Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு" விக்னேஸ்வரனின் உரை

Featured Replies

சிறீதரனின் பேச்சு நடுநிலையாகத்தான் இருக்கிறது. மக்கள் வாக்குப் போட்டது உரிமையை மீட்டெடுக்க. அதில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கவனமாக இருக்க வேண்டும்.

முதலமைச்சர் தன்னிடம் உரிமை சம்பந்தமான காணியையும், நீதியையும், மீளக்குடியமர்வு.. போன்றவற்றை வைத்திருக்கிறார். அதன் கருத்து கூட்டமைப்பு மக்களுக்கு பதில் சொல்வதற்கு பயந்து ஓடி ஒழிக்கபோவதில்லை; உரிமை பெறுவதில் அவர்கள் தோற்றாலும், வென்றாலும் அடுத்த தேர்தலில் விக்கினேஸ்வரன் அதற்குப் பொறுப்பாக போகிறார். இன்னொரு வழியில் சொல்வதானால், கூட்டமைப்பு மக்களின் ஆணையை தாம் விளங்க்கிக் கொள்வதாகவும், அதை சிரத்தையாக எடுத்து அதன் வழி நடக்க தயாராக இருப்தாக உறுதி கூறுவதாகவுமே அவர் இந்த மூன்று மந்திரிப் பதவிகளை தான் பாரம் ஏற்றதின் பொருளாக கொள்ள வேண்டும்.

ஏதாவது வழிகளில் உரிமையை பெற்றுக்கொள்வது சாத்தியமா தெரியாது. முயற்சிக்கும் படி அவர்களுக்கு மக்கள் ஆணை இட்டிருக்கிறார்கள். உரிமை எப்படிப் பெறப்படும் என்பது அவர்கள் இனி ஏற்படுத்திக்கொள்ளும் பொறிமுறைகளில் தங்கியிருக்கிறது. அவற்றை விவாத்திக்க வேண்டுமாயின் இனி வரும் செய்திகளை பொறுத்தே முடியும். 

சிறீதரன் விக்கினேஸ்வரனுக்கு அவரது கடமையை நினைவூட்டியதுடன் நிற்கவில்லை. மந்திரிகளுக்கும் அவர்களது கடமைகளை நினைவூட்டியிருக்கிறார். தெட்டத்தெளிவாக மாவட்டங்களுடன் மந்திரிப்பதவியை இணைக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார். இதை அவர் சுரேஸ் முல்லைத்தீவுக்கு மந்திரிப்பதவியைக் கேட்டார் அதனால்த்தான் சிறிதரன் இப்படி சொன்னர் என்று மட்டும் குறுக்கமாக பொருள்கொள்ள கூடாது. இன்னொரு வகையில் பார்த்தால் இனி வரும் காலங்களில் முல்லை மாவட்டம் மந்திரிபபதவிப் போட்டியில் தோற்றுவிட்டது என்றும் தம் மாவட்டம் வென்றுவிட்டது என்றும்  மற்றைய மாவட்டது மந்திர்கள் இறுமாந்திருக்க முடியாது.பார்த்தால் என்பதும் கருத்தில் அடங்கும்.  யாழ்ப்பாண, மன்னார் மாவட்ட மந்திரிகள் தத்தம் தொகுதிகளையோ மாவட்டங்களையோ மட்டும் கவனிப்பது என்பது இருக்க கூடாது என்கிறார் இங்கே. அவர்களின் கடமை வட மாகாணத்திற்காகக இருக்க வேண்டும் என்பது அவரின் கோரிக்கை. இவர்கள், எங்கே நோவோ அந்த இடத்துக்கு மருந்து போடும் வைத்தியர்களாக இருக்க வேண்டும் என்பது சிறீதரினின் கோரிக்கை. அவரின் இந்த பார்வை இந்த நேரத்தில் மிகவும் அவசியம். சுரேஸ் மாவட்டம் தொடர்பாக மந்திரிப் பதவி கேட்டது  என்பது இலங்கையின் பாரம் படியமாக இருக்கிறது. அரசு தேர்தல் காலத்தில் தேவா கேட்டதால் மட்டும் நெடும் தீவை சிங்கப்பூர் ஆக்குவதாகவும், ஆமி காணிகளை திரும்ப கொடுப்பத்தாகவும் நாடகமாடியிருந்தது. இதானால் அந்த பாரம் பரியம் வடமாகாணசபைக்குள் வேண்டாம் என்பதுதான் அவர் விடும் கோரிக்கையாக இருந்தது. 

அவரின் பேச்சில் இருந்த பொருளிலும் குரலில் இருந்த பொருள் கூடவாக இருந்தது. ஆக்க்ரோசமாக பேசியிருந்தார். பொறுமை இழந்திருந்த அவரின் குரல், இலசக்கணக்க மக்களை, ஆயிரக்கணக்கான போராளிகளையும் தியாகம் செய்து பெற்ற மாகாண சபை இது என்று பலர் புரிந்துகொள்ளவில்லை என்பதை சொல்லியது.  வினயமாஅக சொல்லி விளங்காவிட்டால் இட்டித்தாவது பார்க்க வேண்டும் என்பது அவரின் முயற்சி.

சிறீதரனின் பேச்சை மாகாணசபையினர் செவி மடுக்கவில்லையாயின்  கடுவெளிச்சித்தரின் நையாண்டிப்படல் ஒன்றை தவிர இதற்கு நல்ல உவமானம் கிடைக்காது.

 "நந்த வனத்திலோர்  ஆண்டி- அவன்
  நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
  கொண்டு வந்தான் ஒரு தோண்டி- மெத்த
  கூத்தாடி கூத்தாடி போடுட்டைத்தாண்டி!"
 
Edited by மல்லையூரான்

  • Replies 71
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவன் சொன்னது சம்மந்தனைக் கொண்டுவந்தது தேசியத் தலைவர் என்று...????? விசர்க்கதை கதைக்கக் கூடாது..... சம்மந்தனைப்பற்றி தெரியாவிட்டால்....  தயவுசெய்து விசரைக் கிளப்பாமல் இருங்கோ! எல்லாத்துக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு..... அது உங்களுக்கு புரியுமோ எண்டு எனக்குத் தெரியேல! :(

ஐயா.. சம்மந்தரை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் ஆக்கியவர் தேசியத் தலைவர் என்று விடுதலைப்புலிகள் நெடியவன் அணியின் சங்கதி இணையத்தளத்தில் போட்டிருக்கு. அட, அப்ப அது கப்சாவா? அதுதானே பாத்தேன் தலைவர் எப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும்  அங்கீகாரம் கொடுத்திருப்பார் என்று.. அடப் பாவிகளே.. சரித்திரத்தையே மாத்தி விட்டார்களே.. உருப்படுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சிறி தரன் பேசியது சம்மந்தன் விக்கி சுமந்திரன் கும்பலின் கன்னத்தில் அறைந்தது போல் இருக்கு இருக்கும் well done சிறி

சில வருடங்களுக்கு முன் "றோ" வைச் சேர்ந்த ஒருவர் வேறு ஒரு களத்தில் சொன்னது...
 
Tiger sympathizers are masters in the art of making enemies.
 
:icon_mrgreen:  :icon_mrgreen:

ஏன் இப்பிடி?  :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இப்பிடி?  :huh:

இலங்கையில் வாழும் தமிழர்களின் தேர்வு அப்படி!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்பிடி?  :huh:

தண்ணீரில் மூழ்கடிக்கப்படுபவன் மூச்சுத்திணறி அவதிப்படும்போது கையில் எது அகப்படுகிறதோ அதனைப் பற்றிக்கொள்ளவே முயலுவான். இதற்காக ஒரு ஆராச்சி நடத்தவேண்டிய தேவை ஏன் உறவே?. :unsure: மூழ்கடிப்பதைத் தடுத்து நிறுத்தும் வழிமுறைகளை ஆராய்வதே ஆக்கம்தரும். :rolleyes:   

விக்கி கொழும்பு ,அரச நீதிபதி ஆனால் சட்டமாதிபராக ,அரச வழக்குத்தொடுத்த சிவா பசுபதி புலிகளால் ஒரு குழுவிற்கு ஆலோசனைக்காக நியமிக்கப்பட்டவர் .சிறிமாவோ ஒருமுறை சொன்னார் தன்னுடைய கருப்பு மகன் குமார் .

ஏன் இப்பிடி?  :huh:

தமிழன்

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி கொழும்பு ,அரச நீதிபதி ஆனால் சட்டமாதிபராக ,அரச வழக்குத்தொடுத்த சிவா பசுபதி புலிகளால் ஒரு குழுவிற்கு ஆலோசனைக்காக நியமிக்கப்பட்டவர் .சிறிமாவோ ஒருமுறை சொன்னார் தன்னுடைய கருப்பு மகன் குமார் .

புலிகளால் பரிசில் வைத்து  பல வல்லுனர்களின் உதவியோடு  தயாரிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகசபையை சட்டரீதியாக வகுத்தவர் முன்னைநாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி அவர்கள் தான்.

இதில் நான் வசித்து தெரிந்து கொண்ட விடையம் யாது எனில் இங்கு கருத்து எழுதியவர்கள் தவிர மற்ற எல்லோரும் எதோ ஒரு வகையில் அரசுடன் இணைத்து செயல் பட்டு இருக்கினம் .

சந்திரிகாவின் வலது கை சம்மந்தர்

சிறிமாவின் வலது சிவா பசுபதி

மகிந்தவின் வலது விக்கி

ஆக முடிவா புலிகளுக்கு அரசியல் அறிவே இருக்க வில்லை என்பதை எல்லோரும் இங்கு நாசுக்கா சொல்லினம் நான் நேரடியா சொல்லுறன் அம்புட்டுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்தர்ப்பவாத கைகூலிகளையும் புலிகள் இருக்கும் வரை மக்களின் விருப்புக்கு ஏற்ற மாதிரி பாவித்ததை மறைச்சிட்டீங்களே பாஸ். அங்கு தான் பிரபாகரனின் சாணக்கியம்.. உந்தச் சாணக்கியங்களை தூக்கிச் சாப்பிட்டுள்ளது.

இன்று மிதவாதம் என்று கூவிக்கொண்டு.. தலைமையில் உள்ளதுகளை தனக்கு அருகில்.. கருத்துக் கேட்க வைச்சவர் பிரபாகரன். அதுவும் மக்களின் கருத்து என்னென்று கற்பித்தவர் அவர்..!

இவர்களை தலைமையில் இருக்க வைச்சு கிரீடம் சூடி மகிழ பிரபாகரன் ஒன்றும் முட்டாள் இல்லை..!

1383157_10151662749207944_907436453_n.jp

Edited by nedukkalapoovan

பிரபாகரன் ஒரு மந்திர சொல் ஒரு தீர்க்கதர்சி ஆனாலும் இங்கு இருக்கும் பின்னோட்டங்கள் பார்க்கும் போது இவர்களின் அரசியல் சாணக்கியங்களை பார்க்கும்போதும்  வியக்காமல் இருக்க முடியவில்லை இவ்வளவு அறிவாளிகளை வைத்துக்கொண்டு நாம் தோற்றுபோய் இருக்குறம் என்பதுதான் வேதனை .(வெள்ளை பேப்ப்பரில் கையொப்பம் இதுதான் 22 பேரும் பதவி ஏற்றவா அது வேற கதை )

அரசியலின் அடிப்படை ஜனநாயகம் ,சர்வாதிகாரம் என்றால் கூட என்னவென்று தெரியாமல் இன்னும் பலர் ஆயிரம் பக்கங்களில் வியாக்கியானம் எழுதின்றார்கள் ,இப்பவும் கொடுப்பனவுகள் தொடருது போல ,

விக்கியும் டக்கியும் கை குலுக்குவதை பார்த்து கூட இவர்களுக்கு விளங்காவிட்டால் மந்திகையில் தான் மருந்து எடுக்கவேண்டும் .

1377591_632767450109464_2122467955_n.jpg

பின்னாலை பாதுகாப்புக்கு நிக்கும் சிங்கள நாட்டின் காவல் துரைய அதிகாரியை பார்க்க பாவமாக இருக்கப்பா...!!! :lol:  :lol:  :lol:

அரசியலின் அடிப்படை ஜனநாயகம் ,சர்வாதிகாரம் என்றால் கூட என்னவென்று தெரியாமல் இன்னும் பலர் ஆயிரம் பக்கங்களில் வியாக்கியானம் எழுதின்றார்கள் ,இப்பவும் கொடுப்பனவுகள் தொடருது போல ,

விக்கியும் டக்கியும் கை குலுக்குவதை பார்த்து கூட இவர்களுக்கு விளங்காவிட்டால் மந்திகையில் தான் மருந்து எடுக்கவேண்டும் .

எங்களுக்கு எதுவும் தெரியாது தான்...  அது உங்களை பொறுத்த வரை சரியாக கூட இருக்கும்...  நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்க வில்லை...  என்பதுக்கு ஒரு உதாரணம் தருகின்றேன்... 

இதை பார்க்க கூட உங்களுக்கு நேரமோ கருத்து சொல்ல நீங்கள் பார்க்க போவதோ கிடையாது என்பது எனக்கு நன்கு தெரியும்...  அப்படியும் உங்களுக்கு பதில் தருகிறேன்...   காரணம் உங்களின் குழப்பவாதங்களை மறுக்க வேண்டும் எனும் காரணத்துக்காகவே.... 

இப்போ நான் பதில் தரவில்லை யோகி அண்ணை தருகிறார் ...

இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி அண்ணை... [/size]

இந்த யோகி அண்ணாவையே ஒதுக்கித்தானே வைத்திருந்தார்கள்?  யோகி அண்ணா, பாலகுமாரன் அண்ணா, திலகர் அண்ணா போன்றவர்களின் அறிவுரையைக் கேட்டிருந்தால் தமிழ் மக்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காதே.  அவர்களை ஒதுக்கிவிட்டு எந்தவொரு அறிவுமில்லாதவர்களைத்தானே முன்னிலைப்படுத்தினார்கள்.  கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து பிரியோசனம் இல்லை.  இப்போது இந்த யூரிடியுப்பைப் போட்டு என்ன பிரியோசனம்?  

புலிகள் இயக்கத்தில் அனைவரும் சமம் என்பதுக்கு யோகி அண்ணா ஒரு உதாரணம்... மாத்தையாவின் பிரச்சினை தெரிந்து சொல்லாமல் விட்டதினால் தண்டனை வளங்கப்பட்டது...

யோகி அண்ணா ஒதுக்க படவில்லை அவர் சமர் ஆய்வு பிரிவின் பொறுப்பில் இருந்தார்... விடுதலைப்புலிகளின் வளர்சிக்கு மிகவும் முக்கிய துறை அது...! இதன் பால் அவரின் அறிவுரைகள் கேக்கப்படவில்லை என்பதில் உண்மை இருக்க போவதில்லை...

மற்றும் ஒதுக்கி வைத்து இருந்தவருக்கு இவ்வளவு விபரம் தெரிந்திருக்கவும் போவதில்லை...

Edited by தயா

தலைவர் சொல்கிறார் கேழுங்கள்...

Edited by தயா

யோகியின் பேச்சை நீங்கள் முழுமையாக கேட்கவில்லை போலிருக்கு ,அவர் சொன்னதிற்கு எதிர்மாறாகத்தான் அத்தனையும் நடந்திருக்கு ,தாங்கள் எப்படியும் வெல்வோம் ஒரு காலமும் இப்படி அழிக்கபடமாட்டோம் என்று நிலத்திலும் புலத்திலும் புலிகள் முற்று முழுதாக நம்பினார்கள் .அதுதான் தலைவர் வன்னிக்கு முழு குடும்பத்தையும் இழுத்தார் .இது தான் அவர்களின் அரசியல் வங்கிரோத்து .

எமது அரசியலின் தீர்க்க தரிசனம் என்றால் "வங்கம் தந்த பாடம் " தான் .

மாத்தையா பிரச்சனையில் யோகிக்கு என்ன நடந்தது என்று அறியவேண்டும் என்றால் யோகியின் உயிர் நண்பர் லண்டனில் இருக்கின்றார் ,யோகியை போய் இடைக்கிடை சந்தித்துவிட்டு வந்தவர் .வேணுமென்றால் விபரம் தருகின்றேன் போய் சந்திக்கவும் (அவரும் புலிதான் ).

துன்புறுத்தினார்களா என்று கேட்டதற்கு புலிகளின் சித்திரவதை பற்றி உனக்கு தெரியும் தானே என்றாராம் .

யோகி அண்ணையை மாத்தையா பிரச்சினை மட்டும் தானா ????????????

பொன்னம்மானின் தம்பி என்பதால் விட்டு வைத்தார் தலைவர் கடைசி காலத்தில் கலைச்சு விட்டவன் பூரா இயக்கத்தில் திரும்பி சேர்க்க பட்டார்கள் வரலாறு .

அழிவுகளை பற்றி யோகி அண்ணை சொன்னதுக்கு மாறாக தலைவரின் 2008 மாவீரர் நாள் உரையிலையும் மாறாக சொல்லப்படவில்லை... !

அப்படி தலைவர் என்ன மாறாக சொன்னார்...??

புலிகள் யோகி அண்ணையை பிரித்து வைத்து இருந்தார்கள் எனும் புறணிக்கருத்து வாதம் தான் நீங்கள்... புலம்பெயர்ந்தவர்கள் சொன்னதை மட்டும் கேட்டு அதை மட்டும் வைத்து புலிகளுக்கு ஏதும் தெரியாது எண்று நிறுவ நிற்கிறீர்கள்...

ஒரு வகையிலை தலைவரின் உரைக்கு முன்னம் யோகி அண்ணையின் உரையை நான் இணைத்த காரணம் கூட உங்களை இனம் காட்டவே...

புலிகள் இயக்கத்தில் அனைவரும் சமம் என்பதுக்கு யோகி அண்ணா ஒரு உதாரணம்... மாத்தையாவின் பிரச்சினை தெரிந்து சொல்லாமல் விட்டதினால் தண்டனை வளங்கப்பட்டது...

யோகி அண்ணா ஒதுக்க படவில்லை அவர் சமர் ஆய்வு பிரிவின் பொறுப்பில் இருந்தார்... விடுதலைப்புலிகளின் வளர்சிக்கு மிகவும் முக்கிய துறை அது...! இதன் பால் அவரின் அறிவுரைகள் கேக்கப்படவில்லை என்பதில் உண்மை இருக்க போவதில்லை...

மற்றும் ஒதுக்கி வைத்து இருந்தவருக்கு இவ்வளவு விபரம் தெரிந்திருக்கவும் போவதில்லை...

இன்னும் பூசணிக்காயை மறைப்பதிலேயே குறியாக இருக்கிறீர்கள்.  அதனால் இன்னும் பாதகம்தான் வருமே தவிர, சாதகமாக எதுவும் நடக்கப் போவதில்லை.  மாத்தயாவின் விடயத்திலும் சரி, யோகி அண்ணாவின் விடயத்திலும் சரி, என்ன நடந்து என்று எனக்கும் தெரியும்.  வீணாக இந்தத் திரியை திசை திருப்ப விரும்பவில்லை.  இன்றைய காலகட்டத்திற்கு எது முக்கியமோ அதனையே செய்ய வேண்டும்.  மீண்டும் மீண்டும் பழைய குப்பைகளைக் கிளறுவதால் எதுவித பிரியோசனமும் இல்லை.    

யோகி அண்ணையை மாத்தையா பிரச்சினை மட்டும் தானா ????????????

பொன்னம்மானின் தம்பி என்பதால் விட்டு வைத்தார் தலைவர் கடைசி காலத்தில் கலைச்சு விட்டவன் பூரா இயக்கத்தில் திரும்பி சேர்க்க பட்டார்கள் வரலாறு .

யோகி அண்ணை ஒரு வருடம் கூட புலிகளின் இருந்து விலகி இருக்கவில்லை... 1996 க்கு பிறகு வன்னியில் புலிகளின் அச்சகங்களுக்கு பொறுப்பாக இருந்தார்... மிக முக்கியமாக விஸ்வமடு( ரெட்பாணாவில் இருந்த) இருந்த வாசன் அச்சகம் அவரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தது...

இன்னும் பூசணிக்காயை மறைப்பதிலேயே குறியாக இருக்கிறீர்கள்.  அதனால் இன்னும் பாதகம்தான் வருமே தவிர, சாதகமாக எதுவும் நடக்கப் போவதில்லை.  மாத்தயாவின் விடயத்திலும் சரி, யோகி அண்ணாவின் விடயத்திலும் சரி, என்ன நடந்து என்று எனக்கும் தெரியும்.  வீணாக இந்தத் திரியை திசை திருப்ப விரும்பவில்லை.  இன்றைய காலகட்டத்திற்கு எது முக்கியமோ அதனையே செய்ய வேண்டும்.  மீண்டும் மீண்டும் பழைய குப்பைகளைக் கிளறுவதால் எதுவித பிரியோசனமும் இல்லை.

உங்களை போல விடயங்கள் எங்களுக்கும் தெரியும்... நீங்கள் சொல்கிறீர்கள் எண்டடுக்காக எல்லாம் நீங்கள் சொல்லும் புனை கதைகளுக்கு தாளம் போட முடியாது...

Edited by தயா

யோகி அண்ணையை மாத்தையா பிரச்சினை மட்டும் தானா ????????????

பொன்னம்மானின் தம்பி என்பதால் விட்டு வைத்தார் தலைவர் கடைசி காலத்தில் கலைச்சு விட்டவன் பூரா இயக்கத்தில் திரும்பி சேர்க்க பட்டார்கள் வரலாறு .

யோகி பொன்னமானின் அண்ணர் ,நான் பாடசாலை நாட்களில் பழகியவர் கிரிக்கெட் கோச் ,பின்னர்  லண்டன் ,இந்தியாவிலும் சந்தித்தேன் .

சென்னையில் அனைத்து இயக்கங்களையும் கூப்பிட்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் ஒரு சந்திப்பை நடாத்தினார்கள் ,புலிகளின் சார்பில் யோகியும் ,திலகரும் வந்திருந்தார்கள் . அங்குதான் இப்போ லண்டனில் இருக்கும் என்னுடன் படித்த ரூட் ரவியை சந்தித்தேன் அவர் இயக்கத்தில் இருப்பதே எனக்கு தெரியாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.