Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப்பெயர்.....வரலாறு ...... பதிவிடுங்களேன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1390641_571417112907495_644717300_n.jpg

தூத்துக்குடி--வரலாறு ,, தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி)சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துரையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி கடந்த காலத்தில் 'திரு மந்திர் நகர்' என்று அறியப்பட்டது. அனுமான் சீதையை தேடி இலங்கை செல்லும் வழியில் தூத்துக்குடி நகரில் முகாமிட்டிருந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த நகரத்தின் பெயரும் கூட “தூதன்” என்ற வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.மேலும் இந்நகரத்தின் பெயர் பின் வரும் இரண்டு வார்த்தைகளில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது “தூர்த்து” இதன் பொருள் ‘கடலில் இருந்து உருமாறி வந்த நிலம்’.“குடி” இதன் பொருள் ‘ குடியமர்தல்’. வரலாற்றின் ஆரம்ப நாட்களில் இருந்து துறைமுக நகராக இருப்பதினால் இது பிரபலமாக உள்ளது. பாண்டிய மன்னன் ஆட்சி காலத்தில் கூட இது ஒரு பிரபலமான துறைமுகமாக இருந்து வந்துள்ளது.1548 ம் ஆண்டு ,இந்நகரத்தை பாண்டிய மன்னனிடம் இருந்து போர்த்துகீசியர் எடுத்து கொண்டனர். பின்னர் 1658 இல் இந்நகரம் டச்சுகாரர்கள் வசம் சென்றது. பின்னர் 1825 இல் இது ஆங்கிலேயர் கீழ் வந்தது.1866 ல் இது ஒரு நகராட்சியாக நிறுவப்பட்டது மற்றும் ரோச் விக்டோரியா இந்நகரத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2008 ல் இது ஒரு மாநகராட்சியாக மாற்றப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.maalaimalar.com/2010/03/08103747/chennai.html

c52628cf-3ea1-4a11-8b8d-faad2a4bcc3f_S_s

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நகரம், வரலாற்று சிறப்பு மிக்கது. இதனை `மதராஸ்' என்றும், `சென்னை' என்றும் இரு பெயர்களால் அழைத்தார்கள்.
 
மதராஸ் என்பதை "மெட்ராஸ்" என்று பிற மொழிகளில் எழுதினார்கள். எனவே சென்னை நகரின் பெயரை சென்னை என்று ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை முதல்_ அமைச்சர் கருணாநிதி 17_7_1996 அன்று சட்ட சபையில் அறிவித்தார்.
 
சென்னை நகர் என்று பெயர் வந்ததற்கு வரலாற்று அடிப்படையில் இரு காரணங்கள் கூறப்படுகிறன. தற்போதைய ஐகோர்ட்டு கட்டிடம் உள்ள இடத்தில் சுமார் 365 ஆண்டுகளுக்கு முன்பு சென்னகேசவர் கோவில் ஒன்று இருந்திருக்கிறது. அதனால் சென்ன கேசவபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
 
ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை (தற்போது தலைமை செயலகம் இயங்கும் இடம்) கட்ட இடம் அளித்த அய்யப்ப நாயக்கர், வேங்கடப்பன் ஆகியோர் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் "சென்னப்பட்டினம்" என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
 
அனைத்து மொழிகளிலும் "சென்னை" என்றே அழைக்கவேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பல தரப்பினரும் வரவேற்றார்கள். அந்த சமயத்தில் அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் கூறியதாவது:-
 
"சென்னப்பட்டினம் என்பதன் சுருக்கம்தான் சென்னை என்று அழைக்கப்படுகிறது. தமிழக முதல்_அமைச்சர் கருணாநிதி, சென்னை என்ற பெயரே எல்லா மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது."
 
இவ்வாறு தமிழ்க்குடிமகன் கூறினார்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரும் வரவேற்று அறிக்கை வெளியிட்டார்கள்.
 
குமரிஅனந்தன் வெளியிட்ட அறிக்கையில், "மெட்ராஸ்" என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக எல்லா மொழிகளிலும் சென்னை என்று அழைக்கப்பட வேண்டும் என்ற அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது" என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
பழ.நெடுமாறன் விடுத்த அறிக்கையில், "மெட்ராஸ் என்பதை இனி சென்னை என எல்லா மொழிகளிலும் அழைக்கப்படும் என்ற முதல்_அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். அதைப் போல தமிழகத்தில் பல ஊர்ப்பெயர்கள் இடைக்காலத்தில் வடமொழியில் மாற்றம் செய்யப்பட்டன. அவற்றின் தமிழ்ப் பெயர்களை மீண்டும் நிலை நிறுத்தும்படி வேண்டுகிறேன்" என்று கூறி இருந்தார்.
 
இந்தியாவின் முக்கிய 4 நகரங்களில் ஒன்றான பம்பாய் பெயரும் மும்பை என்று மாற்றப்பட்டது. 4_5_1995 அன்று நடைபெற்ற மராட்டிய மந்திரிசபை கூட்டத்தில் `பம்பாய்' பெயரை `மும்பாய்' என்று மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை முதல்_மந்திரி மனோகர் ஜோஷி தெரிவித்தார். டெல்லியில் பிரதமர் நரசிம்மராவை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார்.
 
அதன் பிறகு பம்பாய் என்பது மும்பாய் என்று மாறியது. கொஞ்ச காலத்தில் அதுவும் மாற்றப்பட்டு `மும்பை' ஆனது.
 
இதனை அடுத்து மேற்கு வங்காளத் தலைநகரும் இந்தியாவின் பெரிய துறைமுக நகருமான கல்கத்தா "கொல்கத்தா" என்று மாற்றப்பட்டது.

கோப்பாய்

ஈழவள நாட்டின் வடபகுதியிலிருந்து தமிழரசிற்கு நல்லூர் இராசதானியாகவிருந்தது. சிங்கைபுரம், நல்லைநகர், யாழ்நகர் என்ற பெயரும் காலத்துக்கு காலம் வழங்கப்பட்டன. தலைநகரில் பலமான கோட்டையிருந்தது, பாதுகாப்பிற்காக கோப்பாயிலும் வன்னிப் பிரதேசங்களிலும் கட்டப்பட்ட கோட்டைகளிருந்தன. கோ- அரசன் பாய்-இருப்பிடம் கோப்பாய் என்பது அரசன் இருப்பிடம் எனவும் நல்லூர் மந்திரி மனையருகே தூர்ந்து காணப்படும் சுரங்கப்பாதை உபதலைநகரமான கோப்பாய்க்குச் செல்ல உதவியதாகவும் ஆபத்துக் காலங்களில் அரசர் இதன் மூலம் தப்பிக் கோப்பாய்க்குச் சென்றதாகவும் யாழ்ப்பாண இராச்சியம் எனும் நூலில் காணப்படுகிறது. யாழ்ப்பாணம் அரசின் கூழைக்கச் சக்கரவத்தி முதல் சங்கிலியன் செகராசசேகரன் இறுதியாக ஆட்சி செய்த விபரங்களை இலங்கைச் சரித்திரம் கூறுகின்றது. சிங்கள அரசினால் காலத்துக்குக் காலம் எடுக்கப்பட்ட படையெழுச்சிகள் முறியடிக்கப்பட்டு தமிழரசு நிலைத்து நின்றது.

1505 இல் இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசர் தென்னிலங்கையில் கரைநாடுகளை வசப்படுத்தி ஆண்ட போதும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற எடுத்த படையெழுச்சிகள் பல தோற்க்கடிக்கப்பட்டன. மீண்டும் 1624 இல் புரட்டாதியில் காக்கைவன்னியன் என்பவன் சூழ்ச்சியுடன் பறங்கிப் படை வழமை போல் கொழும்புத்துறையில் இறங்காது பண்ணையில் இறங்கி நல்லோரை நோக்கி நகர்ந்தது. அன்று விஜயதசமி, ஆயுத பூசையில் தமது ஆயுதங்களை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்த நேரம். திடீரென நூலைந்த பறங்கிப் படைகளின் குண்டுமாரிக்கு எதிர்கொள்ள தமிழ் வீரர்கள் ஆயத்தமான போது காக்கைவன்னியன் தோன்றிச் செய்த சூழ்ச்சியினால் சங்கிலியனை அகப்படுத்திச் சிறையிலிட்டனர். சங்கிலியன் சிறைக்கூடத்திலிருந்து சுரங்கப்பாதை வழியாக வெளியேறி தப்பி கோப்பாய்க் கோட்டைக்குப் பின்வாங்கினான். பறங்கியர் நல்லூர்க் கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டு கோப்பாய்க் கோட்டையை நோக்கி வந்தனர். பறங்கியர் வருகையை அறிந்த சங்கிலியன் இரவோடிரவாக வன்னிக் கோட்டையை நோக்கிச் சென்றான் செல்லும் வழியில் பறங்கியர் காக்கைவன்னியனின் உதவியுடன் ஆனையிறவுப் பூசந்தியில் வைத்துச் சங்கிலியனை இலகுவாக அகப்படுத்தியதாகச் சரித்திரம் கூறுகிறது.

பறங்கியர் நல்லூர்க் கோட்டையை இடித்துப் பண்ணையில் கோட்டை கட்டினார்கள். கோப்பாய்க் கோட்டையையும் முற்றாக இடித்துத் தரைமட்ட ஆக்கினார்கள். குறித்த தரைமட்டமாக்கப்பட்ட கோட்டையின் நுழைவாயிலில் பழைய கோட்டை (OLD CASTLE ) என்று எழுதப்பட்டிருந்த கட்டிடம் சில காலத்தின் முன்னரே இடித்தழிக்கப்பட்டது. குறித்த கோட்டை வளவில் செங்கற்க்களாலான உறுதியான சுவர்களையுடைய விசாலமான பழமையான வீடு ஒன்று இன்றுமூண்டு. தற்போது பல வீடுகள் கட்டப்பட்ட போதிலும் சில இடங்களில் நிலத்தினை அகழும் போது செங்கற்க் குவியல்கள் வெளிப்படுகின்றன. குறித்த கோட்டையிருந்த இடத்திலுள்ள குடியிருப்பாளர்கள் உறுதிகளிலும் கோட்டை வாய்க்காலும் பழைய கோட்டையு என்றே எழுதப்படிருப்பதுவும், நல்லூர்க் கோட்டைக்கு யமுனா ஏரி போல கோப்பாய்க் கோட்டைக்குக் குதியடிக்குளம் நீச்சல் தடாகமாக அமைந்திருந்ததும். குறித்த கோட்டை வளவிற்கு தெற்கு எல்லையில் செல்லும் கோட்டை வாய்க்காலும் கோப்பாய் கோட்டையை நினைவுபடுத்தும் சின்னங்களாக இன்றும் உள்ளன.

குறித்த குதியடிக்குளம் 1955 ஆம் ஆண்டளவில் கி.மு.ச. கோரிக்கையின் படி அரச செலவில் ஆலமாக்கப்பட்டு, குறித்த குளத்தைச் சுற்றியுள்ள அறைசாந்தால் கட்டப்பட்ட அகலமான சுவர்கள் இடிக்கப்பட்ட போது தென்மேற்கு மூலையில் 6 x 2 அடி வரையுள்ள ஓர் குழி காணப்பட்டது. அதற்குள் சாம்பல் போன்ற உக்கிய அசேதனப் பொருள்கள் காணப்பட்டன. பண்ண்டைய வழக்கப்படி தடாகம் பூரணமாக்கப்பட்ட வேலை கொடுக்கப்பட்ட நரபலியின் சேதனப் பொருட்க்களாயிருக்கலாம் என்ற அபிப்பிராயம் பல அனுபவத்தர்களினாலும் கூறப் பெற்றது.
 
http://www.kopayone.com/p/blog-page.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கெருடாவில் - ஊர்ப்பெயர் வரலாறு" - ஒரு குறிப்பு

DSC05633.JPG கெருடாவில் மாயவர் ஆலயம்
 
- சு. குணேஸ்வரன்
 
            ‘கெருட + ஆவில் = கெருடாவில்’ என அமையும். ‘கெருடன்’ ‘கருடன்’ என்பன தமிழ் அகராதிப்படி ஒரே அர்த்தத்தைக் குறிப்பனவாகும்.     மேலும் நோக்கினால் ‘கெருடன்’ என்ற பறவையை விஷ்ணுவுக்குரியதாகக் கொள்வர். ‘ஆ’ என்பது பசு. ‘வில்’ என்பது வில் வளைவிலான குளம், அரைவட்டம், சிறுகுளம், ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது ‘சிறிய குளம்’ எனக் கருதலாம். ‘வில்’ என்ற கருவி எவ்வாறு அரைவட்டமாக வளைத்து எய்யப்படுகிறதோ அதேபோல அரைவட்ட வடிவ சிறிய நீர் நிலைகளைக் குறிப்பிட ‘வில்’ என்ற சொல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இவை பழந்தமிழ் இலக்கியங்கள்  ஊடாக நாம் அறியும் செய்திகளாகும். 
 
            கெருடாவில் பிரதேசம் குறிப்பாக ஆரம்பத்தில் ஈறள் காடுகளைக் (நெருக்கமாக இருந்த காடு) கொண்ட பிரதேசமாக அமைந்திருந்ததால் கருடன் என்ற பறவையினம் அதிகம் இருந்திருக்கலாம். (அதிகமான ஊர்ப்பெயர்கள் உயிரினங்களின் பெயர்களுடன் இணைத்து காரணப்பெயராக வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணம் :- கெருடாவில் - (கெருடன்), கொக்குவில் - (கொக்கு), மந்துவில் - (மந்தி), நவிண்டில் (நண்டு) போன்ற ஊர்ப்பெயர்களை ஞாபகப்படுத்தலாம்.) அதேபோல் அங்கிருந்த நீர் நிலையின் காரணத்தால் ‘வில்’ என்பதும்  வந்திருக்கமுடியும் என்று கருதலாம்.
 
     மாயவர் கோவிலுக்கு அருகில் உள்ள கெருடாவில் அம்மன் கோவிலிலிருந்து கெருடாவில் பாடசாலைக்குச் செல்லும் கிழக்கு வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலுக்கும் இடையில் தெற்குப்புறமாக முன்னர் ஒரு சிறிய குளம் இருந்ததாக மூதாதையர் குறிப்பிடுகின்றனர். அக்குளம் இருந்த இடம் ‘பால்மோட்டை’ என தொட்டில் கந்தசாமி கோவில் ஆலய பாலசுப்பிரமணியக் குருக்கள் குறிப்பிடுகிறார்.
 
    தற்காலத்தில் மழைபெய்தபின்னர் அதனை அண்டிய பிரதேசத்தில் நீர் நிரம்பியிருத்தலையும் கண்டுகொள்ளமுடியும். அதுமட்டுமல்லாமல் கோட்டைச்சீமா அம்மன் கோயிலின் கிழக்குப்புறத்தின் ஊடாகவும், கெருடாவில் மாயவர் கோவிலுக்கு தெற்குப்புறமாகவும், வடக்குத் தெற்கு பாடசாலை வீதிவழியாக வரும் நீரும் மழைக்காலத்தில் இவ்விடத்தில் தேங்குவதனை அவதானிக்கலாம். குளம் இருந்ததாகக் கருதப்படும் இடத்தில் இப்பொழுதும் கொண்டல் மரங்கள் காணப்படுகின்றன. 
 
            இப்பகுதிக்கு அருகில் பிராமண வகுப்பினர் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்விடத்திற்குரிய காணிகளின் பெயர்களை அல்லது தோம்புகளைத் தேடுவதன் ஊடாகவும் இவ்விடத்தில் இருந்த குளமும் அது தொடர்பான காரணப்பெயரும் மேலும் உறுதி செய்வதற்கு வாய்ப்பிருக்கும்.
 
            இந்தப் பிரதேச நிலவமைப்பை அடிப்படையாகக் கொண்டு மேலும் சில ஆதாரங்களை சுட்டிக்காட்டலாம். மயிலியதனை, என்பது ‘மயிலம்’ என்னும் மரத்தின் பெயரால் உருவானது. கேணித்தோட்டம் என்று இன்று வழங்கப்படும் பெயர் ‘நீர்நிலை’ மற்றும் ‘சிறு குளம்’ என அர்த்தப்படும்.  மற்றும் வயல் சார்ந்த மருதநிலத்தின் ஊர்ப்பெயர்களாக ‘வில்’, ‘பள்ளி’  ஆகியனவும் வழங்கப்படுகின்றன. அதனால்தான் பள்ளிவாசல் என்பது - பள்ளவாசல் என அழைக்கப்பட்டிருக்கலாம். (நீர் தேங்கக்கூடிய பள்ளமான நிலப்பிரதேசத்தைக் கொண்டதனாலும் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்), இதன் அடிப்படையிலேயே ‘வில்’ என்பதும் கெருடாவிலைப் பொறுத்தவரையில் சிறிய குளத்தைக் குறிப்பிடவே வழங்கங்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரமுடிகிறது.
 
(கெருடாவில் மாயவர் ஆலயத்தின் தோற்றத்திற்கு வித்திட்டவரும் ஆலய குருவாக விளங்கியவருமாகிய திரு க. செல்லன் (மாயவர் ஐயா) அவர்களின் மறைவின் 31 ஆம் நினைவு மலருக்கு எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து ஒரு பகுதி)

இடுகையிட்டது துவாரகன் நேரம் 8:53 AM

http://vallaivelie9.blogspot.in/2013/06/blog-post.html

திரு(ஸ்ரீ)வில்லிபுத்தூர் என்னும் ஊர்ப்பெயர்

இந்த ஊருக்கு இப்பெயர் வரக்காரணம் இதனை உருவாக்கிய வில்லி என்பவார். வில்லிபுத்தூர் என்று பெயரிடப்பட்ட இவ்வூர், திருமகளாகிய ஆண்டாளின் அவதாரத் தலமாக இருப்பதால் "ஸ்ரீ" என்னும் பெயர் பெற்றது. "ஸ்ரீ" என்னும் சொல் வடமொழிச் சொல்லாக இருப்பதால் "திரு" என்று வழங்கப்படுகிறது.

200px-Srivilliputtur_Old_Photo.jpg

250px-Andal_Temple.jpg

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்குடுதீவு

270px-Gislanka_locator.svg.png

220px-Punkudutivu.png

புங்குடுதீவு (Pungudutivuஇலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது.

இத்தீவானது வேலணை வாணர் பாலத்தினால் இணைக்கப்பட்டதன் மூலம் இங்குவாழும் மக்கள் பெரும் பயனைப் பெற்றுள்ளார்கள். குறிகட்டுவான், கழுதைப்பிட்டி போன்ற துறைகள் மூலம் மற்றய தீவுகளுடனான தொடர்புகளைக் கொண்டுள்ளது. இங்கு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கடல் வளத்தின் மூலம் மீன்பிடிப்பும்சிறப்பாக நடைபெறுகின்றன.

பெயர்க்காரணம்[தொகு]

புங்குடுதீவு என்ற பெயர் தோன்றியமைக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.

அக்காலத்தில் புங்கை மரம் நிறைந்த காடாக இவ்விடம் இருந்தமையால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாக கதைகள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்பு படுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவது முண்டு. மேலும் இசுலாமியரின் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் படையெடுப்பாளர்களது கொடுமையில் இருந்து தமது கன்னிப் பெண்களை பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று. இந்த வகையில் பூங்கொடித் தீவு என வழங்கி அது காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று என்பர்[1]. இத்தீவானது ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாகக் காணப்பட்டமையால் ஒல்லாந்தர் இதற்கு ‘மிடில்பேர்க்’ எனப் பெயரிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் ஒல்லாந்தரால் கடலில் குளித்தெடுத்த சங்குகளை கொண்டுவந்து பதம்பிரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் இது அமைவு பெற்று விளங்குகின்றது. இதனால் இதற்கு சங்குமாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்[1].

துறைமுகங்கள்[தொகு]

இங்கு புளியடித்துறை, கழுதைப்பிட்டித்துறை, குறிகட்டுவான் துறை, மடத்துவெளித் துறை எனும் நான்கு துறைகள் காணப்படுகின்றன. ‘கோரியா’ என்ற இடத்தில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட வெளிச்சவீடு ஒன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பெருங் கப்பல்களும், செழித்த வாணிபமும் அக்காலத்தில் இருந்தமையால் நடுக் கடலில் கப்பல்கள் சென்று திரியும் இராக் காலத்திலே கப்பல்கள் திசை மாறாது கரையை சேர்வதற்கு துணையாக கடற்கரைப் பட்டினத்தில் 35 அடி உயரமுடையதாக இவ்வெளிச்ச வீட்டை அமைத்துள்ளனர். இவ்வெளிச்ச வீடு 5 செக்கனுக்கு ஒருமுறை விட்டு விட்டு ஒளிரும் வெள்ளை ஒளியை வீசும் வண்ணம் அமைந்து காணப்படுகின்றது[1].

மக்கள் பரம்பல்[தொகு]

இலங்கையின் 1981ம் ஆண்டின் குடிசனமதிப்பீட்டின் படி 14622 பேர் அன்று வாழ்ந்துள்ளார்கள். இன்றைய நாட்டின் இனப்பிரச்சனை காரணமாக அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள்.

புங்குடுதீவு-கோயில்கள்[தொகு]
  • ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்
  • மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்
  • மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம்
  • வல்லன் திருபெருந்துறை நாகதம்பிரான் ஆலயம்
  • வல்லன் இலுபெண்ணை நாச்சிமார் கோவில்
  • வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில்
  • கோரியாவடி நாயம்மா கோவில்
  • கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்
  • தல்லையபற்று முருகமூர்த்தி கோவில்
  • சந்தையடி வீரகத்தி விநாயகர் கோவில்
  • பெருங்காடு கந்தசாமி கோவில்
  • குறிகட்டுவான் மனோன்மணி அம்பாள் கோவில் (பேச்சியம்மன் )
  • பெருங்காடு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
  • பெருங்காடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்)
  • இறுபிட்டி பிட்டியம்பதி ஸ்ரீ காளிகாபரமேஸ்வரி அம்பாள் ஆலயம்
  • இறுபிட்டி அரியநாயகன்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் -அரியநாயகன்புலம்
  • இறுபிட்டி பெரியபுலம் வீரகத்தி விநாயகர் கோவில்
  • பெருங்காடு புனித புரட்டஸ்தாந்து தேவஸ்தானம்
  • பெருங்காடு புனித சவேரியார் கோவில்
  • பெருங்காடு புனித அந்தோனியார் ஆலயம்)
  • புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் (ஸ்ரீ ராஜாராஜேஸ்வரி அம்மன் கோவில்)
இங்கு வாழ்ந்த பெரியோர்கள்[தொகு]
  • மு. பொன்னம்பலம், எழுத்தாளர்
  • சி. சண்முகம், நாடகக் கலைஞர்
  • தம்பிஐயா தேவதாஸ், எழுத்தாளர்
  • க.அம்பலவாணர் (பெரியவாணர்) சமூகசேவை,அரசியல்,கல்வி,
  • ச.அம்பலவாணர்( சின்னவாணர்) சமூகசேவை,அரசியல்,கல்வி,
  • மு. தளையசிங்கம், எழுத்தாளர்
  • எஸ். கே. மகேந்திரன், வழக்கறிஞர், எழுத்தாளர்
  • சு. வில்வரத்தினம், எழுத்தாளர்
  • வ. பசுபதிப்பிள்ளை, கல்வி, ஆன்மிகம், சமூகசேவை
  • க. ஐயாத்துரை கல்வி, சமூகசேவை
  • க. திருநாவுக்கரசு, சர்வோதயம், சமூகசேவை, அரசியல்
  • பொன. கனகசபை, வித்துவான், ஆன்மிகம்
  • சி. ஆறுமுகம், வித்துவான், கல்வி
  • என்.எ.வைத்திலிங்கம் -பொறியியல் நிபுணர்
  • சு. வில்வரத்தினம் அதிபர்- கல்வி,சமூகசேவை
  • க.செல்வரத்தினம்-அதிபர் -கல்வி,இலக்கியம்,கலை
  • ப.கதிரவேலு- வழக்கறிஜர்,அரசியல்,சமூகசேவை,சட்டம்
  • கணபதிபிள்ளை கந்தையா --அதிபர்-கல்வி -சமூகசேவை
  • க.செல்லத்துரை -மு.கி.ச.தலைவர்,சமூகசேவை
  • சி.கணபதிபிள்ளை- வைத்தியர்
  • பேராயர் டேவிட் ஜெயரத்தினம் அம்பலவாணர்
  • சி.இ.சதாசிவம்பிள்ளை -கல்வி
  • சி.சரவணமுத்து சுவாமிகள் -சிவதொண்டர்
  • பண்டிதர் சி.சரவணார் -ஆன்மீக போதகர்
  • கு.வி.செல்லத்துரை - அதிபர்-மு.தலைவர்,அகில இ.த.ஆ.சங்கம்
  • மா.முருகேசு - உடையார், சமூகசேவை
  • பெ.கார்த்திகேசு -மு.கி.ச. உபதலைவர், ச.ச.நி.ஸ்தாபகர்
  • வி.கே.குணரத்தினம் வைத்தியர்
  • நா.கணேசராசகுருக்கள்-சமயம்
  • சே.சிவசுப்ரமனியகுருக்கள்-சமயம்
  • க.முத்துதம்பி -அதிபர்-கல்வி
  • கு.வி.தம்பிதுரை மு-கி-ச-தலைவர்,சமூகசேவை
  • க.தாமோதரம்பிள்ளை- கல்வி-சங்கீதம்
  • தம்பிபிள்ளை -வைத்தியர்
  • அ.குழந்தைவேலு -சமூகசேவை-ஆன்மிகம்
  • இராமச்சந்திர ஐயர் -சமயம்
  • மார்கண்டு சோதிநாதர்--ஆன்மிகம்,சமூகசேவை
  • இ.கெங்காதரகுருக்கள்-சமயம்
  • சு.பரராசசிங்கம்- சமூகசேவை அரசியல்
  • வீ.வ.நல்லதம்பி-அதிபர்-கல்வி-அரசியல்,சமூகசேவை
  • நாக. பத்மநாதன், எழுத்தாளர்
  • க. ஸ்ரீஸ்கந்தராசா (சித்ரா மணாளன்), எழுத்தாளர், சமூகசேவை
  • சி.க.நாகேசு -சமூகசேவை,அரசியல்
  • போ.நாகேசு-சமூகசேவை-அரசியல்
  • க.சிவராமலிங்கம்-அதிபர்,கல்வி,இலக்கியம்,கலை
  • இ.குலசேகரம்பிள்ளை-கல்வி,சமூகசேவை
  • க.தியாகராசா-கல்வி,சமூகசேவை
பாடசாலைகள்[தொகு]
  • புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்
  • புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சித்திவிநாயகர் கனிஷ்ட மக வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு பெருங்காடு அ.மி.பாடசாலை
  • யா/புங்குடுதீவு குறிகட்டுவான் அ.மி.த.க.பாடசாலை
  • யா/புங்குடுதீவு இறுபிட்டி அ.மி.த.க.பாடசாலை
  • யா/புங்குடுதீவு இறுபிட்டி அரியநாயகன்புலம் த.க பாடசாலை
  • யா/புங்குடுதீவு சந்தையடி ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு ராஜேஸ்வரி வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு பராசக்தி வித்தியாலயம்
ஊர்கள்[தொகு]
  • மடத்துவெளி
  • ஊரதீவு
  • வல்லன்
  • மாவுதிடல்
  • வீராமலை
  • கிழக்கூர்
  • முருக்கடி
  • கண்ணகிபுரம்
  • பெருங்காடு
  • சங்கத்தாகேணி
  • குறிகட்டுவான்
  • இறுப்பிட்டி
  • கேரதீவு
  • வரதீவு
  • சிவலைப்பிட்டி
சமூக சேவை அமைப்புக்கள்[தொகு]
  • மடத்துவெளி சனசமூக நிலையம்,
  • ஊரதீவு சனசமூக நிலையம்,
  • வல்லன் சனசமூக நிலையம்,
  • நாசரேத் சனசமூக நிலையம்,
  • பாரதி சனசமூக நிலையம்,
  • பெருங்காடு சனசமூக நிலையம்,
  • சிவலைபிட்டி சனசமூக நிலையம்,
  • இருபிட்டி சனசமூக நிலையம்,
  • ஐங்கரன் சனசமூக நிலையம்,
  • காந்தி சனசமூக நிலையம்,
  • ஊரதீவு கி.மு.சங்கம்,
  • வல்லன் கி.மு.சங்கம்,
  • ஆலடி கி.மு.சங்கம்,
  • பெருங்காடு கி.மு.சங்கம்,
  • ஊரதீவு அறிவகம்,
  • வட இலங்கை சர்வோதயம்,
  • புங்குடுதீவு இளைஞர் சங்கம்,
  • ஊரதீவு இளம் தமிழர் மன்றம்,
  • சர்வோதயம்(புங்குடுதீவு கிழக்கு,
  • மக்கள் சேவா சங்கம்,
  • புங்குடுதீவு நலன்புரி சங்கம்,
  • இந்து இளைஞர் ஒன்றியம்
அரச பொது நிறுவனங்கள்[தொகு]
  • பிரதானதபாலகம் சந்தையடி
  • உபதபாலகம் ஊரதீவு
  • உபதபாலகம் வல்லன்
  • உபதபாலகம் தட்டையன்புலம்
  • உபதபாலகம் குறிகாட்டுவான்
  • உபதபாலகம் இருபிட்டி
  • பொதுநூலகம் சந்தை
  • பொது வைத்தியசாலை
  • ஊரதீவு வெளிநோயாளர் நிலையம்
  • இருபிட்டி வெளிநோயாளர் நிலையம்
  • மக்கள் வங்கி
  • கிராமிய வங்கி
  • பலநோக்கு கூட்டுறவு சங்கம் சந்தையடி(புங்குடுதீவு-நயினாதீவு)
  • குறிகட்டுவான் துறைமுகம்
  • கழுதைப்பிட்டி துறைமுகம்
  • கமநல சேவை நிலையம்
முன்பள்ளிகள்[தொகு]
  • அறிவகம்
  • மடத்துவெளி சனசமூக நிலையம்
  • சிவலைபிட்டி சனசமூக நிலையம்
  • கிராமசபை
  • சர்வோதயம்
  • காந்தி சனசமூகநிலையம்
  • ஐங்கரன் சனசமூகநிலையம்
  • நாசரேத் சனசமூகநிலையம்
  • பாரதி சனசமூகநிலையம்
  • தல்லையபற்று சனசமூகநிலையம்
  • சர்வமதமுன்பள்ளி
  • இருபிட்டி சனசமூகநிலையம்
  • தென்னிதியதிருசபை
  • வல்லன்சனசமூகநிலையம்
குளங்கள்[தொகு]
  • வெள்ளைக்குளம்
  • தில்லங்குளம்,
  • அரியரிகுளம்
  • முருகன்கோவில்குளம்
  • நாகதம்பிரான்குளம்
  • ஆமைக்குளம்
  • திகழிக்குளம்,
  • பெரியகிராய்
  • மக்கிகுண்டு
  • நக்கந்தைகுளம்
  • தர்மக்குண்டு
  • புட்டுனிகுளம்
  • வெட்டுகுளம்
  • கண்ணகிஅம்மன்தெப்பகுளம்
  • கண்ணகி அம்மன் குளம்
  • சந்தையடிகுளம்
  • கந்தசாமிகோவில்குளம்
  • விசுவாமிதிரன்குளம்
  • மாரியம்மன்கோவில்குளம்
வட்டாரங்கள்-கிராமங்கள்[தொகு]

ஒன்று ----சந்தையடி, பெருங்காடு வடக்கு, கரந்தலி

இரண்டு ----முருக்கடி, சந்தையடி, பெருங்காடு கிழக்கு

மூன்று ----பெருங்காடு,நடுவுதுருத்தி,குறிகட்டுவான்,நுணுக்கால்

நான்கு ----சின்ன இருபிட்டி, தம்பர் கடையடி, புளியடி, மாநாவெள்ளை

ஐந்து ----இருபிட்டி கிழக்கு, தனிப்பனை

ஆறு ----இருபிட்டி வடக்கு, இருபிட்டி மேற்கு, வடக்கு , கழுதபிட்டி, புளியடி, கேரதீவு மேற்கு

ஏழு ----ஊரதீவு, வரதீவு, கேரதீவு கிழக்கு, மடத்துவெளி(பிரதான வீதிக்கு மேற்கே ), பள்ளகாடு

எட்டு ----மடத்துவெளி, நாகதம்பிரான் கோவிலடி

ஒன்பது ----வல்லன், மாவுதிடல்

பத்து ----வீராமலை, தட்டையன்புலம், கோட்டைக்காடு, பொன்னாந்தோட்டம்

பதினொன்று ----ஆலடி போக்கதை, முற்றவெளி, தல்லமி

பன்னிரண்டு ----கிழக்கூர், குறிச்சிகாடு, தல்லையப்பற்று

ஊடகவியலாளர்கள்[தொகு]
  • தம்பியையா தேவதாஸ் -இலங்கை வானொலி கல்வி சேவை
  • வீ.டி.இளங்கோவன் -வானொலி பத்திரிகை(பிரான்ஸ்)
  • நாகேசு தர்மலிங்கம் -வானொலி பத்திரிகை (வீரகேசரி,தினகரன்)
  • துரை.ரவி - -வானொலி பத்திரிகை (கனடா)
  • எஸ்.எம்.தனபாலன்.பத்திரிகை (கனடா)
  • சிவ-சந்திரபாலன்- பத்திரிகை,வானொலி-IBC,TRT,தொலைகாட்சி-TRT,விளையாட்டுத்துறை,இணையம்(சுவிஸ்)
  • அ.சண்முகநாதன்(கலைஞன்-TV1.கனடா)
  • தா.பாலகணசன்-வானொலி,தொலைகாட்சி, (பிரான்ஸ்-TTN )
  • ஆர்.ஆர்.பிரபா -வானொலி,தொலைகாட்சி(கனடா -TVI)
  • தி.மோகன் - வானொலி TRT,தொலைகாட்சி-TRT (பிரான்ஸ்)
  • சந்தியோ அமிர்தராஜ் -வானொலி (நெதர்லாந்து )
  • சண்-ரவி - இணையம் -மை கதிரவன் (சுவிஸ்)
  • எஸ்.ஸ்ரீ குகன் - இணையம் -லங்காஸ்ரீ (சுவிஸ்)
  • எஸ். கருணைலிங்கம்(GTV-Europe)
  • க.சதிபன்(வலம்புரி-பத்திரிகை)
எழுத்தாளர்கள்[தொகு]
  • மு.தளையசிங்கம் -சிந்தனை ,புரட்சி எழுத்தாளர்
  • சு.வில்வரத்தினம் -கவிஞர் ,பத்திரிகையாளர்
  • த.துரைசிங்கம் -மழலை எழுத்தாளர்
  • மு.பொன்னம்பலம் -,கவிஞர், எழுத்தாளர்
  • பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் கா.குகபாலன் -எழுத்தாளர் -புவியியல்
  • சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்
  • சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்
  • வீ.வ.நல்லதம்பி இலக்கியம்
  • எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்
  • இந்து மகேஷ் -வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல்
  • தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
  • க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர்
  • ப.கனகலிங்கம் - இதழியல் எழுத்தாளர்
  • வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்)
  • புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர்
  • மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
  • வீ.டி.இளங்கோவன்.கவிஞர்,எழுத்தாளர்
  • நக.பத்மநாதன் -எழுத்தாளர்
  • ஐ.சிவசாமி - கவிஞர்.நாடக எழுத்தாளர்
  • க.செல்வரத்தினம் -நாடக எழுத்தாளர்
  • நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர்
  • எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
  • நாக.சாந்தலிங்கம் - அரசியல் எழுத்தாளர்
  • சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர்
  • கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர்
  • கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர்
  • நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர்
  • யசோதா பொன்னம்பலம் -இதழியல்
  • வீ.டி.தமிழ்மாறன் .இதழியல் ,அரசியல் எழுத்தாளர்
  • ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி)
  • கனக.திருச்செல்வம் -கவிதை எழுத்தாளர்
  • சிவ-சந்திரபாலன் -நாடகம்,வானொலி,கவிதை,இதழியல் எழுத்தாளர்
  • துரை.ரவீந்திரன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
  • கண்ணதாசன் .-கவிதை எழுத்தாளர்
  • சு-மகாலிங்கம் -எழுத்தாளர்
  • ஐ .க.அரியரத்தினம்-எழுத்தாளர் இதழியல்
  • பகீரதன் - கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா)
  • மைதிலி அருளையா -கவிதை எழுத்தாளர்
  • மாணிக்கவாசகர் -கவிதை எழுத்தாளர்
  • மு.முத்துக்குமார் -நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர்
  • சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர்
  • சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர்
  • சிவலிங்கம்(அம்மான்) -நாடக எழுத்தாளர்
  • பாலகணேசன் -ஆய்வு எழுத்தாளர்
  • த-மதி - கவிதை எழுத்தாளர்
  • க.அரியரத்தினம் -எழுத்தாளர்
இசைக் கலைஞர்கள்[தொகு]
  • பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடுதலை கீதங்கள்
  • எஸ் .ஜி.சாந்தன் -விடுதலை கீதங்கள்
  • க.தாமோதரம்பிள்ளை -ஆசிரியர்
  • திருப்பூங்குடி வி.ஆறுமுகம் -வில்லிசை
  • சண்முகம்பிள்ளை -மிருதங்கம்
  • நடராச -வயலின்
  • க.வினசிதம்பி ஆசிரியர்
  • தா.இராசலிங்கம் .ஆசிரியர்
  • நா.தில்லையம்பலம் -ஆசிரியர்
  • கனகசுந்தரம் -ஆசிரியர்
  • சந்திரபாலன் ஆசிரியர்
  • தம்பி ஐயா-தபேலா
  • கனகலிங்கம் ஆசிரியர்
  • சண்முகலிங்கம் ஆசிரியர்
  • என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இவரது தயார் புங்குடுதீவை சேர்ந்தவர் )
  • என்.ஆர்.சின்னராசா -தவில்
  • என்.ஆர்.சந்தனகிருச்ணன் -நாதஸ்வரம்
  • விமலாதேவி -ஆசிரியர்
  • ராஜேஸ்வரி -ஆசிரியர்
  • வாசுகி விக்னேஸ்வரன் -நாட்டிய நர்த்தகி
  • மஞ்சுளா திருநாவுக்கரசு -வயலின்
  • வானதி -நாட்டிய நர்த்தகி
திரைப்படக் கலைஞர்கள்[தொகு] மேற்கோள்களும் உசாத்துணைகளும்[தொகு]
  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவுகள். சென்னை: ஏசியன் அச்சகம்.
  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை
  • புங்குடுதீவு மான்மியம் கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் -2012
  • பூவரசம்பொழுது விழா மலர்கள் .கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்
வெளி இணைப்புகள்[தொகு] நூலகத் திட்டம்
 
வரலாற்றுப் புகழ்மிக்க காவலூர் அன்றும் இன்றும்

ஆக்கம்: ஆசிரியர் எஸ்.எம்.ஜோசெவ்

Untitled.png

இலங்கையின் வட மாகாணத்தில் பண்டைய சிறப்புமிக்க துறைமுகமாக விளங்கியது ஊர்காவற்றுறையாகும். லைடன் தீவு என ஒல்லாந்தரால் அழைக்கப்பட்ட இத்தீவின் வடமேற்கில் ஊர்காவற்றுறை அமைந்துள்ளது. லைடன் தீவு வேலணைத் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் வரலாற்றுக் குறிப்பொன்று இதை தணதீவு எனக் குறிப்பிடுகிறது. கிறீஸ்துவுக்கு முன் ஆறாம் நூற்றாண்டிலிருந்தே ஊர்காவற்றுறை துறைமுகமாக இருந்தது எனச் சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இது துறைமுகமாக இருந்தது என வரலாறு சான்றுபகருகிறது. போத்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு முன் தென் இலங்கை அரசனான ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண அரசை வெற்றிகொண்டு ஊர்காவற்றுறை துறைமுகத்தில் ஆதிக்கஞ் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. காலகதியில் அது ஒரு துறைமுக நகரமாக உருவெடுத்தது.

ஊரின் பெயர் எப்படி உருவாகியது

ஊர்காவற்றுறை என்ற பெயர் வரக் காரணம் என்ன என்று ஆராயின் ஊரைக் காவல் செய்கின்ற வகையில் இந்த துறைமுகம் அமைந்திருந்தமையால் அவ்வாறு பெயர் வந்தது என்பர். ஊரான் தோட்டம் என முன்பு வழக்கில் இருந்த பெயர் சிங்களத்தில் “ஊறாதொட்ட” என வந்தது என்பர். பன்றிகள் ஏற்றிய துறை என்ற காரணத்தால் ஊறாதொட்ட எனப் பெயர் வந்தது என்று சொல்பவருமுளர். ஆனால் யானைகள் இத்துறைகமுகத்தினூடாக ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள. இப்பொழுது ஆங்கிலத்தில்   கயிற்ஸ் என வழங்கப்படும் பெயர் ஆங்கிலேயரால் சூட்டப்பட்டது என்பர். ஆய்வுகளின்படி இது போர்த்துக்கேய சொல்லில் இருந்து மருவி வந்தது எனத் தெரிகிறது. போர்த்துக்கேய மொழியில் கேயிஸ் என்றால் துறைமுகம் என்பது பொருள். அதிலிருந்தே பின் கயிற்ஸ்  என்ற பதம் ஆங்கிலத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று விளக்கம் தரப்படுகிறது.

பொற்காலம்

வட பகுதியில் அமைந்துள்ள ஒரு இயற்கைத் துறைமுகம் ஊர்காவற்றுறை ஆகும். வடகீழ்> தென்மேல் பருவகாலங்கள் இரண்டிலும் பாதுகாப்பான துறையாக இது விளங்குவது விசேட அம்சமாகும். பன்னெடுங்காலமாக காவாலூர் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது. தமிழ் நாட்டுடன் நெருங்கிய தொடர்பிருந்தமையால் அந்நாட்டுத் துறைமுகங்கள்வரை சென்று பண்டைமாற்று வணிகஞ் செய்திருக்க வாய்ப்பிருந்தது. பல தென்கிழக்காசிய நாடுகள்வரை காவலூர் மாலுமிகள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே ஊர்கவற்றுறைத் துறைமுகம் மிகவும் புகழ்பெற்றிருந்தது எனலாம். பிரித்தானியர் ஆசிய நாடுகளான பர்மா தற்போதைய மியான்மார்,யாம்,றங்கூன் முதலிய நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்தனர். இந்த இறக்குமதி வர்த்தகத்தில் பிரதான பங்கெடுத்டுக்கொண்ட பட்டுக்கோட்டைச் செட்டிமார் ஊர்காவற்றுறை> பருத்தித்துறை> வல்வெட்டித்துறை முதலிய துறைமுகங்களை இறக்குமதி வர்த்தகத்துக்குப் பயன்படுத்தினர். அககாலப் பகுதியில் காவலூர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. கப்பல்கள்,படகுகள்,டிங்கிகள்,தோணிகள் என்று துறைமுகம் மரக்கலங்களால் நிறைந்திருக்கும். பனைமர அளவுக்கு உயரமான பாய்மரங்கள் வானைமுட்டி உயர்ந்து நிற்க,பாரிய கப்பல்கள் எந்நேரமும் நங்கூரமிட்டுச் சரக்குகளை இறக்கும் காட்சியை அறுபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் கண்டவர்கள் பலர் இன்னும் சீவந்தராய் இருக்கிறார்கள். படகுகளில் பணியாற்றிய மாலுமிகளில் ஒரு சிலர் இன்னும் பண்டைய நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்க்கிறார்கள். கறிச் சரக்கு வகைகள், வெங்காயம், மிளகாய், சர்க்கரை முதல் கலிக்கட் ஓடுவரை கரை இறக்கப்பட்ட அந்தச் செழிப்பான காலத்தை எண்ணிப்பார்க்கப் பெருமையளிக்கிறது. முந்நாளில் காவலூர்த் துறைமுகம் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருக்கும். அது காவலூரின் பொற்காலமாகும். செழிப்பான அந்த நாட்கள் என்று வருமோ!

பட்டுக்கோட்டைச் செட்டிமாரின் செல்வாக்கினால் காவலூரிலும் கப்பல் கட்டும் தொழில்> படகுத்துறைத் தொழில் என்பன விருத்தி அடைந்தன. பலர் வேலைவாய்ப்புப் பெற்றதோடு மாலுமிகளாகவும், கப்பல் உரிமையாளராகவும் மிகுந்த உச்சநிலையில் இருந்தனர். யுத்தகாலப் பஞ்ச நிலமைகள் காவலூரை அவ்வளவாகப் பாதிக்கவிலை. காவலூர் அரிசிக் களஞ்சியமாக இருந்ததால் அரிசிக்கும் பஞ்சம் இருக்கவிலை.

அறுபதுகளுக்குப் பின்

kayts1-300x168.png

சப்த தீவு மக்களும் சங்கமமாகும் இடம் காவலூராகவே இருந்தது. 1960ம் ஆண்டுவரை நெடுந்தீவு உட்பட அனைத்துத் தீவு மக்களும் ஊர்காவற்றுறைத் துறைமுகம் வந்துதான் காரைநகர் ஊடாக யாழ்ப்பாணம் சென்றனர். ஊர்காவற்றுறை அரசினர் வைத்தியசாலையே அனைவருக்கும் மருத்துவப் பணிக்கு நடுநிலையமாய் இருந்தது. பொலீஸ் நிலையம், நீதிமன்றம் என்பன காவலூர் பட்டினத்திலேயே இருந்தன. இதன் காரணமாக நீதித்துறை சார்ந்த சகல தேவைகள்,சட்டத்தோடு தொடர்புடைய குற்றவியல் விசாரணைகள், வழக்குகள் அனைத்தும் காவலூரில் இடம்பெற்றமையால் நீதிமன்றம் கூடும் நாட்களில் தீவுப்பகுதி மக்கள் இங்கு கூடுவது வழக்கம். அதனால் ஊர்காவற்றுறைச் சந்தை எப்பொழுதும் கலகலப்பாகவே காணப்படும். 1950ம் ஆண்டுவரை காவலூர் சுங்கப்பகுதி கொழும்புக்கு அடுத்த்தாக வருமானத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. சுங்கப் பகுதியில் அநேக மக்கள் வேலை வாய்ப்பைப் பெற்றனர். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நல்லினக் காளை மாடுகளும்,ஆடுகளும் காவலூரின் மேற்கில் உள்ள மாட்டுக்காலை எனப்படும் தடை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு நோய்த்தடுப்புச் செய்யப்பட்ட பின்னரே விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. மிருகங்களுக்கு மாத்திரமல்ல, மனிதர்களுக்கான அம்மை நோய்த் தடுப்பு முகாமும் மாட்டுக்காலையை அண்மித்த ஊர்காவற்றுறை மேற்குப் பிரதேசத்தில் அமைந்திருந்தது. சுகாதார வைத்தியப் பகுதியினர் இத்தடுப்பு நிலையத்தைப் பராமரித்து வந்தனர்.

ஆய்வுக்குட்பட்ட ஆதிக் குடியேற்றம்

கிராம சேகவர் பணிகளை இலகுவாக்க தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட பரவலாக்கற் பிரிவுகளின்படி உருவாக்கப்பட்ட கரம்பொன் வடக்குப் பிரிவுஊர்காவற்றுறை மேற்கை அடுத்த பகுதியாகும். மாட்டுக்காலையை அண்மித்த கரம்பொன் வடக்குப் பகுதியே ஆதிக் குடியேற்றப் பகுதியாகக் கருதப்படுகிறது. ஊருண்டி என முன்னர் அழைக்கப்பட்ட இப்பகுதியே முதன் முதலில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதி என்பது ஆய்வாளர் கருத்தாக இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணரான கலாநிதி பொ.இரகுபதி அவர்கள் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது ஆய்வுக் குறிப்புகளின்படி இப்பகுதி செம்மண் கலந்த பூமியாக இருந்தது என்றும் மக்கள் இங்கு குடியேறியிருந்தமையினாலேயே போர்த்துக்கேயர் இப்பகுதியில் ஒரு கோட்டையைக் கட்டினார்கள் என்றும் தெரிய வருகிறது. அந்தக் கோட்டை சிதைந்த நிலையில் இன்றும் பழங்கோட்டை என அழைக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இக்கோட்டைப் பகுதியில் யாழ் திருமறைக் கலா மன்றத்தினர் திருப்பாடுகளின் காட்சியை  (யேசு சிலுவையில் மரித்த காட்சியை) ஒளிப் படமாக்கியது குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசம் கல்வாரி மலையை ஒத்திருந்தமை இந்தப் புனித நிகழ்வை காட்சிப்புலமாக்க உதவியது.

200px-Portuguese_fort_in_Kayts1.jpg

போத்துக்கேயரின் கீழ்த்திசை ஆட்சிக் காலம் தொடர்பான வரலாற்று நிபுணரான இலண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பொக்ஸர் இலங்கையிலுள்ள போத்துக்கேயரின் கோட்டைகளை இனங்கண்டு ஆய்ந்தபோது அவற்றுள் ஒன்றைப்பற்றிய ஐயமேற்பட்டபோது ஊர்காவற்றுறைக்கு வந்து இந்தப் பழங்கோட்டையைப் பார்த்தபின்னரே தான் தவறவிட்ட கோட்டை அதுதான் என்பதை நிச்சயப்படுத்தித் தெரிந்து கொண்டார். பேராசிரியர் பொக்ஸர் அவர்களை அழைத்துவந்த கொழும்புப் பல்கலைக்கழக வரலாற்று அறிஞரான கலாநிதி திகிரி அபயசிங்கா அவர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளார். கலாநிதி இராமகிருஷ்ணன் அவர்களும் இவ் ஆய்வுக்கு உதவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Fort-Hammenhiel-2-300x195.jpg

கரையில் உள்ள போர்த்துக்கேயரின் பழங்கோட்டையைவிட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்னுமோர் வரலாற்று மீதி ஊர்கவற்றுறைக்குப் பெருமை தருகிறது. காவலூருக்கும் காரைநகர் கடற்படைத் தளத்துக்குமிடையில் அமைந்துள்ள கடற்கோட்டை இலங்கையில் காணக்கூடிய மிக அபூர்வமான வரலாற்று மூலமாகும். ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட இக் கடற்கோட்டை “ஹமன்ஹீல்” என அழைக்கப்படுகிறது. 1990ம் ஆண்டுக்குப் பின் அது கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

காவலூரின் குடிப்பரம்பல் எப்போது ஏற்பட்டது என்பது பற்றித் தெழிவாக அறியமுடியவில்லை. தென் இந்தியாவில் மணற்பாடு தூத்துக்குடி இராமேஸ்வரம்பாம்பன்திருநெல்வேலி முதலிய இடங்களிலிருந்து வந்த மக்கள் தீவுப்பகுதியில் குடியேறியிருக்கலாம். இந்தியப் படையெழுச்சியின் போது போர்வீரர்களாகவும்படைகளுக்குத் துணையாகவும் வந்தவர்கள் இங்கு குடியமர்ந்திருக்கலாம். வியாபார நோக்கத்தோடு வந்தவர்களிற் சிலர் இங்கு தங்கி அவர்களின் சந்ததி பெருகியும் இருக்கலாம். ஒரு பகுதியினர் மன்னார் மாந்தைப் பகுதியில் இருந்து வந்து குடியேறினர் என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. ஊர்காவற்றுறை கிழக்கு ஊர்கவற்றுறை மேற்கு ஆகிய இடங்களில் வாழும் மக்களுக்கு மன்னார்த் தொடர்புகள் இருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் 1990 வரை பல சமூகத்தையும் சேர்ந்த பன்னீராயிரம் மக்கள் ஊர்காவற்றுறைப் பட்டின எல்லைக்குள் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. கத்தோலிக்கரைப் பெரும்பான்மையாகக் கொண்ட இச்சனத் தொகை முக்கிய நான்கு சமுகத்தினரை அடக்கியுள்ளது என்பதற்கு இங்குள்ள நான்கு ஆலயங்கள் சான்று பகருகின்றன.

ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறின் அவலங்கள்

ஊர்காவற்றுறை 1947ம் ஆண்டில் பட்டின சபை அந்தஸ்தைப் பெற்றது. ஐந்து வட்டாரப் பிரிவுகளை அடக்கிய பட்டினப் பரிபாலனம் இங்கிருந்தது. பல வழிகளில் துரிதமாக முன்னேறி வளர்ந்துகொண்டிருந்த காவலூர் எவருமே எதிர்பாராது 1990ம் ஆண்டு ஆவணி 22ல் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையால் உலகப்போரில் அகப்பட்ட ஜேர்மனி நாட்டைப்போலவும், அணுகுண்டு வீசப்பட்ட நாகசாக்கி நகரத்தைப் போலும் சிதைந்து அழிந்த நிலையில் இன்று காட்சி தருகிறது. குண்டு வீச்சு, ஷெல் வீச்சுகளாலும், கடற்படைப் பீரங்கி வேட்டுக்களாலும், சிதைந்த கட்டடங்கள், புள்டோசர் போட்டு மிதித்துத் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள், அரச அலுவலகங்கள் என்பவற்றுடன் அநேக வீடுகளின் சுற்றுமதில்களும், சிதைந்து புதர்மண்டிக் காடுகள் வளர்ந்ததுபோல் மரங்கள் வளர்ந்து மூடிப் பல வீடுகள் அடையாளங் காணமுடியாத படி காட்ச்சி தருகின்றன.

1984க்குப் பின் நீதி மன்றம், பழைய பொலிஸ் நிலையம், புதிய பொலிஸ் நிலையம், வாடி வீடு என்பன தீவிரவாத சக்திகளால், அவை எதிரிகள் வசமாகாதவாறு தகர்க்கப்பட்டன. ஆனால் 1990 புரட்டாதியில் காவலூர் புதிய தபாலகம் உட்பட பல அரச நிறுவனங்கள், சந்தைக் கட்டடங்கள், மக்கள் குடியிருப்பு மனைகள் என்பன அரச படைகளால் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டன. இறங்குதுறை மண்டபம் தகர்ந்து, துறைமுகப் பாலம் சிதைந்து காட்சி தருகிறது. வீடுகள் பல சுவர்களோடும், கூரைகளோடும் நின்றாலும், கதவுகளும், யன்னல்களும் இல்லாது பாழைடைந்த வீடுகளாய் தோற்றமளிக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளிலிருந்த விலைமதிப்பற்ற தளபாடங்களும், பெறுமதிமிக்க பொருட்களும் சூறையாடப்பட்டன. அமைதியில் வாழ்ந்த காவலூர் முந்திய இராணுவ நடவடிக்கைகளுக்குத் தப்பியிருந்த போதிலும் 1990ம் ஆண்டு புரட்டாதி இருபத்தெட்டில் வரலாறு காணாத பேரழிவை எதிர்கொண்டு, மக்கள் சொந்த மண்ணை விட்டு நிலைகுலைந்து, நிர்க்கதியாய், அகதிகளாய் அடைக்கலம் புகுந்து, சொத்துக்களை இழந்தாலும், சுகத்தை இழ்ந்தாலும், உயிரையாவது காப்பாற்றிக்கொண்டால், என்றோ ஒருநாள் மீண்டும் தமது வதிவிடங்களுக்குத் திரும்பலாம் என்று தவித்து நின்றனர். ஆனால் அடைக்கலம் நாடிப் புலம்பெயர்ந்த இடங்களில் அவர்கள் ஆறு மாதங்கள் கூட நிமதிப் பெருமூச்சு விட்டிருக்க காலம் இடம்தரவில்லை.

மக்களைத் துரத்திய 1991

1991ம் ஆண்டு சித்திரை மாதத்தில் காவலூரிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுடன், அடைகலம் தந்தவர்களும் சேர்ந்து லைடன் தீவைவிட்டே வெளியேறி குடாநாட்டை நோக்கி இடம்பெயர்ந்த அவலங்களைப் பெரிய ஒரு நூலாக எழுதலாம். இராணுவ நடவடிக்கைகள் காரணமாக லைடந்தீவு, புங்குடுதீவு, மண்டைதீவு மக்கள் 75,000 பேர் குடாநாட்டை நோக்கிப் படையெடுத்தனர். எகிப்திலிருந்து இஸ்றாயேல் மக்கள் இரவோடு இரவாகப் புலம்பெயர்ந்தபோது நிகழ்ந்த ஆறாத்துயரங்கள் போன்று தீவக மக்களும் தாங்கமுடியாத வேதனைகளை அனுபவித்தனர். காவலூர் மக்களும் இதில் அடங்குவர். கத்தோலிக்க மறைத் தொண்டர்களும், குருமாரும், மனித முன்னேற்ற நடுநிலையமும், பங்குத் தந்தையர்களும், அரச்சார்பற்ற தாபனங்களும் அந்தக் காலப் பகுதியில் ஆற்றிய மனிதநேயப் பணிகளால் லைடந்தீவு மக்கள் தம் உயிரையாவது காப்பாற்ற முடிந்தது என்றால் மிகையில்லை. எனினும் இக்காலப் பகுதியில் இப்பிரதேசத்தில் இடம்பெற்ற ஷெல் வீச்சு, விமானக் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடுகள் என்பவற்றின் விளைவாகப் பலர் உயிரிழந்தனர். சிலர் அங்கவீனமாகினர். பல குடும்பங்கள் அவ்வாறான சோக அவலங்களைச் சுமந்து இன்றுவரை துன்பக் கடலில் தத்தழித்து மீள முடியாத இழப்புக்களை எதிர்கொண்டு வாழ்கின்றனர்.

1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளால் லைடன் தீவும், மண்டை தீவும் நலிவடைந்தன. அதிலும் காவலூரே பெருமளவு அழிவுகளை எதிகொண்டு வரலாறு காணாத அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துப் பண்டைய பெருமைகள் அனைத்தையும் இழந்து நிர்க்கதி நிலையிலுள்ளமை சோகமான வரலாற்று நிகழ்வாகும். 2002ல் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட சமாதன ஒப்பந்தத்தைத் தொடர்ந்து லைடன் தீவின் சில பகுதிகள் படிப்படியாகப் பழைய பொலிவினைப் பெற ஆரம்பித்தது. எனினும் பல்வேறு அரசியல் காரணங்களால் சமாதான ஒப்பந்தம் முறிவடந்தது. 2009 மே மாதத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் அவலங்களின் பின்பு படிப்படியாக ஒரு சிலர் மீண்டும் தமது வாழ்விடங்களுக்குத் திரும்பியுள்ளனர். எனினும் ஏற்கனவே இங்கிருந்து வெளியேறிய ஆயியரக்கணக்கானோர் மீண்டும் இங்கு திரும்பாத காரணத்தால் ஏராளமான வீடுகள் திருத்தமுடியாத அளவிற்கு சிதைவடைந்த நிலையில் உள்ளமை வேதனைக்குரியது. இனிவரும் காலங்களிலாவது இங்கு சிறந்த மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இங்கு வாழ்ந்த பலரிடம் காணப்படுகிறது.

காவலூரின் பெருமையுள்ள பழங்குடி மக்கள்

இலங்கைத் தீவில் முதலில் கப்பலோட்டிய தமிழன்

ஆக்கம்: காவலூர் கவிஞர் ஜி.எம்.செல்வராசா

 ஊர்கவற்றுறையின் பூர்வீகக் குடிகள் எங்கிருந்து வந்தார்கள், எப்போ இங்கு குடியேறினார்கள் என்று திட்டவட்டமாகக் கூற முடியாது போயினும், ஒரு சில பகுதியராவது தென் இந்தியாவிலிருந்து மன்னாரில் குடியேற்றப்பட்டு, அங்கிருந்து பூனரி, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, கோவளம், நாவாந்துறை, சாட்டி, அல்லப்பிட்டி, நாரந்தனை, ஊர்காவற்றுறை முதலிய இடங்களுகளில் காலகதியில் குடியேறினார்கள் என்று அனுமானிக்க இட்டமிருக்கிறது.

இப்பூர்வீகக் குடிகள் அனைவரும் சைவ சமயத்தவர்களே. 1600ம் ஆண்டிலேயே வேத வித்து ஊர்கவற்றுறையில் வேரூண்டப்பட்டது. எனவே அதற்கு முந்திய காலப் பகுதியில் இங்கு சைவ சமயமே தழைத்தோங்கி இருந்தது.

காலகதியில் கத்தோலிக்க மதம் கண்ணாடிச் சுவமியாரால் இங்கு பரப்பப் பட்டபோதிலும், ஊர்கவற்றுறை மக்களில் பிரமுகர்களாக விளங்கிய ஒரு சிலர் தம் ஆதி சமயத்தைக் கைவிடாமல் சமய வைராக்கியர்களாக இருந்தர்கள். அவர்களில் முதன்மை வாய்ந்தவர்கள் ஆண்டி அம்பலரும், ஐயப்பனாரும் ஆவர். தற்போது அம்பலப்புலம் என அழைக்கப்படும் பகுதி முழுவதும் அக்காலத்தில் ஆண்டி அம்பலருக்கே சொந்தமாக இருந்தது. அதனாலேயே, “அம்பலர்-புலம்”, அம்பலப்புலமாக மாறியதெனலாம். இவ்வண்ணமே ஐயப்பனாருக்கும் ஏராளமான காணிகள் இருந்திருக்கின்றன. ஐயப்பன் தோட்டம் என்றழைக்கப்படும் காணி ஒன்று இன்றக்கும் கிழக்குப் பகுதியில் இருக்கிறது. மேற்படி ஆண்டி அம்பலனாரின் மகன் “பேதுறுதே பெற்றக்கோன்” என்னும் குருவானவரால் ஞானஸ்ஞானம் பெற்று, மத்தேசு என்னும் பெயர் பூண்டு மேற்குப் பகுதி பெண்மணி ஒருவரைத் திருமணம் செய்தார். இதுவே அம்மபலப்புலத்துக்கும் மேற்குப் பகுதி மக்களுக்கும் ஏற்பட்ட முதல் சம்பந்தமாகும். மத்தேசு பெயரால் வெட்டப்பட்ட நீரோடையொன்று “மத்தேசு வாய்க்கால்” என்று இன்றைக்கும் அழைக்கப்பட்டு வருகிறது.

ஊர்காவற்றுறையில் குடியேறிய பூர்வ குடிகளில் முதலி வம்ஷமும் ஒன்றாகும். இவர்கள் போதுக்கீசரோடு சம்பந்தம் செய்தபடியால் “பறங்கியர்” என்னும் பட்டப் பெயரோடு அழைக்கப்படலானார்கள். இவர்களுடைய பூர்வீகத் தொழில் நெசவு வேலையாகும். ஊர்கவற்றுறையில் பருத்தி விளைச்சல் அதிகமாக இருந்தபடியாலும், போத்துக்கீசரின் சலுகைகள் அதிகம் கிடைத்ததாலும் நெசவுத் தொழில் பல வழிகளிலும் முன்னேறியது. காலகதியில் ஒருவித வேரினால் சேலைகளுக்குச் சாயம் தோய்க்கவும், வேலைபாடுகள் போடவும் கற்றுக் கொண்டதினால் “வேர் குத்தும் பறங்கியர்” என்னும் பிறிதொரு பட்டப் பெயரையும் இவர்கள் பெறலாயினர். 

இக்குலத்தவர்கள் நெடுந்தீவிலும், வண்ணார்பண்ணையிலும், புங்குடுதீவிலும் பரந்து வாழ்ந்தர்கள். இவர்களுள் தலைமையாக விளங்கியவர் வீரசிங்க முதலியாகும். இவர் நெடுந்தீவில் தலமை அதிகாரியாக இருந்தார். இம்முதலி வம்சத்தாரின் செல்வாக்கையும், பண்டைப் பெருமையையும் எடுத்துக்காட்ட நெடுந்தீவில் பல சரித்திரச் சான்றுகள் உண்டு. ஊர்காவற்றுறையில் மேற்கு வட்டாரம் முழுவதும் இவர்களுக்கே சொந்தமாக இருந்தது என்பதற்குச் சான்றாகப் பழங்கால உறுதிகளில் பறங்கித் தோட்டம், பறங்கி வளவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிபிட்த்தக்கது. பறங்கியர் என அழைக்கப்பட்டுவந்த இவர்கள் முதலி வம்சத்தவர்களின் பரம்பரையினர் ஆவர்.

Untitled02.pngUntitled03.png

Untitled004.png                   St.Marys-Church-Kayts..jpg

  St.Anthonys-Church-Kayts.jpg

                                                                                St._James_Church%2C_Kayts.jpg

15708_103242709712970_4453418_n.jpg

Muruga-Moorthy-Kovil-Karampon-West.jpg

Sivan-Kovil-Kayts.jpg

      history2.jpg                   946517_146597048864314_1267329287_n.jpg

புனித அந்தோனியார் கல்லூரி                    புனித மரியாள் பாடசாலை

நன்றி: http://www.kaytsinfo.com

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்காவற்றுறை பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி தமிழினி. :)

ஐயா,

புங்குடுதீவு பற்றிய தொகுப்புகள் அருமை. நன்றிகள் பல. தொடருங்கள்.

ஊர்காவல்துறையைப் பற்றி அறிய தந்தமைக்கு மிக்க நன்றி. விவரங்களுடன் படங்களையும் இணைத்தது மிகவும் அருமை. ஊர்காவல்துறைக்கு வருகை தர மிக விருப்பம். கடவுள் கூடிய சீக்கிரம் வாய்க்கப்பண்ணுவார் என நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருநெல்வேலி (யாழ்ப்பாணம் [ஈழம்] & தமிழகம்)

250px-India_Tamil_Nadu_location_map.svg.

திருநெல்வேலி – யாழ்ப்பாணத்து ஊர்கள் (Ref: 1. http://www.ourjaffna.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3 2. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF)

திருநெல்வேலி – யாழ்ப்பாணத்து ஊர்கள் பற்றிய சில தகவல்களை ஆராயுமிடத்து யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகமான ஊர்கள், பட்டினங்கள் , நகரங்களின் பெயர்கள் காரணப் பெயர்களாகவே உள்ளன. பண்டைய காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதி போலவே ஈழமும் இருந்திருக்கிறது. சேர , சோழ , பாண்டி நாட்டிலிருந்து தமிழர்கள் நினைத்த போதெல்லாம் ஈழத்திற்குப் போவதும், ஈழத்தில் இருந்தவர்கள் சேர, சோழ , பாண்டி நாடுகளுக்குச் செல்வதும் வழக்கமாக இருந்திருக்கிறது. சேர, சோழ , பாண்டி நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் காடாக இருந்த பல இடங்களை மேம்படுத்தி ஊர்கள், பட்டினங்கள் என அமைத்தனர். அப்படி அமைக்கப்பட்ட ஊர்களுக்கும் பட்டினங்களுக்கும் காரணப் பெயரைச் சூட்டியுள்ளனர். ஐரோப்பியர்கள் தமிழகத்தில் இருந்த தமிழர் இராச்சியங்களையும், ஈழத்திலிருந்த தமிழர் இராச்சியத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, தமிழர்களுடன் கலந்தாலோசிக்காது தமிழக , ஈழ எல்லைகளை மாற்றியமைத்துத் தமிழர்களைப் பிரித்த பின்னரும் ஈழத்தவர்கள் தமிழகம் சென்று திருமணம் செய்வதும், அங்கு குடியேறுவதும், தமிழகத்தில் உள்ளோர் ஈழத்திற்கு வந்து குடியேறுவதும் நடைபெற்று வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு இடத்தின் பெயரை ஆய்வு செய்தாலும் அதற்குப் பின்னால் பல சுவையான செவிவழி வரலாற்றுக் கதைகள் உண்டு. அப்படியாக அமைக்கப்பட்ட ஊர்கள், நகரங்களின் பெயர்களையும் அதற்குப் பின்னால் உள்ள செவிவழிக் கதைகளைத் தருவதுமே இப்பதிவின் நோக்கம்.

பெயர்க் காரணம்

முன்னொரு காலத்தில் தீவிர சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். தமது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டி ஒவ்வொரு ஊரிலும் அமைந்த சிவனை வழிபட்டு வந்தார்.

சிவன் அருளால் வேதபட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தது. வேணுவனம் (திருநெல்வேலி) வந்த வேதபட்டர் சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.

அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் நெல்வேலி என பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.

ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.

அக்காலத்தில் தமிழகத்திலிருந்து தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஈழ மண்டலத்தின் பல பகுதிகளிலும் குடியேறினர், அல்லது குடியேற்றப்பட்டனர். யாழ்ப்பாடி எல்லாள மன்னனிடமிருந்து யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்று அங்கு 70 ஆண்டுகள் அரசாட்சி செய்து இறந்த பின்னர் சோழ மண்டல அரசனின் மைந்தன் திருவாரூரில் இருந்து வந்து யாழ்ப்பாண அரசனாகப் பொறுப்பேற்று பல துறையைச் சார்ந்தவர்களையும் தமிழகத்திலிருந்து வரவழைத்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குடியமர்த்தினான் என 1915ம் ஆண்டில் வெளிவந்த யாழ்ப்பாணச் சரித்திரம் எனும் நூலில் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்கள்.

["...வேங்கடகிரியைத் தனக்குச் சன்மஸ்தானமாகவுடைய பாண்டிமழவனை(மழவராயனை)யும் அவன் தம்பியையும் அவன் மைத்துனன் செம்பழகவனையும் திருநெல்வேலியிலிருத்தினான்." (யாழ்ப்பாணச் சரித்திரம், 1915, ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, பக்.18)]

"தமிழகத்திலுள்ள திருநெல்வேலி என்ற இடத்திலிருந்து வந்த மக்கள் இங்கு குடியேறியபோது இப்பெயரை இட்டு வழங்கினர் என்பது மரபு. திருநெல்வேலியின் கிழக்கே குளமும் வயலும் காணப்படுகின்றன. தமிழகத்துத் திருநெல்வேலிச் சூழல் போன்றே இங்கும் புவி அமைப்பும் வளம் செறிந்த காணிகளும் காணப்படுதலால் ஒப்புமை நோக்கியும் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் ... இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றில் சிவன் கோயிலும், அம்மன் கோயிலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இவ்விரு கோயில்களும் முறையே "வயல்வெளிச் சிவன் கோயில்" , "வயல்வெளி அம்மன் கோயில்" என்று அழைக்கப்படுதல் திருநெல்வேலியிற் பண்டைநாளில் இங்கு வயல்வெளிகள் செறிந்து காணப்பட்டமையை விளக்குகின்றது". (கலாநிதி இ. பாலசுந்தரம், பக்.322).

திருநெல்வேலி (ஈழம்)

270px-Gislanka_locator.svg.png

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் பகுதியில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமமே திருநெல்வேலி ஆகும்.[1] இது நல்லூர் பிரதேச சபையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. வடக்கே கோண்டாவிலும், கிழக்கே கல்வியங்காடு மற்றும் நல்லூரும், தெற்கே கந்தர்மடமும், மேற்கே கொக்குவிலும் திருநெல்வேலியின் எல்லைகளாக அமைந்துள்ளன. யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கி திருநெல்வேலியை ஊடறுத்துச் செல்கின்ற பிரதான வீதிகளில் ஒன்றான பலாலி வீதி, திருநெல்வேலி ஊடான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாகும். 1974 இல் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இங்கேயே அமைந்துள்ளது.[2]

(திருநெல்வேலியில் உள்ள முக்கிய படங்கள் இணைக்கப்பட்டால் மிகவும் நலம் - யாராவது செய்வீர்களா?)

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு

270px-Gislanka_locator.svg.png

220px-Punkudutivu.png

புங்குடுதீவு (Pungudutivu

எனது   ஊரைப்பற்றிய தொகுப்பக்கு நன்றி  அண்ணா,

புங்குடுதீவு பற்றிய தொகுப்புகள் அருமை.

(கனடிய பழைய  மாணவர் சங்கத்தால் வெளியிடப்பட்ட தொகுப்பு என நினைக்கின்றேன்.)

நன்றிகள் பல. தொடருங்கள்.

Edited by விசுகு

சுழிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
சுழிபுரம்
270px-Gislanka_locator.svg.png

7px-Red_pog.svg.png
சுழிபுரம்
மாகாணம்

 - மாவட்டம் வட மாகாணம்

 - யாழ்ப்பாணம் அமைவிடம் 17px-WMA_button2b.png9.76666° N 79.95° E பரப்பளவு 7.5  ச.கி.மீ கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)

சுழிபுரம் ஈழத்தின் வட முனையிலேயாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஊர். ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது.

இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம்பொன்னாலைநெல்லியான் முதலிய ஊர்களும் சூழ உள்ளன.

இவ்வூரில் பெரும்பான்மையானோர் இந்து சமயத்தவர்கள். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர்.

இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம்.

திருவடிநிலைக் கடல்[தொகு]

ராமர் கரையேறிய இடம்தான் திருவடி நிலைக்கடல் என ஒரு கதை இவ்வூர் மக்களால் திருவடிநிலைக் கடல் என்ற பெயருக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சம்பில்துறை என்னும் இடம் வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையானதுறைமுகமாகும். இது மாதகலுக்கும் சுழிபுரத்துக்கும் இடையே உள்ளதால், இதை இவ்விரு ஊர் மக்களும் தமக்கே உரித்தானது என உரிமை கொண்டாடினாலும், சம்பில் துறையை அண்டிய நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக சுழிபுரத்து மக்களே உள்ளார்கள். சம்பில்துறையிலே வந்திறங்கிய சோழர் படை தமது தங்குமிடமாக, சுழிபுரத்தை பாவித்ததனால், அப்போது இக்கிராமம் சோழியபுரம் என அழைக்கப்பட்டதாகவும், அது காலப்போக்கில் திரிபுபட்டு 'சுழிபுரம்' என மருவியது என்ற காரணக் கதையும் இவ்வூருக்கு உண்டு.

கோயில்கள்[தொகு]

நாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவே அருகருகே பறாளாய் விநாயகர் ஆலயமும்பறாளாய் முருகன் ஆலயமும் உண்டு. 'பாராலயம்பதி' என்பதே பறாளாய் என மருவியது. பறாளாய் விநாயகருக்கு 'காக்கைப் பிள்ளையார்' என்றொரு பெயரும் உண்டு. டச்சு அதிகாரி ஒருவன் ஆணவ மேலீட்டால் பிள்ளையார் சிலைக்கு துப்பாக்கியால் குறிவைக்க, எங்கிருந்தோ ஒரு காகம் பறந்து வந்து அவனது கண்ணைக் கொத்தியதாகவும், அன்றிலிருந்து 'காக்கைப் பிள்ளையார்' என்ற நாமத்தாலும் பறாளாய் விநாயகர் அழைக்கப்படுகிறார் என அவ்வூர் மக்கள் கூறுவார்கள். நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இக்கோயில் பிள்ளையார் குறித்துப் பாடிய பறாளை விநாயகர் பள்ளு புகழ்பெற்றதாகும்.

temple2.jpg 09566552-7D06-43EF-8A59-F3CECA20EF7C.JPG

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலே வெள்ளரசும் வேம்பும் இணைந்த மிகப் பழமை வாய்ந்த மரம் ஒன்று உண்டு. 80களுக்கு முன்னர் அந்த மரத்தைத் தரிசிப்பதற்காக, சிங்களமக்கள் அடிக்கடி பேருந்துகளில் வருவார்கள். வரும்போது அவர்கள் கித்துல் சர்க்கரை போன்ற தமது கிராமத்துத் தயாரிப்புளை இவ்வூர் மக்களுக்கு கொடுப்பதையும், பதிலுக்கு இவர்கள் பனங்கட்டிபுழுக்கொடியல் போன்றவற்றைக் கொடுப்பார்கள். சம்பில்துறையில் வந்திறங்கிய சங்கமித்திரை இரண்டு வெள்ளரசுக் கிளைகளைக் கொண்டு வந்ததாகவும், அதில் ஒன்றை இங்கே ஒரு வேப்பமரத்துக்கு அருகில் நாட்டியதாகவும், அதுவே காலப்போக்கில் வேம்புடன் இணைந்து காட்சியளிப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள்.

சுழிபுரத்திலே குடியிருப்பு என்ற பகுதியிலே அந்தணர்கள் தொன்மைதொட்டு வாழ்கிறார்கள். இவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும், புகலிட நாடுகளிலும் தமது பணிகளில் பரவியுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

பாடசாலைகள்[தொகு]

வட்டுக்கோட்டைத் தொகுதியிலே பெயர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாடசாலைகளில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியும் ஒன்றாகும். அத்துடன் பெரிய விளையாட்டு மைதானத்தையும் தன்னகத்தே கொண்டதாகும். இதைத் தவிர, ஐக்கிய சங்க வித்தியாசாலை, ஆறுமுக வித்தியாசாலை, அமெரிக்க மிஷன் பாடசாலை ஆகிய ஆரம்ப நடுத்தர பாடசாலைகளும் உள்ளன.

slid-2.jpg

நிர்வாகம்[தொகு]

சுழிபுரத்திலே கிராமசபை உள்ளது. இக் கிராமசபையின் நிர்வாகத்திலே, நெல்லியான், பொன்னாலை, மூளாய், தொல்புரம், பண்ணாகம் ஆகிய கிராமங்கள் அடங்குகின்றன.

( நான் விக்கிபீடியாவுக்காக எழுதிய கட்டுரை.)

உரும்பிராய்

யாழ்ப்பாணத்திற் பழைமையும், பெருமையும் வாய்ந்த பதிகளுள் ஒன்றாக விளங்குவது உரும்பிராய். யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பலாலி வீதியில் ஐந்தாவது கல்லை மத்தியாகக் கொண்டு இக் கிராமம் அமைந்திருக்கிறது. 

இக்கிராமத்துக்கு உரும்பிராய் என்று பெயர் வரக்காரணம் யாது எனப் பலரும் வினாவுவதுண்டு. இடப்பெயர் ஆராய்ச்சி சம்பந்தமாக வெளிவந்த நூல்களில் இவ்வூருக்கான பெயரின் காரணம் நன்கு விளக்கப்பட்டதாக தெரியவில்லை. ஒருகாலத்தில் வழிபோக்கரின் நலன்கருதித் தெருவோரங்களில் நிழல்தரு மரங்களை நாட்டியும் சுமை தாங்கிகளை அமைத்தும் அரசு வசதி செய்து வைத்ததாகத் தெரியவருகிறது. வாகன வசதி மிகமிகக் குறைந்திருந்த காரணத்தினால் நெடுந்தூரம் நடந்தே தமது பிரயாணத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டிருந்தது. பிரயாணம் செய்பவர்கள் மரநிழல்களில் தங்கிச் சிறிது களைப்பாறிய பின்னர் பிரயாணத்தை மேற்கொள்ளுவர். மேற்கொள்ளுவார். பொருள்களைப் பொதியாகக் கட்டித் தலைச் சுமையாகவே கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இப்பொழுதும் அந்தக் காட்சியை நாம் அவதானிக்கலாம் சுமந்து செல்லும் பிரயாணிகள் பிறருடைய உதவியின்றியே பொதிகனைச் சுமை தாங்கியில் வைத்து விட்டுச் சிறிது சேரம் ஆறிச் செல்வதுமுண்டு. எந்தச் சுமைகளையும் தாங்கும் சக்தி அந்தச் சுமைதாங்கிகளுககு எண்டு. ஆரம்பத்தில் வைரக் கற்களினாலும் பின்னர் சீமெந்து கொண்டும் உறுதியாகச் சுமைதாங்கிகளை நிறுவினார்கள் அப்படியான பழைய சுமைதாங்கிகளை இன்றும் சில இடங்களில் தெருவோரங்களிற் காணலாம்.

மேலே கூறியவாறு நிழல் தரு மரங்களுள் ஒன்றான பிராய் (பராய் என்றும் சொல்வதுண்டு) மரக்கன்றுகள் தெருவோரங்களில் நிழல் செய்யும் பொருட்டு நாட்டப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. நன்றாகச் செழித்துப்படர்ந்து வளரக்கூடிய இம்மரத்துக்குப் பெருஞ்சூலி மரம் என்று இன்னொரு பெயருமுண்டு. ஆல், அரசு போல இதுவும் பால் உள்ள மரம். 

தெருவோரத்தில் நாட்டப்பட்டுவந்த பிராய் மரவரிசையில் எண்களிடும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அந்தவகையிலே எங்கள் கிராமத்தில் இருபத்தைந்தாவது மரம் நாட்டப்பட்டிருக்கலாம். எண்களைக் குறிப்பதற்கு அந்தக் காலத்தில் எழுத்து எண்களையே உபயோகித்தார்கள்;. நாவலர் பெருமான் அவர்கள் எழுத்து எண்களையே அவர் சம்மந்தப்பட்ட நூல்களில் உபயோகித்திருக்கின்றார். நாவலர் பெருமானுக்குப் பின்வந்தவர்களும் எழுத்து எண்களை உபயோகித்திருக்கின்றார்கள். இங்கே நாட்டப்பட்ட பிராய் மரத்தில் இலக்கமும் எழுத்து எண்களைக் கொண்டதாக இருந்திருக்கலாம் என்று ஊகித்துணர முடிகின்றது. 

இருபத்தைந்தாம் பிராய் என்பதனை 25ம் பிராய் என்று இக்காலத்தில் எழுதுவார்கள். அப்பொழுது எழுத்து முறையையே கையாண்டு.

உரும்பிராய் என்று எழுதி இருப்பார்கள்.

உ- 2ƒ ரு - 5 

உரும்பிராய் - 25ம் பிராய் 

என்பதற்கு ஈடாகும்.

இருபத்தைந்து என்ற எண்களைக் (25) குறித்த எழுத்துக்களை ‘உரு” என்றும் அயலில் ம் என்ற எழுத்தையுஞ் சேர்த்து உரும் என்றும், அப்பால் பிராய் என்னும் மரப்பெயரையும் சேர்த்து

உரும்பிராய் 

என்றும் காலக் கிராமத்தில் வாசிக்கும் வழக்கை ஏற்படுத்தி இருக்கலாம் எழுத்து இலக்கத்தோடு கூடிய மரப்பெயர் (பிராய்) ஊர்ப்பெயராக மாறி இருக்கலாம் என்பதே எனது சிந்தனையில் எழுந்த அபிப்பிராயமாகும். 

பேச்சுவழக்கில், எழுத்து வழக்கில் உரும்பிராய், உறும்பிராய், உடும்பிராய் என்றும் கையாளுகின்றார்கள். அவ்வாறு பேசுவதற்கோ எழுவதுவதற்கோ தக்க சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. 

கட்டைப்பிராய், வேலம்பிராய், மானம்பிராய், தம்பிராய் என வழங்கும் இடங்களும் இருக்கின்றன. அந்தந்த இடங்களைச் சார்ந்த அறிஞர்கள் அந்த இடப்பெயர்கள் குறித்து வேறு விளக்கங்கள் கொடுக்ககூடியதாகவுமிருக்கலாம். 

முன்னர் கூறியவண்ணம் பிராய், பராய், என்னும் இரு சொற்களும் பிராய் மரத்தையே குறிப்பன. எனினும் உரும்பிராய் என்ற உபயோகத்திலும் பார்க்க உரும்பிராய் என்ற பிரயோகமே சிறந்ததாகத் தெரிகின்றது. அப்பொழுது அரசகரும மொழியாக இருந்த ஆங்கிலத்தில் 

ஊறூMPஈறாஈ

என்றே வழங்கப்பட்டிருக்கின்றது. கச்சேரி தபாற்கந்தோர் கிராமசேவையாளர் பிரிவு முதலான ஸ்தாபனங்களிலும் ஊறூMPஈறாஈ என்றே வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கான தமிழ்த் தொடரும் உரும்பிராய் என்றே அமைந்திருக்கின்றது. 

சிலர் ஆங்கிலத்தில் எழுதும் பொழுது ஊறூMPஈறாஈ என்னும், தமிழில் எழுதும் பொழுது உரும்பராய் என்றும் எழுதுவதுமுண்டு

ஊறூMPஈறாஈ - உரும்பிராய்

என்று முறையே ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதுவதே பொருத்தமானதாகும். 

கிழக்கே கோப்பாய் நீர்வேலியும், தெற்கே கோண்டாவிலும் மேற்கே இணுவில் உடுவிலும் வடக்கே ஊரெழு நீர்வேலியும் எல்லைக் கிராமங்களாக உரும்பிராயை அணிசெய்கின்றன. 1990இல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின்படி 3.3 சதுர மைல் கொண்ட இக்கிராமத்தில் 3753 குடம்பங்களைச் சார்ந்த 13400 பேர் வாழ்கின்றார்கள். இத்தொகை இப்பொழுது கூடியிருக்கலாம். 

அதிகமான கிராமங்களில் வயற்பரப்புக் கூடியும், மக்கள் வாழ்பிரதேசம் குறைந்தும் இருப்பதை அவதானிக்கலாம். உரும்பிராயைப் பொறுத்தவரை மக்கள் குடியிருப்புக்குரிய நிலமே கூடியிருக்கின்றது. மிகுதி நிலமும் செம்மண் செறிந்த கம நிலமாகவே பிரகாசிக்கின்றது. நல்ல நீர்வளத்தைப் பெற்றிருப்பதும் பெருங்கொடை என்றே சொல்லாம் கரந்தன், அன்னுங்கை, யோகபுரம், செல்வபுரம், என்பன உரும்பிராய்ப் பிரதேசத்தில் அடங்கிய குறிச்சிகள். 

ஒருகாலத்தில் நீர்வேலி கிராமச் சங்க பரிபாலனத்தின் கீழ் நீர்வேலி, உரும்பிராய், ஊரெழுக் கிராமங்கள் அடங்கிருந்தன. பின்னர் உரும்பிராய் ஊரெழு ஆகிய கிராமங்கள் 01.07.1967இல் பட்டணசபை நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. இப்பொழுது வலிகிழக்குப் பிரதேச சபையின் உபபிரிவாக இயங்கி வருகின்றது. 

பெருபான்மையானவர்கள் சைவசமயத்தையே சார்ந்தவர்கள் பிற்காலத்திற் சைவசமயத்தினரில் ஒரு பகுதியினர் மதமாற்றத்துக்கு உட்பட்டார்கள் அவர்களில் ஒரு பகுதியினர் மதமாற்றத்துக்கு உட்பட்டார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் உறோமன் கத்தோலிக்க சமயத்தையும் அதற்கு முன் ஒருசாரார் புரட்டஸதாந்து சமயத்தையும் (அங்கிலிக்கன் சபை) தழுவிக் கொண்டனர். உறோமன் கத்தோலிக்க சமயநெறி 1916 ஆம் ஆண்டிலேயே இக்கிராமத்தில் பரப்பப்பட்டது.

புலவர்மணியின் வாயில்-உரும்பிராய் 

நாவலர் காவிய பாடசாலையில் சுன்னாகம் ஸ்ரீமத் அ. குமாரசுவாமிப் புலவர்களிடம் ஒரே காலத்திற் பாடங் கேட்வர்களில் பிற்காலத்தில் பிரசித்தி பெற்றவர்கள் இருவர். வடக்கே பண்டிதமணி அவர்கள்ƒ கிழக்கே புலவர்மணி அவர்கள் தம்மைப் பற்றியும் சகபாடியான பண்டிதமணி அவர்களைப் பற்றியும் புலவர்மணி அவர்கள் குறிப்பிடும் போது ‘ஒரே கிளையில் ஒரே காலத்தில் ஒருமிக்கப் பழுத்த இரண்டு பழங்கள் என்பார். இருவர் பெரியார்களும் உரும்பிராயின் மீது அளவுகடந்த பற்று உடையவர்கள் 

உலகறிந்த கவிஞர்களில் ஒருவரான மட்டக்களப்பு புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் உரும்பிராயின் சிறப்புக் குறித்து எடுத்தியம்பும் பான்மை இனிக்க வைக்கின்றது.

உலகறிந்த பேரறிஞர் 

பலர் பிறந்த சீருர் 

உண்மை வளர் நூல்கள் பல 

படைத்தோர் வாழ்ந் துயரூர் 

நிலவுலகும் வானுலகும் நீண்ட 

புகழ்ப் பேரூர் 

நிலைகலங்காத் தமிழ் வீரம் 

நிலைநாட்டும் நிறையூர் 

பலகலையும் வளர்த்து நன்கு 

வாழுமரும் பொரு @ர் 

பரமனடித் தொண்டு புரிந் 

தேத்து திருவரு @ர் 

அலகில்புகழ் யாழ்ப்பாண அன்னை 

திரு முகத்தில் 

அணிதிலகம் போன் றிலங்கும் 

உரும்பிராய்த் திருவூர். 

Thank for                                                                                                                                              

நன்றி 

ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம்

உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992 

http://www.eurumpirai.com/index.php/about-our-urumpirai.html

Edited by நவீனன்

குப்பிளான் 

குப்பிளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
குப்பிளான்
 
அமைவு: 17px-WMA_button2b.png9°45′0″N 80°03′0″E நாடு இலங்கை மாகாணம் வடக்கு மாவட்டம் யாழ்ப்பாணம் பிரதேசச் செயலகம் தெற்கு

குப்பிளான் (Kuppilan) அல்லது குப்புழான் (Kuppuzhanஇலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணமாவட்டத்தில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபைப் பிரிவிலும் யாழ்ப்பாண நகரில் இருந்து மேற்கே ஏறத்தாழ 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். வடக்கே குரும்பசிட்டி, கிழக்கேபுன்னாலைக்கட்டுவன், மேற்கே ஊரெழு, மற்றும் புன்னாலைக்கட்டுவனின் ஒரு பகுதி, மேற்கே ஏழாலை ஆகிய கிராமங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதன் கிழக்கே பலாலி வீதியும் மேற்கே காங்கேசன்துறை வீதியும் அமைந்துள்ளன.

பெயர்க் காரணம்[தொகு]

அக்காலத்தில் இக்கிராமத்தில் குப்பிழாய் என்ற புல் வகையினம் ஏராளமாகக் காணப்பட்டது. குப்பிழாய் என்ற சொல் காலப்போக்கில் மருவி குப்பிளான் என்று வந்ததாக வரலாறு ஒன்று உள்ளது.

கிராம அலுவலர் பிரிவுகள்[தொகு]

குப்பிளானில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. அவையாவன:

  • யா/210 குப்பிளான் தெற்கு
  • யா/211 குப்பிளான் வடக்கு

இங்குள்ள கோயில்கள்[தொகு]

350px-Kuppilan_katparai_vinayagar_alayam
magnify-clip.png
குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம்

இக்கிராம நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கோயில்கள்இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானவைகளாக,

  • கற்கரை கற்பக விநாயகர் கோயில்,
  • சொக்கவளவு சோதி விநாயகர் கோவில்,
  • கன்னிமார் கௌரி அம்பாள் கோவில் ஆகியவை விளங்குகின்றன.

கல்வி நிலையங்கள்[தொகு]

  • குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

சமூக நிலையங்கள்[தொகு]

  • விக்னேஸ்வரா சனசமூக நிலையமும் விளையாட்டுக் கழகமும்
  • குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையமும் விளையாட்டுக் கழகமும்

விக்னேஸ்வரா சனசமூக நிலையம் ஈழப்போரின் பின் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இங்கு நூல் நிலையமும் அமைந்துள்ளது.

பொருளாதாரம்[தொகு]

இங்குள்ள மக்கள் தமது விவசாய நிலங்களில் புகையிலைவெங்காயம்மிளகாய், போஞ்சி, குரக்கன் ஆகிய பயிர்வகைகளைப் பயிரிட்டு வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் வரிக்கை இனப்பலாப்பழம், கறுத்தக்கொழும்பான் மாம்பழம் போன்றவை சிறப்பாக வளருகின்றன.

எமது மண் பற்றி...

BBBBBBBB2.JPG?timestamp=1271168966156

திருமூலரால் சிவபூமி என்றழைக்கப்பட்ட ஈழவளத் திருநாட்டின் வடமுனை எனக் கருதப்படுவது யாழ்ப்பாணக் குடாநாடு ஆகும். இது ஒரு சிறப்பான தரைத்தோற்றங்களைக் கொண்ட புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262  சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. யாழ் குடாநாடு சிறப்பான நிர்வாக வசதி கருதி வலிகாமம், யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி, தீவகம் என ஐந்து பிரிவுகளாக நிர்வகிக்கப்படுகிறது. குடாநாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது வலிகாமம் பிரிவாகும். குடாநாட்டின் வளம் மிக்க செழிப்பான பகுதிகள் வலிகாமம் பகுதியிலேயே அமைந்துள்ளன.  

யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபைப் பிரிவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து  மேற்கே சுமார் 9  கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமே குப்பிளான். பழமையின் கம்பீரமும் புதுமையின் வனப்பும் இயற்கையின் ஒட்டுமொத்தப் பேரழகும் கொட்டிக் கிடக்குமிடம். வடக்கே குரும்பசிட்டியையும் கிழக்கே புன்னாலைக் கட்டுவனையும்தெற்கே ஊரெழுவையும் புன்னாலைக்கட்டுவனின் ஒரு பகுதியினையும் மேற்கே ஏழாலை ஆகிய கிராமங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதன் கிழக்கே பலாலி பெருவீதியும் மேற்கே காங்கேசன் துறைப் பெருவீதியும் அமைந்துள்ளன. 

நீர்வளம், நிலவளம், கல்விவளம், தொழில் வளங்களோடு யாழ்ப்பாணத்துத் தொன்மை பேசும் பாரம்பரியம் மிக்க சகல வளங்களையும் மொத்தமாகத் தன்னகத்தே செழுமையான  கிராமம். எமது முன்னோர்களின் காலத்தில் எங்களின் கிராமத்தில் சஞ்சீவிகளில் ஒன்றானகுப்பிழாய் என்ற புல் வகையினம்  அடர்த்தியாக வளர்ந்து காணப்பட்டமையால்  குப்பிழாய் என்ற சொல் காலப்போக்கில் மருவி குப்பிளான் என்று வந்ததாக வரலாறு ஒன்று உள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட சமூக நிறுவனங்களையும், விவசாய நிலங்களையும் கொண்ட இயற்கையோடு இயைந்த ஆரோக்கியமான வாழ்வையும், நேசமும் பாசமும் மிகுந்த உறவுகளையும் களங்கமில்லாத மனிதர்களையும், நாட்டுக்காகவே தங்களை நேர்ந்து கொண்டு விட்ட கல்வியலாளர்களையும், சமயப்பெரியார்களையும், அறிவியலாளர்களையும்,  தன்னகத்தே கொண்ட அழகான ஊர் எங்களுடையது.   

எங்களின் மக்களை ஒன்றிணைக்கும் சமூக நிறுவனங்களில் முதலாவதாக ஆலயங்கள் விளங்குகின்றன. எங்களது கிராம நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானவைகளாக கற்கரை கற்பக விநாயகர் பெருங்கோவில், சொக்கவளவு சோதி விநாயகர் பெருங்கோவில், கன்னிமார் கௌரி அம்பாள் பெருங்கோவில் ஆகியவை விளங்குகின்றன. இக்கோயில்களில் இடைவிடாது ஒலிக்கும் மணியோசையில் காற்றே சங்கீதமயமாகிவிடுகின்றது. இவ் ஆலயங்கள் தான் எங்களது சமூகத்தை அறநெறியின் பால் சமூகப் பற்றுள்ளவர்களாகவும், சமயப்பற்றுள்ளவர்களாகவும், தேசப்பற்றுள்ளவர்களாகவும் வழி நடாத்திச் செல்கின்றன. இவ் ஆலயங்களில் மகோற்சவப் பெருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும் போது உள்ளுரில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும், ஏன் வெளிநாடுகளில் இருந்தும் கூட எம்மவர்கள் இங்கு வந்து உற்சவங்களில் கலந்து கொண்டு தங்கள் குல தெய்வங்களை வழிபடுவார்கள். எம்மக்களின் ஒன்று பட்ட சமூக சங்கமமாக இத்திருவிழாக்கள் தான் திகழ்கின்றன.
AAAA1.jpg?timestamp=1271169229078அடுத்து சமூக நிறுவனங்கள் என்று பார்க்கும் போது குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் விளங்குகின்றது. இதற்கென ஒரு நீண்ட தனி வரலாறும் கல்விப் பாரம்பரியமும் இருக்கின்றது. மிகச்சிறந்த ஆசிரியர்கள், தொழில் வல்லுனர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உருவாவதற்கான அடித்தளம் இங்கே தான் போடப்பட்டது. இன்றும் சிறப்பான கல்வியை எமது மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

vignes%20vara.JPG?timestamp=127199509814அடுத்ததாக விக்னேஸ்வரா சனசமூக நிலையமும், விளையாட்டுக் கழகமும்  முக்கியமானவை. விக்னேஸ்வரா சனசமூக நிலையம் யுத்தத்தின் பின் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இயங்குகின்றது. இங்கு யாழ் மாவட்டத்தின் முன்னணி பத்திரிகைகளும் பெரியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள நூல்களைத் தன்னகத்தே கொண்ட நூல்நிலையமும் இயங்கி வருகின்றது. வலிகாமம் பகுதியிலேயே சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமை விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகத்தையே  சாரும். இதுவும் தற்போது சிறப்பாக செயற்பட்டு  வருகின்றது. அடுத்து குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையமும் விளையாட்டுக் கழகமுமாகும். இதுவும் இடப்பெயர்வுக்குப் பின் எமது இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் மீளச் சீரமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. அடுத்து சமாதி கோவிலடியிலுள்ள  லெனின் சனசமூக நிலையம் இதுவும் வைரவநாதன் அவர்களின் பெரு
முயற்சியினால்  மிகச் சிறப்பாகவே செயற்பட்டு வந்தது. போர்ச் சூழலின் காரணமாக தற்போது அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாததால் இயங்குவதில்லை. அடுத்து கொலனி பகுதியிலுள்ள  வளர்மதி சனசமூக நிலையம் இதுவும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

c8.JPG?timestamp=1271995373649பௌர்ணமி நாட்களில் எம்கிராமத்தின் அழகே தனி அழகு. சமயப் பெருவிழாக்கள் குறிப்பாக  கார்த்திகை விளக்கீடு காலங்களில் இன்னும் அழகாக ஜொலிக்கும். எங்களின் விவசாய நிலங்களில் அனேகமாக நெல்லைத் தவிர அனைத்துப் பயிர்களும் சிறப்பாக வளரும். பெரும்பாலும் விவசாயப் பெருமக்களைக் கொண்ட கிராம ஆகையால்  புகையிலை, வெங்காயம், மிளகாய், போஞ்சி, குரக்கன் ஆகிய பயிர்வகைகளைப் பயிரிட்டு இதன் மூலம் இவர்களது வாழ்வாதாரம் வளம் பெறுகிறது. எம்மக்களின் வீடுகளில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளில் ஏதேனும் ஒன்றாவது எப்பவுமே இருக்கும். அதிலும் வரிக்கை இனப்பலாப்பழமும், கறுத்தக்கொழும்பான் மாம்பழமும் தனி ருசி. வாழைப்பழம் குலைகுலையாக வீடுகளில் எப்பவுமே இருக்கும். பனங்கிளங்கு, பனங்காய்ப் பணியாரம், ஒடியல் என்று பனை மூலம் கிடைக்கும் பலநூறு நன்மைகளும் கால்நடைகள் முக்கியமாக ஆடு,மாடு இவை மூலம் கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளும், இறைச்சியும் எங்கள் மக்களின் பிரதான ஊட்டச்சத்து மூலங்களாக விளங்குகின்றன. வீடுகளில் நாம் ஆசையுடன் வளர்க்கும்  பூக்கும் செடி கொடிகளும் மன நிறைவைத்தரும். ஒழுங்காக கத்தியால்களில் கட்டப்பட்ட கிடுகு வேலிகளையும் நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளையும் பருவ மழையிலும் பாறையாய் நிற்கின்ற வேப்ப மரங்களையும் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் மக்களையும்  கொண்டது எம் கிராமம்.
b20.JPG?timestamp=1271169429421எம்மக்களின் உண்மையான உழைப்பு, நேர்மை, உடைந்து அழுதுவிடும் மென்மை உடனே போராடும் ஆண்மை, வாழ்வில் உண்மை, வறுமையிலும் செம்மை இவையெல்லாம் சிறிய வயதிலிருந்தே அவர்களை வணங்க வைத்தன. விஞ்ஞானத்தின் நாகரிக வசதிகள் எதையும் பெரிதாகப் பயன்படுத்திக் கொள்ளாத எம்மக்கள் இயல்பிலேயே எளிமையானவர்கள். கூர்ந்த மதியும் சுபாவத்திலேயே மெய்ப்பொருளைக் காணத் துடிப்பவர்களாகவும் விளங்குகின்றனர். தமது தோள்களையும் சொந்தச் சேமிப்பையும் நம்பித்தான் அவர்கள் சீவித்தார்கள். நிலத்தின் வளத்தை விடவும் தமது அயரா உழைப்பின் பலத்தையே அவர்கள் அதிகமதிகம் நம்பினார்கள். இது அவர்களை பிறரில் தங்கியிராத தனது சொந்தச் சேமிப்பிலேயே தங்கியிருக்கின்ற தன்னம்பிக்கை அதிகமுடைய ஒரு தந்திரசாலியாக்கியது. இப்படி வீரம், விவேகம்,விச்சுழி, தந்திரம், சுயநலம், கட்டுப்பெட்டித்தனம், புதுமை நாட்டம் , விடுப்பார்வம், விண்ணானம் இவையெல்லாம் கலந்த ஒரு மனிதனாக்கியது.

c5.JPG?timestamp=1271995269995நூறு நூற்றாண்டாய் அவர்கள் தேடிய தேட்டமனைத்தையும் ஒரே நாளில் கை விட்டு இடம்பெயர்ந்து போகுமொருவனாய் மாறினார்கள். யுத்தம் அவர்களைச் செதுக்கியது. சுயநலமியாய் சேமிப்பில் வெறியனாய் இருந்தவர்களை வீரனாக்கியது. எம் மக்களை பண்பு மாற்றம் பெற வைத்தன. கந்தபுராணக் கலாச்சாரத்திலிருந்து அவர்களைக் கட்டாயமாக இடம்பெயர வைத்தன. ஒவ்வொரு இடப்பெயர்வும் அவர்களுக்கு மனப்பெயர்வாய் மாறியது. இடம் பெயர்த்து நடப்பட்டத்தில் அவன் வாழ்க்கை வாடிக்கொண்டே வளர்ந்தது. பூமியில் வேறெந்த ஜனங்களிற்கும் நடந்திராத தொடர்ச்சியான சோதனைகள் இழப்புக்கள் என்பதன் பேறாய் உருவாகியவர்கள். கோடை வெயிலைக் குடித்தும் புகையிலைச் செடிகளின் மீது அரும்பிய அதிகாலைப் பனித்துளிகளை உண்டும் வளர்ந்தவர்கள் ஆதலால் அவர்கள் வலியனாயும் சுழியனாயும் அயராத கடும் உழைப்பாளியாயும் உருவானார்கள்.
இரண்டு எதிர்த் துருவங்களுக்கும் போய் வரக்கூடிய எம்மக்களில் பெரும்பாலானோர் தற்போது புலத்திலேயே எம் கிராமத்தின் நினைவுகளுடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.

 http://www.newkuppilan.com/

குப்பிளான் கிராமிய கீதம் 
 
வாழ்க எம் தாய்நிலம் வளம்மிகு குப்பிளான்
வளர்புகழ் கொண்டென்றும் வாழியவே.            
                                                                         (வாழ்க)

பச்சைக் கம்பளம் விரித்திடும் பயிர்கள் 
பனை மா வாழை பலாவுடன் தென்னை 
இச்செகத்தினிலே எந்தையும் தாயும் 
ஆண்ட எம் செம்மண் நிலமே வளமே!              
                                                                       
(வாழ்க)

அறநெறி சிவநெறி தவநெறி நின்றவர் 
அறிஞர் புலவர் நல்லாசிரியர் 
நிறை தொழில் உழவினைக் கொண்டவர் வாழ்ந்திட 
நீள் புகழ் கொண்டதும் எம் நிலமே.                    
                                                                        (வாழ்க)

அருள்பொழி இறைதிருக் கோயில்கள் பலவும் 
அமைதியை வாழ்வினில் சேர்த்துவிடும்.
பொருள் பொதி வாழ்வு பொன்னொளி காணும் 
புலர்ந்திடு காலையின் எழில்மேவும்.              
                                     
                                     (வாழ்க)

பண்ணிசை இன்னிசை நாடகம் கூத்தெனப்
பல்கலை கண்டதும் எமஊரே 
மண்ணுயர் அறிவியல் விஞ்ஞானம் இவை 
மாண்புறக் கண்டவர் எம்மவரே.                          
                                                                           (வாழ்க)

மனம் நிறை வாழ்வும் உடல் நலம் உரனும் 
மருவிடு மக்களைக் கொண்டாய் - மண்ணில் 
மேன்மைகள் பலவும் நீ கண்டாய்!
இனமொழி மானம் கொண்டவர் தம்மை 
ஈன்றனை தாயே வாழ்க! - என்றும் 
சான்றவர் போற்றிட வாழ்க!                                       
                                                                          (வாழ்க)

ஆக்கம்: கவிஞர் கலாநிதி திரு. க. கணேசலிங்கம். 

http://kuppilanweb.com/history/kuppilanvilage-kanasalingam.html

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

"குப்பிளான்" இஸ், வெரி குட் பிளான்.

-விக்ரோறியா மகாராணி-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய்

மானிப்பாய் (Manipay) யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். புராதன காலத்தில் பெரிய புலமென வர்ணிக்கப்பட்ட மானிப்பாய், யாழ். மாவட்டத்தின் வலிகாமம் தெற்குப் பிரிவில் அமைந்துள்ள சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. யாழ். மாவட்டத்தில் மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது இடத்தைப் பிடிக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் மக்கள்தொகை, 56 ஆயிரத்து 510 ஆகும்[1].

மானிப்பாய் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் (5 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. சண்டிலிப்பாய், நவாலி, சுதுமலை, உடுவில், ஆனைக்கோட்டை ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன.

மானி + பாய் = மானிப்பாய். மாணி என்பதன் திரிபே மானி ஆகும். மானி = மானமுள்ளவர், மாமன், மானியம் என்ற பொருள் குறிக்கும் சொல்லாகும். மானியம் என்பது இறையிலி நிலம். மானியக்காரன் = கிராமத்தில் இனாம் நிலம் முதலியவற்றின் பரம்பரைப் பாத்தியத்திற்குரியவன் (த.லெ.5:3191) என்ற அடிப்படையிலும் இப்பெயர் ஆக்கம் பெற்றிருக்கலாம். மானிப்பாயில் பண்டை நாளிற் பிராமணக் குடியிருப்பு பெரிதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மானி என்பது பிராமணரையும் பிரமச்சாரியையும் குறிக்கும் சொல்லாக வழங்கியுள்ளது[2].

மேலும் தென்னிந்தியக் கல்வெட்டுக்களின் சான்றுகளை நோக்கும்போது 'மானி' என்பது கோயில்களுடன் தொடர்புபட்டிருந்த பிரமச்சாரிகளைக் குறிப்பிடுவதையும், இப்பிரமச்சாரிகள் கோயில் தொண்டுகளை மேற்கொண்டு வந்தனர் என்பதையும் அறியக்கூடியதாக இருக்கிறது[3]. தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கல்வெட்டைச் சான்று காட்டி, மானி என்பது பிராமணர், பிரமச்சாரி, கோயிற்றொண்டர் என்ற பொருள் தந்து நிற்கின்றது என்கிறார் பேராசிரியர் நாகசாமி. அந்நிலையில் அத்தகையோர் (மாணி , மானி) இருந்த இடம் (மானி+பாய்) மானிப்பாய் எனப் பெயர் பெற்றதெனல் பொருத்தமாகும்.

கோயில் அல்லது அரண்மனைச் சமையற்காரர் என்ற நிலையில் மானி என்போர் மடப்பளியர் எனவும் அழைக்கப்பட்டனர். மடப்பள்ளி, மடப்பள்ளியார் என்பவற்றிகு நூலோர் தரும் பின்வரும் விளக்கங்களை அறிந்து கொள்ளுதல் சமூகநிலை நோக்கிய பயனுறு செயலாம்.

அதே நேரம் மானிப்பாய் என்கிற பெயர் வாறதற்கு காரணமாக  கேனைத் தனமான ஒரு கதையும் உண்டு இராமர் சீதைக்காக  மாயமானை  துரத்தி கொண்டு வருகிறபோது அந்த இடத்தில் வைத்து மானே நிற்பாய் என்றாராம்.அது மானிப்பாயாய் மாறியதாம்.

  • "ஐந்தாறு கிராமங்களுக்கு தலைமை பெற்றது மடப்பம், அளித்தல் = காப்பாற்றுதல், மடப்பத்தை அளிப்பதால் மடப்பளி என்பாதாம்"[4].
  • "கலிங்கதேசத்து மட்பள்ளியூரினின்று வந்த அரச குடும்பத்தவர்களே மடப்பள்ளியார் என்றழைக்கப்பட்டனர்"[5].
  • சில சரித்திர ஆசிரியர்கள் மடப்பளி என்னும் மொழியை மடைப்பள்ளியாக்கி அரச குடும்பங்களுக்குச் சமையல் செய்தவர்களின் சந்ததியார் எனக் கூறுவாருமுளர்" என்கிறார் குல சபாநாதன்[4].
  • "மடப்பளியார் தமிழரசர் காலத்திற் பிராமணரின் சமையற்கூட உதவியாட்களாக இருந்தனர். பின்பு அரச குடும்பத்தினருக்குச் சமையல் செய்தனர்"[6].
  • இவர்கள் கலிங்க நாட்டு நந்தவாடிப் பிரிவிலுள்ள மடப்பளி எனும் ஊரிலிருந்து வந்தவர்கள் என்கிறார் சுவாமி ஞானப்பிரகாசர்[7].

மானி, பாய் என்னும் இரு திராவிடச் சொற்களின் இணைவால் அமைந்த இவ்விடப்பெயரை குமாரசாமி (1918:160), மானப்பாய, அல்லது மானிப்பாய ( M'anayi or Mani.....a plant justicis) என்ற சிங்களப் பெயரின் திரிபு என்று எழுதியுள்ளார். இவற்றோடு வீமன்காமத்தில் மாந்தப்பாய், தனப்பாய், மல மண்டலப்பாய் (மலை + மண்டலப்பாய்) ஆகிய குறிச்சிப் பெயர்களும் வழக்கிலுள்ளன. தையிட்டியில் தண்டலப்பாய், சவங்கடப்பாய், தொங்களப்பாய், என்பனவும், உரும்பிராயில் தோலப்பாய், சுதுமலையில் கச்சப்பாய், சுழிபுரத்தில் இயக்கடப்பாய், மானிப்பாயில் கிணாப்பாய், தொல்புரத்தில் தலக்கடப்பாய் என்பனவும் குறிச்சிப் பெயர்களாக வழங்குகின்றன. இப்பெயர்கள் அனைத்திற்கும் சி்ங்கள விளக்கம் கொடுக்கிறார் குமாரசாமி (1918:160-161). ஆயினும் பாய் ஈற்று இடப்பெயர்கள் அனைத்தும் தமிழ்மொழியின் மூலமும் பொருளும் கொண்டவை என்பதற்கு தக்க விளக்கங்கள் மேலே தரப்பட்டுள்ளமை காண்க[8].

வரலாறு

யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலத்தில் அமெரிக்க சமயப் போதகர்களின் (அமெரிக்க மிசன்) மையங்களில் ஒன்றாக இது விளங்கியது. இம் மிஷனின் சார்பில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவரான சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் என்பார் 1864 ஆம் ஆண்டில் இங்கே ஒரு மருத்துவமனையை நிறுவியதுடன், மாணவர்களுக்கு மேனாட்டு மருத்துவத்திலும் தமிழ் மொழியில் பயிற்சியும் கொடுத்து வந்தார். இது ”மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை” என்னும் பெயருடன் இன்றும் செயற்பட்டு வருகிறது.

பாடசாலைகள்

மானிப்பாய் கல்வித துறையில் குறிப்பிடத்தக்க பின்னணியைக் கொண்டுள்ளது. 89 சதவீதமான மக்கள் எழுத்தறிவு கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். ஆங்கில மிசனறிகள் சில பாடசாலைகளையும் இங்கே நிறுவினர். இப் பாடசாலைகள் தவிரப் பிற்காலத்தில் நிறுவப்பட்ட பல பாடசாலைகளும் இங்கே உள்ளன. இவற்றுள் மானிப்பாய் மெமோறியல், மானிப்பாய் இந்துக் கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி என்பன முக்கியமானவை. இவை மட்டுமல்லாது மானிப்பாய் நூலகமும் கல்வித் துறைக்கு போதுமான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

வழிபாட்டு இடங்கள்

மானிப்பாய் கிறிஸ்தவரின் சமயப் பிரசார மையமாக இருந்துவந்ததால் இங்கே அச் சமயத்தவரின் புனித பேதுரு பவுல் ஆலயம், அங்கிலிக்கன் திருச்சபை தேவாலயம் உட்படப் தேவாலயங்கள் பல காணப்படுகின்றன.

தவிர பல இந்துக் கோயில்களும் இங்கே உள்ளன. தென் இந்தியக் கட்டடக் கலை சிற்ப வடிவமைப்பைக் கொண்டு அமைக்கப்பட்ட மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இது மட்டுமல்லாது மானிப்பாயில் இருந்து வடக்கே அமைந்துள்ள சுதுமலை அம்மன் கோவிலானது பழைமை வாய்ந்த வரலாற்று ரீதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலாக விளங்குகின்றது.

விளையாட்டு

இங்குள்ள மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானமானது இளைஞர்கள் மட்டுமல்ல முதியோர் மத்தியிலும் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது.

மானிப்பாயின் சிறப்புகள்

  • மானிப்பாயில் நவாலிக் கிராமத்தில் வயல் வெளிகளின் நடுவே இடிகுண்டென அழைக்கப்படும் பெரியதொரு குழி காணப்படுகின்றது. முன்னொரு காலத்தில் இடி விழுந்ததன் காரணமாகவே ஆழம் காண முடியாத இக்குழி ஏற்பட்டதாகவும் இக்குழிக்கும் கீரிமலைக் கடலிற்கும் இடையே நிலத்திற்கடியிலான தொடர்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
  • மானிப்பாயிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வழுக்கியாறு எனப் பிரசித்தி பெற்ற பருவ மழைக் காலங்களில் பொங்கி வழிந்தோடும் சிறிய ஆறு ஆகும்.

இங்கு பிறந்து புகழ் படைத்தோர்

  • முதலியார் நமச்சிவாயம் (சேர். பொன்னம்பலம் இராமநாதனின் மாமனார்)
  • சேர். அருணாசலம் மகாதேவன்
  • நீதிபதி சிவா செல்லையா
  • ஏ. மாணிக்கவாசகர்
  •  
  • எனது சேர்க்கைகள்
  • இன்றைய  மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
  • லக்ஸ்மன் கதிர் காமர்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. Jump up மனதை அள்ளும் மானிப்பாய், சிறிமால் பெர்னாண்டோ, தினகரன், மே 23, 2010
  2. Jump up "The word* Maani* stands for a Brahmin. In Kannada language, the word *maani* stand for a waiter…The word* maani* was derived from Sanskrit *maanava* 'a youth, a student'. Rajaraja the Great annexed South Canara to the Cola Empire. It may be that Brahmins from the area brought usage of the word *maani*, 'a Brahmin' to Ceylon" (A. Veluppillai: 1972:54-55)
  3. Jump up South Indian Inscriptions Vol.3.p.227
  4. Jump up to: 4.04.1 யாழ்ப்பாண வைபவமாலை:64)
  5. Jump up யாழ்ப்பாண வைபவகெளமுதி: 148-149
  6. Jump up யாழ்ப்பாணச் சரித்திரம்:61
  7. Jump up யாழ்ப்பாண வைபவ விமர்சனம்:148
  8. Jump up இ. பாலசுந்தரம்: ஈழத்து இடப்பெயர் ஆய்வு – யாழ்ப்பாண மாவட்டம், தமிழர் செந்தாமரை வெளியீட்டகம், ரொறொன்ரோ, கனடா, 2002

முதன் முதலாக மக்கள் முன் பிரபாகரன் தோன்றி உரையாற்றிய  இடமும் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயமாகும். சுதுமலை பிரகடனம் என புகழ் பெற்றது. தகவல்கள் விக்கி பீடியா.

கடைசியாக இப்படியான ஒரு ஊரிலை பிறந்து  சாத்திரி ஆகிய நான்  உருப்படாமல்போனதால் ஊருக்கே அவமானம்.இதை விக்கி பீடியாவிலை சேர்க்க வேணும். :)

சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்
Dr Samuel Fisk Green
Samuel_f_green.jpg
"தமிழருக்கான மருத்துவ ஊழியர்" மருத்துவர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் பிறப்பு அக்டோபர் 10, 1822
கிறீன் ஹில், வூஸ்டர், மசாசுசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா இறப்பு சனவரி 6 1884 (அகவை 61) பணி மருத்துவர், சமய ஊழியர் பெற்றோர் வில்லியம் ஈ. கிறீன், ஜூலியா பிளிம்ப்டன்

சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green, அக்டோபர் 10, 1822 - மே 28, 1884) என்பவர் அமெரிக்க மருத்துவரும் கிறித்தவ சமய ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்க மிசன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர். மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் எனப் பல்வேறு முயற்சிகளில் இவர் வெற்றி கண்டார். அறிவியல் தமிழிற்கு இவரின் முன்னோடிச் செயற்பாடுகளுக்கா அறிவியல் தமிழின் தந்தையாக அறிஞர்களால் கணிக்கப்படுகிறார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வூஸ்டர் (Worcester) நகரில் வில்லியம் கிறீன், ஜூலியா பிளிம்ப்டன் இணையினரின் பதினொரு பிள்ளைகளில் எட்டாவதாகப் பிறந்தவர் சாமுவேல். பதினொரு வயதிலேயே தாயை இழந்து, தந்தையாலும் தமக்கையாலும் வளர்க்கப்பட்டார். இவரது உடன் பிறந்தவர்களில் ஒருவரான ஆண்ட்ரூ ஹாஸ்வெல் கிறீன் (1820–1903) நியூயோர்க் நகர வடிவமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார்.[2]

18 வயதில் கிறித்துவின் சேவையில் தம்மை இணைத்துக் கொண்டார். 1841 இல் நியூயோர்க் மருத்துவக் கல்லூரியில் (The College of Physicians and Surgeons of New York) இணைந்து 1845 இல் மருத்துவராக வெளியேறினார்.

யாழ்ப்பாணத்தில் சேவை

யாழ்ப்பாணத்திலே தமது மிசனரிச் சேவையை நிலைப்படுத்திய அமெரிக்க மிசன், மருத்துவ சேவையையும் துவங்குவதென 1819 இல் தீர்மானித்தது. அதன்படி 1820 இல் பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் மருத்துவர் ஸ்டேர் தலைமையில் நிறுவப்பட்டது. அவரைத் தொடர்ந்து மருத்துவர் நேதன் உவாட் பணியாற்றினார். உவாட்டின் சேவைக் காலம் முடிவடைய வந்து பணியை ஏற்றவர் தான் மருத்துவர் சாமுவேல் கிறீன். சமயப் பணிக்காகவும் கிறிஸ்தவ சமய போதனைக்குமென வந்த மிசனரிமார் சமூக சேவையும் மனிதாபமான வழிகளையும் தொடர்ந்தார்கள்.

நீராவிக் கப்பல் மூலம் வந்த கிறீன், சென்னையில் தங்கி, பின்பு 1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார். வட்டுக்கோட்டையிலே தமது பணியைத் தொடங்கி, பின்னர் 1848 இலே மானிப்பாய்க்கு மாற்றம் பெற்றார். மானிப்பாயில் மருத்துவ நிலையம் ஒன்றைத் தொடங்கி பணி புரியத் துவங்கினார். அங்கு தான் கிறீனின் சாதனைகள் யாவும் இடம்பெற்றன. அம்மருத்துவமனை இன்று மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை என அழைக்கப்படுகின்றது.

தமது பத்தாண்டுச் சேவை முடிந்த பின் அமெரிக்கா திரும்பி ஓய்வு பெற்ற கிறீன், திருமணம் செய்து கொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பி, தமிழில் மருத்துவம் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தார்.

தமிழில் மருத்துவக் கல்வி

Green_first_students.jpg
மருத்துவர் கிறீனின் மருத்துவ மாணவர்களின் முதல் தொகுதி (1848-1853

மருத்துவக்கல்வியை மானிப்பாயிலே தமது கல்லூரியில் தமிழில் கற்பதென்று 1855 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்தார். அப்போது மாணவர் சிலர் அம்மாற்றத்தை விரும்பவில்லை என உணர்ந்தார். அவ்வேளையிலே தமது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்.

"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்".

இவ்வண்ணம் உறுதியாகக் கூறிய கிறீன், தமிழில் மேனாட்டு மருத்துவதைத் துவங்கிய முன்னோடியாவார். தமிழ்மொழி மூலம் 33 வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார்.

தமிழருக்கான மருத்துவ ஊழியர்

தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர்" (Medical Evangelist to the Tamils) என அதில் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் மருத்துவர் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்நினைவுக்கல் கிறீனை நினைவு படுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது.

Green_ambi.jpg
அம்பியின் அறிவியல் தமிழ் முன்னோடி மருத்துவர் சாமுவேல் கிறீன் நூலின் முகப்பு

வெளியிட்ட நூல்கள்

மருத்துவர் கிறீன் அவர்கள் மொத்தம் 24 நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார். அவற்றில் சில:

  • கட்டரின் அங்காதிபாதம், சுகரணம் - Cutter's Anatomy, Physiology and Hygiene, 204 ப., 1857
  • மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் - Maunsell's Obstetrics, 258ப., 1857
  • பிள்ளைப் பேறு தொடர்பான மருத்துவ வைத்தியம் (Midwifery) (1857) [1]
  • துருவிதரின் இரணவைத்தியம் - Druitt's Surgery, 504ப., 1867
  • கிறேயின் அங்காதிபாரதம் - Gray's Anatomy, 838ப., 1872
  • மனுசகரணம் - Dalton's Physiology, 590ப., 1883
  • வைத்தியாகரம் - (1872)
  • கெமிஸ்தம் - Well's Chemistry, 516ப.,1875
  • வைத்தியம் (1875)
  • கலைச் சொற்கள் (1875)
  • இந்து பதார்த்த சாரம் - Pharmacopoeia and India, 1884 (மொழிபெயர்ப்பு உதவி)
  • வைத்தியம் - Practice of Medicine, 1884 (மொழிபெயர்ப்பு உதவி)

மேற்கோள்கள்

  1. Jump up இராம. சுந்தரம். (2009). தமிழ் வளர்க்கும் அறிவியல். சென்னை: நியூ செஞ்சரி புக் கவுசு.
  2. Jump up New York Preservation Archive Project

உசாத்துணைகள்

  • அம்பி, Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green, கொழும்பு: 1998

வெளி இணைப்புகள்

Edited by sathiri

எனது   ஊரைப்பற்றிய தொகுப்பக்கு நன்றி  அண்ணா,

புங்குடுதீவு பற்றிய தொகுப்புகள் அருமை.

(கனடிய பழைய  மாணவர் சங்கத்தால் வெளியிடப்பட்ட தொகுப்பு என நினைக்கின்றேன்.)

நன்றிகள் பல. தொடருங்கள்.

இசைகலைஞர்களில் திரு பொன். சுந்தரலிங்கத்தின் சகோதரர்  திரு.பொன் சுபாஸ்சந்திரனை மறந்துவிட்டார்களா? இவர் முன்னாள் இலங்கை ஒலிபரப்புகூட்டுதபனத்திலும் கடமை ஆற்றியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இசைகலைஞர்களில் திரு பொன். சுந்தரலிங்கத்தின் சகோதரர்  திரு.பொன் சுபாஸ்சந்திரனை மறந்துவிட்டார்களா? இவர் முன்னாள் இலங்கை ஒலிபரப்புகூட்டுதபனத்திலும் கடமை ஆற்றியிருந்தார்.

நன்றி சுந்தரம்

உங்களது கேள்விக்கு......

இது பற்றி  எனது சில நண்பர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதனால்தான் இது ஒரு பகுதியினரால் தொகுக்கப்பட்டது என எழுதியிருந்தேன்.

இது முழுமையானது அல்ல

ஆனால் இதை இணைத்தவர் எமது ஊருக்கு சொந்தக்காரர் அல்ல

அவரது இணைப்பை மலிவானதாக்க நான் விரும்பாததால்  தொடர்ந்து எழுதவில்லை.

(பலரும்

பல அமைப்புக்களும் விடுபட்டடுள்ளன.)

எனது   ஊரைப்பற்றிய தொகுப்பக்கு நன்றி  அண்ணா,

புங்குடுதீவு பற்றிய தொகுப்புகள் அருமை.

(கனடிய பழைய  மாணவர் சங்கத்தால் வெளியிடப்பட்ட தொகுப்பு என நினைக்கின்றேன்.)

நன்றிகள் பல. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைகலைஞர்களில் திரு பொன். சுந்தரலிங்கத்தின் சகோதரர்  திரு.பொன் சுபாஸ்சந்திரனை மறந்துவிட்டார்களா? இவர் முன்னாள் இலங்கை ஒலிபரப்புகூட்டுதபனத்திலும் கடமை ஆற்றியிருந்தார்.

விக்கிபீடியாவில்  இணைப்பாளர்கள் விட்ட  பிழைகளை குறைகளை சுட்டிக்காட்டி திருத்துவதற்கும் வசதிகள் உள்ளன. :)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரம் செறிந்த வன்னி – வன்னியின் வரலாறு !

வெட்டி நாறி மலையை, வெட்டி நாறி விகாரையாக மாற்ற யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர். வன்னி என்றதும் எம் இயதக் கதவுகளைத் தட்டித் திறப்பது வீரம்.
ஒல்லாந்தர் கோட்டைகளை வென்று, வாட்கொடி ஏற்றி, எந்த ஏகாதிபத்திற்கும் அடிபணியாது பீரங்கிகளுக்கெதிராக. வாட்களை ஏந்திப் போராடி வீர மரணமடைந்த மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம், அவன் தன் மறவைக் கேட்டு நஞ்சை உண்டு மடிந்த காதலி குருவிச்சி நாச்சியின் வீரம் அறுவர் சேர்ந்து ஆண்ட வன்னி வள நாட்டை அவர்கள் அறுவரும் தமிழ் நாட்டிற்கு தலயாத்திரை சென்ற போது, கைப்பற்றப் போர்தொடுத்த அரசனிற்கு எதிராக அவ் அறுவர் துணவியரும் பணிப்பெண் ஒருவருமாக எழுவரும் ஆண்வேடமிட்டு போர்கோலம் ப10ண்டு களம் சென்று சமராடிய வீரம் என்பது போன்ற வரலாறுகளைக் கொண்டிருக்கும் வன்னி மண் தன்னகத்தே பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகளைக் சொல்லக்கூடிய பல பொக்கிஷங்களையும் கொண்டுள்ளது என்பது யாவருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

எனவே யாவரும் அவற்றைத்தெரிந்து கொள்வதன் மூலம் இனிவரும் காலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற அவாவிலேயே இக் கட்டுரையை எழுத விழைந்துள்ளேன். வன்னி மண்ணில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் கண்ணி வெடிகளும் தோட்டாக்களுமே பதில் சொல்லிக் கொண்டிருக்கும். இன்றைய நிலையில் இக் கட்டுரை தேவையான என நீங்கள் கேட்கலாம். இன்றைய சூழ்நிலையில் இத்தகைய ஆய்வுகள் சாத்தியப்படாத ஒன்றாக உள்ள போதிலும் இனிவரும் காலங்களில் அது சாத்தியப்படலாம். அப்படியான ஒரு சூழ்நிலை உருவாகும் போது அவ்வரலாறுகளை வெளிக் கொண்டு வர விளையும் சமகால புத்திஜிவிகளிற்கு முன்பு கண்டறியப்பட்ட சில தகவல்களைக் கடத்துவதே எனது நோக்கமாகும். இதில் வரும் எந்தக் தகவலும் என்னால் கண்டறியப்பட்டவை அல்ல.

இதை உனது சொந்தக் கட்டுரை என்பதை விட பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த, பல்வேறு ஆசிரியர்களினதும், தொல்பொருள் ஆய்வாளர்களினதும் கட்டுரைகளின் தொகுப்பு என்று சொல்வதே சரியாக இருக்கும்.
வன்னி மண் இன்று வடபுலத்தே ஆனையிறவையும் தென்புலத்தே அனுராதபுரத்தையும் கிழக்கு மேற்குத் திசைகளில் இந்து சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்ட நிலப் பரப்பாகச் (வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள்) சுருங்கி விட்ட போதிலும், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையே உள்ள நாடு வன்னி வள நாடு என வழங்கப்பட்டது. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கொட்டியாரம், யால பாலுகமும் மேற்கேயுள்ள புத்தளம் முதலியனவும் முற்காலத்தில் வன்னி நாட்டைச் சேர்ந்திருந்தன. பின்னர் டச்சுக்காரர் காலத்தில் வன்னியின் தெற்கு எல்லையாக அரிப்பு ஆறும், காலு ஆறும் இருந்தன. இப்படியாக, வளம் கொழித்து விளங்கிய வன்னி நாடு இன்று தன் பெரும் பகுதியை காடுகளுக்குள் தொலைத்து விட்டு, சோகங்களையே சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. பட்டினிச் சாவுகளும் அங்கு பாதம் பதிக்கத் தொடங்கி விட்டன. ஆனால் ஈழத்தின் உணவுக் களஞ்சியம் எனப் போற்றப்படும் செந்நெற் களனியாக விளங்கிய வன்னி மண் மீண்டும் செழிக்க வேண்டும்.

முதற்கண் வன்னி என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை நோக்கி அப்பாற் செல்வது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
வன்னி என்றால் நெருப்பு எவனும் பொருள் தமிழ் இலக்கியங்களில் வழங்கி வருகிறது. எனவே வன்னியர்கள் அக்கினி குலத்தின் வழிவந்தவர்கள் என்ற கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கது. அந்த வன்னியர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற மண் வன்னி என்றழைக்கப்பட்டது.

எவருக்கும் அடங்கிப் போகாத குணமும் இரத்தத்தில் ஊறிய வீரமும் கொண்டவர்கனே வன்னியர்களாவர் இனி வடக்கே யாழ்ப்பாண மன்னர்க்கோ தெற்கே அனுராதபுர மன்னர்களான வன்னியர் தம் குடியிருப்புக்கள் கட்டு (இன்று முத்தையன் கட்டாக மருவி விட்டது) முன்பொரு காலத்தில் இராசதானியாக விளங்கியதா என்பதற்கு விடைகாண முனைந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். கே. இந்திரபால தலைமையிலான குழுவினர் 1973ம் ஆண்டளவில் ஆராய்ச்சி மூலம் பெற்றுக் கொண்ட தொல்பொருள் சான்றுகள் பற்றிப் பார்ப்போம்.

டாக்டர். கே. இந்திரபால, முள்ளியவளை ஆசிரியர் சி. கன்னையன், வே. சுப்பிரமணியம் (முல்லைமணி) க.கனகையா, மாமுலையைச் சேர்ந்த க.தவராசா ஊஞ்சாற் கட்டியைச் சேர்ந்த சி. கணேசபிள்ளை, கோரமோட்டையைச் சேர்ந்த க.ஜெயக்கொடி ஆகியோரைக் கொண்ட குழு

1378341_612597858797338_1766192400_n.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேலம் என்ற ஊர் பெயரின் வேர் சொல் முதலில் எந்த மொழியில் வந்தது ?

எதனால் சேலம் என்று அழைத்தார்கள்

யார் மூலம் இந்த பெயர் உலகமெங்கும் சென்றது

http://en.wikipedia.org/wiki/Salem,_Tamil_Nadu

தமிழகத்தில் இருக்கும் சேலம் என்ற ஊர் பெயர் எப்படி யாரால் வந்தது

கடலில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும் கடலில் சென்று கலக்கும் காவேரி சில கிலோமீட்டர் தொலைவில் தான் ஓடுகிறது

இன்னும் தேட வேண்டும் உதவிக்கு சான்றாக ஊர் பெயர்கள் உள்ளது

India Salem 15.7 73.91
India Salem 11.65 78.16
Burma Salem 25.71 95.25
Germany Salem 53.66 10.83
Germany Salem 53.8 12.81
இந்தோனேசியா Salem -0.75 132.31
Indonesia Salem -7.18 108.78
Jamaica Salem 18.28 -76.85
Jamaica Salem 18.36 -78.3
Jamaica Salem 18.46 -77.3
Montserrat Salem 16.75 -62.21
Morocco Salem 31.55 -8.7
Namibia Salem -22.68 15.43
South Africa Salem -33.46 26.48
Spain Salem 38.95 -0.36
United States, Florida Salem 29.88 -83.41
United States, Georgia Salem 34.95 -85.04
United States, Georgia Salem 33.39 -82.04
United States, Georgia Salem 34.98 -84.27
United States, Georgia Salem 32.75 -84.18
United States, Georgia Salem 33.72 -83.38
United States, Idhaho Salem 43.87 -111.77
United States, Illinois Salem 42.34 -89.77
United States, Illinois Salem 38.62 -88.94
United States, Indiana Salem 39.59 -84.89
United States, Indiana Salem 40.71 -84.85
United States, Indiana Salem 38.6 -86.1
United States, Indiana Salem 40.31 -84.84
United States, Iowa Salem 40.85 -91.62
United States, Kansas Salem 39.87 -98.48
United States, Kentucky Salem 37.81 -83.33
United States, Kentucky Salem 37.06 -84.98
United States, Kentucky Salem 37.26 -88.24
United States, Maine Salem 44.9 -70.27
United States, Maryland Salem 38.51 -75.91
U States, Massachusetts Salem 42.51 -70.89
United States, Michigan Salem 42.4 -83.58
United States, Mississippi Salem 32.16 -90.54
United States, Mississippi Salem 32.59 -89.34
United States, Mississippi Salem 31.68 -89.53
United States, Mississippi Salem 31.22 -90.11
United States, Missouri Salem 37.64 -91.53
United States, Missouri Salem 40.02 -91.91
United States, Montana Salem 47.53 -111.03
United States, Nebraska Salem 40.07 -95.72
U States, New Hampshire Salem 42.78 -71.2
United States, New Jersey Salem 39.57 -75.46
United States, New Mexico Salem 32.7 -107.21
United States, New York Salem 43.17 -73.32
U States, North Carolina Salem 36.37 -79.69
U States, North Carolina Salem 36.19 -76.13
U North Carolina Salem 35.43 -81.19
U States, North Carolina Salem 36.53 -80.6
UStates, North Carolina Salem 35.69 -81.69
U States, North Carolina Salem 35.83 -79.78
U States, North Carolina Salem 36.11 -77.86
U States, North Carolina Salem 36.08 -80.24
UStates, Ohio Salem 39.68 -82.33
UStates, Ohio Salem 40.9 -80.85
United States, Oklahoma Salem 35.38 -95.92
United States, Oklahoma Salem 35.76 -94.57
U States, Oregon Salem 44.94 -123.03
United States, Pennsylvania Salem 40.81 -76.9
United States, Pennsylvania Salem 39.98 -77.65
United States, Pennsylvania Salem 41.43 -80.33
United States, Pennsylvania Salem 41.07 -78.74
United States, South Carolina Salem 34.53 -79.7
United States, South Carolina Salem 33.88 -79.51
United States, South Carolina Salem 34.88 -82.97
United States, South Carolina Salem 33.96 -79.8
United States, South Dakota Salem 43.72 -97.38
United States, Tennessee Salem 35.8 -86.47
United States, Tennessee Salem 35.61 -87.45
United States, Tennessee Salem 36.02 -83.04
United States, Tennessee Salem 35.43 -89.73
United States, Tennessee Salem 36.45 -87.33
United States, Tennessee Salem 36.18 -88.47
UStates, Texas Salem 30.54 -93.76
U States, Texas Salem 31.76 -95.13
U States, Texas Salem 32.82 -95.61
U States, Texas Salem 32.17 -95.02
U States, Texas Salem 30.81 -97.02
U States, Texas Salem 29.84 -97.32
U States, Texas Salem 28.98 -96.91
U States, Utah Salem 40.05 -111.67
UStates, West Virginia Salem 39.7 -79.57
UStates, West Virginia Salem 37.98 -81.11
U States, West Virginia Salem 39.28 -80.55

1002611_10151978750367192_1923431393_n.j

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரிசூழ்ந்தமங்கலம்:

இன்னைக்கு நம்ம திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசூழ்ந்தமங்கலம் என்னும் கிராமத்தை பற்றி பார்போம் வாருங்கள். இந்த கிராமம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் பத்தமடைக்கு அருகே அமைந்துள்ளது. இந்த ஊரை சுற்றி பசுமையான வயல்கள் நிறைந்து காணப்படும். இது திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கிறது . இந்த ஊரின் பழமையான பெயர் கலிஜெயமங்கலம் என்பதாகும். இந்த ஊரை பற்றி சில தகவல்கள் இடைக்கால பாண்டியர்கள் கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளது.

ஒரு காலத்தில் இந்த கிராமத்தைச் சுற்றிலும் கரும்புத் தோட்டங்கள் இருந்ததாகவும் அதனை உண்பதற்காக யானைக்கூட்டம் சுற்றி வரும் என்பதால் இக்கிராமத்தைச் கரிசூழ்ந்தமங்கலம் என்று பெயர் பெற்றதாக ஊர் மக்கள் சிலர் கூறுகின்றனர். இங்குள்ள கோவில்கள் மிகவும் பழமை வாய்ந்தவை. வெங்கடாஜலபதி கோவில் , காலஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், கரிசூழ்ந்தநங்கையம்மன் திருக்கோயில், நவநீத கிருஷ்ணன் திருக்கோயில் ஆகிய கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

Karisulnthamangal is one of the beautiful village located in Tirunelveli Distrcit. It is situated near Pattamadai , Ambasamudram Taluk. This village is suggounded by green paddy fields. It is located at a distance of 25km from Tirunelveli. The ancient name of this place is kalijeyamangalam. Earlier, the village is believed to have been abundant with sugarcane fields ; consequently ,herds of elephants would encircle and forage through the fields , from that the village got its name as Karisulndamangalam. There are many ancient temple present in this village. Venkatachalapathy Temple, Kaala Hastheeswarar Temple , Karisulndanangai Amman Temple, Arulmigu Navaneethakrishnan Temple are some of the important temples.

Source: karisulndamangalamintamil/home

1395305_601260699909728_2053087957_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருதமுனையின் - அம்பாறை மாவட்டம் - தமிழீழம்

இன்னொரு தலைமுறை இல்லாமல் அழிந்திடுமா மருதமுனையின் நெசவுத் தொழில்?

அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலை என அழைக்கப்படும் கல்முனை மாநகரிலிருந்து வடக்கே 2.3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிரதேசமே மருதமுனை. ஒவ்வொரு இடத்துக்கும் தனியானதொரு அடையாளம் இருக்கும். அதுபோல கிழக்கு மாகாணத்தில் நெசவுத் தொழிலுக்குப் பெயர்போன இடம்தான் மருதமுனை. கடந்த சுனாமி அனர்த்தத்தில் இலங்கையில் பாரியளவிலான அழிவுகளைச் சந்தித்ததும் இக்கிராமம்தான். இங்கு நெசவுத் தொழிலானது ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்றுவரை இருந்துவருகின்ற ஒரு புராதனமிக்க கைத்தொழிலாகும். மருதமுனையில் நெய்யப்பட்ட சாரம் அல்லது உடுதுணிகள் என்றால் இலங்கை மட்டுமல்ல சர்வதேசத்தில்கூட இதற்கென தனியானதொரு கிராக்கி இருக்கின்றது. மக்கள் இங்குள்ள பொருட்களை அதிக விலைகொடுத்து வாங்க முன்வருகிறார்கள்.

நெசவுத்தொழிலின் இன்றையநிலை பற்றி அறி வதற்கு அண்மையில் மருதமுனைக்குச் சென்றேன். அங்கு நெசவுத்துறையில் பாண்டித்தியம் பெற்ற 59 வயதான ஒஸனாரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது பரம்பரை 1932 இலிருந்து இத்தொழிலைச் செய்துவருகின்றது. ஒஸனாரிடம் அவரது தொழிலைப் பற்றிக்கேட்டபோது;

“நான் சாரம், சேர்ட் துணி, சாரி, மேசைச்சீலை, தலையாணி உறை, பெட்சீட், கால் தட்டி எண்டு பல உற்பத்திகளச் செய்றன். நாங்க இங்க நூல் வாங்குறது எண்டா, வாங்கி விக்கிறவங்க கிட்டத்தான் வாங்குறம். 2:80 என்கிற நூல் 1650 ரூபாக்கு தாறாங்க. அதுக்கு டை பண்ணி (சாயம் போட்டு) எடுக்க எல்லாமாச்சேர்ந்து 2200 ரூபா ஒரு கிலோவுக்கு செலவாகும். இங்க பொதுவா யூஸ் பண்ணுறது Homt என்கிற நூல்தான். பொறகு அந்த நூலைச் சுத்தியெடுத்து கைத்தறியில் போட்டு காலாலும் கையாலும்தான் தறியடிக்கவேணும். அதுல நமக்கு வேண்டிய மாதிரி டிசைனைப் போட்டுக்கலாம்.

என்கிட்ட 23 கைத்தறி (hand loom) இருக்கி. ஆனா, வேலக்கி ஆக்கள் இல்ல. சுனாமிக்குப் பொறகு, வேல செஞ்ச ஆக்களெல்லாம் மத்த மத்த வேலக்கி சம்பளம் காணாதெண்டு போயிட்டாங்க. அதுக்குப்பொறகு இந்த வேலக்கி இன்னொரு தலைமுறை வருது இல்ல. வறிய நாடுகளுக்கு எங்கட சாமானக் குடுத்தா கூட சம்பளம் குடுக்க ஏலா. செல்வந்த நாடு எண்டா, நல்ல சம்பளம் குடுக்கலாம். உதாரணத்துக்கு நோர்வேக்கு ஒரு “சேர்ட்’ செஞ்சி குடுத்தா 8 ஆயிரம் ரூபா தருவாங்க’ என்றார்.

சர்வதேசத்திலேயே இவர்களது உற்பத்திகளுக்கு அதிகளவான சந்தை வாய்ப்புகள் இருப்பதாகவும் போதியளவான மனிதவளம் இல்லாமையால் அவர்கள் கேட்கின்ற தொகையை தன்னால் உற்பத்தி செய்யமுடியால் போய்விட்டதாகவும் கூறி நொந்து கொண்டார்.

“இதுக்குள்ள புதிய இளம் பிள்ளயல் வாறங்க இல்ல. இப்ப இரிக்கிறவங்க கைத்தொழில் எண்டா, அத கௌரவக் குறச்சலாத்தான் நெனக்கிறாங்க. இதுல நல்ல எதிர்காலம் இருக்கு. ஆனா, யாரும் முன்வாறாங்க இல்ல. இந்த தலைமுறையோடயே இந்தத் தொழில் நின்டாலும் ஆச்சரியப்பட ஏலா. நானும் திருக்கோவில், விநாயகபுரம், சத்துருக் கொண்டான் எண்டு பல இடங்களுக்கும் பிள்ளயலுக்கு ரெயினிங்க குடுத்தேன். ஆனா, அங்க மூலப்பொருள் எடுக்குற வசதி இல்ல. அதுகள் இங்கதான் வரவேண்டிக் கெடக்கு. அதால அந்தத்தொழில் இங்கயோடயே நிக்குது. அவங்களுக்கும் ஆர்வம் குறஞ்சி போச்சி’ என்று தனது ஆதங்கத்தை எம்மிடம் கொட்டித்தீர்த்தார்.

என்னிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவரது கைத்தறி இயந்திரங்களை அறிமுகப்படுத்தினார். அந்நேரத்தில் அவரிடம் வேலை செய்கின்றவர்கள் வேலை முடித்துவிட்டு வீடு சென்று விட்டார்கள். அவர்களுக்கு நாட் சம்பளம் இல்லாமல், உற்பத்திகளுக்கே கூலி கொடுப்பதால் அதிகநேரம் இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் பயன்படுத்திய தறிவகைகளையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. வேலைசெய்கின்ற அனைத்து கைத்தறிகளையும் தானே சுயமாக உரு வாக்கியதாகக் கூறும்போது வியந்து போனேன்.

அவர் இத்தொழிலின் சந்தைப்படுத்தல் பற்றிக் கூறும்போது; “நான் 850 ரூபாக்கு கொம்பனிக்கு சாரம் குடுக்குறன். அவங்க அத 1300 ரூபாக்கு விக்கிறாங்க. சுனாமிக்கு முதல்ல இலங்க அரசாங் கத்துக்கு வருசம் ஒண்டுக்கு ரெண்டாயிரம் சாரிகள் 13 லெச்சம் ரூபாக்கு நான் குடுத்து வந்தன். இப்ப சாமா னுக்கு வில கூட. ஆனா, அவங்க அதே விலைக்கி கேக்குறதால நான் இப்ப குடுக்கிறதில்ல. என்கிட்ட 4 ஆம்புளயலும் 6 பொம்புளயலும் வேல செய்றாங்க. அவங்களுக்கு தறியடிக்குறதுக்கு 1 மீற்றருக்கு 75 ரூபா குடுக்கிறன்’ என்றார்.

இவரது அனுபவம், கலைத்திறன் போன்றவற்றால் நோர்வே, இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளார். அங்கு இவர் விசேடமான பல பயிற்சிகள், தொழில்நுட்பங்கள், தொழில்விருத்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது இலங் கையில் நடைபெற்ற பல கைத்தொழில் கண்காட்சிகளில் இவருக்குப் பல விருதுகளும் சான்றிதழ்களும் கிடைத்துள்ளன.

இலங்கை அரசாங்கம் நூலை இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக இறக்குமதி செய்து நியாயமான விலைக்கு தரவேண்டும் என்று பொதுவானதொரு கைத்தறியாளர் என்றவகையில் கேட்டுக்கொண்டார். மருதமுனையில் நெசவுத்தொழிலை அழியவிடாமல் பாதுகாக்க பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார் ஒஸனார். ஆகவே, இதன் பெறுமதியை உணர்ந்து நெசவுத் தொழிலை மருதமுனை மட்டு மல்லாது நாடுபூராவும் ஊக்குவிக்கவேண்டியது கட்டாயமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.