும் வடக்குப் பகுதியில் உள்ள வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கின் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் தமிழரசுக் கட்சியினர் சி.வி.விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராகக் களமிறக்குவதற்கு அறுதியாகவும் உறுதியாகவும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தலைமைக்கு கடிதம் மூலமும் தெரியப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தமது விருப்பையும், கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளின் கருத்துகளையும் மீறி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தன்னிச்சையாக முடிவெடுத்து முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை நியமிப்பாரானால் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வடக்குப் பகுதி தமிழரசுக் கட்சியினர் மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். கடந்த இரு தினங்களாக ஆங்காங்கே நடைபெற்ற சிறுசிறு கூட்டங்களிலும் இது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழரசுக் கட்சி வடக்கில் தனித்துப் போட்டியிட்டால் கூட்டமைப்பின் கணிசமான வாக்குகள் பிரிக்கப்பட்டு அது பலவீனப்பட்டுவிடும்  என்று  அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, முதல்வர் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்டுள்ள இழுபறியைத் தீர்ப்பதற்காக சுழற்சி முறையில் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், மாவை. சேனாதிராசாவுக்கும் வழங்கும் முடிவை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து நாளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து  அவர் இந்தியா பயணமாக உள்ளார் என்றும் தெரியவருகிறது.

எனினும் மாவை. சேனா திராசாவை முதல்வர் வேட்பாளராக களம் இறக்காவிட்டால் 20 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

எனவே மாவையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காததால் ஏற்படக் கூடிய இக்கட்டு நிலையில் இருந்து தப்பிப்பதற்காகவே கூட்டமைப்பின் தலைவர் அவசர அவசரமாக இந்தியாவுக்கு விரையவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

 

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

கிருபானந்த வாரியார் ஸ்டையிலில் வாசிக்கவும்!

 

'விதியானப் பட்டது வலியது!'

'அதை யாரும் வெல்ல முடியாது'

 

ஆனானப்பட்ட விசுவாமித்திரனாலேயே, ஊர்வசியை வெல்ல முடியவில்லை என்பதைப் பாருங்கோ! :icon_idea:

 

எனவே விதி வலியது....................தமிழன் விதி கொடியது...... :o

முடிஞ்சால் உருப்பட்டுப் பாருங்கோவன்?

 

இதுக்கு ஹெல உருமையே பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் இன்னும் அமிர்தலிங்கம் காலத்து strategy இல நிற்கிறார்.

 

உது தமிழர்களுக்கு சரிப்பட்டு வராது என்று எத்தனையோ பேர் சொல்லியும் கேட்காத நிலையில் தான் இவர்களை நோக்கி துப்பாக்கிகளை நீட்ட வேண்டி வந்தது. மீண்டும் பழைய குறுடி கதவைத் திறவடி கதை தான்.

 

அண்மையில் சம்பந்தன் தனித்து மகிந்தவை சந்தித்து ரகசியப் பேச்சு வார்த்தை பண்ணியதன் நோக்கம்..??????!

 

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்ய புலிகளுக்குப் பிறகு யாரும் இல்லை என்ற நிலையே தொடர்கிறது. இப்ப இருக்கிறவர்கள்.. ஒன்றில் தங்கள் சுயலாபத்திற்கு அரசியல் செய்கின்றனர் அல்லது இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் தேவைக்கு அரசியல் செய்கின்றனர்..! :icon_idea::rolleyes::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண முதலமைச்சர் பதவியை பங்கிட்டு விட்டால் தமிழரின் பிரச்சினை திர்ந்து விடுமா? சம்பந்தர் தனது பிடி தமிழரசுக்கடசியிலிருந்து விலகி விடமால் இருக்க தனக்குச்சார்பான ஆட்களைத்தேடுகின்றார்.விக்கினேஜ்வரன் சரியான தேர்வு என்றே முதலில் நிதை;தேன் .ஆனால் அவரை முதரசை;சராக்க சம்பந்தனும் ,சுமத்திரனும் முயற்சிப்பதைப்பார்த்தால் விக்கியை விட்டுவிட்டு மாவையைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. மாவை ஒரு போதும் தமிழ்த்தேசியத்திற்கு மாற்றாக உளறியது கிடையாது.வார்த்தை நிதானித்துப் பேசுபவர்.எல்லோரையும் அனுசரித்துப் போகக் கூடியவர்.தமிழரசுக்கட்சியின் வடமாகாணக்கிளை தனியாகப் பிரியத்தேவையில்லை ஏனைய கட்சிகளையும் அரவணைத்து தமிழ்க் காங்கிரஜ் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இயங்கட்டும்.

தனித்து இறங்கினால் வைப்புப் பணம்கூட கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வலிகாமம் பகுதியை சேர்ந்த மாவைக்கு சம்மந்தனின் சதியால் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது Colombo இல் இருந்து சுகபோக வாழ்க்கை வாழந்த விக்கிக்கு எப்பிடி வடமாகாண மக்களின் பிரச்னை புரியும்.....

சம்மந்தன், சுமந்திரன் விக்கி போன்ற colombo சுகபோக தலைவர்களால் ஆட்டுவிக்கபடுகின்றார்.....சம்மந்தன் ஒழிக.....

தமிழ் மான சிங்கம்......

அஞ்சா நெஞ்சன்.....

மாவை வாழ்க.....

யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வலிகாமம் பகுதியை சேர்ந்த மாவைக்கு சம்மந்தனின் சதியால் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது Colombo இல் இருந்து சுகபோக வாழ்க்கை வாழந்த விக்கிக்கு எப்பிடி வடமாகாண மக்களின் பிரச்னை புரியும்.....

சம்மந்தன், சுமந்திரன் விக்கி போன்ற colombo சுகபோக தலைவர்களால் ஆட்டுவிக்கபடுகின்றார்.....சம்மந்தன் ஒழிக.....

தமிழ் மான சிங்கம்......

அஞ்சா நெஞ்சன்.....

மாவை வாழ்க.....

 

மாவையே விட்டுக்கொடுத்த பின்னர் நீங்கள் ஏன் மாவையை வைத்து மாவாட்டுகிறீர்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவை மிரட்டப்பட்டு விட்டு கொடுக்க வைக்கப்பட்டார்.....

அவரசர அவசரமாக சம்மந்தனை அரளிமாளிகைக்கு அழைத்து ஜனாதிபதி மகிந்த கொடுத்த உத்தரவு அது

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் colombo இல் அமைதியாக இருந்த விக்கியை யாழ்ப்பான கூட்டங்களில் தமிழர் சார்பு நிலை எடுத்து பேசுமாறு கூறி இறக்கிவிட்டதே அரசு தானே....

இவ்வளவு எழுதுகின்ற உங்களுக்கும் ,பத்திரிகைகளுக்கும் ஏன் இன்னொரு விடையம் தெரியாமல் போனது .நியமனகுழு உறுப்பினர் ஒருவர் தன்னைத்தனே பிரேரித்த சம்பவம்.

மாவை மிரட்டப்பட்டு விட்டு கொடுக்க வைக்கப்பட்டார்.....

அவரசர அவசரமாக சம்மந்தனை அரளிமாளிகைக்கு அழைத்து ஜனாதிபதி மகிந்த கொடுத்த உத்தரவு அது

 

 

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் colombo இல் அமைதியாக இருந்த விக்கியை யாழ்ப்பான கூட்டங்களில் தமிழர் சார்பு நிலை எடுத்து பேசுமாறு கூறி இறக்கிவிட்டதே அரசு தானே....

 

இவையிரண்டும் ஆதாரமற்ற பொய்த் தகவல்கள்.

மாவை மேல் சுண்டலுக்குள்ள ஆதங்கம் விளங்குது. எங்களுக்கும் மாவை விரோதி இல்லை. அவர் சம்பந்தனைப் போலன்றி மக்கள் பிரச்சினை அறிந்த ஒரு நல்ல அரசியல்வாதி. அவருக்கு வேறு முக்கிய பொறுப்புக்கள் பிற்காலத்தில் வரலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மக்களோடு மக்களாக நின்று போராடிய மாவையை புறந்தள்ளி சம்மந்தன் சுமந்திரன் கும்பல் விக்கியை முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்திருப்பது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது....

மக்களோடு மக்களாக நின்று போராடிய மாவையை புறந்தள்ளி சம்மந்தன் சுமந்திரன் கும்பல் விக்கியை முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்திருப்பது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது....

 

இது சம்பந்தன் சுமந்திரன் கும்பலின் முடிவல்ல!

பெரும்பாலான பொது மக்களின் விருப்பம்!!!

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலை புலிகளின் தமிழீழத்துக்கான போராட்டம் முள்ளிவாக்காலில் முடிவுக்கு வந்ததன் பின்னர் நடக்கின்ற கூத்துகளை பார்த்தால் மொத்தமாக எல்லாமே வெறுத்து போகின்றது  :(
 

மாவை முதல் அமைச்சராக வேண்டும் என்று விரும்புவது இந்த முதல் அமைச்சர் பதவியை வைத்து எதாவது செய்யலாம் என்று நம்புவதால். ஆனால் தேர்தலில் போட்டியிடுவது மேலும் வர இருக்கும் சரிவை தடுப்பது மட்டுமே என்றதை நம்பினால் மாவையால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். எனவே தேர்தலை கூட்டமைப்பு கவனமாக பயன் படுத்த வேண்டும். தேர்தல் வடக்குக்கு மட்டும் அல்ல.  கக்கீம் திரும்ப இந்தியாவை போக மறுத்துவிட்டார். அவர் இந்தியா போவது எமக்கு ஒன்றும் நம்ப்பிகை அளிக்கும் வியடையம் என்பதல்ல. கிழக்கை அரச அடிவருடகளிடமிருந்து மீண்டெடுக்கும் பாரிய வேலையை தேர்தலில் பின்னர் வடக்கு முதல் ஆரம்பித்து வைக்காவிடில் சிங்கள குடியேற்ற முலம் கக்கீம் அரசுக்கு தாரை வார்த்துக்கொடுத்துவிடுவார். சரித்திர பூர்வமாக முறிந்து போய் இருக்கும் மலைய உறவுகளை முன்னெடுக்கும் முயற்சி புலிகளுடன் நின்றுவிட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • 1 year later...

என்னம்மா கண்ணுகளா சவுக்கியமா ,கள உறவுகளின் மனவோட்டம் என்ன சொல்லுது .

எங்களுக்குத்தான் வெட்கம் மானம் ஒண்டும் இல்லயே!

 

நாங்க சொன்னது அண்டைக்கு,

 

 எல்லா குழப்பத்துக்கும் இலங்கை தமிழ் ஊடகங்கள்தான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே காமெடிதான்.

கரி- விடாக் கொண்டனப்பா நீர்.

"சொந்தக்காரர் சுகபோகமாக வாழ, தாலி அறுத்ததுகளும் அறுதலி பிள்ளைகளும் தவித்து நிற்க, சொத்தி முடமெல்லாம் பிச்சை எடுக்க, அரசியலுக்காக அடிபடும் தமிழ்த்தலைமைகள்.தூ.. கேவலம்,கலயத்துடன் பிச்சையெடுத்தால் கெளரவமாவது மிஞ்சும்.

வெளி நாட்டுத்தமிழன்!

விக்கினேஸ்வரனை வெளியேற்றினால் வெளி நாட்டுத்தொடர்புகள் அறுந்து விடும்.தற்போது தூய்மையான உள்ளத்துடன் தமிழருக்காக சேவை செய்த ஓர் உயரிய உள்ளம் முடங்கி விட்டது.அது யாரும் அல்ல மன்னார் ஆயர்.அவரின் வழியில் மேலைத்தேயத்துடன் தற்போது எமது பிரச்சனைகளைப் பரிமாறி கொண்டிருப்பவர் இந்த விக்கினேஸ்வரன் ஐயா தான்.மீண்டும் அதிகாரத்தை பெற்றால் கூட்டணியோ தமிழரசுக்கட்சியோ இந்தியாவுடன் முடங்கிவிடும்.
              அமெரிக்காவில் சந்திப்புகளை நிகழ்த்திய கூட்டணியினரை பார்த்த மற்றும் இலங்கையில் உள்ள தூதரக தகவல்களின் படி  அமெரிக்க அரசு இவர்களிடம் தலைமைத்துவத்துக்கான தகுதியில்லை என்ற படியால் தான் விக்கினேஸ்வரனை இதற்குள் இழுக்கவேண்டி வந்ததே ஒழிய இலங்கை அரசால் நியமிக்கப்படவில்லை.பழைய செய்திகளை புரட்டினால் இந்த உண்மை வெட்ட வெளிச்சமாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை திருப்பி திருப்பி பார்த்து இரசிப்பவர்கள் கூட்டணியின் நிகழ்கால அரசியல் போக்கையும் பார்க்க வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை திருப்பி திருப்பி பார்த்து இரசிப்பவர்கள் கூட்டணியின் நிகழ்கால அரசியல் போக்கையும் பார்க்க வேண்டும். 

எங்களுக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை நல்ல மனிசருக்கு ஒரு கண்ணாவது போகோணும் எண்டு நினைக்கிற கூட்டத்திட்டைப்போய் பார் படம் பிடி எண்டு சொன்னால் விளங்குற நிலைமையிலையே அவை இருக்கினம்??? :lol:

கொழும்பில் கேட்டிருந்தால் பார் பார் கொழும்புத் தமிழன் கொழும்பில்தான் போட்டியிட முடியும். தமிழ்நிலமான யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாது. வீரம் இருந்தால் மானம் இருந்தால் எங்கே யாழ்ப்பாண மண்ணில் நின்று வெற்றியடையட்டும் பார்க்கலாம் என்று இதே கபோதிகள் மண்ணுக்கும் விண்ணுக்கும் துள்ளிக் குதித்திருப்பார்கள்.

சிலரிடம் படித்தவர்களை பிடிக்காத கலாச்சாரம் இன்னும்தொடர்கிறது. சுமந்திரனை ததேகூ க்குள் கொண்டு வந்து சேர்த்தது இந்தியா என்றால் இந்தியாவுக்கு வேறு வேலை இல்லையா? 2001 – 2013 ஆம் ஆண்டு வரை அவர் ததேகூ இன் சட்ட ஆலோசகராக இருந்து வந்தவர். அவரை தேசியப்பட்டியல் நா.உ ஆக்கியதற்கு அதுதான் முக்கிய காரணம். அவர் சம்மதிக்கவில்லை. கடைசி நாள்தான் சம்மதம் தெரிவித்தார். சுமந்திரன் பற்றி வேறு ஏதாவது கிசு கிசு இருக்கிறதா?

அரசியல் பற்றிய விவாதத்தை தரம் உயர்த்துங்கள். பணியாரத்தை விட்டு விட்டு சிலு சிலுப்பை பற்றி கவலைப் படுவதை விட்டு விடுங்கள். – நக்கீரன்
_________________

(எம். ஏ. சுமந்திரன் அடுத்த தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமாகியுள்ள நிலையிலும், அவர் அண்மையில் குடத்தனையில் உள்ள அவரது வீட்டினைத் திருத்தி குடிபுகுந்துள்ளது தொடர்பிலும், ஒரு சிலர் ஏன் – எம். ஏ. சுமந்திரன் கொழும்பில் இல்லாது, யாழில் தேர்தலில் நிற்க வேண்டும் எனக் கேட்டதற்கு – நக்கீரன் பதில்)

dd

- See more at: http://www.canadamirror.com/canada/45072.html#sthash.NbKLdI1Q.dpuf

முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நியமித்தால்; தனித்துக் களமிறங்கும் வடக்கு தமிழரசுக்கட்சி!

 

இறங்கி....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கு முதல்வர் அமெரிக்கா விஜயம்  
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். 
 
எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விக்கினேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள கலாச்சார நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
 
 
முதலமைச்சர் விக்னேஸ்வரன் சில அமெரிக்கா உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
 
இதேவேளை, அவுஸ்திரேலிய தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு ஒன்றும் அந்நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
 
 
வெளிநாடுகளில் உள்நாட்டு அரசியல் தொடர்பில் கருத்து வெளியிடும் போது நிதானமாக கருத்துக்களை வெளியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விக்கினேஸ்வரனுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
இதேவேளை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் விக்கினேஸ்வரன் மேற்கொள்ளும் முதலாவது அமெரிக்க விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=747104107825521446#sthash.18AgyfYx.dpuf

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.