Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தார் சிவாஜிலிங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தார் சிவாஜிலிங்கம்!

14 அக்டோபர் 2013


வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ அமைப்பின் அரசியல் துறை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (14.10.13) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தியாகங்களிற்கு மதிப்பளிக்கும் முள்ளிவாய்க்காலிற்கு தனது வெற்றியை சமர்ப்பணம் செய்வதாக அவர் தெரிவித்தார்.

இதற்கான நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சமாதான நீதவான் டொக்டர் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.

இதேவேளை ஏனையவர்கள் மன்னர் ஆயரின் வேண்டுகோளிற்கு இணங்க சத்தியபிரமாண நிகழ்வை எpற்போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97650/language/ta-IN/article.aspx

இனி ஒரு தலையங்கம் வரும் சாதிச்ச சிவாஜிலிங்கமேண்டு.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பு:
எடேய் ,வப்பு உனக்கொரு விசியம் தெரியுமே? எங்கட சிவாஜியார் முள்ளிவாய்க்காலுக்குப் போயல்லே பிரமாணம் எடுத்திருக்கிறார்!

வப்பு:
ஓமோம் அவர் ஏனங்கபோனவர் தெரியுமே? ரகசியமாத் தலைவரைக் கண்டு ஆசீர்வாதம் வாங்குறதுக்காம்!

  • கருத்துக்கள உறவுகள்
இந்தாளு கொஞ்சம் ஓவரா பிலிம் காட்டுறாரு போல படுகுது?
 
பாத்தப்பு, கவனம்! நீங்க த்ப்பிருவீங்க. கூட, மாட ஒத்தாசையா இருந்தவங்களுக்கு தான் பிரச்னை வரலாம்.
 

Edited by Nathamuni

வாக்கு போட்ட சனத்துக்கு மிளகாய் அரைக்காமல் விட்டால் சரி

சிவசக்தி ஆனந்தன் - மன்னார் ஆயர் என்னிடம் கூறாமையே நான் முள்ளிவாய்கால் செல்லக் காரணம்: எம்.கே.சிவாஜலிங்கம்
[ திங்கட்கிழமை, 14 ஒக்ரோபர் 2013, 07:28.05 PM GMT ]
sivaaa.jpg
முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் என அறிவிக்கப்பட்ட நிலையில் எம்மிடம் கூட்டாக முடிவெடுத்த சிவசக்தி ஆனந்தனுக்கு மன்னார் ஆயர் செய்தி அனுப்பியதால் கைவிடப்பட்டதாக கூறினார், ஆனால் அவரும் என்னிடம் கூறவில்லை. மன்னார் ஆயரும் என்னிடம் கூறாமையே நான் முள்ளிவாய்க்கால் செல்லக் காரணம் என விபரிக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம்
முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் என அறிவிக்கப்பட்ட நிலையில் எம்மிடம் கூட்டாக முடிவெடுத்த சிவசக்தி ஆனந்தனுக்கு மன்னார் ஆயர் செய்தி அனுப்பியதால் கைவிடப்பட்டதாக கூறினார் ஆனால் அவரும் என்னிடம் கூறவில்லை மன்னார் ஆயரும் என்னிடம் கூறாமையே நான் முள்ளிவாய்க்கால் செல்லக் காரணம் என லங்காசிறி வானொலியில் விபரிக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம்
 
ஆட்டை கடித்து மாட்டை கடித்து  சிவசக்தி ஆனந்தனையும், மன்னார் ஆயரையும் கடித்து ...  :lol:  :D

இவர் முள்ளி வாய்க்கால் சென்ற போது யாரை அங்கே கண்டார். மற்றக்கட்சிகளின் பேய்கள்களா அங்கே சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆட்கள் ஒருவரும் இல்லை என்றால் அதை பற்றி விசாரித்தாரா?

  • கருத்துக்கள உறவுகள்
சிவாஜிலிங்கத்துக்கு ராஜதந்திரம் தெரியாது போல. விக்கியர் போல் மகிந்தவுக்கு முன்னால் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டியது தானே.
 
தமிழீழம் வேண்டாம். ஒற்றை ஆட்சியை ஆதரிக்கிறோம்.சிங்க கொடியை பிடிக்கிறோம்.இந்தியா சொன்ன படி செயற்படுகிறோம். சத்தியபிரமாணத்துக்கு மட்டும் ஏன் பின்வாங்க வேண்டும்?ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டுமையா நிகழ்ச்சி நிரல்.

 
 
2 ஆம் இணைப்பு ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்வது அவரது காலடியில் வீழ்வதற்கு ஒப்பானது - சிவாஜிலிங்கம் photo.png 

[Monday, 2013-10-14 13:24:18]
mullaitheevu-seithy-201310114-150.jpg

வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சிவாஜிலிங்கம், இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வல்வெட்டித்துறை மாவட்ட வைத்திய அதிகாரி ஜே.மயிலேறுபெருமாளின் முன்னிலையில் சிவாஜிலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அமைச்சுப் பதவி ஒதுக்கீடு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒன்பது உறுப்பினர்கள், முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பிரதான பதவிப் பிரமாண நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. தனியாக முள்ளிவாய்க்கலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாக ஒன்பது உறுப்பினர்கள் உத்தேசித்திருந்தனர்.

  

எனினும், மன்னார் மாவட்ட ஆயரின் தலையீடு காணரமாக எட்டு உறுப்பினர்கள் பதவிப் பிரமாண நிகழ்வுகளை முள்ளிவாய்க்காலில் நடத்தவில்லை. இதனிடையே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் காலை 10.30 மணியளவில் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

2 ஆம் இணைப்பு

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் எங்களுக்கு அறவே நம்பிக்கை இல்லை என வடமாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியற்துறை தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதலில் யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதியை அழைக்க இருந்தனர் அது எமது கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்ட பின்னரே முதலமைச்சர் அலரி மாளிகை சென்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது. அதற்கு நாம் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தோம். ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யாமல் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் வேணுமென்றால் சம்பந்தனும் விக்னேஸ்வரனும் ஜனாதிபதியுடன் நல்லெண்ண சந்திப்பை மேற்கொள்ளுங்கள் என கூறி இருந்தோம்.

ஜனாதிபதி முன்னிலையில் பதவிபிரமாணம் செய்வது என்பது அவரது காலடியில் போய் வீழ்வதற்கு ஒப்பானது. வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திறமைக்கு இவ்வளவு வாக்குகளும் கிடைக்கவில்லை அரசாங்கத்திற்கு எதிரான வாக்குகளே 75 வீதமானவை மிகுதி 25 வீதமான வாக்குகளே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளுக்கும் அதன் வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல உள்ளக சுயநிர்ணயம் அதாவது வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான பூரண சுயாட்சி முறைக்கும். இலங்கை அரசின் மீதான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது அதற்கு பொறுப்பு கூறல் வேண்டும் என்பவற்றுக்காகவே எமக்கு மக்கள் ஆணை தந்துள்ளார்கள். எங்களுக்கு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் அறவே நம்பிக்கை இல்லை ஆனாலும் சர்வதேச நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே நாம் மாகாண சபையை ஏற்று கொண்டோம்.

தெரிவு செய்யப்பட்ட அத்தனை உறுப்பினர்களும் மாகாண சபையில் இருந்து கொண்டு மக்கள் தந்த ஆணையை ஏற்று நடப்போம். போரிலே கொல்லப்பட்ட மக்கள், மரணித்த மாவீரர்கள், கொல்லப்பட்ட தலைவர்கள், மரணித்த தமிழ் தேசிய வீரர்களுக்கு முள்ளிவாய்க்கால் மண்ணிலே அஞ்சலி செலுத்திவிட்டு தான் முள்ளிவாய்க்கால் பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு சமாதான நீதவான் டாக்டர் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டேன்.

என்னுடன் மன்னார் ஆயரோ, மன்னார் ஆயருடன் பேச்சு நடாத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனோ பேச்சுக்களை நடத்தவில்லை அதனால் தான் நான் இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

mullaitheevu-seithy-201310114-1988.jpg

 

 

 

Edited by மல்லையூரான்

TNA யில் இணையமுன்பு இந்திய இராணுவம் (87-90) ,ஸ்ரீலங்கா அரசு போன்றவற்றின் கைக்கூலியாக செயறபட்டவர்,ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவாக செயறபட்டவர்  இதைச் சொல்லக்கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்

எம்.கே. சிவாஜிலிங்கம்  அவர்களின் பல செயல்கள் முதலில் வருத்தமாகவும்

பின்னர் சரியாகவும் தெரிந்திருக்கின்றன.

 

எல்லாவற்றையும் குளப்புகிறாரே என்று தோன்றியவை

பின்னர்  நாரதர் வேலையாகவும் முடிந்திருக்கின்றன.

இவர் ஒரு  புரியாத புதிர் போல.

எனக்கு பிடிக்காத ஒருவர் என்று சொல்லத்தான் விருப்பம்

ஆனால்...............???

பார்க்கலாம்...


TNA யில் இணையமுன்பு இந்திய இராணுவம் (87-90) ,ஸ்ரீலங்கா அரசு போன்றவற்றின் கைக்கூலியாக செயறபட்டவர்,ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவாக செயறபட்டவர்  இதைச் சொல்லக்கூடாது .

 

 

ஏன்  ராசா

எதையெல்லாமோ மன்னித்து விட்டோம்

இதை மறக்கக்கூடாதா???

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு முள்ளிவாய்க்காலே ஞாபகம் இல்லை. இந்தாளாவது அந்த மண்ணை நினைச்சுதே..! சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு கூத்தமைப்பாகி உள்ள நிலையில்... இப்படி ஆளாளுக்கு தனி மேடையில் ஆடுங்க. அதிலையாவது மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்குதோன்னு பார்ப்பம். :icon_idea::(:rolleyes:

எம்.கே. சிவாஜிலிங்கம்  அவர்களின் பல செயல்கள் முதலில் வருத்தமாகவும்

பின்னர் சரியாகவும் தெரிந்திருக்கின்றன.

 

எல்லாவற்றையும் குளப்புகிறாரே என்று தோன்றியவை

பின்னர்  நாரதர் வேலையாகவும் முடிந்திருக்கின்றன.

இவர் ஒரு  புரியாத புதிர் போல.

எனக்கு பிடிக்காத ஒருவர் என்று சொல்லத்தான் விருப்பம்

ஆனால்...............???

பார்க்கலாம்...

 

 

ஏன்  ராசா

எதையெல்லாமோ மன்னித்து விட்டோம்

இதை மறக்கக்கூடாதா???

இவரை மன்னிப்பவர்கள் ,ஏன் மற்றவர்களை துற்றுகின்றார்கள் .என்னைப்பொருத்தவரை தெரியாமல் தவருசெயபவர்களை மன்னிக்கலாம் ,அனால் தெரிந்துகொண்டு தங்களுடைய சுயநலத்திற்காக தெரிந்துகொண்டு தவறு செய்பவர்களை மன்னிக்கமுடியாது .

சம்பந்தனின் கால்தூ சுக்கும் சிவாஜிலிங்கம் தகுதியில்லை .

எம்.கே. சிவாஜிலிங்கம்  அவர்களின் பல செயல்கள் முதலில் வருத்தமாகவும்

பின்னர் சரியாகவும் தெரிந்திருக்கின்றன.

 

எல்லாவற்றையும் குளப்புகிறாரே என்று தோன்றியவை

பின்னர்  நாரதர் வேலையாகவும் முடிந்திருக்கின்றன.

இவர் ஒரு  புரியாத புதிர் போல.

எனக்கு பிடிக்காத ஒருவர் என்று சொல்லத்தான் விருப்பம்

ஆனால்...............???

பார்க்கலாம்...

 

 

ஏன்  ராசா

எதையெல்லாமோ மன்னித்து விட்டோம்

இதை மறக்கக்கூடாதா???

 

எல்லோரும் எதிர்காலத்தில் கூட்டமைப்பின் தலைமை பதவிக்கு ஆசைபட்டு நாடகம் நடக்கு மக்களுக்கு செய்வதாய் இல்லை .

 

அப்படியே கருணாக்கும் ஒரு மன்னிப்பு பார்சல் விசு அண்ணே :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பது எல்லாம் இந்திய நாடகம். அதில் ஆளாளுக்கு ஒரு பாத்திரம்.

 

1983 ஜூலை பின்னர் இந்தியா போட்ட திட்டம், புலிகளின் உறுதியினால் குளறுபடியாக, புலிகள் தோற்கடிக்க முடியாத கொரில்லா அமைப்பில் இருந்து, தோற்கடிக்கப் படக் கூடிய ஒரு நடை முறை ராணுவ அமைப்பாக, ஓடி மீண்டு கொரில்லா இயக்கமாக மாற முடியாத வளர்ச்சி அடையும் வரை காத்திருந்து, அழித்து, இப்போ தனது திட்டத்தினை தொடரும் காலமிது.

 

இங்கே மகிந்தரும், சம்பந்தரும், விக்கியும், சிவாஜியாரும் ஏதோ வகையில் பகடைகள்.

 

ஏதோ நம்ம சனம், துப்பாக்கி வெடிச் சத்தம் இல்லாமல் நிம்மதியாய் இருந்தால் சரி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நம்ம சனம், துப்பாக்கி வெடிச் சத்தம் இல்லாமல் நிம்மதியாய் இருந்தால் சரி.

 

துப்பாக்கி ஆட்லறி அடிக்கிறப்ப கூட ஒரு நிம்மதி இருந்திச்சுது. எங்கட நிலம் விடியத் தானே இத்தனை முழக்கம் என்று. இப்ப உதுகள் செய்யுற எதுவுமே அந்த நிம்மதியைக் கூடத் தருவதாக இல்லை..! இதிலும் துப்பாக்கி ஆட்லறி வெடிப்பது மேல்..!

 

7000 பெண்களை பாலியல் தொழிலாளர்களாக்கி சிங்களவன் மேய விட்டு அரசியல் செய்வதிலும்.. அவர்களைக் கரும்புலியாக்கி தேசத்தை மீட்டிருந்தால் அது எவ்வளவோ மேல்..! இன்றும் அந்தப் பெண்கள் சாகிறார்கள்.. தினம் தினம் எதிரிக்கு.. உடலை வைச்சு. இதே பெண்கள்.. அன்று மண்ணிற்காக மானத்தோடு மடிந்தார்கள்.. மாவீரர்களாக நிம்மதியாய் மடிந்தார்கள்..! இதில் எது திறம்...?????! :icon_idea::rolleyes:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் எதிர்காலத்தில் கூட்டமைப்பின் தலைமை பதவிக்கு ஆசைபட்டு நாடகம் நடக்கு மக்களுக்கு செய்வதாய் இல்லை .

 

அப்படியே கருணாக்கும் ஒரு மன்னிப்பு பார்சல் விசு அண்ணே :rolleyes:

 

நான் அப்படி வித்தியாசம் பார்க்க  விரும்பவில்லை

 

பாதிக்கப்பட்ட மக்கள்  அவர்களின் விதியை  

நிம்மதியான வாழ்வை

அவர்களே  தெரிந்தெடுத்த பிரதிநிதிகள் மூலம் தேடவேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றேன்

இதற்கு நாம்  பேசும் பழைய   குளறுபடிகள்  எந்த  பாதிப்பையும்  தந்துவிடக்கூடாது என்பதே எனது அவா.

இந்த வகையில் திரு முரளிதரனும்

அவரது கொள்கையை மக்கள்முன் வைத்து

அந்த மக்களால் மன்னிக்கப்பட்டு

அவர்களது பிரதிநிதியாக தேர்நந்தெடுக்கப்பட்டால்

அவர்குறித.தம் எனது கருத்த இப்படியே தான் இருக்கும்.

 

பொது நலம் சார்ந்து நாம் சிந்திக்கும்பொது எமது தனி நலன்களை ஒதுக்கவேண்டும்

அல்லது ஒதுக்கப்பட்டு விடும்...

முள்ளிவாய்க்காலில் மாண்ட சனங்களின் இழப்பையும் த்கியாகத்தையும் 

 

ஐந்து சதத்துக்கும் உதவாத இந்த மாகான சபை அரசியலுக்கு பாவிக்கும் அலங்கோல அரசியல்.

 

 

முப்பது வருட ஆயுதப்போராட்டம் முக்கால்வாசி தமிழ் அறிவுஜீவிகளை போட்டுதள்ளிவிட்டது அல்லது நாட்டை விட்டு துரத்திவிட்டது .

யுத்தம் முடிய இப்படி ஒரு நிலையம்  குளறுபடிகளும்  வரும் என்று  எதிர்பார்த்ததுதான் .இது நிரந்தரமானது அல்ல .

புலம் பெயர் கூட்டம் திருந்த கன காலம் எடுக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ஸ் திருந்தினாலென்ன.. திருந்தாவிட்டாலென்ன..

 

தாயகத்தில் மக்கள் தங்களுக்கு சரியென்ற ஒரு பாதையில் போகிறார்கள்.. அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளார்கள். சம்மந்தர் சிங்கக்கொடி பிடித்தபின் முன்பு பெற்றதைவிட அதிக சதவீத வெற்றி பெற்றிருக்கிறார். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். நாளைக்கே சம்பந்தனையும் விக்கியையும் பிடிக்கவில்லை என்றால், குதிரை கஜேந்திரனை முதல்வராக்கிவிட்டு போவார்கள். அவர்களது சொய்ஸ்.. அவர்களது வாழ்க்கை.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அப்படி வித்தியாசம் பார்க்க  விரும்பவில்லை

 

பாதிக்கப்பட்ட மக்கள்  அவர்களின் விதியை  

நிம்மதியான வாழ்வை

அவர்களே  தெரிந்தெடுத்த பிரதிநிதிகள் மூலம் தேடவேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றேன்

இதற்கு நாம்  பேசும் பழைய   குளறுபடிகள்  எந்த  பாதிப்பையும்  தந்துவிடக்கூடாது என்பதே எனது அவா.

இந்த வகையில் திரு முரளிதரனும்

அவரது கொள்கையை மக்கள்முன் வைத்து

அந்த மக்களால் மன்னிக்கப்பட்டு

அவர்களது பிரதிநிதியாக தேர்நந்தெடுக்கப்பட்டால்

அவர்குறித.தம் எனது கருத்த இப்படியே தான் இருக்கும்.

 

பொது நலம் சார்ந்து நாம் சிந்திக்கும்பொது எமது தனி நலன்களை ஒதுக்கவேண்டும்

அல்லது ஒதுக்கப்பட்டு விடும்...

கருணா, பிள்ளையான், கேபி, தயாமாஸ்டர் - துரோகிகள்

சம்பந்தன், சுமந்திரன், விக்கி - அரசின் அடிவருடிகள்

டக்ளஸ், - ஒட்டுக்குழு

மாகாணசபை 30 பேரில் 21 பேர் - விக்கியிடம் பதவிப் பிரமாணம் செய்த கயவர்கள் (அனந்தி உட்பட)

மீதி 9 பேரில் சிவாஜி முன்னாள் இந்திய அமைதிப்படை அடிவருடி, சித்தார்த்தன் முன்னாள் ஒட்டுக்குழு 

 

அடிவருடி, புல்லுருவி, பூங்குருவி எல்லோரையும் மைனஸ் செய்துவிட்டு பார்த்தால், இலங்கையில் பொது வாழ்க்கையில் ‘நம்ம நல்லவர்களில்’ இன்னும் உயிருடன் இருப்பவர்கள் யார்? ரெண்டு மூன்று பெயர்களை சொல்லுங்களேன் பிளீஸ்..

 

யாரும் இல்லாவிட்டால், பேசாமல் குதிரை கஜேந்திரனை மீண்டும் களம் இறக்குவோமா? அல்லது புலம்பெயர்ந்தவர்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வோமா? அதுவும் இல்லாவிட்டால் சீமான் சொல்வதுபோல தலைவர் வரும்வரை வெயிட் பண்ணி பார்க்கலாமா?

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

சரியா சொன்னீர்கள் சபேசன், சிங்க கொடிக்கு முன் கூட்டமைப்புக்கு விழுந்த்ஹதை விட இப்ப கூட.

கேட்டால் அது கூட்டமைப்புக்கு விழுந்த வாக்கில்லை இல்லாத புலிகளுக்கும், இயலாத தனிநாட்டுக்கும் மக்கள் போட்ட வாக்கு எனறு கத்சியளப்பார்கள்.

இந்த சிவாஜி முன்பு பார்வதியம்மாவின் பிணத்தை வைத்து ஆடியது போல் இப்போ முள்ளிவாய்க்காலில் போய் இன்னொரு சீப்பளிசிட்டி தேடுகிறார். இவர்தான் இவர்களின் தேசியநாயகர்.

  • கருத்துக்கள உறவுகள்

TNA யில் இணையமுன்பு இந்திய இராணுவம் (87-90) ,ஸ்ரீலங்கா அரசு போன்றவற்றின் கைக்கூலியாக செயறபட்டவர்,ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவாக செயறபட்டவர்  இதைச் சொல்லக்கூடாது .

 

 

இப்ப தான் சம்பந்தரின் முறை வந்திருக்கு. என்ன??

TNA யில் இணையமுன்பு இந்திய இராணுவம் (87-90) ,ஸ்ரீலங்கா அரசு போன்றவற்றின் கைக்கூலியாக செயறபட்டவர்,ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவாக செயறபட்டவர் இதைச் சொல்லக்கூடாது .

கொஞ்சிக் குலாவி தேனிலவு கொண்டாடிய பிறகு இதை சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருட ஆயுதப்போராட்டம் முக்கால்வாசி தமிழ் அறிவுஜீவிகளை போட்டுதள்ளிவிட்டது அல்லது நாட்டை விட்டு துரத்திவிட்டது .

யுத்தம் முடிய இப்படி ஒரு நிலையம்  குளறுபடிகளும்  வரும் என்று  எதிர்பார்த்ததுதான் .இது நிரந்தரமானது அல்ல .

புலம் பெயர் கூட்டம் திருந்த கன காலம் எடுக்கும் .

 

சாதரான அறிவு இல்லாத நாங்களே இதற்குள் வெட்டி ஓடி தப்பி விட்டோம் 
 
இதற்குள் தப்ப முடியாதவனை. எதை வைத்து அவன் அறிவுஜீவி என்று சொல்கிறீர்கள்??
அவர்களுடைய அறிவால் அவர்கள் கிழித்த கிளப்பு ஏதாவது மண்ணில் இருக்க வேண்டும்....
 
போரை எதிர்கொள்ள தெரியாது ஓடிவிட்டன் என்றும் சொல்கிறீர்கள்.......
முதல் வரியில் வாய்கூசாமல் அறிவுஜீவி என்கிறீர்கள்???
 
சுத்துமாத்து போல் தெரியவில்லையா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.