Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைப்பிரியா படுகொலை தொடர்பில் விசாரணை நடத்தவேண்டியது அரசின் கடமை: சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். எனவே, உரிய விசாரணைகளை முன்னெடுத்து அதைச் செய்யவேண்டியது இலங்கை அரசின் கடமையாகும். இதைத் தட்டிக்கழித்தால் பாரதூரமான விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும்.'
 
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றுத் தெரிவித்தார்.இசைப்பிரியா தொடர்பில் சனல்4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள காணொலியை இலங்கை அரசும் இராணுவமும் நிராகரித்துள்ளன.
 
இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.சனல்4 வில் இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் வெளிவந்த காட்சிகள் அனைத்தும் உண்மையானவை என்று அதனை பார்த்த அனைவரும் கூறுவதாகக் குறிப்பிட்டார்.

இந்தியா உட்பட சர்வதேச  நாடுகள் இந்த கொடூரத்தை வன்மையாகக்  கண்டித்துள்ளன. எனவே, சனல்4 வெளியிட்ட காணொலியை போலி என கூறி அரசு நிராகரிக்க முடியாது. இது சனல் 4 விடயமல்ல, இசைப்பிரியா படுகொலை விடயம் என்பதை அரசு மனதில் கொள்ள வேண்டும் என்றார்.
 
இது தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்படவேண்டும்; உண்மைகள் கண்டறியப்படவேண்டும்; இது இலங்கை அரசின் கடமையாகும். இதை தட்டிக்கழித்தால் பாரதூரமான பின்விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும்.நாட்டில் மனித உரிமைகள், சட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று இலங்கை அரசு கூறுகின்றது. இது உண்மையானால் இசைப்பிரியா வின் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்திய உண்மையை கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
அரசு ஏன் இதற்கு தயக்கம் காட்டுகின்றது? இந்தப் படுகொலை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பார்வை இலங்கைப் பக்கம் திரும்பியுள்ளது. எனவே, இசைப்பிரியாவின் குடும்பத்தினருக்கும் தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இதிலிருந்து அரசு தப்பவே முடியாது'' என்றும் அவர் கூறினார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98534/language/ta-IN/article.aspx

நீதியான விசாரணையை அரசு நடத்தும் எண்டு இப்பவும் நம்ப உலகத்தில் ஆக்கள் இருக்கிறார்கள் எண்டது மகிழ்சியே... 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் இப்பதான் நித்திரை கொண்டு முழிச்சு இருக்கார் போல...

 

நன்றி தலைவரே. நீதிக்கான போராட்டம் தற்போது தங்கள் கையில். இந்திய ரவுடிகள் பிளாக் மெயில் பண்ணுவார்கள். தெரியும். தங்கள் சாமர்த்தியத்தாலும் ராஜ தந்திரத்தாலும் அதனை சமாளித்து நீதி வெற்றிபெற செய்யுங்கள் தலைவரே. சிங்களவர்களை நம்பலாம். ஆனால் இந்திய ஆளும் வர்க்கத்தை முழுமையாக நம்பி ஏமாந்துவிடாதீர்கள். உலக நாடுகள் எல்லாவற்றிடனம் சுமுக உறவை பேணுங்கள்.  இந்திய ஆளும் சாக்கடைகளுக்காக மேற்கு நாடுகளை பகைத்துவிடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு எதிராக கொத்து குண்டுகள் போட்டதில் இருந்து குமுதினி படகு கொலை வரை அரசு ஒரு நீதியான விசாரணையை மேற்கொண்ட படியால் இசைப்பிரியா விடயத்திலும் ஒரு நீதியான விசாரணை நடைபெறும் என 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட சம்பந்தர் ஐயா சொன்னால் நியாயமாக தான் இருக்கும்.தமிழ் மக்கள் கவலைப்பட தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு எதிராக கொத்து குண்டுகள் போட்டதில் இருந்து குமுதினி படகு கொலை வரை அரசு ஒரு நீதியான விசாரணையை மேற்கொண்ட படியால் இசைப்பிரியா விடயத்திலும் ஒரு நீதியான விசாரணை நடைபெறும் என 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட சம்பந்தர் ஐயா சொன்னால் நியாயமாக தான் இருக்கும்.தமிழ் மக்கள் கவலைப்பட தேவை இல்லை.

 

 

மகிந்தவுக்கே

சந்தேகமாக இருக்கும்

இன்னும் இவர்கள் ஏமாறுகிறார்களே என...

இலங்கை அரசு ஒரு நீதியான விசாரணையை நடத்தும் என்று சம்பந்தவர் நம்புவதாக இந்தச் செய்தியில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

தேவைக்கேற்ப சொல்லியிருக்கிறார்.. ஆனால் தாமதமாகச் சொன்னபடியால் யாரையோ பகைக்காமல் இருக்க பொறுமை காத்துள்ளார்.. அந்த யாரோ சிதம்பர வடிவில் கண்டித்துவிட இவரும் களத்தில் குதித்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கண்டித்த படியால்(உத்தியோக பூர்வமாக அல்ல)சம்பந்தரும் அதுவரை காத்திருந்து மிகவும் மென்மையான அறிக்கை ஒன்றை விட்டுள்ளார் அவ்வளவுதான் இதை சிறிலங்கா அரசு கருத்தில் எடுக்காது.சம்பந்தரும் கொஞ்ச நாளில் இதை மறந்து விடுவார்.

சம்பந்தரின் அறிக்கை மென்மையானது அல்ல.  அது ஒரு கோரிக்கை அல்ல. ஒரு இணக்கப் பேச்சுவார்த்தை அல்ல. அரசாங்க கடமையை வலியுறுத்தும் சட்ட பூர்வ வழக்காடல்.

 

இது தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்படவேண்டும்; உண்மைகள் கண்டறியப்படவேண்டும்; இது இலங்கை அரசின் கடமையாகும். இதை தட்டிக்கழித்தால் பாரதூரமான பின்விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும்.

 

 

இது சம்பந்தர் தனிப்பட விடும் இசைப்பிரியாவின் கொலை சம்பந்தமான கண்டன அறிக்கை அல்ல. கூட்டமைப்பின் உத்திய பூர்வ நிலைப்பாடு ஏன் அப்படியாக இருக்கிறதென்பதற்கான விளக்கம்.

 

இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.சனல்4 வில் இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் வெளிவந்த காட்சிகள் அனைத்தும் உண்மையானவை என்று அதனை பார்த்த அனைவரும் கூறுவதாகக் குறிப்பிட்டார்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ தான் மயக்கம் தெளிந்து எழும்பி இருக்கிறார் போல

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் சொல்லாவிட்டால் ஏன் சொல்லவில்லை என்று ஒரு பிரச்சனை. சம்பந்தன் சொன்னால் ஏன் இப்ப சொல்கிறான் என்று ஒரு பிரச்சனை. இப்படியே எங்களுக்குள் இருக்கிற பிரச்சனைகளை கூட்டிக்கொண்டு நான் பெரியவன் நீ பெரியவன் என்று சண்டை போட்டுக்கொண்டு இருப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன் சொல்லாவிட்டால் ஏன் சொல்லவில்லை என்று ஒரு பிரச்சனை. சம்பந்தன் சொன்னால் ஏன் இப்ப சொல்கிறான் என்று ஒரு பிரச்சனை. இப்படியே எங்களுக்குள் இருக்கிற பிரச்சனைகளை கூட்டிக்கொண்டு நான் பெரியவன் நீ பெரியவன் என்று சண்டை போட்டுக்கொண்டு இருப்பம்.

இனி வரும் ஜயோ நான் அப்படி அறிக்கை விடவில்லை ராஜபக்சா இந்த டக்கு அறிக்கை விட்டதால் என் அபிமானி நக்கீரன் தான் விட்டு இருக்கார் என் பெயரில்   :icon_mrgreen:  :icon_mrgreen: :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நக்கீரா நீங்கள் செய்யும் லீலைகள் நாமறிவோம்.... இது நாராயகென்பிட்டி அன்ரசன் தொடர் அடுக்கு மாளிகை காலமல்ல. :icon_mrgreen:  :icon_mrgreen: :icon_mrgreen:  

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி அறிக்கை விட்ட பிறகுதானே சம்பந்தர் விட்டிருக்கிறார்.அதுவும் சிறிலங்கா அரசே விசாரணை நடத்த வேண்டுமாம். எல்லோரும் சர்வதேச விசாரணையைக் கோரும் போது இவர் எதற்கு குற்றஞ்செய்தவனே விசாரணை செய்ய வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.ஒரு அரசியல் தலைவரின் அறிக்கைக்கு பலரும்பலவிதமான கண்ணோட்டத்துடன் விளக்கம் கொடுக்க முயற்சிப்பார்கள்.ஆகவே அறிக்கை விடும்போது தெளிவாக மயக்கமற்ற அறிக்கையாக இருக்க வேண்டும்.டக்கியே அறிக்கை விட்டுவிட்டார் நாம சும்மா இருக்கலாமா?என்று ஒப்புக்கு அறிக்கை விடக்கூடாது.

இலங்கை அரசு ஒரு நீதியான விசாரணையை நடத்தும் என்று சம்பந்தவர் நம்புவதாக இந்தச் செய்தியில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?

இது ஒரு பெண்ணுக்கு தனிப்பட நடந்த கொடூரம் அல்ல... இனத்துக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையின் ஒரு உதாரணம் , ஆதாரம் ...

தேவை வெறும் அரசியல் திருகுதாளங்கள் அல்ல...

இதையே சம்பந்தனின் மகளுக்கோ மனைவிக்கோ சகோதரிக்கோ நடந்த போதும் இப்படிதான் அறிக்கை விடுவாராக இருந்தால் அவரின் அரசியல் சாணக்கியத்தை மதிக்கிறேன்...

Edited by தயா

தமிழ் பா.உ.களின் தலைவரான சம்பந்தர் இலங்கை அரசை இதை விசாரிக்க சொல்லாவிட்டால் யார் இனி அதை கேட்பார்கள். முறைப்பாடு செய்யப்படாதுவிட்ட குற்றத்தை விசாரிக்கவில்லை என்று குறை கூற முடியுமா?

 

எல்லாவற்றையும் ஒன்றாக சாம்பார் போட்டர் முன்னால் போக முடியாது. 

 

சில சமயங்களில் கூட்டமைப்பு நித்திரை தூங்க்கியது. வலி வடக்கு இராணுவத்தின் காணி பறிப்புக்களின் போது எதிர்க்க வேண்டாம் என்று கூட்டமைப்பு அறிவுரை கூறியது. இங்கே எல்லோரும் சர்வதேச விசாரணை வேண்டும் என்னும் போது சம்பந்தர் இலங்கை அரசை விசாரிக்க சொல்லி கேட்கிறார்.

 

இசைப்பிரியாவுக்கு நடந்த கொலையை அரசு தனது பாதுகாப்பு இணையத்தளத்தில் போரில் இறந்த்தாக போட்டிருக்கும் போது பாதுகாப்பு தளம் தவறு என்றும் சட்ட ரீதியாக விசாரிக்கும்படியும்  தமிழ் பா.உ.க்கள் கேட்க வேண்டும். இசை பிரியா ஊடகவியலார் என்ற முறையில், பாலசந்திரனின் கொலை போல்லாமல், அவரின் உறவினர்களில் யாராவது இலங்கை கோடுகளில் ஒரு வழக்கும் தாக்கல் செய்து பார்க்கலாம். 

 

சம்பந்தர் வெளிநாட்டு அதிகாரிகளை சந்திக்க போபவர். இலங்கையின் பாரபட்சங்களை அவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியவர். அப்படி ஒரு தடவையில் அவர் "இசைபிரியாவின் கொலையைக்கூட இலங்கை அரசு விசாரிக்கவில்லை" என்று கூறும் போது மறு பக்கத்தில் உள்ளவர்கள் "யார் அந்த இசை பிரியா ?" என்றோ " இதில் இலங்கை அரசு உங்களுக்கு என்ன சொல்லியது" என்றோ கேள்விகள் எழ இடம் இருக்க கூடாது.

 

மக்ரேயை தொடந்து இசைபிரியாவின் கொலையை புலம் பெயர் மக்கள் பிரசித்த படுத்தாவிட்டல் சர்வதேச அதிகாரிகளுக்கு இசைப்பிரியாவின் கொலை என்றால் என்ன என்பது தெரியவராது. அரசாங்கம் ந்டவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோராமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க விலை என்று கூட்டமைப்பு வெளியே சென்று சொல்லவும் முடியாது. இதில் இருபக்கமும் முட்டி மோதி தங்கள் பலங்களை வீணாக்காமல் தங்கள் பக்க கடமைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். புல பெயர் மக்களின் கடமை இதை சர்வதேச நாடுகளில் பிரசித்த படுத்துவது. அது கூட்டமைப்பினது அல்ல. 

அருச்சுன் . Gari ஆகியோர் மார்க்கத்தில் சுமந்திரனின் கூட்டத்திற்கு போய் இருந்தார்கள். அவர்களிடம் நான் திண்ணையில் கேட்ட கேள்விகளில் ஒன்று "கூட்டத்தில் யாராவது 'கூட்டமைப்பு இசைப் பிரியாவின் கொலை சம்பந்தமான காணொளிப்பதிவை அரசிடம் எடுத்து செல்வார்களா?' எனக் கேடார்களா?" என்பது. எப்படியான விசாரணையை யதார்த்தமாக உருவாக்க முடியும் என்பதை விட அரசிடம் அதை விசாரிக்கும் படியான முறையான முறைப்பாடு ஒன்று, உரிமை அல்லது பொறுப்பு உள்ளவர்களால் விடுக்கப்பட வேண்டும்? 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131391&p=954863

யாரோ ஒருத்தர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன சம்பந்தருக்கு வக்காலத்து வாங்கும் ஆக்கள் சம்பந்தர் அரசங்கத்திட்டை ஏதோ எழுத்து மூலம் விசாரணை கோரியது போல வரிஞ்சு கட்டுறது ஆச்சரியம் தான்...

Edited by தயா

யாரோ ஒருத்தர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன சம்பந்தருக்கு வக்காலத்து வாங்கும் ஆக்கள் சம்பந்தர் அரசங்கத்திட்டை ஏதோ எழுத்து மூலம் விசாரணை கோரியது போல வரிஞ்சு கட்டுறது ஆச்சரியம் தான்...

அது கூட்டமைப்பின் நிலைப்பாடு. நிலைப்பாட்டை பிழையாக அறிக்கை விட்டத்தாக மேலே உள்ள கருத்துக்கள் மாறி விளக்கம் கொடுத்து பதில் எழுதியிருக்கிறார்கள்.

 

இந்த கருத்து அவர்களுக்கு எதிர் வழத்தில் பார்க்கிறது. கூட்டமைப்பின்ன் நிலைப்பாட்டை செய்து முடித்த காரியமாக வைத்து கருத்து எழுதப்பட்டிருக்கிறது.

 

உண்மை, தனிய அது கூட்டமைப்பின் நிலைப்பாடு. அதை எப்படி செயலில் போடுவது என்பதை உள்ளே விவாதித்து செயல் முறையில் போட வேண்டும். உடனே ஜனாதிபதிக்கு போன் அடிக்க முடியாது. அடுத்த பாரளுமன்றத்தில் நேரம் ஒதுக்க கேட்டு விவாதிக்க முயல வேண்டும்.

சும்மா சப்பை கட்டுக்காக சம்பந்தர் தமிழ் மக்களின் படுகொலை விசாரணையில் அக்கறையாக இருக்கிறார் எண்று சொல்லி நாங்களாக திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்....

தமிழ் மக்கள் 2009 ல் மட்டும் இல்லை அதுக்கும் முன்னம் 1958 ம் ஆண்டு முதலே படுகொலை செய்யப்படுகிறார்கள்... அதுக்காக எல்லாம் சம்பந்தனே அவரை சேர்ந்தவர்களோ எதையும் ஏன் செய்ய முன்வர கூட இல்லை...

இவ்வளவும் ஏன் 2009 ல் மக்கள் கூட்டம் கூட்டமாக மிருகங்களை போல முகாம்களில் அடைத்து வைக்கக்கப்பட்டார்கள் அதை எதிர்த்து கூட்டமைப்பின் தலைவர் எதையாவது செய்தார்...?? செய்தது எல்லாம் அந்த படுகொலையாளன் , மக்களின் இன்னல்களுக்கு காரணமான சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு குடுத்தது மட்டும் தான்...

Edited by தயா

65 ஆண்டுகால சரித்திரத்தில் தமிழர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று  பழைய சரித்திரத்தை மூடி போட்டு மூடிவிடுகிறீர்கள். காலிமுகதிடலில் நடந்தவை, ராஜவரோதம், ஏகாமபரம் போன்ற கிழக்கு மாகாண தலைவர்கள் முன்னின்று நடத்திய சத்தியாக்கிரகம், சமாதன உடன்படிகளை பற்றி வாசித்துவிட்டு அவற்றைபற்றிய கருத்துக்களை எழுதியிருக்கலாம். 

 

முகாங்களில் அடைத்து திறந்த வெளி சித்திரவதைகள் நடந்த போது கூட்டமைப்பு எங்கே போனது அல்லது  ஏன் அதற்கு உடந்தையாக இருந்தது என்றது ஒரு நல்ல கேள்வி. ஆனால் அது ஒரு புத்தகத்துக்கும் மேலாக ஆராயப்பட வேண்டிய பதில்.  

 

அது வெளிவரும் வரைக்கும் எதையாவது அடியொட்ட மறுப்பதால் நமக்கு முன்னேற்றம் வரும் என்று நம்பக்ககூடாது. 

போராட்டங்கள் நடக்காமல் இல்லை...    சாவகச்சேரியில் JR க்கு கறுப்பு கொடி காட்டி விட்டு  யாழ்ப்பாண இரயில் நிலையத்தில் வரவேற்புபசாரம் செய்த  தமிழரசு  கட்ச்சியும் கூட்டணி கலாச்சாரத்தை தமிழ் மக்கள் மறக்கவா போகிறார்கள்... 

 

கதிரைக்காக எதையும் செய்ய கூடிய அற்ப பிறவிகள்...   இவர்களால் மாநகர சபை,  மாகான சபை , ஜனாதிபதி , பாராளுமண்றம் எண்று எந்த தேர்தல் வந்தாலும்  மட்டும் பேசப்படு விடயம் மட்டும் தான் தமிழர் பிரச்சினை... 

 

கடந்த தடவை பாராளுமற தேர்தலின் பின்னர் எதை சாதித்தார்கள் சிங்க கொடியை துக்கி பிடித்ததின் மூலம்...  குறைந்தது ஒரு வீட்டிலாவது விளக்காவது எரிய உதவியதா...??  

 

தயவு செய்து தமிழர்கள் தலைமை இல்லாமல் தவிக்கிறார்கள் அவர்களுக்கு தலைமை ஒண்டை குடுத்து உதவ வேண்டும் எண்ட நல்ல எண்ணத்திலை கூட்டமைப்பை எங்களுக்கு யாரும் காட்ட தேவை இல்லை....   வேறை ஏதாவது உருப்படியான வேலையை அந்த நேரங்களில் பார்க்கவும்... 

சரியான கதிரைகள் இல்லாததால் தான் விளக்கெரியவில்லை. 

 

கொடிபிடித்தால் விளகெரியும் என்று பிடிக்கவில்லை.  கொடி பிடித்தது, கொடி பிடித்தால் அரசு யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் திருமப வர விடவோ, சந்திர சிறியை அரசு திருப்பி எடுக்கவோ அல்லது, ஆமியை திருப்பி எடுக்கவோ போவதில்லை என்பதை நிரூபிக்க. அதை இந்திய அரசு வரையும் நிரூபிக்கப்பட்டத்தாக ஏற்றதால் இந்திய அரசு தான் தேர்தல் வர தலையிட்டது. நவிப்பிள்ளை இலங்கை அரசு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது என்று அறிகைவிட்டார். அதாவது நாட்டில் சிங்கள கொடிக்கு எதிர்ப்பில்லாத போதும் அரசு ஆமியை நம்பி அரசியல் நடத்துவை நவிப்பிளை தானே பார்த்து சர்வ்தேச நாடுகளுக்கு விளக்கமளித்தார்.   

 

 கூட்டமைப்பு புலத்தில் வென்ற கட்சியல்ல கூட்டமைப்பை நாங்கள் யாருக்கும் தலைமையாக காட்ட. தாயக மக்கள்தான் கூட்டமைப்பை தலைவர்களாக கொள்கிறார்கள். ஜனநாயகத்தை விளங்கியவர்களுக்கு அதில் தாங்கள் தான் தங்கள் தலைவர்கள் என்பது புரியும். கூட்டமைப்பு புலிகள் ஆட்சி நடத்திய போது ஆக்கியது . புலிகள் போன பின்னர் மக்களுக்கு அவர்களை தூக்கி எறிய பல சந்தர்பங்கள் கிடைத்துவிட்டது. தாயகமக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் இதுவரை கூட்டமைப்பிற்கான அங்கீகாரத்தை அதிகரிக்கிறார்கள். 

Edited by மல்லையூரான்

ஊரில் இருக்கும் மக்களின் உறவுகள் தான் நாங்கள்.. இண்டைக்கும் ஊரில் உள்ள உறவுகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதுக்கு வெளிநாட்டிலை இருக்கும் உறவுகளை நாடுவது இலங்கையில் இப்போது பிழைக்க வளி இல்லாமல் இல்லை...

இலங்கையில் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள் எண்டால் காரணம் ஊரில் பிரச்சினைகள் தீர்க்க படவேண்டும் என்பதுக்காகவே ஆனால் தங்களின் இருப்புக்காய் மற்றவர்களை வளரவிடாமல் தடுக்கவும் கூட்டமைப்புக்கு பிரச்சினைகள் தேவைப்படுகிறது எண்டது தான் உண்மை...

ஒருவரை பலமாக்க வேண்டும் இதுதான் மக்களின் எண்ணம் அதில் அந்த ஒருவர் உள்ள கெட்டவர்களில் கொஞ்சம் நல்லவர்களுக்கு வாக்கு விடயம் அவ்வளவே...

கூட்டமைப்பினர் புனிதர்கள் ஆகவே மக்கள் வாக்களித்தார்கள் என்பது எல்லாம் நிலாவை காட்டி பாட்டி வடை சுடுகிறா எண்டு காட்டுறவர்களின் வாதம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.