Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெட்ராஸ் கஃபே - ஏன் எதிர்க்கவேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெட்ராஸ் கஃபே - ஏன் எதிர்க்கவேண்டும்?

  நேற்றிலிருந்து இணைய உலகம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஜான் ஆப்ரஹாம் என்ற மலையாளி நடித்த, இலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சொல்லும் 'மெட்ராஸ் கஃபே' படத்தினால் ஏற்பட்டதுதான் அந்த சூடு.

mcban1.jpg

    'மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை' என்ற மாவோ கூற்றுக்கேட்ப தமிழர்கள் சற்று எதிர்ப்புணர்வுகளைக் குறைத்து சகஜமாக இருக்கமுற்பட்டாலும் இந்த வட இந்தியர்கள் விடமாட்டார்கள் போல. சில வாரங்களுக்கு முன்னால் 'மெட்ராஸ் கஃபே' முன்னோட்டம் வெளிவந்தபோதே தமிழுணர்வாளர்கள் கொதித்தெழுந்துவிட்டார்கள். இடம்பெற்றிருந்த வசனங்களும், காட்சிகளும் அப்படி. உடனே தமிழகத்தில் மாணவ அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும் படம் வெளியாவதற்கு முன் தங்களுக்கு திரையிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. அதன்படி இரண்டு நாட்களுக்கு முன் திரையிடப்பட்ட படத்தைப் பார்த்துவிட்டு கொதித்துப்போய் உள்ளனர். இந்தக் கட்டுரையும் படம் பார்த்தவர்கள் பலர் சொன்னதை வைத்தே எழுதப்பட்டுள்ளது.

  தமிழுணர்வாளர்கள் அனைவரும் இந்த படம் எங்குமே திரையிடப்படக்கூடாது என ஒரு குரலில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வழக்கம்போல சிலர் 'இவங்களுக்கு இதே வேலையாப்போச்சு' என்று அலுத்துக்கொள்கின்றனர். நாம் ஏன் இந்தப் படத்தை எதிர்க்கவேண்டும்?

   1987இல் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றதை பிண்ணனியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தமிழினத்தை அவமதித்தும், பொய்யான தகவல்களை புனைந்தும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தவறாக சித்தரித்தும் காட்சிகள் உள்ளனவாம். அதாவது இந்திய அமைதிப்படை அங்கு நிகழ்த்திய கொடூரங்களை மறைத்தும், பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் அவர்களை வரச்சொல்லிவிட்டு சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட ராஜீவ்காந்தியின் போலி முகத்தை மறைத்தும்(இது இந்திய முன்னாள் ராணுவத்தளபதி சொன்னது) இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ராஜபக்சேவின் நிதியுதவியும் கிடைத்திருக்கிறது. ஜான் ஆப்ரஹாம் படப்பிடிப்பின்போதே ராஜபக்சேவை சந்தித்துள்ளான் என்றும் தகவல்கள் சொல்கின்றன.

    முதலில் போராளிகள் மற்றும் தேசியத்தலைவரைப் பற்றிய தவறான சித்தரிப்பு. இலங்கை விஷயத்தில் தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலத்தவர்க்கு நம் உணர்வுகளைப் புரியவைப்பதே பெரும்பாடு. அதுவும் இந்தி எதிர்ப்பு காலத்திலிருந்தே நம் மீதான காழ்ப்புணர்ச்சி திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. மலையாளப்படங்களிலோ, இந்திப்படங்களிலோ நம்மை எவ்வளவு கிண்டலுக்குள்ளாக்கமுடியுமோ அவ்வளவு கிண்டல் செய்வார்கள். மலையாளப்படங்கள் இப்போது பரவாயில்லை. ஆனால் இந்திவாலாக்கள் இப்போது வந்துள்ள 'சென்னை எக்ஸ்பிரஸ்' வரை ஒரே பார்வையோடுதான் எடுக்கிறார்கள்.அவர்களிடம் நம் போராளிகளைப் பற்றி நல்லவிதமான சிந்தனை இருக்காது. இந்தப்படம் மேலும் அதற்கு வலுசேர்க்கிறது.

   அடுத்து, இந்திய அமைதிப்படை இலங்கையில் நிகழ்த்திய கொடூரங்கள் எவ்வளவு புத்தகங்கள் எழுதினாலும் தீராது. எவ்வளவு பாலியல் வல்லுறவுகள், எவ்வளவு படுகொலைகள், நம்பிக்கை துரோகங்கள்... இந்திய அமைதிப்படையினால் ஈழத்தமிழர்கள் சொல்லமுடியாத துன்பம் அனுபவித்தார்கள். இதற்கு இரண்டே உதாரணங்கள் போதும்.

‘தமிழர்களின் சடலங்கள், சாலை ஓரங்களில் கிடக்கின்றன; நாய் நரிகளும், காக்கை கழுகுகளும் தின்னுகின்றன’ என்று, லண்டனில் இருந்து வெளியாகின்ற கார்டியன் பத்திரிகை தெரிவித்தது.

லண்டன் டைம்ஸ் ஏட்டின் செய்தியாளர் டேவிட் ஹவுஸ்கோ, ‘வியட்நாமின் மைலாய் என்ற ஊரில் அமெரிக்கா நடத்திய படுகொலைகளை, இந்திய இராணுவம் வல்வெட்டித்துறையில் செய்தது’ என்று எழுதினார்.

 
    நேர்மையாக படம் எடுத்தால் இவை எல்லாவற்றையும்தானே எடுக்கவேண்டும். ஆனால் இவற்றைப் பற்றி படத்தில் ஒன்றுமே இல்லை. ஆக இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி அவர்களுக்கு குரல்கொடுக்கும் தமிழகத்தமிழர்களுக்கும் எதிராக திட்டமிட்டு எடுக்கப்பட்ட படைப்பு. இதில் வெட்கமே இல்லாமல் அஜய் ரத்தினம் என்ற தமிழ் நடிகன் நடித்துள்ளான். 
 
  அடுத்த முக்கியமான விஷயம், நமது மாணவர்கள் போராடும்போது இந்தியா முழுக்க ஆங்காங்கே ஆதரவுக்குரல் எழுந்தது. வைகோ அவர்கள் சாஞ்சி சென்று போராடும்போது அப்போதுதான் இலங்கைப்படுகொலை பற்றி கேள்விப்பட்ட பொதுமக்கள்(இதுதான் இந்திய ஊடகநேர்மை) தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தனர். இப்போது இதுபோன்ற ஒரு நேர்மையற்ற படைப்பை 'உண்மையை ஆராய்தல்' எனத் தலைப்பிட்டு தேசம் முழுக்க திரையிடுகின்றனர். விளைநிலம் முழுக்க விஷவிதை தூவுவதற்கு ஒப்பான செயல். நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுப்பதன் மூலமே இந்த இந்திய-லங்க-மலையாளி லாபி செய்த திருட்டுவேலையை அம்பலப்படுத்த முடியும். ஈழத்தமிழர்களுக்காக நாடு முழுவதும் எழுந்த ஆதரவுக்குரலை இழக்காமலிருத்தல் அவசியம். அப்போதுதான் அந்த மக்களுக்கு உரிய நிவாரணம் மட்டுமன்றி தப்பு செய்தவர்கள் பதில் சொல்லும் காலமும் கனியும். 
 
       எல்லாவற்றிலும் அடித்துக்கொண்டு நிற்கும் தமிழர்கள் இந்த சினிமா விஷயத்திலாவது ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டும். எதைப் படம் எடுப்பது என்று தெரியாமல் நிற்கிறது பாலிவுட். முதலில் 'சென்னை எக்ஸ்பிரஸ்', தமிழர்கள் படிக்காதவர்கள்; ரவுடிகள் என்று சித்தரித்தது. ஹிந்தி பேசுபவர்களே இந்தியர்கள் என்றது. எம் தமிழன் அதையும் கை தட்டி ரசித்தான். இப்போது நம் உணர்வுப் பிரச்சினையான ஈழவிடுதலைப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளான் இன்னொருவன். இப்போதும் நாம் அமைதியாக இருந்தால் நாளை வரிசையாக நம்மை இழிவுபடுத்தி படம் எடுத்து நம்மிடமே போட்டுக்காட்டி காசைப் பிடுங்குவான்.

   வெட்டி ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்த ஜான் ஆப்ரஹாம் என்கிற அந்த மலையாளிக்கு திடீரென சம்பந்தமேயில்லாமல் இலங்கைப் பிரச்சினை பற்றி என்ன அக்கறை?

 
   மாணவர் அணி இப்போதே தயாராக உள்ளது. 'நீ மெட்ராஸ் கஃபே வெளியிடு, நாங்கள் டெல்லி கஃபே வெளியிடுகிறோம்' என்று களமிறங்கியுள்ளனர்.  நாம் பெரிதாக போராட்டம் செய்யவேண்டாம். முடிந்த அளவு இணையத்தில் இந்த தகவல்களைப் பகிர்வோம். வெளிமாநில/வெளிநாட்டு நண்பர்கள் நிறைய இருப்பவர்கள் ஆங்கிலத்தில் பகிருங்கள். 
 
mcban.jpg
 
 
    கட்சி, சாதி, மதப் பாகுபாடு பாராமல் 'தமிழன்' என்ற ஒற்றைக்குரலில் நிமிர்ந்தெழுவோம். ஹிந்திய கோமாளியை துரத்துவோம்.

குறிப்பு: சில பொதுத்தகவல்கள் 'வைகோ' ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

http://kurinjinet.blogspot.com.au/2013/08/blog-post_19.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு எதிரான மெட்ராஸ் கபே படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: தமிழ் அமைப்புகள். 

புலிகள் தீவிரவாதிகள், தமிழர்களை மீட்கவே இலங்கை ராணுவம் போராடியது, இலங்கை அரசு தமிழர்களை கொல்லவில்லை, புலிகள் தான் கொன்றனர்.. இதுதான் மெட்ராஸ் கபே திரைபடத்தின் கதை சுருக்கம்.

மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என்று தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது அடுத்து இன்று தமிழ் அமைப்புகளுக்கு இந்த படத்தை திரையிட்டு காட்டினர் திரைப்படக் குழு. 

நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், திராவிட விடுதலை இயக்கம் , தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் சில தமிழ் அமைப்புகள் இப்படத்தை பார்த்தனர். இயக்குனர் கௌதமன், இயக்குனர் ஆர் கே செல்வமணி ஆகியோரும் படத்தை பார்த்தனர். 

இப்படத்தை பார்த்த பின் இயக்குனர் ஆர் கே செல்வமணி கூறியதாவது , 

மெட்ராஸ் கபே திரைப்படம் ராஜபக்சே பணம் கொடுத்து , சோனியா காந்தி இயக்கி , இந்திய ரா உளவுத்துறை கதை வசனம் எழுதியது போல் உள்ளது என்று கூறியுள்ளார் . மேலும் காந்தியை கொன்ற ஆர் எஸ் எஸ் இயக்கம் பற்றியும், இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்கள் பற்றியும் படம் படம் எடுக்க இந்திய அரசு சம்மதிக்குமா? அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய இனவழிப்பு நடந்து முடிந்த பிறகு ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் உள்ளனர் என்பதை பற்றி பொய்யான பல தகவல்களை திரட்டி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார் செல்வமணி. 

விடுதலை புலிகளை பயங்கரவாதிகளாகவும் , சிங்கள படைகளும் , இந்திய அமைதிப் படையும் ,நல்லவர்களாகவும் தமிழர்களை கொன்றது புலிகள் தான் என்றும் புலிகளிடம் இருந்து தமிழர்களை மீட்க இவர்கள் போராடியதாகவும் படத்தில் கூறப்பட்டுள்ளது. அதைவிட தமிழகத்தில் இருந்து ஈழ மக்களுக்காக குரல்கொடுத்த வைகோ,காசி ஆனந்தனை தீவிரவாதிகளாக காட்டி கொச்சை படுத்தியுள்ளனர். அதுபோல தமிழக மாணவர் போராட்டங்களை தீவிரவாதத்துக்கு ஆதரவான போராட்டம் போல காண்பித்துள்ளனர். பல ஐயிரகனக்கன அப்பாவி தமிழர்கள் அமைதி படையாலும், இலங்கை படைகளாலும் கொள்ளபட்டுல நிலையில் ஈழ மக்களின் நியாயங்களை சொல்லும் பல படங்களுக்கு தணிக்கை குழு மூலம் அனுமதி மறுத்துள்ள காங்கிரஸ் அரசு ஈழ இன படுகொலையை நியாய படுத்தியும் ஈழ மற்றும் தமிழக மக்களை தீவிரவதிகலகவும் காட்டும் இந்த படத்தை தமிழகத்திலேயே வெளியிட முயன்றுள்ளது தமிழர்களை முட்டாள்கள் என்று எண்ணியதே காரணம். இந்த படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் தமிழ் அமைப்புகள் மற்றும் கட்சிகள். உலகில் எங்கு திரையிட்டாலும் தமிழர்கள் அங்கு போராட்டம் செய்வார்கள். தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் இந்தப் படத்தை காட்ட அனுமதிக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியும் மற்ற தமிழ் அமைப்புகளும் கூறியுள்ளன. 

சீமான் கூறியதாவது , 

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணி குறித்து இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன ? ஆரிய காயத்தை சொரிந்து விட்டது போலத் தானே இருக்கிறது இந்தப் படம். இந்திய உளவுத்துறையின் கண்ணோட்டத்தில் இப்படம் எடுக்கப்பட்டது. விடுதலை புலிகளை தீவிரவாதிகளை விடவும் கேவலமாக சித்தரித்து உள்ளனர் படத் தயாரிப்பாளர்கள். விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும், அமைதி படை இலங்கையில் சென்று நடத்திய படுகொலை பற்றியும் அல்லவா காட்டியிருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சீமான். 

அதனால் இப்படத்தை தமிழகம் மட்டுமல்ல எங்கும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழ் இனத்தை கொச்சைப் படுத்துவதாக எடுக்கப்பட்ட படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கூறினார் சீமான்

 

இப்படி உண்மைக்கு புறம்பாக இருந்தால்..இந்தியா முழுவதும் வெளியிடக்கூடாது என்று "யாராவது" போராட வேண்டும்....

தமிழ்நாட்டு மக்களுக்காவது ஓரளவு இப்போது தெரியும்....மற்ற மாநிலத்தவர்களுக்கு எங்களை பற்றி

"ஒன்றே ஒன்று" தான் தெரியும்...

பிரித்தானியாவில் cineworld ல் தான் வெளியிடுகிறார்கள் முடிந்தவை மின்னஞ்சல் அனுப்பலாம்... தொலைபேசியிலும் அழைக்கலாம்...

https://www.cineworld.co.uk/contact

படத்தை நிப்பாட்ட முடியுமோ இல்லையோ முயற்சி செய்வதில் தப்பில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி உண்மைக்கு புறம்பாக இருந்தால்..இந்தியா முழுவதும் வெளியிடக்கூடாது என்று "யாராவது" போராட வேண்டும்....

தமிழ்நாட்டு மக்களுக்காவது ஓரளவு இப்போது தெரியும்....மற்ற மாநிலத்தவர்களுக்கு எங்களை பற்றி

"ஒன்றே ஒன்று" தான் தெரியும்...

 

உண்மை தான் தமிழ் நாட்டில் புறக்கணிப்பதை விட பிற மாநிலங்களில் கட்டாயம் புறக்கணிக்க வேண்டும்.குறைந்த பட்சம் படம் ஓடும் திரையரங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமாவது செய்ய வேண்டும்.புலம் பெயர் நாட்டிலும் ஆர்ப்பாட்டம் தான் செய்ய வேண்டும்.அப்பத் தான் ஏன் இந்த படத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று  மற்றவருக்கு தெரிய வரும் :)
 
 
நான் இந்தப் படத்தை இணையத்தில் வந்த பிறகு கட்டாயம் பார்ப்பேன்.எமது போராட்டத்தை பற்றியும்,தலைவரைப் பற்றியும் என்ன சொல்லி இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மை தான் தமிழ் நாட்டில் புறக்கணிப்பதை விட பிற மாநிலங்களில் கட்டாயம் புறக்கணிக்க வேண்டும்.குறைந்த பட்சம் படம் ஓடும் திரையரங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமாவது செய்ய வேண்டும்.புலம் பெயர் நாட்டிலும் ஆர்ப்பாட்டம் தான் செய்ய வேண்டும்.அப்பத் தான் ஏன் இந்த படத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று  மற்றவருக்கு தெரிய வரும் :)
 
 
நான் இந்தப் படத்தை இணையத்தில் வந்த பிறகு கட்டாயம் பார்ப்பேன்.எமது போராட்டத்தை பற்றியும்,தலைவரைப் பற்றியும் என்ன சொல்லி இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டும்.

 

 

எனது கருத்தும் அதுவே ..

புலம்பெயர் தேசங்களில் முடிந்தவரைக்கும் இந்த படத்தை திரையிடாது போராட்டங்களை நடத்தவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வழமை போல பலரும்.. கருத்துச் சொல்லினமே தவிர செயற்பாடு அகூதா அண்ணா.. துளசி போன்ற உறவுகளின் இல்லாமையோடு தொய்ந்து விட்டது.

 

ஒரு ஆறுதல்.. புலம்பெயர் மட்டத்தில்.. இளையோர் இதனைப் புறக்கணிக்கும் அறிவூட்டலை பெற்று வருகிறார்கள். அதன் விளைவால்.. சில காத்திரமான செயற்பாடுகளை எதிர்பார்க்கலாம்...! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வழமை போல பலரும்.. கருத்துச் சொல்லினமே தவிர செயற்பாடு அகூதா அண்ணா.. துளசி போன்ற உறவுகளின் இல்லாமையோடு தொய்ந்து விட்டது.

 

ஒரு ஆறுதல்.. புலம்பெயர் மட்டத்தில்.. இளையோர் இதனைப் புறக்கணிக்கும் அறிவூட்டலை பெற்று வருகிறார்கள். அதன் விளைவால்.. சில காத்திரமான செயற்பாடுகளை எதிர்பார்க்கலாம்...! :icon_idea:

 

 

செயற்பாட்டாளர்களும் 

பங்காளிகளுமே  இன்று தேவை

ஆனாலும்  தொடர்ந்து ஒரு சில வீதமானவர்களே  அதிலும்...

அதனாலேயே  இந்த  தொய்வு....... :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தின் கள்ள கொப்பிகளை இணையத்தில் போட்டு வியாபாரத்தை குழப்ப திட்டம் போட்டிருக்கிறார்களாம்.

இந்த படம் நோ பயர் சோன் படத்திற்கு எதிராக விட்ட லோக்கல் கொங்கிரஸ் படம்.

இந்த ஓவர் அக்டிங் பொலிவூட் படம் பார்க்கும் தெம்பு எனக்கு இல்லை.

BJP கொஞ்ச காலம் இருந்துவிட்டு போனதால் பொருளாதாரம் நன்றாக இருந்தது. சோனியாவந்த பின்னர் மலையாளிகள் ஆட்டம். அது விழுந்து படுக்கிறது.

கொலைக்களம் படங்களை ஓடவிடாது தடுக்கும் கிந்திய அரசு மலையாளிகளிடம் ஏமாந்துவிட்டு பழிவாங்கள் பாதுகாப்பு கொள்ளைகள் மூலம் சீனாவும், பகிஸ்தானும் எல்லைகளில் நெருக்கும் போது வெளியே போகாமல் இந்த படங்களை பார்க்கட்டும்.. 

  • கருத்துக்கள உறவுகள்

Please complain to ‪#‎CineWorld‬ on tel: 02087424010 for screening anti-Tamil film ‪#‎MadrasCafe‬. It is hate speech and insult to victims of ‪#‎SriLanka‬'s ‪#‎genocide‬ & please sign this petition.

 

இங்கு போய்..(கீழுள்ள இணைப்பில்) உங்கள் முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள். முடியாதவர்கள்.. தொலைபேசி மூலம்..(மேலுள்ள இலக்கத்திற்கு அமைவாக..) மேற்படி படம் இங்கிலாந்தில் திரையிடப்படுவதை தடுக்க முயலுங்கள்..!

 

https://www.change.org/en-GB/petitions/cineworld-don-t-screen-madras-cafe

 

564883_529710613715027_931714131_n.jpg

 

 

Edited by nedukkalapoovan

எனக்கேன்னாவோ வந்ததாம் போயிற்ருதாம் என்று விட வேண்டியபடங்களை நாங்கள் இழுதுப்போட்டு விளம்பரமும் வியாபாரமும் கொடுக்கின்றோம் போல கிடக்கு .

கோலிவுட்காரன் உலக சரித்திரத்தை புரட்டி எடுக்காத படங்காளா ?

Please complain to ‪#‎CineWorld‬ on tel: 02087424010 for screening anti-Tamil film ‪#‎MadrasCafe‬. It is hate speech and insult to victims of ‪#‎SriLanka‬'s ‪#‎genocide‬ & please sign this petition.

 

இங்கு போய்..(கீழுள்ள இணைப்பில்) உங்கள் முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள். முடியாதவர்கள்.. தொலைபேசி மூலம்..(மேலுள்ள இலகத்திற்கு அமைவாக..) மேற்படி படம் இங்கிலாந்தில் திரையிடப்படுவதை தடுக்க முயலுங்கள்..!

 

https://www.change.org/en-GB/petitions/cineworld-don-t-screen-madras-cafe

 

564883_529710613715027_931714131_n.jpg

போட்டிருக்கோம். 411 தேவை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கேன்னாவோ வந்ததாம் போயிற்ருதாம் என்று விட வேண்டியபடங்களை நாங்கள் இழுதுப்போட்டு விளம்பரமும் வியாபாரமும் கொடுக்கின்றோம் போல கிடக்கு .

கோலிவுட்காரன் உலக சரித்திரத்தை புரட்டி எடுக்காத படங்காளா ?

 

 

40% எழுதப்படிக்க தெரிந்த இந்திய மக்களுக்கு பாடம் படிப்பதே திரைப்படம். 99% படிப்பறிவுள்ள மேற்குலகம் பல வகைகளில் தகவல்களை பெறுவதோடு சுயமாக சிந்திக்கும் ஆற்றல்  உள்ளவர்களாக உள்ளார்கள். ஆகவே எவர்களை இலகுவாக எப்படி மாற்றலாம் என்பதை இந்திய உளவுத்துறை தெரிந்தே செய்கிறது.
தலைவனை வெளியிட பின்னிற்பவர்கள் இப்படத்தை பற்றி எதுவும் பேசாமல் இருப்பதும் சந்தேகத்தை கிளப்புகிறது.

பேசாமல் இருப்பதால், முன்னர் இலங்கை அரசு புலிகளுக்கு எதிராக வெற்றிகரமாக செய்த பரப்புரைகள் மாதிரியேதான் இதுவும் அமையும். இந்தப்படம் பணம் உழைக்குமா என்பதல்ல எமது கவலை. புலிகளோ தமிழர்களோ பயங்கரவாதிகள் அல்ல; ராஜீவ் நாடுபிடிக்க அலைந்து J.R. இடம் அடி வாங்கியவர் என்ற உண்மைகள் என்ன செலவிலும் வெளிவர வேண்டும்.

Edited by மல்லையூரான்

Hi!

I just signed the petition "Cineworld: Don't screen Madras Cafe" on Change.org.

It's important. Will you sign it too? Here's the link:

http://www.change.org/petitions/cineworld-don-t-screen-madras-cafe?share_id=jxFWBwSRxe&utm_campaign=signature_receipt&utm_medium=email&utm_source=share_petition

Thanks!

 

இப்படி ஒரு தபாலை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் படி இந்த மனுதாரி கோரிக்கைவிடுகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெட்ராஸ் கஃபே : காட்சிக்கு காட்சி திரைக்கதை. படம் பார்த்திருந்தால் எப்படி இருக்கும்? படியுங்கள். அதன் பின் ஏன் இதை தடை செய்ய வேண்டும் என்று நீங்களே உணர்வீர்கள்.
இப்படத்தை நேற்று பார்த்தவர்கள் சற்று 20 பேர்தான்

படம் பார்க்காதவர்களுக்கு படத்தைப் பற்றி புரிய வைக்கவும் , இப்படத்தை எதிர்த்து நாம் ஏன் போராட வேண்டும் என்பதை உணர வைக்கவும் வேண்டி இப்பதிவை பதிந்துள்ளேன்

எனக்கு ஞாபகம் உள்ளபடி காட்சி அமைப்பு எப்படி இருந்தது என்பதை இங்கு எழுதியுள்ளேன் படியுங்கள் தோழர்களே..... நீங்களே பாருங்கள் படத்தை .....

மெட்ராஸ் காபே ராஜிவை கொல்ல சதியில் ஈடுபடுபடுபவர்கள் சந்திக்கும் இடம் அது ஓர் உணவு விடுதி
காட்சி 1
மூன்று நான்கு வாகனத்தில் ஆயுதங்களுடன் வரும் விடுதலைப் புலிகள் யாழ்பாண வீதியில் சென்று கொண்டிருக்கும் மக்கள் மீது கண்மூடிட்தனமாக தாக்குதல் நடத்துகிறார்கள் பேருந்து கொளுத்தப்பட்டு பலர் சாகடிக்கப்படுகிறார்கள்
இக்காட்சி முடிந்த பிறகுதான் படமே துவங்குகிறது
இலங்கை பெரும்பான்மையாக சிங்களர் வாழும் ஒர் நாடு அதில் சிறுபான்மையாக உள்ள தமிழர்கள் தங்களுக்கு தனி நாடு கேட்டு போராடுவதிலிருந்துதான் சிக்கல் பெரிதாகிற்று என்ற பின்னணி கதைக் குறல் நமக்கு கதை சொல்கிறது .எந்த பக்கம் நியாயம் என்றாலும் கொல்லப்படுபவர்கள் அப்பாவி பொது மக்களே என்ற கருத்துகள் எடுத்து வைக்கப்படுகின்றன

காட்சி 1 முன்னாள் பிரதமர் இறந்துவிட்டதாக செய்தி தொலைகாட்சியில் காட்டப்படுகிறது

காட்சி 2 ஒரு தேவாலயத்திற்கு தாடியுடன் ஒரு குடிகாரன் வந்து தேவலாய பாதிரியாரிடம் வந்து தான் உண்மையை சொல்லப் போவதாக கூறுகிறார் குடித்திருக்கும் நீ என்ன உண்மையை சொல்ல போகிறாய் என அவர் கேட்க நடந்தவற்றை பாதிரியாரிடம் கூறத்துவங்குகிறார் கூறும் இவர் தான் கதையின் கதாநாயகன் விக்ரம்
நாம் நினைத்திருந்தால் அந்த பிரதமரை காப்பாற்றி இருக்க முடியும் அவர் கொல்லப்படுவார் என்பது எனக்கு முன்பே தெரியும் என நடந்த கதையை சொல்ல துவங்குகிறார்

காட்சி 3 ஈழப்பிரச்சனை சம்மந்தமாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடக்கிறது பின் இந்திய இலங்கையிடை கொழும்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

காட்சி 4 அமைதி ஒப்பந்தத்தையொட்டி இந்திய ராணுவம் இலங்கை சென்று அங்கு உலாவுவதாக காட்டப்படுகிறது
காட்சி 5 டெல்லியில் உயர் அதிகாரிகளின் கூட்டம் நடக்கிறது நம் பிரதமரின் ஒரெ திட்டம் இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் அமைதி ஏற்படுத்த வேண்டும் அதற்க்காக அங்குள்ள சூழ் நிலைகளை சரிப்படுத்தி தேர்தலை நடத்த வேண்டும் எல் டி எஃப் தலைவர் தனி நாடு கேட்டு போராடுகிறார் அவரது போராட்டத்திற்கு அங்கு மக்கள் ஆதரவு உண்டு

போன்ற செய்திகளை எடுத்துச் சொல்லி இந்திய உளவுத்துறை அதிகாரியான காதாநாயகன் விக்ரம்
இலங்கைக்கு செல்லுமாறு பணிக்கின்றனர்

எல் டி டி ஈ என்பதற்கு பதிலாக எல் டி எஃப் பிரபாகரனுக்கு பதிலாக பாஸ்கரன் இப்படி ஒவ்வொரு தளபதிகளுக்கும் வெவ்வேறு பெயர் இடப்பட்டுள்ளது

காட்சி 6 விக்ரம் கொச்சியில் உள்ள தன் மனைவியிடம் இதை தெரிவிக்கிறார் தான் இலங்கைக்கு சென்றுவிட்டு மீண்டும் இங்கு திரும்ப மூன்று வருடம் ஆகலாம் என்கிறார்

காட்சி 7
இலங்கைக்கு செல்ல படகில் ஏறுகையில் ஒரு பெண் பத்திரிக்கையாளரை சந்திக்கிறார் இருவரும் யாழ்ப்பாணம் செல்கிறார்கள்
புலிகள் தங்களுக்கு தனி நாடு கேட்டு போராடுகிறார்கள் அவர்கள் சாதரணமானவர்கள் அல்ல என தனக்கு தெரிந்தவற்றில் சிலவற்றை பேசிக்கொள்கிறார்கள்

காட்சி 8
புலிகள் அமைப்பை சேர்ந்த 17 பேர் இலங்கை ராணுவத்தினர் தலையீட்டால் சாகிறார்கள் அவர்கள் இறந்ததினால் எல் டி எஃப் தலைவர் இந்தியாவுடன் சண்டையிட்டார் என்று பின்னணி குறல் சொல்கிறது

காட்சி 9
யாழ்பாணத்திலிருக்கும் தனக்கு மூத்த அதிகாரியை விக்ரம் பார்க்க செல்கிறார் பால என்ற அந்த மூத்த அதிகாரி விக்ரம் வாழ்த்தி அடுத்து இப்படி இப்படி செய்ய வேண்டும் என சொல்கிறார் முப்பது நாப்பது அடிக்கு கீழ குளி தோண்டி பங்கர் வைத்து அதுகுள்ள இருந்து செயல்படுகிறவங்க எல் டி எஃபினர் எங்க பாத்தாலும் கண்ணிவெடி இருக்கும் எங்கும் பாதுகாப்போடு விழிப்போடு இருக்க வேண்டும் தனியாக எங்கும் செல்ல கூடாது என்றெல்லாம் விக்ரமிடம் அறிவுரை கூறுகிறார்

பிரதமரின் கணக்குப்படி விரைந்து இங்கு தேர்தல் நடக்க வேண்டுமானால் எல் டி எஃப் க்கு நேர் எதிர் குழு தலைவரான சிறி கை இங்கு உயர வேண்டும் என்கிறார் சிறியும் பாஸ்கரனும் முன்பு இணைந்தே இருந்ததாகவும் இப்போது எதிர் எதிர் குழுக்களாக ஆகி விட்டதாகவும் இரு பிரிவினர் பற்றிய மேலதிக தகவல்களையும் கூறுகிறார்

காட்சி 10

சிறியை சந்திக்க உள்ள வழியை தேடுகிறார் விக்ரம் . மீன் சந்தைக்கு சென்று ஓர் உளவாளி மூலமாக சிறியின் இருப்பிடத்தை அறிந்து கொள்கிறார்

காட்சி 11

ஏகப்பட்ட ஆயுதம் தாங்கிய ஆட்களுடன் உள்ள சிறியை சந்தித்து பேசுகிறார் விக்ரம்
சந்தித்து இவ்வாறு பேசுகிறார் நீங்கள் பாஸ்கரனை கடுமையாக எதிர்க்க வேண்டும். இங்கு தேர்தல் நடத்த வேண்டும் .தேர்தல் என்று வந்தால் யாராவது ஒருவர்தானே வெற்றி பெற முடியும் தேர்தல் வழிக்கு எல் டி எ எஃப் ஒத்து வர மறுக்கிறாங்க தனி நாடு அடையணும் என்பதிலதான் குறிக்கோளா இருக்கிறாங்க
ஆமா அவுங்க அப்படித்தான் என்கிறார் சிறி அதனாலதான் சொல்றேன் நீங்க தேர்தலில் நில்லுங்க உங்களுக்கான உதவிய நாங்க செய்றோம் இந்திய உளவுத்துறையான உங்களுக்கு வேர வேலை இல்லையா பாஸ்கரனும் நாங்களும் இந்த மக்களுக்காகத்தான் போராடுகிறோம் இருந்தாலும் அவர் கொஞ்சம் முரண்டுப்டிக்கிறவர்
விக்ரம் என்னதான் பேசினாலும் சிறி மசிவதாக இல்லை உங்களை நம்ப முடியாது என்கிறார் சிறி நீங்கள் நம்பும்படியாக பெருமளவு ஆயுதங்களை உங்களுக்கு நாங்கள் தருகிறோம் அப்புறமா சொல்லுங்க என்று அங்கிருந்து புறப்படுகிறார்

காட்சி 12

எல் டி எஃப் இவரது அனைத்து நடமாட்டங்களையும் மோப்பம் பிடித்தபடி உள்ளது

காட்சி 13

சிறியை சந்தித்து விட்டு தனக்கு மேலதிகாரியான பாலவை வந்து சந்தித்து ,சிறியை நம் வழிக்கு கொண்டு வர வேண்டுமானால் ஆயுதங்கள் பெருமளவு அவரிடம் கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுக்காது அவரை நம் வழிக்கு கொண்டு வர முடியாது என்கிறார் .சரி அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்வோம் என்கின்றனர்

காட்சி 14

சிங்கப்பூரில் ஆயுத பேரம் நடக்கிறது ஆயுதம் அனுப்பி வைக்கப்பட்ட செய்தி பாலவிற்கு கிடைக்கிறது அதை விக்ரமுக்கு சொல்கிறார் அவர்

காட்சி 15

தகவல் கிடைத்த விக்ரம் படகுகள் வழியாக வரும் ஆயுதத்தை வாங்க போகிறார் வந்த ஆயுதங்கள் அனைத்தும் எல் டி எஃபினர் கைப்பற்றி ,அனைத்தையும் ஏற்றிச் செல்ல எத்தனிக்கின்றனர் அங்கு பெரும் துப்பாக்கி சண்டை நடக்கிறது தன்னுடன் வந்த நபர் கொல்லப்படுகிறார் விக்ரம் காயங்களுடன் உயிர் பிழைத்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்

காட்சி 16

தன்னுடன் இருந்த உதவி அதிகாரி இறந்துவிட்ட செய்தியை அவரது மனைவிக்கு விக்ரம் தெரிவிக்கிறார் மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறார்
மருத்துவ மனையில் இருந்தபடி நடந்த நிகழ்வு குறித்து டெல்லி அதிகாரிகளுடனும் ,பாலவுடனும் தன் மனைவியுடனும் பேசிக் கொள்கிறார்

காட்சி 17

Three years Before assassination என்ற வார்த்தை வந்து விட்டு செல்கிறது

பாதிரியாரிடம் இவர் பேசிக் கொண்டிருப்பதை காட்டுகிறார்கள் ஐந்து வருட நிகழ்வை விக்ரம் சொல்லிக் கொண்டிருக்க காட்சிகள் தன் கடந்த கால நிகழ்வை காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது Three years Before assassination கொலை செய்யப்படுவதற்கு இரண்டு வருடத்திற்கு முன்பு கொலை செய்யப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு கொலை செய்யப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு என...அவ்வப்போது இந்த வாசகம் திறையில் ஓடிக் கொண்டிருக்கும். முடிவாக கொலை செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு என்பது வரை இது ஓடும்

காட்சி 18

அந்த இடத்திற்கு ஆயுதம் வருவது எப்படி எல் டி எஃபினர்க்கு தெரிந்தது என விக்ரமுக்கு சந்தேகம் எழுகிறது பாலாவிடம் பேசுகிறார் இது உனக்கு சரிப்பட்டு வராது நீ கொழும்புக்கு போ அங்கிருந்து வேலைய பாரு இங்க நான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் பாலா விக்ரம் கொழும்புக்கு செல்கிறார்

காட்சி 19

பத்திரிக்கையாளராக வரும் பெண் எல் டி எஃப் தலைவரை சந்திக்க முயல்கிறார் அவரிடம் செல்வதற்கு முன் பல சோதனை இடங்களை கடந்து காட்டிலிருக்கும் பாஸ்கரனை சந்திக்கிறார்
நீங்க தேர்தலில் நின்னு மக்கள் செல்வாக்க பெறாம இப்படி ஆயுதம் தாங்கி போரிட்டுதான் நீங்க நெனச்சத சாதிக்க முடியும்னு நினைக்கிறேங்களே இது சரியா ?
எங்கள் மக்களுக்கான ஒரே தீர்வு தனி நாடுதான் தேர்தல் எல்லாம் சரிப்படாது என்று பதில் கூறுகிறார் பாஸ்கரன்

காட்சி 20

தான் பாஸ்கரனை சந்தித்து பேட்டி எடுத்த செய்தி அவருடை பத்திரிக்கையில் வெளியாகிறது அதை படித்துவிட்டு விக்ரம் அந்த பெண்ணிடம் பேசிகிறார் பாஸ்கரனைப் பற்றி கேட்கிறார் நான் இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது ஒண்ணே ஒண்ணு அவர் ஓர் தெளிவான மனிதர் அவரை போல ஒரு மனிதரை நான் சந்தித்தது இல்லை அவர எந்த காலத்திலும் நீங்க புடிக்க முடியாது என்கிறார்

காட்சி 21

டெல்லியில் அதிகாரிகள் கூடி பேசுகிறார்கள்
அந்த பாஸ்கரனோட பேட்டிய பாத்திங்களா அவர் ஒரு அடமண்ட் (ஒரு பிடிவாதக்காரர்) எதிர்கட்சிங்க வேற பிரதமருக்கு பிரச்சனை கொடுக்கிறாங்க உடனே அங்க அமைதிய வரவைக்க எதாவது செய்யணும் உடனே தேர்தல நடத்தணும் அந்த சிறிய நம்ம வழிக்கு கொண்டு வரலாம்ண்ணு பாத்த ஆயுதம் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு ஆய்தத்த கொடுக்காததினால கடுப்பில இருக்கார்
ஏதாவது செஞ்சு சீக்கிரம் அங்க தேர்தல நடத்தணும் அங்க தேர்தல நடத்த தாமதமான நம்ம பிரதமர் பதவி விலக வேண்டியதுதான்
காட்சி 23
பாலாவிற்கு தெரியாதபடி எல் டி எஃபிற்கு எதிரான நடவடிக்கைகளை செய்ய முனைகிறார் விக்ரம் ஜ
காட்சி 24
விக்ரம் எல் டி எஃபினரால கடத்தப்படுகிறார் தொலை காட்சியில் செய்தி வெளியாகிறது கடத்தப்பட்ட விக்ரம் எங்கிருக்கிறார் அவரை உடனே கண்டுபிடித்து கொடுங்கள் என கொச்சியிலிருக்கும் விக்ரமின் மனைவி டெல்லி அதிகாரிகளிடம் கதருகிறார்

காட்சி 25

டெல்லியில் பதற்றம் தொற்றிக் கொள்கிறது உயர்மட்ட அதிகாரிகளின் சந்திப்பு நடக்கிறது
எல் டி எஃபினர் சாதாரணமானவர்கள் அல்ல என்று ஒரு அதிகாரி சொல்ல எதிரிலிருப்பவர் .. அன்னைக்கு நீங்க சொன்னிங்க அவங்கள போன உடனே சரி பண்ணிடலாம்ணு ...இப்ப இப்படி சொல்றீங்க என்னது இது
அவங்க தனியா இருந்தா அவங்க கதைய உடனே முடிக்கலாம் அவங்க யாரு மக்கள் யாருன்ன்னு தெரியாம இருக்கு , விக்ரமுக்கு ஓண்ணும் ஆகிட கூடாது அவர் ஒர் திறமையான அதிகாரி அவர நாம காப்பாத்தியே ஆகணும்

காட்சி 26

டெல்லியிலிருந்து பாலாவை தொடர்பு கொள்கின்றனர் உங்கள நம்பித்தான் அவர நாங்க அங்க அவர அனுப்பினோம் நீங்க என்ன பண்ணுவிங்களோ எனக்கு தெரியாது அவர உடனே மீட்கணும்
சரி சார் சரி சார் என்கிறார் பாலா
விக்ரம் சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு மீட்க ராணுவம் செல்கிறது .அங்கு எல்டிஎஃபினருக்கும் இந்திய ராணுவத்தினருக்குமிடையே பெரும் சண்டை நடக்கிறது இரு தரப்பையும் சார்ந்த பலர் கொல்லப்படுகின்றனர் விக்ரம் காப்பாற்றப்பட்டுகிறார்
மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார் கணவன் மனைவியும் பேசிக் கொள்கிறார்கள்
கண்ணா பாத்தியா நா மட்டும் இல்லண்ணா நீ செத்து போயிருப்ப என்கிறார் பாலா
டெல்லியிலிருந்து மூத்த அதிகாரி வந்து மருத்துவமனையில் பார்கிறார் ஆறுதல் கூறுகிறார்

காட்சி 27

விக்ரம் கொச்சிக்கு புறப்படுகிறார் தன் மனைவியை சந்திக்கிறார்
இதற்க்கிடையில் எல் டி எஃபினரின் எதிர் குழு தலைவர் சிறி கொல்லப்படுகிறார்
டெல்லியில் அதிகாரிகளை சந்தித்து பேசி மீண்டும் யாழ்பாணம் செல்கிறார்

காட்சி 28

பாஸ்கரன் எதற்கும் ஒத்து வர மாட்டார் அவருக்கு கீழ் இரண்டாம் நிலையில் உள்ள மல்லையாவை நாம் அணுகி ஆசை வார்த்தை கூறி நம் பக்கம் இழுத்தால் என்ன ? விவாதிக்கிறார் விக்ரம்
மல்லையாவை சந்திக்க வழி தேடி மீன் கடையில் சந்தித்த பழைய உளவாளியை பார்க்கிறார் எல்லாம் முடியும் ஆனா முன்னவிட ரெண்டுமடங்கு அதிக பணம் வேணும் என்கிறார் உளவாளி
மல்லையா விக்ரம் சந்திப்பு நடக்கிறது விக்ரம் கூறுவதை மல்லையா ஏற்றுக் கொள்வதாக இல்லை
நாங்கள் சொல்வதை கேட்பது உங்களுக்கு நல்லது என கூறிவிட்டு நகர்கிறார் விக்ரம்

காட்சி

யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய ராணுவத்தினருக்கு எல் டி எஃப் மீதான பெரும் தாக்குதலை எப்படி நடத்துவது என திட்டமிட்டுக் கொடுக்கிறார் வரை படத்தை காண்பித்து இந்த இந்த இடத்தில் இவைகள் உள்ளன நாம் இந்த வழியாக நகர வேண்டும் என்ற பல திட்டமிடல்கள் நடக்கின்றன

காட்சி 30

பெரிய ஒர் தாக்குதல் எல் டி எஃபின் தலைமையகம் மீது நடத்தப்படுகிறது பலர் கொல்லப்படுகின்றனர்
பாஸ்கரன் உள்ளிட்ட தலைவர்கள் காயத்துடன் உயிர் பிழைக்கின்றனர்

காட்சி 31

வேண்டுமென்றே எல் டி எஃப் தலைவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்பபடுகிறது பாஸ்கரன் கொல்லப்பட்ட செய்தி தொலைகாட்சியில் வாசிக்கப்படுகிறது ஊரே கலவரமாக காட்சியளிக்கிறது தெருவெங்கும் மக்கள் பாஸ்கரன் படத்திற்க்கு மாலையிட்டு மறியாதை செலுத்துகிறார்கள்

காட்சி 32

மீண்டும் மல்லையாவை தொடர்பு கொண்டு தேர்தலில் போட்டியிடுமாறும், உங்களுக்கு முழு பக்க துணையாக நாங்கள் இருப்போம் என்றும் உறுதி கூறுகிறார் விக்ரம் .இப்போதும் மல்லையா மறுக்கிறார் மல்லையா இதற்கு நீங்கள் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் .ஒத்துக் கொள்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை என்கிறார் விக்ரம் .வேறு வழி இல்லாது ஒப்புக் கொள்கிறார் மல்லையா

காட்சி 33

தனக்கு தெரியாமலே இப்படி வேலைய செஞ்சிருக்கிற பாராட்டுக்கள் பரவால்ல என விக்ரம் முதுகில் தட்டிக் கொடுக்கிறார் பாலா

காட்சி 34

துரோகியாக மாறி இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டது நிறுபிக்கப்பட்டு மல்லையா எல் டி எஃபினரால் கொல்லப்படுகிறார்

காட்சி 35

சிறியும் எல் டி எஃபினரால் கொல்லப்படுகிறார் அவரது ஆட்களும் கொல்லப்படுகின்றனர்

மல்லையா குறித்த செய்திகள் எப்படி அவர்களுக்கு தெரிந்தது எங்கிருந்தோ நம் செய்திகள் கசிந்து கொண்டுள்ளது. ஏற்கனவே தனக்கு பாலா மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தை உறுதி செய்ய பாலாவின் அனைத்து தொலை பேசி உறையாடல்களையும் பதிவு செய்யும்படி விக்ரம் தனக்கு கீழ் உள்ள அதிகாரியிடம் கூறி இருக்கிறார் மேலும் எல் டி எஃபினரின் உறையாடல்களையும் பதிவு செய்து வைக்கும் படி பணித்துள்ளார்

காட்சி 36

மீண்டும் எல் டி எஃப் ஐ ஒடுக்க வழி தேடி ஆலோசிக்கிறார்
எல் டி எஃபினர் முன்னை விட அதிக பலத்துடன் இருப்பதாகவும் பாஸ்கரன் தான் ஒட்டு மொத்த மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவனாக இருப்பதாகவும் கூறுகிறார் சிறியை கொன்று விட்ட அவர்களிடம் ,,ஆயுதத்தை குவித்து வைத்திருக்கும் அவர்களிடம் கொரில்லா போர் பயிற்சி பெற்ற அவர்களிடம் நாம் மோதுவது சாதணமானதல்ல என்கிறார்

காட்சி 37

பால பற்றிய சந்தேகத்தை டெல்லி அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறார் விக்ரம்

காட்சி 38

அந்த பெண் பத்திரிக்கையாளரை சந்திக்கிறார் பல விடையங்களை விக்ரம் கேட்க ஒரு சில செய்தியை மட்டும் குறிப்பிட்டு சொல்கிறார் அதில் எல் டி எஃப் ஐ சேர்ந்த நபர் சென்னையில் மெட்ராஸ் காபே என்ற உணவகத்தில் சிலரை சந்தித்ததாகவும் லண்டன் சென்னை கொழும்பு மூன்று இடங்களிலும் திட்டங்கள் தீட்டப்படலாம் என்றும் கூறுகிறார் என்னை சந்திப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவும் மேலும் என் உயிருக்கும் உன்னால் ஆபத்து வந்துவிட கூடும் எனவே நான் லண்டன் செல்ல உள்ளதாக கூறி தனது முகவரி அட்டையை விக்ரமிடம் கொடுக்கிறார்

காட்சி 39

தனக்கு கீழ் வேலை பார்க்கும் ஒரு நபரிடம் தொண்டையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி நம் தகவல்கள் அங்கு எப்படி சென்றது கேட்கிறார் விக்ரம் . தனக்கு ஒன்றும் தெரியாது என அவர் முதலில் கூறி, பின்னர் எனக்கு இட்ட கட்டளையை மட்டும் தான் நிறைவேற்றியதாகவும் அவர் சொன்னதை மட்டும் செய்ததாக பாலாவை குறிப்பிடுகிறார்

காட்சி 40

பாலா மீது மேலும் சந்தேகம் வலுப்பதாக தன் டெல்லி அதிகாரிகளிடம் விக்ரம் கூற எதற்கும் தக்க ஆதாரம் வேண்டும் ஆதாரம் இல்லாது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் ஆதாரம் உங்களால் தர இயலாது போனால் உங்களுக்கு பிரச்சனை வந்து விடும் என்கின்றனர்
காட்சி 41
இதே வேளையில் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்
ராஜினாமா செய்த அவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார் தான் இந்தியாவை வலுப்படுத்த விரும்புவதாகவு இலங்கை தமிழர்களுக்கு ஒரு அமைதியான வாழ்வு அமைத்துக் கொடுப்பது தனது குறிக்கோள் என்றும் கூறுகிறார்

காட்சி 42

இதை பார்க்கும் எல் டி எஃப் தலைவர் பாஸ்கரன் கோபப்படுவதாகவும் இவர் மீண்டும் வந்தால் தமக்கும் தம் இயக்கத்திற்க்கும் ஆபத்து வரும் என்று தன் சகாக்களிடம் தெரிவிக்கிறார்

காட்சி 43

சிங்கபூரில் உள்ள மிக பலமிக்க ஒர் நபர் எல் டிஎஃபிற்கு பின்னாலிருந்து உதவுவதாகவும் அந்த உதவும் நபருக்கு ஒரு சில நாடுகள் உதவுவதாகவும் உறையாடலை பதிவு செய்யும் அதிகாரி விக்ரம் தெரிவிக்கின்றார் ஆக ஒரு பெரும் சதி வலை பின்னப்படுவதாக விக்ரம் எச்சரிக்கிறார்

காட்சி 44

குறல் பதிவு செய்யும் அதிகாரி தனக்கு கிடைத்த முக்கிய தகவலை டீ கோட் செய்து பார்த்ததில் மிக முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அறிந்து ,இதைப்பற்றி மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளதாக பாலாவிடம் போய் சொல்கிறார். கேட்கும் பாலா சரி .அத அங்கு விட்டு செல்லுங்கள் என்று கூறுகிறார். பால இதை ஒரு முக்கியமானதாக எடுத்துக் கொள்ளவில்லையே என எண்ணி அதைப்பற்றி விபரமாக கூற எத்தனிக்கிறார். சரி இங்க வச்சுட்டு போ நா போட்டுப்பார்த்து தெரிஞ்க்கிறேன் என்கிறார்

காட்சி 45

பாலாவின் மீது சந்தேகம் அடைந்த குறல் பதிவு செய்பவர் தனது சந்தேகத்தை ஏற்ப்பட்ட விக்ரமிடம் தெரிவிக்கிறார் அத்தோடு தன்னிடம் உள்ள குறல் பதிவுகளை எடுத்துக் கொண்டு ஒரு பையில் வைத்துக் கொண்டு விக்ரமை சந்தித்து கொடுப்பதற்க்காக அவசர அவசரமாக புறப்பட்டு செல்கிறார்

காட்சி 46

பாலவும் அவருடன் துணைக்கு இருக்கும் அதிகாரியும் குறல் பதிவு செய்பவரின் அறையில் வந்து ஒரு வித பதற்றத்துடன் பதிவுகளை தேடுகிறார்கள் அங்கு அவர் எதிர்ப்பார்த்த பதிவுகள் இல்லை என்பதை அறிந்து இன்னும் பதற்றமடைகிறார் குறல் பதிவு செய்யும் அதிகாரி கடைசியாக யாருக்கு பேசியுள்ளார் என்பதை அறிய ரீ டையல் செய்து பார்க்கிறார் இந்த பதிவுகள் வாயிலாக தான் செய்த துரோகம் வெளிப்பட்டு விடும் என்பதை உணர்ந்து எல் டி எஃபிற்க்கு தகவல் கொடுக்கிறார் பால .முக்கிய தகவல்கள் குறல் பதிவு செய்யும் நபரிடம் உள்ளது அவர் கொச்சிக்கு விக்ரமை பார்க்க சென்றுள்ளார் அவரை நீங்கள் விட்டு விடாதீர்கள் என தகவல் கொடுக்கப்படுகிறது

விக்ரம் வெளியில் சென்றிருக்கும் நேரம் விக்ரம் வீட்டு முற்றத்தில் ஒரு தபால் வந்து விழுகிறது அதை அவர் மனைவி பிரித்து பார்க்கிறார்
யாழ்பாணத்தில் அந்த பெண் பத்திரிக்கையாளருடன் விக்ரம் இருக்கும் புகைப்படத்துடன் செய்தி உள்ளது விக்ரம் தவறான வேலைகளில் ஈடுபடுவதாகவும் உள்ளது அச்செய்திகளை பற்றி கேள்விமேல் கேள்வி கேட்டு சண்டை போடுகிறார் அவர் மனைவி
காட்சி 47 குறல் பதிவு செய்பவர் உணவு விடுதியில் விக்ரமை சந்தித்து பதிவுகளை கொடுக்கிறார்

காட்சி 48

விக்ரம் வீட்டிற்கு எல் டி எஃபினர் வந்து துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள்

காட்சி 49

விக்ரம் வீட்டிற்கு வருகிறார் உயிருக்கு போரடிக்கொண்டிருக்கும் மனைவியை மலையாள எழுத்துகள் பொறிக்கப்பட்ட மருத்துவ ஊர்தியில் ஏற்றிச் செல்கிறார் தன் மனைவி இறந்து விட்டதாக அழுகிறார்

காட்சி 49

விக்ரம் தன்னிடம் கிடைத்த ஆதாரங்களை டெல்லியிலுள்ள மேல் அதிகாரிகளுக்கு கொடுத்து பார்க்க சொல்கிறார்

காட்சி 50
மேலதிகாரிகள் சூடாக விவாதிக்கின்றனர் எல்டி எஃபினர் முன்னாள் பிரதமரை கொலை செய்ய திட்டமிடிவது போல் தெரிகிறது என்று

கொலை செய்யப்படுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு என்ற வார்த்தை திறையில் ஓடுகிறது

விக்ரம் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த சதிகார திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவன என அறியப்பட்ட ரெட் என்பவனின் இருப்பிடத்தை தேட முயல்கிறார் அவன் இருக்குமிடம் சிங்கப்பூர் என்ற தகவல் கிடைக்கிறது
பெண் பத்திரிக்கையாளரை தொடர்பு கொண்டு தனக்கு உதவும் படி கேட்கிறார் நான் தான் முன்பே சொன்னேனே இது ஒர் பெரிய அரசியல் அடங்கியுள்ளது என்று

எல் டி எஃபினர்க்கு இந்திய செயல்பாடுகள் பிடிக்காது .ஒரு சில வெளி நாடுகளும் அன்னிலையிலேயே உள்ளது அவர்கள் கூட்டு சேர்ந்து எதாவது செய்யலாம்
சரி உனக்கு ரெட்டை சந்திக்க வைக்க இயலாவிட்டாலும் அவரைபற்றி நன்கு தெரிந்த நபரை பார்க்க உதவுகிறேன் என்கிறார் . பின் சிங்கப்பூர் சென்றிருக்கும் விக்ரமிடம் அந்த நபரை பார்க்க இப்படி போ அப்படி போ என விபரத்தை கூறுகிறார்
விக்ரம் அந்த குறிப்பிட்ட நபரை சந்தித்து மேலதிக விபரங்களை தெரிந்து கொண்டு அதிற்ச்சியாகிறார்

காட்சி 51

விக்ரம் கொடுத்திருந்த தகவல்களை ஆய்வு செய்து பார்த்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கிறது அத் தகவல்களைப்பற்றி விகரமும் அதிகாரிகளும் பேசிக்கொள்கின்றனர்
*
எல் டி எஃபினர் ஐந்து பேர் கொண்ட குழுவாக ஆறு குளுக்கள் அங்கிருந்து புறப்பட்டு விட்டதாகவும் அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க சென்னையில் ஒருவர் அமர்த்தியுள்ளதாகவும் உள்ளது இந்த குளுக்கள் ஏன் வருகிறார்கள் என ஆய்வு நடத்த முற்படுகின்றனர்
*
பெண் பத்திரிக்கையாளர் லண்டனிலிருந்து தொடர்பு கொள்கிறார் மிக முக்கியமான செய்தியை தான் சொல்ல வேண்டும் என்றும் அதை தொலை பேசியில் சொல்லமுடியாது என்றும் கூறி தான் டெல்லி வந்து நேரடியாக சொல்வதாக கூறுகிறார்
*
படகுகளில் எல் டி எஃபினர் புறப்படுவதாக காட்சி ஓடுகிறது அவர்கள் ராமேஸ்வரம் வந்து இற்ங்குகிறார்கள்
*
உளவுத்துறை முழு வீச்சில் இறங்கி செயல்பட துவங்குகிறது எல் டி எஃபின் தலைவர் பாலவிடம் பேசிய பேச்சுகள் இன்னும் பல தகவல்களை வைத்துக் கொண்டு சென்னையில் எல் டி எஃப்க்கு ஆதரவாக செயல்படுபவர்கள் யார் யார் என நோட்டமிடப்படுகிறது
*
பாலா தன் மனைவியை மலையாளத்தில் அழைக்கிறார் அவர் மனைவியும் மலையாளத்தில் பேசிக் கொள்கிறார்கள் பாலா மனைவி உள் அறைக்கு செல்கிறார் விக்ரம் பாலாவிற்கு அழைத்து பேசுகிறார் உங்களின் அத்தனை துரோகமும் தெரிந்துவிட்டதாக கோபத்துடன் பேசுகிறார் நான் என்னென்னவோ செஞ்சேன் ...என் மனைவிய என்ன செஞ்சா உங்களுக்கு என கேள்வி கேட்கிறார் விக்ரம் . வந்தவர்கள் உன்னை கொல்லவே வந்ததாகவும் இதில் உன் மனைவி மாட்டிக் கொண்டதாகவும் பாலா கூறுகிறார்
*
விக்ரமிடம் பேசிக்கொண்டிருக்கையிலே தன்னைப்பற்றி எல்லாம் தெறிந்து விட்டதை எண்ணி தன்னை தானே சுட்டுக் கொண்டு சாகிறார் பாலா
*
பெண் பத்திரிக்கையாளர் டெல்லிக்கு வந்து விக்ரமை சந்தித்து முக்கிய செய்தியாக ஜெர்மனியிலிருந்து ஒர் முக்கிய நபர் கொலை திட்டத்துக்கு உதவ வந்துள்ளதாக தெரிவித்துவிட்டு புறப்படுகிறார்
*
பெண்ணிடம் பெற்ற செய்தி ,எல் டி எஃபினர் வருகை ,சிங்கப்பூர் ரெட் பற்றிய செய்தி ,முன்னாள் பிரதமர் ஆட்சிக்கு வந்து தமிழர்களை அமைதியாக வாழவைப்பேன் என்ற செய்தியினால் எல் டி எஃப் அடைந்த கோபம் எல்லாம் கூட்டிக் கழித்து பிரதமரை தீர்த்துக் கட்ட எல்டிஎஃப் களம் இறங்கி விட்டது தெரிகிறது அதை எப்படியாவது நாம் தடுத்தே ஆக வேண்டும் என வேலையில் இறங்குகிறது ரா
*
சென்னை உட்பட பல இடங்களில் சோதனையில் ஈடுபடுகிறார்கள் எல் டி எஃப் ஆதரவாளர்கள் தொடர்பாளர்கள் என பலரை கைது செய்து விசாரிக்கின்றனர்
*
மத்தியயில் ஆழும் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது எல் டி எஃபால் முன்னாள் பிரதமர் உயிருக்கு ஆபத்தா இதை நம்ப முடியாது இது போன்ற முட்டாள்தனமான செயலை அவர்கள் செய்யமாட்டார்கள் அப்படி அச்சுறுத்தல் இருந்தாலும் முன்னாள் பிரதமருக்கெல்லாம் பெரிய அளவில் பாதுகாப்பு கொடுக்க முடியாது வேண்டுமானால் மா நில அரசை தொடர்பு கொண்டு தகுந்த ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொள்ளுங்கள் என கையை விரிக்கின்றனர்
*
எல் டி எஃபினர் ஆங்காங்கு தங்கி தன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பயிற்சியை வீட்டிலேயே மேற்கொள்கின்றனர்
*
விக்ரமுக்கு ஒரு முக்கிய துப்பு கிடைக்கிறது அந்த துப்பை விசாரிக்க மதுரை மத்திய சிறைக்கு செல்கிறார் மத்திய சிறையிலிருக்கும் ஒரு நபரை விசாரிக்கும் போது , தான் தான் யாழ்பாணத்திலிருந்து வரும் அகதிகளை அழைத்து தங்க வைக்கும் வேலையை செய்ததாகவும் எனக்கு பாஸ் இவர்தான் என்றும் அவர் சொல்லும் வேலைகளை மட்டுமே தான் செய்து வந்ததாகவும் கூறுகிறார் குறிப்பிட்ட தேதியில் வந்த நபர்கள் எப்படி இருந்தார்கள் என கேட்க ,அவர்கள் முன்பு வருபவர்களை போல் அல்லாது சிறிது மாற்றத்துடன் காணப்பட்டதாக தெரிவிக்கின்றார் எப்போதும் போல் அல்லாது இப்போது வந்தவர்களை வரவேற்க என்னுடைய பாஸ் நேரடியாக வந்ததாகவும் கூறுகின்றார்
*
ஜெர்மனியிலிருந்து ஒருவர் வந்துள்ளதாக சொல்லப்படும் நபரை இருக்குமிடத்தை மோப்பம் பிடித்து விசாரிக்கின்றனர் விசாரணையில் உச்சகட்ட திடுக்கிடும் தகவல்கள் விக்ரமுக்கு கிடைக்கிறது எந்த ஒர் வெடிப்பொருட்களை கண்டுபிடிக்கும் கருவியாலும் கண்டுபிடிக்கப்பட முடியாத பிளாஸ்டிக் வெடிகுண்டை உலகிலேயே முதன்முறையாக தயாரித்திருப்பதாகவும் இதை பெல்ட் வடிவில் இடுப்பில் கட்டிக் கொள்ளும் வகையிலும் பயன்படுத்தலாம் என்றும் இது வெடித்தால் அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறுகிறார் தாயாரித்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள் தயாரித்துக் கொடுத்தேன் எனக்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்கின்றார்
இங்கிருந்து அதை செயல் இழக்க செய்ய வைக்க இயலாதா என விக்ரம் கேட்கிறார் முடியாது என்கிறார்
*
எல் டி எஃபினர் கொலை திட்டத்திற்கு முன்னோட்டம் எடுக்கின்றனர் பெண் ஒருவர் தன் கையில் வத்திருக்கும் மாலையை எதிரிலிருப்பவருக்கு போடுவதாகவும் போட்ட பிறகு காலில் விழ குனிவதாகவும் குனியும் பொழுது தன் இடுப்புக்கு கீழ் பகுதியில் உள்ள பொத்தானை அழுத்துவதாகவும் பல முறை பயிற்சி எடுப்பதாக காட்டப்படுகிறது

*
முன்னாள் பிரதமர் பரப்புரைக்கு புறப்பட்டு செல்கிறார் ஹைதராபாத்தில் நிரூபர்களை சந்திக்கிறார் அங்கும் தான் இலங்கை தமிழர்களூக்கு ஒர் அமைதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பேன் இது உறுதி என்கிறார்
ஹைதராபாத் பரப்புரையை முடித்து விட்டு சென்னைக்கு சிறி பெரும்புதூருக்கு இறவு 10 20 செல்வதாக திட்டமிடப்பட்டுள்ளது அத்திட்ட விபரம் முழுக்க எல் டி எஃபினருக்கு தெரிந்துள்ளது என்பதும் உளவுத்துறைக்கு தெரிகிறது

விமானத்தில் சிறிய கோளாறு இருப்பதாகவும் அதனால் புறப்பட தாமதமாகும் என மு பிரதமர் சற்று ஓய்வெடுக்கிறார் அந்த நேரம் அவரை ரா அதிகாரிகள் அழைத்து இவர் முன்னோக்கியுள்ள ஆபத்தை தெரிவித்து, திரு பெரும்புதூர் பயணத்தை ரத்து செய்யும்படி வலியுறுத்துகிறார்கள் அதைப்பற்றி கவலை கொள்ளாது தான் மக்க்ளை சந்திப்பேன் என கூறுகிறார்
*
எல் டி எஃபினர் ஏற்கனவே திருப்பெரும்ப்தூரில் காத்திருக்கிறார்கள்
*
விக்ரம் பிரதமரை காப்பாற்ற சிறி பெரும்புதூருக்கு வருகிறார் பெரும் திரளான பொதுமக்கள் கூட்டத்திற்க்கு நடுவே முண்டி முன்னேறுகிறார்
*
முன்னாள் பிரதமர் மக்களுக்கு கை அசைத்தபடி உள்ளே வருகிறார் அவருக்கு மாலையிட பலர் காத்திருக்கிறார்கள் மாலயை கையில் வைத்திருக்கும் ஒரு பெண் மு பிரதமர் அருகில் செல்கிறார் அந்த பெண்ணால் கொல்லப்படுகிறார் இன்னும் பலர் கொல்லப்படுகிறார்கள்
*
விக்ரம் மற்றும் அவரது மூத்த அதிகாரி பதவியை ராஜினாமா செய்கின்றனர்
விக்ரம் தேவாலய பாதிரியாரிடம் புலம்பி அழுவது முடிகிறது
பாதிரியாரை கடந்து செல்லும் விக்ரம் இன்னும் புலம்புகிறார் ஒர் நல்ல பிரதமர் கொல்லப்படுவார் என நன்கு தெரிந்தும் காப்பாற்ற முடியவில்லையே
வெள்ளையருக்கு மட்டுமே புறியும்படி ஒரு புலம்பல் பாடல் ஆங்கிலத்தில் பிண்ணனியில் வருகிறது
------------------------------------------------ -------------------------------------------------------- --------------------------------------
இப்படத்தின் காட்சிகளை ஞாபகம் வைத்த அளவிற்கு வசனத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை
ஆனாலும் படம் முழுக்க வசனங்கள் கீழ் கண்ட கருத்தை வலியுறுத்தியபடி உள்ளது என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை

இப்படத்தில் சொல்லப்பட்ட வசனங்கள்
விடுதலைப் புலிகள் நடக்காத ஒன்றுக்கு ஆசைப்பட்டதாகவும்
புலிகளின் தலைவர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென்பதால்தான் ராணுவத்திற்க்கும் புலிகளுக்கும் சண்டை வந்ததாகவும்
(உண்மையில் நடந்தது
பிடிக்கவில்லையென்றாலும் புலிகள் ஒப்பந்தத்தை ஏற்று நடந்தார்கள் ஆய்தத்தை ஒப்படைத்தார்க்ள் போட்ட ஒப்பந்த்தத்தில் உள்ள் சரத்துகளை நிறைவேற்றாது நடந்தது இந்தியாதான் ஒப்பந்தப்படி நடக்க கோரித்தான் திலிபன் உண்ணாவிரதமிருந்து இறந்தார். ஒப்பந்தத்தை மீறி இந்திய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் புலிகளை இலங்கை ராணுவம் கைது செய்தது ஒப்பந்தப்படி நடக்காத இந்தியா குமாரப்பா புலேந்திரன் உட்பட 17 புலிகளின் சாவுக்கு காரணமாகி புலிகள் மீண்டும் ஆயுதம் தூக்க காரணமாகியது )

ராஜிவ் காந்தி இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய அவதாரம் எடுத்தவர் போல செயல்பட்டதாகவும் அந்த நன்மை என்பது தேர்தல் ஒன்றை நடத்தி தமிழர்கள் கையில் ஆட்சியை கொடுப்பதாம் அப்படி தேர்தலை நடத்திவிட்டால் பிரச்சனைக்கு முடிவு வந்து விடுமாம் அந்த தேர்தலுக்கு சிறிதும் ஒத்து வராது வீம்பு பண்ணி பல பொது மக்கள் உயிரிளப்பிற்கு புலிகள் காரணமாகி விட்டதாகவும் அம்மக்களுக்கு நல்லது மட்டும் செய்ய எண்ணிய ராஜிவ் காந்தி அவர்களை இப்பிரச்சனை காரணமாகவே பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டதாகவும்
(இந்திய ராணுவத்திற்கு வாங்கப்பட்ட ஆயுத பேர ஊழலில் சம்மந்தப்பட்டு நாறிப் போனதால் பதவி இழந்தார் என்பதே உண்மை)
இருந்தும் அவர் எப்படியாவது தான் ஜெயித்து வந்து அந்த மக்களை அமைதியுடன் வாழ வைக்க பெரும் முயற்சி எடுத்ததாகவும் அப்படிப்பட்ட ஒரு நல்லவரை புறிந்து கொள்ளாது அநியாயமாக திட்ட்மிட்டு தீர்த்து கட்டிவிட்டதாக குற்றம் சாட்டும்படி உள்ளது புலிகளை தீவீரவாதிகளாகவும் அதன் தலைவரான தேசிய தலைவனை வில்லனாகவும் காட்டியுள்ளனர்

இந்தியா வந்து மலையாள அதிகாரியின் மனைவியை புலிகள் கொல்வதாகவும், சுடப்பட்டவரை எடுத்து செல்லும் வாகனத்தில் மலையாள எழுத்து உள்ளதாகவும், ஒர் மலையாளிதான் ராஜிவை காப்பாற்ற உயிரை பணையம் வைத்து போராடுவதாகவும் தமிழர்கள் புலிகளை ஆதரிப்பதாகவும் காட்டியுள்ளனர் அப்படியானால் இந்திய நாட்டிற்க்கே வேண்டாத பிறவிகள்தான் தமிழர்கள் என சொல்ல முனைந்துள்ளார் இந்தியா முழுக்க தமிழர்களை மதராசி என்று அழைக்கும் போது இலங்கை பிரச்சனையினையில் தலையிட்டதால் ராஜிவ் கொல்லப்பட்டார் என்ற அர்த்தத்தை சொல்ல இந்த ஆளுக்கு வேறு வார்த்தை இல்லையா மெட்ராஸ் காபே என்ற பெயர்தான் கிடைத்ததா
பத்தாயிரத்திற்க்கு மேற்பட்டோரை ராஜிவ் எப்படி கொன்றார் என்ற படமெடுக்க இண்டர் வென்சன் இன் சிறிலங்கா என்ற இந்திய ராணுவ அதிகாரி எழுதிய நூல் போதும் இறுதி கட்ட படுகொலையில் சோனியாவின் பங்கு இனப்படுகொலையில் மலையாளிகளின் பங்கு என பல படங்களை எடுக்க தகுதி பெற்று பல இழப்புகளை சந்தித்துள்ள தமிழ் இனத்திற்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல
இனப்படுகொலையாளர் ராஜிவை இனத்தை காக்க நின்ற தெய்வமாக காட்டி இந்திய தேர்தலில் ஓட்டு வாங்க தமிழர்களின் தன் மானத்தை வைத்து பிழைக்க நினைக்கும் சோனியாவிற்கு உதவ ,காசுக்கு மாறடித்து தமிழ் இனத்திற்க்கு எதிராக தமிழ் இனத்திற்க்கு சவாலாக மலையாளி ஒருவரால் எடுத்து விடப்பட்டுள்ள இப்படத்தை உலகில் எங்கும் நாம் ஓட விடகூடாது

நன்றி: அதியமான். பொதுச் செயலாளர் தமிழர் முன்னேற்றக் கழகம்

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

1174642_504304386319581_1337042144_n.jpg

மெட்ராஸ் கஃபே படத்தில் நடித்திருக்கும் ஜான் ஆபிரகாம், தான் இலங்கை அதிகாரிகள் எவரையும் சந்திக்கவில்லை என்றும் அவர்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அறிக்கை விட்டார்.

இப்போது அவர் இலங்கை அதிகாரிளை சந்திக்க காத்திருந்த வேளையில், சிங்கள ரசிகர் ஒருவர் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்து நெட்டில் உலாவ விட்டதனால், சிக்கியுள்ளார் ஆப்ரகாம்.

இப்படத்தில் சொல்லப்பட்ட வசனங்கள்

விடுதலைப் புலிகள் நடக்காத ஒன்றுக்கு ஆசைப்பட்டதாகவும்

புலிகளின் தலைவர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென்பதால்தான் ராணுவத்திற்க்கும் புலிகளுக்கும் சண்டை வந்ததாகவும்

(உண்மையில் நடந்தது

பிடிக்கவில்லையென்றாலும் புலிகள் ஒப்பந்தத்தை ஏற்று நடந்தார்கள் ஆய்தத்தை ஒப்படைத்தார்க்ள் போட்ட ஒப்பந்த்தத்தில் உள்ள் சரத்துகளை நிறைவேற்றாது நடந்தது இந்தியாதான் ஒப்பந்தப்படி நடக்க கோரித்தான் திலிபன் உண்ணாவிரதமிருந்து இறந்தார். ஒப்பந்தத்தை மீறி இந்திய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் புலிகளை இலங்கை ராணுவம் கைது செய்தது ஒப்பந்தப்படி நடக்காத இந்தியா குமாரப்பா புலேந்திரன் உட்பட 17 புலிகளின் சாவுக்கு காரணமாகி புலிகள் மீண்டும் ஆயுதம் தூக்க காரணமாகியது )

ராஜிவ் காந்தி இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய அவதாரம் எடுத்தவர் போல செயல்பட்டதாகவும் அந்த நன்மை என்பது தேர்தல் ஒன்றை நடத்தி தமிழர்கள் கையில் ஆட்சியை கொடுப்பதாம் அப்படி தேர்தலை நடத்திவிட்டால் பிரச்சனைக்கு முடிவு வந்து விடுமாம் அந்த தேர்தலுக்கு சிறிதும் ஒத்து வராது வீம்பு பண்ணி பல பொது மக்கள் உயிரிளப்பிற்கு புலிகள் காரணமாகி விட்டதாகவும் அம்மக்களுக்கு நல்லது மட்டும் செய்ய எண்ணிய ராஜிவ் காந்தி அவர்களை இப்பிரச்சனை காரணமாகவே பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டதாகவும்

(இந்திய ராணுவத்திற்கு வாங்கப்பட்ட ஆயுத பேர ஊழலில் சம்மந்தப்பட்டு நாறிப் போனதால் பதவி இழந்தார் என்பதே உண்மை)

இருந்தும் அவர் எப்படியாவது தான் ஜெயித்து வந்து அந்த மக்களை அமைதியுடன் வாழ வைக்க பெரும் முயற்சி எடுத்ததாகவும் அப்படிப்பட்ட ஒரு நல்லவரை புறிந்து கொள்ளாது அநியாயமாக திட்ட்மிட்டு தீர்த்து கட்டிவிட்டதாக குற்றம் சாட்டும்படி உள்ளது புலிகளை தீவீரவாதிகளாகவும் அதன் தலைவரான தேசிய தலைவனை வில்லனாகவும் காட்டியுள்ளனர்.

இது பிரச்சனையான இடம். இதில் தான் சம்பந்தர் இப்போது இந்திய அரசால் உபயோக்கப்படுத்தப் படுகிறார் என்று சிலரால் குற்றம் சாட்டப்படுகிறார். தேர்தல் நடந்து வரதராஜப்பெருமாள் முதலமைசராகவும் வந்தார். இந்தியாவால் எதுவும் செய்துவிட முடியவில்லை. இன்று சம்பந்தரையும் ஏன் தேர்தல் என்று இந்தியா எமாற்றுகிறது? ஏன் இந்தியா ஐ.நா பிரணையை ஆதரிக்க மறுக்கிறது? அதற்கு படம் என்ன விளக்கம் சொல்ல விரும்புகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு படத்தினால் மட்டும் புலிகள் பயங்கரவாதிகள் என்பதை நிருபிக்க முடியாது........இதை நாம் உணரவேண்டும்...உலகமே பயங்கரவாதிகள் என்று சொல்லிப்போட்டு பேசாமல் இருந்து பல்லாயிரம் மக்களை பலி செய்தவை.....புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நாங்கள் புரிந்து கொண்டாலே போதுமானது....

வணக்கம்! 

****ATTENTION ALL CINEWORLD UNLIMITED CARD HOLDERS**** 

I believe that we will win our petition with over 1,000 supporters. I have reported about our petition to BBC Tamil. I see little need in planning further however in the event of Cineworld screening 'Madras Cafe' as scheduled (Tamil and Hindi) despite our request, the next step would be: 

1. All Cineworld UNLIMITED cardholders of Tamil origin could together go and watch Madras Cafe at one of the Cineworlds preferably Sheffield - so its convenient for Northern and Western people to reach (on the day of its release). We could then in a peaceful manner register our grievance about the movie ad attitude of Cineworld after watching it for about 45 minutes and surrender our Cineworld UNLIMITED card there and then and cancel the Direct Debit. Should you agree for this, please e-mail me at classicalraj@gmail.com and confirm your availability for Friday the 23rd, Saturday the 24th and Sunday the 25th August. I shall communicate the date depending upon the response and should the event be confirmed, I shall inform media about our next step. Please share with with your UK friends as quickly as you can. நன்றி !

 

Thanks and regards, 

Vignesh Raj

 

PS: Please check your e-mails/inbox including junk folders regularly!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

printButton.png | emailButton.png
புதன்கிழமை, 21, ஆகஸ்ட் 2013 (23:11 IST)

மெட்ரா கபே படத்தை தடை செய்யக் கோரி சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

13.jpg

 

 

படங்கள்: ஸ்டாலின்

home-next-icon.png

   

  Left: Press Ctrl+g to toggle between English and Tamil :  

 

- நக்கீரன்

காமன்வெல்த் மாநாடு விவகாரம்: தமிழகம் முழுவதும் 24-ம் தேதி போராட்டம்: பொன். ராதாகிருஷ்ணன

தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற நவம்பர் மாதம் இலங்கையில் நடக்கவுள்ள “காமன்வெல்த்” உறுப்பு நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பாரதப்பிரதமரை நேரில் அழைத்திட இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து சென்றுள்ளார்.

“காமன்வெல்த்” உறுப்பு நாடுகளின் மாநாட்டில் பாரதப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இச்சமயத்தில் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல தமிழர்களை தீவிரவாதிகள் போல கொச்சைப்படுத்தும் விதத்திலும் சித்தரித்துள்ள “மெட்ராஸ் கபே” என்கிற இந்தி திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 23.08.2013ல் திரையிடப்படவுள்ளது.

இலங்கை வாழ் தமிழர்களின் இன்னல்களை, அவர்கள் படும் துயரங்களைப் பற்றிய உண்மை விபரங்களை அறியாதவர்கள், இலங்கையை ஆதரிப்பது போலவும், தமிழர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்தும் படம் எடுத்து வெளியிடுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடனும் மத்திய காங்கிரஸ் அரசின் ஆசியுடனும் தான் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற கருத்திற்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்தாக வேண்டும். இப்படம் திரையிடப்பட்டால் வேண்டாத விபரீத விளைவுகளை தோற்றுவிக்கும் என்று கருதப்படுகிறது.  எனவே இத்திரைப்படத்தை எக்காரணம் கொண்டும் இந்தியாவில் எப்பகுதியிலும் திரையிடக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொள்கிறது.

காமன்வெல்த் உறுப்பு நாடுகள் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும், அதை மீறி நடைபெற்றால் இந்திய தரப்பிலிருந்து எவரும் அம்மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், தேவைப்பட்டால் இலங்கை அதிபரின் தலைமை காமன்வெல்த் அமைப்பில் தொடரும் வரை இந்தியா அவ்வமைப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் இலங்கை அரசு இலங்கை தமிழர்களுக்கு செய்த துரோகத்தை அங்கீகரித்ததாகும் என தமிழக பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது.  எனவே இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமரோ, பிரதிநிதியோ எவரும் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 24ம் தேதி (24.08.2013) அன்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். - நக்கீரன்

எங்களுக்கு இதனால் என்ன கிடைக்கும் என்பது மத்திய அரசை நாடி பிடித்து சொல்வது கஸ்டமாக இருக்கலாம். ஆனால் இந்த இளைஞர்களின் மனத்தில் தங்களுக்கு உரிமை, அதிகாரம், அந்தஸ்த்து பற்றிய சிந்தனைகள் வர ஆம்பித்திருக்கிறது. இவர்கள் ஆபிசுக்களில் அதிகாரிகளாக இருக்கும் போது மத்திய அரசு கணக்க வாலாட்ட முடியாது. மானிலத்தையும் சரியாக நிர்வகிப்பார்கள். 

 

நன்றி அவர்களின் போராட்டங்களுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெட்ராஸ் கபே திரைப்படத்தினை தமிழகத்தில் திரையிட மறுத்த திரையரங்குகள் - இச்செய்தியினை முழுமையாக இங்கு இணைக்க முடியாமல் இருக்கிறது . இணைப்பினை இங்கு இணைக்கிறேன். http://tamilnews24x7.com/?p=2086

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.