Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெறி கொண்ட மிருகக் கூட்டம் ஒன்றிடம் மாட்டி கொலையான தமிழ் மருத்துவ பட்டதாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தென் லண்டனில் மூன்று கார்களில், பெரும் தாக்குதல் திட்டத்துடன்  வந்த, இலங்கைத் தமிழ்க் கூட்டத்தினைக் கண்டு தப்பி ஓடிய இளைஞர் கூட்டத்தில், விரைவாக ஓடித் தப்ப முடியாத காரணத்தினால், அந்த வெறி கொண்ட மிருகங்கள் போல் நடந்து கொண்ட மனிதர்களின் ( Behaved like a pack of wild animals - London Evening Standard) கைகளில் இருந்த, பேஸ் பந்து மட்டை, கிரிக்கட் மட்டை, இரும்பு கம்பி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களினால் தலையில் தாக்கப் பட்டு, மூளை வெளி வந்து மரணித்த முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி தமிழ் மாணவரின் (Thierry Christian-Gnanakumar, 22) கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
 
கொலைக் குற்றம் சாட்டப் பட்டு நீதிமன்றில் நிறுத்தப் பட்டுள்ள 8 பேரில் இருவர் சிங்களவர்களாக பெயரில் தெரிகின்ற போதிலும் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் எனவே லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது.
 
கொலைக்  குற்றம் சாட்டினை மறுக்கும் அனைவரும், தமக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என மறுக்கின்றனர். மறுபுறத்தே பொலிசார் வீடியோ உட்பட்ட, பலமான ஆதாரங்களை சமர்ப்பிப்பார்கள்  என தெரிய வருகின்றது.
 
கிரிமினல் குற்றம் புரியும் வெளிநாட்டவர்கள் தண்டிக்கப் பட்ட பின்னும், குடியுரிமை பறிக்கப் பட்டு நாடு கடத்தப் படுவர் என புதிய சட்டங்கள் வந்த நிலையில், தமது வாழ்வையே பணயம் வைத்து இந்த குழுச் சண்டைகளில் ஈடு பாடு கொள்ளும் இளைஞர்கள் குறித்து புரிந்து கொள்ள முடியவில்லை. 
 
(Aathavan Rajakumar, 26, of Bromley; Kohulan Podiappuhamey, 24, of Lee; Pirunthan Kunaratnam, 23, and Rubesius Selveratnam, 21, of Catford; Jeyraruban Vivekananthan, 26, of Wednesbury; Kaviloan Venayakamoorthy, 23, of Lewisham; Jius James Vijasinghe, 28, of Blackheath; and Jeysuthan Theivendarampillai, 34, of New Malden)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு அரபுநாட்டுச் சட்டங்களே நல்ல தீர்ப்பாக இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

Kohulan Podiappuhamey, 24, of Lee  மற்றும்  Jius James Vijasinghe, 28, of Blackheath இந்த இருவரும் பெயர்களைப் பார்த்தால் சிங்களவர்கள்தான். இதில் சிங்களவனோ தமிழனோ குற்றம் புரிந்தால் கடுமையான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதே எனது கருத்து.  

  • கருத்துக்கள உறவுகள்

கொலைக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சண்டை வந்த காரணத்தை தெரியாது. ஆனால் கோட்டில் தீர்த்துக்கொள்ள தெரியாதவர்களுக்கு கோட்டில் எப்படி தீர்த்துக்கொள்வது என்று இந்தத் தடவை காட்டி வைத்தால் படித்துக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Thierry Christian-Gnanakumar, 22, was attacked outside Lewisham Library in south London on 10 November 2012.

The student at East London University was found injured in Lewisham High Street at around 9.20pm.

Mr Christian-Gnanakumar, who had been out celebrating a friend's birthday, died in hospital in the early hours of 11 November. A postmortem gave the cause of death as severe blunt force trauma to the head and face.

He lived with his family in Catford and was in his final year of studies in biomedical science.

Eight men were charged with murder: Kohulan Podiappuhamey, 24 [17/9/88] of Woodyates Road, Lee, south London, Jayruban Vivekananthan, 26 [9/09/86] of Nightingale Heights, Greenwich, Pirunthan Kunaratatnam, 23 [7/10/89], of Arkindale Road, Bellingham, Kaviloan Venayakamoorthy, 23 [17/3/89] of Eastdown Park, Lewisham, Jius James Vijashinghe, 27 [4/7/85] of Baizdon Road, Blackheath, London, and Aathavan Rajakumar, 24 (4/2/88), of no fixed address, Rubesius Selvaratnam, 21 [10/12/91], of St Fillans Road, Catford, and Jeyasuthan Theiventhrampillai, 33 [7/8/79] of Minstead Way, New Malden.

They went on trial at the Old Bailey on 23 July 2013. The prosecution case is that the victim and his friends were attacked by more than a dozen men armed with cricket bats, hockey sticks and metal poles.

Mr Christian-Gnanakumar was caught as he tried to escape and suffered severe injuries to his skull.

Prosecutor Aftab Jafferjee QC said the motive for the fatal attack was still unclear. He added: 'That there must have been some history between at least some of these men is obvious. What exactly it is, we may yet discover in the course of this trial.'

The trial continues.

 

http://www.murdermap.co.uk/pages/cases/case.asp?CID=42740917&Case=Lewisham-Murder:-Thierry-Christian-Gnanakumar

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாக.... ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனைக் கொன்றவர்களுக்கு, கடுமையான தண்டனை கொடுக்கப் படவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20 பேர் வந்து இருக்கின்றனர். நீதிமன்றில், வாழ்வைத் தொலைத்த நிலையில் நிற்பவர்கள் 8 பேர்.

 

மிகுதி 12 பேரும், அனேகமாக இந்த எட்டுப் பேரையும், 'வெட்டு மச்சான்', 'அடி மச்சான்', 'அவனை விடாத மச்சான்', 'போடுறா மண்டையில' போன்ற ஏத்துற வீர வசனங்களை சொல்லி ஏத்தி அவர்களை கொலையில் மாட்டி விட்டு இப்போ நல்ல பிள்ளைகளாக இருப்பார்கள் என்று நினைகின்றேன்.

 

இங்க வந்தது பிழைக்க என்பது மறந்து, அடிபட எண்டால் பேசாம அங்கே இருந்திருக்கலாமே. 

 

இந்த மாதிரி ஒரு மட்டைக் குழு ஒன்றின் உறுப்பினர் உடன் காதல் தொடர்பில் இருந்த இங்கே பிறந்து படித்து பட்டம் பெற்ற பெண்,  அந்த காதலர் பார்சலாக கொடுத்தது, என்ன வென்று தெரியாமல், அப்பாவித்தனமாக வீட்டில் தனது அறையில் வைத்திருக்க, பொலிசாரால் கைது செய்யப் பட்டு 2 வருடம் உள்ளே இருந்தார். (பார்சலில் £30,000 பணமும். க்ளோனிங் பண்ணிய பல காட்டுகளும்)

 

இதுக்குக் தான் சுஜ புத்தி வேணும், சொல் புத்தி கேட்காதே என்பார்கள்.

Edited by Nathamuni

பெண் பிரச்சனையாம். அந்தப் பெண்ணும் இருவருக்கும் 'டீல்' விட்டு ஒன்றைப் பிடித்திருக்கிறார்.

 அநியாயச் சாவு. இனி இந்த இருபது பேரின் எதிர்காலமும் அதோகதிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மூளை குறைந்ததுகள் வெளியில் இருப்பதைவிட உள்ளேயிருப்பது நல்லம்.. என்ன.. லண்டன்வாலாக்களின் வரிக்காசுதான் வீண்.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தகப்பன் எங்கேயிருந்து என்ன கஷ்டங்களை அனுபவிக்கின்றனரோ தெரியாது.

இதுகள் இங்கே கோஸ்டியாக அலையுதுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தம் ஒரு சாவும்.. 8 கொலைக்குற்றவாளிகளும்..12 உசுப்பேத்தல் ஆண்களும் என்று 21 ஆண்களின் வாழ்க்கையை ஒற்றைப் பெண் அழிந்துவிட்டு.. எந்தத் தண்டனையும் இல்லாமல்.. சுதந்திரமாக வாழ்கிறாள்..! ம்ம்ம்..! நல்ல உலகம்..! இதற்குப் பின்னும் பெட்டையள் பின்னாடி நாய் மாதிரி.. சுத்துறதுகளை என்ன சொல்லுறது..! :icon_idea::rolleyes::(


பெண் பிரச்சனையாம். அந்தப் பெண்ணும் இருவருக்கும் 'டீல்' விட்டு ஒன்றைப் பிடித்திருக்கிறார்.

 அநியாயச் சாவு. இனி இந்த இருபது பேரின் எதிர்காலமும் அதோகதிதான்.


எடுத்தற்கு எல்லாம் ஆணாதிக்கம் என்று குமுறி எழுபவர்கள்.. இப்படியான பெண்களைப் பற்றி எதுவுமே பேசுவதில்லை..! உதுகள் எந்த வகை ஆதிக்கமோ அவர்கள் அகராதியில்.. யார் அறிவார்..!

பிரித்தானியாவில் மரண தண்டனை கிடையாது...   குற்றம் நிரூபிக்க படும்பட்சத்தில்  தண்டனை முடிய இலங்கைக்கு நாடுகடத்த வேணும்... 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எடுத்தற்கு எல்லாம் ஆணாதிக்கம் என்று குமுறி எழுபவர்கள்.. இப்படியான பெண்களைப் பற்றி எதுவுமே பேசுவதில்லை..! உதுகள் எந்த வகை ஆதிக்கமோ அவர்கள் அகராதியில்.. யார் அறிவார்..!

 

ஆணாதிக்கம் எல்லாம் அங்க ஊரில,

 

இங்க எல்லாமே பெண்ணாதிக்கம் தான்.

 

காப்புறுதி நிறுவனம் ஒன்று பெண்களுக்கு மட்டும் என குறைந்த விலையில் கார் காப்புறுதிகளை வித்து வந்தது. கேட்டால் பெண்கள் கவனமான ஓட்டுனர்கள் என்றார்கள்.

 

பொறுக்க முடியாமல் ஒரு புண்ணியவான், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வரை போய், எல்லாத்துக்கும் சம உரிமை வேண்டும், இதில மட்டும் எப்படி எண்டு ஒரு கேஸ் போட, அது சரிதான் என்று ஜட்ஜ் அய்யா சொல்லிப் போட்டார். 

 

இப்ப அதில வேறு பாடு கிடையாது. இதே போல ஓய்வு பெறும் வயதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வந்து உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பிரச்சனையாம். அந்தப் பெண்ணும் இருவருக்கும் 'டீல்' விட்டு ஒன்றைப் பிடித்திருக்கிறார்.

 அநியாயச் சாவு. இனி இந்த இருபது பேரின் எதிர்காலமும் அதோகதிதான்.

ஒரு பெண் இருவருக்கு டீல் விட்டிருக்கின்றார்.... இவர்கள் கொலை வரை சென்றிருக்கின்றார்கள்

அப்படிப்பார்த்தால் எத்தனை ஆண்கள் கொலை செய்யப்படவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப் பின்னும் பெட்டையள் பின்னாடி நாய் மாதிரி.. சுத்துறதுகளை என்ன சொல்லுறது..! :icon_idea::rolleyes::(

 

கண்ட இடத்திலேயே பிடித்து வைத்துக்  குறி சுட்டு நாடு கடத்த வேண்டும் :D

கண்ட இடத்திலேயே பிடித்து வைத்துக்  குறி சுட்டு நாடு கடத்த வேண்டும் :D

 

என்னத்துக்கு குறி..???  நலம் அடிச்சு விடலாம்...  இப்ப எல்லாம் வலியே இல்லாமல் செய்கிறார்களாம்... :D

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்துக்கு குறி..???  நலம் அடிச்சு விடலாம்...  இப்ப எல்லாம் வலியே இல்லாமல் செய்கிறார்களாம்... :D

 

ஏதோ  தெரியல

எனக்கு வலிக்குது   கீழே.............. :(

மிகவும் துக்கமான  செய்தி :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.