Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு பொதுநலவாய மாநாட்டிற்கு நிதியுதவி செய்யும் ஐரோப்பிய தமிழ் நிறுவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதால், அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டையும், அதனையொட்டிய முதலீடு தொடர்பான வர்த்தக மாநாட்டையும் (pre-summit Commonwealth Business Forum) புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனித உரிமை அமைப்புக்களாலும், தமிழ் தலைவர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில், தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் பாரிய நிறுவனமாக வளர்ந்துள்ள பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டியங்கும் லைக்கா மொபைல் நிறுவனம், போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசாங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும் பொதுநலவாய மாநாட்டிற்கு பாரிய நிதியுதவி வழங்கியுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

உலகத் தலைவர்கள் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என, பழ.நெடுமாறன், வைகோ உட்பட தமிழக தலைவர்களும், பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை போன்ற பல புலம்பெயர்ந்த அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த மாநாட்டின் முன்னணி (Gold Sponsor) நிதியுதவி நிறுவனமாக லைக்கா குழுமம் திகழ்கின்றது.

இலங்கைத்தீவில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதால், அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டையும், அதனையொட்டிய முதலீடு தொடர்பான வர்த்தக மாநாட்டையும் (pre-summit Commonwealth Business Forum) புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனித உரிமை அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

பிரித்தானியாவைச் சேர்ந்த நூறிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொழும்பில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘இலங்கையில் வர்த்தக முதலீடு’ செய்வது பற்றிய மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன.

கொழும்பு சென்றுள்ள நிறுவனங்களில் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் பெரும் இலாபம் ஈட்டிவரும் லைக்கா மொபைல் (Lyca Mobile), லைக்கா ரெல் (Lyca Tel) மற்றும் லைக்கா ஃபிளை (Lyca Fly) போன்ற நிறுவனங்களைக் கொண்ட லைக்கா குழுமமும் (Lyca Group) ஒரு முக்கிய நிதியுதவியாளராக அடங்கியுள்ளமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், பொதுநலவாய மாநாட்டிற்கும் லைக்கா குழுமம் நிதியுதவி வழங்கியிருக்கின்றது.

கனடா, இந்தியா, மற்றும் மொறீசியஸ் போன்ற நாடுகளின் பிரதமர்கள் கொழும்பு மாநாட்டைப் புறக்கணித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் தமிழ் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் இன்று (15-11-2013) கொழும்பு செல்லுகின்றார். இதனையொட்டி பிரித்தானிய ஆளும் கட்சிக்கு நிதியுதவி செய்யும் நிறுவனங்கள் கடந்த 12ஆம் திகதி முதல் இன்றுவரை நடைபெறும் வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன.

இதற்கென கொழும்பு சென்ற லைக்கா மொபைல் உட்பட வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மிகச்சிறந்த வரவேற்பளித்த சிறீலங்கா அரசாங்கம், அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து உலங்கு வானூர்திகளில் அழைத்துச் சென்று மிகவும் இராஜ மரியாதை வழங்கியுள்ளது. இதில் லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி மாநாடு பற்றிக் கருத்துரைத்த சர்வதேச மன்னிப்புச் சபையின் இயக்குனர் கேட் அலென் (Kate Allen), பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ராஜபக்சவிற்கும், அவரது அரசாங்கத்திற்கும் இந்த வர்த்தக மாநாடு, முதலீட்டிற்கான வாய்ப்பாக அமைந்துவிடக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட முதலீடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நிறுவனங்கள் பற்றிய தகவல்களை பிரித்தானியாவின் ஆய்வு ஊடகமான கோர்பறேட் வொச் (Corporate Watch) வெளியிட்டுள்ளது. இதில் லைக்கா மொபைல் முக்கிய இடத்தில் (Gold Sponsor) இருப்பதை மேலுள்ள இணையத்தின் இணைப்பில் பார்வையிடலாம். லைக்கா மொபைல் நிறுவனத்தின் கணக்காய்வு நிறுவனமான ஏன்ஸ் அன்ட் யங் (Ernst& Young) நிறுவனமும் கொழும்பு சென்றுள்ளது. அத்துடன், பிரித்தானியாவில் தமிழ் மக்கள் பெருமளவில் பாவிக்கும் வீட்டுத் தொலைபேசிச் சேவை நிறுவனமான பி.ரியும் (BT) இதில் அடங்கியுள்ளது.

தமிழரின் நிறுவனமான லைக்கா மொபைல் நிறுவனம் பிரித்தானிய ஆளும் கட்சிக்கு இதுவரை 426,293.00 பவுண்ஸ்களை நிதிப்பங்களிப்பாக வழங்கி, அந்தக் கட்சிக்கு நிதி வழங்கும் நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் 2005ஆம் ஆண்டு முதல் இதுவரை பிரித்தானியாவில் வரி செலுத்தவில்லை என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லண்டனின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை தமிழ் மக்களிற்கு பெரும் ஏமாற்றத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதேவேளை, புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பெரும் நிதிப்பங்களிப்பில் வளர்ந்த லைக்கா குழுமம், போர்த்துக்கல்லில் உள்ள தனது இணை நிறுவனமான Hastings Trading e Serviços Lda ஊடாக மகிந்த ராஜபக்சவின் மருமகனான ஹிமால் லலிந்த ஹெட்டியாராச்சியின் (Himal Lalindra Hettiarachchi) பெயரிலுள்ள சிறீலங்காவின் வயர்லெஸ் சேவை வழங்கும் நிறுவனத்தின் 95 வீதமான பங்கை 2007ஆம் ஆண்டு கொள்வனவு செய்துள்ளமையும் இப்பொழுது தெரிய வந்துள்ளது. மகிந்தவின் மருமகனின் இந்த நிறுவனத்துடன் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தில் இணைந்து செயற்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு சிறீலங்கா ரெலிகொம் தள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, லைக்கா குழுமத்தின் லைக்கா ஃபிளை (Lyca Fly) நிறுவனமும், பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் வருவாயை ஈட்டிக்கொடுக்கும், மகிந்தவின் மைத்துனரின் பெயரிலுள்ள சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வருகின்றது. அத்துடன், சிறீலங்காவிற்கு செல்லுவதற்காக சுற்றுலாச் சலுகைகளையும் லைக்கா ஃபிளை (Lyca Fly) போருக்குப் பின்னர் வழங்கி வருவதால், சிறீலங்கா அரசாங்கம் அதனூடாகவும் அந்நியச் செலாவணியைப் பெற்று வருகின்றது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பதிலளிக்க லைக்கா குழுமம் மறுப்புத் தெரிவித்து வருகின்றது.

எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காது சனல்-4 போன்ற ஊடகங்கள் தமிழ் மக்களிற்காகவும், மனித உரிமைகளுக்காவும் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழ் மக்களின் பணத்தில் வளர்ந்த லைக்கா குழுமம், அந்த மக்களைக் கொன்றொழித்து, போர்க்குற்றம் புரிந்த அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கி வருகின்றமை ஏற்க முடியாத ஒரு விடயம்.

போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தற்பொழுதும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் அவலப்பட்டு வருகின்றனர். வெளிநாட்டு அரசாங்கங்களும், தொண்டு நிறுவனங்களும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிற்கான அவசர உதவிகளில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் தமிழ் மக்களின் பணத்தில் புலம்பெயர் நாடுகளில் வளர்ந்த லைக்கா மொபைல் போன்ற நிறுவனங்கள், தாயகத்தில் அவலப்படும் மக்களை கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து விலக முடியாது. தவறினால் இவ்வாறான அமைப்புக்களிற்கு பதிலடி கொடுக்க புலம்பெயர்ந்த மக்கள் பின்னிற்க மாட்டார்கள் என்பது உறுதி.

1395802_252543098233057_978782474_n.jpg

 

http://www.eelamdaily.com/news/11847/57/.aspx

http://www.corporatewatch.org.uk/?lid=5128

  • Replies 69
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யலாம்? புறக்கணிக்கலாம், சொல்லி விட்டு கணக்கை முடக்கினால் தான் ஒரு விளைவு எதிர் காலத்திலாவது இருக்கும்! ஆனால், சிறிலங்கன் விமான சேவையையும் சுற்றுலாவையும் புறக்கணிக்காத புலத்தமிழரிடம் இந்தப் புறக்கணிப்பு எவ்வளவு தூரம் எடுபடும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த மாற்றமும் எம்மிடமிருந்தே தொடங்கட்டும்.

இதற்கு லைக்கா நிறுவனம் தன்னிலை விளக்கம் தராத பட்சத்தில் முதல் புறக்கணிப்பை என்னிடமிருந்தே ஆரம்பிக்கின்றேன்.

முதாவதும் கடைசி ஆளும் நானாக இருந்தாலும் பரவாயில்லை.

இந்த ஈனச்செயலை வரலாறு என்றாவது ஒரு நாள் செருப்பால் அடிக்கும்.

லைக்கா மொபைல் காட்டுக்களை புறக்கணிக்கும் படி தமிழ் மக்களை வேண்டி தமிழர் அமைப்புக்கள் போராட்டங்களை முன் எடுக்க வேண்டும்.

தமிழர் பணத்தில் தொடங்கப்பட்டு, தமிழரால் நடாத்தப்படும் ஒரு நிறுவனம்  இவ்வாறு செயற்படுவது வெடக்கக் கேடான ஒரு விடயம்.

 

இந்த நிறுவனத்திற்க்குப் பின்னால் இருப்பவர்கள் பிரித்தானியத் தமிழர்களால் தனிமைப்படுத்தப் பட வேண்டியவர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை லைக்கா மொபில் பாவித்ததில்லை
தேவையும் இருக்கவில்லை
இருந்தாலும் பல தமிழர்கள் ஐரோப்பா முழுவதும்
பாவிக்கின்றார்கள்.தமிழர்  பலருக்கு வேலை வாய்ப்புக்களையும்

வழங்கியிருக்கின்றது.

சிறி லங்கா அரசிற்கு நிதி உதவி அளித்து தங்கள் நிறுவனத்தை

வளர்ப்பதிலும் பார்க்க தமிழர்களுக்காக தமிழர்களுடன்
சேர்ந்து போராடுவதே சிறந்தது.
 

இவர்களின் சிறிலங்காவிற்கான நிதி உதவி கண்டிக்கப்படவேண்டியது

இந்த நிறுவனத்த்தின் முக்கியஸ்தர்கள் இங்கே இருக்கிறார்கள் ..............ஒருதடவை இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு அன்பளிப்பிற்காக தொடர்பு கொண்டிருந்தேன் ..தமிழர்கள் ஆங்கிலத்த்தில் ஒரு கடிததத்த்தை தரும்படி கேட்டார்கள் [நெதெர்லாந்து மொழியில் என்றால் பரவாயில்லை இந்த நாட்டு வரி நடவடிக்கை என்று நினைக்கலாம் ] .................ஒருமாதிரி ஆங்கிலத்த்தில் ஒரு கடிததத்த்தை தயாரித்த்து அனுப்பினோம் .பதிலை நெதெர்லாந்து மொழியில் போட்டிருந்தனர் .அன்பளிப்பு செய்வதை நிறுத்த்தி விட்டார்கள் என்று .................சம கடுப்பில் திருப்பி த்மிழில் நன்றி என்று பெரிய எழுத்த்தில் பதில் கொடுத்தேன் .........இன்று பார்க்கும்போது செம செம கடுப்பில் ....................வேண்டாம் ////

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் நடந்த கொமன்வெல்த் பிசினெஸ் ஃபோரத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டு தமிழர் நிறுவனங்கள் சுமார் 20க்கு மேல். பெரிய நிறுவனங்கள்.

 

அதில் சில, வெளியே இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்கும் ‘வீரர்களுக்கு’ சொந்தமானவை. கிட்டத்தட்ட அனைவருமே, இலங்கையில் தொழிலை விரிவாக்கம் செய்ய சலுகை வேண்டும் என்று பேசினார்கள்.

 

புலிகளின் முன்னாள் ஐரோப்பிய நிதி சேகரிப்பாளர் ஒருவர் கொழும்பில் டெலிகொம் நிறுவனம் தொடங்க முதலீடு செய்துவிட்டு, பதுளையில் எஸ்டேட் வாங்க போய் கைது செய்யப்பட்டு, உள்ளே இருந்தார்.

 

விடுங்கப்பா.. யார்தான் backdoor business செய்யவில்லை?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மாற்றமும் எம்மிடமிருந்தே தொடங்கட்டும்.

இதற்கு லைக்கா நிறுவனம் தன்னிலை விளக்கம் தராத பட்சத்தில் முதல் புறக்கணிப்பை என்னிடமிருந்தே ஆரம்பிக்கின்றேன்.

முதாவதும் கடைசி ஆளும் நானாக இருந்தாலும் பரவாயில்லை.

இந்த ஈனச்செயலை வரலாறு என்றாவது ஒரு நாள் செருப்பால் அடிக்கும்.

 

 

இதுபற்றி  சில தகவல்கள் எனக்குத்தெரியும்

தெரிந்ததை எழுதுகின்றேன்

சரி  பிழையை  நீங்களே முடிவெடுங்கள்.

 

இது சம்பந்தமாக 

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா,

அவர்களுடன்  சந்திப்பை மேற்கொண்டவரை 

அடுத்த நாள் நான் பரிசில்  சந்தித்தேன்.

தான்  நேற்றிரவு  கமலேஷ் சர்மா அவர்களுடன் சந்திப்பொன்றை  செய்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனால் என்ன  விடயம் என நான் அவரிடம் கேட்கவில்லை.

ஏனெனில் தமிழரது தாகம் சம்பந்தமாக அவர் நிச்சயம் பேசியிருப்பார் என்பது அவரை அறிந்தவன் என்றவகையில் எனக்குத்தெரியும்.

 

எனவே இது  பொதுநலவாய நாடுகள் அமைப்பு சம்பந்தமான விளம்பரமே தவிர சிறீலங்கா சம்பந்தமானது அல்ல.

இனி  முடிவு உங்கள் கையில்................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம், நாங்கள் "விசர்  கூட்டங்களாகவே" இருந்துவிட்டு போகின்றோம். 

 

"யார் தான் சிங்களவனுடன் கை கோர்க்கவில்லை?",  "அவர்கள் ஏதோ ராஐதந்திரம் திட்டமிடுகிறார்கள்",  "பொருளாதரா போர் தொடுக்க முனைகிறார்கள் " .... இந்த வசனங்கள் எமது இயலாமையினால் பிறக்கின்றன. ஒருவனை எதிர்க்கமுடியாத கோழைத் தனத்தினால் எமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானம். 

 

காமென்வெல்த் மாநாட்டிற்கு எந்த நாட்டு பிரதமரும் போககூடாது, காமென்வெல்த் மாநாடே இலங்கையில் நடக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளை வெளிநாட்டவனிடம் வைத்துவிட்டு நாம் மறைமுகமாக அதற்கு நிதி வழங்குவோம். இதற்கு ராஐதந்திரம் என்று பெயர் வேறு. சொந்த இனத்தின் முதுகில் குத்தி பெறப்படும் இந்த விபச்சார ராஐதந்திரம் எமக்கு தேவையில்லை. இந்த "விசர் கூட்டத்திற்கு" அது விளங்காமலே இருக்கட்டும். 

 

"யார் தான் இலங்கையில் தொழில் செய்யவில்லை" ஆம் யார் தான் செய்யவில்லை. பத்தோடு பதினொன்றாக இவர்களும் செய்துவிட்டு போகட்டுமே.கோடிக்கணக்கான தமிழர்களில் வெறும் 40'000த்தை மட்டும் தானே கொன்றார்கள். போரில் சாகாத மக்கள் எந்ந நாட்டிலாவது உண்டா? பத்தோடு பதினொன்றாக இந்த கொலைகளையும் மறந்துவிடலாம். 

 

தேசியம் பேசும் ஊடகங்கள், தேசியவாதிகள், மாற்றுக்கருத்தாளர்கள் என்று எவரும் இந்த ஈனச்செயல் பற்றி வாய்திறக்கப்போவதில்லை. இந்த நிறுவனங்களிடம் பணபலம், அதிகாரபலம் கொட்டிக்கிடக்கின்றது. இந்த இரண்டிற்கும் முன் தமிழ்தேசியம் செல்லாக்காசு. குத்தாட்ட நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகள், விளையாட்டுப்போட்டிகள், மலிவுவிற்பனை என அனைத்திற்குமே இவர்கள் தான் பிரதான நிதி வழங்கிகள். இதுவே இனியும் தொடரும். எங்களை போன்ற "விசர் கூட்டங்கள்" கத்தி விட்டு இறந்துபோக வேண்டியது தான். 

 

செயலகம், பேரவை, மன்றங்கள் நடாத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உங்கள் விளம்பரம் கொடிகட்டிப்பறக்கும். உங்களின் இந்த செயலால், உங்களின் லாபத்திற்கு எந்த ஆபத்தும் வந்துவிடப்போவதில்லை. பயம் வேண்டாம். உங்களை எதிர்ப்து வெறும் எங்களை போன்ற 1வீதம் உள்ள "விசர் கூட்டங்கள்" தான். 

 

இவ்வளவு செய்த நீங்கள் உங்கள் தொலைபேசி அட்டைகனினால் தொடுக்கப்படும் அழைப்புக்களை ஒட்டுக்கேட்டாலும் உங்களை யாரும் எதிர்க்கமாட்டார்கள். எங்கள் அந்தரங்கம் வெளியில் தெரிந்தாலும்  எந்த எதிர்ப்பும், கேள்கிகளும் எங்களிடமிருந்து வரப்போவதில்லை. எருமை மாட்டின் மேல் பெய்த மழை போல தான் தமிழ் இனத்தின் உணர்வும். இந்த வியாபார தந்திரத்தை நீங்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்!

 

எங்களை பார்த்து நீங்கள் கைகொட்டி சிரிக்கலாம். சிரித்துவிட்டு தான் போங்களேன். எதிர்ப்பை காட்டி முடியாமல் உங்களை அனுசரித்து போகும் நரம்பில்லாத 99வீத புளுக்களிற்கு முன்னால் எதிர்ப்பை காட்டிவிட்டு உயிர்விடும் சிறு தூசிகளாக நாங்கள் இருந்துவிட்டு போகின்றோம். தூசியிலிருந்து உருவானது தான் உலகம் என்கிறார்கள். ஒவ்வொரு தூசியாகவும் நாங்கள் பிரிந்தே நிற்கின்றோம். அதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் தான் இன்னும் அறியவில்லை. 

 

நேர்மையான ஊடகங்கள், நேர்மையான புத்திஜீவிகள் போன்றவர்களை தமிழினம் பார்த்து பல தலைமுறைகள் ஆகிவிட்டன. இன்னும் பல தலைமுறைகள் கடந்தபின்னர் இவர்களைப்போன்றவர்கள் மீண்டும் உருவாகலாம். எங்கள் பிள்ளைகளோ, பேரன்களோ உங்களின் அழிவிற்கான விதையை நிச்சயமாக விதைப்பார்கள். எந்த ஆதிக்கமும் நிலைத்து நீடித்தது இல்லை. இது உங்களிற்கும் பொருந்தும். 

 

1476458_253159138171453_685592463_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாரை விசர்கள் என்று எழதுகின்றீர்கள் எனத்தெரியவில்லை.

அது என்னையும் சேர்த்தாக இருந்தால்........

நான்  ஒரு தகவலைத்தான் இங்கு தருவதாக எழுதினேன்

முடிவு உங்கள் கையில் என்றும் மிகவும் மரியாதையாக எழுதியிருந்தேன்.

இதற்கு மேல் எழத விரும்பவில்லை

நன்றி  வணக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாரை விசர்கள் என்று எழதுகின்றீர்கள் எனத்தெரியவில்லை.

அது என்னையும் சேர்த்தாக இருந்தால்........

நான்  ஒரு தகவலைத்தான் இங்கு தருவதாக எழுதினேன்

முடிவு உங்கள் கையில் என்றும் மிகவும் மரியாதையாக எழுதியிருந்தேன்.

இதற்கு மேல் எழத விரும்பவில்லை

நன்றி  வணக்கம்

நிச்சயமாக உங்களை சொல்லவில்லை. 

என்னையும் என்னை போன்றோர்களையும் தான் அப்படி சொன்னேன். வேறு யாரையும் அல்ல.

யாழ் கருத்துக்களத்தில் இந்தத்தலைப்பிற்கு நேரேகீழாக "கரப்பொத்தானியம்" என்று ஓர் கதை உள்ளது.

வியாபார உலகில் வலுவாக கால்பதித்துவிட்ட லைகா நிறுவனம் உங்கள் எதிர்ப்புக்களை கரப்பான் பூச்சிகளை ஸ்பிரே அடித்து கொல்வதுபோல் சமாளித்துவிடுவார்கள். அப்படி அவர்களால் செய்யமுடியாவிட்டால் மொபைல்/அட்டை வியாபாரத்தில் இவ்வாறு வளர்ந்திருக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறிலங்காத் தேயிலை வாங்காமல் விட்டதால் இலங்கைத் தேயிலை பிசினஸ் வங்குரோத்தாகி விடவில்லை. ஆனால் தமிழர்களின் தலைமீது விழும் குண்டுகளில் என் காசு இல்லை என என்னால் கூற முடியும். சிறுமனிதர்கள் குழுக்களின் புறக்கணிப்புகள் ஒரு பெரிய வேரூன்றிய நிறுவனத்தை வீழ்த்தாது என்பது உண்மை தான்! ஆனால் எங்கள் மனச்சாட்சிக்குத் தான் நாங்கள் பதில் சொல்ல வேண்டும். இலங்கையில் கூட்டமே வேண்டாம் என்ற பிறகு ஒரு தமிழ் நிறுவனம் அங்க போய் முரளி ஊடான அனுசரனைகளும் முதலீடும் செய்வது தவறு. அந்தத் தவறுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க இயலாது. 

காலம் காலமாக டபிள் கேம் தான் நடந்தது ,இலங்கை பொருட்களை இறக்கியதில் இருந்து தமிழ் சினிமா காட்டியதுவரை அவர்கள் தான்

அதைவிட  இப்படியான வியாபாரம் செய்யும் தனிநபர்கள் கூட ஒரு பங்கை அவர்களுக்கு வீசி விட  மேடையில் வேறு ஏற்றி விடுவார்கள் .

கூடுதலாக சும்மா சீன் காட்டி வாழ்ந்தவர்கள் தான் அதிகம் .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சம்பவம்: ஐரோப்பாவில் இருந்து சிறிலங்காவுக்கு சென்ற இருவர். ஒருவர் மினி பஸ் கொழும்பு யாழ்ப்பாணம் ஓடுகிறார்.அதற்கு அவர் செய்ய வேண்டியது மகிந்தவின் படம் மினி பஸ்ஸின் பின்னால் ஓட்டி உள்ளது. மாதா மாதா மாதம் டக்ளசுக்கும் மகிந்தவுக்கும் குறிப்பிட்ட பணம் தள்ளப்பட வேண்டும். மற்றவர் பெற்றோல் நிலையம் திறந்துள்ளார். மாதா மாதம் அதே இரு நபருக்கும் பணம் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரத்தில் வெறுமனே இலாபம் வருவதில்லை அதுன்டன் இணைந்த செலவு உள்ளதுசில செலவுகள் நிணயிக்கப்பட்ட செலவுகள் நுகர்வாளர் அதிகரித்தாலும் குறைந்தாலும் அந்த குறிப்பிட்ட செலவு மாற்றம் பெறுவதில்லை அத்துடன் நிறுவந்தின் வளர்ச்சி விகிதமும் அதன் துறைசார் ஆபத்து விகிதமும் இதில் அதிகம் அது மட்டுமல்லாமல் இது ஒரு நிஸே சந்தையைக்கொண்டது என நினக்கிறேன் இப்புறக்கணிப்பு பாரிய விளைவை ஏற்படுத்தும் ஆகவே சரியாக ஆராயமல் முடிவெடுப்பது சரியாகுமா? புதிதாக ஒரு வாடிக்கையாளரை தருவிப்பதற்கு தற்போதய வாடிக்கையாளரை பேணுவதை விட் 3 மடங்கு செலவிட வேண்டும்,இப்பொதெல்லாம் காப்புறுதி நிறுவனங்கள் நல்ல உசாராகவே உள்ளார்கள். தமிழன் பொருளாதார ரீதியாக வலுப்பெற வேண்டும் அதுதான் எமது எதிர்கால பேரம் பேசும் ஆற்றல்.

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரத்தில் வெறுமனே இலாபம் வருவதில்லை அதுன்டன் இணைந்த செலவு உள்ளதுசில செலவுகள் நிணயிக்கப்பட்ட செலவுகள் நுகர்வாளர் அதிகரித்தாலும் குறைந்தாலும் அந்த குறிப்பிட்ட செலவு மாற்றம் பெறுவதில்லை அத்துடன் நிறுவந்தின் வளர்ச்சி விகிதமும் அதன் துறைசார் ஆபத்து விகிதமும் இதில் அதிகம் அது மட்டுமல்லாமல் இது ஒரு நிஸே சந்தையைக்கொண்டது என நினக்கிறேன் இப்புறக்கணிப்பு பாரிய விளைவை ஏற்படுத்தும் ஆகவே சரியாக ஆராயமல் முடிவெடுப்பது சரியாகுமா? புதிதாக ஒரு வாடிக்கையாளரை தருவிப்பதற்கு தற்போதய வாடிக்கையாளரை பேணுவதை விட் 3 மடங்கு செலவிட வேண்டும்,இப்பொதெல்லாம் காப்புறுதி நிறுவனங்கள் நல்ல உசாராகவே உள்ளார்கள். தமிழன் பொருளாதார ரீதியாக வலுப்பெற வேண்டும் அதுதான் எமது எதிர்கால பேரம் பேசும் ஆற்றல்.

 

வசி, நீங்கள் புறக்கணிப்பு மூலம் லைக்கா மொபைலை பாதிக்கச் செய்ய வேண்டாம் எனக் கூறுகிறீர்கள் எனப் புரிகிறேன், சரியா?

 

அப்படியாயின், தமிழர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன விலை கொடுக்கலாம்? போர்க்குற்ற விசாரணை பற்றி மௌனம் காத்த படி தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்தால் தமிழர்களுக்கு பொருளாதார வரவும் வளர்ச்சியும் கூடும், ஆனால் நாளைக்கு முரளிதரன் போல இந்த முதலீட்டாளர்களும் சிறிலங்காவின் அபிவிருத்திக்கு poster child ஆகப் பயன் படுத்தப் பட்டால், போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கையின் பலம் குறையும் அல்லவா? எதைக் கொடுத்து எதை எடுக்கிறோம் என்பதில் சமநிலை வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் கொடுக்க ஆரம்பித்தால் எங்கே எல்லைக் கோட்டை வரையப் போகிறோம்? இதுவே நான் புறக்கணிப்பை ஒரு எச்சரிக்கை ஆயுதமாகப் பாவிக்கக் கோருவதன் பின்னணி!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தில் இந்தத்தலைப்பிற்கு நேரேகீழாக "கரப்பொத்தானியம்" என்று ஓர் கதை உள்ளது.

வியாபார உலகில் வலுவாக கால்பதித்துவிட்ட லைகா நிறுவனம் உங்கள் எதிர்ப்புக்களை கரப்பான் பூச்சிகளை ஸ்பிரே அடித்து கொல்வதுபோல் சமாளித்துவிடுவார்கள். அப்படி அவர்களால் செய்யமுடியாவிட்டால் மொபைல்/அட்டை வியாபாரத்தில் இவ்வாறு வளர்ந்திருக்கமுடியாது.

 

 

தமிழரின் போராட்டம்  என்பது

இனி

அறிவாயுதம்

பொருளாயுதம்  கொண்டு மட்டுமே செய்யமுடியும்

செய்யணும் என நான்   நம்புகின்றேன்.

அந்தவகையில் 

நான் சந்தித்தவர் இவை  இரண்டிலும் பெரிய  இடத்தில்  உள்ளவர்.

அத்துடன்

முக்கியவேளைகளில்  தலைவரால் பாவிக்கப்பட்டவர்.

இந்தவகையில் பொதுநலவாய  நாடுகளின்  உறுப்பினர்கள் மற்றும் பெரிசுகளுடன் அவர் தொடர்பில் இருப்பது நல்லதாகவே எனக்குப்பட்டது.

எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இந்தவகையில் மட்டும்  தான்.

காலம் எல்லாவற்றிற்கும் பதில் தரும்......

Edited by விசுகு

லைக்கா பொபைல் சிறிலங்காவுடன் எவ்வளவு  ஒட்டு என்பதை  ஶ்ரீலங்கன் விமானத்தில் பறப்பவர்கள் அறியலாம். அதாவது சீற்றுக்கு பின்னால் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியை திறந்தவுடன் வரும் விளம்பரமே  லைக்கா தான்..  அது சிங்கப்பூர். மலேசியா செல்லும் ஶ்ரீலங்கன் விமானத்திலும் உண்டு.   எவ்வளவு பணம் செலுத்தி அந்த விளமபரத்தை போடு வார்கள்....

 

இலண்டனை பொறுத்த மட்டில் எல்லா தமிழ் வர்த்தக உரிமையாளர்களும் லைக்கா கார்ட் விற்பதை பின் தள்ளினால்  சரி. கார்ட் விற்பனை தான் மிக முக்கியம்.

 

கடை கடையாக  லைக்கா ஏஜென்டுகள் ஒரு சுக்கேஸ் பெட்டியையும் இழுத்து கொண்டு திரிவதை  பார்க்க பாவமாக இருக்கும் அதுவும் தமிழர், இந்தியர்கள் தான் கூட அப்படி வருவார்கள்.

 

லைக்கா ஏஜன்டாக  கடைகளுக்கு வருபவர்கள்  தங்களது சிம் கார்டை தந்து விட்டு , மற்றைய மொபைல் நிறுவன சிம் கார்ட் களை காசு கொடுத்தே வாங்கி செல்வார்கள். ஏனென்றால் போட்டியாக வளரக்கூடாது, இலகுவாக மக்களிடம் மற்றையவை அறிமுகமாக கூடாது என்பது தான்  அவர்கள் நோக்கம்.

 

தமிழரிடம்  உழைத்து கொண்டு தமிழருக்கே எதிரானவர்களோடு கூட்டு சேர்ந்து இன்னும் பெருக்கலாம் என்றால்  அது கஸ்டம்.

 

இவர்களது இன்னொரு பினாமியாக தான்  ஜி.ரி மொபைல்  இயங்குகிறது  .ஆனால் இரண்டும்  ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரிகளை திட்டி பிரியோசனம் இல்லை.. பணம் என்றால் பிணமும் வாயைப்பிளக்கும்.. நுகர்வோர்தான் சீரிய தேர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா மொபைல் - இராஜபக்ச தொடர்பு - டேவிட் கமெரூன் உடனடி விசாரணை

லைக்காமொபைல் நிறுவனத்தின் இராஜபக்ச குடும்பத்தினருடனான தொடர்புகளை உடனடியாக விசரிக்குமாறு பிரித்தானியப் பிரதமர் டேவிட கமெரூன் தெரிவித்துளார்.

பிரித்தானிய அரசிற்கு வரிகள் செலுத்தாது வரி மோசடிகள் செய்ததோடு அதனை ஈடுகட்டகோரி கட்சிக்கு £420000 கையூட்டை நன்கொடை என்று வழங்கியதையும் உடளடியாக விசாரிக்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பிரதமர் ஆணையிட்டுள்ளார். 

Huffington post பத்திரிகையக்குச் செவ்வி வழங்கிய தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் டொம் பிளெங்கின்சொப் "பிரதமர் தனது கட்சி £420000 பணத்தை இராஜபக்ச அரசுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள லைக்காமொபைல் வழங்கி உள்ளது.

இருப்பினும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சிறீலங்காவிற்குச் செல்வதைத் தவிர்த்திருந்தனர். இதையெல்லாம் தாண்டிப் பிரதமர் உடனடியான விசாரணைகளை லைக்காமொபைல் மீது மேற்கொள்ள வேண்டும்" எனத் தொரிவித்தள்ளார்.

லைக்கா குழுமத்தின் இராஜபக்ச குடும்பத்தினருடனான தொடர்புகளும் இராஜபக்ச குடுமபத்தினருடனான பணப்பரிமாற்றமும் பிரித்தானிய அரசால் வெளிக்கொணரப்படுமா?

 

http://www.youtube.com/watch?v=zf8BZjuuoDE

 

 

1459975_719255204753174_1292464093_n.jpg

 

https://www.facebook.com/tamilnaduhungerstrike

Edited by செங்கொடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டிற்கு நிதியுதவியளித்து, மகிந்தவின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரான அல்லிராஜா.

அண்மையில் இவர் சிறீலங்காவிற்குச் சென்று மகிந்த மற்றும் கோத்தபாயவைச் சந்தித்திருக்கிறார். கோத்தபாயவுடன் விருந்தும் உண்டிருக்கிறார். அதன்பின்னர் இவர் ஆலயம் ஒன்றிக்குச் சிங்களப் படையினரின் (STF) பாதுகாப்புடனும் சனத் ஜெயசூரியவுடனும் சென்றிருக்கிறார்.

லண்டன் மாநகரில் “மானாட மயிலாட” என்ற களியாட்ட் நிகழ்ச்சி மற்றும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி போன்றவற்றை நடத்தியிருந்தார். மேலும் பிரித்தானியாவில் இடம்பெறும் சிங்களக் களியாட்ட நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய மாநாட்டிற்கும் மற்றும் மகிந்தவிற்கும் நிதியுதவி செய்திருந்தார் அல்லி ராஜா. இவர் சிங்கள அரசுடன் இணைந்து பல ஒப்பந்தங்களையும் போட்டியிருக்கிறார். இவர் சில தமிழ் அமைப்புகளுடனும் தொடர்பில் உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மையில் அல்லிராஜா சிறீலங்காவிற்குச் சென்ற போது சிலரால் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை நேற்றைய தினம் எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் அதனைப் பாருங்கள்.

லைக்கா நிறுவனத்தினை ஐரோப்பிய தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

 

1456562_254147011405999_274866051_n.jpg

 

1472783_254146998072667_1901442524_n.jpg

 

1393274_254147028072664_609072607_n.jpg

 

1467475_254147008072666_1189730937_n.jpg

 

1450178_254147038072663_2004958243_n.jpg

 

-fb-

  • கருத்துக்கள உறவுகள்

அல்லிராஜாவின் சொந்த ஊர் முள்ளியவளையா? எனது ஊகம் சரியாக இருப்பின் இவர் ஊற்றங்கரை. தந்தை ஒரு அரிசி அரைக்கும் ஆலை வைத்திருந்தவர். மேலுள்ள படத்தின் கோவில் தோற்றத்தைப் பார்க்கின்றபோது ஊற்றங்கரைப் பிள்ளையார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இவர் முல்லை மண்ணை சேர்ந்தவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.