Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள கவிகளிடம் ஒரு பணிவான கேள்வி .....

Featured Replies

என் மதிப்புக்குரிய மாண்பு மிகு கவிஞர்களே .....வணக்கம் 
 
சில பாடல்களை இசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எனக்கும் ,அந்தப்பாடல்களுக்குரிய வரிகளை எழுதி தரும் கவியாளர்க்கும் ஏற்படும் உறவு நிலையின் யதார்த்தம் சில வேளைகளில் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது .இங்கே நான் குறிப்பிடும் கவிகள் யாரும் யாழ் களத்தில் இல்லாதவர்கள் ..........கவிகளாகிய உங்களிடம் இருந்து நான் சில யதார்த்தமான உண்மைகளை .எதிர்காலத்தில் ஓர் புரிந்துணர்வுடன் பல ஆக்கங்களை இணைந்து வழங்க வேண்டுமெனில் ஓர் தெளிவு நிச்சயம் தேவை .
 
தற்சமயம் நான் மாவீரரின் வணக்க பாடல்களின் இசை முயற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருக்கிறேன் .அந்த வகையில் இங்குள்ள சில கவிகள் எனக்கு பாடல்களை வரிகளாக தந்துள்ளனர் ................ஆனால் இசையுடன் அந்தவரிகளை இணைக்கும்முயற்சியில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது .
 
ஆனால் சிலர் அதைப்பற்றி பேசினால் எரிந்து விழுகிறார்கள் .கவிதை இப்படித்தான் ,இப்படியே பாடுங்கள் என்கிறார்கள் .........அப்படி பாடினால் அதை நாட்டார் பாடல் போல தான் பாடமுடியும் .........
 
ஆனால் எப்படி ஒரு மெட்டை ஒரு பாடலுக்கு போடும் எனக்குள்ள அதே ஓர் உணர்வே அந்த கவிஞர்க்கும் இருக்கும் ,என்ற உணர்வை நான் மதிக்கும் படியினால் ........எனக்கு நான் சரியா ,அவர்கள சரியா என்று முடிவெடுக்க முடியவில்லை .
 
ஆகவே யாழ் களத்தில் இருக்கும் என் அன்புக்குரிய கவிகளிடம் இந்த கேள்விக்கான பதிலை விடுகிறேன் ..............உங்கள் பதில் எதிர்காலத்தில் பல பயனுள்ள படைப்புக்களை உருவாக்க பேருதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் .நன்றி ........
 
அன்புடன்..................
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குப் பிரச்சனையாக இருக்கும் சொற்களுக்குப்  பதிலாக அதே கருத்துள்ள வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்துவதில் பிரச்சனை இருக்காது என நினைக்கிறேன்.

பெரிய பெரிய இசை மேதைகள் எல்லாம் தங்கள் இசைக்குரிய எழுத்துக்களைத்தான்

இப்போது எதிர்பார்க்கின்றனர்.

நீங்கள்  ஏன் இத்தனை கஸ்ரப்படுகின்றீர்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரி விடயங்களில் கவிஞர்களுக்கு சந்தங்கள், தாளங்கள் பற்றிய பரீட்சயம் ஓரளவுக்கு இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பாடல் கதாகாலட்சேபம் மாதிரி ஆகிவிடும்.. :D

கவிஞர் கண்ணதாசனுக்கு இசையின் கூறுகள் தெரிந்திருந்ததால் மெல்லிசை மன்னரின் பணி ஓரளவுக்கு இலகுவாகிப் போனது..

நீங்கள் குறிப்பிடும் கவிகளும் தங்களை கவியரசுபோல் நினைத்துக்கொண்டு சந்தங்கள், தாளங்களுக்குப் பொருந்தும் வரிகளைத் தருவார்கள் என நம்புகிறேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கவி எழுதுபவர்களுக்கு மனதிலே தானாக ஒரு மெட்டும் சேர்ந்து உருவாகும். ஆனால் இசையமைப்பவருக்கு  வேறொரு மெட்டு உருவாகும். கவி எழுதுபவர் இப்படி இருக்கலாம் எனத் தன் கருத்தை வைக்கலாமே தவிர இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இசையமைம்பவருக்குக் கூறினால் இசை நன்றாக வராது. இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆனால் இருவரும் ஒத்திசைந்து இசையமைத்தால் இன்னும் நன்றாக வரும் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் உங்களிடம் ஒரு தாழ்மையான விண்ணப்பம். அதற்காக நாங்க யாழ் கள கவிஞர்களோ.. கவி வித்துவான்களோ கிடையாது.

கிட்டு மாமா நினைவாக நான் 2005-6 களில் எழுதிய வரிகள் சில உள்ளன.

இதனை எனக்குள் எழுந்த ஒரு பாடல் மெட்டுக்கு அமைய எழுதினேன். இதனை முடிந்தால் உங்கள் இசைக்கு அமைய மாற்றியமைத்து பாடலாக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அப்போதெல்லாம் தேசத்தின் மீதான பிரியம் கொண்டவன் என்ற வகையில் தேசப்பிரியன் என்ற பெயரில் எழுதி இருக்கிறேன்.

அவசியம் என்றில்லை. வசதி இருந்தால் முயற்சித்துப் பாருங்கள்.

நன்றி.

kiddu.jpg

வெடியோசை எழுந்தது
எங்கள் நெஞ்சோசை அழிந்தது
களத்தோடு களமாடி
கோட்டைக்குள் அடித்தெழுந்த
அந்தப் புயலும் ஓய்ந்தது...!
தங்க தமிழீழ வேங்கையது
வங்கக் கடல் நடுவே சரிந்தது...!

அசோகச் சக்கரத்தின்
அகோரத் தாண்டவம் - எங்கள்
மாமாவின் உடல் கிழித்தது...!
ஆதிக்க வெறி பிடித்த
அகிம்சா தேசமது
அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...!
தமிழீழ அன்னையவள்
கொடிதனைச் சுமந்தவன்
ஆழி தன் அலையோடு
மீண்டிட்டான் தமிழ் மண்ணை...!

குரலோசை எழுந்தது - அது
அவன் புகழோசை சொன்னது
விடியலின் தாய் மகன்
விடிவெள்ளியான கதை
முடிவின்றிச் சொன்னது....!
தர்மம் வெல்லும் என்பது
காலத்தின் கோலம் என்றது
சரியாகி நின்றது
எங்கள் நெஞ்சங்கள் அவன் நினைவுகள்
அலையலையாய் சுமந்தது...!

- தேசப்பிரியன்

http://kundumani.blogspot.co.uk/2009/01/blog-post_16.html

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நன்றி நெடுக்ஸ் .

இந்த வரிகள்  நிச்சயம்  பாடலாக வரும். அடுத்து வரும் கிட்டண்ணாவின் நினைவு நாளுக்குள் இந்த வரிகளை பாடலாக அமைத்து தருகிறேன்.
 
நெடுக்ஸ் நீங்களும் மாவீரர் பாடல் ஒன்றை எழுதி தந்தால் சிறப்பாய் இருக்கும் .நன்றிகள்.
  • கருத்துக்கள உறவுகள்

எமது நட்பு வட்டத்தின் முயற்சியில் உதித்த மாவீரர்களுக்கான வரிகள்...

தீவினில் ஒரு தீபம்
அது வீர தீபம்
உடல்தனை உருக்கி
உயிரினை அளித்து
மூட்டிய தீபம்

கார்த்திகை மாதம்
மலர்ந்திடும் மலரும்
காட்டினில் சிறுத்தையும்
வளவினில் செம்பகமும்
வீதியில் வாகையும்
வணங்கிடும் தீபம்
அது வீர தீபம்

மக்களின் மனங்களில்
மலர்ந்திடும் நினைவுகள்
சொரிந்திடும் விழினீரில்
உருகியே தாழ்ந்திடும் தீபம்
அது வீர தீபம்

விடியலின் ஒளிதேட
இருளோடு கலந்திட்ட
தமிழீழ மைந்தரவர்
ஏற்றிய தீபம்
அது வீர தீபம்

காற்றோடு சாயினும்
மழையோடு மாழினும்
தமிழீழ மண்ணிலது
அணையாத தீபம்
அது வீர தீபம்

வேங்கைகள் உயிரது
வேள்வியில் கலந்திட்ட
வேளையில் பிறந்திட்ட
மாவீர தீபம்
அது வீர தீபம்

அழியாத நினைவோடு
நெஞ்சினில் வாழ்ந்திடும்
வீரர்கள் உருவினில்
ஏற்றிடும் தீபம்
அது வீர தீபம்

வையகம் உள்ளவரை
ஒளிர்ந்திடும் தீபம்
கார்த்திகை மாசத்து
மாவீரர் தீபம்
அது எங்கள் வீரர் தீபம்.

கரங்கள் கூப்பியே
நினைவுகள் ஒருக்கியே
காற்றும் மெளனிக்க
காவியம் படைந்த
நாயகர் நினைவோடு
விழி சொரியும் பூ வைத்து
ஏற்றுவோம்
காத்திகை தீபம்
அது வீர தீபம்

விடியலில் என்றும்
ஒளிரட்டும்
விடி வெள்ளியாய்
கார்த்திகை 27 இல்
கடமை மறவாது
ஏற்றும் தீபம்
அது வீர தீபம்.

இது நீட்சி அதிகமெனில்.. இதனைச் சுருக்கி தந்த.. சோழியான் அண்ணாவின் வடிவமும் உள்ளது..

maveerar2006-kuruvikal.jpg

http://thedatsaram.blogspot.co.uk/search?updated-max=2008-05-14T11:49:00%2B01:00

தற்போது இது தேசக்காற்றிலும் இடம்பிடித்துள்ளது.

http://thesakkaatu.com/doc1156.html

  • தொடங்கியவர்

நன்றிகள் நெடுக்ஸ் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சூரியன்

உங்கள் சங்கடம் எனக்கு மிகவும் நன்றாகப் புரிகிறது. உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் அமைத்த மெட்டை கம் பண்ணி MP3 இல் எனது ஈமெயிலுக்கு அனுப்பினால் நான் அதுக்கு எமக்காக உயிர் நீர்த்த மாவீரர்களுக்கான வரிகளை எழுது அனுப்புகிறேன்...

நீங்கள் விரும்பும் பட்சத்தில் தனிமடலில் தொடர்புகொள்ளவும் எனது ஈமெயிலை உங்களது தனிமடலுக்கு அனுப்பிவைக்கிறேன்.

நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்சூரியனின் முயற்சி வெற்றிபெறட்டும்.

கவியெழுதுவோருக்கும் இசையமைப்போருக்குமிடையே ஒரு ஒத்திசைவான தன்மையொன்று இருக்குமாயின் பாடல் வெற்றிபெறுமென்பதே எனது கருத்தாகும். ஒருமுறை ஒருபாடலை ஒரு நிகழ்வுக்காக எனது நண்பரொருவர் இசையமைத்துப்பாடியபோது, கவிஞர்ர் பதினொராவது முறையே சரியென ஏற்றுகொண்ட சம்பவமொன்றை நேரிலே பார்த்துள்ளேன். எனவே படைப்பென்பது ஒரு கூட்டுமயற்சியென்பதை எழுதுவோரும் இசைப்போரும் புரிந்துணர்வோடு ஏற்றுக்கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்.

Edited by nochchi

  • தொடங்கியவர்

உங்களுக்குப் பிரச்சனையாக இருக்கும் சொற்களுக்குப்  பதிலாக அதே கருத்துள்ள வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்துவதில் பிரச்சனை இருக்காது என நினைக்கிறேன்.

பெரிய பெரிய இசை மேதைகள் எல்லாம் தங்கள் இசைக்குரிய எழுத்துக்களைத்தான்

இப்போது எதிர்பார்க்கின்றனர்.

நீங்கள்  ஏன் இத்தனை கஸ்ரப்படுகின்றீர்கள் :)

மிக்க நன்றி  வாத்தியார் ............உண்மை அப்படி வசனங்களை மாற்றுவதில் கூட சிலருடன் உடன்பாடு இல்லை ............அதுவே பிரச்னை :D .

சில பாடல்களுக்கு மெட்டுக்கு கருத்துக்களை எழுதி வாங்கியுள்ளேன் .ஆனால் வரிக்கு மெட்டு போடும்போது தான் அந்த மெட்டு பாடலுக்குரிய மெட்டாக அமைந்திருப்பதை பல முறை அவதானித்தேன் :) .............மீண்டும் நன்றிகள்.
  • தொடங்கியவர்

இந்தமாதிரி விடயங்களில் கவிஞர்களுக்கு சந்தங்கள், தாளங்கள் பற்றிய பரீட்சயம் ஓரளவுக்கு இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பாடல் கதாகாலட்சேபம் மாதிரி ஆகிவிடும்.. :D

கவிஞர் கண்ணதாசனுக்கு இசையின் கூறுகள் தெரிந்திருந்ததால் மெல்லிசை மன்னரின் பணி ஓரளவுக்கு இலகுவாகிப் போனது..

நீங்கள் குறிப்பிடும் கவிகளும் தங்களை கவியரசுபோல் நினைத்துக்கொண்டு சந்தங்கள், தாளங்களுக்குப் பொருந்தும் வரிகளைத் தருவார்கள் என நம்புகிறேன்.. :D

நன்றி இசை உங்கள் யதார்த்தமான கருத்திற்கு ....இசை தெரிந்த உங்களுக்கு அது புரிகிறது .........ஆனால் ............ :) 

மேலும் நான் எழுதி இந்த திரியை திசை திருப்பல. :D  :D
  • தொடங்கியவர்

கவி எழுதுபவர்களுக்கு மனதிலே தானாக ஒரு மெட்டும் சேர்ந்து உருவாகும். ஆனால் இசையமைப்பவருக்கு  வேறொரு மெட்டு உருவாகும். கவி எழுதுபவர் இப்படி இருக்கலாம் எனத் தன் கருத்தை வைக்கலாமே தவிர இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இசையமைம்பவருக்குக் கூறினால் இசை நன்றாக வராது. இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆனால் இருவரும் ஒத்திசைந்து இசையமைத்தால் இன்னும் நன்றாக வரும் என்பது என் கருத்து.

உண்மை அக்கா .............அவர்கள் போடும் மெட்டு என்னால் புரிந்து கொள்ள முடியும் .........ஆனால் அவை சுரங்களுக்குள்ளும்,தாளக்கட்டுக்குள் கொண்டுவருவதிலும் பாரிய பிரச்சனைகளை எதிர்கொள்ளணும் .............ஏனனில் அவர்கள் பெர்ம்பாலும் ஒரே மாதிரியான மெட்டையே முழு பாடல்களுக்கும் போடுவார்கள் .ஆனால் அதை நான் பகுதி பகுதியாக பிரித்து வேறுபட்ட மெட்டுக்களை போடும்போதே நான் கூறும் பிரச்சனைகள் எழும் .இசை தெரிந்த நீங்கள் நிச்சயம் இதை புரிந்து கொள்வீர்கள் ..........நன்றி அக்கா ......
 
[உங்களையும் இந்த இசைத்தட்டில் பாடவைக்க நினைத்திருக்கிறேன் அக்கா ]

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பி  தமிழ்சூரியன்

பொதுவாகவே இந்த  சிக்கல் வருவது தான்

இதை பாடலின்  அல்லது நோக்கத்தின் நன்மை   கருதி  இருவரும் கலந்த பேசி  ஒரு முடிவுக்கு வரணும்

என்னைப்பொறுத்தவரை

பாடலை  இயற்றியவருக்கு அது குழந்தை போன்றது

எனவே அதைச்சிதைப்பதற்கு எதிரானவன்

ஆனால் 100 வீதம் இதில் இரு பகுதியும் விடாப்பிடியாக  இராது

விட்டுக்கொடுத்து  நல்ல பாடல்கள் வர உதவணும்

அதுவே ரசிகர்களுக்கும்  நாட்டுக்கும் தேவை.

தொடர்க  தங்கள் பணி.

விசுகு சொன்ன கருத்தே.... எனதும், த‌மிழ்ச்சூரிய‌ன். :)

  • தொடங்கியவர்

தமிழ்சூரியன்

உங்கள் சங்கடம் எனக்கு மிகவும் நன்றாகப் புரிகிறது. உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் அமைத்த மெட்டை கம் பண்ணி MP3 இல் எனது ஈமெயிலுக்கு அனுப்பினால் நான் அதுக்கு எமக்காக உயிர் நீர்த்த மாவீரர்களுக்கான வரிகளை எழுது அனுப்புகிறேன்...

நீங்கள் விரும்பும் பட்சத்தில் தனிமடலில் தொடர்புகொள்ளவும் எனது ஈமெயிலை உங்களது தனிமடலுக்கு அனுப்பிவைக்கிறேன்.

நன்றிகள்

நிச்சயம் நண்பரே ..............உங்களைப்போன்றவர்கள் இப்படி நேரடியாக பங்களிக்கிறேன் என்று கூறும்போது இன்னும் இன்னும் உற்சாகம் எனக்கு பிறக்கிறது .............வெகு விரைவில் மெட்டை அனுப்புகிறேன் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்புங்கள் .

மீண்டும் நன்றிகள் .
  • கருத்துக்கள உறவுகள்

என் மதிப்புக்குரிய மாண்பு மிகு கவிஞர்களே .....வணக்கம் 
 
இங்குள்ள சில கவிகள் எனக்கு பாடல்களை வரிகளாக தந்துள்ளனர் ................ஆனால் இசையுடன் அந்தவரிகளை இணைக்கும்முயற்சியில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது .
 
ஆனால் சிலர் அதைப்பற்றி பேசினால் எரிந்து விழுகிறார்கள் .கவிதை இப்படித்தான் ,இப்படியே பாடுங்கள் என்கிறார்கள் .........அப்படி பாடினால் அதை நாட்டார் பாடல் போல தான் பாடமுடியும் .........
 
ஆனால் எப்படி ஒரு மெட்டை ஒரு பாடலுக்கு போடும் எனக்குள்ள அதே ஓர் உணர்வே அந்த கவிஞர்க்கும் இருக்கும் ,என்ற உணர்வை நான் மதிக்கும் படியினால் ........எனக்கு நான் சரியா ,அவர்கள சரியா என்று முடிவெடுக்க முடியவில்லை .
 
ஆகவே யாழ் களத்தில் இருக்கும் என் அன்புக்குரிய கவிகளிடம் இந்த கேள்விக்கான பதிலை விடுகிறேன் ..............உங்கள் பதில் எதிர்காலத்தில் பல பயனுள்ள படைப்புக்களை உருவாக்க பேருதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் .நன்றி ........
 
அன்புடன்..................

இதற்கே  பதில் எழுதினேன்  தமிழ்சூரியன்

நீங்கள் அடுத்த கட்டத்தை  எடுத்துவிட்டதாக இந்த முடிவில் தெரிகிறது

(அதாவது டட்டைத்தாறேன்  பாட்டுத்தாருங்கள் என்பது)

வளர்க

தொடர்க  தங்கள் பணி

நிச்சயம் நண்பரே ..............உங்களைப்போன்றவர்கள் இப்படி நேரடியாக பங்களிக்கிறேன் என்று கூறும்போது இன்னும் இன்னும் உற்சாகம் எனக்கு பிறக்கிறது .............வெகு விரைவில் மெட்டை அனுப்புகிறேன் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்புங்கள் .

மீண்டும் நன்றிகள் .

Edited by விசுகு

  • தொடங்கியவர்

இதற்கே  பதில் எழுதினேன்  தமிழ்சூரியன்

நீங்கள் அடுத்த கட்டத்தை  எடுத்துவிட்டதாக இந்த முடிவில் தெரிகிறது

(அதாவது டட்டைத்தாறேன்  பாட்டுத்தாருங்கள் என்பது)

வளர்க

தொடர்க  தங்கள் பணி

விசுகு அண்ணா வணக்கம் 

எனக்கு மெட்டுக்கு வரிகளை போட்டு பாடலை செய்வதை விட ,வரிகளுக்கு மெட்டை போட்டு பாடலை உருவாக்குவதே பிடிக்கும் .என்னில் வரிகளுடன் ஒன்றிக்கும் ஒரு மெட்டு உருவாகும் .
 
ஆனால் இளங்கவி அவர்கள் மெட்டை தாருங்கள் என்று என்னிடம் கேட்ட படியினால் இப்படி எழுதினேன் ..............தவறாக நினைக்க வேண்டாம் ...........நிச்சயமாய் நீங்கள் கூறியதுபோல ஓர் புரிந்துணர்வுடன் கலைப்பணியை நகர்த்தினால் மட்டுமே நாம் எம்மையும், எமது கலையையும் மேலும் வளர்க்கமுடியும் .இதை என் சிறிய அனுபவத்தில் கண்டவன் ,புரிந்துணர்வு இல்லாமலும், தலைக்கனத்திடனும் செயல்பட்ட பல கலைஞ்சர்கள் [திறமை மிக்கவர்கள் ] காணாமல் போனதும் வரலாறு. அதனாலேயே இந்த திரியை ஆரம்பித்தேன் ..உங்கள் யதார்த்தமான ,உண்மையான கருத்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா .

அதுதுதுதுதுதுதுது

என் தம்பி

தொடர்க  பயணம்

பொது நன்மைகருதி  எடுக்கப்படும்  முடிவுகள் எப்பொழுதுமே  வெற்றி  தரும்

  • தொடங்கியவர்

தமிழ்ச்சூரியனின் முயற்சி வெற்றிபெறட்டும்.

கவியெழுதுவோருக்கும் இசையமைப்போருக்குமிடையே ஒரு ஒத்திசைவான தன்மையொன்று இருக்குமாயின் பாடல் வெற்றிபெறுமென்பதே எனது கருத்தாகும். ஒருமுறை ஒருபாடலை ஒரு நிகழ்வுக்காக எனது நண்பரொருவர் இசையமைத்துப்பாடியபோது, கவிஞர்ர் பதினொராவது முறையே சரியென ஏற்றுகொண்ட சம்பவமொன்றை நேரிலே பார்த்துள்ளேன். எனவே படைப்பென்பது ஒரு கூட்டுமயற்சியென்பதை எழுதுவோரும் இசைப்போரும் புரிந்துணர்வோடு ஏற்றுக்கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்.

உங்கள் யதார்த்தமான ,உண்மையான கருத்துக்கு நன்றி அண்ணா .நிச்சயம் உங்கள் அறிவுரைகள் என்னை சரியான பாதையில் செல்ல கை கொடுக்கும் என்பது திண்ணம் .மீண்டும் நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும் பாடலுக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன.அனைத்துக் கவிதைகளையும் பாடலாக்க முடியாது.ஆனால் பாடல்கள் எல்லாம் கவிதைகளே.கவிதையைப் பாடலுக்காக சில மாற்றங்களைச் செய்யும் போது அதன் கருவும் அதன் அழகும் கெடாமல் மாற்ற வேண்டும்.ஒரு சொல்லால் அல்லது ஒரு வரியால் பாடலின் இசைப் போக்கில் முறிவு வருகின்றதெனில் வேறு சொற்களை அதன் கருத்து மாறாமல் போட்டு மாற்ற வேண்டும்.அதற்காகக் கடுந் தமிழைப் பாடலில் புகுத்தக் கூடாது ஏனெனில் பாடல் என்பது பாமரர் முதல் பண்டிதர் வரை ரசிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஆகவே வரிகள் எளிமையாகவும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் புழக்கத்தில் இருக்கும் சொற்களாகவும் இருப்பது விரும்பத் தக்கது.தமிழில் நல்ல புலமையுள்ளவர்களால் இந்த மாற்றங்களை எளிதாகச் செய்ய முடியும். தமிழ்சூரியன் அவர்களே உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு என்னால் பங்களிக்க முடியாமாயின் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞனுக்கும், இசை அமைப்பாளனுக்கும் இந்தச் சச்சரவுகள் அதிகம் த.சூ

எப்போது கவிஞன் காயப்படாமலும் இசைக்கும் இசைஞன் திணறாமலும் இசையமைப்பாளன் சோராமலும் ஒரு பாடல் வெளிப்படுகிறதோ அதுதான் அப்பாடலுக்கான வெற்றியை நிர்ணயிப்பது மட்டுமல்ல சாகாவரம் பெற்ற பாடலாகவும் அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

அச்சு யந்திரம் வர முன்னர் இலக்கியங்களை நினைவுபடுத்திப் பாதுகாக்கும் அவசியம் இருந்தது. இதனால் பாடல்கள் மட்டுமன்றிக் கவிதைகளும் பாடக்கூடியதாக எழுதப்பட்டு வந்தது. இன்று அந்தத் தேவையில்லை.

இப்போது பாடல் இசையின் இலக்கணத்துக்கு கட்டுப் பட்டது என்பது பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. இசையமைப்பாளரது இசை அல்லது  எழுதும் கவிஞனைக் கவர்ந்த தாளம் அல்லது மெட்டுக்களில்தான் இப்போ பெரும்பாலான பாடல்கள் எழுதப்படுகிறது. கவிஞன் தனக்குத் தெரிந்த ஏதாவது ஒரு தாளம்/மெட்டைப் பிடித்து எழுதும்போது இசையமைப்பாளரால் அதே பாடலை பல்வேறு மாறுபட்ட மெட்டுக்களில் பாடமுடியும்.  தாளக்கட்டுக்கு மெட்டுக்கு இடறும் சொற்களை இசைக்கேற்ப்ப மாற்றுவதற்க்கு கவிஞன் தயங்கத்  தேவையில்லை.

இனித் தமிழர் அடிமையென தலைபணிதல் இல்லை
இனித் தமிழர் கோழைகளின் வழிதொடர்தல் இல்லை
இனித் தமிழர் மானுடத்தின் விடுதலை என்றெழுந்தார்
இனித் தமிழர் உலகத்தின் விலங்குகளும் தகர்ப்பார்

சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

ஜாதி மத பேதமின்றி
செந்தமிழர் கூடி
நீதி நெறியோடு என்றும்
வெற்றி வாகை சூடி
பாங்கொலிக்கும் பள்ளி
பாடும் கோவில் மணிகள்
மங்களமாய் எங்களது
மண்ணில் வாழ்வு எழுக

சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

Edited by poet

நன்றி  தோழர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.