Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின விடுதலையை தமிழின அரசியலால் முடக்கும் திட்டமே வடக்கு முதலமைச்சர் தெரிவு - சீமான் அறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
seeman-at-swiss-280313-seithy-150.jpg

ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தமிழ்நாடு முடிவு செய்யவில்லை. அதனைத் தீர்மானத்தவர், ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்கள்தான் என்பதை விக்னேஸ்வரன் தெரியாதோ? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்க மாட்டார்கள்.

ஈழத் தமிழர்களின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முதலில் சிங்கள காவல் துறையையும், பிறகு இராணுவத்தையும் ஏவிவிட்டு தமிழர்களை திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கிய இலங்கையை ஆண்டு வந்த சிங்கள பெளத்த இனவாத அரசுகளின் இனவெறிபிடித்த நடவடிக்கைகளே அங்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டது என்கிற வரலாறும் விக்னேஸ்வரன் அறியாதவரோ? அதனால்தான், ஏதோ தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையை பேசுவதனால்தான் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கதை விடுகிறார்.

இலங்கைத் தமிழினத்தின் அரசியல் விடுதலை வரலாறு விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர் கொழும்புவில் சட்டப் பணியாற்றிக்கொண்டு, பிறகு நீதிபதியாகி வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். சிங்கள அதிகார, அரசியல் குடும்பங்களோடு திருமண சம்பந்தம் செய்துகொண்டு பாதுகாப்பாக வாழ்ந்து வந்தவர்.

எனவே, ஈழத் தமிழினத்தின் 60 ஆண்டுக்கால துயரம் விக்னேஸ்வரன் அறியாதது. அந்த துயரத்திற்குக் காரணமான சிங்கள பெளத்த இனவாத அரசியல் அவருக்கு புரிந்திருக்கவில்லை. அதனை விக்னேஸ்வரன் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஈழத் தந்தை செல்வா ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வந்துள்ள புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சனை, ஒரு குடும்பத்தின் கணவருக்கும் மனைவிக்குமான பிரச்சனை போன்றது, அதில் பக்கத்து வீட்டார் தலையிடக்கூடாது, நாங்கள் அடித்துக்கொள்வோம், பிறகு கூடிக்கொள்வோம் என்று விக்னேஸ்வரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். விக்னேஸ்வரன் கூறியுள்ள இந்த எடுத்துக்காட்டை தமிழீழ மக்களிடம் கூறினால் வாயால் சிரிக்க மாட்டார்கள்!

சிங்கள பெளத்த இனவாத அரசியலின் அடிப்படையை புரியாத அல்லது இல்லாததுபோல் காட்டிக்கொள்ள விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார். தமிழருக்கும் சிங்களருக்கும் உள்ள பிரச்சனைதான், இதில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், பிறகு இந்திய அரசின் தலையீட்டை பாராட்டுகிறார்! ஆக, ஈழத் தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ்நாடு உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்றால், டெல்லி உங்களுக்கு யார்? அதனை விளக்க வேண்டும்.

தமிழருக்காக பேசும் சிங்களவர்களும் உள்ளார்கள் என்று கூறுகிறார். தமிழர்களுக்காக நியாயமாக பேசும் சிங்கள புத்திசீவிகள் அனைவரும் தமிழீழ விடுதலையே தமிழருக்கான ஒரே தீர்வு என்று கூறுகிறார்கள் என்பதை விக்னேஸ்வரனை விட நாங்கள் அதிகம் அறிந்தவர்கள்.

இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் வரை யாருக்கும் தெரியாத நபர் விக்னேஸ்வரன். ஆனால், அவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறது என்றால், அதன் பின்னணி சதியில் சிங்கள பெளத்த இனவாத அரசும், டெல்லியும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. தமிழனின் அரசியலைக் கொண்டே தமிழினத்தின் விடுதலையை முடக்குவது என்கிற சீறிய சதித் திட்டத்தின் வெளிப்பாடுதானே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது?

http://www.seithy.com/breifNews.php?newsID=92848&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமை  ராசா........... :(

  • கருத்துக்கள உறவுகள்

தவறை தவறென்று சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு?

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பாரை யிலானுங் கெடும்."

  • கருத்துக்கள உறவுகள்

தவறை தவறென்று சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு?

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பாரை யிலானுங் கெடும்."

அவர்   எதற்காக

எவருக்காக சொன்னார் என்றே  தெரியவில்லை

வார்த்தைகளைப்போட்டுவிட்டு அள்ளுவது கடினம்  ராசா

எதிரியின் வேலைகளை  நாமே சுலபமாக்கலாமா........

அது தான்.............. :(

(பதில்   சொல்லவேண்டாம்  என  எழுதவில்லை.  பொறுமை  என்று மட்டுமே)

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எதற்காக

எவருக்காக சொன்னார் என்றே தெரியவில்லை

வார்த்தைகளைப்போட்டுவிட்டு அள்ளுவது கடினம் ராசா

எதிரியின் வேலைகளை நாமே சுலபமாக்கலாமா........

அது தான்.............. :(

உங்களின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் உண்மையிலேயே சீமான் தமிழக மக்களின் / ஈழமக்களின் நலன்விரும்பியாக இருந்தால் இவ்வகை அறிக்கை வெளிவருவது தவிர்க்க முடியாதது. விக்னேஸ்வரன் சொன்னது ஹிந்திய அரசின் விருப்பத்தையே.. அதை சீமான் போன்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். இதை விக்னேஸ்வரன் இப்போது புரிந்துகொண்டிருப்பார் என நம்பலாம்.

சமாதான காலத்நிலும், போர்க்காலங்களிலும் பல தமிழக உறவுகளைச் சந்தித்து உரையாடியவர்தான் தலைவர். அது சும்மா பொழுது போக்குவதற்கு அல்ல. சிரமப்பட்டு செய்த தாழியை உடைக்க நினைப்பது அழகல்ல.. காரணம் எதுவாக இருப்பினும்..!

நன்றி  தலைவா......... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தலைவா......... :icon_idea:

நீங்கள் சீமானை பொறுமைகாக்கும்படி சொல்கிறீர்கள்.. நான் விக்னேஸ்வரன் பொறுப்புடன் பேச வேண்டும் என்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் முதலில் கல்லெறிந்தவர்தான் அதிக பொறுப்புக்கூறலுக்கு உரியவர்.

இப்படியும் எடுக்கலாம் தானே இசை

அவர் அரசியல்வாதிகளையே  சுயநலவாதிகள்  என்கிறார்

அப்படிப்பார்த்தால்  சீமான் அரசியல்வாதி  இல்லை (என்னைப்பொறுத்தவரை)

அடுத்தது

தமிழக  அரசியல்தலைவர்கள்

எம்மை

தமது சுயநலத்துக்கு பாவித்தது என்பது உண்மைதானே.

ஆனால்  இதில்   பொருந்தாது ஒரு கூற்று

கணவன்  மனைவி  என்பது தான்.

நீதிபதிக்கு என்னாச்சு என்றுதான் புரியல.. :(

Edited by விசுகு

  • தொடங்கியவர்

நீதிபதிக்கு அரசியல் புதிது அவருக்கு அனுபவம் போதாது அதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமை பொறுமை, அதிகம் சத்தம் போடாமல் காரியத்தில் கண்ணாக இருந்து சாதிக்க வேண்டிய தருணம் இப்பொழுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுமை பொறுமை, அதிகம் சத்தம் போடாமல் காரியத்தில் கண்ணாக இருந்து சாதிக்க வேண்டிய தருணம் இப்பொழுது.

ம் ..... , உண்மைதான். சரியாக சொன்னீர்கள் ராஜவன்னியன். 

கிந்து பேட்டியை பிரசுரிக்கவில்லை. அல்லது நான் இன்னமும் முழு பேட்டியையும் பார்க்கவில்லை. ஆனால் விக்கினேஸ்வரன் இனிமேல் சட்டப்படியாக மட்டும் சரியாக இருக்க முயலகூடாது. வடமாகாணத்தலைமை அல்ல, அவர், கூட்டமைப்பிற்கு இந்தியா கொடுத்த வாக்குறுதிப்படி,  கிழக்குக்கும் தலைமை தாங்க வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டிய நிலையில் இருக்கிறார். எனவே சட்டப்படியாக சரியாக மட்டும் பேசாமல், எழுதாமல் அரசியல் சரியாகவும் பேசவேண்டியது அவரின் பொறுப்பு. 

அவர் தமிழகத்திடம் கேட்கப் போனது பொறுமை. ஆனால் அவர் நண்பன் என்று நினைத்து சேர்ந்த கிந்து, சிங்கள் இராஜதந்திர முறைப்படி அவரின் முதுகிலேயே குத்தியது என்பது அவர் தான் கண்டு கொள்ள வேண்டும். ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். தான் பக்திமானாக இருந்த போது ஆட்சாட பூதி கிந்துவை நண்பனாக கொள்ளலாம். அதில் தவறு இல்லை. ஆனால் அவர் தமிழர் தேசிய கூட்டமைப்பில் தேர்தலில் நின்ற பின்னர் அவரை கிந்து நண்பனாக்கிக் கொள்ளாது என்பதை அவர்தான் கண்டு பிடிக்க வேண்டும். கூட்டமைப்பு கிந்துவின் எதிரி என்பதை இனியாவது அவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்குள் பிரச்சனைகளை சிண்டு முடிந்து வளர்த்து விட்டால் பின்னர் எதிரிகள் ஆறுதலாக ஓய்வெடுத்து கொள்ளலாம். அவர்களாகவே அழிவை நோக்கி நகர்வார்கள் என்பது தமிழின எதிரிகள் கடந்த காலத்தில் நிரூபித்த உண்மை. அதனாலேயே அந்த நம்பிக்கையுடன் ஹிந்து புதியவடிவில்  சிண்டு முடிந்துள்ளது. ஆகவே வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட நாம் சிறிய பிரச்சனைகளை புறம் தள்ளிவிட்டு எமக்குள் பிரச்சனைகளை வளர்த்து கொள்ளாமல், உணர்ச்சி வசப்படாமல்  ஐரோப்பியர்களை போல் take it easy என்று நிதானமாக கூறி அதை மறந்து விட்டு தமிழரின்  அரசியல்,கல்வி, பொருளாதார பலத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்திலாவது காலம் கனியும் போது  எமக்கான நாட்டை உருவாக்கி கொள்ள முடியும்.

உண்மை

நன்றி

(விருப்பு வாக்குகள்  முடிவடைந்துவிட்டன)

அது.  

ஐரோப்பிய அரசியலுக்குத்தான் அது சரி..

சீமான் ஒன்றும் சொல்லாமல் இருந்தாலும் அடுத்த பேட்டியில் யாரோ ஒரு செய்தியாளர் கேட்கத்தான் போகிறார்.. கேட்கும் ஊடகத்தைப் பொறுத்து கேள்விகள் பின்வருவனபோல் அமையலாம்.

1) வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரின் கருத்துக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லையே. அப்படியானால் அதை ஒத்துக் கொண்டீர்கள் என்றுதானே அர்த்தம்?

2) பதில் கூறாமல் விட்டதன்மூலம் இந்திய மத்திய சர்க்காரை பகைக்காமல் விட்டுள்ளீர்கள் என்று ஒரு பேச்சு உள்ளதே..

3) திருமணமானபின் சீமான் அடங்கிவிட்டார் என்று எடுத்துக்கொள்ளலாமா?

4) ஈழப் பிரச்சினையை கைவிட்டுவிட்டீர்களா?

இப்படி எத்தனை பிரச்சினை இருக்கு..?! :D

வெகுசன அரசியலுக்கு வந்துவிட்டு எதிர்வினை ஆற்றாமல் இருக்கமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமானின் காத்திரமான முழக்கங்கள் எமக்கு அவசியம். இன்றேல் சுமந்திரன் சம்பந்தன் போன்றவர்களே எம்மை தின்று ஏப்பம் விட்டு விடுவார்கள்..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமானின் காத்திரமான முழக்கங்கள் எமக்கு அவசியம். இன்றேல் சுமந்திரன் சம்பந்தன் போன்றவர்களே எம்மை தின்று ஏப்பம் விட்டு விடுவார்கள்..! :icon_idea:

சரியாக சொன்னீர்கள் நெடுக்ஸ் 

முள்ளிவாய்க்கால் ரத்தம் காயமுன் பொன்சேகாவுடன் கூட்டுப்போட்டவர்கள்தான் ததேகூ. டக்ள்ஸ் மகிந்தவுடன் என்றால் இவர்கள் பொன்சேகாவுடன். ஒருவகையில் டக்களசை விட ஆபத்தானவர்கள். டக்ளஸ் வெளிப்படையாக சிங்களத்துடன் இணைந்து இருக்கின்றார். இவர்கள் மறைமுகமாக கழுத்தறுப்பவர்கள். எல்லாம் ஒரே குட்டையில் ஊறியமட்டைகள்.

கருணாநிதி செயலலிதா வைகோ சீமான் இனிவரும் எத்தனை பேரும் இந்திய அதிகாரவர்க்க எல்லைக்குள் நின்றுதான் எதையும் செய்யமுடியும். அந்த எல்லைக்குள் நின்று ஈழத்தமிழரின் விடுதலைக்காக ஒரு துரும்பையும் புடுங்க முடியாது. ஈழத்தமிழர்களுக்காக எதையும் நடைமுறைச்சாத்தியமாக தமிழகம் செய்யவேண்டுமானால் ஒரே வழி முதலில் தமிழகம் இந்திய அதிகாரவர்க்க பிடியில் இருந்து விடுபடுவதுதான். அதுவரை அவர்களது போராட்டங்களும் உணர்வுகளும் கத்தல்களும் எந்தவிழைவுகளையும் தராமாட்டாது.

இந்திய தமிழக அரசியல் எப்படி ஈழத்தமிழர்களை பாவிக்கின்றதோ அதற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை ஈழத்து அரசியல்வாதிகளின் நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு கூட்டமைப்பை விட வேறு ஏதாவது தெரிவு இருக்கிறதா?

பொன்சேக்கா புலிகளை அழிப்பதாக கூறிக்கொண்டு வன்னி, முள்ளியவாய்க்கால் எங்கும் நெருப்பு கொழுத்திக்கொண்டு திரிந்தபோது செயலாளர் நாயகம் டக்கிளசும் மற்றய  யாழின் மற்ற்றுக்கருத்துகளும் இரவு பகல் பொன்சேக்காவுக்கு எதிராக போர் தொடுத்துகொண்டு திரிந்தார்கள். சம்பந்தர் பொன்சேகாவுக்கு தீவட்டி பிடித்து கொண்டு புலிகளை வன்னியில் அழிக்க பொன்சேக்காவுக்கு ஒட்டுக்குழு தொழில் செய்து வந்தார். ஏன் எனில் பொன்சேக்கா எப்படி கேடுகெட்ட மனிதன் என்றதை சம்பந்தர் அறிந்திருக்கவில்லை. தனிய செயலாளர் நாயகமும் யாழின் மாற்றுக்கருத்துக்களும்தான் பொன்சேக்கா வன்னியில் என்ன செய்தார் என்றதை அறிந்து வைத்திருந்து எதிர்ப்புக்காட்டி வந்தார்கள்.

மகிந்தா அரசு, செயலாளார் நாயகம், (யாழின் என்றுமே உருப்படபோவதில்லாத) மாற்றுக்கருத்துக்களுக்கும் மட்டும் தான் பொன்சேக்காவின் குணம் நனறாக தெரிந்த்திருந்தது. அது எதுவுமே புரியாத சந்தருக்கு தெரியவில்லை. பொன்சேக்காவின் கேடு கெட்ட குணம்தான் மகிந்த சிந்தனைகளுக்கு எதிராக செயல்ப்பட என்று தனது அரசைக் கூட கைவிட்டுவிட்டு வந்து தேர்தல் நின்றது. அதுதான்  போகுது என்றால் பொன்சேக்கா யாரை எதிர்த்தார்?. இதன் பூமிக்கே கருணை படிப்பித்த புத்த பெருமானுக்கே மகிந்த சித்தாந்தம் படிப்பிக்கும் அரசகுடும்பத்துக்கு எதிராக அல்வா தேர்தல் கேட்டார் பொன்சேக்கா. அதற்கும் யாராவது துணை போவார்களா? மிக மிக தவறான செயலாக கூட்டமைப்பு இந்த பொன்சேக்கவுடன் சேர்ந்து அந்த நீதிமானை, கருணைக்கடலை, தேவதூதனை எதிர்த்தனரே! இந்த தேவ சாம்ராஜ்ய அரசை எதிர்க்க என்று பொன்சேகாவுடன் சேர்ந்தார்களே! என்னதான் சொல்ல முடியும் கூட்டமைப்பின் இப்படியான ஒரு ஈனத் தனத்தை. ஐயகோ ! ஐயகோ!

பொன்சேக்கா அரசில் இருந்துகொண்டு புலிகளை அழிக்கும் போது செயலாளர் நாயகம் எத்தனை முறைதான் சம்பந்தருக்கு சொன்னார் பொன்சேகாவுடன் கூட்டு சேரவேண்டாம் என்று. செயலாளர் நாயத்தின் அறிவுமொழிகளை, மாற்றிக்கருத்துக்களின் கவனச் சொல்களை சம்பந்த கேட்காதது மட்டுமல்ல, பொன்சேக்காவுடன் சேர்ந்து அரசகுடும்பத்தை கடையில் எதிர்த்துவிட்டார். இனிமேல் நம்பத்தக்க ஒரே ஒரு ஆள் செயலாளார்நாயகம் மட்டும்தான். அவர்தான் பொன்சேக்காவை எதிர்த்து புலிகளைக் காத்தவர்.

வாழ்க அவரின் வண்டவாளம்.

Edited by மல்லையூரான்

டக்லஸ் தேவானந்தா, சிறுவர்,சிறுமிகளை பாலியல் தொழிலுக்காக சிங்கள அரசின் துணையுடன் விற்றதை அம்பல்படுத்திய விக்கிலீக்ஸ்

Written by Tamil   // September 15, 2013   //

Douglas-500x400-300x240.jpgஇலங்கையில் ஈ.பி.டி.பி என்ற இராணுவத் துணைக்குழுவினால் தமிழ்ச் சிறுவர்கள் அடிமைகளாக விற்கப்படுவதாக விக்கிலீக்ஸ் இரகசியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முன்னாள் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரோபேட் ஓ பிளாக்கினால் எழுதப்பட்ட கேபிளில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கையில்:

ஈ.பி.டி.பி என்கிற இராணுவ துணைக்குழுவினால் குறிப்பாக ஆண் சிறுவர்கள் அடிமை வேலைகளை மேற்கொள்ளவும், பெண் சிறுமிகள் விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தவும் இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுகிறார்கள். இக்கடத்தல் நடவடிக்கைகளுக்கு பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள விமானநிலைய சுங்க அதிகாரிகள், குடிவரவு,குடியகழ்வு அதிகாரிகள் உதவிகளை வழங்குகிறார்கள்.

தமிழ்ச் சிறுமிகள் வலுகட்டாயத்தின் பெயரில் பாலியல் அடிமைகளாக இராணுவத்தினரின் பாலியல் தேவைகளுக்கு விற்கப்படுகின்றனர். ஒரு இரவில் மட்டும் ஐந்து தொடக்கம் பத்து வரையிலான இராணுவத்தினர் ஒரு தமிழ்ச் சிறுமி மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். சில சமையங்களில் இத்தகைய பாலியல் அடிமைகளுக்கு கிட்டத்தட்ட ஒரு அமெரிக்க டொலர்களை வழங்குகின்றனர் எனவும் அதேநேரம் இச்சிறுவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடுகளைச் செய்யமுடியாத மிகத் துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://news.tamilstar.com/archives/48305#more

செயலாளர் நாயகத்தை நம்பாமல் எப்படி சம்பந்தரை நம்பலாம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.