Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் வெற்றியை ஈட்ட மக்களிடம் நிதியுதவி கோருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வெற்றியை ஈட்ட மக்களிடம் நிதியுதவி கோருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 12:14 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]

 

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பலநூறு கோடிகளைக் கொட்டியும், அரச, இராணுவ இயந்திரங்களைப் பயன்படுத்தியும், சில ஆசனங்களையாவது வென்றுவிட முனையும், இலங்கை அரசாங்கத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு நிதியுதவி வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளினதும் தலைவர்களான இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

மிக நீண்டகாலமாக இழுபறியில் இருந்த வடக்கு மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

மாகாணசபைக்கு உரித்தான அதிகாரங்களை தன்னகத்தே கொண்ட 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அந்த அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றது.

இதில் குறிப்பாக இந்த 13ஆவது திருத்தச்சட்டத்தில் இருக்கக்கூடிய அரைகுறை அதிகாரங்களான பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் காணி அதிகாரங்கள் போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது என்ற பலத்த கூச்சல்கள் சிங்கள பௌத்த தீவிரவாத தரப்பிடமிருந்து முன்வைக்கப்படுகிறது.

அத்துடன் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாகாணசபைகள் இணையமுடியாது என்ற ஒரு சட்டமூலத்தையும், பெரும்பான்மை மாகாணசபைகள் அங்கீகரித்தால் மாகாணசபைகளுக்குரித்தான அதிகாரங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கம் சட்டங்களை இயற்றலாம் என்ற சட்டமூலத்தையும் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் இவையெல்லாம் இந்திய அரசின் அழுத்தங்களின் காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.

இதனைவிட, மாகாண அதிகாரங்கள் தொடர்பாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் இருப்பதுடன் இந்த அதிகாரங்கள் போதாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது.

மேலும், ஒற்றையாட்சிக்குள் சரியான அதிகாரப்பகிர்வுகள் முழுமையாக நடைபெறமுடியாது என்றே நாம் கருதுகின்றோம்.

ஆனாலும்கூட, இந்த மாகாணசபையில் போட்டியிட்டு இந்த மாகாணசபையைக் கைப்பற்றுவதனூடாக சில முக்கிய விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் செய்ய முடியும் என்று நாம் நம்புகின்றோம்.

1. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு, புனர் நிர்மாண வேலைகள் என்பவை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.

2. எமது முக்கியமான வாழ்வாதாரங்களாக இருக்கின்ற விவசாயம், மீன்பிடி போன்றவை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. இவற்றை சீர்செய்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டிய பணியும் எமக்கு இருக்கின்றது.

3. இருக்கக்கூடிய அதிகாரங்களைக் கொண்டு இயலக்கூடிய சேவையை மக்களுக்குச் செய்வதனூடாக மக்களைத் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வைத்திருக்க வேண்டிய சூழலை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.

மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு வடிவமாகவும் இது அமைகின்றது.

இதனைவிட, அரசியல்ரீதியாக எமது போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கான ஒரு பொறுப்பும் கடமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்றது.

அதனை மாகாணசபையினூடு நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

எமது முதலமைச்சரும் அமையப் போகின்ற மாகாண அமைச்சரவையும் அதனுடன் இருக்கக்கூடிய மாகாணசபை உறுப்பினர்களும் ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சித்தலைமையும் இணைந்து இதனை முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றோம்.

இந்தநிலையில், வரக்கூடிய மாகாணசபைத் தேர்தலில் மிக அதிகபட்ச ஆசனங்களுடன் நாங்கள் வெல்வதனூடு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் என்பவை இன்னும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தப்படும்.

இலங்கை தொடர்பான அரசியல் கொள்கைகளில் சர்வதேச சமூகம் மாற்றங்களை மேற்கொள்வதற்கு இது அவசியமென்று நாங்கள் கருதுகின்றோம்.

ஆகவே அவ்வாறான ஒரு பாரிய வெற்றியினை நாங்கள் ஈட்டுவதற்கு உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் எங்களுக்குத் தேவை என்பதை மிக அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் பலநூறு கோடிகளை செலவு செய்து சில ஆசனங்களையாவது கைப்பற்ற வேண்டும் என முயற்சிக்கின்றது.

இராணுவம் உட்பட அரச இயந்திரம் முழுமையாக இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

நீதியான நியாயமான தேர்தல் ஒன்று நடக்குமா என்ற கேள்வி உருவாகி வருகின்றது.

இவ்வாறான ஒரு சூழலில் இவை எல்லாவற்றையும் கடந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பாரிய வெற்றியை அடைய வேண்டும் என்பது மிகமிக முக்கியமான ஓர் அரசியல் தேவைப்பாடாகும்.

இதற்கு எங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை உங்களிடமிருந்தே எதிர்பார்க்கின்றோம்.

உங்கள் உதவிகள் கூட்டமைப்பின் வெற்றிக்கு மாத்திரமல்ல ஒரு முழுமையான தீர்வினை எட்டுவதற்கான முதலாவது படிக்கட்டைத் தாண்டுவதற்கு உங்கள் உதவி நிச்சயமாக மிகவும் மாபெரும் உதவியாக இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு நிதிக்குழுவை நாம் நியமித்துள்ளோம்.

கூட்டமைப்பின் ஐந்து அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அதில் அங்கம் வகிக்கின்றனர்.

எமது வங்கிக்கணக்கு எண், மேலதிக விபரங்கள் தொடர்பாக நிதிக்குழு விரைவில் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கின்றோம். என்று கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20130727108749

முதலில் ஒன்றுபட்ட சிறிலங்காவிற்குள் தீர்வு என்றால் என்ன என்று விளக்கவும். உங்கள் தேர்தல் அறிக்கை எங்கே? தாயகம் சுயாட்ச்சி தன்னுரிமை சுயனிர்ணயம் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று சொல்லவும்.

முதலில் ஒன்றுபட்ட சிறிலங்காவிற்குள் தீர்வு என்றால் என்ன என்று விளக்கவும். உங்கள் தேர்தல் அறிக்கை எங்கே? தாயகம் சுயாட்ச்சி தன்னுரிமை சுயனிர்ணயம் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று சொல்லவும்.

 

 

ஒண்டு பட்ட் இலங்கைக்குள் தமிழ் தேசியம் என்ன செய்யுது எண்டதையும் ஒருக்கா விளங்கப்படுத்த வேணும்... 

 

தவிர கூட்டமைப்பை ஏன் ஒரு அரசியல் கட்ச்சியாக பதிய கூடாது எண்டதையும் சொல்லாம்...  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.....

இவ்வுரையைக் கேட்ட அவதானி ஒருவர் அபிப்பிராயம் தெரிவித்தபோது.... மாகாண சபை அரசியலில் பொசிற்றிவ் அணுகுமுறை என்பது வேறொரு வடிவத்தில் இணக்க அரசியலா? என்று கேட்டார். உண்மையில் மென் தமிழ்த் தேசியத்தின் ஓர் அந்தத்தில் அதுதான் காணப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்ப்பு அரசியலின் கூர் குறைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது இணக்க அரசியலுக்குக் கிட்ட வருகிறது. இப்பொதுள்ள பிரச்சினையெல்லாம் அரை எதிர்ப்பு அரசியலுக்கும், அரை இணக்க அரசியலுக்கும் இடையில் எங்கே ஒரு சமநிலையைக் கண்டுபிடிப்பது என்பதுதான். ஆனால், அது மிகக் கஷ்டம். ஏனெனில், இலங்கைத் தீவின் இப்பொழுதுள்ள அரசியற் சூழலைப் பொறுத்த வரை எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும் ஒரே இடத்தில் இருக்க முடியாது என்பதுதான்.

.....

..............

தமிழ் மென்தேசிய அரசியலை, அரை நல்லிணக்க அரசியலாக அல்லது இயன்றயளவுக்கு நல்லிணக்க அரசியலாக மாற்றக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவதா இல்லையா என்பது அரசாங்கத்தின் முடிவுகளிற்தான் தங்கியிருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இலங்கைத் தீவில் தமிழ் எதிர்ப்பரசியலை ஆகக்கூடிய பட்சம் கையாளப்படத்தக்க ஒரு எல்லைக்குள்ளேயே வைத்திருக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் இது. தமிழ் மென்தேசியவாதிகளின் இந்த அழைப்பை அரசாங்கம் புறக்கணிக்குமாயிருந்தால் அதாவது சிங்கள கடுந்தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவது என்று அரசாங்கம் முடிவெடுக்குமாயிருந்தால் தமிழ் மென்தேசியவாதிகளைத் தோற்கடிப்பது ஒரு பெரிய காரியம் அல்ல.ஆனால் அது தமிழ் எதிர்ப்பரசியலின் நியாயங்களை முன்னெப்பொழுதையும் விட பலப்படுத்தும் ஒரு முடிவாக அமையும்.

நந்திக் கடலில் புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த ஒரு அரசாங்கம் மென்தேசியவாதிகளைச் சுலபமாகத் தோற்கடித்துவிடும். ஆனால், அந்த வெற்றி ஒரு நிரந்தரமான வெற்றியாக அமையாது. அது சிலசமயம் வெற்றி போலத்தோன்றும் ஒரு தோல்வியின் தொடக்கமாகக் காலப்போக்கில் மாறக்கூடும். அதாவது தமிழ் எதிர்ப்பரசியலின் எதிர்காலம் எனப்படுவது அரசாங்கத்தின் விவேகமற்ற முடிவுகளின் மீதே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126296&hl=

நந்திக் கடலில் புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த ஒரு அரசாங்கம் மென்தேசியவாதிகளைச் சுலபமாகத் தோற்கடித்துவிடும். ஆனால், அந்த வெற்றி ஒரு நிரந்தரமான வெற்றியாக அமையாது. அது சிலசமயம் வெற்றி போலத்தோன்றும் ஒரு தோல்வியின் தொடக்கமாகக் காலப்போக்கில் மாறக்கூடும். அதாவது தமிழ் எதிர்ப்பரசியலின் எதிர்காலம் எனப்படுவது அரசாங்கத்தின் விவேகமற்ற முடிவுகளின் மீதே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்

மெந்தேசிய வாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்க அரசியலுக்கு பொருத்தமான சொல் கிடையாது...

அப்படி இணக்க அரசியல் தான் என்பது முடிவெடுக்கும் பட்சத்தில் தமிழ் மக்களுக்கு தெளிவு படுத்த பட்டு, தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு தேவையானவைகள செய்ய முயண்று இருக்க வேண்டும்... அதற்கான அமைப்புக்களை கூட்டமையே தோற்றுவித்து இருக்க முடியும்..

வெளிநாட்டி இருப்பவர்கள் தாயகத்தில் அபிவிருத்திகளையும் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய முடியும் எண்றால் ஒரு அமைப்பாக தமிழ் தேசியம் பேசி மென் தேசிய வாதிகளால் முடியாதா என்ன...??

பாதிக்கபட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டமாகட்டும் , மற்றய நாட்டு உதவிகளாகட்டும் பெரும்பகுதி தென்பகுதிகளில் பயன் படுத்த பட்டு சிறு தொகுதி வடக்கில் செலவிடப்பட்டு கணக்கு காட்டப்படுகிறது.. இதை மாற்ற முடியாதா...??

மக்களுக்கு உடனடியாக தேவையானது அவர்களின் சொந்த கால்களில் நிக்க தேவையான பொருளாதார ஆதாரம்... மாகான சபையோ, தெரிவுக்குழுவோ, அரசியல் தீர்வோ இல்லை... பகுத்தறிவுள்ள எல்லாருக்கும் புரிந்த விடயம் இது...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மறுவாழ்வுஎன்ற அமைப்பை தாயகத்தில் பதிவு செய்துள்ளது .இதே போல் கனடா தமிழ்தேசிய கூட்டமைப்பு மறுவாழ்வு அமைப்பை பதிவு செய்து சில திட்டங்களை தாயகத்தில் செய்துள்ளது .முல்லைத்தீவு ,திருகோணமலை போன்ற இடங்களில் எல்லைக்கிராமங்களில்மீள் குடியேறிய மக்களுக்கு(கைம்பெண்களுக்கு ) சுயதொழில் முயற்சிகளை செய்து கொடுத்துள்ளது .மட்டக்களப்பிலும் யோகேஸ்வரன் MP முலமாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .
 
ஆர்வமுள்ளவர்கள் இணைந்து செயற்பட முன்வந்தால் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தி தரமுடியும் 

Edited by Gari

பேருக்கு ஒரு கட்டமைப்பு இருந்து யாருக்கு என்ன பயன் ...??? உலகம் எல்லாம் இருந்து காசை கொண்டு வந்து வடக்கு கிழக்குக்கு கொட்டிய போது வாங்கி கொடுக்க முன்வராதவர்கள், முகாம்களில் அடைச்சு வைத்து இருந்த மக்கள் பார்க்க போகாதவர்களின் மீது நம்பிக்கை வைச்சு வெளிநாட்டிலை இருக்கிறவை சில்லைறையை நம்பி குடுக்க ஒரு அமைப்பு...

ஆக வெளிநாட்டு தமிழர் காசிலை மட்டும் கண்...! இதே வேலையை KP யரும் தான் செய்வதாக சொல்கிறார்...

முதலில் ஒன்றுபட்ட சிறிலங்காவிற்குள் தீர்வு என்றால் என்ன என்று விளக்கவும். உங்கள் தேர்தல் அறிக்கை எங்கே? தாயகம் சுயாட்ச்சி தன்னுரிமை சுயனிர்ணயம் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று சொல்லவும்.

6ம் திருத்தத்தை மீறாமல் பராளுமன்றத்தில் அங்கத்துவத்தை வைத்துக்கொண்டு பெறத்தக்க உரிமைகள். (உண்மையில் அப்படி ஏதாவது பெற முடியுமாயின். :rolleyes: ). அந்த விடையத்தில் யார் எப்படி திமிறினாலும் அது அரசு கொடுப்பதாக மட்டும்தான் இருக்க போகிறது. அரசு கொடுப்பதிலும் பார்க்க, இணக்க அரசியலில், பறிக்க போவது மட்டும் தான் யதார்த்தமாக நடக்க போகிறது. எனவே சரியான பதில், கூட்டமைப்பு எது எது பறி போகாமல் பாதுக்காக முயல்கிறது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

 

6ம் திருத்தத்தை மீறுவதாயின் அது ஆயுத போராட்டம் ஒன்றால்த்தான் முடியும். பிரிவினை என்று விளங்கப்படுத்தக்க  எதையும் வைத்து 6ம் திருத்ததின் கீழ் ஒருவரின் பதவி பறிக்கப்படலாம். அந்த நிலையில் தேர்தலில் மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீண் அடிக்க கூடாது. 

 

இதை விளங்கி, தாயகத்தில் இருப்பவர்களை நிர்ப்பந்திக்காத அரசியல் முன்னெடுப்புகள் தான் புலத்திலிருந்து சுய நிர்ணய உரிமையை நோக்கி நகரவைக்கும். தாயக நிலைமையை அறியாமல் கந்தையை இழுத்து முட்ட போர்த்து கந்தயும் இல்லாமல் போக கூடாது.

 

பராளுமன்றத்தில் இணக்க அரசியல் மூலம் சுய நிர்ணய உரிமையை பெறலாம் என்பது எந்த கரை சிந்தனை ஆக முடியும்? இந்த தேர்தலை, தொடர்ந்து பறித்துகொண்டிருக்கும் உரிமைகளில் ஒன்றாக, 13ம் திருத்ததை பறிக்காமல் பாதுகாக்க பாவிக்கட்டும். அதன் பின்னர் கிடைக்கும் மாகாண சபை உரிமைகளை வைத்து அமெரிக்கன் சென்றர் கட்ட அனுமதி கொடுக்கட்டும். :lol:  அது தான் ஆரம்பமாக கொள்ளலாம்.

 

கூட்டமைப்பு அரசுடன் பேசுவத்தால் ஏதாவது எடுக்க முடியுமா என்று கேள்வி கேட்டால் பதில்கள் நிச்சயமாக கேட்பவருக்கு தெரியும் என்பதுதான் பொருள். எனவே அரசுக்கு வெளியே தீர்வை பெற புலம் பெயர் மக்கள்தான் உழைக்க வேண்டும். கூட்டமைப்பு அல்ல. கூட்டமைப்பினால் பூனைக்கு மணி கட்ட முடியாது என்ற யதார்த்தை புலம் பெயர் தேசத்தவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

பேருக்கு ஒரு கட்டமைப்பு இருந்து யாருக்கு என்ன பயன் ...??? உலகம் எல்லாம் இருந்து காசை கொண்டு வந்து வடக்கு கிழக்குக்கு கொட்டிய போது வாங்கி கொடுக்க முன்வராதவர்கள், முகாம்களில் அடைச்சு வைத்து இருந்த மக்கள் பார்க்க போகாதவர்களின் மீது நம்பிக்கை வைச்சு வெளிநாட்டிலை இருக்கிறவை சில்லைறையை நம்பி குடுக்க ஒரு அமைப்பு...

ஆக வெளிநாட்டு தமிழர் காசிலை மட்டும் கண்...! இதே வேலையை KP யரும் தான் செய்வதாக சொல்கிறார்...

காசை புலம் பெயர் தேசத்தவர் கூட்டமைப்புக்கு கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை அல்ல. ஆனால் கூட்டமைப்பு புலத்தில் எதை செய்ய முடியும் என்பதை விளங்கிக்கொண்டிருப்பது புலம் பெயர் தேசத்தவர்களுக்கு மிக மிக முக்கியம். தாயக மக்களுக்கு, அவர்களின் வீச்சங்களுக்கு கேற்ற ராஜாதந்திர பாதைக்களுக்கு கை கொடுத்து தமது வீச்சத்தை உணர்ந்து தாம் தமது ராஜதந்திர பாதைகளை அமைத்துகொள்ள இந்த விளக்கம் புலம் பெயர் தேச மக்களுக்கு அடிப்படை ஆகும். 

இந்த விளக்கமொன்றால் தான் இலங்கை அரசு தீர்வு ஒன்றை தயக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்படும். ஆனால் கூட்டமைப்பு அரசுடன் பேசி தீர்வு வாங்கி தர வடமாகண தேர்தலில் இறங்கி இருக்கிறது என்ற மாயையை உருவாக்கும் விவாதங்கள், புலம்பெயர் மக்கள் தங்கள் பொறுப்புக்களை தட்டிக்கழித்து, தாய மக்களை எங்கோ செலுத்தி ஏமாற்றும் செயல். மாகாண சபை தேர்தலில் நிற்பத்தால் எந்தத்தீர்வையும், எந்தக்கட்சியும் எந்தக்காலமும் பெற்று தெர முடியாது. 

 

எனவே மாகாண சபை தேர்தலில் பிரதாணமாக என்ன விவாதிக்கபட வேண்டும் என்பது பொருந்தமான தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட வேண்டும். தீர்வு என்பது 365 நாட்களும் தமிழ்ர் முன்னால் இருக்க வேண்டிய விவாதம். அதை மாகாண சபை தேர்தலுக்க மட்டும் உசுபேத்து தூசி தட்டப்பார்க்க கூடாது. அது மாகாண சபை தேர்தல் நேரம் குழப்பத்தைத்தான் விளைவிக்கும். 

 

இணக்க அரசியலுக்கும், அகிம்சை போருக்கும், ராஜதந்திர போருக்கும் தத்துவார்த்த வித்தியாசங்கள் இருக்கு. அதாவது பொன்னம்பலம் காலம், செல்வநாயகம் காலம், சம்பந்தர் காலம் என்று இது மூன்று காலங்களால் இலங்கை அரசியலில் பிரிக்கப்படுகிறது. 

காசை புலம் பெயர் தேசத்தவர் கூட்டமைப்புக்கு கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை அல்ல. ஆனால் கூட்டமைப்பு புலத்தில் எதை செய்ய முடியும் என்பதை விளங்கிக்கொண்டிருப்பது புலம் பெயர் தேசத்தவர்களுக்கு மிக மிக முக்கியம். தாயக மக்களுக்கு, அவர்களின் வீச்சங்களுக்கு கேற்ற ராஜாதந்திர பாதைக்களுக்கு கை கொடுத்து தமது வீச்சத்தை உணர்ந்து தாம் தமது ராஜதந்திர பாதைகளை அமைத்துகொள்ள இந்த விளக்கம் புலம் பெயர் தேச மக்களுக்கு அடிப்படை ஆகும். 

 

இது ஒரு இணைப்பு

 

http://www.tnainfo.com/?p=1864

 

சுரேஸ் பிரேமச்சந்திரனால் பேசப்பட்ட ஒரு பேச்சு...  கூட்டமைப்பின் இணையத்தில் வெளியிடப்பட்டது... 

 

தாயக மக்களுக்கு பிரச்சினை என்ன என்பதை உணரத்தக்கவர்கள் கூட்டமைப்பில் இருக்கிறார்கள் என்பதை தவிர மகிழ்ச்சி அடைய வேறை ஏதும் இல்லை... 

 

உதாரணத்துக்கு சுனாமி தாக்கத்துக்கு பிறகு  நோர்வே வெளியுறவு அமைச்சரை வன்னிக்கு அழைத்த புலிகள் அவருடன் பேசியது தீர்வை பற்றி அல்ல...  !   உடனடியாக  விடுதலை போரை நாங்கள் ஒத்திவைக்கின்றோம் அப்படி ஒரு அவலம் எங்களுக்கு நிகழ்ந்து இருக்கின்றது  எண்று அன்ரன் பால சிங்கம் அவர்களூடாக பேட்டியும் குடுக்கிறார்கள்...   சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களை போல நான்கு மடங்கு அதிகமான மக்கள் இறுதி போரில் பாதிக்கப்பட்டார்கள்... 

 

நம்பிக்கைக்கு உரிய கூட்டமைப்பு கடந்த நான்கு வருடமாக என்ன செய்து கொண்டு இருந்தது... ??? 

 

தகவல் இணைப்பு

http://www.yarl.com/forum/lofiversion/index.php/t3153.html

Edited by தயா

விபரங்களுக்கு நன்றி. 

 

நான் சொல்ல வருவது நமது கடமையை பற்றி. 

 

கூட்டமைப்பு தனது கடமைகளை உணர்ந்து கொள்வது தவிர்க்க முடியாது.  கூட்டமைப்பு சுனாமி நேரமும் எதுவும் செய்ய வில்லை. போரின் பின்னரும் என்ன செய்திருக்க முடியும் என்பதும் எனக்கு தெரியாது.

 

புலிகள் விட்ட தவறுகளில் ஒன்று சுனாமி என்ற ஏமாற்றுடன் நோர்வே என்ற நரிகளை அங்கே விட்டது. அவர்கள் அதை உணர்ந்திருந்தார்களா அந்த நேரம் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இன்று அவர்கள் விட்டது தவறு போல எனக்கு படுகிறது.  இது ரணில் என்ற நரியை யாழ்ப்பாணம் வரவிட்டு சம்பந்தர் சிங்க கொடி காட்டியது போன்ற ஒரு அரசியல் தவறு. அல்லது அதையும் விடப்பெரியது.

 

நோர்வே அங்கு போன பின் காட்டிக்கொடுத்தது மட்டும் இன்றி அவர்கள் ஆலோசனை வழங்கி வந்த பிளேக், JVP யுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு வந்த உதவிகளை தடுத்து நிறுத்தினார். நோர்வே ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்த புலிகள் இடம் கொடுத்தார்கள்.   போன அரசியல் பிழைகளை அசை போடுவத்தால் மட்டும் வருவதை தடுக்கலாம் என்ற மாயைக்குள் விழக்கூடாது.அப்படியாயின் மனிதன் இன்று ராகெட் சயன்ஸ் வரைக்கும் போயிருக்க மாட்டன். புதிதாகவும் create பண்ணவும் வேண்டும்.

 

கூட்டமைப்பு மீதான குற்றச்சாட்டுதல்கள் பல கோணங்களில் வருகிறது. மாவை, சம்பந்தர், தமிழரசுக்கட்சி, கூட்டமைப்பு என்று விரிகிறது. இதில் சுரேசின் பேச்சை மிகை படுத்தி விவாதிப்பதால் கூட்டமைப்பு மீது வரும் குற்றச்சாட்டுதல்களுக்கு திருப்திகரமான பதில் அளிக்க முடியாது. ஆயுத போராளிகள் எடுத்த போன்ற முடிவுகளை கூட்டமைப்பு எடுக்க முடியாது.  அவர்கள் தமது பலத்திற்கு ஆய்தங்களை நமபி இருந்தவர்கள். கூட்டமைபுக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் அஸ்ட்ட திட்டங்களை விளங்க வேண்டும்.  வடக்குக்கு உணவு, மருந்து மறுக்கப்ட்ட போது புலிகளால் அதை கடத்தி வரும் தகமை கூட இழக்கப்படுவிட்டது.

 

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரங்களை மறுக்கிறது. நெடுஞ்சாலைகளை போட்டுவிட்டு இது புலிகளால் குண்டு வைத்து தாக்கபட்டது; நாம் திருத்தியிருக்கிறோம் என்று பணம் கொடுக்கும் வெளிநாடுகளை ஏய்கிறது. இதற்கு மாகாணசபையை எவ்வளவுக்கு கூட்டமைப்பால் பாவிக்க முடியும் என்பதை நான் எதிர்வு கூற முடியாது. கூட்டமைப்பு உள்ளுராட்சி தேர்தலில் வென்றவுடன் பசில் விட்ட சவால் "இந்த தேர்தலில் வென்று உவர்களால் என்னதான் செய்ய முடியும். கூடிய பட்சம் தெருவிளக்குகளில் மின் குமிழ்களை மாற்றுவார்களாக்கும்" என்பது. கூட்டமைப்புக்கு மட்டு மல்ல நமக்கும் விளங்கிக்கொள்ள நிறைய இருக்கிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பு எதுவும் செய்ய முடியாத நிலை. அவர்களிடம் பணம் இல்லை. அரசும்  வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு ஒதுக்கும் பணமும் குறைவு. சென்ற தேர்தலில் அரசும் டக்ளசும் வறுமையில் வாழும் மக்களுக்கு சாறியும் , சாராயமும் கொடுத்து வாக்குகளை பெற்றார்கள். 
 
கூட்டமைப்பின் செயற்பாடுகள் சுயமானவை போல் தெரியவில்லை. யாரோ பின்னால் இருந்து இயக்குவது போன்ற பிரமை உள்ளது.
 
கூட்டமிப்புக்குள் இருக்கும் பல கட்சிகளின் கூட்டால் உறுப்பினர்களை  தேர்த்தலுக்கு தெரிவதில் குரங்கு அப்பத்தை பிரித்த கதையாக உள்ளது. சித்தார்த்தனுக்கு ஆசனங்கள், சங்கரியருக்கு ஆசனங்கள்.தேர்த்தல் முடிய இவர்கள் வாலைக் கிளப்புவார்கள் என்பது மட்டும் உண்மை. இல்லையேல் கட்சிக்குள் இருந்து தீர்மானங்களை நிறைவேற்ற தடைக்கற்களை போடுவார்கள். ஒற்றுமை என  இவர்களை சேர்த்து ஒன்றும் செய்ய விடாமல் இருப்பவர்களால் என்ன பலன் என சம்பந்தர் சிந்திப்பாரா??
 
விக்கினேஸ்வரன் படித்தவர், உயர் பதவி வகித்தவராக இருக்கலாம். ஆனால் அரசியலில் எந்தளவுக்கு அனுபவமுள்ளவர் ? கட்சியில்  இருந்து ஒரு தெரிவை செய்யாமல் இவரை வெளியில் இருந்து திடுதிப்பென உள்வாங்குவது  வெளிச்சக்திகளின் அழுத்தம் போல உள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசியல் நிகழ்ச்சி நிரல் படி செயற்படும், கூட்டமைப்புக்கு... இந்தியா பணம் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தை எல்லாம் சம்மந்தனும் சுமந்திரன் கும்பலும் பதுக்கினால் என்ன செய்றதாம்?

அது ஏன் இந்திய அதிகாரிகளை சந்திக்க கூடதலா இவை ரெண்டு பேரும் மட்டும் போறவை

 

விக்கினேஸ்வரன் படித்தவர், உயர் பதவி வகித்தவராக இருக்கலாம். ஆனால் அரசியலில் எந்தளவுக்கு அனுபவமுள்ளவர் ? கட்சியில்  இருந்து ஒரு தெரிவை செய்யாமல் இவரை வெளியில் இருந்து திடுதிப்பென உள்வாங்குவது  வெளிச்சக்திகளின் அழுத்தம் போல உள்ளது.

இது ராஜதந்திர போர். இணக்க அரசியல், பேரம் பேசல் போன்றவற்றில் இறங்கும் போது அவரின் political manuring abilities பிரயோசனப்படலாம். இதில் பிரதான பங்கு, பலருக்கும் நியாயத்தை எடுத்து விளங்க வைப்பதாகவே இருக்கும்.

 

தேர்தல் மாகாண சபைக்கு மட்டுமே. அதிலும் அரசால் ஒதுக்கபட்ட மாகாணம். இதில் வரும் வரும் என்று எதிர்பார்ப்பை வைப்பது தவறு. பிரச்சார ஆயுதமாக பாவிக்க வேண்டும். இது வரை பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் புதிய கட்டுமானங்கள் பார்க்க வடக்குக்கு  சுற்றுலா போய் சந்திர சிறியரும், கத்துறு சிங்காவையும் தரிசித்தார்கள். இனி உணமையை வெளிக்கொண்டுவரலாம்.

Edited by மல்லையூரான்

விபரங்களுக்கு நன்றி. 

 

நான் சொல்ல வருவது நமது கடமையை பற்றி. 

 

கூட்டமைப்பு தனது கடமைகளை உணர்ந்து கொள்வது தவிர்க்க முடியாது.  கூட்டமைப்பு சுனாமி நேரமும் எதுவும் செய்ய வில்லை. போரின் பின்னரும் என்ன செய்திருக்க முடியும் என்பதும் எனக்கு தெரியாது.கூ

 

கூட்டமைப்புக்கு ஏதும் செய்ய முடிந்திருக்காது என்பதை விட முயற்சி செய்த கூட்டமைப்பு தோற்று போனது என்பது கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையை கட்டி எழுப்ப போதுமானதாக இருந்து இருக்கும்...

 

புலிகளால் தமிழ் மக்களுக்கான சுனாமி நிவாரணத்தை முழுமையாக  கொண்டுவர முடியவில்லை...  ஆனாலும் முயற்சி செய்தார்கள்...   கூட்டமைப்பு எந்த முயற்சியையும் செய்யவில்லை...    

 

மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்தல் என்பது தான் தாயகத்தில் தேவையானவை...    புலம்பெயர்ந்தவை  தங்களை விமர்சிக்காமல் சும்மா இருக்க வேண்டும் எண்று சொல்லும்  கூட்டமைப்பு  இதை செய்யுமாக இருந்தால் புலம்பெயர்தவர்கள் தோள்களில் இருக்கும் சுமை தானாக இறங்கிக்கொள்ளும்...  

 

புலிகளால் 2000ம் ஆண்டு கைஎழுத்திட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை கூட புணர்நிர்மாணம், மீள்கட்டமைப்பு , குடியேற்றம் பற்றியே பேசியது...  ! 

 

பிரித்தானியாவில் வட அயர்லாந்தின் பாராளமண்ற உறுப்பினரை சந்தித்து பல மணிநேரங்கள் பேசிய  சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினை பற்றி ஏதும் பேசவில்லை....   கொஞ்ச சைக்கிள்கள் மட்டுமே கேட்டதாக அந்த உறுப்பினர் பிரித்தானிய பாராளுமண்றில் உரையாற்றுகிறார்...   அதாவது தமிழ் மக்களுக்கு அங்கு எந்தப்பிரச்சினைகளும் கிடையாது அதை சம்பந்தன் உறுதி செய்தார் எண்று...  

 

 

 

http://www.youtube.com/watch?v=nfW7da2dq1I

 

பிரித்தானியாவில் வட அயர்லாந்தின் பாராளமண்ற உறுப்பினரை சந்தித்து பல மணிநேரங்கள் பேசிய  சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினை பற்றி ஏதும் பேசவில்லை....   கொஞ்ச சைக்கிள்கள் மட்டுமே கேட்டதாக அந்த உறுப்பினர் பிரித்தானிய பாராளுமண்றில் உரையாற்றுகிறார்...   அதாவது தமிழ் மக்களுக்கு அங்கு எந்தப்பிரச்சினைகளும் கிடையாது அதை சம்பந்தன் உறுதி செய்தார் எண்று...  

 

http://www.youtube.com/watch?v=nfW7da2dq1I

அவரை விடுங்கோ. அவர் இன்னொரு லியாம் பொக்ஸ். அவர் பேசக்கிடைத்தவர்கள் சம்பந்தர் மட்டும் அல்ல . (எனது நினைவு அவர் யாழ்ப்பாணம் போனவர் என்பது). அவர் மாதிரி  அமெரிக்க கொங்கிரஸ் குழு ஒன்றும் பயணம் செய்த்துவிட்டு வந்து இலங்கை அரசு எடுத்திருக்கும் அதி உன்னத முயற்சிகளுக்கு அமெரிக்கா நிதி உதவி வரை கொடுக்க வேண்டும் என்றவர்கள். ஆனால் உண்மையை உணர்ந்து கொண்டுவரும் அமெரிக்கா உதவிகளை வெட்டிக்கொண்டு வருகிறது. சம்பந்தரிடம் அவர் நேரடியாக சைக்கிளை விட தமிழ் மக்களுக்கு உணவு அவசியம் என்று தானேதான் கூறியிருக்க வேண்டும். போய், கடைசியில் சம்பந்தர் கேட்டதாக சொன்ன சைக்கிளையும் அனுப்பி வைக்கவில்லை. நான் அறிந்த வரையில் சம்பந்தர் பேசி வருவது அரசியல் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்தாகும். இன்றைய அரசியல் நிலையில் எந்த உதவியும் அரசுக்குள்ளால் மட்டும்தான் கொடுக்க படவேண்டும். அதாவது மகிந்தாவுக்கு மட்டும்தான் வெளிநாடுகள் உதவலாமே அல்லாமல் போரால் அகதியாக்கப் பட்டவர்களுக்கு அல்ல. இது JVP சுனாமி நிதி வெற்றிகொள்ள முன்னர் தொடக்கம் உள்ள நடை முறை. சம்பந்தர் இதனால்தான் வடக்கு கிழக்கை முன்னேற்றும் அதிகாரம் தமிழரிடம் வேண்டும் என்று வெளிநாட்டவரிடம் கேட்பது. 

 

(இந்த ஆள் பச்சை பொய்யன். இவர் அந்த வீடியோவில் செய்வது பிருத்தானிய பராளுமன்றத்தில் தமிழர் பிரச்சனைகள் விவாதிக்க பட்ட போது அதை மறுத்ததுதான். அதாவது இவர் சொல்ல வருவது சம்பந்தனே தன்னிடம் இலங்கை அரசு நிறைய தமிழருக்கு செய்கிறது என்று சொல்லியிருக்கிறார் என்கிறார்.  அதற்கு சம்பந்தனை சாட்சியாக காட்டுகிறார். ஆனால் உண்மை, 

அவர் பிரச்சனை முழுவதையும் தெரிந்து வைத்திருந்தார் என்பது. ஆனல் அதை ஏன் அவர் சம்பந்தரிடம் கேட்காமல் பிரிந்தானிய பாரளுமனறத்தில் கேட்டார் என்றால் அதற்கு பதில் இல்லை. போர்குற்றம் பற்றி பேசியவர் இன்று அது பற்றி என்ன செய்கிறார்? ) 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெட்டியோ ..2 பெட்டியோ  சம்பந்தன் அய்யாவிடம் கைமாறிவிட்டது...அதற்கு நன்றிக்கடன்தான் விக்கினேஸ்வரன்... இனி அரசிடம் இருந்து பெட்டி போகாது...புலத்தில் இருந்து போனால்தான் 2 பேரைத்தவிர மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்க முடியும்.....ஏனெனில் அரசு தனது வெற்றியை சம்பந்தன் மூலம் உறுதிப்படுத்திவிட்டது...இதுதான் உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சம்பந்தன்.. சுமந்திரன்.. சங்கரி.. சித்தார்த்தன்.. விக்னேஸ்வரன்.. போன்றவர்கள் பகிரங்கமாக மக்கள் முன் மக்களின் வினாக்களுக்கு விடை சொல்லாத வரை கூட்டமைப்பிற்கு.. நிதிப்பங்களிப்பை மக்கள் நல்கக் கூடாது..!

 

மக்கள் பணத்தில் மக்கள் மீதே ஐக்கிய இலங்கை சவாரி செய்யவும்.. சிங்கக் கொடியைத் தூக்கிப்பிடிக்கவும்.. சர்வதேசத்துக்கு அரசியல் செய்யவும்.. சந்தர்ப்பவாத காட்டிக்கொடுப்பு அரசியல் நடத்தவும் எனியும் மக்கள் முட்டாள்கள் இல்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சம்பந்தன்.. சுமந்திரன்.. சங்கரி.. சித்தார்த்தன்.. விக்னேஸ்வரன்.. போன்றவர்கள் பகிரங்கமாக மக்கள் முன் மக்களின் வினாக்களுக்கு விடை சொல்லாத வரை கூட்டமைப்பிற்கு.. நிதிப்பங்களிப்பை மக்கள் நல்கக் கூடாது..!

 

மக்கள் பணத்தில் மக்கள் மீதே ஐக்கிய இலங்கை சவாரி செய்யவும்.. சிங்கக் கொடியைத் தூக்கிப்பிடிக்கவும்.. சர்வதேசத்துக்கு அரசியல் செய்யவும்.. சந்தர்ப்பவாத காட்டிக்கொடுப்பு அரசியல் நடத்தவும் எனியும் மக்கள் முட்டாள்கள் இல்லை..! :icon_idea:

 

 

கிட்டத்தட்ட   உங்கள்  நிலைதான் புலம்  பெயர்ந்த  மக்களுக்கு...

எனது நிலையும்  இதுதான்.

 

நிதி  என்பது தப்பான வழியைக்காட்டிவிடக்கூடாது

தப்பான சகிம்சைகளுக்கு வழி அமைத்துவிடக்கூடாது  என்ற  எச்சரிக்கையுடன்

கூட்டமைப்பை  இழந்து விடக்கூடாது என்ற  பொறுப்புடனும்   நாம்  முடிவுகளை  எடுக்கவேண்டும்.

 

இந்த நிதிக்கோரிக்கையை  புலம் பெயர்  சமூகம் சரியாக  பயன்படுத்தி

கூட்டமைப்பின்  நிர்வாகத்தில்  தலையிடும் உரிமையை   வளர்த்துக்கொள்வது  காலத்தின் தேவை  என்று  நினைக்கின்றேன்.

நிதி  என்பது தப்பான வழியைக்காட்டிவிடக்கூடாது

தப்பான சகிம்சைகளுக்கு வழி அமைத்துவிடக்கூடாது  என்ற  எச்சரிக்கையுடன்

கூட்டமைப்பை  இழந்து விடக்கூடாது என்ற  பொறுப்புடனும்   நாம்  முடிவுகளை  எடுக்கவேண்டும்.

 

இந்த நிதிக்கோரிக்கையை  புலம் பெயர்  சமூகம் சரியாக  பயன்படுத்தி

கூட்டமைப்பின்  நிர்வாகத்தில்  தலையிடும் உரிமையை   வளர்த்துக்கொள்வது  காலத்தின் தேவை  என்று  நினைக்கின்றேன்.

உங்களின் இந்த இரண்டு கருத்துக்களும் ஏற்புடையவை .நாங்கள் பங்காளர்களாக மாறுவதன் முலம்  அழுத்தங்களை ஏபடுத்தமுடியும் .

இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சம்பந்தன்.. சுமந்திரன்.. சங்கரி.. சித்தார்த்தன்.. விக்னேஸ்வரன்.. போன்றவர்கள் பகிரங்கமாக மக்கள் முன் மக்களின் வினாக்களுக்கு விடை சொல்லாத வரை கூட்டமைப்பிற்கு.. நிதிப்பங்களிப்பை மக்கள் நல்கக் கூடாது..!

 

மக்கள் பணத்தில் மக்கள் மீதே ஐக்கிய இலங்கை சவாரி செய்யவும்.. சிங்கக் கொடியைத் தூக்கிப்பிடிக்கவும்.. சர்வதேசத்துக்கு அரசியல் செய்யவும்.. சந்தர்ப்பவாத காட்டிக்கொடுப்பு அரசியல் நடத்தவும் எனியும் மக்கள் முட்டாள்கள் இல்லை..! :icon_idea:

பகலில் காணும் கனவு நிறைவேறுவதில்லை என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றேன் . :icon_idea:  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

பகலில் காணும் கனவு நிறைவேறுவதில்லை என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றேன் . :icon_idea:  :icon_idea: 

 

கனவு காண்பது நாங்கள் அல்ல. நீங்கள் தான். ஏன்னா.. நாங்கள் முடிவு செய்திட்டம் காசு கொடுக்கிறதில்லை என்று. அதுமட்டுமல்ல.. நிச்சயம் நாம் அறிந்த எல்லோரிடமும் இந்த விடயத்தில் ஒரு விழிப்புணர்வை உண்டு பண்ணியே தீருவோம்..!

 

மக்களை ஏய்ப்பது அமிர்தலிங்கம் காலத்தில் செய்தது போல எனி ஏலாது..! அப்படி ஒரு அரசியல் செய்ய சம்பந்தனோ யாராவது நினைத்தால்.. சிங்களவனிடமே பணத்தை வசதி வாய்ப்பை வாங்கி கிட்டு செய்திட்டுப் போகட்டும்..! காட்டிக் கொடுக்கிறவை அதனை நேரடியாச் செய்தால் மக்களுக்கு இன்னும் இலகுவாக இருக்கும் முடிவுகளை எடுக்க..! எனியும் ஏன் தமிழ் தேசியப் போர்வை இவர்களுக்கு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

அமெரிக்க இல்லை இந்தியாவே இப்போது சம்பந்தரை இலங்கையுடன் பேச வேண்டும் என்று நெருக்குவதில்லை. எதற்காக நாம் இனி மகிந்தாவிடம் அகிம்சைப் போராட்டம், மக்கள் எழுச்சி எல்லாம் ஆட வேண்டும்?  நாம் அந்த பாதைகளை கடந்து வந்தோம் என்பது விளங்கவில்லையா?  அல்லது வெறுமனே கூட்டமைப்பு எதிர்ப்புக்காக என்பதலா?

இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சம்பந்தன்.. சுமந்திரன்.. சங்கரி.. சித்தார்த்தன்.. விக்னேஸ்வரன்.. போன்றவர்கள் பகிரங்கமாக மக்கள் முன் மக்களின் வினாக்களுக்கு விடை சொல்லாத வரை கூட்டமைப்பிற்கு.. நிதிப்பங்களிப்பை மக்கள் நல்கக் கூடாது..!

 

மக்கள் பணத்தில் மக்கள் மீதே ஐக்கிய இலங்கை சவாரி செய்யவும்.. சிங்கக் கொடியைத் தூக்கிப்பிடிக்கவும்.. சர்வதேசத்துக்கு அரசியல் செய்யவும்.. சந்தர்ப்பவாத காட்டிக்கொடுப்பு அரசியல் நடத்தவும் எனியும் மக்கள் முட்டாள்கள் இல்லை..! :icon_idea:

 

 

தமிழ் மக்களின் முழுமையான உரிமைகளை  பெறும் பலதரப்பு முயற்சிகளுக்கு குறுக்கே நில்லாமல், அவற்றை குழப்பியடிக்காமல், தமிழரின் அடிப்படை உரிமைகள் சிலவற்றையாவது பெற முறையான நடவடிக்கைகளை  கூட்டமைப்பு எடுக்கும் போது கூட்டமைப்புக்கு நிதி உதவி வழங்குவதில் தவறில்லை.

இதுவரை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு அப்படியான ஒரு நடவடிக்கையை செய்யவில்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.