Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

செங்கிழங்குச் செடி :D

  • Replies 594
  • Views 102.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பீட்ரூட்

அக்காரக் கிழங்கு கன்று.

 

ஊரில் பீட்ரூட்டை செடி என்று அழைத்துக் கேட்டில்லை. பீட்ரூட் கண்டுகள் பிடிங்கி நடுவதாக சொல்வார்கள்.  படத்தில் கிழங்கு காணப்படவில்லை என்பதால் இந்த இளசுகளை கன்று என்பது சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்

சீமைச் சர்க்கரை வள்ளிச் செடி

  • தொடங்கியவர்

ராச வள்ளிகிழங்கு கொடியும்  சின்னனிலை இப்பிடித்தான் இருக்கும் கண்டியளோ :unsure::lol::D . ( இல்லை எல்லாரும் எதோ சிவப்பிலை சன்னதம் ஆடுறியள் )

  • கருத்துக்கள உறவுகள்

சர்க்கரைவள்ளி கிழங்குச் செடி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ராச வள்ளிகிழங்கு கொடியும்  சின்னனிலை இப்பிடித்தான் இருக்கும் கண்டியளோ :unsure::lol::D . ( இல்லை எல்லாரும் எதோ சிவப்பிலை சன்னதம் ஆடுறியள் )

 

அது ராச வள்ளிக் கொடி தெரியாதவைக்குச் சொல்லுங்கோ :D 

  • தொடங்கியவர்

நான் போட்ட மரத்திலை சிக்கிச் சிவப்பு பெயின்ற் அடிச்சு விளையாடின எல்லா உறவுகளுக்கும் நன்றியுங்கோ  :lol:  :lol:  . இன்னும் கொஞ்ச நேரத்திலை ஆர் வெண்டதெண்டு சொல்லுறன் பிள்ளையள் :D :D .
 

பீற்றூட் செடிதான்...  :D

  • கருத்துக்கள உறவுகள்

beetroot.jpg

பீற்றூட் :lol: 

4 கிழமையும் பன்னிரெண்டு நாட்களும் வயதுடைய 'செங்கிழக்குச் செடி'. இத்தனை ஆங்கிலத்தில் 'பீட்ரூட்' என்று அழைப்பார்கள்.

மிகவும் ஆரோக்கியமான உணவு. வீட்டுத் தோட்டத்தில் சிறிய இடம் இருந்தாலும் இதனை நட மறக்க வேண்டாம். பெரிய பராமரிப்பு இன்றி இலகுவாக வளரக் கூடியது. விதைகளை புதைத்து விட்டால் தானாக வளரும். கடையில் வாங்குவதை விட சுவையாக இருக்கும். 

  • தொடங்கியவர்

அக்காரக் கிழங்கு கன்று.

 

ஊரில் பீட்ரூட்டை செடி என்று அழைத்துக் கேட்டில்லை. பீட்ரூட் கண்டுகள் பிடிங்கி நடுவதாக சொல்வார்கள்.  படத்தில் கிழங்கு காணப்படவில்லை என்பதால் இந்த இளசுகளை கன்று என்பது சரியானது.

 

வணக்கம் பிள்ளையள் !!  எல்லாரும் மறுமொழி சொல்லியிருக்குறியள்  நல்ல விசையம் . ஆனால் " பீட்ரூட் " எண்டு அல்லோ எழுதியிருக்கிறியள் . காவாலி " செங்கிளங்கு செடி " எண்டு சொன்னியள் . நானும் ஆடித்தான் போனன் . ஆனால் பீற்றூட் மட்டும் சிவப்புக் கிழங்கு இல்லையே ??  இசை "சர்க்கரை வள்ளிக் கிழங்கு" எண்டு ஐமிச்சப்பட்டார்  :unsure:  :wub:  . நானும் சொல்ல முதல் உள்ள ஊரி அகராதி எல்லாம் தேடினன் , "அக்காரக் கிழங்கு " எண்டு தான் சொல்லுறாங்கள் .  http://dictionary.tamilcube.com/ அதாலை மல்லையர்  இந்தமுறை பரிசை வெல்லுறார் . அதோடை அவர் சொன்ன லோ பொயிண்ட் யோசிக்க வைக்கிது . இப்ப ,  மிளக்காய் , பொயிலை , கத்தரி இவையளை செடி எண்டு சொன்னாலும் அவையை நாங்கள் சின்னனிலை கண்டு எண்டு தானே சொல்லுறம் :D :D .

 

  • தொடங்கியவர்

04 அதவம் , இற்றி அல்லது அத்தி மரம் (  fig tree , Ficus )

 

v87f.jpg

 

அத்தி மரமென்று பலராலும் அறியப்பட்ட இந்த அதவம் அல்லது இற்றி மரத்தில் , நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும். அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

இந்த மரத்தின் இலை, பால், பழம் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது. உலர வைத்துப் பொடி செயப்பட்ட  இலைகள் பித்தம், பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லது. காயங்களில் வடியும் பால் இரத்தப்போக்கை உடனே நிறுத்தும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற உபாதைகளுக்கு அத்தி இலைகள் சிறந்தது. இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளிக்க உடன் பலன் கிடைக்கும். மரப்பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும்.

இந்த அதவம் அல்லது இற்றி  மரம் இலக்கியத்திலும் இடம்பெற்றதாகும். உதாரணாமாக குறுந்தொகையில் கபிலர்,  தலைவிக்கும் அவள் தோழிக்கும் இடையிலான கருத்தாடலைப் பின்வருமாறு சொல்கின்றார் .........

புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
 வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
 தீதில் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
 வந்தன்று வாழி தோழி நாமும்
 நெய் பெய் தீயின் எதிர் கொண்டு
 தான் மணந்தனையம் என விடுகம் தூதே.


மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)

 

http://en.wikipedia.org/wiki/Ficus

Edited by கோமகன்

அத்தி மரக் கன்று.

 

http://www.youtube.com/watch?v=muWBARd3oAk

 

 

தமிழிலை  சொன்னால்  "மலையின் முனிவன்"  மரக்கண்று  ...   :D  :D  :D   ஆங்கிலத்திலை சொன்னால்  Fig tree ... !!! 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அத்திக்காய் காய் காய் , இத் திக்காய் பாருங்கோ  கோ.

 

பிரான்சிலும்  நிறைய  உண்டு. வெய்யில் காலம் முடியும் காலம் காய்க்கும் மரம்! :D

அதவம் மரம் ( சங்ககால பெயர் :) )

அதவம் கன்று ( சங்ககால பெயர் :) )

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்திக்காய் காய் காய் , இத் திக்காய் பாருங்கோ  கோ.

 

பிரான்சிலும்  நிறைய  உண்டு. வெய்யில் காலம் முடியும் காலம் காய்க்கும் மரம்! :D

aththi.jpgதெரியாமல் கேக்கிறன் சுவியர்! அத்திமரம் வெப்பவலய மரமெல்லோ? கிட்டத்தட்ட வேப்பமரம் அரசமரம் அளவுக்கு பெரிசாய் வளருற மரம்! உந்த மரம் பிரான்ஸ்சிலையும் நிக்கிதோ?1375935_466697770111301_448957142_n.jpg

தெரியாமல் கேக்கிறன் சுவியர்! அத்திமரம் வெப்பவலய மரமெல்லோ? கிட்டத்தட்ட வேப்பமரம் அரசமரம் அளவுக்கு பெரிசாய் வளருற மரம்! உந்த மரம் பிரான்ஸ்சிலையும் நிக்கிதோ?

 

இது வெப்ப வலய மரம் என்றாலும் இங்கும் வளரும். பத்து அடி உயரத்திலேயே காய்க்கும். மரத்திலேயே நன்றாகப் பழுக்க விட்டால் தேனாக இனிக்கும். அதிகம் கனிய விட்டால் பழத்தின் தசைகள் பிய்ந்து விழும். என்னீ டமும்  ஒன்று உள்ளது.

  • தொடங்கியவர்

நான் போட்ட மரத்திலை சிக்கிச் சில்லெடுத்து  விளையாடின எல்லா உறவுகளுக்கும் நன்றியுங்கோ  :lol:  :lol:  . இன்னும் கொஞ்ச நேரத்திலை ஆர் வெண்டதெண்டு சொல்லுறன் பிள்ளையள் :D :D .

 

  • தொடங்கியவர்

அதவம் மரம் ( சங்ககால பெயர் :) )

 

வணக்கம் பிள்ளையள் !! கிட்டமுட்ட எல்லாருமே சரியான மறுமொழியைத்தான் தந்திருக்கிறியள்  :unsure:  . தயா  " மலையின் முனிவன் கன்று " எண்டு  சொன்னார்  :wub:  . சிலவேளை அதின்ரை   மருதுவகுணங்களை வைச்சு அப்பிடி சொன்னாரோ எனக்குத் தெரியேலை . ஆனாலும்  தமிழினி இந்த அத்தி மரத்துக்கு எண்டே இருந்த ரெண்டு பேரிலை ஒரு பேரை தந்தபடியால் அவாவுக்குதான் இந்தப் பரிசு போகவேணும் பாருங்கோ  :D  :lol:  . சரியான ஆறியப் பட வேண்டிய சொல் அதவம் அல்லது இற்றி மரம்  :)  :)  .

 

  • தொடங்கியவர்

05 அலரி மரம் ( Nerium oleander )

 

amfl.jpg

 

அலரி மரம் மருத்துவ குணங்களை உடையது .அலரி ஐந்தடி முதல் பத்தடி வரை உயரமாக வளரும் . இந்த மெல்லிய செடியில் கண்ணைக் கவரும் வாசமில்லாத அழகான பூக்கள் இருக்கும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய மூன்று நிறங்களில் கொத்து, கொத்தாக வளர்ந்து இருக்கும். இந்த மூன்று நிறங்களிலும் ஒரே வகையான குணம் காணப்படுகிறது. ஆயினும், சிவப்பு நிற அலரி அதிகப் பயனுள்ளதாக இருக்கின்றது. அலரி வேரை பச்சைத் தண்ணீரில் அரைத்து மூலக் கட்டிகளின் மீது பூசி, அதன்பின் மூலக்கட்டிகளின் மீது படும்படி புகைப் பிடித்தால் மூலக்கட்டிகள் சுருங்கிவிடுகின்றன. சிலருக்கு ரத்தம் கெட்டுவிடுவதால் தோல் கரடு முரடாக மாட்டுத் தோல் போல் காணப்படும். இதற்கு அலரிச் செடியின் பட்டையை அரைத்துத் தினசரி தோல் மீது பூசுவதால் தோல் மென்மையாகிவிடும். இலைகளைக் கொதிக்க வைத்து அரைத்து எண்ணையில்  கலந்து மூட்டு வலியின் மீது பூசினால் வலி குறைகிறது.

 

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia.org/wiki/Nerium

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF
 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அலரி மரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.