Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தா இல்லையேல் போரில் வெற்றியில்லை – சிறிலங்கா அதிபரின் செயலர்

Featured Replies

நீங்களே சொல்கிறீர்கள் சற்லைட் தொலைபேசியால் தான் அவர் இருந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் இறந்த நேரம் எல்லோரும் அப்படித் தான் கதைத்தவர்கள்.உங்களுக்கே ச.தொலைபேசியால் ஆபத்து என்று தெரியும் போது த.செக்கோ அல்லது புலிகளுக்கோ தெரியாமல் இருக்குமோ  :unsure: அல்லது ஆபத்து என்று தெரிஞ்சும் எல்லா இடமும் கொண்டு திரிஞ்சவரோ  :(

சுத்துக்கு திருப்பி சுத்து எங்கும் வடிவாய் புலிகள் விட்டவர்கள். தமிழ் செல்வனை அடித்தது நோர்வேயின் அளவில்லாத அடிமட்ட துரோகத்தனம். அரசின் அடிமட்ட கோளைத்தனம். அவர் செய்து பல நாள் நான் அது விபத்து, அரசு அவரை இலக்குவைத்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்றுதான் நம்பி வந்தேன். மெல்ல மெல்ல முதுகுக்குத்துகள் வெளிவரத் தொடங்கிய பின்னர்தான் புள்ளிகளை இணைத்து கோடுகள் நீட்டலாம் என்றது தெரிய வந்தது.  இதில் எந்த பெரிய கைங்கரியமும் இருவர்களிடமும் இருக்கவில்லை. 

கதிர்காமர் பச்சை தண்ணியில் மேற்கு நாடுகளிடமிருந்து பலகாரம் சுட்டு இவர்களுக்கு கொடுத்த காலம் போயிற்று. இவர்கள் இப்போ சாக்கு நிறைய தங்க நகைகளை கட்டிக்கொண்டுபோய் சீனாவின் சந்தையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து பாம்புக்குட்டியும், பூனைக்குட்டியும் அந்த சாக்குக்குள் வாங்கி வருகிறார்கள். 

இவர்களுக்கு ஒரு சின்ன விசையத்தில் எப்படி பேரம் பேசத்தெரியாது என்பதால் எந்த நாடும் இழக்காதது மாதிரி இலங்கையின் சொத்துக்களை சீனாவிடம் இழந்து வருகிறார்கள். 500 வருடத்திற்கு முன்னர் கையெழுத்து போட்டு போதுக்கீசரிடம் கொடுத்த துறைமுகத்தை 50 வருசத்துக்கு முதல் தங்களுக்கு இனி வேண்டாம் என்று பிருத்தானியர் திருப்பி கொடுத்தவர்கள். (திருகோண்மலையை மட்டும் வைத்திருக்க கேட்டவர்கள்). அந்த 50 வருட சரித்திரத்தில் பட்ட கனுக்கு அதை திரும்ப கையெழுத்து போட்டு சீனாவுக்கு கொடுத்தாயிற்று. அதில் 15% வருமான மட்டும்தான் இனி மேல் இலங்கைக்கு. அது வெறும் வாடகைப் பணத்தைவிட குறைவானது.   இவர்கள் கதிர்காமரை விட இதுவரையில் எந்த பெரிய கைங்கரியமும் செய்யவில்லை. கதிர்காமர் தேடிவிட்டிருந்த நண்பர்கள் இப்போ பகைவர்கள்.

  • Replies 97
  • Views 4.4k
  • Created
  • Last Reply
கோத்தா இல்லையேல் போரில் வெற்றியில்லை – சிறிலங்கா அதிபரின் செயலர்

1000250_641582135866736_1936005179_n.jpg

//வாயிருக்குங்கிறதுக்காக என்னவேனும்னாலும் பேசுவியா நீ.... பிச்சுபுடுவேன் பிச்சு....//

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்செல்வனின் வீரச்சாவு மிக நிச்சயமான பாதுக்காப்பு செயற்பாடில் இருந்த தளர்வு நிலையே காரணம்...   தமிழ்செல்வனோ வேறு யாராக இருந்தாலும்  தங்களின் பாதுக்காப்பு அணியை தாங்களே தெரிவு செய்யும் நிலைதான் இருந்தது... 

சாதாரணமாக சந்தேகப்பட கூடிய ஒரு தாக்குதல் வீரச்சாவும் சம்பந்தப்பட்டால் MO எனப்படும் இராணுவ அலுவலக சமராய்வு பிரிவினரால் பல கட்ட விசாரணக்கு பிறகு பகுப்பாய்வு தொகுப்பாய்வு களின் இறுதியில்  சரியான முடிவுவை எட்டுவார்கள்...  இதில் தவறு வர வெறும் 1% மே சந்தர்ப்பம் இருக்கும்...  இறுதிப்போரில் தர்ம புரத்தில் வீரச்சாவைந்த (வெடி) கேணல் தினேஸ் அண்ணை ( வீரத்தேவன்) பொறுப்பாக இருந்தார்...  தலைவரின் மிக நம்பிக்கையானவர்களில் அவர் ஒருவர்... 

தவிரவும் MI எனப்படும்  இராணுவ புலநாய்வு பிரிவினரின் தகவல்களும் இராணுவ தொலைத்தொடர்புகளை ஒட்டுக்கேட்டல் மற்றும் பலவளிகளில் பெற்று ஒப்பிட்டு பார்க்கப்படும்...  தகவல்கள் ஒண்றாக இருந்தால் முடிவு எட்டப்படும்...  இல்லையாயின் விசாரணைகள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படும்...  MI க்கு  இறுதிப்போரில் வீரச்சாவடைந்த  சசிகுமார் மாஸ்ரரும் கடாபி அண்ணையும் பொறுப்பில் இருந்தனர்... 

இந்த இரு பிரிவும் தலைவரின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருந்தவை...  

தயா அண்ணா,யார் பாதுகாப்புக்கு இருந்தென்ன கடைசி நாட்களில் என்ன நடந்தது என்பது தானே முக்கியம்

கோத்தா இல்லையேல் போரில் வெற்றியில்லை – சிறிலங்கா அதிபரின் செயலர்

1000250_641582135866736_1936005179_n.jpg

//வாயிருக்குங்கிறதுக்காக என்னவேனும்னாலும் பேசுவியா நீ.... பிச்சுபுடுவேன் பிச்சு....//

நாங்கள் இப்படியே நக்கலடித்துக் கொண்டு இருப்போம் அவன் செயலில் காட்டிக் கொண்டு இருக்கட்டும்.இந்தா இலங்கை, சீனா கையில போகப் போகுது,இந்தியா கையில போகுது,அமெரிக்கா கையில் போகப் போகுது என்று நாங்கள் கற்பனையில் மிதப்போம்.அவனுக்குத் தெரியும் தன்னுடைய நாட்டை எப்படி பாதுகாப்பது என்று :) .ஒரு நாட்டின் கையிலும் இலங்கை போகாது. சிங்களவனின் ராஜதந்திரம் 30,40 வருடம் பழமை வாய்ந்தது அதை முறியடிப்பது கஸ்டம்
 
சிங்கள அரசு புலிகளை/தமிழரை அழிக்க வேண்டும் என்பதற்காக மற்ற நாடுகளை   மிரட்டியோ,கெஞ்சியோ தன்ட காரியத்தை சாதித்துக் கொண்டது தானே.அரசியல் ரீதியாகவும்,இராணுவ ரீதியாகவும் ஒரே நேரத்திலும் பலமாக விளங்கினார்கள் தானே...ஒரு தமிழனை[கதிர்காமர்]பாவித்து உலக நாடுகளில் அரசியல் செய்து,அந்த நாடுகளை எல்லாம் இலங்கை தன் பக்கம் திரும்ப வைத்தது தானே,கருணாவை பிரித்தது[கருணா என்பது அந் நேரம் தனி மனிதன் அல்ல],புலிகளுக்குள் ஊடுருவியது,ஆயுதம் வாங்கிக் குவித்தது,சமாதான காலத்திலும் ஆமி பயிற்சி எடுத்தது,புலிகளை அழிக்க வேண்டும் என்று  திட்டமிட்டது அதற்காக ஆளும்,எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்தது.நச்சாயுதம் கூட பாவித்தது தானே.நச்சாயுதம் பாவித்தற்கு எந்த ஆதாரமாவது இருக்குதா?
 
கோத்தாவுக்கு,பொன்சேகாராவைக் பிடிக்காட்டிலும் தன்ட காரியம் முடியும் வரைக்கும் அவனோட‌ ஒற்றுமையாய் நடந்தவன் தானே இந்த ராஜதந்திரம் தமிழனுக்கு இருக்குதா?...பதவி போனப் பிறகு,அவர்கள் கிழடுகளாக போனப் பிறகு அவர்களை தூக்கில் போட்டு என்ன பிரயோசனம்? அவர்கள் பதவியில் இருக்கும் போது அவர்களுக்கு ஒன்றும் நடக்காட்டில் இவ்வளவு தமிழன் இருந்தென்ன பிரயோசனம்?
 
தலைவர் உயிரோடு இருந்தாலும்,புலிகள் ஆயுதங்களை தற்காலிகமாக மெளனித்திருந்தாலும் கூட சிங்கள அரசிற்கு,மகிந்தாவிற்கு முக்கியமாக கோத்தாவிற்கு இது பெரும் வெற்றி தான் ...இனி மேலாவது, ஒரு லட்சியத்திற்காவது ஒற்றுமையாக இருப்பது பற்றி சிங்களவனிடமிருந்து பாடம் படிப்போம்

ம் ..

உண்மையில் கோத்தா இறுதி யுத்தத்தின் சூத்திரதாரி. யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உண்மை அதுதான். உலகின் பல்வேறு உயர் அதிகார, சக்தி மட்டங்களை சமாளித்து தமது வெற்றியின்பக்கம் திருப்புவதில் அவர் தோல்விகாணவில்லை.

சிறுபிள்ளை தனமாகவும், கண்மூடித்தனமாகவும் விவாதிப்பதால் நாம் எதையும் புதிதாக பெற்றுக்கொள்ள போவதில்லை. உண்மையில் தமிழர்களின் (புலிகள் உட்பட) பிரச்சனை இதுவாக கூட இருக்கலாம் (அதீத நம்பிக்கை). உண்மைகள் வெம்மையாக இருந்தாலும், அதை நேரே தரிசித்தல் வேண்டும். அங்குதான் ஏதாவது புதிய பாதை தெரியலாம்.

மாவிலாறில் புலிகள் யுத்த முனையை திறக்கவே விரும்பினர். யுத்தம் வரும் என்று புலிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. அதுவும் கிளிநொச்சி நோக்கியதாக இருக்க போகிறது என்பதும் தெரிந்தே இருந்தது. அதை தாமதிக்க வைக்க மாவிலாறில் வலிந்து களமுனையை திறந்தனர். இல்லையேல் இந்த இறுதி யுத்தம் ஒன்றரை ஆண்டுகள் முன்னதாகவே முடிந்திருக்கும். இது ஒரு கசப்பான உண்மை.

நிறைய எழுதலாம். ஆனால் ஏதாவது பிரையோசனம் உள்ளதா என தெரியவில்லை.

இலங்கை இந்தியாவின் கையில் போகவதாக அல்லது அமெரிக்காவின் கையில் போவதாக யாராவது எழுதுகிறார்கள் என்று  இங்கு சொன்னால் அதில் உண்மை இல்லை. அது அரசை காப்பாற்ற, சீனா இலங்கையை முழுங்குகிறது என்ற எல்லோரும் ஒத்துகொண்ட கதையை திசை திரும்பும் முயற்சி. நாம் அல்ல கொழும்பு துறைமுகத்தில் 85% பங்கு சீனாவுக்கு போனது என்று எழுதியது. நாம் அல்ல நுரைசோலை, பட்ட கடனுக்கு எத்தனையோ பங்கு கீழே தள்ளி சீனாவுக்கு விற்க முயல்படுகிறது என்று எழுதுவது. நாம் அல்ல சீனா தேவையில்லாமல் அம்பாந்தோட்டை துறைமுகம் கட்டி அதில் இலங்கை சீனாவிடம் மாண்டு போயிருக்கு என்று எழுதியது. நாம் அல்ல சீனா புத்தம் புதிசாக சரவதேச விமானம் நிலையம் கட்டிய பின்னர் அது பிளேன்களுக்கான Junkyard ஆக மாற்ற திட்டம் நடக்கிறது என்று எழுதியது. நாம் அல்ல அம்பாந்ததோட்டை சர்வதேச விளையாட்டரங்கிற்குள் காட்டு யானைகள் ம்ட்டும் கிறிகெட் அடிக்க சீனா கடன் கொடுத்து கட்டிக்கொடுத்திருக்கு என்று எழுதியது. அது இப்போ ஒரு ஆமி காம் என்று நினக்கிறேன். நாம் அல்ல காருக்கு பெற்றொல் இறக்குமதி செய்ய நாடொன்றைகண்டுபிடிக்காமல், எண்ணை சுத்திகரிக்கிற ஆலை வருடத்தில் பலதடவைகள் ஓட முடியாமல் நிறுத்தப்டும் போது நெடுஞ்சாலைகள் போட்டு சீனாவிடம் 50% கொமிசன் வாங்கிக்கிறார்கள் என்று எழுதியது. 50 மேர்பட்ட நிறுவனங்களின் கணனிகளை முடக்கி சீனா இலனகையை பணியவைத்த கதை எல்லோருக்கும் தெரியும்.  சீனா கட்ட என்று காகித ஆலைக்கு தீ வைத்தது தெரியும். கொழும்பு துறை முகத்திற்கு தீவைத்து தெரியும். தாயன் ஜெயதிலகா  தான் சொன்னவர் இலங்கையில் சீனாவின் இலவச கழஞ்சியங்கள் இலங்கையின் குடிசைக்கை தொழிகள் கம்பனிகள் எல்லவற்றையும் தரை மட்டமாக்க என்றுதான் நிறுவப்பட்டிருக்கு என்று.  சீனா பால் மா விற்க வென்று சர்வ்தேச புகழ் வாய்ந்த பெட்ர்றா கம்பனி இலங்கையில் மூடப்படுகிறது.  
 
அதே நேரம் எல்லோருக்கும் தெரியும் அமெரிக்காவால் இலவசமாக ஒரு அமெரிக்கன் சென்றர் திறக்க முடியவில்லை என்று. எல்லோருக்கும் தெரியும் அமெரிக்க டோல் கம்பனி வாங்கிய காணியை அரசு திருப்பி எடுதது என்றது. எல்லோருக்கும் தெரியும் 50,000 வீடு போர் அகதிகளுக்கு என்ற இந்தியா ஆயிரம் கட்ட இலங்கை அரசுடன் கஸ்டப்படுகிறதென்பது. எல்லோருக்கும் தெரியும் 6 வருடத்தின் பின்னர் இன்னமும் சாம்பூர் அனல் மின்சார நிலையத்திற்கு அனுமதி பெற முடிடுயவில்லை என்பது, எண்ணைக்குதம், சங்கரிலா கொட்டேல் நிலம்........ 13ம் திருத்தம், தமிழ் மீன்வர் கைது........ இதையெல்லாம் மூடி மறைத்து "இலங்கை, சீனா கையில போகப் போகுது,இந்தியா கையில போகுது,அமெரிக்கா கையில் போகப் போகுது என்று நாங்கள் கற்பனையில் மிதப்போம்." என்று  அரசியல் ஆராச்சி செய்து எழுதுவது இலங்கையில் நடப்பதே தெரியாத ஒருஆள் செய்வதாக இருக்க வேண்டும் அல்லது அரசுக்கு வக்காலத்து வாங்கும் ஒருவர் செய்ய வேண்டும். .   இவ்வளவும் வெளியே கொண்டு வந்தவர்களில் ஒருவர் தமிழன் அல்ல . அவ்வளவும் சிங்கள ஊடகங்கள், அதிகாரிகள், JVP, UNP மட்டுமே. இதில் நாம் எதுவும் கற்பனையில் மிதக்கவும் இல்லை. கள்ளுப் பனையில் ஏறவும் இல்லை. 
 
சிங்கள அரசு புலிகளை/தமிழரை அழிக்க வேண்டும் என்பதற்காக மற்ற நாடுகளை   மிரட்டியோ,கெஞ்சியோ தன்ட காரியத்தை சாதித்துக் கொண்டது தானே. அரசியல் ரீதியாகவும்,இராணுவ ரீதியாகவும் ஒரே நேரத்திலும் பலமாக விளங்கினார்கள் தானே...ஒரு தமிழனை[கதிர்காமர்]பாவித்து உலக நாடுகளில் அரசியல் செய்து,அந்த நாடுகளை எல்லாம் இலங்கை தன் பக்கம் திரும்ப வைத்தது தானே,கருணாவை பிரித்தது[கருணா என்பது அந் நேரம் தனி மனிதன் அல்ல],புலிகளுக்குள் ஊடுருவியது,ஆயுதம் வாங்கிக் குவித்தது,சமாதான காலத்திலும் ஆமி பயிற்சி எடுத்தது(சிங்கள அரசு யாரையோ மிரட்டுகிறதாக கற்பனையில் மிதப்பது அவர்களின் தனி முடிவு. இலங்கையுடன் தனி வியாபரங்களில் இறங்கிய இந்திய அதிகாரிகள் பயப்படுகிறார்கள். அது மத்திய தேர்தல் முடிய சரியாகிவிடும்.  சிங்கள அரசு செய்த ராஜதந்திரம் தனிய லஞ்சம் கொடுப்பது.  சந்திரிக்கா வந்த பின்னர் தமிழரில் இருந்த துரோகி  தமிழருக்கு உதவ தான் வெளிக்கிட்டிருப்பதாக சர்வதேச நாடுகளுக்கு நடித்து செய்த துரோகம் இன்று இலங்கையின் ராஜதந்திமாக அழைக்கப்படுகிறது. துரோகிகள் தாங்கள் தமிழருக்கு வண்டவாளம் வைப்பத்தாக சொல்லிக்கொண்டு இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் எதுவும் புதிதல்ல கிட்டலர் பதவிக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு கிட்டலர் ஆதரவாளன் ஒருவன் தான் பதவிக்கு வந்தான். நோர்வே, சுவீடன், டென்மார்க், போலந்து, ஒல்லாந்து எங்கும் இதே கதைதான் நடந்தது. இதில் கருணா, பிள்ளையான், தேவானந்தா ஒன்றும் புதுக்கதை ஆல்ல்.   இது நடை பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கதாக ரூசியாவிலும் இங்கிலாந்திலும். இந்த ராஜதந்திரதுக்கு போனவர்கள் எல்லோரும் கிடலர் மண் கவ்வும் போது தாமும் சேர்ந்துதான் போனார்கள். ),புலிகளை அழிக்க வேண்டும் என்று  திட்டமிட்டது அதற்காக ஆளும்,எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்தது.நச்சாயுதம் கூட பாவித்தது தானே.நச்சாயுதம் பாவித்தற்கு எந்த ஆதாரமாவது இருக்குதா? சிலருக்கு ஆதாரம் பெரிய  கவலை. அவர்களே எழுதும் போது ஆதாரம் காட்டி எழுதுவதும் இல்லை. இராசாயன ஆயுத ஆதாரம் பல இடங்களில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கு அமெரிக்கா தமிழ் நாட்டு அகதிகளிடம் சென்று உண்மைகள் அறிந்து வைத்திருக்கு. நூறு, நூற்றமைப்பது படங்கள் இணையங்களில் வெளி வந்துவிட்டது.  இலங்கை ஐ.நா வில் ஒரு நாடு.  ஜனநாயக முறையால் தெரியப்பட்ட ஜன்னதிபதி இருக்கிறார். இது சர்வதேச விசாரணை வர ,வழக்கில் பாவிக்கத்தக்க ஆவணங்களை வெளிவிட தடையாக இருக்கிறது. வழக்கு வந்த பின்னர் "ஆதாரம் எங்கே இருக்கிறதா" என்று கேட்டு யாரும் தொண்டு நிறுவனங்களை கேட்டு மிரட்ட அவர்கள் மிரண்டு போவத்ற்கு அவர்களில் யாரும் குழந்தைகள் இல்லை.  வழக்கு வரபோகிறது என்றது இனி திருப்ப முடியாத உண்மையாகிவிட்டது. 
 
கோத்தாவுக்கு,பொன்சேகாராவைக் பிடிக்காட்டிலும் தன்ட காரியம் முடியும் வரைக்கும் அவனோட‌ ஒற்றுமையாய் நடந்தவன் தானே(கோத்தாவுக்கு பொன்சேக்கவை பிடிக்காது அல்ல. அது சிலர் எழுதும் நக்கல். மகிந்தாவுக்கும் பொன்சேக்கவுக்குமிடயில்தான் பிரச்சனை. உண்மைகளை திரிப்பது விவாதத்தை சீர் குலைப்பது. மேலும் இதில் ஒன்றும் புதியது இல்லை. கிட்லர் கூட மிகத்திறமையான ஜென்றல்களை தூக்கு போட்டான், அல்லது சுட்டுத் தள்ளினான். சர்வாதிகாரிகள் தேவையான போது பாவித்துவிட்டு போட்டுத்தள்ளுவது புதியதல்ல. பொன்சேக்கா இருக்கிறார். ஆனல் கதிர்காமர் போயும் சேர்ந்திட்டார் என்றது சிலருக்கு அட்டிக்கடி ம்றந்து போகிறது. வழமையில் ஒரு ஜென்றல், அல்லது துரோகி ஒரு இடத்தில் தன் கொடூரத்தை காட்டுவான். மற்ற இடத்தில் காட்டமாட்டன். அது அவனுக்கு தேவையான இடம். ஆனால் சர்வாதிகாரிக்கு தேவை இல்லாத இடம். பொன்சேக்கா ஆமியை களை எடுக்க விரும்பவில்லை. போர் முடிந்தவுடன் அது அவசியம். கதிர்காமர் மேற்கு நாடுகளை பொலோகம, பீரிசு, போல  பகைக்க மறுத்தார். அது அவரின் கைப்பிடி. என்வே இரண்டு பேரும் போனார்கள்.) இந்த ராஜதந்திரம் தமிழனுக்கு இருக்குதா? தமிழனிடம் மட்டும் தான் ராஜதந்திரம் இருக்கு. அவன் இல்லாத போது ஒரு மேற்குநாட்டுடன் இலங்கைக்கு இப்போது உறவே இல்லை. அதில் ராஜதந்திரம் என்றும் வேறு ஒன்று இருக்கா. ரணிலுக்கு எந்த நாடாவது கை கொடுத்தா? சந்திக்காவுக்கு எந்த நாடாவது மறுத்ததா? அதுதான் தமிழனின் திறமை. அல்லது துரோக்க குணம். )...பதவி போனப் பிறகு,அவர்கள் கிழடுகளாக போனப் பிறகு அவர்களை தூக்கில் போட்டு என்ன பிரயோசனம்? அவர்கள் பதவியில் இருக்கும் போது அவர்களுக்கு ஒன்றும் நடக்காட்டில் இவ்வளவு தமிழன் இருந்தென்ன பிரயோசனம்? இவ்வளவு இருக்கும் தமிழர் 8% இவ்வளவு இருக்கும் சிங்களவர் 78% இதன் பின்னர் அரசில் யாராவது தண்டிக்கப்பட்டால் அது ஆச்சரியப்படகூடியது. ஆனால் அது நடக்கப்போகிறது.
 
தலைவர் உயிரோடு இருந்தாலும்,புலிகள் ஆயுதங்களை தற்காலிகமாக மெளனித்திருந்தாலும் கூட சிங்கள அரசிற்கு,மகிந்தாவிற்கு முக்கியமாக கோத்தாவிற்கு இது பெரும் வெற்றி தான் ...Winning a battle is not winning the war. எது நடந்தாலும் இவ்வளவு தமிழ்ர் மிஞ்சித்தான் இருக்கிறம். இனி மேலாவது, ஒரு லட்சியத்திற்காவது ஒற்றுமையாக இருப்பது பற்றி சிங்களவனிடமிருந்து பாடம் படிப்போம் . ஆனந்தி தொடக்கம், ஆனந்த சங்கரி வரைக்கும்  ஒற்றுமையாக இருக்கும் போது யாழில் மாற்றுக்கருத்துகள் தங்களின் படிப்பறிவை வைத்துக்கொண்டு, கூட்டமைப்பு, TGTE, GTF , BTF, தமிழ்நாட்டு அரசியல் வாதிகள், கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் தாயக மக்கள் எல்லோரையும்  வேண்டுமென்று முட்டாள் பட்டம் கட்டி குறுக்கை இழுக்காமல் விட்டால் அது நடை பெறத் தடை இல்லை. அது நடந்து கொண்டிருக்கு. அதன் பலன் இன்னும் சில நாட்களில் தெரிய தொடங்கப் போகிறது. கதிர்காமர் தமிழருடன் சேர்ந்து உழைத்தார், ஆனல் தமிழர் அவருடன் ஒற்றுமையாக இருக்கவில்லை,  கருணா வெளியே துரத்தப்பட்டான், ஆனல் பொட்டம்மான்தான் உண்மையான துரோகி, என்று அரசின் அடிவருடிகளை இனி கன நாட்கள் காப்பாற்ற முடியாது.  

நாங்கள் இப்படியே நக்கலடித்துக் கொண்டு இருப்போம் அவன் செயலில் காட்டிக் கொண்டு இருக்கட்டும்.இந்தா இலங்கை, சீனா கையில போகப் போகுது,இந்தியா கையில போகுது,அமெரிக்கா கையில் போகப் போகுது என்று நாங்கள் கற்பனையில் மிதப்போம்.அவனுக்குத் தெரியும் தன்னுடைய நாட்டை எப்படி பாதுகாப்பது என்று :) .ஒரு நாட்டின் கையிலும் இலங்கை போகாது. சிங்களவனின் ராஜதந்திரம் 30,40 வருடம் பழமை வாய்ந்தது அதை முறியடிப்பது கஸ்டம்
 
சிங்கள அரசு புலிகளை/தமிழரை அழிக்க வேண்டும் என்பதற்காக மற்ற நாடுகளை   மிரட்டியோ,கெஞ்சியோ தன்ட காரியத்தை சாதித்துக் கொண்டது தானே.அரசியல் ரீதியாகவும்,இராணுவ ரீதியாகவும் ஒரே நேரத்திலும் பலமாக விளங்கினார்கள் தானே...ஒரு தமிழனை[கதிர்காமர்]பாவித்து உலக நாடுகளில் அரசியல் செய்து,அந்த நாடுகளை எல்லாம் இலங்கை தன் பக்கம் திரும்ப வைத்தது தானே,கருணாவை பிரித்தது[கருணா என்பது அந் நேரம் தனி மனிதன் அல்ல],புலிகளுக்குள் ஊடுருவியது,ஆயுதம் வாங்கிக் குவித்தது,சமாதான காலத்திலும் ஆமி பயிற்சி எடுத்தது,புலிகளை அழிக்க வேண்டும் என்று  திட்டமிட்டது அதற்காக ஆளும்,எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்தது.நச்சாயுதம் கூட பாவித்தது தானே.நச்சாயுதம் பாவித்தற்கு எந்த ஆதாரமாவது இருக்குதா?
 
கோத்தாவுக்கு,பொன்சேகாராவைக் பிடிக்காட்டிலும் தன்ட காரியம் முடியும் வரைக்கும் அவனோட‌ ஒற்றுமையாய் நடந்தவன் தானே இந்த ராஜதந்திரம் தமிழனுக்கு இருக்குதா?...பதவி போனப் பிறகு,அவர்கள் கிழடுகளாக போனப் பிறகு அவர்களை தூக்கில் போட்டு என்ன பிரயோசனம்? அவர்கள் பதவியில் இருக்கும் போது அவர்களுக்கு ஒன்றும் நடக்காட்டில் இவ்வளவு தமிழன் இருந்தென்ன பிரயோசனம்?
 
தலைவர் உயிரோடு இருந்தாலும்,புலிகள் ஆயுதங்களை தற்காலிகமாக மெளனித்திருந்தாலும் கூட சிங்கள அரசிற்கு,மகிந்தாவிற்கு முக்கியமாக கோத்தாவிற்கு இது பெரும் வெற்றி தான் ...இனி மேலாவது, ஒரு லட்சியத்திற்காவது ஒற்றுமையாக இருப்பது பற்றி சிங்களவனிடமிருந்து பாடம் படிப்போம்

எங்கட இராஜதந்திரத்தை முறையடித்தது சிங்களவன் இல்லை... 

எங்களவர்களை முறையடிச்சது எங்களவர்கள் தான்...   துரோகிகளை உருவாக்கியது சிங்களம் என்பதில் உண்மை இல்லை...   அது இந்தியா...!  

முள்ளிவாய்க்கால் வரைக்கும் 1987 முதல் முள்ளிவாய்க்கால் வரைக்கும் சிங்களத்துக்கு ஆதரவாக இருந்தது இந்தியாவை ஆழும் காங்கிரஸ்... !   அதுக்காக சிங்களம் ஏதும் செய்ய வேண்டி இருக்கவில்லை...  செய்யவும் இல்லை...  வலிய வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது ... 

புலிகளுக்கு பிரச்சினையை குடுத்தது கூட சமாதானம் ஆரம்பித்த காலங்களில் இந்தியாவின் ஆட்சிக்கு காங்கிரஸ் வந்தது தான்...  பின் இறுதி வரை தொடர்ந்தது...  அது இலங்கை சிங்களவனின் இராஜதந்திரத்தால் வந்தது கிடையாது... 

Edited by தயா

எங்களவர்கள் தான் எங்கள் இனத்தின் முதல் எதிரி என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் துரோகிகளை உருவாக்க நினைத்தது இலங்கை அதற்கு பெருமளவு உதவி செய்தது வேண்டுமானால் இந்தியாவாக இருக்கலாம்...இந்தியாவைப் பொறுத்த வரை இலங்கையில் கால் ஊன்ற வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டவர்கள்.புலிகளை அழித்து முடித்து விட்டால் அந்த எண்ணம் சாத்தியமாகது என்று தெரியாமலா இருப்பார்கள்?...இந்தியா புலிகளுக்கு தண்டனை கொடுக்க நினைத்திருக்கலாம் ஆனால் முற்றாக அழிக்க நினைத்திருக்க மாட்டார்கள் இது என் கருத்து.
 
உங்கள் கருத்தின் படி பார்த்தாலும் வலிய வந்த சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்தியது அல்லவா அதுவே பெரிய ராஜதந்திரம் தானே :)

சரியான கணிப்பீடு..

இராஜீவ் கொலையில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட தலைவரும், பொட்டு அம்மானும் அருகில் உள்ள தீவில்தான் இருந்தார்கள்.. அறிவிப்பு வந்தது 1991 இல்.. ஆனால் 2003 (?) இல் தலைவர் ஊடக சந்திப்பைக்கூட நடத்தினார்.. இந்தியா சும்மாதான் இருந்தது..

2003 இல்தான் ராகுல்காந்தி வெளிநாட்டில் ஒரு படிப்பை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் நடந்தது.. 2004 இல் நடந்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார்.

ஒரு கதைக்கு அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளி மெக்சிகோவில் ஒளிந்திருந்தால் அமெரிக்கா ஆண்டுக்கணக்கில் விட்டுவைக்குமா? ஸ்னோடனுக்காக இரஷ்ய உறவே அல்லாடும் நிலை உள்ளது..

ஆக, 2004 இல் பதவிக்கு வந்த காங்கிரஸ் கொள்கை மாற்றம் செய்தது.. மலையாள அதிகாரிகள் அந்தக் கொள்கை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய பாதகங்களை எடுத்துரைக்காமல் ஜால்ரா போட்டுவிட்டார்கள்.. இன்று சிங்களக்குதிரை லாயத்தை விட்டு ஓடிவிட்டது..

கொமன்வெல்த் மாநாட்டுக்கு போவதை உறுதிப்படுத்தாமல் இழுத்தடிப்பது, போர்க்குற்ற வாக்கெடுப்பில் விளையாட்டு காட்டுவது என்று இந்தியாவின் கொள்ளு போட்டு குதிரையை ஈர்க்கும் இராஜதந்திரம் தொடர்கிறது..

சாகசங்களுடன் முப்பது வருடம் தொடர்ந்த போரின் முடிவு ஒன்றும் ஆச்சரியமான விசயம் கிடையாது. வெளிப்படயான முடிவுதான். தமிழர்களின் தோல்வி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதே. அதற்கான காரணங்களும் வெளிப்படையானதே.

சிங்களவர்களின் படைபலம் ஊதிப்பெருத்துக்கொண்டிருந்தது தமிழர் தரப்பின் படைபலம் என்றுமில்லாதவாறு நலிந்துகொண்டிருந்தது. சிங்களவர்கள் வேலைவாய்ப்பாக வீட்டுக்கொருவரை படையில் இணைத்தனர். தமிழர் வீட்டுக்கு ஒருவர் அல்லது குடும்பம் குடும்பமாக வெளிநாடுசென்றனர். போராட்டம் படிப்படியாக நாற்பத்தைந்து லட்சம் மக்களில் இருந்து மூன்று லட்சம் மக்களிடம் முடக்கப்பட்டது. அந்த மூன்று லட்சம் மக்களிலும் போராடும் வலுவுடையோர் முப்பதாயிரமும் இல்லை.

புலிகள் மரபு வளிக்கு மாறிக்கொண்டிருந்தார்கள் இராணுவரம் மரபுவளிபாதி கொரில்லா வளி பாதி என்று தன்னை மாற்றிக்கொண்டது. அதனடிப்படையில் ஆள ஊடுருவும் அணிகள் ஊடாக காடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. புலிகள் விரும்பினாலும் இனி கொரில்லா வளிக்கு செல்லமுடியாது என்ற நிலையை கொண்டுவந்தார்கள். காடுகளுக்குள் தலமைக்கு பாதுகாப்பு என்ற கதைக்கே இடமில்லை என்ற நிலையை தோற்றுவித்தார்கள்.

புலிகளுக்குள் நடந்த உள் முரண்பாடுகள் கருணா பிளவு உட்பட்ட புலநாய்வுத்துறையின் நடவடிக்கைகள் இருந்த சொற்ப ஆளணிப்பலத்தினதும் போராடும் மனவலிமையை சின்னாபின்னமாக்கியருந்தது.

எதிர்நோக்கியிருந்த சர்வதேசத்தினது அங்கீகாரத்திற்குப் பதிலாக பல நாடுகள் பயங்கரவாதமாக தடைசெய்தது அரசியல் ரீதியான நம்பிக்கையை தகர்த்தெறிந்தது.

புலிகளுக்கான வளங்கல்களை சர்வதேச உதவியுடன் கட்டுப்படுத்திய அதே நேரம் என்றுமில்லாதளவுக்கு தமது ராணுவத் தளபாடங்களை பெருக்கிக்கொண்டார்கள்.

போராடும் ஆளணிபலம் போராடும் தளம் போராடத்தேவையான ஆயுதங்கள்  மனவலிமை சர்வதேச அங்கீகாரம் அனைத்தையும் திட்டமிட்டு தடுத்தும் தமது பக்கம் பெருக்கியும் வெற்றிபெற்றுக்கொண்டார்கள்.  இவைகள் எல்லாம் பொட்டம்மான் அல்லது காஸ்ரோ அல்லது பிரபாரகன் என்ற தனிமனிதர்களின் தவறாக அணுகமுடியாது. அப்படி அணுக முற்பட்டால் அதைவிட அடிமுட்டாள்த்தனம் வேறெதுவும் இருக்கமுடியாது. இது தமிழர்களின் பலவீனம் சிங்களவர்களின் பலம் என்றுதான் அணுகமுடியும். எம்மை இந்தப் பலவீனத்திற்குள் உட்படுத்திக்கொண்டுதான் இதை அணுகமுடியுமே தவிர நாம் வெளியில் சுதந்திரமாக நின்று விமர்சிக்கமுடியாது. படுதோல்வியின் பங்கில் இருந்து ஒரு தமிழனும் அந்நியப்படமுடியாது.

வல்லரசுகளால் தோற்றோம்.
இல்லாவிட்டால் கோத்தா காற்றில் பறந்திருப்பார்  

கோத்தாவுக்கு,பொன்சேகாராவைக் பிடிக்காட்டிலும் தன்ட காரியம் முடியும் வரைக்கும் அவனோட‌ ஒற்றுமையாய் நடந்தவன் தானே இந்த ராஜதந்திரம் தமிழனுக்கு இருக்குதா?

ரதி,

சீமானில் இருந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பலரின் சிறு தவறுகளையும் கூட நுணுக்குக்காட்டி வைத்து அல்லது ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் கொடுத்து சின்ன விடயங்களையும் பெருப்பித்து இருக்கும் ஆதரவுகளையும் இல்லாமல் செய்வது போன்று விமர்சிக்கும் நீங்கள் இந்த வரிகளை எழுதியதைப் பார்க்க சிரிப்பு வருகின்றது.

ஊருக்கு மட்டுமே உபதேசம்.

நன்றி வணக்கம்.

சரியான கணிப்பீடு..

இராஜீவ் கொலையில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட தலைவரும், பொட்டு அம்மானும் அருகில் உள்ள தீவில்தான் இருந்தார்கள்.. அறிவிப்பு வந்தது 1991 இல்.. ஆனால் 2003 (?) இல் தலைவர் ஊடக சந்திப்பைக்கூட நடத்தினார்.. இந்தியா சும்மாதான் இருந்தது..

2003 இல்தான் ராகுல்காந்தி வெளிநாட்டில் ஒரு படிப்பை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் நடந்தது.. 2004 இல் நடந்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார்.

ஒரு கதைக்கு அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளி மெக்சிகோவில் ஒளிந்திருந்தால் அமெரிக்கா ஆண்டுக்கணக்கில் விட்டுவைக்குமா? ஸ்னோடனுக்காக இரஷ்ய உறவே அல்லாடும் நிலை உள்ளது..

ஆக, 2004 இல் பதவிக்கு வந்த காங்கிரஸ் கொள்கை மாற்றம் செய்தது.. மலையாள அதிகாரிகள் அந்தக் கொள்கை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய பாதகங்களை எடுத்துரைக்காமல் ஜால்ரா போட்டுவிட்டார்கள்.. இன்று சிங்களக்குதிரை லாயத்தை விட்டு ஓடிவிட்டது..

கொமன்வெல்த் மாநாட்டுக்கு போவதை உறுதிப்படுத்தாமல் இழுத்தடிப்பது, போர்க்குற்ற வாக்கெடுப்பில் விளையாட்டு காட்டுவது என்று இந்தியாவின் கொள்ளு போட்டு குதிரையை ஈர்க்கும் இராஜதந்திரம் தொடர்கிறது..

1. அமெரிக்காவயும் இந்தியாவையும் ஒப்ப்பிடுவது சரியான ஒப்பீடு அல்ல. ஒரு கதைக்கு மட்டுமாகத்தான் இருக்கலாம். 

2.மெச்சிகோவில் அமெரிக்கா பெருந்தொகையான முதல்களை போட்டு தோல்வி அடைந்திருக்கு. இதனால் சரித்திரத்தில் இல்லாதவாறு இரண்டு நாடுக்குமிடையில் வேலி போட முடிவெடுத்து செய்துவைத்திருக்கிறார்கள். அமெரிக்கா தேடும் எத்தனையோ குற்றவாளிகள் மெசிக்கோவில் வெளிப்படையாகத்திரிகிறார்கள்.  இதனால் NT Pact கூட மேலே போக முடியவில்லை.

3.அமெரிக்காவில் அவர்களின் குற்றவாளிகள் வெளிப்படையாகத் திரிகிறார்கள்.  கம்பினோ பமிலி, கோட்டி பமிலி, கப்பிறியானோ பமிலி, ரஸ்சியன் மாபியாக்கள்......... அரிசோனா மெச்சிக்கோவின் குற்ற்வாளிகள் அங்கிருந்து தப்புவதற்க்கா அரிசோனா வருவதாக மத்திய அரசின் குடிவரவு சட்டத்தை மீறி தாங்கள் சட்டம் இயற்றினார்கள். 

இந்திய அரசு இன்றும் தலைவர் இருக்கிறார் என்று சந்தேகப்படுகிறது. இதை சிதம்பரம் பலதடவை இலங்கைக்கு வெளிக்காட்டிவிட்டார். ஆனால் அவரை தாங்கள் தேடுவதாக தெரிக்கவில்லை. இந்தியாவின் சம்மபள படியலில் இருப்போர் தலைவரை இல்லை என்று வாதிடுவது கூட அதில் ஒரு பாகம். இந்திய மத்திய அரசு தலைவர் மீதான வழக்கை வாபஸ் பெறவும் மறுத்துவருகிறது. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

சீமானில் இருந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பலரின் சிறு தவறுகளையும் கூட நுணுக்குக்காட்டி வைத்து அல்லது ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் கொடுத்து சின்ன விடயங்களையும் பெருப்பித்து இருக்கும் ஆதரவுகளையும் இல்லாமல் செய்வது போன்று விமர்சிக்கும் நீங்கள் இந்த வரிகளை எழுதியதைப் பார்க்க சிரிப்பு வருகின்றது.

ஊருக்கு மட்டுமே உபதேசம்.

நன்றி வணக்கம்.

முதலில் நான் என்ன அரசியல்வாதியா? போராளியா? அல்லது போராளிகளின் தலைவரா
 
சீமானோ,வைகோ தவறு செய்தால் நீ செய் ராசா என்று நான் பார்த்திட்டு சும்மா இருக்க வேண்டுமா?...அடுத்து இவ்வளவு காலமும் அவர்கள் எங்களுக்கு என்ன நன்மைகள் அதாவது உருப்படியாக என்ன செய்தார்கள் என பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.
 
கோத்தாவுக்கு பொன்சேகாராவில் நம்பிக்கை இருந்தது,போரை வெல்வதற்கு அவரது உதவி தேவைப்பட்டது.அதனை கோத்தா பயன் படுத்தினார்.எனக்கு சீமானில் நம்பிக்கை இல்லை.என்னுடைய கருத்தை சொன்னேன்.உங்களுக்கு அவர் மேல் நம்பிக்கை இருந்தால் அவரை நம்பி அவருக்கு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்.அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.யார் என்ன எழ்தினாலும் அவர் ஒரு அரசியல்வாதி தான் செய்கிறதைத் தான் செய்வார்.
 
நன்றி வணக்கம் சொல்லி விட்டு ஓடிட்டீங்கள்.சீமானை இழுத்து விட்டீங்கள் வாலுகள் வருவார்கள் நன்றி :)

Edited by ரதி

.அப்பாடா.... எதிர்பார்த்தளவுக்கு பதில் தாக்குதல் இடம்பெறவில்லை... :)

முதலில் நான் என்ன அரசியல்வாதியா? போராளியா? அல்லது போராளிகளின் தலைவரா
 
சீமானோ,வைகோ தவறு செய்தால் நீ செய் ராசா என்று நான் பார்த்திட்டு சும்மா இருக்க வேண்டுமா?...அடுத்து இவ்வளவு காலமும் அவர்கள் எங்களுக்கு என்ன நன்மைகள் அதாவது உருப்படியாக என்ன செய்தார்கள் என பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

இவர்கள் இழுத்து விடும் லிஸ்டை பார்த்து...ஏன் இவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி பிடிக்க முடியவில்லை, எங்களுக்கு விமோசனம் கிடைக்கவில்லை என்று நினைச்சு பயித்தியமே பிடிக்கும்

நீங்கள் pandora வின் பெட்டியை திறந்துவிட்டீர்கள்

சாகசங்களுடன் முப்பது வருடம் தொடர்ந்த போரின் முடிவு ஒன்றும் ஆச்சரியமான விசயம் கிடையாது. வெளிப்படயான முடிவுதான். தமிழர்களின் தோல்வி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதே. அதற்கான காரணங்களும் வெளிப்படையானதே.

சாகசங்கள் என்று அடி எடுப்பதே மனநிலையக் காட்டுகிறது. இதனால் தரவுகளை நடு நிலைமையாக் ஆராயாமல் “தமிழர் அழிவதாக” என்று வாழ்த்தி முடிப்பதுதான் வழமையான விவாத முடிவு. "தமிழரின் தோல்வி" என்பது மாற்றுக்கருதுக்கள் வாயால் காட்டும் சாகசங்கள். மாற்றுக்கருத்துக்களின் வாய் சொகிறது ஆனால் கோத்தாவின் பிடரி கும்பிடுகிறது என்றதை கோத்தாவிடம் இருந்த சட்டத்துறையைப் பறித்து புதிய அமைச்சு ஆக்க வேண்டி வந்திருப்பதில் தெரிகிறது. அமெரிக்காவிக்கு ஐ.நாவில் வைத்து வாலாட்டிவிட்டத்தக்க நினக்கிறார்கள். இன்று அமெரிக்கா சிரியாவை தாக்க ஆரம்பிப்பது என்று முடிவு எடுத்திருக்கிறது. இதன் பின்னர் மகிந்தா ஓடி வந்து அமெரிக்கவின் காலில் விழப்போவதை  மாற்றுக்கருத்துக்களால் இனியும் தடுக்க முடியாது. தமிழர் தோற்ற காரணம் சரித்திர காலமாக தமிழரில் இருக்கும் காக்கை வன்னியர்களால், கதிர்காமர்களால் என்பது வெளிப்படை.

சிங்களவர்களின் படைபலம் ஊதிப்பெருத்துக்கொண்டிருந்தது தமிழர் தரப்பின் படைபலம் என்றுமில்லாதவாறு நலிந்துகொண்டிருந்தது. சிங்களவர்கள் வேலைவாய்ப்பாக வீட்டுக்கொருவரை படையில் இணைத்தனர். தமிழர் வீட்டுக்கு ஒருவர் அல்லது குடும்பம் குடும்பமாக வெளிநாடுசென்றனர். போராட்டம் படிப்படியாக நாற்பத்தைந்து லட்சம் மக்களில் இருந்து மூன்று லட்சம் மக்களிடம் முடக்கப்பட்டது. அந்த மூன்று லட்சம் மக்களிலும் போராடும் வலுவுடையோர் முப்பதாயிரமும் இல்லை.

புலிகள் மரபு வளிக்கு மாறிக்கொண்டிருந்தார்கள் இராணுவரம் மரபுவளிபாதி கொரில்லா வளி பாதி என்று தன்னை மாற்றிக்கொண்டது. அதனடிப்படையில் ஆள ஊடுருவும் அணிகள் ஊடாக காடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. புலிகள் விரும்பினாலும் இனி கொரில்லா வளிக்கு செல்லமுடியாது என்ற நிலையை கொண்டுவந்தார்கள். காடுகளுக்குள் தலமைக்கு பாதுகாப்பு என்ற கதைக்கே இடமில்லை என்ற நிலையை தோற்றுவித்தார்கள்.

இதில் ஒரு புதிய படை ஆராய்வும் வரவில்லை. ஆனையிறவு வெற்றி சரிக்குச்சரியான ஆளனியால் வந்தது அல்ல. அதில் எந்த கொறில்லா தொழில் நுட்பமும் பாவிக்கவும்படவில்லை. ஆயிரம் எலி கூடி பூனைக்கு மணி கட்டியது கிடையாது. எதைத்தான் சொன்னாலும் அமெரிக்க உதவியால் மட்டுமே ஆயுதக்கப்பல் தாழ்ந்தது. புலிகள் போராடாமல் பின் வாங்கியது அமெரிக்கா பலதுறைகளில் போரில் தன்னை ஈடுபடுத்திய பின்னர். இதை சந்திரரிக்காவுக்கக்க பெற்றுக்கொடுத்தவர் கதிர்காமர். அந்த அமெரிக்காவே தான் இன்று இலங்கை அரசை LLRC பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்று அழுத்தி கோத்தாவின் அமைச்சை பிரித்துவிட்டிருக்கு. இது கோத்தாவுக்கு பயங்கரமான் வெற்றியாகக் கருத்தப்படுகிறது(விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று நடிக்கும் மாற்றுக்கருத்துக்களால் மட்டும்).

அரசு வன்னிக் காட்டுக்குள் போய் காணதது எதையும் காணவில்லை. இன்று போர் முடிந்து, வன்னியை ஒவ்வொரு மணலாக உழுது பார்த்தும் புலிகள் வைத்திருந்த கனரக ஆயுதங்களுக்கு என்ன ஆனது என்று அரசுக்கு தெரியாது. போன புலிகள் எத்திரியாவுக்கு எடுத்து சென்றார்களா அல்லது காட்டுக்குள் புதைத்தார்களா என்பது இன்னும் அவர்களுக்கு தெரியாது. அந்த நேரம் அவர்கள் காடுக்குள் புந்த போது சில கொலைகளை மட்டும்தான் செய்ய முடிந்தது.

புலிகளுக்குள் நடந்த உள் முரண்பாடுகள் கருணா பிளவு உட்பட்ட புலநாய்வுத்துறையின் நடவடிக்கைகள் இருந்த சொற்ப ஆளணிப்பலத்தினதும் போராடும் மனவலிமையை சின்னாபின்னமாக்கியருந்தது.

கருணா முடிவில் தனிக்கட்டையாகத்தான் ஓடினார். 6000 ஆளணியில் குறந்தது 100 தன்னும் கருணா பிள்ளையானுடன் போனார்களா தெரியாது. இதில் புலிகள் கருணாவிடம் சில தந்திரங்களை இழந்தார்கள்.  இது யாழ்ப்பாணத்தில் புலிகள் வைத்திருந்த இடங்களை விட்டுவிட்டு வன்னிக்கு போகும் போதும் நடந்துதான். கருணாவுக்கு தெரிந்தவை போர்க்காலத்தில் 6 வருடங்கள் பழையவை. அவவளவு நாளும் புலிகள் அதை மாற்ற ஒன்றும் செய்ய்மல் இருந்தார்கள் என்று மாற்றுக்கருதுக்கள் சோடிக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை

எதிர்நோக்கியிருந்த சர்வதேசத்தினது அங்கீகாரத்திற்குப் பதிலாக பல நாடுகள் பயங்கரவாதமாக தடைசெய்தது அரசியல் ரீதியான நம்பிக்கையை தகர்த்தெறிந்தது.

புலிகளுக்கான வளங்கல்களை சர்வதேச உதவியுடன் கட்டுப்படுத்திய அதே நேரம் என்றுமில்லாதளவுக்கு தமது ராணுவத் தளபாடங்களை பெருக்கிக்கொண்டார்கள்.

எதிர்நோக்கியிருந்த சர்வதேசத்தினது அங்கீகாரம்" எனபது புலிகளை நடத்தியவர் கதைக்கும் கதை. இங்கே மாற்றுக்கருத்துக்கள் தாம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எழுதும் போது அது சோடனைக்கதை அளவு பெறுமதி கூட இல்லாதது. புலிகள் போராடமல் பின்வாங்கியது அமெரிக்காவால் மட்டுமே. இன்று அமெரிக்கா அவர்களுடன் இல்லை. அந்த அளவுக்கு உதவிய அமெரிக்காவை வைத்திருக்க முடியாதுதான் கதிர்காமர் போன பின்னர் அவர்கள் காட்டும் ராஜதந்திரம்.

புலிகளுக்கான வளங்கல்களை சர்வதேச உதவியுடன் கட்டுப்படுத்திய அதே நேரம் என்றுமில்லாதளவுக்கு தமது ராணுவத் தளபாடங்களை பெருக்கிக்கொண்டார்கள்.

போராடும் ஆளணிபலம் போராடும் தளம் போராடத்தேவையான ஆயுதங்கள்  மனவலிமை சர்வதேச அங்கீகாரம் அனைத்தையும் திட்டமிட்டு தடுத்தும் தமது பக்கம் பெருக்கியும் வெற்றிபெற்றுக்கொண்டார்கள்.

இதில் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட சோடனைக்கத்தைதான்  திரும்பவும் சொல்லப்படுகிறது.  நாடுகள் கொள்கை மாற்றும். இன்றைய முடிவில் அமெரிக்கா அல்கைடாவுடன் சேர்ந்து போராடும் சிரிய போராளிகளுக்காக சண்டையில் இறங்கவென்று முடிவெடுத்திருக்கு.  

  இவைகள் எல்லாம் பொட்டம்மான் அல்லது காஸ்ரோ அல்லது பிரபாரகன் என்ற தனிமனிதர்களின் தவறாக அணுகமுடியாது. அப்படி அணுக முற்பட்டால் அதைவிட அடிமுட்டாள்த்தனம் வேறெதுவும் இருக்கமுடியாது. இது தமிழர்களின் பலவீனம் சிங்களவர்களின் பலம் என்றுதான் அணுகமுடியும். எம்மை இந்தப் பலவீனத்திற்குள் உட்படுத்திக்கொண்டுதான் இதை அணுகமுடியுமே தவிர நாம் வெளியில் சுதந்திரமாக நின்று விமர்சிக்கமுடியாது. படுதோல்வியின் பங்கில் இருந்து ஒரு தமிழனும் அந்நியப்படமுடியாது.

சிங்களவரின் பலம் என்று வாதாடுபவர்கள் பிழை பிழையாகத்தான் இலங்கை அரசியலை எழுதினார்கள் கடந்த காலத்தில் இவர்கள் 78% வீதத்துடன் 8% வீதத்தை ஜனநாயக அரசியலில் வைத்து ஒப்பிடும் அறிஞ்ஞர்களே. இவர்கள் பரம சிவன் கழுத்திலிருக்கும் பாம்பு என்ற தொடருக்கு அர்த்தம் புரியாதவர்கள். தமிழர்களின் பலம் 72% வீதம் முஸ்களிடம் நெருப்படி வாங்கிய போது 12% வந்து கை கொடுத்து காப்பாற்றி வைத்துதான் தமிழரின் பலம். சிங்களவரின் பலம் சோல்பரி எழுத்திக்கொடுத்த அரசியல் அமைப்பை தொலைத்துவிட்டு தாய் இளவரசியையும், மகள் இள்வரசியயும் தலதாமாளிகைக்கு கொண்டுவந்து வைத்து திருட்டுதனமாக முடி சூட முயல்வதே. 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நான் என்ன அரசியல்வாதியா? போராளியா? அல்லது போராளிகளின் தலைவரா
 
சீமானோ,வைகோ தவறு செய்தால் நீ செய் ராசா என்று நான் பார்த்திட்டு சும்மா இருக்க வேண்டுமா?...அடுத்து இவ்வளவு காலமும் அவர்கள் எங்களுக்கு என்ன நன்மைகள் அதாவது உருப்படியாக என்ன செய்தார்கள் என பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.
 
கோத்தாவுக்கு பொன்சேகாராவில் நம்பிக்கை இருந்தது,போரை வெல்வதற்கு அவரது உதவி தேவைப்பட்டது.அதனை கோத்தா பயன் படுத்தினார்.எனக்கு சீமானில் நம்பிக்கை இல்லை.என்னுடைய கருத்தை சொன்னேன்.உங்களுக்கு அவர் மேல் நம்பிக்கை இருந்தால் அவரை நம்பி அவருக்கு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்.அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.யார் என்ன எழ்தினாலும் அவர் ஒரு அரசியல்வாதி தான் செய்கிறதைத் தான் செய்வார்.
 
நன்றி வணக்கம் சொல்லி விட்டு ஓடிட்டீங்கள்.சீமானை இழுத்து விட்டீங்கள் வாலுகள் வருவார்கள் நன்றி :)

விழுந்து விழுந்து சீமானையும் ஏனையோரையும் விமர்சிக்கும் நீங்கள் சொந்த நாட்டில் கூட்டமைப்புடன் இணைந்து இருக்கும் சங்கரி, சித்தாத்தன் பற்றி மௌனம் சாதிப்பது ஏன்??

விழுந்து விழுந்து சீமானையும் ஏனையோரையும் விமர்சிக்கும் நீங்கள் சொந்த நாட்டில் கூட்டமைப்புடன் இணைந்து இருக்கும் சங்கரி, சித்தாத்தன் பற்றி மௌனம் சாதிப்பது ஏன்??

சிலவேளை சித்தார்த்தன், சங்கரி அவர்களை தமிழர்களின் மீட்பர்களாக, காக்கும் (காக்க போகும்) கடவுளாக யாருமே promote பண்ணாத படியால் இருக்கும் :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

சீமானோ,வைகோ தவறு செய்தால் நீ செய் ராசா என்று நான் பார்த்திட்டு சும்மா இருக்க வேண்டுமா?...அடுத்து இவ்வளவு காலமும் அவர்கள் எங்களுக்கு என்ன நன்மைகள் அதாவது உருப்படியாக என்ன செய்தார்கள் என பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

அப்பன், ஆத்தாள் செத்தால்கூட 'இன்னைக்கு பால், நாளைக்கு கருமாதி' என இரண்டே நாளில் எல்லா காரியங்களையும் முடித்துவிட்டு, அடுத்த வேலையை பார்க்கப் போய்விடும் / மறந்துவிடும் தமிழக தமிழர்கள் மத்தியில், ஈழதாகம், ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு தளத்தை பல்வேறு மத்திய, மாநில அரசுகளின் கெடுபிடிகளுக்கிடையே சமரசம் செய்யாமல், இன்றளவும் சற்றேனும் ஊயிர்ப்பித்து  வைத்துள்ளமை சாதனை இல்லையா? (இதில் அக்கட்சிகளின் அரசியல் வாழ்வு இருந்தாலும்) அதில் தமிழர்களுக்கு நன்மை இல்லையா?

தமிழக எழுச்சி, ஈழத்திற்கு சரியான நேரத்தில் உதவவில்லை, எழுச்சியின் அளவு போதவில்லை என குறை சொல்லுங்கள், ஒத்துக்கொள்ளலாம், ஆனால் இவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என மறைப்பது நன்றன்று.

எங்களவர்கள் தான் எங்கள் இனத்தின் முதல் எதிரி என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் துரோகிகளை உருவாக்க நினைத்தது இலங்கை அதற்கு பெருமளவு உதவி செய்தது வேண்டுமானால் இந்தியாவாக இருக்கலாம்...இந்தியாவைப் பொறுத்த வரை இலங்கையில் கால் ஊன்ற வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டவர்கள்.புலிகளை அழித்து முடித்து விட்டால் அந்த எண்ணம் சாத்தியமாகது என்று தெரியாமலா இருப்பார்கள்?...இந்தியா புலிகளுக்கு தண்டனை கொடுக்க நினைத்திருக்கலாம் ஆனால் முற்றாக அழிக்க நினைத்திருக்க மாட்டார்கள் இது என் கருத்து.

சின்னச்சின்ன குழுக்களுக்கு எல்லாம் பயிற்சியும் குடுத்து அதைவைச்சு என்ன செய்யலாம் எண்ட சிந்தனையே இல்லாத ஆக்களுக்கு கையிலை ஆயுதத்தையும் குடுத்தது இந்தியா தான்... அந்த ஆயுதங்களை வைச்சு அடுத்த இயக்கத்தை அச்சுறுத்தவும் மக்களை கொள்ளை இட பயன் படுத்தியவர்கள் தான் அதிகம்... இயக்க முரண்பாடுகளின் மூலமே இந்தியாதானே...??

இந்திய இராணுவம் வந்த போது தங்களின் துணைக்குழுக்களாக கூட்டிக்கொண்டும் வந்தார்கள் போகும் போது இலங்கை அரசினுடன் இணைந்து செயற்படுமாறு அனுமதித்தார்கள்...

இதிலை இலங்கை அரசு செய்ய ஒண்டும் இருக்கவில்லை...

உங்கள் கருத்தின் படி பார்த்தாலும் வலிய வந்த சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்தியது அல்லவா அதுவே பெரிய ராஜதந்திரம் தானே :)

உங்கட அம்மா மாம்பழம் ஒண்டை எடுத்து சீவி வெட்டி தட்டிலை வைச்சு தந்தால் , அதை நீங்கள் எடுத்து சாப்பிடுவது கூட இராஜதந்திரம் எண்டுவீங்கள் போல...??

நல்லது பிள்ளை...

சீமானோ,வைகோ தவறு செய்தால் நீ செய் ராசா என்று நான் பார்த்திட்டு சும்மா இருக்க வேண்டுமா?...அடுத்து இவ்வளவு காலமும் அவர்கள் எங்களுக்கு என்ன நன்மைகள் அதாவது உருப்படியாக என்ன செய்தார்கள் என பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

இண்டைக்கு தமிழ் நாட்டிலை இருக்கும் மக்கள் ஈழத்தமிழர் மீது காட்டும் கரிசனைக்கு காரணம் என்ன...?? 90 ம் ஆண்டுகளிலையும் 2000 ம் ஆண்டிகளில் அப்படி ஒரு நிலையே இல்லாமல் இருந்ததே இப்ப மட்டும் எப்படி வந்தது...

மனிதனிலையே கேடு கெட்ட தனம் எது எண்றால் நண்றி கெட்ட தனம்... !

தயா அண்ணா,யார் பாதுகாப்புக்கு இருந்தென்ன கடைசி நாட்களில் என்ன நடந்தது என்பது தானே முக்கியம்

நாங்கள் இப்படியே நக்கலடித்துக் கொண்டு இருப்போம் அவன் செயலில் காட்டிக் கொண்டு இருக்கட்டும்.இந்தா இலங்கை, சீனா கையில போகப் போகுது,இந்தியா கையில போகுது,அமெரிக்கா கையில் போகப் போகுது என்று நாங்கள் கற்பனையில் மிதப்போம்.
induragare_CI.png

சீன பெருஞ்சுவர் இலங்கையை சுற்றி அமைக்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக  களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 
 
குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.   எதிர்காலத்தில் சீன மொழியை அறியாமல் எதனை செய்ய முடியாத நிலைமை உருவாகும்.  நாட்டில் உள்ள நாம் சிங்களம், தமிழ், ஆங்கலம் ஆகிய மொழிகளை கற்றுக்கொண்டாலும் எதிர்காலத்தில் சீன மொழியை கற்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
 
யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம், நுரைச்சோலை, அக்கரைபற்று, அம்பாந்தோட்டை பிரதேசங்களில் சீனர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். அத்துடன் நாட்டின் அனைத்து இடங்களிலும் சீனர்கள் உள்ளனர்.
 
இன்னும் இரண்டு தசாப்தங்களில் இலங்கை முற்றாக மாறிவிடும். மக்கள் தொகை மாத்திரமல்ல  மொழியும் மாறிவிடும். எதிர்காலத்தில் இரண்டு ஆக்கிரமிப்புகள் நடக்கலாம்  அது மிக பயங்கரமான ஆக்கிரமிப்பாக இருக்க போகிறது.  நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு இன்று தீரர்வில்லை என தம்மரத்ன தேரர் கூறியுள்ளார்.
 
நாம் மாற்றுக்கருத்துக்கள் போல இலங்கை அரசிடமிருந்து தரும் செய்திகளை யாழில் ஒட்டுவதில்லை. ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்துத்தான் கருத்து எழுதுவோம். இலங்கையில் சகல செய்திகளும் சிங்கள, ஆங்கில ஊட்கங்களின் வெளிப்படுத்துகையே.

எங்கட இராஜதந்திரத்தை முறையடித்தது சிங்களவன் இல்லை... 

எங்களவர்களை முறையடிச்சது எங்களவர்கள் தான்...   துரோகிகளை உருவாக்கியது சிங்களம் என்பதில் உண்மை இல்லை...   அது இந்தியா...!  

முள்ளிவாய்க்கால் வரைக்கும் 1987 முதல் முள்ளிவாய்க்கால் வரைக்கும் சிங்களத்துக்கு ஆதரவாக இருந்தது இந்தியாவை ஆழும் காங்கிரஸ்... !   அதுக்காக சிங்களம் ஏதும் செய்ய வேண்டி இருக்கவில்லை...  செய்யவும் இல்லை...  வலிய வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது ... 

புலிகளுக்கு பிரச்சினையை குடுத்தது கூட சமாதானம் ஆரம்பித்த காலங்களில் இந்தியாவின் ஆட்சிக்கு காங்கிரஸ் வந்தது தான்...  பின் இறுதி வரை தொடர்ந்தது...  அது இலங்கை சிங்களவனின் இராஜதந்திரத்தால் வந்தது கிடையாது... 

இந்த உண்மையை யாராவது கூற மாட்டர்களா என்று பார்த்துக் கொண்டிருந்தேன், கூறிவிட்டீர்கள், நன்றி இன்னமும் குறிப்பாக்ச் சொல்லப் போனால் மலையாளி காங்கிரஸ் என்றே கூற வேண்டும் , போர் முடின்சா பிறகு மோட்டு சிங்களவனின் ராஜதந்திரத்தையும், அறிவாளித்தனத்தையும் பாராட்டுவதே வேலையாப் போச்சு, சிங்களவன் அறிவாளி என்று பாராட்டுபவர்களுக்கு ஒரு சின்ன தகவல் 1964ம் ஆண்டு முன்னைய சிங்கபூர் பிரதமர் லீ குவான் யூ சொன்னார் " வருங்காலத்தில் சிங்கபூரும் ஒரு சிலோன் ஆக வேண்டும்" ஏன் என்றால் ஆசியாவிலேயே மிகவும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுள் ஒன்றாக சிலோன் இருந்தது, ஆனால் இப்போது ஒரு பிச்சைக்கார நாடாக மாற்றியது தான் சிங்க்ளவனின் ராஜதந்திரம், அறிவாளித்தனம் மோட்டுச் சிங்களவன் என்றைக்குமே மோடையன் தான்

மூளை உள்ள சனமாக இருந்தால் 100% மக்கள் சக்க்தியாக இருந்த சோல்பரி அரசியல் அமைப்பை (உண்மையில் இது 1800 களின் கோல்புறுக்கின் சட்டங்களில் இருந்து வளர்த்து எடுத்தது) இப்படி கெடுத்து கைமுணு அரசியல் அமைப்பாக்கி தாய் இளவரசியையும் மகள் இள்வரசியையும் தலதாமாளிகைக்கூட்டிவந்து மூடிசூட்டுவிழா ஒத்திகைகள் நடத்த பார்த்துக் கொண்டிருப்பார்கள்?

இப்போ குடிநீருக்கு போக பயங்கரவாதிகள் என்றார்களெ என்று ஓலாயம் போட்டு ஒப்பாரி வைக்கிறார்கள்.  குடி நீர் எதற்கு குடிநீர் . நல்ல வெதமாத்தையாவாகப் பார்த்து பிசு மாற தடிச்ச ஒரு கசாயம் போட்டு க்குடித்தால்தான் திருந்துவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.