Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெர்லின் நோக்கி ஓர் பயணம். மயூரபதியின் தரிசனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்றமாதம் 02-09-2013 அன்று ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அங்கு மயூராபதி முருகன் ஆலயத்திற்கும் போயிருந்தேன்.அந்த அனுபவத்தையும் ஆன்மீக தரிசனத்தையும் என் யாழ்கள உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பேரு மகிழ்ச்சி அடைகின்றேன். 

பெர்லின்  மாநகரில் மயூரபதி என்னும் திருப் பெயருடன் ஒரு முருகன் ஆலயம் நெடுங்காலமாய் இருந்து வருகின்றது. அவ்வாலயத்தின் உற்சவங்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணம் நல்லூர் முருகப் பெருமானின் உற்சவ நாட்களை ஒட்டியே நடைபெற்று வருகின்றது . அவ்வாலயம் இவ்வளவு நாட்களும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் இருந்து இயங்கி வந்தது .முருகன் அடியார்களினதும், நிர்வாகத்தினரிதும் பெரும் பிரயத்தனத்தால் முருகனின் திருவருளும் கைகூடி அவர்கள் அவ் ஆலயத்திலிருந்து  சில கி.மீ. தூரத்தில் புதிதாக ஒரு காணி வாங்கி, தலை சிறந்த சோதிடர்கள், சிற்பாச்சாரியார்கள், கட்டிடக் கலை நிபுணர்களையும் இணைத்து புத்தம் புதிதாக ஒரு ஆலயம் அமைத்திருக்கின்றனர்.

 

கலசங்களுடன் கூடிய பெரிய கோபுரமும், பொன்முலாம் பூசிய கொடிமரமும் , அளவான அனால் ஆகிருதியுடன் கூடிய கோவில் மணியும், கந்தனுக்கு கருவறையும் கலசத்துடன் இணைந்த விமானமும், பரிவாரத் தெய்வங்களுக்கு தனித் தனிச் சன்னதிகளும் ,ஒவ்வொரு சன்னதிகளுக்கும் சிறிய கலசத்துடன் கூடிய  விமானங்களுமாக  கம்பீரத்துடன் எழுந்து நிக்கின்றது.

அந்த ஆலயம் அமைந்திருக்கும் இடம் கூட அலாதியானது.அமைதியானது.ஆலயத்திற்கு முன்னே பெரிய மரங்கள் அடர்ந்த சிறிய காடும் உண்டு .அங்கிருந்து கோபுரத்துடன் கோவிலையும் பார்த்து தியானம் புரியத் தோதான இடம். இவ்விதம் ஒவ்வொரு சிறு விடயங்களில் கூட கூடிய அக்கறை எடுத்து அர்ப்பணிப்புடன் செயலாற்றிய நிர்வாகத்தினரை எவ்வளவு  பாராட்டினாலும் தகும்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன் அக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டியிருந்தார்கள்.இப்பொழுது 08/09/2013 அன்று வெகு விமரிசையாக கும்பாபிசேகமும் செய்து விட்டார்கள்.

 

1238143_652197691465956_597791381_n.jpg

 

படங்கள் கொஞ்சம் சரிசெய்ய வேண்டும்.

ஆராதனை தொடரும்:

 

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணனையில் நன்றாக இருக்கின்றது, முருகன் கோவில்! மிச்சப் படங்களையும், நேரம் கிடைக்கும்போது இணைத்து விடுங்கள்! 

 

தொடருங்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவியண்ணா வாசிக்க ஆவல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1234435_652193768133015_920963434_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1274873_652198224799236_90588711_o.jpg

 

 

கோவிலுக்கு  அடிக்கல் நாட்டியத்தில் இருந்து வீட்டில் ஒரே பிடுங்கல்.  புதிதாக நிலம் வாங்கி கோவில் கட்டியிருக்கினம்.அதன் கும்பாபிசேகம்  கட்டாயம் நாங்கள் போய்ப் பார்க்க வேணும். உங்களுக்குத் தெரியுமா ?  கோபுர தரிசனமே கோடிப் புண்ணியம். இப்ப இங்கு புத்தம் புதுக் கோவில், புத்தம் புதிய  விக்கிரகங்கள்.அந்த விக்கிரகங்களுக்கு எண்ணெய்க் காப்பு சாத்துவினம். நாங்களே அவற்றைத் கைகளால் தொட்டு காப்பு சாத்த முடியும். கும்பாபிசேகத்துக்கு முன்  கணபதி கோமத்திலிருந்து  நிறைய கோமங்கள் நடைபெறும். அதெல்லாம் பார்க்க வேணும். ஊரில் கூட ஒரு புதுக் கோவில் கும்பாபிசேகம் நான் பார்த்ததில்லை. எந்த ஜென்மாவின் புண்ணியமோ இப்ப ஒரு சந்தர்ப்பம் கிட்டியிருக்கு. நாங்கள் போய்ப் பார்ப்பம். என்ன சொல்லுறீங்கள்!

அடியப்பா ! முதல் , உதுக்குப் போக  உனக்கு லீவு இருக்கே!  இனி அம்மாவையும் கூட்டிக் கொண்டு போகவேணும் , அது எவ்வளவு சிரமம் என்று உனக்குத் தெரியும்தானே!

நீங்கள் இப்படிச் சொல்லித் தட்டிக் கழிக்காதையுங்கோ , ஆறு மாதத்துக்கு முன்பே தங்கச்சி சொல்லி (பெர்லினில் இருக்கிறா.) நான் இரண்டு கிழமை லீவு எடுத்து வைத்திருக்கிறன். மற்றத் தங்கச்சியும் பரிசிலிருந்து நேர அங்க வருகிறா. 

அப்ப முதலே நீங்கள் திட்டம் போட்டுட்டியள். இன்னும் என்னெல்லாம் திட்டமிருக்கு!

ஓமப்பா ! மாமியை  நான் பார்த்துக் கொள்ளுறன் , நீங்கள் வராட்டிலும்  நான் போகத்தான் போறான். ( சின்ன எச்சரிக்கை.)

 

ஆராதனை தொடரும்:

 

 

 

 

 

 

 

 

 

 

 

அப்ப முதலே நீங்கள் திட்டம் போட்டுட்டியள். இன்னும் என்னெல்லாம் திட்டமிருக்கு!

ஓமப்பா ! மாமியை  நான் பார்த்துக் கொள்ளுறன் , நீங்கள் வராட்டிலும்  நான் போகத்தான் போறான். ( சின்ன எச்சரிக்கை.) ///

 

இது தேவையோ சுவியர் :lol::D ?? உங்களுடன் நானும் கோயிலுக்கு வருகின்றேன் ,தொடருங்கோ .
 

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக இங்கு கோபுரங்களை (மசூதியின் மினார் போன்றவற்றை) வெளியே... தெரியும் படி கட்டுவதற்கு, அனுமதி பெற‌ நகராட்சியின் பெரும் உதவி தேவைப்படும்.
அந்த வகையில்... பெர்லினில் கோபுரத்துடன் உள்ள கோவிலைப் பார்க்க அழகாக உள்ளது. தொடருங்கள்.... சுவி.

எனக்கு கடவுள் பக்தி இல்லை. கோயிலுக்கு போய் நீண்ட நாளாகி விட்டது.

படத்தில் கோபுரத்துடன் கோயிலை பார்க்கும் போது அழகாக உள்ளது. தொடருங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடவுள் பக்தி இல்லை. கோயிலுக்கு போய் நீண்ட நாளாகி விட்டது.

படத்தில் கோபுரத்துடன் கோயிலை பார்க்கும் போது அழகாக உள்ளது. தொடருங்கள். :)

 

பிரான்சில் தானே... கன கோயில் உள்ளது.

ஒருமுறை போய்... கணபதிக்கு ஒரு அருச்சனையும், நவக்கிரகத்துக்கு ஒரு எள்ளெண்ணைச் சட்டியையும் எரிச்சிட்டு வாங்கோ... துளசி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக இங்கு கோபுரங்களை (மசூதியின் மினார் போன்றவற்றை) வெளியே... தெரியும் படி கட்டுவதற்கு, அனுமதி பெற‌ நகராட்சியின் பெரும் உதவி தேவைப்படும்.

அந்த வகையில்... பெர்லினில் கோபுரத்துடன் உள்ள கோவிலைப் பார்க்க அழகாக உள்ளது. தொடருங்கள்.... சுவி.

 நிர்வாகத்தினர்  அந்த நகராட்சி மேயரையும் கும்பாபிசேகத்துக்கு அழைத்து கௌரவித்து இருந்தார்கள் சிறி!  ரதி , கு.சா, புங்கை, நவீனன், துளசி , கோமகன்  மற்றும்  வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

 

எனது அம்மாவைப்  பற்றியும் கொஞ்சம் சொல்ல வேணும். நான் குடியிருந்த கோவில்.இப்ப நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம். அவவுக்கு நினைவுகள் மறந்து எதுவும் விளங்காது. பார்வையும் குறைந்து விட்டது. அவவா எதுவும்  கேட்கவும் மாட்டா, சொல்லவும் மாட்டா.நாங்கள்தான் அந்த அந்த நேரத்துக்கு எல்லாம் பார்த்துப்  பார்த்துச் செய்ய வேண்டும். பிள்ளைகளுக்கு நேரமிருந்தால் அவவைச் சுற்றி இருந்து பம்பலாய் கதைப்பினம். தான் படித்த பள்ளிக்கூடப் பாட்டுக்கள் எல்லாம் படிப்பா, ஆரவாரமாய் கேட்பினம். வீடியோ எடுப்பினம் ,நெட்டால என்ற சகோதரங்களும் பார்த்து ரசிப்பினம்.

உதாரணத்துக்கு ஒரு பாடல்:

வா  வா  வா  பெண்ணே  வஞ்சி முக ரஞ்சிதமே 

இங்கிதமே விளையாட வா  வா  வா!

தோட்டத்திலே இரண்டு பச்சைக் கிளிகள் 

ஆடுது பாடுது பார்  பார்  பார்!

இது போன்ற பாடல்கள். நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீங்களா!

 

 

அம்மாவை புகைவண்டியிலோ, விமானத்திலோ கூட்டிப் போய் ,கூட்டி வர ஏலாது. பெர்லின் 1800 கி.மீ.  நூரன்பெர்க்கில் சகோதரிகள் இருக்கினம் .அதுவும் 1200 கி.மீ.  சதி  சொன்னா  மாமியை மச்சாள் வீட்டை விட்டுட்டு, நாங்கள் கோவிலுக்கு போயிட்டு வரும் போது  கூட்டிக் கொண்டு வருவம் என்று.

நான் பதி  ம்...ம்....ம்.

அடுத்த அஸ்திரம் வந்து விழுந்தது. உங்கட மகளும் பேரனும் கூட வாரன் எண்டு சொன்னவை. பேரனுக்கும் தேருக்கு  காவடி  எடுக்கலாம். நீங்கள் தான்  பேரனைத் தூக்கிக் காவடி எடுக்கவேனும். இது பிரம்மாஷ்த்திரம்  நான் சரண்டர்.சரிஎண்டுட்டன்.

 

616402_652193278133064_2077675600_o.jpg

 

1291992_652193358133056_467001388_o.jpg

 

 

1292341_652198374799221_511664048_o.jpg

 

1291510_652196184799440_158741180_o.jpg

 

ஆராதனை தொடரும்:

உங்கள் ஆராதனையை தொடருங்கள்.

உங்கள் அம்மாவை விட்டிட்டு போவதென்பது கவலையாக உள்ளது. ஆனாலும் பிரயாணம் செய்ய இயலாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது தானே. :rolleyes: 

 

தொடருங்கோ. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அம்மாவை விட்டிட்டு போவதென்பது கவலையாக உள்ளது. ஆனாலும் பிரயாணம் செய்ய இயலாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது தானே. :rolleyes:

 

தொடருங்கோ. :)

அம்மாவையும் கூட்டிக்கொண்டுதான் போனனாங்கள். அவ இருக்கும் நிலைமையில் நண்பர்களிடம் கூட விட்டிடுப் போக முடியாது! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் திகதி காலை புறப்பட்டு இரவு நுரன்பெர்கில்  சகோதரி வீட்டில் தங்கினோம்.பின் அம்மாவை தங்கச்சிகளிடம் விட்டு விட்டு  அடுத்தநாள் மாலை வெளிக்கிட்டு இரவு பெர்லினுக்கு சகலன் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.இரவு அயர்ச்சி தீர குளித்துவிட்டு நன்றாக உறங்கினோம்.நான்காம் திகதி காலை புதுக் கோவிலில் கணபதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.இந்தியா ,இலங்கையிலிருந்து விஷேசமாக அழைக்கப் பட்ட  குருக்கள்மாருடன்  ஆலயக் குருக்களும் இணைந்து மற்றும் ஏனைய பிராமணர்களும் சேர்ந்து வேத மந்திரங்கள் ஓத கணபதி ஹோமம்  நன்றாக நடந்தது.

 

1266538_652193541466371_1457707943_o.jpg

 

1275038_652193601466365_1575534095_o.jpg

 

1263068_652193558133036_2014994943_o.jpg

 

 

1264859_652193784799680_1840964626_o.jpg

 

 

ஆராதனை தொடரும்:

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா

இன்றுதான்  பார்த்தேன்

 

தொடருங்கோ..

நீங்கள்  அம்மா பிள்ளை போலும்

அம்மா  கவனம்....

தொடருங்கள்... :)

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி சுவி அண்ணா
ஹம் நகரில் இருக்கும் அம்பாள் ஆலயத்திற்கு நீங்கள் செல்வதில்லையா
படங்கள் அழகு. அதைவிட கோயில்க் கோபுரம் இன்னும் அழகாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று மாலை முதற் கோவிலில் தேர் உற்சவம் நடைபெற்றது.மயிலாட்டம், ஒயிலாட்டம் கொலாட்டங்களுடன் காவடி ஆட்டமும் நடைபெற்றது. காவடி ஆட்டத்தில் இன்றைய இளையோர் கலந்து கொண்டு உற்சாகமாய் ஆடியது சந்தோசமாக இருந்தது.எனது பேரனும் சந்தோசமாய் காவடி எடுத்தார்.ஸ்ரீ முருகப் பெருமான் அலங்கரிக்கப் பட்ட தேரில்  வள்ளி தெய்வானை சமேதராக வெளிவீதி உலாப் புறப்பட்டார். அடியவர்கள் சிதறு தேங்காய்கள் உடைக்க ,தேசிக்காய் மீதேறி கம்பீரமாய்த் தேர் புறப்பட்டது . வீதிகளில் தண்ணீர்ப் பந்தல், அன்னதானம் எல்லாம் அடியவர்களுக்காக சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.பல்வேறு தேசத்தைச் சேர்ந்தவர்களும் அவற்றை நன்கு அனுபவித்ததுடன் புகைப் படங்கள் ,வீடியோக்களும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பஜனை பாடல்களுடன் பக்தர்களும் தேரைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

மாலையில் தேர் இருப்பிடம் வந்தது. அங்கு வைத்து அடியவர்கள் அர்ச்சனைகள் செய்தனர்.  அங்கு வைத்துச் சுவாமிக்கு பச்சை சாத்தி ,அவரை அடியவர்கள் தோளில் தாங்கி ஊஞ்சலாக ஆட்டி கொண்டு பிரகாரத்துக்குள் வந்தனர். பச்சை அலங்காரத்தில் சுவாமிகளின் அழகைச் சொல்ல வார்த்தையில்லை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

 

1272570_652194201466305_804611529_o.jpg

 

1276496_652194051466320_636379790_o.jpg

 

1275027_652194078132984_115756492_o.jpg

 

 

1235499_652193871466338_406066040_n.jpg

 

946383_652194508132941_254587233_n.jpg

 

1264775_652194371466288_114777762_o.jpg

 

 

பின் ஐந்தாம் திகதி  தீர்த்தோற்சவமும் , இன்ன பிற நிகழ்ச்சிகளும்  சிறப்பாக  நடைபெற்றன.

 

ஹம்  நகரக் கோவிலுக்கு நான் இன்னும் போகவில்லை  வாத்தியார்.

 

நான் அம்மம்மா பிள்ளை விசுகு. அம்மம்மாவோடு இருந்துதான் வளர்ந்தனான். 

 

ஆராதனை தொடரும்:

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் எல்லாவற்றையும் படித்துமுடித்தேன் சுவியண்ணா.. அருமையாக உள்ளன உங்கள் அனுபவப் பகிர்வுகள்.. :D நாங்களும் கோயிலுக்குப் போன உணர்வு வருகிறது.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள், சுவி!

 

முருகன் நல்ல பெரிய ஸ்பொன்சர் ஒண்டைப் பிடிச்சிருக்கிறார்! 

 

பிழைச்சுக் கொள்ளுவார்! :D

 

1263068_652193558133036_2014994943_o.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பா முருகனுக்கு மக்டோனல்ட்ஸ் கண்டைனர் இல் சாப்பாடு வைச்சிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வாசனை இலை அல்லது தேம்ஸ் நதி செய்யுற வேலையை இன்டைக்கு புங்கையர் செய்துபோட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின் ஆறாம் திகதி புதுக் கோவிலை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து  தெய்வங்களின் திருவுருவச் சிற்பங்களை எடுத்துவந்து அவர்களைச் சயனத்தில் வைத்திருந்தார்கள்.அதன்பின் அந்தச் சிற்பங்களை  நவதானியங்கள், பஞ்சலோகங்கள் போன்ற திவ்யமான வஸ்த்துக்களை இட்டுப்  பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்தார்கள். அடியேனுக்கும் சில விக்கிரகங்களைத் தாங்கி வைக்கும் பாக்கியம் கிட்டியது.குருக்கல்மாரின் வேத கோசங்களும், பக்தர்களின் வாழ்த்தொலிகளும், பஜனைக் கீதங்களுமாக ஒரு ரம்மியமான சூழ்நிலையை உண்டாக்கி இருந்தது.

 

532156_652194444799614_1886392413_n.jpg

 

1274076_652194638132928_1850166845_o.jpg

 

 

75018_652194684799590_1500468592_n.jpg

 

 

1231696_652194768132915_1451826001_n.jpg

 

1238226_652194924799566_1342977632_n.jpg

 

 

ஆராதனை தொடரும்:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் இணைப்பு,  பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது
தொடருங்கள் சுவி அண்ணா 
 

கோவிலின் அமைப்பு, சிலைகள், கடவுளின் உருவங்கள் போன்றவை எமது நாட்டில் கோவிலுக்கு சென்றது போன்ற உணர்வை தருகிறது. தொடருங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலுக்குள் அழகாக வர்ண வேலைப்பாடுகள் செய்யப் பட்டுள்ளது, சுவி.
நாமும்... கும்பாபிஷேகத்திற்கு போன மாதிரி உள்ளது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.