Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு - கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பச்சைக்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SL_Muslim.png

வடக்கு - கிழக்கு இணைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும்.'' 

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபைக் குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கிழக்கு மாகாண முஸ்லிம்கள் காட்டியுள்ள சமிக்ஞையைக் கருத்திற் கொண்டு சாதகமாக - பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டிய தார்மீகக் கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

"வடக்கு - கிழக்கு இணைப்புக்கு கிழக்கு மாகாணம் இணக்கம் தெரிவித்தால் நிச்சயம் அதை நிறைவேற்றுவோம்'' என வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு விடுத்துள்ள நிலையில், இதுதொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன என வினவியபோது

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

அரசியல் தீர்வு விவகாரம் மற்றும் சிறுபான்மையின சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்துவது தொடர்பான சாதகமான சமிக்ஞையை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் காட்டியுள்ளனர்.

13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி எமது பொறுப்புணர்வை வெளிக்காட்டியுள்ளோம்.

சிறுபான்மை மக்களின் நலன்கருதி நாம் நேசக்கரம் நீட்டியுள்ள நிலையில், அதனைப்  புரிந்துகொண்டு செயற்பட வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கிறது.  சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாக்க இரு தரப்பினரும் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்யவேண்டும்.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புக்கும் எமக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்படவேண்டும்.

அப்போதுதான் வடக்கு - கிழக்கு இணைப்பு உள்ளிட்ட அனைத்து விவ காரம் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்கலாம். இதற்காக நாம் நீட்டியுள்ள நேசக்கரத்தைப் பற்றிக்கொண்டு கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் - என்றார்.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9681:2013-10-22-07-15-24&catid=1:latest-news&Itemid=18

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பெயரில் கூட்டமைப்பு கக்கீமின் அரசியல் கையாக்கிங்க்கு இடம் கொடுக்க கூடாது.  அதை முஸ்லிம் மக்களிடம் நேராக எடுத்து செல்ல வேண்டும். அதில் கக்கீம் கூட்டமைப்புடன் பேச எந்த மக்கள் ஆணையும் பெறாதவர். கூட்டமைப்புடன் இணைய போவத்தாக மிரட்டி கக்கீம் மகிந்தாவிடம் இன்னொரு உப மந்திரி பதவி வாங்குவதற்கு துணை போய் சம்பந்தர் கக்கீமின் பேரங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அரசியல் தீர்வுகள் மக்களின் ஆணையின் பால் பட்டதாக இருக்க வேண்டும். லஞ்சத்தால் புழுத்துப்போன அஸ்வார், கக்கீம், பௌசி, பதியுதின் போன்ற ஈனத்தனமுள்ள மந்திரிகளின் பேரங்களாக இருக்க இடம் கொடுக்க கூடாது.  

கக்கீம் அரசில் இருக்கும் வரையில் தமிழரின் எதிரியாக மட்டுமே கொள்ள்ப்பட வேண்டும். அரசில் இருக்கும் வரைக்கும் கக்கீமுடன் கூட்டமைப்பு எந்த பேச்சு வார்த்தைக்கும் போக கூடாது. மு.கா முதலில் அரசில் இருந்து பதவி விலக வேண்டும். வடக்கில் நடந்து போல ஒரு தேர்தல் கிழக்கில் வரவேண்டும். கூட்டமைப்பின் பங்கு கடசியான நல்லிணக்கத்துக்கான இயக்கம் வடக்கு கிழக்கு இணைப்பைபற்றி மக்களிடம் ஆணை கேட்க வேண்டும். அதில் அவர்கள் வெற்றி பெறவில்லையானால் மட்டும் கக்கீமுடன் பேச வேண்டும்.  கூட்டமைப்பின் புதிய பங்குக்க் கட்சியை சிதைக்க கக்கீம் போடும் திட்டங்களுக்கு கூட்டமைப்பு பலியாகக் கூடாது. மு.கா என்பது பழைய சரித்திரமான கட்சி. அதன் மிரட்டல்களை கண்டு பயப்படத்தேவை இல்லை. தனது கடைசி நாட்களில் கக்கீம் மகிந்தாவால் சிறையில் வைத்து சாப்பாடு போடப்படப் போகும் ஒருவர். இப்போ மங்களவுக்கு, ரணிலுக்கு வந்த ஆபத்துகளை கண்டு பயந்து கக்கீம் புதிய திட்டங்களுடன் கூட்டமைப்புக்குள் ஓடிவந்து ஒழிக்கப்பார்க்கிறார். 

அதற்கு உதவியாக கக்கீம் கூட்டமைப்பை காலில் போடுவதற்கு வசதியாக மகிந்தாவிடம் சிறைக்கைதிகளை தனது பொறுப்பில் பெற்றிருக்கிறார். இவர்கள் கோடுகள் மூலம் குற்றம் செய்யாதவர்கள் என்பது நிரூபிக்கப் பட்டு நட்ட ஈட்டுடன் விடுவிக்கப் பட வேண்டியவர்கள். கக்கீம் கொள்ளை அள்ள கப்பல் மந்திரி கிடைக்கவில்லை என்பதால் சிறைகைதிகளை விடுவித்து பணம் உழைக்க பார்க்கிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பேரம்பேசலுக்கோ தெரியவில்லை. பிரபா - ஹக்கீம் உடன்படிக்கையின் அடிப்படையில்.. இந்த வகையான ஒத்துழைப்புக்களை எப்பவோ வழங்கத் தொடங்கி இருக்கனும்...! ஆனால் சுய இலாப அரசியலுக்காக ஹக்கீம் அவற்றைத் தவறவிட்டதால்.. இன்று முஸ்லீம் சமூகம் பேரினவாதத்தின் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில்.. சில அரசியல் சல சலப்புக்கள் உள்ள நிலையில்.. முஸ்லீம் காங்கிரஸின் இந்த அறிவிப்பு.. நியாயமானதா உண்மையானதா நிகழக் கூடிய ஒன்றா என்ற சந்தேகமே அதிகம் உள்ளது. அதனைக் கடக்க சம்பந்தப்பட்ட தமிழ் - முஸ்லீம் தரப்புக்கள் இணைந்து பேசி நடவடிக்கைகளை எடுத்து தமது உறவுகளை சந்தேகங்களுக்கு ஐயங்களுக்கு இடமளிக்காத வகையில் பலப்படுத்திக் கொள்வதே.. பேரினவாதத்தை சிறீலங்காவில் எதிர்கொண்டு சிறுபான்மை இனங்கள் உரிமை பெற்று வாழ உதவும்..! :icon_idea:

முஸ்லிம் தலைமைகளின் கழுத்து, மகிந்தர் கையில் இருக்கும் நிலையில், இவர்களது 'கதைகள்' எல்லாம் சீரியஸ் ஆக எடுக்க முடியாது நெடுக்கர்.

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு இது சரியான நேரம் இல்லை என்பது என்னுடைய கருத்து.

மாகாணசபைகளின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இரண்டு மாகாணசபைகள் இணைந்தாலும், அவைகள் இரண்டும் இணைந்து மத்திய அரசிடம் பெற்று வந்த நிதி குறைக்கப்பட மாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இப்படியான பல விடயங்கள் முதலில் நடக்க வேண்டும். அதற்காக இரண்டு மாகாணசபைகளும் ஒத்த கருத்தோடு போராட வேண்டும்.

இப்போது இருக்கின்ற அமைப்புமுறை மாறாமல் ஏற்படுகின்ற இணைப்பு பாதகமான பலன்களையே தரும்.

இணைவது தமிழ் பேசும் மக்களுக்கு நல்லது. நீங்கள் சொல்லும் அடிப்படை விடயங்களில் பேரம்  பேசலுக்கு பலம் சேர்க்கும்.

வெளி நாட்டு நிதி உதவிகள், நேரடியாக கிடைப்பதனை, தடுக்க முடியாமல், அரசு உறுதி செய்ய வேண்டிய நிலை வரும். அவ்வகை நிதி கிழக்கிலும் பார்க்க வடக்குகே கூடுதலாக கிடைக்கும். இணைவது கிழக்குக்கு தான் கூடிய நன்மை.

இருப்பினும் அவர்களது அறிக்கை இதய சுத்தியானதா என்பதே எனது கவலை.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு இது சரியான நேரம் இல்லை என்பது என்னுடைய கருத்து.

மாகாணசபைகளின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இரண்டு மாகாணசபைகள் இணைந்தாலும், அவைகள் இரண்டும் இணைந்து மத்திய அரசிடம் பெற்று வந்த நிதி குறைக்கப்பட மாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இப்படியான பல விடயங்கள் முதலில் நடக்க வேண்டும். அதற்காக இரண்டு மாகாணசபைகளும் ஒத்த கருத்தோடு போராட வேண்டும்.

இப்போது இருக்கின்ற அமைப்புமுறை மாறாமல் ஏற்படுகின்ற இணைப்பு பாதகமான பலன்களையே தரும்.

நான் நல்ல செய்தி  என்று எழுதியது

இந்த கருவுக்குத்தான்.

ஆனால்

இந்த விடயம் மிகவும் ஆபத்தானது

சிங்களவருடன் பேசுவதைவிட 

நரித்தனங்களும்

முதுகில் குத்துதல்களும்

குழிபறித்தல்களும் அதிகம் கொண்டது............ :(

முஸ்லீம் காங்கிரசின் பச்சைக் கொடிகாட்டலின் பின்னால் அவர்களின் சுயநல அரசியல் தானுள்ளது .TNAவடக்கில்  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் சேர்ந்து செயற்படுவதை இல்லாமல் செய்வதற்க்காக இருக்கலாம் ..

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு இது சரியான நேரம் இல்லை என்பது என்னுடைய கருத்து.

மாகாணசபைகளின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இரண்டு மாகாணசபைகள் இணைந்தாலும், அவைகள் இரண்டும் இணைந்து மத்திய அரசிடம் பெற்று வந்த நிதி குறைக்கப்பட மாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இப்படியான பல விடயங்கள் முதலில் நடக்க வேண்டும். அதற்காக இரண்டு மாகாணசபைகளும் ஒத்த கருத்தோடு போராட வேண்டும்.

இப்போது இருக்கின்ற அமைப்புமுறை மாறாமல் ஏற்படுகின்ற இணைப்பு பாதகமான பலன்களையே தரும்.

13ம் திருத்ததின் கீழ் மாகாணங்களை இணைப்பது வேறு. 13ம் திருத்ததின் கீழ் வடக்கு-கிழக்கு இணைப்பு வேறு.

சபேசனின் எழுது அவர் இந்த வேறுபாட்டை உணரவில்லை என்றதை காட்டுகிறது. தனி மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கும், இணைந்த வடக்கு கிழக்குக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி இருக்கிறது.

மாகாணகளை பலமாக்குவது என்பது வெறும் கனவுக் கதை. அதற்கான பொறிமுறை எங்கும் இல்லை. தனிய 13ம் திருதத்தை நீக்க ஒரு தெரிவுக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உண்மையான நோக்கத்தை மகிந்தா தொடர்ந்து மறைத்துக் கொண்டு இதை தமிழர்களுக்குகான தீர்வுக்கான குழுவாக காட முயல்கிறார்.

இணைப்பு இரணடு வழியாக முடியும். J.R.ரிடம் இந்தியா பெற்றிருந்தது மாதிரி ஜனாதிபதி இணைத்து வாக்கெடுப்பால் ஊர்ஜிதம் செய்யப்படலாம். மகிந்தா இந்த மேலதிக அதிகாரம் இணைந்த மாகாணத்துக்கு போய் சேராமல் இருப்பதற்கா JVP க்கு எலும்புத்துண்டை போட்டு வடக்கு கிழக்கை பிரித்து வைத்தார். இதனால் இரண்டாவது வழியாக மாகாணங்கள் கேட்கும் போது வடக்கு கிழக்கு இணைப்பட்டு ஆளுனர் அதிகாரம் மட்டுப்படுத்தபட்ட மாகாணம் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் விக்கினேஸ்வரன் விடுத்த கோரிக்கை. 

மு.கா பஸ்சை தவறவிட்ட கட்சி. இதை இனி மாகாண இணைப்பில் இடம் கொடுத்து அழைத்து வரகூடாது. மேலும் சென்ற கிழ்மை சல்மான் குதிஸை சந்திக்க முன்னர் கக்கீம் மாகாணங்களை இணைத்து இந்தியா முஸ்லீம்களுக்கு பாரிய துரோகம் செய்த்தாக கூறியிருந்தவர். அவரின் இணைப்புப் பேச்சு நிச்சயமான அரசுடன் இணைந்த சதியே. கூட்டமைப்பு, தான் கொடுத்த புதிய வாக்குறுகளை தனது புதிய பங்காளிக்கட்சியுடன்தான் வைக்க வேண்டும். அதை கிழக்கில் வெல்லவைப்பது இலகு. என்வே மு.காவை பதவி விலகவைத்து தேர்தல் நடத்தி நல்ல்லிணக்கத்துக்கான இயக்கத்தை கிழக்கில் பதவியில் இருத்த வேண்டும். அது வேறு. 

முன்னர் வடக்கு கிழக்கை பிரித்தது சரி என்று எழுதி வந்தவர்கள் இப்போது இணைக்க நாள் முகூர்த்தம் நன்றாக இல்லை என்றும் எழுதுகிறார்கள். அதன் நோக்கம் இந்தியாவால் முடக்கப்பட்டிருக்கும் 13ம் திருத்ததை நீக்குவதறகான தெரிவுக் குழுவுக்கு தொழில் பட ஒருஇடம் பெற்றுக்கொடுத்துவிட்டால் அதன் பின்னர் 13ம் திருத்தத்தை அழித்துவிடலாம் என்று எதிர் பார்க்கிறார்கள். அப்போது 13ம் திருத்தத்தின் கீழ வரும் வடக்கு-கிழக்கு இணைப்போ அல்லது சந்திரசிறி இல்லாத மாகாணமோ என்று ஒன்றுக்கும் பேச்சு வராது என்று நினைக்கிறார்கள். 

நமக்கு அரசின் நிதி தேவை இல்லை. வடக்கு-கிழக்கை இணைக்கும் போது வரும் புதிய அரசியல் அமைப்பு வெளிநாடுகளிடம் தமிழ் மாகாணம் தேவையான கடங்களை பெற வேண்டிய அதிகாரங்களை கொடுக்கிறது. இவை ந்டக்க தேவை ஒரே ஒரு நிலமை கிழக்கில் மு.கா தோற்கடிக்கப்பட்டு முல்லீங்களுக்கு முன்னேற்ற்ங்களை கொண்டுவரத்தக்க கட்சி சில அங்கத்தவர்களை பெறுவதே. மேலும் சென்ற கிழக்கில் ந்டந்த தேர்தலில் அதில் இருந்த தில்லு முல்லுகளால் அந்த தேர்தல் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும். 

தனி மகாணங்களுக்கு உள்ள அதிகாரங்களுக்கும், இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குமான அதிகாரங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி இருக்கிறது என்பதை விளங்கப்படுத்த முடியுமா?

முஸ்லீம் காங்கிரசின் இந்த முடிவில் பின்னால் அவர்களின் சுயநல அரசியல் உள்ளது இவர்கள் எப்போதும் குருவிச்சை மரம்போல தமிழர்களின் அரசியலில் ஒட்டியே அரசியல் நடத்தி வந்திருக்கின்றார்கள் என்பதை கடந்தகாலம் உணர்த்துகின்றது 

தனி மகாணங்களுக்கு உள்ள அதிகாரங்களுக்கும், இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குமான அதிகாரங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி இருக்கிறது என்பதை விளங்கப்படுத்த முடியுமா?

நடேசன் சத்தியேந்திரவின் விளக்கங்கள் பலரால் யாழில் பதியப்பட்டிருக்கு.  அதில் உறவு சுண்டலினது இணைபும் ஒன்று என்று நினைக்கிறேன். அது பொது வாசனைக்காக இலகுவாக்கப்பட்ட 13ம் திருத்தமும் மாகாண சபையுமானது.

இணந்த வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்கு மற்றைய மாகாணங்களை விட விசேட அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதே என்னுடைய அறிதலாக இருக்கிறது. ஒப்பந்தத்தின் போது சில வாய்மொழி உத்தரவாதங்கள் வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் எழுத்தில் அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

இது பற்றிய மேலதிக மற்றும் தகவல்கள் இணைப்புக்களை தந்தால் நன்றியுடையவனாக இருப்பேன்

இதில் மட்டும் அல்ல பல விடையங்களில் உங்கள் அறிதல் காணாது.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபை தேர்த்தலின் பின் இரு கட்சிகள் இணைந்தே ஆட்சி அமைக்க முடியும் எனும் நிலையில் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சம்பந்தனுடன் பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறி விட்டு தொலைபேசியை கூட எடுக்காமல் இருந்து விட்டு அரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்த ஹக்கீம் சந்தர்ப்பவாதி.

மல்லையூரான்! நீங்கள் முடிந்தால் அது பற்றிய தகவலை தாருங்கள். ஒரு பொய்யான செய்தியை வழங்கி விட்டு, என்னுடைய அறிதல் காணாது என்று புலம்ப வேண்டாம்.

மல்லையூரான்! நீங்கள் முடிந்தால் அது பற்றிய தகவலை தாருங்கள். ஒரு பொய்யான செய்தியை வழங்கி விட்டு, என்னுடைய அறிதல் காணாது என்று புலம்ப வேண்டாம்.

நாக்கில் நரம்பில்லாதவர்கள் தாங்கள் அறியாதவற்றை பொய் என்கிறார்கள். தாங்கள் சொல்வது எழுவது எல்லாம் பொய்களாக இருக்க மற்ற்வனை பொய்யன் என்பது கடை கெட்ட ஈனத்தனம். கேடு கெட்ட இலங்கை அரசின் தந்திரம் அது.  

நான் அல்ல புலம்பியது. நீங்கள்தான் மாகாணங்களை பலமாக்கபோவதாக பொய்யும் அதுவரை இணைப்பு கூடாது என்று புலம்பியதும். இது வரையில் எழுதியது எல்லாம் தான் அறியாதவற்றை என்பது தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.  எல்லோருக்கும் தெரியும் 13ம் திருத்தத்தை இரத்து செய்யத்தான் தெரிவுக்குழு என்று இதில் எங்கே மாகாணங்களை பலமாக்கும் ஏமாற்று உள்ளடங்குகிறது. இருக்கும் காணி பொலிஸ் அதிகாரங்களை பயன்படுத்தமுடியால் வடக்கில் ஆமி நிறைந்திருக்கு. 

மற்றவனை முட்டாள் ஆக்கா தான் ஏதோ வாய் மொழி உத்தரவாதங்கள் கேள்விப்பட்டத்தாக எழுதுகிறார்கள். சுத்த பொய் அது. எங்கே? யார்? அரசியல் அமைப்பு சட்டங்களை வாய் மொழியாக கொடுக்கிறார்கள்? என்னா கோமாளித்தனமான பொய்.

குறைந்த பட்சம் சத்தியேந்திரா அளவு அரசியல் அமைப்பு சட்டத்தரணி தான் அல்ல என்பதை தன்னும் ஏற்க தாயார் இல்லை. 

மல்லையூரான்! கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள். 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட மாகாணசபைகளில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு என்று விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறதா?

ஆம் என்றால், அவை எவை?

அனைத்து மாகாணசபைகளுக்கும் ஓரே அதிகாரங்களே வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதான் நான் அறிந்த விடயம். இல்லையென்றால் அது பற்றிய தகவல்களை தயவு செய்து தாருங்கள்.

உங்கள் அறிதல் பல விடையங்களில் காணாது.

எப்பவும் உங்கள் கேள்விகள் மட்டும்தான் முக்கியமா?

மாகாண சபைகளை பலமாக்கல் என்றால் என்ன?

அதை யார் செய்ய போகிறார்கள்?

அதை செய்ய யார் அதிகாரம் கொடுக்கிறார்கள்?

அது செய்து முடிய எவ்வளவு காலம் எடுக்கும்?

அதையும் மாகாணங்கள் இணைப்பையும் ஒரே நேரத்தில் செய்யும் போது எந்த சூசியன் வந்து பூமியை மோதும்? 

முதல் எழுதிய பொய்களுக்கு முதல் விளக்கம் வேண்டும்.

மல்லையூரான்! அதுதான் எனக்கு அறிதல் காணாது என்று சொல்லி விட்டீர்களே! பிறகெதற்கு என்னிடம் இத்தனை கேள்விகள்?

எல்லாம் அறிந்த நீங்கள் நான் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுடன் இணைந்து கிழக்கில் ஆட்சியமைக்க மறுத்து அரசுடன் இணந்தி செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ் இப்படிச் சொல்லுவது வேடிக்கையானது. இதக் கூற்றின் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு ஏதோ அரசியல் நன்மை இருக்கிறது போலிருக்கிறது. வடக்கை கிழக்குடன் இணக்க முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் விரும்பாது!

வெற்று பேச்சுகளும் எழுத்துக்களும் நடை முறையாகாது .

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறையே வெற்றுப்பேச்சுக்களும்,எழுத்துக்களுமாகவே இருக்கிறது.

மல்லையூரான்! அதுதான் எனக்கு அறிதல் காணாது என்று சொல்லி விட்டீர்களே! பிறகெதற்கு என்னிடம் இத்தனை கேள்விகள்?

எல்லாம் அறிந்த நீங்கள் நான் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லலாம் அல்லவா?

தேவை இல்லாமல் வந்து கூட்டமைப்பின் மாகாண இணைப்பு முயற்சிகளுக்கு ஆப்பு வைப்பதற்கு "மாகாண பலமாக்கல்" என்ற பொய்யை எழுதிவிட்டு தான் எழுதியது பொய் என்பது வெளிக்கிட்டவுடன் மற்றவர்கள் சொல்வதை பொய் என்று நாக்கு தெறிக்க கூறிவிட்டு அதுவும் பிழைக்கிறது என்பதை கண்டு அதை சில கேள்விகள் கேட்டு பொயாக்கிவிட முடியாதா என்று நப்பாசை வைப்பது அப்பவித்தானம்.

நாகேஸ் திருவிளையாடலில் செய்வது போல கேள்வி மட்டும் நீங்கள் கேட்டுவிட்டு எங்களை பொய்யர் என்று லேபல் குத்திவிட்டு போக நாங்கள் என்ன அவ்வளவு இளப்பமாமா?

மகிந்தா நலிந்து குழைந்து ஆயுதம் இந்தியாவிடம், மேற்கு நாடுகளிடம் வாங்கிவிட்டு வால் காட்டியது மாதிரி வால் காட்ட நான் ஒன்றும் HOMELESS போல் பிச்சை எடுத்துகொண்டு திரியவில்லை. 

கருத்துக்களம் என்றால் சும்மா வந்து பொய்ய்கள் எழுதுவது தவிக்கப்பட வேண்டும். நான் எனது மேற்கோளை தரவவேண்டுமாயின் இன்று இரண்டு விடையங்கள் நிபந்தனை இல்லாமல் ஒத்த்துக்கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் பொய் குற்றச்சாட்டுகளை கண்டு நான் ஏமாறப்போவத்தில்லை.   

1. "நான் கூட்டமைப்பின் மாகாண இணைப்பு என்ற முயற்சிகளை குழப்ப 'மாகாண பலமாக்கல்" என்ற புதிய பொய்களுடன் வந்து இறங்கினேன். அதில் விளங்க வைக்கத்தக்க உண்மை எதுவும் என்னிடம் இல்லை. நான் அறிந்தவரையில் மாகாண இணைப்பை தாமதப்படுத்த வேண்டிய நியாயத்தை நான் எங்கிருந்தும் எடுத்துவந்து இங்கே காட்ட முடியாத நிலையில் இருக்கிறேன்"

2." நான் அறியாதவற்றை பல முறை தெரியும் மாதிரி யாழில் காட்டி வந்தேன். இனிமேல் யாழில் அந்த முயற்சிகளை தொடர மாட்டேன். "

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.