Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எருக்கு அல்லது மலையெருக்கு.

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

cewy.jpg

 

எருக்கலம்..

  • தொடங்கியவர்

நீல எருக்கு

 

வணக்கம் பிள்ளையள்!! எல்லாருமே நல்லாய் எருக்கஞ் செடியொடை மினைக்கெட்டிருக்கிறியள்  :lol:  . இதுக்குள்ளை இந்தாள் இடையிலை பூந்து நீல எருக்கு எண்டு போட்டு பேசாமல் இருக்கிறார் . நான் என்ன செய்ய போட்ட படம் அப்பிடி அதாலை இவருக்கே பரிசு போகுது :) :) .

 

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையில எருக்கு இருந்தால் அதையும் போடவேண்டியதுதானே. சாட்சி இல்லாவிட்டால் நாங்கள் நம்ப மாட்டம்.

 

  • தொடங்கியவர்

37 நாயுருவி prickly chaff flower , devil's horsewhip or Achyranthes aspera

 

e1vd.jpg

 

வேலுக்கு பல் இருகும்
வேம்புக்கு பல் துலங்கும்
பூலுக்கு போகம் பொழியுமே
ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்".

ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

எதிர் அடுக்குகளில் அமைந்த காம்புள்ள முழுமையான இலைகளையும் நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி இனமாகும். இது இரண்டு அடி வரை வளரக் கூடியது. இதன் தண்டு, காம்பு செந்நிறம் உடையதாக இருக்கும். இதன் எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் உடையவை. சிறுநீர் பெருக்கவும், நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தவும், சதை, நரம்புகளைச் சுருங்கவும் செய்யும் மருத்துவக் குணம் உண்டு. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் தானாகவே வளர்கின்றது. தெருவோரங்களில் தானே வளர்ந்து காணப்படும் நாயுருவிச்செடி ஹோமத்தில் எரிக்கவும் பயன்படும் தெய்வீக மூலிகை.

இதன் வேறு பெயர்களாக , அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி.

செந்நாயுருவி என்னும் இந்தவகையின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும். மருத்துவக் குணம் பெரும்பாலும் இதற்கு அதிகமாகவே காணப்படுகின்றது.

மலச்சிக்கல், பசியின்மை, செரிக்காமை (அசீரணம், அறாமை) போன்றவற்றுக்கு மருந்தாகிறது
பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள், மூலம், இருமல், தோல் அரிப்பு, உடற் சுறுசுறுப்புக் குறைதல், தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. தேள் கடியினாற் பாதிக்கப்பட்டோரைக் குணமாக்க நாயுருவியின் இலைச் சாறு பயன்படுகிறது. காதுவலி, பல்வலி, சிறுநீரடைப்பு போன்றவற்றுக்கான மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.

பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது நாயுருவி என்னும் அற்புத மூலிகை ஆகும்.

நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். நாயுருவி பற்பொடியும் தயாரித்துக்கொள்ளலாம். நாயுருவிச்செடியினால் பல் துலக்கமுக வசீகரம் பெறும். நாயுருவி பற்பொடி செய்யவும் பயன் படுகிறது .

நாயுருவி  கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது .எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ,உணவுக்காக நாட்டிற்கு வராமல் காட்டிலேயே மனிதர் கண்ணில் படாமல் இருக்க இயலும் .

நாயுருவி இலைகளில்  அதி காலையில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல், பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.

நாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும்.

நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.

நாயுருவி இலையோடு குப்பை மேனி இலையையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு கடிபட்ட வாயில் தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் இறங்கிவிடும்.

நாயுருவி வேர்ப்பட்டை, மிளகு சம அளவாக எடுத்துப் பொடி செய்து 1/4 கிராம் எடுத்து சிறிது தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். நாயுருவி விதையை 10 கிராம் எடுத்து அரைத்து 2 வேளை 2 நாட்கள் சாப்பிட்டு வர பேதி நிற்கும்.

நாயுருவி விதையை நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 20 கிராம் எடுத்து, துத்திக் கீரையை வதக்கும் போது சேர்த்து உணவுடன் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூலமும் குணமாகும். நாயுருவி விதையைச் சோறு போல சமைத்து உண்ண பசி எடுக்காது. ஒரு வாரம் ஆயாசம் இல்லாமல் இருக்கலாம். பின்னர் மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்க பசி உண்டாகும்.

நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கப் பல் தூய்மையாகி முகம் வசீகரம் ஆகும். நாயுருவி சமூலமும், வாழைச் சருகும், மூங்கில் குருத்தும் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு 400 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 200 மில்லியளவு 2 வேளை குடிக்க, பெண்களின் வயிற்றிலுள்ள அழுத்தத்தை வெளியேற்றும். நாவறட்சி நீங்கும்.

விதையை  சாப்பிட்டால் ஒரு வாரம்வரை பசி இருக்காது. மீண்டும் பசி எடுக்க, சிறிதளவு மிளகு எடுத்து அதை வறுத்து இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.

 20 கிராம் விதையை பவுடராக்கி துத்திக் கீரையில் கொதிக்க வைத்து காலை உணவில் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூலம் குணம் பெறும்.

10 கிராம் விதையை அரைத்து இரண்டு வேளை சாப்பிட்டால் பேதி குணம் பெறும். சிவப்பு, வெள்ளை நிறம் இரண்டு வகை நாயுருவி இருக்கின்றன. இரண்டும் பயன்படுத்தலாம்.

http://en.wikipedia.org/wiki/Achyranthes_aspera

http://kkp.do.am/load/see_more/31-1-0-270


 

Edited by கோமகன்

நாயுருவி

  • கருத்துக்கள உறவுகள்

நாயுருவி

  • கருத்துக்கள உறவுகள்

நாய் ஏன் உருவுது?

  • கருத்துக்கள உறவுகள்

நாய் ஏன் உருவுது?

 

கவலை வேண்டாம். உதுக்கு விளக்கம் சொல்லக்கூடியவர் மல்லை தான். எப்பிடியும் அவர் தேடித் பிடிச்சுப் போட்டுவிடுவார். :D

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நவீனன் தம்பி எக்கச்சக்கமான ஆளாய் இருப்பார் போல கிடக்கு!

 

ஆனானப் பட்ட மல்லைக்கே, ஆள் நிலாக்காட்டுது! :D

 

நந்தன், நாய் ' மரத்தை' உருவிறதில்லை!

 

மரம் தான் 'நாயை' உருவுது எண்டு நினைக்கிறன்! :lol:

இந்த நவீனன் தம்பி எக்கச்சக்கமான ஆளாய் இருப்பார் போல கிடக்கு!

ஆனானப் பட்ட மல்லைக்கே, ஆள் நிலாக்காட்டுது! :D

ஏன் இந்த கொலை வெறி?

Edited by நவீனன்

இந்த நவீனன் தம்பி எக்கச்சக்கமான ஆளாய் இருப்பார் போல கிடக்கு!

 

ஆனானப் பட்ட மல்லைக்கே, ஆள் நிலாக்காட்டுது! :D

 

நந்தன், நாய் ' மரத்தை' உருவிறதில்லை!

 

மரம் தான் 'நாயை' உருவுது எண்டு நினைக்கிறன்! :lol:

ஏம்பா கிண்டி எடுத்து நவீனனையும் கெடுக்க பண்ணுறீங்க. :D

 

முன்னர் சொல்லப்போக, நவீனனுக்கு பிள்ளைகள் சொல்லிக்கொடுப்பத்தாக சொன்னதால் பின்னால் போக நேர்ந்தது. நவீனனின் பிள்ளைகளுக்கு எருக்கலையை தெரிந்திருந்தால் அதில் குற்றம் இல்லை. தேடினால் நீல எருக்கு விக்கி பீடியா தமிழில் மட்டும்தான் வருகிறது. 

 

கோமகன் யாருக்கு பரிசு கொடுத்தாலும் gigantic swallow wort , Crown flower or Calotropis gigantea என்பதற்கு விக்கி பீடியா வெள்ளையும் ஊதா நிறப்பூவும் படம் போகிறது.

 

கோமகன் வலையில் படத்தை கொப்பி பண்ணி தேடி போடும் விடைகளுக்கு பலதடவையும் பரிசளித்துவிட்டார். படத்தை தேடும் முறை யாழில் எழுதிக் காட்டிக்கொடுத்து போட்டியை கெடுப்பதும் அவசரம்.இனி மிச்சத்தை எழுதினால் படப் போட்டி ஒன்றே நடப்பது பொருள் இல்லாமல் போய்விடும். 

 

ஆரம்பம் தொடக்கம் எனது நிலைப்பாடு நவீனன் சில்லறை முறைகளை வைத்து பெயரை சொன்னால் அவர் என்ன செய்கிறார் என்பதை கண்டுபிடிப்பது கடினம் அல்ல. கொப்பி அடிப்போரை திருடுவோரை நிறுத்த  போட்டி விதிகளை தொடந்து மாற்றாமல், பரிசுக்கு நியாயமான தர்க்கத்தை தர முடியாதவர்களுக்கு பரிசை அளித்தால் அது ஆக்கம் என்ற பெயரில் cut & paste க்கு பதில் அளிப்பது போன்றது.

 

கோமகனுக்கு சந்தேகம் இல்லாமல் தெரியும் எருக்கலை செந்தமிழ் என்பதும். நீல எருக்கு என்று பெயர் இருப்பது தெரிய வேண்டும். மா,செவ்வரத்தையில் பல பூக்கள் இருக்கலாம். ஆனால் மரம் ஒன்றுதான்.

 

எனக்கு நிலா அக்காவின் பெயர் அனுபவமான, சொந்த அறிவில் வந்த பெயர் போல படுகிறது.

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் போடும் படங்களை உடனடியாகக் கண்டுபிடிக்காதபடி போடவேண்டும். மரங்களின் பொதுப் பெயரைப் போட்டால் சரியான விடையாக எடுக்கவேண்டும். மல்லை சொல்லவதை நான் ஆமோதிக்கிறேன்.

கோமகன் போடும் படங்களை உடனடியாகக் கண்டுபிடிக்காதபடி போடவேண்டும்.

அதை யாரும் செய்ய முடியாது கோமகன் போட்டவுடன் கூகுளில் தேட 2 நிமிடம் தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தவகையில் எனது பதிலான எருக்கலை மரம் (செடி/மரம் பெரிய பிரச்சினை இல்லை.. :D ) என்பதை சரியானதாக எடுத்துக்கொண்டு மல்லை மற்றும் சுமோ அக்கா தலா ஒரு பச்சைப்புள்ளிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தவகையில் எனது பதிலான எருக்கலை மரம் (செடி/மரம் பெரிய பிரச்சினை இல்லை.. :D ) என்பதை சரியானதாக எடுத்துக்கொண்டு மல்லை மற்றும் சுமோ அக்கா தலா ஒரு பச்சைப்புள்ளிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. :lol:

 

மரத்துக்கும் செடிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. அதனால நோ பச்சை :D

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தவகையில் எனது பதிலான எருக்கலை மரம் (செடி/மரம் பெரிய பிரச்சினை இல்லை.. :D ) என்பதை சரியானதாக எடுத்துக்கொண்டு மல்லை மற்றும் சுமோ அக்கா தலா ஒரு பச்சைப்புள்ளிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. :lol:

எருக்கலை எண்டு ஆரப்பா, ஊரில சொல்லுறாங்கள்? :o

 

எருக்கிலை எண்டு தானே, சனம் பேச்சு வாக்கிலை கதைக்குது?

 

எருக்கு + இலை = எருக்கிலை 

 

இந்த நேரம் பாத்து வாத்தியாரும் லீவில போட்டார்? :icon_mrgreen:

 

பச்சை கேட்கேக்கை, புங்கைக்கும் ஒண்டைக் கேக்கிறது தானே! :D

 

'எக்ஸ்ட்ரா' செலவா வரப்போகுது? :D

நிலா அக்காவுக்கு  (47%) பச்சை

               இசைக்கு  (35%) பச்சை

            புங்கைக்கு  (18%) பச்சை

:D

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாங் கோரை

ஏம்பா கிண்டி எடுத்து நவீனனையும் கெடுக்க பண்ணுறீங்க. :D

 

முன்னர் சொல்லப்போக, நவீனனுக்கு பிள்ளைகள் சொல்லிக்கொடுப்பத்தாக சொன்னதால் பின்னால் போக நேர்ந்தது. நவீனனின் பிள்ளைகளுக்கு எருக்கலையை தெரிந்திருந்தால் அதில் குற்றம் இல்லை. தேடினால் நீல எருக்கு விக்கி பீடியா தமிழில் மட்டும்தான் வருகிறது. 

 

கோமகன் யாருக்கு பரிசு கொடுத்தாலும் gigantic swallow wort , Crown flower or Calotropis gigantea என்பதற்கு விக்கி பீடியா வெள்ளையும் ஊதா நிறப்பூவும் படம் போகிறது.

 

கோமகன் வலையில் படத்தை கொப்பி பண்ணி தேடி போடும் விடைகளுக்கு பலதடவையும் பரிசளித்துவிட்டார். படத்தை தேடும் முறை யாழில் எழுதிக் காட்டிக்கொடுத்து போட்டியை கெடுப்பதும் அவசரம்.இனி மிச்சத்தை எழுதினால் படப் போட்டி ஒன்றே நடப்பது பொருள் இல்லாமல் போய்விடும். 

 

ஆரம்பம் தொடக்கம் எனது நிலைப்பாடு நவீனன் சில்லறை முறைகளை வைத்து பெயரை சொன்னால் அவர் என்ன செய்கிறார் என்பதை கண்டுபிடிப்பது கடினம் அல்ல. கொப்பி அடிப்போரை திருடுவோரை நிறுத்த  போட்டி விதிகளை தொடந்து மாற்றாமல், பரிசுக்கு நியாயமான தர்க்கத்தை தர முடியாதவர்களுக்கு பரிசை அளித்தால் அது ஆக்கம் என்ற பெயரில் cut & paste க்கு பதில் அளிப்பது போன்றது.

 

கோமகனுக்கு சந்தேகம் இல்லாமல் தெரியும் எருக்கலை செந்தமிழ் என்பதும். நீல எருக்கு என்று பெயர் இருப்பது தெரிய வேண்டும். மா,செவ்வரத்தையில் பல பூக்கள் இருக்கலாம். ஆனால் மரம் ஒன்றுதான்.

 

எனக்கு நிலா அக்காவின் பெயர் அனுபவமான, சொந்த அறிவில் வந்த பெயர் போல படுகிறது.

 

மல்லையூரன்

    Advanced Member

    கருத்துக்கள உறவுகள்

    PipPipPip

    10,487 posts

    Gender:Male

Posted 21 August 2013 - 07:37 PM

கா ளா ன், on 21 Aug 2013 - 7:05 PM, said:

    

    வாழ்த்துகள் மல்லை. நீங்கள் சொன்னது சரி என நினைக்கிறேன். அழகாக இருக்கிற படியால் இன்டிகோ அல்லது பால் பாம்பு (milk snake) என்று நினைத்தேன்

    

    எப்படி உங்களால் முடியுது? :)

    

சிலர்களை போட்டியில் இருந்து வாபஸ் பெற வைப்பதால் மட்டும்தான் அது முடியும்.

 

நான் முதலில் இசைமீது கம்பிளெயின் கொடுத்தேன். சுமே அக்கா சிலநாள் கொழுவினா.  பின்னர் நவீனன் மீது கம்பிலேயின் கொடுத்தேன். இப்போது போட்டி இலகு. அதே மாதிரி நீங்களும் உங்களுக்கு இடைஞ்சலாக இருப்பவரை விழுத்தப் பார்க்க வேண்டும்.

 

:lol:  :lol:  :lol:

 

என்னத்தை சொல்ல காளான். நீங்களும் எதையோ செய்து வெல்லப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான். :)

ஆயிரம் பொய்யை சொல்லித்தன்னும் ஒரு கலியாணத்தைக்கட்டு!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120186&page=8

 

 

 

இவரது நோக்கம் இது தான் :icon_mrgreen: இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களை எப்படியாவது கலைப்பது

 

Edited by நவீனன்

நன்றி.

 

புரிந்து கொண்டுவிட்டீர்கள்.

 

கோபம் என்றால் அது புங்கை மீது.

 

:D

நீங்க 50 /50 தன்னும் என்னோடை செயார் பண்ணாடில் மற்றவர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டி வரும். எதோ பார்த்துசெய்யுங்கப்பா. இதுதான் பினேஸ் உலக நியாயம்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சவூண்டி...!

  • தொடங்கியவர்

நாயுருவி

 

வணக்கம் பிள்ளையள் !! நல்லாய்தான் நாயுரிவியை பூசி விளையாடி இருக்குறியள்  :D  . இந்த நாயுருவிக்குப் பக்கத்திலை போனாலே காலிலை ஒட்டி சுனைக்கும் :( . நவீனன் முதல் சொனதாலை சுமேரியர் கட்டுபணத்தை இழக்கிறார்  :lol: :lol: .

 

  • தொடங்கியவர்

38 எள் அல்லது திலம் Sesame or Sesamum indicum .

 

6qb6.jpg

 

 

எள்  ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு (இதில் இருந்து எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்). எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனபப்டுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.

கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

 

எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும்.

 

இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும்.

 

இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.

 

இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.

 

எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளு விதையை இலேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குறையும்.

 

தோலில் சொறி, சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் தோல் நோய்கள் அகலும்.

 

நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் அணுகாது.

 

கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.

 

வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்.

 

எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.
உடற்சூடு, தலைப் பாரம் குறையும்.

தோல் நீக்கப்பட்ட உலர்த்திய எள் வித்தின் ஊட்டப்பொருள் அளவு :

100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 630 kcal   2640 kJ
மாப்பொருள்        11.73 g
- சர்க்கரை  0.48 g
- நார்ப்பொருள்  11.6 g  
கொழுப்பு    61.21 g
புரதம்    20.45 g
நீர்    3.75 g
உயிர்ச்சத்து சி  0.0 mg    0%
கால்சியம்  975 mg    98%
இரும்பு  14.5 mg    116%
மக்னீசியம்  345 mg    93%
பாசுபரசு  667 mg    95%
பொட்டாசியம்  370 mg      8%
சோடியம்  47 mg    3%
Percentages are relative to US
recommendations for adults.
Source: USDA Nutrient database

உடல் இளைக்க அல்லது பருக்க காலை எழுந்தவுடன் சுமார் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். 3 மணி நேரம் வேறு எதுவும் உண்ணக்கூடாது. ஒல்லியான தேகம் உடையவர்களுக்கு சதை போடும். குண்டாக இருப்பவர்கள் இளைப்பார்கள். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெண்முள்ளங்கியுடன் எள் சேர்த்து கொடுத்தால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் மறையும். மூல நோய் உள்ளவர்கள் 5 கிராம் எள் விழுதுடன், 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையும் கரைத்துக் குடித்து வந்தால் பயன் தெரியும். ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் நுரைத்த எள்ளுடன் தேனையும் நெய்யையும் கலந்து தடவினால் விரைவில் குணமாகும். தினசரி காலை ஒரு கைப்பிடி எள் சாப்பிடுங்கள். பற்களின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு பற்கள் பலமாகும். தொழுநோய் குணமாகவும் எள் உதவும். எள், உப்பு, மிளகாய் ஆகியவை 5 கிராம் எடுத்து லேசாக வறுத்து, இடித்து, சலித்து பாட்டிலில் போட்டு வைத்துத் தினசரி காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு அரை தேக்கரண்டி அளவு பசுநெய்யில் கலந்து உண்டால் விரைவில் குணமாகும். நீரழிவு நோய் உடையவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காயவைத்து வாணலியில் வறுக்கவும். பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம்பழம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் பருகினால் விரைவில் நீரழிவு நோய் குணமாகும்.

 

http://en.wikipedia.org/wiki/Sesamum_indicum

 

http://www.theni.in/nature_medicine_detail.php?recordID=9

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.