Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி

21 அக்டோபர் 2013

"மகாநாட்டிற்கு முன் TNAயின் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும்" மாவை

கொழும்பில் நடைபெறவுள்ள முதலமைச்சர்  மாநாட்டில் கலந்துகொள்வது என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸவரன் தீர்மானித்து உள்ளதாகவும் ஆனால் தமிழத் தேசிய கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா அதற்கு முன் தமிழ்த் தேசியனக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என எதிர்ப்பு வெளியிட்டு உள்ளதாகவும் கூட்டமைப்பின் அதி உயர் பீட மூவரணிக்கு நெருங்கிய முக்கியஸ்த்தர்  ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.

முதலமைச்சர் மாநாட்டுக்கு செல்வதாக இருந்தால் அதற்கு முன்னர் பேச வேண்டிய விடயங்கள் தொடர்பாக தமிழத் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அபிப்பராயங்கள் பெறப்பட வேண்டும் என மாவை சேனாதிராஜா கூறிய விடயங்களை விக்னேஸவரன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அந்த முக்கியஸ்த்தர் தெரிவித்தார்.

'ஒரு இலட்சத்தி 33 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சராக தெரிவான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை' எனவும் விக்னேஸவரன் கூறியதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள்  கூறுகின்றன.

இது தொடர்பாக தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகி கருத்து கூற விரும்பவில்லை எனவும் கூட்டமைப்பின் அதி உயர் பீட மூவரணிக்கு நெருங்கிய முக்கியஸ்த்தர்  ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.

இந்த நிலையில் முரண்டு பிடிப்பதற்கு விருப்பம் இல்லாமல் இருக்கும் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா அமைதி காக்க, தமிழரசுக் கட்சியில் தீவிர தமிழ்தேசியவாதிகளாக தம்மை நிலைநிறுத்தும் யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு பிரமுகர்கள் இதனையும் கண்டும் காணாது மௌனித்து இருப்பார்களா? என்ற கேள்வியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அபிமானிகள் எழுப்பி உள்ளனர்.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97929/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சு கிருஷ்ணகிரி. ஐயா இது சுப்புரீம் கோட் அல்ல. இது ஜனநாயகக் களம். நீங்க எவ்வளவு தான் மேல இருந்தாலும்.. கீழ இருக்கிற மக்களின் குரலை செவி மடுத்துத்தான் ஆகனும். அதுதான் ஜனநாயகம்..! இவருக்கு.. ஜனநாயகம் பற்றி படிப்பிச்சிட்டுத்தான் எனி பதவி வகிக்க விடனும் போல இருக்குது..! :icon_idea::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நெருங்கிய ஆதரவாளர்களும் நெருங்கிய வட்டாரங்களும்
எப்போதும் இப்படித்தான்.

விக்னேஸ்வரனைச் சர்வாதிகாரியெனக் காட்டுவதில் பின் நிற்பதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த நெருங்கிய முக்கியஸ்தர் என்பதை பகிரங்கமாக குளோபல் தமிழ் கூறுமா?

இவை எல்லாம் குட்டையைக் குழப்பும் நோக்கில் எழுதப்படும் செய்திகள்!

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ் குருபரனுக்கு ஊடக தர்மம் பற்றி நன்றாக தெரியும். இப்போ மறந்த்ஹுவிட்டார் போலும்.

விக்கியர் இப்படிச்சொன்னார் என்று யாரோ ஒருவர் முக்கியவர், முக்காதவர் சொன்னார் என்று போடுவது செய்தியல்ல, இதற்க்கும்பெயர் வதந்தி.

நாளைக்கு நானும் ஒரு வெப்சைட் தொடங்கி, வெள்ளையரை எல்லாம் கொல்லணும் என்று ஒபாமா சொன்னார் என்று ஒரு முக்கியஸ்டர் சொன்னார் எண்டு போட்டால். அது செய்தியாகுமா?

உங்கள் நம்பகத்தன்மையை காற்றில் பறக்கவிடாதீர்கள் குருபரன்.

யார் அந்த நெருங்கிய முக்கியஸ்தர் என்பதை பகிரங்கமாக குளோபல் தமிழ் கூறுமா?

இவை எல்லாம் குட்டையைக் குழப்பும் நோக்கில் எழுதப்படும் செய்திகள்!

வேறை யார்?. சரவணபவன் தான். அவருக்கு அங்கைய் வேலை இங்கால கேட்டதை ஆங்காலை சொல்லுறதுதான். இந்த அமைச்சு பிரிப்பு வேலையில்லும் அவர் செய்தது அது தான். உங்ளுக்கிருந்து சேர்ந்து தீர்மானித்துவிட்து பின்னர் தனது உதயன் ஆளுக்கு கதையை கசிய விட்டு,GTVக்கும் ஊதிப்போட்டு கூத்துபார்த்தவர். எல்லாற்றின் கூத்துகளும் ஒரு நாள் வெளியில் வந்து தான் முடியும். இவை போலே கணபேர் தமிழ் தேசிய கூடாரத்துக்க பூந்து கூத்து ஆடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ் குருபரனுக்கு ஊடக தர்மம் பற்றி நன்றாக தெரியும். இப்போ மறந்த்ஹுவிட்டார் போலும்.

விக்கியர் இப்படிச்சொன்னார் என்று யாரோ ஒருவர் முக்கியவர், முக்காதவர் சொன்னார் என்று போடுவது செய்தியல்ல, இதற்க்கும்பெயர் வதந்தி.

நாளைக்கு நானும் ஒரு வெப்சைட் தொடங்கி, வெள்ளையரை எல்லாம் கொல்லணும் என்று ஒபாமா சொன்னார் என்று ஒரு முக்கியஸ்டர் சொன்னார் எண்டு போட்டால். அது செய்தியாகுமா?

உங்கள் நம்பகத்தன்மையை காற்றில் பறக்கவிடாதீர்கள் குருபரன்.

உங்களுக்குத் தோன்றிய கருத்தே எனக்கும் தோன்றியது கோசன்.

குளோபல் தமிழ்ச் செய்தி நிறுவனம் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை, மாகணசபை தேர்தல் நேரத்தில் இவர்கள்  துரோகி புளொட் சித்தார்தனிற்க்கு அதிக முக்கியம் கொடுத்திருந்தார்கள்.  சித்தார்த்தனைப் பற்றி நான் எழுதிய நேர்மையான விமர்சனங்களை , பின்னூட்டங்களை அவர்கள் பிரசுரிக்கவில்லை. ஆனால் புலிகளைப் பற்றி மிகக் கேவலமாக பொய் பின்னூட்டங்களை எழுதுவதற்க்கு சிலர் இந்த தளத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம். எந்த தணிக்கையும் இன்றி பிரசுரிக்கப்படும்.(இப்போது எனக்கு தெளிவு வந்து விட்டது , குளோபல் தமிழ்ச் செய்தி நிறுவனம் உ ண்மையில் யாரென்று?)  தனக்கு மாகாணசபை அமைச்சர் பதவி தராததால் முதலமைச்சர் சி.வி மீது கடுப்பில் இருக்கும் துரோகி புளொட் சித்தார்த்தன் இப்போது இவ்வாறான கட்டுரைகளை தனது இணையத்தளத்தினூடாக வெளியிடுகிறார். குளோபல் தமிழ்ச் செய்தி நிறுவனத்தினர் ஊடக தர்மம் , ஊடக சுதந்திரம் பற்றியெல்லாம் அதிகம் பிதற்றுவார்கள் , இவையெல்லாம் தமது சுயரூபத்தை மறைப்பதற்காகவே, எனது பார்வையில் இவர்கள் ஊடக விபச்சாரிகள். கடந்த 2,3 நாட்களில் இவர்கள் முதலமைச்சருக்கு எதிராக எழுதிய கட்டுரைகளின் தலைப்பை பாருங்கள்.

"முதலமைச்சர் விக்னேஸ்வரன்: மர்மங்களின் மொத்த உருவம்! - எஸ். ஹமீத்"

"சட்டப் புலமைக்காக - முன்னாள் நீதியரசர் என்பதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை' -அ.நிக்ஸந்"

"'எய்தவர்களுடன் நல்லிணக்கம் - அம்புகளுடன் பகைமுரண்' கூட்டமைப்பின் ராஜதந்திரமோ? குமரன் கார்த்திகேயன்"

வடமாகண சபை சம்பந்தமான செய்தியொன்று.

கிரகப்பிரவேசம்

J%20%281%29%281%29.JPG
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழ். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம் இன்று செவ்வாய்கிழமை (22) காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக கைதடிப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை  வழிபாடுகள் நடைபெற்று அங்கிருந்து திருவுருவப் படங்கள் எடுத்து வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
J%20%282%29.jpgJ%20%283%29.JPG
J%20%284%29.JPG
J%20%285%29.JPG

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையாக இருந்தால் இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயல்.முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.தொடர்பே இல்லாத கனடா மாநாட்டைப் புறக்கணிக்க விக்கி கலந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்

புலவர் நீங்கள் சற்றுக்கடுப்பாக இருப்பதால் இது பொதுநலவாய தலைவர்கள் மகாநாடு என்று நினைக்கிறீர்கள் போலிருக்கு. நான் நினைக்கிறேன் இது மாதாந்தம் நடக்கும் மாகாண முதல் அமைச்சர்கள் சம்பந்தமானது என்றுதான். இதில் மேலும் ஒரு குழப்பம் இணைக்கப்பட்டிருக்கிறது. மத்திய மந்திரிகள் கூட்டத்தில் விக்கினேஸ்வரனை பங்கு பற்றவைத்து தமிழருக்கு எதிரான தீர்மானங்களில் அவரின் ஒப்புதல்களை பேறும் முயற்சியும். தமிழ் ஊடங்கங்களை எல்லாவற்றையும் ஒரு சாம்பார் போடுகிறார்கள்.

மாவை தமிழரசுக்கட்சியின் செயலாளர் ஆனாலும் முதலமைச்சர் சுயமாக செயல்ப்படத்தக்க விடையங்களை கூட்டமைப்பின் கீழ் இழுத்துவர முயலக்கூடாது. தேவை இல்லாமல் கூட்டமைப்புக்கு அதில் ஒரு சொல் வேண்டும் என்று கேடக்கக்கூடாது. சிங்கள நாட்டால் நடத்தப்பட்ட தேர்தல் இணக்க அரசியலுக்கு மட்டுமே. அதில் நின்று விக்கினேஸ்வரன் வென்றார். எனவே மாவை அவரிடம் இணக்க அரசிலை முழுவதாக புறக்கணிக்கும் படி கூறினால் அது பதவி விலகல் மூலம்தான் நிறைவேற்ற முடியும்.

விக்கினேஸ்வரன் போய் வரும் முதல் மந்திர்கள் கூட்டத்தில் என்ன முடிவுகள் செய்யப்படுகின்றன, அதன் தாற்பரியம் என்ன என்பதை தெரிந்த பின்னர் கூட்டமைப்பு கூடி விக்கினேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கலாம்.  அவர் முதலசைச்சராக இருக்கும் வரை அவர் அந்த கூட்டதுக்கு போனால் அது தானாகவே துரோகமாகாது. இதுவும் சிங்களத்தேர்தலில் நிற்பது போன்றதே. அதின் நன்மையும் உண்டு ஆபத்தான தீமைகளும் வர இடமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி

சொன்னது உண்மையென்றால்

மகிந்தவுக்கு இவர் எப்படி புத்தி  சொல்லப்போறார்???

133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி

சொன்னது உண்மையென்றால்

மகிந்தவுக்கு இவர் எப்படி புத்தி  சொல்லப்போறார்???

மகிந்தாவுக்கு புத்தி சொல்லவல்ல அவரை தெரிந்தது. ஏன் அவர் மகிந்தாவுக்கு புத்தி சொல்ல வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

வெல்வது கடினம் என்று உலகத்தாலும் வியக்கப்பட்ட புலிகளின் ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்டு அது தந்த பாடம்: :rolleyes:

எருமை வாங்கினால் அது பால் சுரக்கும்வரை காத்திரு!

சுரந்தால் அதனைத் தயிராக்கிக் கடைவதற்கு கை கொடு!

கைகொடுக்க இயலாவிட்டால் விலகியிரு!

எருமையை வாங்குமுன் நெய்விலை கூறாதே!

கூற முயன்றால் எருமை வாங்கும் பொருளே கொள்ளைபோய்விடும்!. :(

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவுக்கு புத்தி சொல்லவல்ல அவரை தெரிந்தது. ஏன் அவர் மகிந்தாவுக்கு புத்தி சொல்ல வேண்டும்?

நான் சொன்னது வோட்டுக்களின் எண்ணிக்கையை......

மகிந்த  எத்தனை லட்சம் பெற்றவர்

அவருக்கு..............???

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவுக்கு புத்தி சொல்லவல்ல அவரை தெரிந்தது. ஏன் அவர் மகிந்தாவுக்கு புத்தி சொல்ல வேண்டும்?

விசுகு அண்ணா இணக்க அரசியலுக்குள் போய்விட்டார் போலிருக்கு.. :D
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா இணக்க அரசியலுக்குள் போய்விட்டார் போலிருக்கு.. :D

அது ரொம்ப ரொம்ப இழுக்கும் ராசா

எனக்கு சரிவராது

நமக்கு

வெட்டு ஒன்று துண்டு  ரெண்டு

சிறிய  பாம்பு என்றாலும்

பெரிய  தடியால  அடிக்கணும்

இது தான் பிடிக்கும்

இது தான் சரி வரும்

இது தான்முடிவு தெரியக்கூடியது...... :D

  • கருத்துக்கள உறவுகள்

133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி

சொன்னது உண்மையென்றால்

மகிந்தவுக்கு இவர் எப்படி புத்தி  சொல்லப்போறார்???

விக்கினேஸ்வரனுக்கு கிடைத்த 133000 விருப்ப வாக்குகள் முக்கியம் அல்ல.

அவர் சிங்கள நாட்டிலேயே நீதிக்குச் சேவை செய்தவர்.சட்ட நுணுக்கங்களை அலசி ஆராய்ந்தவர்.

கூட்டமைப்பில் இருக்கும் சட்டத்தரணிகளின் வாதங்கள் அவரிடம் எடுபடாது.

இலங்கையில் அதிகம் படித்த தமிழர்களில் அவரும் ஒருவர்,

நாளை நாட்டின் நீதி அமைச்சராக வரும் தகுதிகள் எல்லாம் இருக்கின்றது.

அவரின் வழியில் சென்றால் விரைவில் தமிழர்களின் இனப்பிரச்சனை இலங்கையில் தீர்க்கப்பட்டுவிடும்  :icon_idea:

அதற்கும் அப்பால் அவர் ௬றியது உண்மையானால், அந்த 133000 வாக்குகளும் அவருக்காக மட்டுமே போடப்பட்டவையா?
  • கருத்துக்கள உறவுகள்

தவறைச் சுட்டிக்காட்டிய மல்லைக்கு நன்றி.செய்தியைச் தவறாகப் புரிந்து கொண்டு கருத்தெழுதியமைக்கு அனைத்து உறவுகளும் மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த செய்தியின் தலைப்பில் எவ்வளவு உண்மையுள்ளதென தெரியவில்லை.

 கூட்டமைப்பிற்கு விழும் வாக்குகள், சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக விழும் வாக்குகள். முதல் விருப்பிற்கு இருப்பவரில் பிடித்தவரை தெரிவு செய்வார்கள். விக்னேசுவரன் அல்லாது வேறு ஒருவரை நிறுத்தி இருந்தாலும் பெரும்பான்மைத் தமிழர்கள் கூட்டமைப்பிற்குதான் வாக்களித்திருப்பார்கள்.  2010 பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறையில் கூட்டமைப்பின் தரப்பில்  நின்ற பொடியப்புஹாமி பீயசேனா விற்கு அதிக்க வாக்குகள் கிடைத்தன. (அவர் கட்சி மாறியது வேறு கதை.)

தமிழர்களின் அபிலாஷைகளை மனத்தில் கொண்டு, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைமைகள் செயற்பட்ட வேண்டும். அல்லது அவர்களும் புறந்தள்ளப்படுவார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.